ஈழமும், கார்ப்ரேட் அரசியலும்....

ஈழம் பற்றி படிக்கும் பொழுது உணர்ச்சி பெருக்கெடுத்து துரோககதைகளையும், வீர மரணங்களையும் மட்டுமே பேசுறோம், மறைக்கப்பட்ட கார்ப்ரேட் வரலாறு யாருக்குமே புரியாமல் போகிறது



உள்நாட்டு பிரச்சனை உலகில் உள்ள பாதி நாடுகளில் உள்ளது, இந்தியாவில் காஷ்மீர் கூட உள்நாட்டு பிரச்சனை தான், இந்திய ராணுவம் காஷ்மீரில் செய்து கொண்டிருப்பதை தான் இலங்கை ராணுவம் செய்தது, இன்னும் நாடு நாடாக அகதிகள் அலைந்துக்கொண்டிருப்பதை படித்துக்கொண்டு தான் இருக்கிறோம்

கியூபாவில் நடந்த புரட்சியின் போது இருந்த காலம் வேறு. அங்கே அதிகாரத்தை விட மறுக்கும் பிடிவாதமும், அடக்கி ஆளவேண்டும் என்ற சர்வாதிகார பாஸிசமும் காரணமாக இருந்தது. இன்று ஒவ்வொரு நாடும் சந்தை, ஆம், கார்ப்ரேட்கள் தங்கள் பொருட்களை கடை விரிக்கும் சந்தை

ஈழப்பிரச்சனையில் ஏன் இந்தியா இலங்கைக்கு உதவி செய்ய வேண்டும். அது அவர்கள் உள்நாட்டு பிரச்சனை தானே. இது சாமானர்களின் கேள்வி, ஒருவேளை இந்தியா உதவி செய்யாமல் இருந்தால் சீனா உதவி செய்திருக்கும், இந்திய கார்ப்ரேட்களான டாடா டீயும், அசோக் லேலாண்டும், ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கும் இலங்கை சந்தை படுத்த முடியாது, ஆம் இலங்கை நண்பர்களை கேட்டு பாருங்கள், இந்திய பொருள்களுக்கு அங்க உள்ள சந்தையை பற்றி.



இந்த சந்தை அரசியல் போல் தான், உள்நாட்டு கட்டுமான பணிக்களுக்கு வெளிநாட்டில் இருந்து ஒப்பந்தம் பெறுவதும், ரஷ்யாகாரன் இந்தியாவில் அணு உலையை நிறுவுவது போலவே அங்கே ரோடு போட இங்கிருந்து எல்&டி நிறுவனம் போகும், இந்தியாவில் சினிமா எடுக்க இலங்கையில் இருந்து லைக்கா நிறுவனம் வரும், இவையெல்லாம் நடக்கவேண்டுமென்றால், கார்ப்ரேட்கள் வாழ வேண்டுமென்றால், அரசு அங்கிருக்கும் ஆதிக்க சக்திக்கு மேலும் வலுவுட்ட உதவி செய்தே ஆக வேண்டும்



இன்னொரு சர்வதேச அரசியலும் இதில் இருக்கிறது. ஏற்கனவே கூறியது போல உள்நாட்டு போர் உலகில் பாதி நாடுகளுக்கு மேல் நடக்கிறது. அதை சமாதனம் செய்ய சில நாடுகள் முயலுமே தவிர புரட்சிகளுக்கு நேரடியாக ஆதரவு அளிக்காது, இங்கே நேரடியான என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியும் என நம்புகிறேன், புரிட்சியாளர்கள் வெற்றி பெற்று ஒரு வேளை தனி ஈழம் கிடைந்திருந்தால் உலகுக்கே அது ஒரு முன் உதாரணமாக இருந்திருக்கும்

ஒவ்வொரு நாட்டிலும் ஒடுக்கப்படும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்த தொடங்குவார்கள். ஒவ்வொரு நாட்டில் உள்ள புரட்சிபடையும் இன்னொரு நாட்டில் உள்ள புரட்சிபடைக்கு உதவி செய்யும், உலகம் முழுவதும் அமைதி குலையும், கார்ப்ரேட்கள் வாழ முடியாது, அதனால் புரட்சியாளர்கள் வெற்றி பெற அரசின் மூலமாக கார்ப்ரேட் அனுமதிக்காது

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin