பங்கு சந்தை - இன்றைய ஆலோசனை (2)

பங்கு வர்த்தகம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருப்பவர்களை விட பங்கு வர்த்தகத்தில் இருந்து கொண்டே என்ன நடக்கிறது என புரியாமல் இருப்பவர்கள் அதிகம், அந்த புரிதல் சிக்கலில் தான் பலருக்கு நட்டம் ஏற்படுகிறது, எந்த தொழிலாக இருந்தாலும் அதன் அடிப்படையை கொஞ்சமேணும் புரிந்துக்கொள்ள வேண்டியது மிக  அவசியம். பங்கு சந்தையை பொறுத்தவரை நிறுவத்திற்கு லாபம் வந்தால் தானே பங்கின் விலை உயர வேண்டும், ஆனால் தினம் எப்படி வர்தகம் ஏற்படுகிறது என்பது பலரது சந்தேகம்.

சில வார்தைகளை அப்படியே தமிழ் படுத்தினால் சுத்தமாக உங்களுக்கு புரியாமல் போகலாம், ஆகவே அந்த வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே தருகிறேன். பங்கு சந்தையை பொறுத்தவரை இரண்டு வகையில் பங்கு நிலை என்னவாகும் என முடிவு செய்வோம், ஃபண்டமெண்டல் என்னும் அடிப்படை, டெக்னிக்கல் அனலைஸ்.

டெக்னிகல் அனலைஸ் என்பது ஒரு விதமான செண்டிமெண்ட் விசயம், அதன் அடிப்படை resist (மேல் தடுப்பு), support (கீழ் தடுப்பு). ஒரு பங்கு 100 ரூபாயை தாண்டாமல் ரொம்ப நேரமாக அல்லது சில நாட்களாக ஆடிக்கொண்டிருந்தால் அது மேல் தடுப்பு. அதை தாண்டினால் மக்கள் மனநிலை இன்னும் அந்த பங்கு மேலே ஏறும் என்று வாங்க துவங்கும், அதே தான் கீழ் தடுப்பும். இதனை அறிய பல இண்டிகேட்டர்கள் இருக்கிறது. ஒவ்வொரு இண்டிகேட்டரும் ஒரு பொருளாதார அறிஞர்கள்களால் கண்டுபிடிக்கப்பட்டு பல அவர்கள் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. டெக்னிக்கல் விசயத்தை பொறுத்தவரை ஆழ்ந்த ஆர்வமும், பொறுமையும், அனுபவமும் தேவை



ஃப்ண்டமெண்டல் என அழைக்கப்படுவது செய்திகளை அடிப்படையாக கொண்டது. மேலே குறிப்பிட்டு பங்கில் அதன் கீழ் தடுப்பு 80 ரூபாயாக உள்ளது என வைத்துக்கொள்வோம், அதை உடைக்காது என பலர் அங்கே வாங்கி 100ன் அருகில் விற்று அன்றாடம் வர்த்தகம் செய்து கொண்டிருப்பர். ஒரு வேளை அந்த நிறுவனத்தின் மீது ஒரு புகார் அளிக்கப்பட்டு அதனால் அரசு அந்த நிறுவனத்துக்கு அபராதம் விதித்தால் புதிய ஆர்டர்கள் கிடைக்காது என மக்கள் கீழ் தடுப்பையும் தாண்டி அந்த பங்குகளை விற்க தொடங்குவார்கள். சில நல்ல செய்திகள் மேல் தடுப்பை உடைக்க உதவும்

உதாரணத்திற்கு ஒரு விசயம் சொல்கிறேன். வளர்ந்த நாடுகளில் அனைத்துமே கணிணிமயம் ஆகிவிட்டதால் நாட்டின் பொருளாதாரம், எல்லா துறையின் அடிப்படையில் துல்லியமாக கணக்கிடப்படும், தற்சமயம் இந்தியாவிலும் பத்திர பதிவு, புதுமனைக்கான அனுமதி ஆகியவை துல்லியமாக நமக்கு கிடைக்கிறது. சென்ற மாதத்தை விட இந்த மாதத்தில் புதுமனைகளுக்கு அதிக அனுமதி கோரப்பட்டுகிறது என்றால் என்ன விளைவுகள் ஏற்படும். அடுத்த பத்திக்கு செல்லும் முன்னால் நீங்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள்

கட்டுமான துறைக்கு அதில் பங்கு உண்டு, வீட்டு கட்ட கடன் தரும் நிறுவனத்திற்கு அதில் பங்கு உண்டு, வீடு கட்ட பயன்படும் கச்சா பொருளான சிமிண்ட்டிற்கு பங்கு உண்டு என்பதால் சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பங்கு உண்டு, வீடு கட்டி முடிக்கப்பட்ட உடன் ஒயரிங், வீட்டிற்கு தேவையான ஹோம் அப்ளைன்ஸ், பெயிண்ட் என்று பல நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளன.

ஆக அது சம்பந்தமான துறைகள் அனைத்திற்கும் மறைமுகமாக அதில் பங்கு பெற்று நேர்மறை வர்த்தகம் தொடங்கி விடுகிறது. இப்படி நமக்கு கிடைக்கும் புள்ளி விபரங்களை கொண்டும், பங்கு செல்லப்போகும் திசை யூகிக்கலாம். பங்கு வர்த்தகம் என்பது பூவா, தலையா போட்டு பார்ப்பதோ. 12 கட்டங்களில் எந்த கிரகம் எங்கே மாறுகிறது என தீர்மானிப்பதோ அல்ல. இது முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சான்ற துறை. ஆர்வமும் பொறுமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் இதை கற்று கொள்ளாலாம்

எனது வாட்ஸ் அப் நம்பர் 9364151621
அழைக்க 9003063176   -   6379796050

#வால்பையன்
#பங்குசந்தை

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin