நட்சத்திர அறிமுகம்.!

150 வது பதிவு எழுதி கொண்டிருக்கும் நேரம், ஒவ்வொருவரையும் எழுதி முடித்து இன்னும் யாராவது விட்டு போயிருக்கிறதா என்று சரி பார்த்து கொண்டிருந்தேன், அப்போது வந்தது அந்த மின்னஞ்சல், அதிர்ச்சியூட்டும் தகவலுடன், ....ஆம். நான் தான் இந்த வார நட்சத்திரமாம்.
அதிர்ச்சி, ஆச்சர்யம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளின் கலவையால் உறைந்து நின்றேன், 150 வது பதிவில் வரவேண்டிய சில நண்பர்கள் விட்டுபோய்விட்டார்கள், காரணம் கூடவே எனது மூளையும் உறைந்து விட்டது.

தாமதமான நன்றி உரைத்தலுக்கு முதலில் மன்னித்துவிடுங்கள்,
ச்சின்னபையன் கிரி விக்னேஷ்வரன் சாலிசம்பர் டாக்டர் தேவன்குமார் தேனியார் ஜோதிபாரதி ஜீவ்ஸ் காயத்ரி கோபிநாத் கோவிகண்ணன், இது போல் இன்னும் நிறைய அண்ணன்கள், இவர்களின் உதவி இல்லையென்றால் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது, உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பர்களே!
***************************************

நீண்ட நாளாக எனது தொழில் பற்றி எழுத ஆசை, நிறைய பேர் நேயர் விருப்பமாக கூட அதை கேட்டுடிருந்தனர், எனது முதல் நட்சத்திர பதிவாக அதையே எழுதி விடுகிறேன்,

நான் கமாடிடி(commodity) அனலைசராக இருக்கிறேன்.
அது பற்றி சில விடயங்கள் கேள்வி பதில் வடிவில்.

கமாடிடி என்றால் என்ன?

விலை பொருள்கள் அனைத்தும் கமாடிடி என்று தான் அழைக்கப்படும்.

எப்படி வகைப்படுத்துவது?

சந்தையில் பொருளாக விற்பனைக்கு வந்திருக்கும் அனைத்தும் கமாடிடி தான்.

கமாடிடிக்கும், பங்கு சந்தைக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு நிறுவனம் பல பங்குதாரர்களை கொண்டிருக்கும், ஒரு பங்கு வைத்திருந்தாலும் நீங்களும் ஒரு பங்குதாரர் தான், அந்த நிறுவனத்தின் லாப, நட்ட கணக்குகளை கொண்டு அந்த பங்கின் விலை நிர்நியக்கப்படும். அந்த நிறுவனம் தயாரிக்கும் பொருள்கள் கமாடிடி.

பங்குசந்தை முதலீட்டிற்கும், கமாடிடி முதலீட்டிற்கும் என்ன வித்தியாசம்?

இரண்டும் ஒன்றைப்போல தான். ஒரு பொருளை நீங்கள் வாங்கும் போது அதன் தரத்தை எடை போடாமல் வாங்குவதில்லை, அதே போல் தான் பங்குகளும், கமாடிடியை அதிகமாக நுகர்வோர்கள் பயன்படுத்துகிறார்கள், முதலீட்டாளர்கள் குறைவே! நுகர்வோர்களின் எண்ணிக்கை, அந்த பொருளை வெளியிட்ட நிறுவனத்தின் பங்குகளை விலை உயர்த்துகிறது.

கமாடிடி விலையுயர்ந்தால் அந்த நிறுவனங்களின் பங்குகள் உயருமா?

செயற்கையான விலையேற்றத்தினால் மட்டுமே சாத்தியம்.
ஒரு பொருள் என்பது, பல கூட்டு பொருள்களால் ஆனது, அதை தயாரிக்க மூல பொருள்களின் விலை, ஆட்கூலி, போக்குவரத்து செலவு, சந்தைபடுத்த ஆகும் செலவு, போன்றவை அந்த நிறுவனத்தின் செலவு கணக்கில் வரும், ஆக அந்த பொருளின் தயாரிப்பு செலவு அதிகரிக்க, பொருளின் விலையும் அதிகரிக்கலாம், ஆனால் அந்த நிறுவனம் லாபம் அடைவதில் எந்த மாற்றமும் இருக்காது.
ஆக பங்களிலும் மாற்றம் இருக்காது.

கமாடிடி மட்டும் ஏன் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது?

செயற்கையாக இருந்தாலும், நாட்டின் பண கொள்கையினால் இது தவிர்க முடியாததாகிறது.
பொதுவாக மனிதர்கள் சேமிப்பு என்ற ஒன்றை தனது மாத பட்ஜெட்டிலேயே வைத்திருக்கிறார்கள். பொதுவாக வங்கிகளிலும், பங்கு வர்த்தகத்திலும் முதலீடு செய்கிறார்கள், அங்கே அவர்களுக்கு சரியான ரிட்டர்ன்ஸ்(வருமானம்) கிடைக்காத பட்சத்தில், எது முதலுக்கும் மோசமில்லாமல், லாபமும் தருகிறதோ அதில் முதலீடு செய்வார்கள், அதற்காக அவர்கள் தேர்தேடுப்பது தங்கம் மற்றும் வெள்ளி.

அவைகளும் விலை இறங்கும் தானே?

கண்டிப்பாக! அனைத்து பொருள்களுமே மறைமுகமாக ஒருவித சீசனை(காலத்தேர்வு) கொண்டுள்ளது, அக்ரி(வேளான்மை) கமாடிடிகள் விளைச்சல் காலத்தில் விலை குறைவாகவும் மற்ற நேரங்களில் அதிகமாகவும் இருக்கும் என்பது அறிந்த ஒன்று, அதே போல் தான் மற்ற பொருள்களுக்கும் தேவை அதிகரிக்கும் போது அதன் விலையும் அதிகரிக்கும், தேவை குறையும் போது விலையும் குறையும்.

தற்போது முதலீடு செய்தல் நலமா?

சென்ற ஆண்டு செயற்கையாக எல்லா பொருள்களும் வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டது, அந்த ஆண்டு உலக பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியை தவிர மற்ற பொருள்கள் அனைத்தும் விலை இறங்கியது. ஆக தற்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உச்சத்தில் இருக்க காரணம் முதலீட்டாளர்கள் மாற்று முதலீடாக மற்ற எதையும் நம்பாமல் தங்கம் மற்றும் வெள்ளியிலேயே முதலீடு செய்திருக்கிறார்கள்.
உலக பொருளாதாரம் மீண்டும் நிமிரும் பட்சத்தில் அடிப்படை உலோகங்களான காப்பர், ஜிங்க், அலுமினியம், ஈயம் ஆகியவை மீண்டும் விலை உயரலாம், அப்போது தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்திருப்பவர்கள் தங்களின் லாப பணத்தை கையில் பார்க்க கையிருப்பு பொருள்களை சந்தையில் விற்க தொடங்குவார்கள், சந்தையில் ஒரு பக்கமாக விற்பனை மட்டுமே நடந்து கொண்டிருக்கும் போது பொருள்களின் விலை வேகமாக சரியும்.

காப்பர், ஜிங்க், அலுமினியம், ஈயம் இவைகளும் உலோகம் தானே! இவைகள் மட்டும் விலை குறைய காரணம்?

சந்தையை பற்றி ஆராய வேண்டுமென்றால் உலக பொருளாதாரத்தையும் அலச வேண்டும், அது உங்களுக்கு அயர்ச்சியை கொடுக்கலாம். சுருக்கமாக, தீடிரென்று ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் புதிய வீடு, புதிய வாகனங்கள், புதிய வீட்டு பொருள்கள் வாங்குவது சரிந்தது, இவை அனைத்திற்கும் மூல பொருள்கள் தான் காப்பர், ஜிங்க், அலுமினியம், ஈயம்.
ஆக இதன் விலையும் குறைந்தது. ஆனால் தங்க உபயோகம் ஆபரணமாக மட்டுமில்லாமல் ஒரு காலத்தில் பணமாகவே பயன்பட்டது, அது பயன்பாடு கணக்கில்லாமல் மதிப்பு ரீதியாக என்றும் ஜொலிக்கும்.

இப்போது முதலீடு செய்ய விருப்பம் செய்யலாமா?

தற்போது சந்தை இருக்கும் நிலையில் உங்களது சேமிப்பை தக்க வைத்து கொள்வது முக்கியம்.
பங்குசந்தையோ, கமாடிடியோ இரண்டிலும் சரிசமமாக ரிஸ்க் உள்ளது. சேமிப்புக்கு அதிகமாகவே இருக்கிறது என்று இருப்பவர்கள் மட்டும் பண்ணலாம், மற்றவர்களுக்கு
money in the pocket is better than money in the market. கொஞ்ச நாளைக்கு.. :)


இது பற்றி உங்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டத்திலோ! எனது மெயிலிலோ(arunero@gmail.com) அல்லது அலைபேசியிலிலோ(9994500540) தொடர்பு கொள்ளலாம்.

112 வாங்கிகட்டி கொண்டது:

வெட்டிப்பயல் said...

வாழ்த்துகள்!!!

Mahesh said...

மொதல்ல பஷ்ட்டு போட்டுக்கலாம்னா அதுக்கும் போட்டியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்..

நட்புடன் ஜமால் said...

மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே

நட்புடன் ஜமால் said...

அப்பாலிக்கா வாரேன் ...

Vadielan R said...

நூற்றைம்பது என்பது சாதாரணதல்ல அதன்பின் இருக்கும் சவால்கள் தடைகள் வாழ்த்துக்கள் தாண்டிய வால்பையன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணியும் குடும்பமும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நன்றி

இராம்/Raam said...

நட்சத்திர வாழ்த்துக்கள்... :)

Mahesh said...

நல்ல பதிவு.... உங்களோடு பேசவேண்டும்ம்... பேசுகிறேன்.

Mahesh said...

"நட்சத்திரம்" வாழ்த்துகள் !!

போன வாரந்தான் "பகலில் சில நட்சத்திரங்கள்"னு பதிவு போட்டேன் :))

கோவி.கண்ணன் said...

அட நம்மவா(ல்) நட்சத்திரம் !

'வால்'த்துகள் !

கோவி.கண்ணன் said...

//தாமதமான நன்றி உரைத்தலுக்கு முதலில் மன்னித்துவிடுங்கள்,
ச்சின்னபையன் கிரி விக்னேஷ்வரன் சாலிசம்பர் டாக்டர் தேவன்குமார் தேனியார் ஜோதிபாரதி ஜீவ்ஸ் காயத்ரி கோபிநாத் கோவிகண்ணன், இது போல் இன்னும் நிறைய அண்ணன்கள், இவர்களின் உதவி இல்லையென்றால் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது, உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பர்களே!//

இப்படித்தான் போனவாரம் ஒரு நூல்வெளியீட்டு விழாவுக்கு போய் இருந்தேன். நம்ம பாலுமணிமாறன் அவையில் இருந்தவர்கள் ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டு வருகை தெரிவித்தார். அதுக்கே 10 நிமிடம் சென்றது. இந்த மாதிரி பேர் போடறதுல ஒரு சங்கடம் என் பேரு போடலையேன்னு மனசுக்குள் சிலர் வருந்துவாங்க

நல்லதந்தி said...

வாலிற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

அபி அப்பா said...

வால் நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்! முதல் பதிவே நல்ல இன்பர்மேட்டிவ் பதிவாக இருக்கு வாலு! வாழ்த்துக்கள்!

anujanya said...

'வால் நட்சத்திரம்' - வாழ்த்துகள் குரு. உங்கள் துறை என்பதால் பதிவு நிறைய விவரங்களுடன் இருக்கிறது. கிட்டத் தட்ட எனக்கு முற்றிலும் பரிச்சயம் உள்ள துறையும் கூட. நீங்கள் பிறிதொரு சமயத்தில், commodities markets பற்றி ஒரு தொடர் எழுதலாம். Precious Metals, Non-precious metals, agri commodities - யார் யார் இந்தப் பொருட்களின் விலையை எவ்வாறு நிர்ணயம் செய்கிறார்கள்? Delivery or Cash Settlement போன்ற விவரங்கள்.

வாழ்த்துகள்.

அனுஜன்யா

dondu(#11168674346665545885) said...

வாழ்த்துக்கள். நான் சொன்ன மாதிரி கரெக்டாக காலை பத்து மணிக்கு நட்சத்திரமாக வந்திருப்பீர்கள்தானே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நட்சத்திர வாழ்த்துகள் வால்பையன். இது பல தகவல்களைத் தரும் பதிவு.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வாழ்த்துக்கள் வால் பையன்.

வடுவூர் குமார் said...

கமாடிடி இன்னும் நான் மூக்கை நுழைக்காத துறை,ஒருவேளை ஊன்றி படித்தால் புரியுமோ! என்னவோ.

அருண் said...

நட்சத்திர வாழ்த்துகள் வால்!. நிரந்தர நட்சத்திரமாக ஜொலிக்கவும் வாழ்த்துகள் .

குசும்பன் said...

//விலை பொருள்கள் அனைத்தும் கமாடிடி என்று தான் அழைக்கப்படும்.//

நல்ல காமெடியா இருக்கே!!!

வாழ்த்துக்கள் வால்!

குசும்பன் said...

//இது பற்றி உங்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டத்திலோ! எனது //

நிஜமாவே இது எல்லாம் உங்களுக்கு தெரியுமா? என்று ஒரே ஒரு டவுட் தான்!

RAMYA said...

இப்போதைக்கு வாழ்த்துகள்!!!

கார்க்கிபவா said...

வாழ்த்துகள் தல

☀நான் ஆதவன்☀ said...

கலக்குங்க தல..

SurveySan said...

congrats.

Unknown said...

அடேய் ...... டிஸ்க் பிரேக் மண்டையா......!!! எம்பட வாழ்த்துக்கள் உனக்கு .....!!!!

அ.மு.செய்யது said...

வாங்க..நட்சத்திர ஆட்டக்காரர் ஆயிட்டேள்..


வாழ்த்துக்கள் ....

கணினி தேசம் said...

பாராட்டுக்கள் வால் பையன்.

மேலும் ஜொலிக்க வாழ்த்துக்கள்

பரிசல்காரன் said...

வாழ்த்துகள் வாலு!

உடனெ சொல்லணும்னா அதுக்குள்ள 26 தாண்டீடுச்சு!

ம்ம்.. ஸ்டார்னா சும்மாவா?

ரமேஷ் வைத்யா said...

:))

ஷைலஜா said...

நட்சத்திர வாழ்த்துகள் வால்பையன்!

seik mohamed said...

நட்சத்திர வாழ்த்து

தாரணி பிரியா said...

மனமார்ந்த வாழ்த்துகள் வால்பையன்

கணேஷ் said...

வாழ்த்துக்கள் வாலு,

பதிவ இன்னும் படிக்கலை... நட்சத்திரம்னு போட்டுருந்துச்சு உடனே வாழ்த்து சொல்ல வந்தாச்சு...

கலக்குங்க...

abi said...

மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே!!!!
வணிகம் புதிது அனைவருக்கும்!!!!
எளிமையான உங்கள் உரை தேவை!!

selventhiran said...

'வால்'த்துக்கள். கமாடிட்டி குறித்த கருத்தரங்கம் ஒன்றை நாணயம் விகடன் இதழ் திருப்பூரில் ஏற்பாடு செய்திருக்கிறது. நடப்பு இதழில் அதற்கான விளம்பரம் கண்டேன். ஒரு தகவலுக்காக அதைக் குறிப்பிடுகிறேன்.

abi said...
This comment has been removed by the author.
தருமி said...

வால்ஸுக்கு நட்சத்திர வாழ்த்துக்கள் .....

gulf-tamilan said...

நட்சத்திர வாழ்த்துக்கள் !!!

geevanathy said...

நட்சத்திர வாழ்த்துக்கள்...

வெற்றி said...

என்னையும் உன் மனதில் நிறுத்தி, நீர் வாலார் இல்லை தலையார் எனபதை உணர்த்திவிட்டீர்.

கமாடிட்டி பற்றிய உமது பதிவு அருமை.

narsim said...

நட்சத்திர வாழ்த்துக்கள் வால்

M.Rishan Shareef said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே :)

Thamiz Priyan said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தல!

Poornima Saravana kumar said...

நல்ல பதிவு வால்:)

Anonymous said...

நட்சத்திர வாழ்த்துகள்!!

வெங்கடேஷ்

ஆயில்யன் said...

வாழ்த்துகள்!! :))

கலக்குங்க!

KARTHIK said...

வாழ்துக்கள் பாஸ்

எல்லாரும் இந்தவாரம் ஈரோடு வாங்க ஸ்டார் அவகர்களின் டிரீட்டுக்கு

சின்னப் பையன் said...

வால் நட்சத்திர வாழ்த்துக்கள்...

:-))

Prabhu said...

150ஆ, கலக்குங்க...... இன்பர்மேடிவ்வாக இருந்தது.

Tech Shankar said...

Congrats Buddy

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துகள்!!!

ஆ.ஞானசேகரன் said...

உனக்கு வாழ்த்துகள் அதிகம் வரும்,அதில் என் வாழ்த்துகளும்

அ.மு.செய்யது said...

உங்களின் இந்த பதிவை ஒரு ரெஃபரன்ஸாக பயன்படுத்தி கொள்ளலாம்.

பதிவை கேள்விபதில் முறையில் தொகுத்தது தெளிவாக இருக்கிறது.
நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்

சி தயாளன் said...

வாழ்த்துக்கள்...தொடரட்டும் உங்கள் நட்சத்திர பயணம் :-)

Anonymous said...

இந்த வாழ்த்துக்கள் என்னுது சாமியோவ்.

"உழவன்" "Uzhavan" said...

உபயோகமான தகவல். நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!

அன்புடன்,
உழவன்

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் அண்ணே..!

Anonymous said...

நட்சத்திர வாழ்த்துக்கள் வால்.

இதற்குத்தான் ஆசைப்பட்டாயா அருண்ராஜா!

தமிழன்-கறுப்பி... said...

தமிழிஷ் ஓனர் தமிழ்மணத்துல நட்சத்திரமான கதையை எதிர்பார்க்கிறோம்...

;)

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துக்கள்:)

தேவன் மாயம் said...

http://youthful.vikatan.com/youth/index.asp//

உங்கள் பதிவை யூத்ஃபுல் விகடன் சிறந்த ப்ளாக் ஆக போட்டு உள்ளார்கள்!!!

மங்களூர் சிவா said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பா!

மங்களூர் சிவா said...

நட்சத்திர முதல் பதிவே மார்கெட் பற்றியா இப்பல்லாம் மார்கெட் பத்தி பேசறதே கேவலமா பாக்குறாங்க!!

மங்களூர் சிவா said...

அவங்களுக்கு என்ன தெரியும் இன்னொரு வாரன் பப்பெட் ப்ளாகரா இருக்கார்னு

:)))))

மங்களூர் சிவா said...

தமிழ் ப்ளாகரா!!

மங்களூர் சிவா said...

இப்பிடி எல்லாம் சொல்லிதான் என்னைய நானே தேத்திக்க வேண்டியிருக்கு.

வாழ்த்துக்கள் மீண்டும்!

நாஞ்சில் பிரதாப் said...

அண்ணே நம்ம ஊருக்கு எப்ப வந்தீங்கோ....போட்டோல படா ஷோக்காகீறாரு வள்ளுவரு.

அமர பாரதி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் வால்.

Anonymous said...

ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆஆஆஆ.....ம்ம்ம்ம்ம்ம் !!!!!!! என்னடா செல்லம் ..... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... ஸ்டார் ஆயிட்டியா ...... ???? ஆனா , என் ரேஞ்சுக்கு நீ ஸ்டார் ஆகா முடியாது பாத்துக்கோ...... !!!!!! எப்படா கண்ணா ட்ரீட் வெக்கப்போர................????

Anonymous said...

மச்சா.........!! என்ன மச்சா .......!!! நீங்கோ தமிழ்மணம் ஸ்டார் ஆவுது........!!! நம்ம தமிழ்ல ஸ்டார் ஆவுது.....!! நம்மள்கி ஜோடிபோருத்தம் சூப்பர் ஆவுது......!!! நீங்கோ கலக்குது மச்சா......!!!!! நம்மால் நெக்ஸ்ட் மூவிக்கி நிம்மல் ஹீரோ ஆக்ட் உடுது....!!
கார்த்திக் ஜி ( நிம்மல் மொதலாளி ) நம்மள்கி லைட் புடிக்குது.......!! ஆவுது மச்சா....!!! வர்ட்டா செல்லம்....!!!

Anonymous said...

ம்ம்ம்ம்..!! இது முழுக்க ... முழுக்க ... பெரிய சதி .....!!! நானும் இதுல நட்சத்திரம் ஆகறதுக்கு ரொம்ப ட்ரை பண்ணி ..... மருதநாயகம் ...., ஹே ராம் ..., போன்ற படங்கள் இயக்கி நடுச்சேன்.....!! ஆனா ..... ஆஸ்கர் விருது எப்படி வெள்ளை தோளுக்கு மட்டுமோ .....!!!!!! அதே போல இந்த நட்சத்திர விருதும் பல்லு வெளக்காம ... குளிக்காம...... மேலும்... பல .. பல... இருந்தாதான் குடுப்பாங்களாம்..!! ஆனா ... இது வால் பையனுக்கு எப்பவோ கிடைக்க வேண்டியது ..... ரொம்ப லேட்டா கிடைச்சிருக்கு ....!!! எப்படியோ ..... வால் பையனுக்கு என் வாழ்த்துக்கள் ..........!!!!!!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கமாடிடி பற்றிய அறிமுகம் நன்று வாலு!

என்னை வயதான பெரியவர் நிலையில் வைத்துப் பேசி உங்கள் வயதைக் குறைத்துக் கொண்டு விட்டீகள்! உங்கள் பதிவுகளில் மட்டுமே முதிர்ச்சி தெரிகிறது!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//இப்படித்தான் போனவாரம் ஒரு நூல்வெளியீட்டு விழாவுக்கு போய் இருந்தேன். நம்ம பாலுமணிமாறன் அவையில் இருந்தவர்கள் ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டு வருகை தெரிவித்தார். அதுக்கே 10 நிமிடம் சென்றது. இந்த மாதிரி பேர் போடறதுல ஒரு சங்கடம் என் பேரு போடலையேன்னு மனசுக்குள் சிலர் வருந்துவாங்க//

கோவியாரே,
நான் வந்து சேருவதற்கு முன்பு இதெல்லாம் நடந்துச்சா!

அன்புடன் அருணா said...

//அட வா(ல்) நட்சத்திரம் !

'வால்'த்துகள் !///

REPEATTTTTTTTTTTT!!!!
அன்புடன் அருணா

Anonymous said...

அண்ணா...!! வணக்கமுங்கன்னா....!!! எப்படினா .... இப்படிலாம் நட்சத்த்திரமாயி சும்மா ஜொலிக்கிரிங்க...... !! நானு ... நாலு படத்துல பல்லு வெளக்கமா நடுச்சு பாத்தேன் .... பரதேசி பசங்க ..... என் வெப்சைட்டயே தூகிட்டானுங்க ......!!!! நீங்க மட்டும் எப்புடிங்கன்னா.... இப்புடி....!!!!

Maximum India said...

வணக்கம் நட்சத்திர தல

நட்சத்திர பதிவுக்கு வாழ்த்துக்கள்.

முதல் நட்சத்திர பதிவே அசத்தலாக இருந்தது.

இந்த துறை எனக்கும் மிகவும் பரிட்சயமான ஒன்று. இதற்காக MCXலேயே பயிற்சி எடுத்துக் கொண்டவன் நான் என்றாலும், நீங்கள் இந்த துறை பற்றி எளிமையாக அழகாக விளக்கியிருந்ததை மிகவும் ரசித்தேன்.

அதே சமயம், என்னை பொருத்த வரை, பங்குகளையும் வணிகப் பொருட்களையும் (Commodities) ஒரே தட்டில் வைக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஏனென்றால், பங்குகளில் முதலீடு மற்றும் வர்த்தகம் இரண்டு செய்யலாம். ஆனால் வணிக பொருட்களில் (சந்தைகள் வாயிலாக) வர்த்தகம் மட்டுமே செய்ய முடியும். வணிக பொருட்களின் வர்த்தகத்தில் உள்ள கால கட்டுப் பாடு (time limit), இந்த வர்த்தகத்தை சற்று சிக்கலாக்குவதால் நல்ல வர்த்தக திறமை கொண்டவர்கள் மட்டுமே பொருட்கள் வர்த்தகத்தில் ஈடு பட முடியும். மேலும், பங்கு சந்தையைப் போல மிக நீண்ட கால முதலீடுகளை பொருட்களின் சந்தையில் செய்ய முடியாது. நீண்ட கால முதலீடுகள் செய்வதற்காக ஒருவர், பொருட்களைத் தயாரிக்கும் (அல்லது சுரங்க) நிறுவனங்கள், சந்தை பரஸ்பர நிதிகள் (ETF) போன்றவற்றின் உதவியையே நாட வேண்டியிருக்கும்.

மொத்தத்தில் உங்கள் பதிவுக்கு ஒரு டாப் ஸ்டார் ரேடிங் வழங்குவதுடன் உங்களிடம் இருந்து இது போல இன்னும் பல நட்சத்திர பதிவுகளை எதிர்பார்கிறேன்.

நன்றி.

சாலிசம்பர் said...

வாழ்த்துகள் வாலு.
நம்ம பேரையும் பத்திரிக்கையில போட்டுருக்கீங்க,ரொம்ப நன்றி.பாசக்கார பயலுகன்னு சும்மாவா சொல்றாரு எங்க அண்ணன் வடிவேலு.

மணிகண்டன் said...

வாழ்த்துக்கள் வால்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வால் நட்சத்திரத்துக்கு(விண்மீன்)
எனது உளங்கனிந்த வாழ்த்துகள்!

Thamira said...

வாழ்த்துகள் வால் நட்சத்திரம்.!

Unknown said...

// இது போல் இன்னும் நிறைய அண்ணன்கள், இவர்களின் உதவி இல்லையென்றால் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது, //


அடேய் ....... சுச்சு பாக்ஸ் மண்டையா........ !!!! இப்போ உன் நெலம என்ன அம்ம்பானி ரேஞ்சுக்கா இருக்குது .....!!!???!!!


அடேய்...!!! அடேய்...!!! திருந்துங்கடா .......!!!



// நீண்ட நாளாக எனது தொழில் பற்றி எழுத ஆசை, நிறைய பேர் நேயர் விருப்பமாக கூட அதை கேட்டுடிருந்தனர், எனது முதல் நட்சத்திர பதிவாக அதையே எழுதி விடுகிறேன், ///



அடேய் ...... !! நீ பாக்குற நாலனா தொழிலுக்கு இப்புடி ஒரு விளம்பரமா...... !!!


அதுக்கு உன் மொதலாளிய ...... சாயந்தரம் 6 மணிக்கு மேல கையில ஒரு தட்ட குடுத்து ரோட்டுல சும்மா அப்பிடியே நடக்க உட்டைனா போதும்....!!! கலைக்க்சன் சும்மா அல்லும் அப்புடியே......!!! அதுக்கு பேருதாண்டா கமாடிடி....!!!


நீயும் .... உம்பட மோதலாளியும் செய்யுற பேருச்ச்சம்பழ வியாபாரத்துக்கு ஒரு மொன்ன விளம்பரம் வேற...........!!!!!!!

cheena (சீனா) said...

அன்பின் வாலு

நடசத்திரப் பதிவர் ஆனதற்கு நல்வாழ்த்துகள். மேன்மேலும் வாழ்வினில் பல பெருமைகள் பெற்று உயர நல்வாழ்த்துகள். விகடனில் பதிவு சுட்டப்பட்டதற்கும் நல்வாழ்த்துகள்.

Anonymous said...

வாழ்த்துக்கள் அருண்

Muruganandan M.K. said...

வார நட்சத்திரம், வாழ்த்துக்கள். உங்கள் தொழில் எனக்குப் புரியாத புதிர். விளக்க முயற்சித்ததற்கு நன்றி

மாதவராஜ் said...

வாழ்த்துக்கள் நண்பரே!
தொடரட்டும்...

RAMYA said...

எனக்கு ஷேர், கமாடிடி இதெல்லாம் என்னான்னு தெரியாது
ஆனா இன்று வால்ஸ் நல்லா தெளிவா விளக்கி இருக்கிறார்.

யாரவது இந்த சப்ஜெக்ட் பேசினால் நாமும் அதை கவனிக்கலாம்
அந்த அளவிற்கு விளக்கமா சொல்லி இருக்காரு.

நல்ல இன்பர்மேட்டிவான பதிவு வால்ஸ்.
எனக்கே இப்போ ஓரளவிற்கு புரிஞ்சுது.

தமிழ்மனம் "நட்சத்திரம்" வாழ்த்துகள் !!

King... said...

வாழ்த்துக்கள் வால்பையன்...!!!

Prawintulsi said...

நூற்று ஐம்பதாவது பதிவுக்கு வாழ்துக்கள் அருண்!!

Anonymous said...

வாழ்த்துக்கள் வாலுகுட்டி...

புதியவன் said...

வாழ்த்துக்கள் நண்பரே...

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் நட்சத்திரமானதற்க்கும் 150ஆவது பதிவுக்கும்

கீழை ராஸா said...

வாழ்த்துக்கள்...

nTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

vels-erode said...

Definitely I like to wish this VAALPAIYAN. Because, He is from my city(Erode). But I know in Webworld there is no city,town limits.....

Any way i am very proud to know u are the STAR OF THE WEEK.

நாமக்கல் சிபி said...

தமிழ்மணத்தில் வால்(!?) நட்சத்திரம்!

வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி said...

தமிழ்மணத்தில் வால்(!?) நட்சத்திரம்!

வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி said...

தமிழ்மணத்தில் வால்(!?) நட்சத்திரம்!

வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி said...

தமிழ்மணத்தில் வால்(!?) நட்சத்திரம்!

வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி said...

அப்பாடா! செஞ்சுரி போட்டாச்சு!

வாழவந்தான் said...

வால்(பையன்) வளர வாழ்த்துக்கள்!!

அப்துல்மாலிக் said...
This comment has been removed by the author.
Unknown said...

நட்சத்திர தோழா! வாழ்த்துக்கள்

மாதேவி said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

manjoorraja said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்.

சுய புராணத்தை குறைத்து பயனுள்ள பதிவை எழுதியிருக்கிறீர்கள்.

நன்றி.

ஷாஜி said...

மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே

வால்பையன் said...

நன்றி வெட்டிப்பயல்

நன்றி மகேஷ்

நன்றி நட்புடன் ஜமால்

நன்றி வடிவேலன்
உங்கள் ப்ளாக்கில் இதை தெரிவித்ததற்கு நன்றி

நன்றி ராம்

நன்றி ஜெகதீஷன்

நன்றி கோவிகண்ணன்

நன்றி நல்லதந்தி

நன்றி அபிஅப்பா

நன்றி அனுஜன்யா
எழுதலாம்

நன்றி டோண்டு
ஆமாம் பத்து மணிக்கு தான்

வால்பையன் said...

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்

நன்றி ஸ்ரீதர்

நன்றி வடுவூர் குமார்

நன்றி அருண்

நன்றி குசும்பன்

நன்றி ரம்யா
இப்”போதை”க்கு வாழ்த்துக்களா?

நன்றி கார்க்கி

நன்றி நான் ஆதவன்

நன்றி சர்வேசன்

நன்றி அ.மு.செய்யது

நன்றி கணிணிதேசம்

நன்றி பரிசல்காரன்

நன்றி ரமேஷ் வைத்யா
என்ன சிரிப்பு

நன்றி ஷைலஜா

வால்பையன் said...

நன்றி பார்சா குமரன்

நன்றி தாரணி பிரியா

நன்றி கணேஷ்

நன்றி அபி

நன்றி செல்வேந்திரன்
இந்த வார ஆனந்தவிகடனில் அதை பார்த்தேன்

நன்றி தருமி

நன்றி கல்ஃப் தமிழன்

நன்றி தங்கராசா ஜீவராஜ்

நன்றி தேனியார்

நன்றி நர்சிம்

நன்றி ரிஷான் செரிப்

நன்றி தமிழ்பிரியன்

நன்றி பூர்ணிமா சரண்

நன்றி வெங்கடேஷ்

வால்பையன் said...

நன்றி ஆயில்யன்

நன்றி கார்த்திக்
எனக்காக எதுக்கு உங்களுக்கு வீண் செலவு

நன்றி ச்சின்னபையன்

நன்றி பப்பு

நன்றி தமிழ்நெஞ்சம்

நன்றி நிஜமாநல்லவன்

நன்றி ஞானசேகரன்

நன்றி ராதாகிரிஷ்ணன்

நன்றி டொன்’லீ

நன்றி கோவை ரவி

நன்றி உழவன்

நன்றி தமிழன் கறுப்பி

நன்றி வெயிலான்

நன்றி வித்யா

நன்றி தேவன் குமார்

நன்றி மங்களூர் சிவா

நன்றி நாஞ்சில் பிரதாப்
அது பற்றி ஒரு பதிவு போட்டேனே

நன்றி அமரபாரதி

வால்பையன் said...

நன்றி மாதேஷ்
நீங்க என்ன மாதிரி பெயர மாத்தி பின்னூட்டம் போட்டாலும், உங்க ஸ்டை காட்டி கொடுத்துடுது.

நன்றி ஜோதிபாரதி

நன்றி அன்புடன் அருணா

நன்றி மோகன்பிரபு

நன்றி சாலிசம்பர்

நன்றி மணிகண்டன்

நன்றி தாமிரா

நன்றி மாதேஷ் மீண்டும்
என்னை எப்படி வேண்டுமானாலும் காலாய்த்து கொள்ளுங்கள், என் பாஸை இதில் கலாய்க்க வேண்டாம் ப்ளீஸ்

நன்றி வடகரை வேலன்

நன்றி டாக்டர். முருகானந்தம்

நன்றி மாதவராஜ்

நன்றி கிங்

நன்றி பிரவீன்

நன்றி அனானி

நன்றி புதியவன்

நன்றி முரளிக்கண்ணன்

நன்றி கீளை ராஸா

நன்றி எந்தமிழ்

நன்றி வேலுமணி
ஈரோட்ல எங்கே?

நன்றி நாமக்கல் சிபி

நன்றி வாழவந்தான்

நன்றி அபுஅஃப்ஸர்

நன்றி அதிரை போஸ்ட்

நன்றி மாதேவி

நன்றி மஞ்சூர் ராசா

நன்றி ஷாஜி

geevanathy said...
This comment has been removed by the author.

!

Blog Widget by LinkWithin