மறுபிறப்பு (கேள்வி-பதில்)

கேள்வி: Venkatesh Sankarapandian
//மறுபிறவியை பற்றி உங்களுடைய கருத்து.......?//

பதில்:
ஒரு குழந்தையிடம் பிறப்பு, இறப்பு, சொர்க்கம், நரகம், கடவுள், மறுபிறப்பு பற்றி எதுவும் சொல்லாமல் வளர்த்தால் அந்த குழந்தைக்கு எதுவுமே தெரியாது.

மனிதம் மட்டுமல்ல எல்லா உயிர்களுக்குமே தன் உயிரை காத்துக்கொள்வது தன்னிச்சையான உந்துதல். அனிச்சை செயல் மாதிரி. உயிரை காத்துகொள்வதில் பிற உயிர்களை விட மனிதன் அதிகமாகவே போராடினான் என்பதற்கு சான்றே பரிணாமத்தில் அவன் உச்சாணி கொம்பில் இருப்பது தான்

இறந்த பிறகு என்ற கேள்விக்கு இன்று வரை அறிவியல் பூர்வமான பதில் இல்லை, ஆனால் ஆதியில் அறிவியல் வளர்ச்சியடையாத மனிதன் கனவில் வந்த இறந்த மனிதர்களை வேறு எங்கேயோ வாழ்வதாக நம்பினான், இந்த பூமியில் இறந்தாலும் அவர்கள் வேறு எங்கேயோ வாழக்கூடும் என்பது ஒரு வித ஆறுதல் அளித்தது அவனுக்கு



மரணத்தை பற்றிய பயமே எல்லாவற்றிகும் தொடக்கமாக இருந்தது, கடவுள், மதம், சொர்க்கம், நரகம் இப்படி எல்லாமே, அந்த மரண பயத்தை தற்காலிகமாக தள்ளி போட மறுபிறவி நம்பிக்கையும் தேவைப்பட்டது.

இந்து மதம் மற்றும் பெளத்தின் ஹீனயானம் பிரிவில் மறுபிறவி நம்பிக்கை உண்டு, ஆப்ரஹாம மதங்களில் இறுதி தீர்ப்பு நாள் வரை இறந்தவர்கள் காத்திருக்கவேண்டும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் இவை அனைத்தும் புத்தகமாக உள்ளதே தவிர உண்மை என நிரூபிக்க எந்த சான்றும் இல்லை.

சிலர் தீடீரென்று வேறு ஒருவர் போல் பேசுவது. இறந்த மனிதர் போல் பேசுவது வரலாற்றில் பதியப்பட்டுள்ளது, அவை அனைத்தும் மல்டிபுள் பர்சனாலடி டிஸ்சாடர் வகையறா தான்.

மறுபிறவியும் கடவுள் போல் ஒரு நம்பிக்கை மட்டுமே, அடுத்த பிறவில் அப்படி பிறக்கனும், இப்படி பிறக்கனும்னு பரிகாரம் செய்யும் பொழுது அது மூடநம்பிக்கையாகிறது.

இருப்பதே ஒரே வாழ்க்கை, அந்த வாழ்க்கையை மனிதத்திற்கும் பயனுள்ளதாக வாழ்வதே சிறப்பு, நீங்கள் இந்த மண்ணில் பிறந்ததற்கான சான்றாக உங்கள் சுவடை பதிய விட்டு செல்வதே உங்கள் பிறப்பின் அர்த்தம்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin