விலைவாசி கட்டுக்குள் உள்ளதா?...

இந்தியா பொருளாதாரத்தில் வீழ்ச்சியடையவில்லை. விலைவாசி கட்டுக்குள் உள்ளது, இதுதான் பாஜக ஆதரவாளர்களின் வாதம்
பெட்ரோல் விலை எவ்வளவு ஏறினாலும் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடுன்னு தினம் போய் பெட்ரோல் பங்க் நிற்கும் சாமான்யர்களுக்கு அவர்கள் சொல்வது சரியா தான் இருக்கும் போலன்னு தோன்றும்,

ஆனால் உண்மை அதுவா?

லேஸ் பாக்கெட் தெரியுமா? நாலு உருளைகிழக்கு சிப்ஸை இலவசா கொடுத்து காற்றை விற்பார்களே அப்படி தான் இதுவும்,

பெட்ரோல் விலை 65 ரூபாய் இருந்தபொழுது நீங்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் அடித்தால் உங்களுக்கு 1.54 லிட்டர் அதாவது ஒண்ணரை லிட்டர் பெட்ரோல் கிடைக்கும், அதுவே லிட்டர் விலை 85 ரூபாயாக இருக்கும் பொழுது நீங்கள் 100 ரூபாய்க்கு அடித்தால் உங்களுக்கு 1.18 லிட்டர் மட்டுமே கிடைக்கும், அதாவது ஒண்ணேகால் லிட்டருக்கும் கீழே., சரி இதுக்கும் விலைவாசி கட்டுக்குள் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?

நீங்கள் ஒரு நடுதர குடும்பம், வாரம் ஒன்றுக்கு 10 ரூபாய்க்கு பற்பசை வாங்கி பயன்படுத்துபவர். அதில் 50 கிராம் இருக்கும் என வைத்துகொள்வோம், இப்போதும் அதே அளவு இருக்கும் என நினைக்கிறீர்களா? அது தான் இல்லை, அது எப்பவோ 40 கிராம் ஆகிவிட்டது, அதே போல் சோம்பு, ஷாம்பு என பாக்கெட்டில் அடைக்கப்படும் அனைத்து பொருள்களும் மறைமுகமாக எடை குறைக்கப்பட்டு அதே விலைக்கு விற்கப்படுகிறது, விலையில் மாற்றமில்லை என்பதால் உங்களுக்கும் எதுவும் தெரியவதில்லை, ஆனால் நீங்கள் ஒரு மாசத்துக்கு குடும்பத்திற்கு 5000 செலவு செய்வீர்கள் என்றால் தற்பொழுது உங்களை அறியாமலே 1000 ரூபாய் அதிகமாக செலவு செய்துக்கொண்டிருக்கிறீர்கள்.



பொருள்களின் விலை ஏற்றம் சப்ளை அண்ட் டிமாண்ட் அடிப்படையில் முன்பு விலை ஏற்ற இறக்கம் கண்டது, அதாவது சப்ளை அதிகமாக இருந்தால் பொருள் விலை குறையும், அதே நேரம் டிமாண்ட் அதிகமாக இருந்தால் பொருள் விலை ஏறும், ஆனால் சமீபகாலமாக எல்லா பொருள்கள் விலையும் செயற்கையாக ஏற்றப்பட்டு கொண்டுக்கிறது. அரசு சொல்லும் எந்த முகாந்திரமும் இல்லாத காரணங்களை பெரும்பாலான மக்கள் நம்பிக்கொண்டுயிருக்கிறனர்.

இந்திய பணமதிப்பு வீழ்ச்சி அடைவதால் ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல லாபம், ஆனால் நாம் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு பெரும் நட்டம் அடைக்கிறியோமே,அதை ஏன் நாம் கவனிப்பதில்லை? இந்தியா தன்னிறைவு அடைந்த நாடாக இருந்தால் ஏற்றுமதி மட்டுமே இருக்க வேண்டும், ஆனால் விவசாய நாடாக அறியபடும் இந்தியாவிற்கு பல கோடி ரூபாய்களுக்கு விவசாய பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவது தெரியுமா?

இதற்கு என்ன தான் காரணம்?

அரசின் தவறான கொள்கையே முழு காரணம்,
இதற்கு தீர்வு தான் என்ன?
வாருங்கள் அலசுவோம்...

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin