விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பீடா!....

பிள்ளையார் ஒரு நாள் விடுமுறை எடுத்தால் உலகமே இயங்காது என்பதற்கு, அந்த அழுக்குருண்டைக்கு முன்னாடி உலகம் எப்படி இயங்கியது என்ற லாஜிக்கான கேள்வியை நாம் முன்வைக்கலாம், ஆனால் அது ஜோஸ்திட சாத்திர நிகழ்ச்சி ஒரு பக்கம் நடத்தி, மறுபுறம் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி போடும் தொலைக்காட்டிக்கு எதிரான ஸ்டேட்மெண்ட் என்பதால் நாம வேற டாபிக் போவோம்.

மனிதர்களுக்கு பயம் இல்லாமல் வாழ நம்பிக்கை தேவையாய் இருந்தது. திகட்ட திகட்ட நம்பிக்கையூட்டியே குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள், இஸ்லாமியர்களுக்கு அல்லா உலகை இயக்குகிறார். கிறிஸ்தவர்களுக்கு கர்த்தர் உலகை இயக்குகிறீர். போலவே அனைத்து மதத்துகளுக்கும், முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கும் மதத்திற்கெல்லாம் ஜனநாயக முறையில் தேர்தல் வச்சு தேர்தெடுப்பாங்க போல.



குறிப்பிட்ட வயதுக்கு மேல் மனிதர்களுக்கு பகுத்தறிவு வேலை செய்ய ஆரம்பிக்கும், ஆனாலும் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள பயம் ஊட்டப்படும், கடவுள் இல்லையென்று சொன்னால் உனக்கு மறுபிறவி கிடைக்காது, இறந்தபிறகு நரகத்தில் பல தண்டனைகள் கிடைக்கும் என்பதையும் பரம்பரை பரம்பரையாக ஊட்டி வைத்திருப்பதால், அதுவும் சேர்ந்தே கடத்தப்படுகிறது. எல்லாத்தை விட மதவாதிகளின் கடைசி ஆயுதம், கடவுள் இல்லையென்றால் உனக்கும் நட்டமில்லை, எனக்கும் நட்டமில்லை, ஆனால் ஒரு வேளை இருந்தால் உனக்கு தானே நட்டம்.

டெஸ்லாக்கு முன்னால் யாரேனும் மின்சாரத்தை உருவாக்க முடியும் என சொல்லியிருந்தால் பைத்தியம் மாதிரி பார்த்திருப்பார்கள். பூமி உருண்டை என்பதையோ, பூமி தான் சூரியனை சுற்றி வருகிறது என்பதையோ அன்றைய மதவாதிகள் ஏற்காமல் கடுமையான தண்டனைகள் கூட கொடுத்தார்கள், தொலைபேசி வந்த ஆரம்பத்திலே பிற்காலத்தில் தந்தி இல்லாத பேசும் சாதனம் மக்கள் சட்டை பையில் இருக்கும் என்று சொன்ன பெரியார் ஏன் பகுத்தறிவு தந்தை என அழைக்கப்படுகிறார்னு நீங்களும் யோசிச்சா புரியும்(பிழைப்புவாத பெரியாரிஸ்டுகள் விதிவிலக்கு)

உங்களுக்கு கொண்டாட ஒருநாள் வேண்டும் என்றால் குடும்பத்துடன் மகிழ்வாக கொண்டாடுங்கள், கல்லை எறிந்து மண்டைய உடைக்கிறது, மெடிக்கல்ஷாப்பில் காண்டம் திருடுறதுன்னு இருந்தால் எப்படி உங்கள் கவனம் பொருளாதாரம் பக்கம் திரும்பும், ஆசியாவிலே பொருளாதாரத்தில் மோசமான நாடாக இந்தியா முதல் இடத்தில் நிற்கிறது, அதை சரி செய்ய யோசிக்காமல் கொஞ்சம் கூட பகுத்தறிவே இல்லாமல் அழுக்குருண்டைக்கு பிறந்தநாள் கொண்டாடிக்கிட்டு இருக்கிங்க

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin