புதிய ஆப்பு - உதய் மின் திட்டம்

தமிழ்நாட்டின் கடனில் பெரும்பகுதி மின்சார வாரியத்தால் உண்டானது.
காரணம் ஊழல் மட்டுமே
தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள காற்றலையில் இருந்து அவர்கள் மின்சாரம் தர சம்மதித்த பொழுதும் அதை வாங்காமல் தனியாரில் மின்சாரம் வாங்கிய இவ்வளவு பெரிய கடன் சுமைக்கு காரணம்

மேலும் தரமற்ற நிலகரியை அதிக விலை கொடுத்து வாங்கியது, டிஜிட்டல் மீட்டர் வாங்கியதில் ஊழல். மத்திய அரசு பழைய தெரு விளக்குகளுக்கு மாற்றாக புதிய எல்.ஈ.டி பல்புகள் குறைந்த விலைக்கு தருகிறேன் என்று சொன்னபொழுதும் அதை வாங்காமல் தனியாரிடம் வாங்கியதில் ஊழல், மீண்டும் தனியாரிடம் நிலகரி வாங்க அனுமதி கேட்பது என ஊழலை தவிர வேறென்றும் அறியோம் பராபரமே என வாழ்த்து கொண்டிக்கிறது தமிழக அரசு



அந்த ஊழலில் ஏற்பட்ட நட்டங்களை குறைக்க ஏற்கனவே மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்கள் மேல் பாரத்தை வைத்தது மாநில அரசு, இப்பொழுது மீண்டும் பெரிய ஆப்பு ஒன்று காத்திருக்கிறது

புதிதாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள உதய் மின் திட்டத்தின் மூலம் இனிமே தமிழக மக்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறைக்கு மாற்ற இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

முதல் 100 யூனிட் இலவசம் என்றால் அடுத்து ஓடும் ஒவ்வொரு 100 யூனிட்டுக்கும் நான் செலுத்தும்  தொகை முன்பை விட அதிகம்.உதாரணத்திற்கு நீங்கள் ஒரு மாசத்திற்கு 200 ம் குறைவாக பயன்படுத்தினால் அதிகபட்ச தொகை 170 அதுவே 210 யூனிட் என்றால் 260 ரூபாய். சராசரியாக இரண்டு மாதத்திற்கு 250 பயன்படுத்தினால் 380 ரூபாய் நீங்கள் கட்டவேண்டும், அதுவே மூன்று மாதத்திற்கு என்றால் 350 யூனி என வைத்துகொண்டாலும் நீங்கள் கட்ட வேண்டிய தொகை 680 ரூபாய்



ஒரு மாதம் நீங்கள் பயன்படுத்திய 100 யூனிட் மின்சாரத்திற்கு நீங்கள் செலுத்தவேண்டிய அதிக தொகை 300 ரூபாய். அதிமுக அரசும் சரி, மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவும் சரி, மக்கள் நலம் என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் செயல்கள் தான் இதுவரை செய்துள்ளனர்., தானும் பாதிக்கப்படுகிறோம் என்பதை அறியாமலெயே மக்கள் மீண்டும் ஒருமுறை இம்மாதிரியான ஊழல் அரசுக்கு வாக்கு அளிப்பது நான் தற்கொலை செய்வதோட மட்டுமல்லாமல் பிறரையும் கொலை செய்வதற்கு சமம்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin