கேள்வி:
Anand Babu · 3 mutual friends
அண்ணா விளக்கம் அருமை. மார்க்ஸியம் பற்றியும் அது நடைமுறைக்கேதுவானதா இல்லையா என சொல்வீர்களா ?
பதில்:
மார்க்ஸ் ஒரு முறை சொன்னார், பின்னொரு நாளில் என் சித்தாந்தங்களை விட உயரிய சிந்தனைகள் உருவாகி, மனிதம் தளைத்து எனது புத்தகங்கள் அருகாட்சியத்தில் இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று.
மார்க்ஸியம் மட்டுமல்ல, எல்லா சிந்தனைகளையும் அதன் கருத்தியலுடன் இசைந்து அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும், அது மனிதம் தளைக்க பயனுள்ளதாக இருக்க வேண்டும். எந்த சித்தாந்தமும் ஒரு கட்டத்தில் மக்களிடையே இயல்பில் கலந்து விடும், கிட்டதட்ட ஒரு சடங்காகி விடும். கம்யூனிஸமும், பெரியாரியலும் தற்பொழுது அந்த நிலையில் தான் இருக்கிறது.
ஒருவரின் சிந்தனையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பது அந்த ஒருவரை அவமானபடுத்துவதல்ல, மனிதத்தின் சிக்கல் முடிச்சுகளை அவிழ்க்க பலர் பல கருத்தியல்களை உருவாக்கினார்கள், அதில் சில மட்டுமே நிலைக்க காரணம், அதன் தேவையும், கருத்தியலின் வள்ர்ச்சியும் தான்.
இதை ஒரு முறை நான் சொன்னதுக்கு, நீ என்ன மார்க்ஸ், பெரியாரை விட பெரிய அப்பாடக்கரான்னு சண்டைக்கு வந்தார்கள். அறிவியலும் கருத்தியலும் ஒரே இடத்தில் தேங்கி நின்றால் மனிதம் இந்த அளவு வளர்த்திருக்குமா? ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் மத கருத்தியலுக்கு சமமாக கருத்து முதல் வாதத்தை நிறுவுவது அதனை வெளிபடுத்தியவர்களுக்கு நாம் செய்யும் அவமதிப்பு அல்லவா
நான் அடுத்த வகுப்புக்கு செல்கிறேன் என்றால் அதற்கு முந்தைய வகுப்பை அவமதிக்கிறேன் என்று அர்த்தமில்லை, அது இல்லாமல் என்னால் தேவையான பாடத்தை உணரவும் முடியாது. மேலும் அடுத்த வகுப்பு செல்லவும் முடியாது. மார்க்ஸ், பெரியார் போல் நாமும் மனிதம் சிந்திக்க வேண்டும், ஆனால் தற்போதைய தேவையும் கருத்தில் கொண்டு

0 வாங்கிகட்டி கொண்டது:
Post a Comment