இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணம் பார்ட் 1

இந்தியாவில் 130 கோடி மக்கள் இருக்காங்கன்னு வச்சுகுவோம். அதில் 13 லட்சம் பேர் டாப் பணக்காரர்கள். 13 கோடி பேர் அப்பர் மிடில் பணக்காரர்கள், அப்புறம் முடில்கிளாஸ், என்னை போல் சொந்த வீடில்லாத லோயர் மிடில் கிலாஸ். லோ கிளாஸ்(பொருளாதாரத்தை சொல்றேன்)

இப்ப எனக்கு 10000 சம்பளமா கையில் வருதுன்னு வையுங்க, வீட்டுக்கு போகும் போது ஒரு குவாட்டர் அடிச்சிட்டு, ஒரு கோழி பிரியாணி சாப்பிட்டு, குழந்தைகளுக்கு பார்சல் வாங்கிட்டு அப்படியே தள்ளுவண்டி கடையில் பழங்கள் வாங்கிட்டு வீட்டுக்கு போவேன்.

அந்த பணம் என் கையில் இல்லாமல் என் டெபிட் கார்டில் இருந்தால். நான் ஏடிஎம் போகனும், அதுக்கும் மாசம் மூணு நாள் மட்டுமே நாப்கின் வைக்கனும், அதுல எல்லா நாளும் பணம் இருக்கும்னு சொல்ல முடியாது, ஆக வேற இல்லாம நான் ஏசி பாருக்கு போகனும், அங்க ஒரு லார்ஜ் ஒரு குவாட்டர் விலை. ஒரு குவாட்டருக்கு மூணு குவாட்டர் விலை கொடுக்கனும்,

அப்புறம் சாப்பாடு, வீட்டுக்கு பார்சல். போற வழியில் பழமுதிர்சோலையில் பழங்கள். இல்லைனா குழந்தைகளுக்கு பழங்கள் கட்டு. இதுல பார்த்திங்கனா சார். சும்மா 500 ரூபாவில் முடியவேண்டிய என்னோட செலவு என் சம்பளத்தில் 20% முழுங்கிவிடும்,



என் கையில் பணமாக இருந்தால், ரோட்டு கடையில்  பூ வாங்குவேன். குழந்தைகளுக்கு பழங்கள் வாங்குவேன். அண்ணாச்சி கடையில் வீட்டுக்கு மளிகை வாங்குவேன், மாசகடைசியில் கடனும் வாங்குவேன் கார்டா இருந்தா நான் ஷாப்பிங் மால் போகனும் அங்கே MRP இருக்கும் பொருள்களுக்கு 50 பைசா விலை குறைச்சிட்டு விலை குறிப்பிடாத மளிகை பொருட்கள் வச்சு ஊனுவான், நல்லா செக் பண்ணி பாருங்க, மளீகை கடையில் விற்கும் பருப்பு விலையை விட ஷாப்பிங் மாலில் 20 ரூபாய் அதிகம் இருக்கும்

இதெல்லாம் தெரிந்தும் நான் வேற வழி இல்லாமல் பணமாக கையில் இல்லாததால் ஷாப்பிங்மாலில் செலவு பண்ணனும், ஹோட்டலில் வரி கட்டனும், வரி கட்ற நல்ல விசயம் தான், ஆனால் என் வருமானத்துக்கு அது எவ்வளவு அதிகம். அதுவே ரோட்டு கடையில் வாங்கினால், அந்த பணம் இந்தியாவில் மீதி 90% மிடில், லோயர் மக்களிடம் புழங்கும், பணபுழக்கம் இருந்தால் தான், மக்களிடம் வாங்கும் திறன் அதிகரிக்கும்.

ஒரு வடைகடைகாரர் ஒரு நாளைக்கு 1000 ரூபாய்க்கு விற்றால் 700 முதலீடு போக 300 லாபம் பார்பார். அவரின் விற்பனை குறையும் போது அவரால் அன்றாடம் செலவை குறைக்கக்கூடாது, அவர் முதலில் இருந்து பணம் எடுக்கனும், வடைகடை ஒரு உதாரணம் தான், அந்த முதல் என்பதை இன்னும் புரியும் படி சொல்லனும்னா விதை நெல் என்பார்கள், அந்த விதை நெல் தாய்க்கு சமம், அதை விற்று சாப்பிடும் நிலை ஒரு விவசாயிக்கு வந்தால் அந்த நாடு நாசமாய் போக போகிறது என்று அர்த்தம்

இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணம் பார்ட் 1

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin