கேள்வி - பதில் (காதல்)

கேள்வி:
க்ரஸ் னு சொல்றாங்கல.. அது லவ் இல்ல..கிரஸ், இன்பாட்டிவேசன், இனக்கவர்ச்சினு.. இதுல இருந்து காதல் எப்படி பிறக்குது..   காதலுக்கும், கிரஸ் க்கும் எந்த இடத்துல வேறுபாடு...  இத துல்லியமா சொல்லமுடியாதுனு புரியுது.. ஆனாலும் முடிஞ்சவர சொல்லுங்க... பதிவா

பதில்:
மேலே நீங்க சொன்ன அனைத்திற்கும், காதல் உட்பட அடிப்படை எதிர்பால் ஈர்ப்பு. ஒரு ஆணா என் புரிதலையும், கேட்டு அறிந்தவைகளையும் உடலியல், உளவியல் வச்சு சொல்றேன்.

ஏற்கனவே சொன்னது போல் 24/26 வரை இனப்பெருக்கத்திற்கான பருவம் பீக்கில் இருக்கும். அப்போ பார்க்கும் பெண்கள் மேலல்லாம் காதல் வரும். எல்லாமே அழகா தெரியும். பேசினாலே காதில் ராஜா இசை கேட்கும். அவை எல்லாமே நம்மை இனபெருக்கம் செய்ய தூண்டும் ஹார்மோன் விளையாட்டு. அந்த வயதில் காதல் வராதா என்றால் வரும். ஆனால் அது தான் காதலா என புரிந்துகொள்ளவே 10 வருசம் ஆகும். ஏன்னா இப்ப காதலெல்லாம் நானும் காதலிக்கிறேன்னு பெருமைபீத்தவே பண்ணுவதா இருக்கு

சரி காதல்னா என்ன? ஏன் பண்றோம்னு உள்ளே கடந்து போனால் பகிர நம்பிக்கையான துணை, ஏன் அப்ப ஃப்ரெண்ட் நம்பிக்கையான ஆள் இல்லையா?
இப்படி கேள்விகள் கேட்டுட்டே போனால் கடைசியில் செக்ஸில் தான் வந்து நிக்கும். ஏன்னா மத்த தேவைகள் எல்லாமே நண்பர்களிடம் கிடைக்கும். அப்ப செக்ஸ் தான் காதலா என்றால் இல்லை. காதலை பகிர செக்ஸும் ஒரு வழி. அப்ப செக்ஸ் இல்லைனா காதலே இல்லையா என்றால் ஆம் செக்ஸ் இல்லாத காதல் சீக்கிரம் புட்டுக்கும்

என்ன தாண்டா காதல்னு உரிச்சிட்டே போனா கடைசியில் வெங்காயம் மாதிரி ஒன்னுமேயில்ல, அதான் காதல்னு வந்து நிக்கும். இனகவர்ச்சி தாண்டி ஆளுமைகள் மேல் காதல்வயப்படுவோம். அவங்க எவ்ளோ பல்பு கொடுத்தாலும் காதலிச்சிட்டே இருப்போம். ஆனால் காதல் என்பது ஒரு அங்கிகாரம் அது பிரதிபலிப்பை எதிர்பார்க்கும்., பல நாட்கள் ஒன்வேவா காதல் போய்கிட்டு இருந்தா உங்க உள்ளுணர்வும், ஹார்மோனும் உங்கள் காதல் உணர்வை குறைத்துவிடும். உங்கள் பார்வை வேற பக்கம் திரும்பும்



மறுக்க முடியாத விசயம் காதல் என்பது மிக அற்புதமான உணர்வு. காதல்வயப்பட்டால் மகிழ்வுக்கான ஹார்மோன்கள் சுரந்து உங்களை பறக்கவைக்கும். தன்னம்பிக்கை கொடுக்கும். ஏன் வாழ்றோம் என்ற தேடலுக்கு பதிலாக நிற்கும். ஆக காதல்னா என்னன்னு ஆராய்வதை விட காதலை அனுபவிப்பதே சிறப்பு.

காதல் நம் மனதை முழுமையாக ஆக்கிரமிக்கக்கூடியது. வேறு எதன் மீதும் நாட்டமில்லால் உங்கள் துணையை சுற்றியே மனம் நிற்கும். அந்த காதல் இனி இல்லை என்றால் அந்த மனம் முற்றிலும் வெற்றிடமாகும். உலகில் காதல் தோல்வி தற்கொலைகளே அதிகம். அதற்காக பட்டும் படாமலும் காதலிப்பது கட்டாந்தரையில் படுத்து நீச்சல் அடிப்பது போன்று. தோல்வி உங்களை பக்குவபடுத்தும், வலி தாங்கும் வலிமை தரும். காதல் சுகமென்றால் தோல்வி அனுபவம். ரெண்டையும் தவறவிடக்கூடாது. அனுபவிக்கனும்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin