பெராமோன் என்னும் உயிர்மணம்!

                        பெராமோன் - இதை உயிர்மணம்னு சொல்லலாம். இதுவே உயிர் உருவாக்கத்துக்கான தூண்டல், தாவரங்களில் இருந்து மனிதன் வரை அனைத்து உயிர்களும் பெராமோன் சுரக்கிறது. மனிதனை தவிர அனைத்து உயிர்களும் அதை உணர்கின்றன. மனிதன் ஏன் இழந்தான் என்பதை கடைசியில் பார்ப்போம்.

தாவரங்கள் மகரந்த சேர்க்கைக்காக தனிக்கே உரிய மணத்தை பரப்பி வண்டை ஈர்க்கிறது, அதன் மூலம் தாவரத்தின் இனப்பெருக்கம் நடக்கிறது. சிறு சிறு பூச்சி இனங்கள் கூட இனபெருக்கத்திற்காக பெராமோன் சுரக்கின்றன. அதனால் ஈர்க்கப்படும் ஆண் பூச்சிகள் ஒரு இடத்தில் கூடி அந்த பெண்ணை இணையபோராடும். அங்கே யார் சிறந்தவர் என்ற சண்டை நடக்கும். இந்த சண்டை பூச்சி இனத்தில் தொடங்கி யானை வரை நடப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

இதே பெராமோனின் இன்னொரு வடிவம் ஆண் விலங்குகள் தங்கள் இருப்பிடத்தை குறிப்பிட எல்லைகளில் தங்கள் சிறுநீரை கழிப்பது. அது பெண்களுக்கு விடுக்கும் அழைப்பும் கூட. ப்ரேயிங் மேண்டிஸ் என்னும் பூச்சியை பார்த்திருக்கலாம், சற்று பெரிய வெட்டுகிளிபோல் இருக்கும். இதற்கு பசி எடுக்கும் நேரத்தில் அதிகமாக பெராமோனை சுரந்து ஆண் பூச்சியை உறவு கொள்ள வைத்து அதை தின்று விடும். ப்ளாக் விடோ என்ற சிலத்தியும் இப்படி தான்.



இனபெருக்கத்திற்காக இருந்த கலவி, மனிதர்களுக்கும், சிம்பன்சி போன்ற குரங்குகளுக்கும் உளவியல் ஆற்றுபடுத்துனராக இருந்ததால் அவர்களுக்கு கலவிக்கென்று பருவம் இல்லாமல் உறவு கொண்டார்கள். ஆண்களும், பெண்களுக்கும் இயற்கையில் இருந்து விலகி தங்களை அழகி படுத்திக்கொள்ள ரசாயணபூச்சுகளை எடுத்துக்கொண்டதால் இயற்கை மணம் அவர்களை விட்டு போயிற்று

இயற்கையில் ஆணின் வியர்வை பெண்ணுக்கும், பெண்ணின் வியர்வை ஆணுக்கும் ஈர்ப்பை தரும். ஒரு பெண்னை கலவி நோக்கில் பார்க்கும் பொழுது ஆணுக்கு விரைத்து தன்மை ஏற்படுவது போல் பெண்களுக்கு பெராமோன் சுரக்கும்.(தற்சமயம் அதுவே உராய்வை சமாளிக்க பயன்படுகிறது) அதை அறியும் தன்மையை ஆண் இழந்துவிட்டதால் பெண் உடல்மொழியை பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

இந்த பெராமோனும், பிட்யூட்ரி, தைராய்டு மாதிரியான உடலுக்கு தேவையான ஒரு சுரப்பி தான். மகிழ்வை ஏற்படுத்தும் டோபோமைன், உற்சாகம் கொடுக்கும் டெஸ்ரோஜன் ஆகியவற்றிடன் இதுக்கு தொடர்ப்பு உண்டு. இயற்கையாக ஏற்படும் ஈர்ப்பும் சுரக்கும் பெராமோனும் தவறான விசயமல்ல. அதற்காக நீங்கள் குற்ற உணர்வு அடையவேண்டியதில்லை. உங்கள் உடலில் நடக்கும் ஒவ்வொரு செயலும் உங்கள் உடலின் சமநிலைக்காகவே!

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin