கேள்வி - பதில் (பொருளாதாரம்)

கேள்வி:
நரேந்திரமோடி வாக்குறுதி கொடுத்த வருசம் 2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டதா? மக்களின் மறதியை போல் அவரும் மறந்துவிட்டாரா?

பதில்:
வருசம் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பென்றால் மூன்று வருடத்தில் 6 கோடி பேர் வேலை பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் சொன்னதில் ஒரு சதவிகிதம் கூட அரசு உருவாக்கவில்லை என்பதே உண்மை

பாஜக தரப்பு சொல்கிறது புதிதாக தொழில் முனைவோர் 7.5 கோடி மக்கள் வங்கிகளில் கடன் பெற்றுள்ளதாக ஆனால் ஆர்.பி.ஐ சொல்கிறது கடந்த 60 வருடம் இல்லாத அளவு கடன் வாங்கும் திறன் அளவு குறைந்துள்ளது என்று.

வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதற்கு முதலீடு மிக முக்கியமான ஒன்றாகவும் கூடவே நம் நாட்டின் பொருளாதாரமும் அதில் சம்பந்தபட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியாக அவர்கள் காட்டும் ஜி.டி.பி அளவு பணவீக்கத்தை தான் காட்டுகிறது, நாட்டின் வளர்ச்சியை அல்ல

FDI எனப்படும் ஃபாரின் டைரக்ட் இன்வெஸ்மெண்ட் 25% மட்டுமே நேரடி முதலீடு, மீதி 75% இங்கிருக்கும் நிறுவனங்களுடன் கூட்டு. அதாவது இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி முதலீடு செய்ததாக கணக்கு காட்டியுள்ளனர். இதெப்படி வேலை வாய்ப்பை உருவாக்கும்?



பிரதமர் மோடி பற்றிய மாயபிம்பம் ஊடகங்களால் உருவாக்கப்பட்டது.பாதுகாக்கப்பட்டும் வருகிறது. ஜி.எஸ்.டியை எதிர்த்து குஜராத்தில் வரலாறு காணாத பேரணி நடந்துள்ளது. யாரும் பேசவும் இல்லை, காட்டவும் இல்லை.

மக்கள் மறதி என்பது நம் நாட்டின் சாபம். நவம்பர் 8 பணமதிப்பு இழப்பு அறிக்கை. கருப்பு பணம் பிடிபடும் என்றார்கள். எவ்ளோ பணம் வங்கிக்கு வந்தது என கேட்டால் இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறோம் எங்கிறார்கள். அதனால் வேலை இழந்தோர். உயிர் இழந்தார் பற்றி மறந்து பிக்பாஸில் யார் குசு விட்டான்னு பேசும் நமக்கு இதை விட நல்ல பிரதமர் கிடைக்க வாய்ப்பில்லை.

எப்படியோ நாசமா போங்க

#வால்பையன்
#பொருளாதாரம்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin