ஒழுக்க விதிகள்!

மனிதர்களின் ஒழுக்கவிதிகள் பற்றிய புரிதல் என்ன நிலையில் இருக்குன்னு தெரிஞ்சிக்க ஒரு கேள்வி கேட்டேன். குறைவான ஆடை அணிந்திருக்கும் ஆண் மீது பெண் மையல் கொண்டால் தவறு ஆண் மீதா, பெண் மீதா என்று. பெண் மீது தான் தவறு என்று சிலர் சொன்னாலும் பெரும்பான்மை அதில் என்ன தவறு என்றார்கள். நிச்சயமாக அதுவே ஆணாக இருந்தால் அப்படி சொல்லியிருக்க மாட்டார்கள். அதற்கு காரணம் ஒடுக்கப்பட்ட சிறுபான்மைக்கு ஆதரவு மனப்பான்மை. ரெண்டாவது இத்தனை வருசமா அடிமையா இருந்தாங்கல்ல. இனி கொஞ்சம் ஆண்கள் இருக்கட்டும் என்ற மனப்பான்மை. இது கொஞ்சம் ஆபத்தும் கூட, இப்படி தான் தலித்தியவாதிகள் செய்யும் குற்றங்கள் கண்டுக்கொள்ளபடாமல் போகிறது.

இந்த ஆதரவு மனபான்மைக்கு பின்னே நீண்ட நெடிய வரலாறு உண்டு. மதம் ஒழுக்கமே போதிக்கிறது என்பது தன் நம்பிக்கையை சரியென்று நிலைநாட்ட மதத்தை நியாயபடுத்தும் மொன்னைவாதமே தவிர மதத்திற்கும் ஒழுக்கத்திற்கும் சம்பந்தமேயில்ல. அட மதத்தை விடங்க. மதசார்ப்பற்றது என புகழப்படும் குறள் என்ன சொல்லுது?

பிறன்மனை நோகா பேராண்மை என்று ஆணுக்கும்
ஆணுக்கு அடிமையா இருந்தா பெய்யென பெய்யும் மழை என பெண்ணுக்கும் சொல்கிறது. பொதுபுத்தியில் பார்த்தால் இது இருபாலருக்கும் ஒழுக்கவிதிகள் போதிப்பது போல் இருக்கும் ஆனால் உண்மையில் ஆணை அங்கே உட்கார் எங்கிறது, பெண்ணை அங்கே கட்டிபோடுகிறது, இதுக்கு தான் சிலவருசங்களுக்கு முன்னால் வள்ளுவர் ஒரு நிலப்பிரபுத்துவ சொம்புதூக்கி என்று எழுதினேன். எல்லாரும் ரவுண்டு கட்டி கம்பு சுத்துனாங்க.



ஆண்களால் உருவாக்கப்பட்ட மதம் நிச்சயம் பெண்களுக்கு சுதந்திரமோ உரிமையோ அளிக்க வாய்ப்பில்லை. திறந்துவைக்கப்பட்ட பண்டங்களை ஈ மொய்க்கும் ஆகவே பர்தா அணிவீர் என்று பெண்களை பண்டங்களுடன் ஒப்பிடும் மதம் இஸ்லாம். பெண்களுக்கு பாதுகாப்பு தருவதே ஆண்களுக்கு அழகு என்று அதே மத புத்தகத்தில் இருந்தால் அது இருவருக்கும் பொதுவான மதம் எனலாம். உங்கள் மனைவி(யர்கள்)!! உங்கள் விளைநிலங்கள். அவர்கள் உங்கள் நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்னு சொல்லும் மதம் ஒரு சாரார்க்கு மட்டும் ஒழுக்கம் போதிக்குதா இல்லையா?

இஸ்லாத்திலாவது பெண்களுக்கு மறுமண உரிமை உண்டு. ஆனால் இந்து மதத்தில் பெண் கடவுள்கள் உண்டு என சொல்லிக்கொண்டாலும் பெண்களை மிக மோசமாக நடத்துவது இந்து மதமே, வேதமே இந்தியாவின் பண்பாடு என்று பேசும் குருமூர்த்திகளுக்கு மட்டுமே தெரிந்த இந்திய பண்பாடு எது தெரியுமா?  சிறுவயதில் விதவை ஆன சிறுமிகளை மொட்டையடித்து சாகும் வரை துறவு மேற்கொள்ள சொல்வார்கள். அதை மையமாக வைத்து பெண் இயக்குனர் தீபா மேத்தா எடுத்த வாட்டர் என்ற படம் இன்று வரை இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?



உங்கள் உடம்பில் தீகாயம் ஏற்பட்டால் எப்படி துடித்துப்போவீர்கள். கணவனை இழந்த பெண் வாழவேகூடாது என்று அவளை உயிருடன் சிதையில் தூக்கி போடும் கொடூரத்தை வேற எங்கேயாவது காணமுடியுமா? இந்த பண்பாட்டை தான் மீட்டெடுக்க போகிறீர்களா? இது தான் உங்கள் மதம் இரு பாலருக்கும் போதிக்கும் சமமான ஒழுக்க விதிகளா? நான் இந்து என பெருமையுடன் சொல்லும் நீங்கள் அதில் மறைந்திருக்கும் இந்த கொடூர வரலாற்றை எப்படி நியாயப்படுத்தபோகிறீகள். இனி நீங்கள் நான் இந்து சொல்லும் போது வெட்கமடையவில்லையென்றால் நீங்கள் மனிதனே அல்ல.

அறிவில்லாமல் உளருகிறான் வால்பையன்,. குடிச்சிட்டு இவனுக்கு இதுவே வேலையா போச்சு(அவரு தான் வந்து வாங்கி கொடுதாரு) உங்களுக்கு தெரியவில்லை என்றால் நேரில் வாருங்கள், எங்கள் மார்க்க அறிஞர்களை கேளுங்கள் என்பது. நேரில் வந்து தெளிவு பெற்று இஸ்லாத்தில் சேர நான் என்ன பெரியார்தாசனா? ஒரு நல்ல முஸ்லீம்க்கு 74 கன்னிகளை கூட்டிக்கொடுக்கும் மாமா கடவுளும் தேவையில்லை, அந்த மதமும் தேவையில்லை. சிந்திக்க மாட்டீர்களான்னு என்னை கேக்குறிங்களே என்னைக்காவது நீங்கள் சொன்ன மார்க்க அறிஞர்களிடம் கடவுளுக்கு எதுக்கு இந்த கூட்டிக்கொடுக்குற வேலைன்னு கேட்டிங்களா?



நீங்கள் ஒரு நல்ல முஸ்லீம். கற்பனை செய்து பாருங்கள் சொர்க்கத்தில் 74 கன்னியர்கள் சூழ உல்லசாகமாக உள்ளீர்கள். எப்படி குஜாலா இருக்கா? இப்ப அப்படியே அந்த கற்பனையில் அதே நல்ல முஸ்லீமாக உங்கள் குடும்ப பெண்களை நினைத்துப்பாருங்கள் அவர்கள் 74 கன்னிபையன்களுடன் உல்லாசமாக இருப்பதை எப்படி உணர்கிறீர்கள். இப்பயும் உங்களுக்கு குஜாலா இருந்தா ஹேட்ஸ் ஆஃப். தூன்னு துப்ப தோணுச்சுன்னா எல்லாத்தையும் தூக்கி போட்டு என் மாதிரி கடவுள் மறுப்பாளனா மாறுயிருக்கனும். என் கேள்விக்கு பதிலை தெரியலைன்னா வக்கனையா அட்ரஸ் கொடு, உங்கம்மாவை அனுப்புன்னு சொல்ல தெரியுதுல்ல. எங்க உங்க வீட்டு பெண்களிடம் போய் நல்ல முஸ்லீம் பெண்களுக்கு சொர்க்கத்தில் 74 கன்னிபையன்கள் கிடைக்கும். குஜாலா இருங்கன்னு சொல்லிபாருங்களேன்.

நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்வது இதை தான். ஒரு தனிமனிதனின் ஒழுக்கவிதிகள் அவனை சார்ந்தது. அதற்கும் மதத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. எனக்கும் ஒழுக்க விதிகள் உண்டு. கடைபிடிக்க மிக சுலபமானது. ஒரு வரியில் சொல்வதென்றால் “ நான் என்ன எதிர்ப்பார்க்கிறேனோ அதையே இந்த உலகுக்கு கொடுக்கிறேன்”
எனக்கு யாரும் துரோகம் செய்யக்கூடாதுன்னு நினைச்சா நான் யாருக்கும் துரோகம் செய்யக்கூடாது. என்னை யாரும் தாழ்ந்தவனா நினைக்கக்கூடாதுன்னு நினைச்சா நான் யாரையும் தாழ்ந்தவனா நினைக்கக்கூடாது. என் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு நேரக்கூடாதுன்னு நினைச்சா எல்லா குழந்தைகளையும் என் குழந்தைகளா பார்க்கனும். கருத்து முரண்பாடுகளில் தனிமனித தாக்குதல் கூடாது. உனக்கு பசிப்பது போலே தான் எனக்கும் பசிக்கும். எவ்ளோ மூடா இருந்தாலும் கையடிச்சுட்டு படுத்துகனும்னே தவிர விருப்பில்லாத பெண்ணை தொந்தரவு பண்ணக்கூடாது

குற்ற உணர்வின்றி என் வாழ்க்கையை கடக்க இதுவே போதுமானதாகயிருக்கிறது. மனிதனின் பெரும் ஆரோக்கியமே குற்ற உணர்வின்றி வாழ்தல் தான். நான் சில நண்பர்களுக்கு கடன் பாக்கி தரணும். அதை தவிர நீ இன்ன தப்பு செஞ்சன்னு என் குற்றத்தை நிரூப்பிச்சிருங்க. நான் நாண்டுகிட்டு செத்துர்றேன் நானும் என் ஒழுக்கமும் எனக்கானது, உங்களுக்காக வேசம் போடமுடியாது.

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin