பயம்!

எந்த கவலையுமின்றி ஒரு குழந்தை மகிழ்வாய் இருக்க காரணங்கள் யோசித்ததுண்டா? எப்படி சுத்தி வந்தாலும் ஒரே ஒரு காரணம் தான். குழந்தைகளுக்கு பயம் இல்லை.

நாம் சைக்கிளோ, பைக்கோ ஓட்ட கற்றுக்கொள்ளும் எவ்வளவு தடுமாறியிருப்போம். அதே நாம் தான் இன்னைக்கு அதில் சர்க்கஸ் காட்றோம். காரணம் அப்பொழுது இருந்த பயம் இப்பொழுது இல்லை.

ஒரு உறவை நீங்கள் பெரிதும் மதிக்கிறீர்கள். அதை இழக்க விரும்பவில்லை. அதை எப்பொழுது நினைக்கிறீர்களோ அப்பொழுதே இழந்து விடுமோமோ என்ற பயமும் தொற்றிக்கொள்ளும். இழக்க விரும்பாமல் அந்த உறவை இறுக பற்றுவீர்கள். அவர்களை கண்காணிப்பீர்கள் அது அவர்களுக்கு மூஞ்சு முட்டவைக்கும். நீங்கள் எது நடக்கக்கூடாது என பயந்தீர்களோ, அந்த பயமே அதை நடக்கவைக்கும்



பொதுவாக வாழ்க்கை முறைக்கு வேறு எதையும் உதாரணம் சொல்வது நகைமுரணாக இருக்கும். ஆனால் உறவு என்பதை கண்ணாடிக்கு சமமாக சொல்லலாம். ஒரு முறை ஏற்பட்ட விரிசல் எப்போதும் இருக்கும். ஒவ்வொரு பார்வையின் போதும் அந்த கோடு பிரதானமாக தெரியும்.

பயம் என்பதை எச்சரிக்கை உணர்வு என்பார்கள். அந்த எச்சரிக்கை உணர்வு சுரக்கும் அட்ரினல் கவனத்தை கொடுக்கும். ஆனால் பெரும்பாலோர் பிரச்சனையை எதிர்கொள்ள அதை பயன்படுத்துவதில்லை. அதில் இருந்து தப்பி ஓடுவே பயன்படுத்துகிறன்றர்.

பயம் எச்சரிக்கை உணர்வால் வருவது, எச்சரிக்கை உணர்வு முன் அனுபவத்தால் வருவது. ஒரு குழந்தை எதையும் முன் அனுபவத்துடன் ஒப்பிடுவதில்லை. அதன் லாப, நஷ்ட கணக்குகள் யோசிப்பதில்லை. ஒரு மிட்டாய்க்கு குழந்தை அடையும் பெரு மகிழ்ச்சி அனுபவம் பெற நாமும் எந்த எதிர்பார்ப்புகள் இன்று ஆச்சர்யங்களை பெற வேண்டும்

நாம் என்ன தான் குட்டிகரணம் போட்டாலும் நடந்து முடிந்த சம்பவங்களை மாற்ற முடியாது. உங்கள் செயலுக்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம் எதுவும் விரிசலை ஒட்ட வைக்காது. நாளையை பற்றிய கனவுகளும் நிலையில்லாதது.

இக்கணம் வாழுங்கள், வாழ்தலே வரம், வாழ்தலே ஆன்மீகம்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin