மியூச்சுவல் ஃபண்ட்!

நண்பர்கள் நிறைய பேர் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி கேக்குறாங்க..

நான் கமாடிடி அனலைசர், அதிலும் தங்கம் மற்றும் வெள்ளி மட்டும் தான் பார்ப்பேன்.

மியூச்சுவல் ஃபண்ட் என்பது பங்கு வணிகம் செய்யும் ஒரு நிறுவனம் கையில் நம் பணத்தை கொடுத்து வணிகம் செய்வது

அந்த நிறுவனத்தில் என்னை போல் அனலைசர்ஸ் நிறைய பேர் இருப்பாங்க. அவங்க எந்த நிறுவனம் வளர்ச்சி பாதையில் இருக்கு, எதிர்காலம் நல்லாருக்குன்னு பார்த்துட்டே இருப்பாங்க

உங்க பணத்தை இரு வழிகளாக முதலீடு செய்யலாம். ஒரே தடவையில் ஒரு தொகை கொடுத்து இணைவது அல்லது எஸ்.ஐ.பி என்னும் சிம்பிள் இன்வெஸ்ட்மெண்ட் ப்ளானில் இணைவது SIP யில் மாதம் ஒரு தொகையை கட்டிக்கொண்டே வர வேண்டும்

உங்கள் பணத்தை முதலீடு செய்து வரும் லாபத்தில் அந்த கம்பெனி முதலாளியில் இருந்து காவலாளி வரை சம்பளம் கொடுத்தது போக மீதி பணத்தை உங்களுக்கு லாபமாக தருவார்கள்.



இதில் உள்ள நன்மைகள், சிறந்த ஆலோசகர்கள் இருப்பதால் நல்ல நிறுவனத்தில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவார்கள், நீண்டகால முதலீடாக இருந்தால் உங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும்



தீமைன்னு பெருசா ஒன்னும் இல்ல. தீடீர்னு பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தால் உங்கள் முதலீடும் சேர்த்து தான் நட்டமடையும். அதை தான் மியூச்சுவல் ஃபண்ட் விளம்பரம் போடும்போது வேகவேகமா படிப்பார்கள். அது மார்கெட் ரிஸ்க் பொறுத்தது என்று. அதே போல் குறுகிய கால முதலீடு என்றாலும் உங்களுக்கு நட்டம் தான். பெரும்தொகை போய்விடும்

நேரடியாக பங்கு வர்த்தகம் செய்பவர்களுக்கு இது தேவையில்லை. ஏற்கனவே பல வேலை இருக்கு. நான் செய்யமுடியாது என்பவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

ஒரே ஒரு வேண்டுகோள், ஆன்லைன் வர்த்தகத்தை பொறுத்தவரை கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள்.

#வால்பையன்
#பொருளாதாரம்

1 வாங்கிகட்டி கொண்டது:

RAVI said...

முதலில் மியூச்சுவல் ஃபண்டின் தாரக மந்திரம் இதைப் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும்.
Mutual funds investments are subject to market risks, read all scheme related documents carefully.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நமது பணம் எதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது,எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்று வருடம்தோரும் தகவல் தருவார்களா பாஸ்...?

!

Blog Widget by LinkWithin