எதை நோக்கி இந்தியா?

நேற்று காவி டவுசர்களின் சில பதிவுகள் பார்த்தேன்.
//*ஸ்மார்ட் போனில் மானியம் பற்றி பேசுவது நகைமுரண்.//
மேலோட்டமா பார்த்தால் நியாயம் தானேன்னு தோணுதுல்ல ஆனால் இதில் இருக்கும் விசம் உங்களுக்கு புரியலைன்னா நீங்களும் மனிததன்மையை இழந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
உனக்கு பசிக்குதா நீ கேளு, எவன் பசிக்கோ நீ ஏன் சவுண்டு கொடுக்குற என்பதன் பொருள் தான் மேலே இருக்கும் பதிவு. நான் தான் உலகம், இணையம் தான் உலகம் என்ற செக்குமாடுகளுக்கு தான் இம்மாதிரியான பதிவுகள் வரும். இன்னொரு தண்டகருமமும் இருக்கு. சாப்பாடு இல்லைன்னா அவன் விதி, போன ஜென்ம கர்மா என்று தன்னை விடுவித்துக்கொள்ளும் கோழைதனம்.
தென் இந்திய மாநிலங்கள் ஓரளவு படிப்பறிவு பெற்றது. சுய மரியாதை மிக்கது. மூட்டை தூக்கியாவது பிழைச்சிக்கும் பீகார், ராஜஸ்தான், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் தன் கையெழுத்து போடதெரியாத மக்கள் எத்தனை பேர் தெரியுமா? மானியம் என்பது பிச்சை அல்ல, என் சக மனிதனின் கஷ்டத்தில் பங்கெடுக்க நான் கொடுக்கும் வரிபணம். மானியம் ரத்து செய்யப்போறோம்னு பொது வாக்கெடுப்பு நடத்த உங்களுக்கு தைரியம் இருக்கா?


//*மனசாட்சியை தொட்டு சொல்லுங்க, நீங்கல்லாம் ரேசன் வாங்கியா சாப்பிடுறிங்க//
எங்கள் வீட்டில் ரேசன் அரிசி தான், அதில் வெட்கப்பட என்ன இருக்கு. நீ ரேசன் அரிசி சாப்பிடலைன்னா எல்லாரும் உன்னை மாதிரியே பணக்காரனா இருப்பானா? நீ குடியும், குடித்தனமுமா சந்தோசமா இருந்தா இந்த உலகமே அப்படி தான் இருக்குன்னு நினைச்சிகிவியா? நீ என்ன மெண்டலா இல்ல சைக்கோவா?
ரேசன் பொருள்கள் கள்ள சந்தையில் விற்கபடுவது கிரிமினல் குற்றம், அதை தடுக்க கடுமையான சட்டம் போடனுமே தவிர ரேசன் கடையை மூடுவது கேனதனமாவுல இருக்கு. இதை தான் எலிக்கு பயந்து வீட்டை கொழுத்துவது என்று சொல்வார்கள்.


//இது காங்கிரஸ், திமுக கொண்டு வந்த சட்டம்//
அப்படினா இதுவும் காங்கிரஸ் ஆட்சி அப்படி தானே.
ஒரு பெளலர் ஒய்ட் பாலா போடுறான், வேற பெளலர் மாத்துறாங்க. அவனும் வந்து ஒய்ட் பாலா போடுறான்.
அவன் பண்ணதையே நீயும் பண்றதுக்கு நீ எதுக்குடா டோமருன்னு கேட்பாங்களா மாட்டாங்களா? இப்ப நான் உன்னை பார்த்து என்ன கேட்க?
நாட்டில் என்ன நடக்குது, எத்தனை மக்கள் வீடில்லாமல் ப்ளாட்பாரத்தில் தங்கியிருக்காங்க. வேலை இல்லாமல் எத்தனை பேர் இருக்கான். ஒரு வேளை சோத்துக்கு எத்தனை பேருக்கு உத்தரவாதம் இருக்கு. இதெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காம சட்டம் இயற்கும் உங்களையெல்லாம் மனுசங்கன்னு சொல்லிக்கவே முடியல.
சக மனிதனின் பசியை அறிய முடியாத நீங்கள் உலகிலயே கேவலமான பிறவிகளாக தான் இருக்கக்கூடும்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin