ஆன்மிகம்!

ரொம்ப நாளாவே இதை பற்றி எழுத சொல்லி யாராவது கேள்வி கேட்பாங்கன்னு எதிர்பார்த்துகிட்டு இருந்தேன். சமீபத்தில் தான் ஒருவர் ஆன்மிக குருகள் பற்றி எழுதசொல்லி கேட்டார். நான் படித்த பழைய ஆன்மிகவாதிகள் என்று சொல்லிகொண்டவர்களே சமகாலத்தில் எழுத்தாளர் ஏகாம்பரம், கவிஞர் காத்தவராயன் என்று தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொண்டது தான் இருக்கிறார்கள். இதே சமகாலத்தில் சுவாமி, சத்குரு, பரமஹம்சர், பாபா என பட்டம் சூட்டிக்கொண்டவர்கள் பற்றி நான் சொல்லவேண்டியதில்லை.

 நான் முன்னோர்கள் எல்லார் மூடர்கள்னு சொல்லல, ஆனால் மூடதனத்தை சொல்லி கொடுத்தவர்களை தான் முன்னோர்கள் என கொண்டாடுகிறீர்கள் என சாடுகிறேன்.  ஆன்மிகத்திற்கும் மதத்திற்கும் அணுவளவும் சம்பந்தம் இல்லை. ஆன்மிகவாதிகள் உலகெங்கும் இருந்தனர், இருக்கிறார்கள். அவர்களை நம் வசதிக்கு ஏற்றார்போல் அழைத்தோம். சித்தர்கள், துறவிகள், ஜென், பைத்தியகாரன் இப்படி எந்த பேரு வேணும்னாலும் சொல்லிக்கலாம். ஆனால் அவர்களுக்கு அது ஒரு பொருட்டே அல்ல. நாம் பொது பெயராக சித்தர் என்று வைத்துக்கொள்வோம்.

சித்தர்கள் பிரபஞ்சவியலில் இரட்டை தன்மையை கடந்தவர்கள்,  நல்லது/கெட்டது, இன்பம்/துன்பம் போன்ற இரட்டை தன்மைகளை சொல்றேன். ஒருவரின் தோற்றத்தை கொண்டு சித்தராக உருவகபடுத்தமுடியாது. உங்களுக்கும் அவர்களுக்கும் சின்ன வித்தியாசமே. அவர்கள் பயம் கடந்தவர்கள், நீங்கள் பயத்திலேயே வாழ்பவர்கள். மரணம் என்பதை தடுக்கமுடியாது என்பது தெரிந்தும் அதை தள்ளிப்போட மனிதன் லோல்படுவது மரண பயத்தால் தானே.

பயமே உங்களின் அனைத்து தெளிவுக்கும் தடையாக உள்ளது. உங்களுக்கு செக்ஸ் பற்றி பேச பயம், ஆம் அவளை காதலிக்கிறேன்னு சொல்ல பயம், ஆம் நான் தண்ணி அடிப்பேன்னு சொல்ல பயம்.  பேசவே பயப்படும் நீங்கள் எங்கனும் அதை அறிந்துக்கொள்ள போகிறீர்கள்.  உங்களுக்கு ஏற்கனவே உருவாக்கிக்கொண்ட மனதடைகளை உடைக்காமல் உங்களால் உண்மையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

சித்தர்கள் பிரபஞ்சத்தின் பொது விதியை புரிந்தவர்கள். அது இங்கே எதுவும் நிலையில்லாதது, உங்களால் எதையும் நிலைக்க வைக்கவும் முடியாது. இந்த சூத்திரத்தை உணர்ந்தவர்களில் தமிழ் சித்தர்கள் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். கடவுள் என்ற வார்த்தையை அவர்கள் தான் பயன்படுத்தினார்கள். அவர்கள் சொன்ன கடவுள் என்பதன் உண்மையான அர்த்தம் தெரியாதவர்கள். உங்களுக்குள்ளே சக்தி இருக்கு. அது குண்டிலினில் தெரியும், குஷ்பு இட்லியில் தெரியும் என்று கல்லா கட்டினார்கள். அவர்களை தான் பெரியார் கடவுளை(தவறாக சாமியென்று) கற்பித்தவன் முட்டாள் என்றார்.

கட உள் என்பது ஒரு தன்மையை/பதிலை/கருத்தை “கட”ந்து “உள்”ளே செல் என்று அர்த்தம். தொழில் மேன்பாட்டியலிளில் ஒரு சூத்திரம் உண்டு. FIVE Q என்று அதற்கு பெயர். அதாவது ஐந்து கேள்விகள். எந்த பிரச்சனைக்கும் ஐந்து கேள்வி கேள். பிரச்சனையின் வேரை அறியலாம். உதா: பொருள் ஏன் டெலிவரி ஆகல, தயாரிப்பு இல்ல. ஏன் தயாரிப்பு இல்ல. மிசின் ரிப்பேர், ஏன் மெக்கானிக் சரி செய்யல, பேஃர் பார்ட்ஸ் இல்ல. ஸ்டோர் கீப்பர் அதை பார்க்காம என்ன பண்றான்? ஆக கேள்விகள் யாரோ ஒருவரின் தவறை சரியாக சுட்டிக்காட்டுகிறது. நாம் நோகாமல் நுனிபுல் மேய்கிறோம். கண்ணுக்கு நிற்பவன் மேல் பழியை தூக்கிபோட்டு அப்போதைக்கு பிரச்சனையை முடிக்கிறோம். ஆன்மிகத்துக்கும், தொழிலுக்கும் என்னடா சம்பந்தம்னு முழிக்கிறிங்களா

சரி ஒரு உலோகம்னு வச்சுக்குவோம், அதை “கட”ந்து ”உள்”ளே போனால் தனிமம், அதையும் கடந்தால் எலக்ட்ரான், புரோட்டான், குவார்க்ஸ். இதுவும் புரியலையா வாங்க உங்க வழிக்கே வர்றேன்.
இங்கே நான் இருக்கிறேன். என்னை கடந்து உள்ளே சென்றால் என் பெற்றோர். அவர்களை கடந்து கடந்து சென்றால் இறுதியில் இந்த உலகை படைந்தது யார் என்று கேள்வி நிற்கும். நீங்கள் அங்கேயே நிற்பீர்களானால் நீங்கள் மத வாதி. உங்களை பொறுத்தவரை இந்த உலகம் கர்த்தர் அல்லது அல்லா அல்லது பிரம்மனால் படைக்கப்பட்டது. ஆனால் ஆன்மிகம் என்பது அதையும் “கட”ந்து “உள்”ளே போ எங்கிறது.

மன தடைகளை உடைத்திருதால் மட்டுமே இதை தாண்டி உங்களால் உணர முடியும். முன் முடிவுகள் எந்த பயனும் தராது. அந்த உணர்தலில் the thing came from nothing என்பதை உணர முடியும். இதை வார்த்தையாக எளிமையாக சொல்லிவிடலாம். அந்த பிரபஞ்ச விரிதலை கற்பனையில் காணும் போதே ஆயிரம் ஆர்கஸத்துக்கு சமமான பேரின்பம் மண்டையில் உணர முடியும்.

ரகசியத்தை அறிந்த சித்தர்கள் இரண்டு தன்மையாக செயல்பட்டார்கள், பலர் எதையும் நம்மால் மாற்ற முடியாது, இந்த பிரபஞ்சம் ஒழுங்கற்ற ஒழுக்கவியல் கோட்பாட்டில் இயக்குவதால் எதையும் முழுமை பெறவைக்கவும் முடியாது என்பதை உணர்ந்தார்கள். அவர்கள் தங்களை மறைத்துக்கொண்டார்கள். மீண்டும் மீண்டும் பிரபஞ்ச தோன்றலை உணர்ந்து அந்த பரவசத்தை தவமாக பெற்று அப்படியே சமாதி அடைந்தார்கள்.

சிலர் மட்டுமே மானுடவியல் சிக்கலை சரி செய்ய முடியுமா என ஆராய்ந்தார்கள். உணவே மருத்து என்பது சித்தர்கள் கொடுத்த மருத்துவ முறை. அதை கெடுத்து நாசம் பண்ணிட்டு பந்தாவுக்கு மட்டும் சித்த மருத்துவம் சிறந்ததுன்னு சொல்லிட்டு திரியுறோம் உதா:குப்பைமேனி ஒரு மூலிகை. அதன் தன்மைக்கு அது குப்பையில் வளர வேண்டும். வீட்டில் வளர்த்தால் அதெப்படி குப்பை மேனியாகும்.

எதிர்காலத்தை அறிய முற்பட்டார்கள். அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களின் பிறப்பு, தன்மை, உடல்வாகு கொண்டு அவர்கள் தொகுத்து, அதை சீடர்கள் மூலம் விரிவு செய்து அதற்கு சோதிடம் என்று பெயரிட்டார்கள். அதுவும் தோல்வி தான்., அவர்கள் காலத்தில் அது பயன்பட்டிருக்கலாம். சமகாலத்தில் அதன் நிகழ்தகவு காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை தான்.  தங்கத்தின் மேல் இருந்த மோகத்தை போக்க ரசவாதம் முயற்சி செய்தார்கள். அதுவும் தோல்வி தான். அவர்கள் விட்டுசென்ற இடத்தில் இருந்து மேலும் ஆராய யாரும் தயாராய் இல்லை. அதை வைத்து காசு பார்ப்பதே போதுமென்று இருக்கிறார்கள்.

இந்த லெளதீக பொறுப்புகளுக்கு விலகி ஓடிய சித்தார்த்தன் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றான். அவனும் தோற்றன். சித்தர்களுக்கு தெரியும். இங்கே எதுவும் நிலையில்லாதது. இதுவும் தோற்றுப்போகும். ஆனாலும் மானுடவியல் மேல் இருக்கும் காதல் அவர்களை மீண்டும் மீண்டும் முயற்சிக்க செய்யும்.  என் கணிப்பு அவர்கள் மனுடவியல் சிக்கலை தீர்க்க மானுடத்தில் இருந்து தன்னை மறைத்துக்கொண்டதால் தோற்றார்கள் என்பது. ஆற்றில் இறங்காமல் நீச்சல் எப்படி கத்துக்க.

எனக்கு வலித்தால் தானே உங்கள் வலியை உணர முடியும். எனக்கு பசித்தால் தானே உங்கள் பசிய புரியமுடியும். தனி ஒருவன் தன் புலன்களையும் உணர்வுகளையும் அடக்க கற்றுக்கொள்வதால் அது எப்படி மானுட சிக்கலுக்கு சூத்திரமாகும். முதலில் உணர்வுகளை அடக்குதலே இயற்கை விதிகளுக்கு முரண் ஆனதே. இயற்கையாக வாழாதவர்கள் சித்தர்களே இல்லையே

சித்தர்களிடம் எது சரி?  எது தவறு என்று கேட்டால்
எதுவெல்லாம் பிறருக்கு தெரியக்கூடாது என மறைத்து செய்வதெல்லாம் தவறு, எவன் பார்த்தால் எனக்கென்ன என செய்வதெல்லாம் சரி என்பார்கள்.
எனக்கு மானம் தான் பெரிதென்பவனிடம் அப்புறம் ஏன் உயிரோடு பிறந்த, உடையோடு பிறந்திருக்கலாமே என்பார்கள்.

சித்தர்கள் ஒரு தன்மையை ஆக்கசக்தி என்று அடையாள படுத்தியதில்லை. தன்னையும் வணங்கசொன்னதில்லை. பிறவிகள் குறித்தோ, சொர்க்க நரகம் குறித்தோ பேசதில்லை. என் பொருளை வாங்கலைனே நீ இந்தியனே இல்லைன்னு சொல்ல மாட்டார்கள். உன் வாழ்க்கையை நீ வாழலைன்னா நீ மனிதனே இல்லை என்பார்கள். எதிலும் உங்கள் இருத்தலை உணர்ந்து வாழ சொன்னார்கள். ஜென் டீ மெடிட்டேசன் அதை தான் சொல்லியது. கஞ்சா அடிக்கிறயோ, காதலிக்கிறியோ. எதை செய்தாலும் முழு ஈடுபாட்டோடு செய். அது தான் வாழ்வது/ மற்றதெல்லாம் இயந்திரதனமா செய்வது

வாழ்தலே ஆன்மிகம்!

#ஆன்மிகம்
#வால்பையன்

4 வாங்கிகட்டி கொண்டது:

ராஜி said...

நல்ல அலசல்

வால்பையன் said...

நன்றிங்க!

பொன்.பாரதிராஜா said...

மிகச் சிறந்த, ஆழ்ந்த சிந்தனை...காசு கொடுத்து கடவுளை பார்க்கும் அளவுக்கு போய்விட்ட மக்களிடம் கட உள் பலனளிக்குமா தெரியவில்லை...நீங்கள் ஊதுகிற சங்கை ஊதுங்கள்...

Mythees said...

சுலபமா சொல்லிட்டீங்க வால் , வட்டத்துக்கு வெளிய இருந்து பார்த்தால்தான் இது எல்லாம் புரியும் ,உங்களோட பார்வை உண்மையாலுமே சூப்பர் ..

!

Blog Widget by LinkWithin