தனி மனித உரிமையை மதிப்பவன் என்பதால், தனிமனித தாக்குதலாக இருந்தாலும் கூட உடனே கோபப்பட்டு அன்ஃப்ரெண்ட் பண்ணுவது, ப்ளாக் பண்ணுவது கூடாது என கொள்கை வைத்துள்ளவன் நான். நேற்று நடந்த இரு உரையாடல்கள் என்னை நிறைய யோசிக்க வைத்தது.
சாதியால் என்ன பலன் என்று கேள்வி தான் கேட்டேன். நீங்களும் திணிக்க தான் செய்றிங்கன்னு முத்திரை குத்தினார் தமிழ்தேசியவாதி ஒருவர். அவர் கொள்கை என்ன லட்சணமும் அவரே ஒரு பதிவு போட்டு வெளிச்சம் காட்டினார்.
இங்க சாதியை பேரோடு போட்டுகிறதை எதிர்ப்பவர்கள், அமெரிக்காவில் குடும்ப பெயரை சேர்த்து கொள்வது பற்றி எதுவும் பேசுவதில்லை என்று
எங்க அப்பா பேரு நடராஜ், என் பேரு அருண்ராஜ், ரெண்டு தம்பிங்க பேரு கனகராஜ், செல்வராஜ். தம்பி பையன் பேரு மோகன்ராஜ், ரூபன் ராஜ். எங்க சாதி என்ன ராஜா? அப்படினா ராஜ்னு பெயர் வைத்திருப்பவர்கள் எல்லாம் எங்க சாதியா?
இல்ல அமெரிக்காகாரன் நாங்கள் ஆண்ட குடும்பம், நீங்கள் பேண்ட குடும்பம்னு பெருமை பேசுறானா? இந்த குடும்ப பெயருடைய மணமகனுக்கு அதே குடும்ப பெயருடய மணமகள் தேவைன்னு மேட்ரிமோனியலில் விளம்பரம் கொடுக்குறானா?
சாதிக்கும், குடும்ப பேருக்கும் வித்தியாசம் தெரியாமல் தான் இத்தனை நாள் வளந்திங்களா?
நான் எல்லா கருத்துகளில் இருக்கும் நல்ல விசயங்களை ஆதரித்து பேசியுள்ளேன். தமிழ் தேசியம் உட்பட. எப்போதேனும் பெரியார் கருத்துகளையோ, மார்க்ஸ் கருத்துகளையோ பகிர்ந்து பார்த்ததுண்டா? நான் படித்தாலும் அதன் சாத்தியகூறுகளை ஆராயாமல், சரியாக புரிந்துகொள்லாமல் நான் எழுதமாட்டேன்.
இன்னொரு சம்பவம்
சாதி அது பாட்டுக்கு இருக்கு, நீ தான் சாதி இல்லைன்னு எழுதி வன்மத்தை வளர்க்கிற,
சரி சாதி ஏன் தேவைன்னு சொல்லுங்க
நீ சாதி ஏன் தேவையில்லன்னு சொல்லு
இவர்களெல்லாம் கண்ணை மூடிட்டா உலகம் இருட்டாகிரும்னு நம்புவாங்களோ.
நார்வே, மனிதன் வாழ உலகில் தகுதியான முதல் இடம், பின்லாந்து மனிதம் கல்வி கற்பதற்கு தகுதியான உலகில் முதல் இடம். ஐஸ்லாந்து போன்ற நாட்டில் குற்றவாளிகள் இல்லாமல் சிறைசாலையை என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட நாடுகளில் 80% அதிகமான மக்கள் கடவுள் மறுத்து மனிதம் போற்றும் மக்கள்.
நாடு பிடிக்க நடந்த சண்டைய விட, உலகில் மத சண்டையில் இறந்தவர்கள் அதிகம். தமிழகத்தில் சாதிய வன்முறைகள் நடப்பதேயில்லை என்பது போல் பேசுபவர்களிடம் என்ன சொல்வது? நேற்று தான் ஒரு கோவில் விழாவுக்கு அரசு 144 தடை போட்டிருப்பதை சொன்னேன். காரணம் சாதி.. சாதியும், மதமும் ஏன் தேவையில்லைன்னு நான் பல காரணங்கள் சொல்லிட்டேன் சொல்லிகிட்டும் இருக்கேன்.
நீ என்னவேணும்னாலும் சொல்லு, நாங்க வீம்புக்கு வீணா தான் போவோம் என இருப்பவர்களை எதுக்கு நட்பு வட்டத்தில் வச்சிகிட்டு நான் டென்சன் ஏத்திக்கனும்னு யோசிக்கிறேன். நான் படிக்க வேண்டியது, எழுத வேண்டியது நிறைய இருக்கு., இந்த மாதிரி ஆட்கள் ஸ்பீட் ப்ரேக்கர் மாதிரி என்னை பின்னே இழுப்பது மட்டுமல்லாமல் அறியாமையில் இருக்கும் பிறரையும் இவர்களுக்கு மூளை சலவை செய்த குழுவிடம் இழுத்து செல்லும் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
கோவம் வருது, டென்சன் ஆகுது. உண்மையை ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என ஆதங்கம் ஏற்படுகிறது. என் இயலாமை வன்முறையாக மாறிவிடுமோ என பயம் வருகிறது. இந்த முட்டாபுன்னகைகளை நட்பு வட்டத்தில் வச்சிகிட்டு நம்ம டென்சன் ஆகுறதை விட, தூக்கிபோட்டு நல்ல விசயங்கள் நாலு படிக்கலாம், எழுதலாம்.
லைக்குக்காகவும், ஷேருக்காகவும் எழுதுறவன் பெரும்பான்மைக்கு ஜால்ரா அடிச்சிகிட்டு இருப்பான். கண்டிப்பா இந்த பதிவுக்கு ஆமா சாமி போடுறவன் தான் உனக்கு வேணுமான்னு கேள்வி வரும்.
விவாதங்கள் தெளிவுறவேயின்றி வெற்றி தோல்வியை தீர்மானிக்க அல்ல என்ற கருத்துடையவன் நான். முன் முடிவுடன் அணுகுபவ்ர்களையும், சாதி பெருமை பேசி திரிபவர்களையும் வச்சிகிட்டு விவாதிச்சா ஊர் கண்னுக்கு தான் பைத்தியம் மாதிரி தெரிவேன்.
ஒரே வருத்தம் என்னான்னா, இவர்களெல்லாம் சமூகத்திற்கு மாற்றம் கொண்டுவரும் திறனும் அறிவும் உள்ளவர்கள்னு இவ்ளோ நாள் நம்பிகிட்டு இருந்தேன். பொய்யாகிட்டாங்க

0 வாங்கிகட்டி கொண்டது:
Post a Comment