பரிணாமம் - விசம்

கேள்வி:
பரிணாம மாற்றத்தில் ஏன் சில உயிர்களுக்கு மட்டும் விசம் உள்ளது?

பதில்:
கேள்வியை எப்படி கேட்ருக்கனும்னா, ஏன் சில உயிர்களுக்கு மட்டும் விசம் வீரியமாக உள்ளதுன்னு கேட்ருக்கனும். ஏன்னா உடலுக்கு ஒவ்வாத விசரசாயனம் எல்லா உயிர்களிடம் உண்டு. அதன்  வீரிய தன்மை மற்றும் அதை செலுத்தும் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி தான் அந்த விசத்தின் செயல்பாட்டு விளைவுகளை தீர்மானிக்கிறது.

தமிழில் நஞ்சு என்று பொது பெயரில் சொல்கிறோம். ஆங்கிலத்தில் இதை இரு வகைகளாக பிரித்துள்ளனர். porson & venom. பாய்ஸன் என்றால் உணவு குழாய் வழியாக எடுத்துக்கொள்ளும் பொழுது அதன் நச்சுத்தன்மை உடல் திசுக்களை அழிப்பது. வெனோம் என்பது இரத்தகுழாய் வழியாக செலுத்தும் பொழுது அது திசுக்களையும், நரம்பு மண்டலத்தையும் பாதிப்பது.

வெனோம் என்பது தனியாக ஒரு சுரப்பியின் மூலம் உருவாவது. அதில் இருக்கும் புரதம் மற்றும் இதர தாதுக்கள் அதை செலுத்தும் உயிரினத்தின் செரிமானத்திற்கும் பயன்படும். இன்னும் நுட்பமாக போனால் அந்த வெனோம் என்ற விசம் வேறு சில நோய்களுக்கு மருந்தாகவும் அமையும்.

வெனோம் விசம் இருக்கும் உயிரினங்கள் பெரும்பாலும் கடித்தல் மூலமாக அதை செலுத்தும், அதற்கு உதாரணம் பாம்பு மட்டும் சிலந்தி. அவையல்லாது ஸ்டிங்ரே மற்றும் ப்ளாடிபஸ் வாலில் இருக்கும் முள் அல்லது காலில் இருக்கும் முள் மூலமாக விசத்தை செலுத்தும். தேளுக்கு கொடுக்கில் விசம் இருக்கும். அந்த சுரப்பிகள் மனிதர்களுக்கு இருக்கும் தைராய்டு, பிட்யூட்ரி போலத்தான் அதன் உடலுக்கு உதவ சுரப்பது. அதன் என்சைம்கள் பிற உடலுக்கு ஆகாத வேலை செய்வதால் விசம் ஆகிறது. நம் உடல் சுரப்பியே அதிகமானால் நம் உடல் தாங்காதுவிசத்தின் பயன் தற்காப்பு மற்றும் செரிமானத்திற்கு உதவுதல். விசமும் மூலக்கூறு கட்டமைப்பு தான். தாவரத்தில் அரளிவிதை என அழைக்கப்படும் ஓலியாண்டர் சீட்ஸ் விசத்தன்மை உடையது. அது இரத்த அணுக்களை உறைய வைத்து இரத்த ஓட்டத்தை தடை செய்யும். அதற்கு மருத்தாக அட்ரோபைன் என்னும் தாவரத்தில் இருந்து எடுக்கும் விசத்தை கொடுப்பார்கள். அது இரத்தம் உறைவதை தடுத்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். ஆனால் தனிதனியே அவை இரண்டுமே விசம் தான்.

விசம் என்பது ஆகாத கிருமி அல்லது மூலக்கூறு என எடுத்துக்கொண்டால் நம் உழில்நீரில் கூடத்தான் விசம் உள்ளது. வெனோம் என்பது தன் உடம்பிலே சுரப்பது, சுரப்பி மூலம் உருவகாத  மற்றவை பிற உயிரில் கடன் வாங்கிக்கொள்வது. உதாரணம் நாய் கடியில் பரவும் ரேபிஸ் போன்றவை. இதுவல்லாது கொமேடோ ட்ராகன் வகை தன் உணவை கடித்து அது நோய் முற்றி இறக்கும் வரை காத்திருந்து உண்டும். அந்த விசம் அதன் உழில்நீரிலே உள்ளது.

நம்மால் சமாளிக்க முடியாத பாம்பு விசத்தை மங்கூஸ் என்னும் கீரி தாங்கிக்கொள்கிறது. ஆனால் தேள் விசத்தை தேள்களால் தாங்க முடியாது, சில பாம்புகளும் அப்படியே. பரிணாம மாற்றத்தில் உடலில் வளர்சிதை மாற்றத்திற்கு சுரந்த என்சைம் வீரியமிக்க விசமாக மாறியது போல். அதை உண்டு அல்லது சமாளித்து வாழ வேண்டிய உயிர்களுக்கு அதன் விசத்தை தாங்கிக்கொள்ளவும் பரிணாமம் வழி செய்தது. (18 ஆம் நூற்றாண்டு வரை தக்காளி விசம் என்று நினைத்தார்கள்)அம்மைக்கு தடுப்பூசி முன் கூட்டியே போடப்படுவது போல் விச முறிவு மருந்துகள் விசத்தை கொண்டே தயாரிக்கப்படுகிறது. வெனோம் என்ற விசத்துக்கு பெரும்பாலும் அந்த விசத்தை குதிரைக்கு செலுத்தி அதன் உடம்பில் உருவாகும் எதிர்ப்பு சக்தியை மருத்தாக்கி தருகிறார்கள். குழந்தைகளுக்கு தரும் சில உணவுகள் ஒவ்வாமை ஏற்படுத்துவதை அறியலாம். கத்திரிக்காய் சிலருக்கு அரிப்பு ஏற்படுத்தும். சிறு வயதில் இருந்தே சிறுது சிறுதாக விசம் ஏற்றப்பட்ட உடல் பின்னாளில் அந்த விசத்தின் அளவு எவ்வளவு இருந்தாலும் தாக்கக்கூடிய சக்திபெற்று விடும்.

என்சைமாக இருக்கும் விசம் இன்னொரு உடலுக்கு கொல்லும் ஆயுதமாக எப்படி மாறுகிறது என்பதை எளிமையாக விளக்கவேண்டுமென்றால் நீர் என்ற மூலக்கூறு கட்டமைப்பில் உப்பு என்ற மூலக்கூறு கட்டமைப்பு கரைப்பதை சொல்லலாம். அதே போல் முத்து வினிகரில் கரையும். நம் உடம்பில் உள்ள கொழுப்பு ஆல்ஹகாலில் கரையும். அந்த விசம் மூலக்கூறு கட்டமைப்பை உடைப்பதால் உடல் செயல்பாடுகள் மாறுகிறது. செயல்பாடு தடைபடும் வரை செல்லும் பொழுது மரணம் நிகழ்கிறது.

உணவு குழாய் வழியாக செல்லும் விசம் உடலுக்கு ஒவ்வாமை கொடுக்கும். வாந்தி, இரத்த ஓட்டம் தடை பட்டு மயக்கமாகுதல் மாதிரி. இரத்த குழாய் வழியாக செல்லும் விசம் மிக வேகமாக வேலையை காட்டும். உடனே அது மூளையை அடைவதால். எந்த விசத்திற்கும் மருத்துவ பரிந்துரையின் படியே சிகிச்சை அளிக்க வேண்டும். விசம் முறிய மந்திரித்தல், பாடம் போடுதல் என்பது 100% உதவாது. அப்படி சிலரி பிழைத்தார்கள் என்பது அவர்கள் உடலில் இருக்கும் எதிர்த்து சக்தியால் மட்டுமே.

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin