கலாச்சாரம்-பண்பாடு

தெரியாதுன்னு சொன்னதுவங்க நேர்மைய பாராட்டுறேன். நானும் தெரியாததை தெரியாதுன்னு தான் சொல்லுவேன். மேலும் ஒவ்வொருவருக்கும் ஒரு புரிதல் இருக்கும். இது எல்லா விசயங்களுக்கும் பொருந்தும் என்பதால் அவர்கள் புரிதலும் அவர்கள் அளவில் சரியே.

ஆனால் நாங்க கட்சி ஆரம்பிச்சதே கலாச்சாரத்தை காப்பாத்த தான், எங்க கட்சி ஆட்சிக்கு வந்தா தான் பண்பாடு பாதுகாப்பா இருக்கும்னு சொன்னவங்ககிட்ட கேட்டபொழுது. அவர்கள் பதில் குண்டக்கன்னா குண்டக்க, மண்டக்கன்னா மண்டக்க என்றே இருந்தது.

நமது உணவு, உடை, கட்டிடகலை ஆகியவை கலாச்சாரத்தை பிரதிபலிப்பவை. விசேசங்களில் மட்டும் அணியும் உடைகள் என்று உடை கலாச்சாரம் ஆகிப்போனது. சிவப்பு லோலாக்கு(காதல் கோட்டை) பாட்டில் ராஜாஸ்தான் உடை கலாச்சாரம் தெரியும். அதே போல் தான் உணவும், கட்டிட அமைப்பு முறைகளும். நாம் வாழும் சூழலுக்கு ஏற்ப, கிடைப்பதை கொண்டு அமைத்துக்கொண்டது தான் கலாச்சாரம்

எங்க வீட்டுக்கு யார் வந்தாலும் முதலில் குடிக்க தண்ணி கொடுப்பேன்னு யாராவது சொல்லி கேட்டதுண்டா, அதான் பண்பாடு. பழக்க வழக்கங்கள், நம் செயல் சார்ந்த விசயங்கள் எல்லாமே பண்பாடு தான். கலச்சாரத்தில் மனிதம் தாண்டிய வித்தியாசம் இருக்காது. பண்பாட்டில் தான் சாதியம் புகுந்தது. அதற்கு உதாரணம் ஜல்லிகட்டு, எங்க குலசாமி, எங்க வழிபாட்டு முறை, எங்க சடங்குகள் எல்லாமே பண்பாடு. ஆனால் பிரிவினைகள் உண்டுஇது இரண்டுமே பெரும்பாலானவை ஏன் பண்றோம்னு தெரியாமயே செய்து வருவது நம் மக்களின் பழக்கம்.பூப்புனித நன்னீராட்டு விழா தேவையான்னு ஒருத்தர்ட்ட கேட்டேன். தேவைன்னு சொன்னாரு. ஏன் தீட்டுன்னு ஒதுக்கி மூலையில் உட்கார வைக்கனும்னு கேட்டேன். அப்ப சத்தான ஆகாரம் கொடுக்கனும்னு சொன்னார். அது சரி ஏன் தனியா வைக்கனும்னு கேட்டா முன்னோர்கள் முட்டாளா. அவர்கள் காரணத்தோடு தான் செய்வார்கள் என்ற பதில் தான் பலரிடம் இருந்து. பதில் தெரியாத எல்லா விசயங்களுக்கும் அதுவே பதில்.

அக்காலத்தில் பெண் பருவம் அடையும் வரை திருமணத்திற்கு காத்திருக்க மாட்டார்கள். அப்படியும் இருக்கும் பட்சத்தில் எங்கள் வீட்டில் திருமணத்திற்கு தயாராக ஒரு பெண் இருக்கிறாள் என்பதற்காக நடத்தபட்ட சடங்கு அது. அந்த காலத்தில் இம்மாதிரியான நகர கட்டமைப்பு இல்லை. ஒரு சில குடில்கள் இணைந்ததே ஒரு கிராமம். சுற்றிலும் வனம். இரத்த வாடைக்கு வேட்டை விலங்குகள் வரலாம் என்பதனால் ஒரு உழக்கையை பாதுகாப்புக்கு கொடுத்து வீட்டிற்குள் அமர வைத்தார்கள். தீட்டு, சமையல் பாத்திரங்கள் தொடக்கூடாது என்பதெல்லாம் ஆணாதிக்க பார்ப்பனிய திணிப்பு தான்.நீர் வளத்தையும், உணவு வளத்தையும் தேடி மனிதன் அலைந்த பொழுது இடத்திற்கான போர் ஆரம்பித்துவிட்டது. நாளடைவில் ராஜ்ஜியங்கள் போரிட்ட பொழுது வில், வாள், ஈட்டி போன்ற ஆயுதங்கள் பயன்பட்டன, அவற்றின் மேல் இருந்த பயத்தை போக்க, அலகு குத்துதல், தீ மிதித்தல் போன்றவை பயன்பட்டது. இவ்ளோ தானா வலி என்று உணர்ந்தவன் போர் களத்தில் பின் வாங்காமல் போரிட்டான்.

உணவிலோ, உடையிலோ, கட்டிட கலையிலோ நம் கலாச்சாரம் இப்பொழுது இல்லை. அதை தாண்டி நம் வசதிக்கு அமைத்துக்கொண்டோம். உண்மையில் கலாச்சாரம் அது தான். நம் சூழலுக்கு ஏற்ப நம்மை பாதுகாத்துக்கொள்ளும் முறை. பண்பாடுன்னு சொல்லிக்கொள்ளும் எதற்கும் இன்றைய தேவையுமில்லை. அதன் காரணமும் உங்களுக்கு தெரியவில்லை.

இன்னும் எத்தனை நாளைக்கு தான் கலாச்சாரத்தை காப்பாற்றப்போறேன், பண்பாட்டை பாதுகாக்கப்போறேன்னு கதை விட்டுட்டு இருப்பிங்க. மனிதன் சிந்திக்க ஆரம்பித்துவிட்டான். அடுத்த தலைமுறை சாதி, மதமற்ற மனிதம் பேசும் சமூகமாக இருக்கும்


0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin