வாங்க அய்யா, நேத்தே வருவிங்கன்னு எதிர்பார்த்தேன்னு பூசாரியை வரவேற்றார் சாமிகண்ணு.
ஊரெல்லாம் சுத்தி வரனும்ல, நேத்து திண்டுக்கல்லில் தங்கிட்டேன் என்றார் பூசாரி.
முதல்ல காபி தண்ணி எதாவது சாப்பிடுங்க என்ற சாமிகண்ணு ஏன் புள்ள மருது வூட்ல பால் இருக்கா என குரல் கொடுத்தார்.
அய்யா வந்தவுடனே காபி போட்டேனுங்க. நீங்க சாப்பாட்டுக்கு எதாச்சும் வாங்கியாங்க என பதில் வந்தது.
அய்யா நீங்க காப்பி சாப்பிட்டு இப்படியா இருங்க. நான் போய் கோழி கறி வாங்கிறாரேன்,இருந்து சாப்பிட்டு தான் போகனும்.என மஞ்சபையை எடுத்துகிட்டு கிளம்பினான் சாமிகண்ணு
ஏன்மா இந்த நம்பர் கொஞ்சம் போட்டு கொடேன் என எஸ் டி டி பூத் பெண்ணிடன் ஒரு நோட்டை கொடுத்தார் சாமிகண்ணு
முருகா, உங்கப்பா பேசுறாரு என ஆயில்.டின் அடிக்கிகொண்டிருந்த்வனுக்கு செய்தி சொல்லப்பட்டது.
சொல்லுங்கப்பா என்றான்.
பூசாரி ஐய்யா வந்துருக்காரு, நம்ம கொடை கொடுக்கனும். பணம் எதும் வச்சிருக்கியா
அட்வான்ஸ் தாம்பா.வாங்கனும். நீங்களும் போறதில்ல. எதுக்குப்பா இன்னும்.வரி கொடுக்குறிங்க
அய்யா. அது நம்ம தாத்தா கட்டின கோயில்யா, நம்ம மருவாதைய செய்யும்யா
சரி எவ்ளோ வேணும்
ஆயிரமாவது வேணும்யா
அப்பா, நீங்க போறதேயில்ல எதுக்கு ஆயிரம்.
அம்புட்டு தூரம் வந்துருக்காரு, குறவா கொடுத்தா நாளைக்கு பங்காளிங்க ஒரு மாதிரி பேசுவானுங்கல்ல.
நான் 600 தர்றேன் கணேசன் கிட்ட மீதி வாங்கி கொடுங்க. தேதி கேட்டு வைங்க நானே போயாறேன்.
மாசி கோயில் விசேசம் தான்பா, மூணு பெட்டியில் ஒரு பெட்டி நீ தூக்கனும்.
சரி பார்த்துகிறேன். சாயங்காலம் வரும் போது பணம் வாங்கியாறேன்
முருகனுக்கு பணம் பிரச்சனை இல்ல. அவன் அத்தை பொண்ணு சித்ரா தான் பிரச்சனை. வருசா வருசம் இவன் போவதே அவளை பார்க்கத்தான்
வா, தம்பி என வரவேற்ற பரமி தான் முருகனோட அத்தை. அப்பாவின்.தங்கை. பரமிக்கு மூணும் பெண்கள், முருகன் கூட பிறந்ததும் அப்படி தான்.
எப்போ போனாலும் சித்ராவுக்கு ஒரு சரம் ஃபேர் அன்ட் லவ்லி வாங்கிட்டு போவான் முருகன். பிரச்சனையே அதை கொடுப்பதில் தான்.
பரமி அத்தை கோழி பிடிக்கபோக வெங்காயம் நறுக்கினாள் சித்ரா, தோள் பையில் இருந்து கேரி பையை எடுத்து கொடுக்க போகும் நேரத்தில் அட முருகா நீயா, எப்ப வந்த என்ற குரல் கேட்டது
அது முருகனின் அண்ணன்.மனைவி, இப்ப தான் மதினி வந்தேன் அண்ணன் வரலயா
அவர் வந்து மட்டும் என்னாக போகுது.
என்னை கோயில்கிட்ட கூட்டிட்டு போயேன்
போகட்டா என்பது போல் சித்ராவிடம் சம்மதம் கேட்டான் முருகன்.
தலையசைப்பு கண்டதும் நடந்தார்கள்.
ஏன் மதினி அண்ணன் வரல
வந்து மட்டும் என்னாக போகுது. அங்கயே கிடக்கட்டும்
ஏன் மதினி இப்படி சொல்றிங்க
உனக்கே தெரியும் கல்யாணம் ஆகி நாலு வருசம் ஆச்சு, என்னை தான் மலடின்னு சொல்றாங்க
டாக்டர பாத்திங்களா மதினி
பாத்தாச்சு, உங்கண்ணன் கஞ்சா குடிச்சே ஆண்மைய இழந்த்துட்டாராம். அவரால் புள்ள கொடுக்க முடியாதாம்
என்ன மதினி இப்படி சொல்றிங்க.
வேற நல்ல டாக்டரா பாருங்க.
பெரிய பேப்பர்ல எழுதியே கொடுத்துட்டாங்க. வேணும்னா வீட்டுக்கு வந்து பாரு.
சுத்தி முடிச்சு அனைவரும் கோயிலுக்கு வந்தனர். சாமியாடிகள் குறி சொல்லி கொண்டிருந்தார்கள். முருகன் சித்ராவை அழைத்து ஒருவர் காலில் விழுந்தான். நினைச்சது நடுக்கும்பா என குறி வந்தது
சற்று நகர்ற வுடன் முருகனின் மதினி அவனை அழைத்தாள்.
என்ன மதினி
தனியா குறி கேட்ககூடாது நீயும் வா
அய்யோ நானா, யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க மதினி
நினைச்சிட்டு போறாங்க வா
அப்போதும் நினைச்சது நடக்கும் என்ற குறியே வந்தது.
திருவிழா முடிந்து ஊர் திரும்ப வேண்டிய முருகன் மனம் மாறி மதினி வீட்டுக்கு ஆட்டோ பிடித்தான்
சித்ராவின் வேண்டுதல் என்னவென்று தெரியவில்லை. அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்தார்கள்
ஆனால் மதினியின் வேண்டுதல் நிறைவேறி விட்டது. அவளுக்கு இரண்டு பசங்க இப்போ.
0 வாங்கிகட்டி கொண்டது:
Post a Comment