//மொழி வேற சாதி வேற நினைச்சா நீங்க பேசுறது சாதி ஓழிப்பே இல்லை இன்னும் சொன்னா நீங்க அதை முழுவதும் தெரிந்துக்காம தான் எதிர்க்கிறீங்க//
இப்படி ஒரு பதிலை பார்த்ததுமே இனி பேச ஒன்றுமில்லைனு புரிஞ்சிருச்சு. குடும்ப பெயருக்கும், சாதிக்கும் வித்தியாசம் தெரியாதவரிடம் போய் நான் என்னான்னு மொழின்னா என்ன, சாதின்னா என்னான்னு விளக்க. ரெண்டாவது அவர் எதையும் காதுல வாங்குற மாதிரியே இல்ல. முழுசா சந்திரமுகியா மாற்றும் நிற்கும் கங்காகிட்ட வேட்டையன் மாதிரி மாட்டிக்க விரும்பமில்லாம நன்றி வணக்கம்னு சொல்லிட்டு ஓடியாந்துட்டேன்.
இந்த பதிவு எதுக்குன்னா அவர்களால் மூளை சலவை செய்யப்பட்டவர் யாராவது இருந்தா அவர்களுக்கு உண்மை என்னான்னு புரிய வைக்க.
சாதி நேத்து முளைச்ச காளான்னு வச்சிகிட்டா, மொழி நூற்றாண்டுகள் கடுந்து வாழும் ஆலமரம். அதை இரண்டையும் ஒன்னா சேர்த்து பார்ப்பது உலகில் உள்ள மொத்த அறிவையும் ஒருங்கே பெற்றத்தனம்.
காட்டுக்குள் திரிந்த சமூகம் இன்றைய நாகரீகம் வரை வளர்ச்சி பெற காரணம் தகவல் பரிமாற்றம். தகவல் பரிமாற்றத்திற்கு பயன்பட்ட கருவி மொழி. இதை பற்றிய ஒரு பட்டய படிப்பிற்கு (ph.d) தேவையான தரவுகளை என்னால் கொடுக்கமுடியும். மொழியை கருவி என சொல்லக்காரணம் அந்த மொழி ஆரம்பத்தில் இருந்தது போலவே இல்லாமல் தன்னை தேவைக்கேற்ப கூர் தீட்டிக்கொண்டே இருந்தது தான்.
தமிழ் எழுத்துருக்களின் வரலாறு பார்த்தண்டா? கோடுகள் சிறுது சிறுதாக இணைந்து, வளர்ந்து இன்று நாம் பயன்படுத்தும் எழுத்துருவாக உள்ளது. பெரியார் காலத்தில் தான் னை,லை போன்றவை நிரந்திரமாக உருவானது என்பது எத்தனை பேருக்கு தெரியும். மொழியின் உச்சரிப்பு, அதன் பயன்பாடும் கூர் தீட்டிக்கொண்டே தான் இருந்தது. பண்டைய செய்யுளை விளக்கவுரை இல்லாமல் படித்து உங்களால் புரிந்துக்கொள்ள முடியுமா? அர்த்தம் சொல்ல முடியுமா?
தமிழனை தமிழன் ஆள வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விசயம்.
தேர்தல் நேரத்தில் நான் வாக்காளர்களுக்கு சொல்வது, உங்கள் சுற்றுபகுதியின் பிரச்சனைகள் அறிந்த வேட்பாளருக்கு ஓட்டுப்போடுங்கள் என்று தான். அதுவே தமிழனுக்கும் நிச்சயாக பொருந்தும். அதற்கு ஏன் சாதியை முட்டுக்கொடுக்குறிங்கன்னு தான் எனக்கு புரிய மாட்டிங்குது.
சாதியை மறுத்ததால் நாம் நிறைய இழந்தோம்னு வேற ஒரு வரி சொன்னார். என் புரிதலில் அப்படி என்ன இழந்தோம்னு தெரியவேயில்ல. ஆனால் சாதியை ஏற்றுக்கொண்டதால் ஒருவன் உயர்சாதியாகவும், ஒருவன் தாழ்ந்த சாதியாகவும் உருவக படுத்தப்பட்டான். அதன் நீட்சி தான் இன்றும் நடக்கும் சாதி கலவரங்கள்.
தமிழ் சமூகத்தில் சாதிய கட்டமைப்பு தவிர்க்க முடியாதது. தேர்தல் அரசியலில் பயணிக்க சாதிய ஆதரவும் வேண்டும் என்று ஒரு கட்சியின் தலைவர் நினைப்பது அவர் அளவில் சரி தான். அவருக்கு சிம்மானசம் கிடைக்க ராஜத்ந்திரங்கள் தான் உதவும். அந்த மேய்ப்பரின் கட்டளைக்கேற்ப ஆட்டு மந்தைகளும் தம்மை பலி கொடுக்கும்.
ஆனால் ஆடுகள் தம்மை ஆடுகள் என்று உணரும் நேரத்தில் மேய்ப்பவனுக்கு வேலை இருக்காது

0 வாங்கிகட்டி கொண்டது:
Post a Comment