குவியல் (25.05.17)

Banyan என்றால் ஆங்கிலத்தில் ஆலமரம் என்று அர்த்தம். உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தில் முதலில் பிரபலமான பான்யன் பெயரே பனியன் என்று நிலைத்து விட்டது என்று சில தகவல்களில் எழுத ஆசை தான். ஆனா இது நானா ஜிந்தித்தது. ஜெராக்ஸ், பிஸ்லரி வாட்டர் மாதிரி இதுவும் இருக்கலாம்னு

பிஸ்லரி வாட்டர் இப்ப வருதான்னு தெரியல. மினரல் வாட்டருக்கு அந்த பெயர் நிலைக்க காரணம் அந்த கம்பெனி பெயர் தான். இன்னொரு விசயம் கவனிச்சிங்கலா, அந்த மினரல் வாட்டல் பாட்டலில் இப்பல்லாம் பேக்டு ட்ரிங்க் வாட்டர்னு தான் எழுதுவாங்க. உண்மை தான். ஆற்று தண்ணி பிடிச்சு வச்சா அதில் ஆறு நாளில் புழு வரும். கேன் வாட்டரில் வராது. அவ்ளோ ஏன். வீட்டில் மீன் தொட்டி இருந்தா அதை மினரல் வாட்டரில் விட்டு பாருங்களேன்.

மீன்னு சொன்னா உங்களுக்கு என்ன ஞாபகம் வரும், வாள மீன் இருக்குங்கிறான், சுறா மீன் இருக்குங்கிறான். ஜாமின் மட்டும் இல்லையாம். எந்த வித விசாரணையும் இல்லாமல் பராமரிப்பு செலவு அதிகமாகுதுன்னு வைகோன்னு ஜாமின் கொடுத்துருக்கு நீதிமன்றம். இந்தியாவில் தண்டனை கைதிகளை விட விசாரணை கைதிகள் தான் அதிகம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அதில் பலர் ஜாமின் எடுக்க முடியாதவர்கள், அவர்களை பரமாரிக்க மட்டும் அரசிடம் பணம் இருக்கா?

அரசா, அது சரத்குமார் நடிச்ச படம் தானே என்று கேட்கிறார்கள் தமிழ்நாட்டில். இல்லைங்க இந்த கல்வி கொள்கைகள்லாம் மாத்துறாங்களே, நல்லா தானே செயல்படுது என்றால். அட கிறுக்கா கிறுக்கா, மத்திய அரசின் ஆட்டலுக்கு ஆடும் கூட்டத்தை பொம்மைன்னு தான் சொல்லனும். அரசுன்னு சொல்றன்னு சண்டைக்கு வர்றாங்க.

சண்டைன்னு சொன்னதும் ஞாபகம் வருது. ராஜிவ் நினைவு நாள் அன்று நான் போட்ட பதிவுக்கு உளுந்தம்பருப்புகள் சுடு எண்ணையில் விழந்த கடுகாய் வெடித்தார்கள். வழக்கம் போல ங்கோத்தா, ங்கொம்மா தான். இதனால் தான் நான் ரசிகன், தொண்டன், பக்தன் மூவரையும் ஒரே கேட்டகிரியில் வச்சிருக்கேன். ரஜினியை திட்டினா புரட்சி வெடிக்குமாம்

புரட்சி என்ற வார்த்தையும் அர்த்தமும் தமிழ்நாட்டில் கேவலபட்டதை விட வேறு எங்கேயும் ச்சீ பட்ருக்காது

ஒரு ஜோசியகார நண்பரின் பதிவில், சார் டெல்மீ சார், ப்ளீஸ் டெல்மீ சார்னு பலர் கெஞ்சுவதை பார்த்து நாமும் ஜோசியகாரர் ஆகலாமான்னு எண்ணம் வந்தது. யோசிச்சு பார்த்தேன், அதான் தினம் பத்து நாய்க்கு பிஸ்கெட் போடுறமே, இது வேற எதுக்குன்னு எண்ணத்தை கைவிட்டேன்

எல்லோர் வாழ்விலும்
மீட்டிடமுடியா பக்கங்கள்
நிறைய உண்டு
எழுதிட முடியா
பக்கங்கள்
என எதுமில்லை!


2 வாங்கிகட்டி கொண்டது:

ராஜி said...

கடைசி கவிதை அருமை...

வைகோவை வெளில விட்டதுல உள்குத்திருக்குன்னு சொல்றீங்களா

வால்பையன் said...

//கடைசி கவிதை அருமை...// நன்றிங்க

//வைகோவை வெளில விட்டதுல உள்குத்திருக்குன்னு சொல்றீங்களா//
கண்டிப்பா இருக்கு, ஆனா ஈசம் பூசின மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும்னு பண்ணிருக்காங்க

!

Blog Widget by LinkWithin