பதஞ்சலியும், சமணமும்!

                        கேள்வி:
பதஞ்சலி முனிவர் சமணர் என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறீர்கள்?

பதில்:
விக்கிபிடியாவில் இருப்பதையும், பல இணைய தளங்களில் இருப்பதையும் அப்படியே உங்களுக்கு எடுத்துக்கொடுக்க நான் எதற்கு, அதை நீங்களே படித்துக்கொள்ளலாமே, என் பதில் அதிகபட்ச சாத்தியகூறுகளின் அடிப்படையில் தான் இருக்கும். மொத்த மக்களும் உலகை படைத்தது கடவுள் என சொல்லிக்கொண்டிருந்த காலத்தில் பெருவெடிப்பை என்ற கொள்கையின் அதிகபட்ச சாத்தியக்கூறுகளை விளக்கி அனைத்து பகுத்தறிவு விஞ்ஞானிகளும் ஒத்துக்கொண்டு இன்று பாடத்திட்டத்தில் கூட இருக்கிறது.

என் கூற்றே இறுதி முடிவு என்று நான் எப்போதும் சொன்னதில்லை. மாற்று கருத்துகளும், விவாதங்களும் தெளிவுற வைக்கும். திருவள்ளுவர் சமணர் என்று கூற்று ஏற்படக்காரணம் என்ன? அவர் புலால் உண்ணாமையும், கள் உண்ணாமையும் வலியுறுத்தியதால். 3000 வருடங்களுக்கு முன் ஆடு, மாடு மேய்க்க வந்த ஆரியர்கள் அசைவம் சாப்பிட்டிருக்க மாட்டார்கள் என்பது என்ன லாஜிக்? அவர்கள் கொண்டு வந்தது தான் குதிரையும்.(18 ஆம் நூற்றாண்டு வரை ஆஸ்திரேலியாவில் குதிரை இல்லை) இன்றும் கொல்கத்தா பார்பனர்கள் கடல் புஷ்பம் என்ற பெயரில் மீனை உண்கிறார்கள்.



பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் சமஸ்கிருத மொழியில் இருக்கலாம். சமணம் என்பது ஒரு கொள்கை. அதை ஏற்றுக்கொண்டவர்கள் சமஸ்கிருதத்தில் பேசக்கூடாது என்றில்லையே. ஒருவேளை அது பாலி மொழியின் மொழி பெயர்ப்பாகவும் இருக்கலாம் இல்லையா!, மேலும்  யோக பயிற்சியில் கடவுள் வழிபாடு என்று எங்கேயும் இல்லை. சமணம் இந்தியாவில் தோன்றிய இறை மறுப்பு கொள்கை. அதை பார்ப்பனர்கள் செய்திருப்பதற்கு எங்கேயும் சாத்தியகூறுகள் தெரியவில்லை

அடுத்த சாத்தியகூறு கிபி எட்டாம் நூற்றாண்டில் திவாகர முனிவர் என்பவர் திவாகர நிகண்டு என்ற சமண கோட்பாடுகளை தமிழில் எழுதியுள்ளார். கிமு மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் கல்வெட்டில் சமண முனிவர்கள் பற்றி உள்ளது. பார்பனர்கள் தியானத்தில் ஈடுபட்டதாக எங்கேயும் குறிப்புகள் இல்லை. அதை செய்து வந்தது, பரப்பி வந்தது சமணர்கள் என்பதற்கான தரவுகளே அதிகம் உள்ளன.

ஆக பதஞ்சலி முனிவர் சமணராக இருப்பதற்கே அதிகபட்ச சாத்தியக்கூறுகள் உள்ளன.

4 வாங்கிகட்டி கொண்டது:

Selvam said...

அலகு குத்தலும்,தீமிதியும் கட்டாய கலாச்சாரமாக பின்பற்றப் படவேண்டும்.புத்த மத shaolin மடம் மாதிரி.தமிழர்களின் சிலம்பமும்,கரத்தாண்டவம @ களறி போன்ற martial arts களும் கட்டாயமாக்கப் பட வேண்டும்.

Mugundan said...

ஆழமான கருத்து.மகிழ்ச்சி.உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

Mugundan said...

ஆழமான கருத்து.மகிழ்ச்சி.உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

Vivegam Academy said...

உங்களது கருத்து சரியாக விருப்பத்துக்கு அதிக சாத்தியம் உள்ளது . எந்த ஞானியும் , யோகியும் கடவுள், பகவான் என்று எதார்த்தத்தில் உணரப்பட முடியாத விஷயங்களை கூறி மக்களை குழப்பியது இல்லை. முடிந்த வரை அனைத்தையும் objective ஆகத் தான் சொல்லி இருக்கிறார்கள்.

பெரும்பாலும், சித்தர்கள் மற்றும் யோகிகளின் கருத்துடன் சமணம் அதிகம் முரண் படுவதில்லை.....

!

Blog Widget by LinkWithin