மதியம் வெள்ளி, ஆகஸ்ட் 7, 2009

ஆன்மீகபயணத்தின் எதிர்வினை!

பலர் நண்பர்கள் சாட்டில் கேட்டு கொண்டே தான் இருந்தார்கள், உங்கள் ஸ்டைல் பதிவுகளை கொஞ்சநாளாக காணோமே என்று, என்ன செய்ய சரியான நேர்கோட்டில் விவாதிக்க சரியான ஆட்கள் கிடைத்தால் தானே எந்த கேள்விக்கும் எதாவது பதில் கிடைக்கும், கடந்த மூன்று மாதகாலமாக தமிழ் வலையுலகில் புதிதாக வந்திருக்கும் நண்பர்களை நான் கவனித்து கொண்டு தான் இருக்கிறேன்!, சிறந்த வாத திறமை உள்ளவர்களாகவும், சிறந்த வாசிப்பனுபவம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள், சரியோ, தவறோ அவர்களது திறமையை வெளிகாட்ட ஒரு களம் தேவைபடுகிறது, அது என் வலையாகத்தான் இருக்கட்டுமே!

***************************

//மந்திரன் said...

இதற்க்கு யாரும் இன்னும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை ..
அகஸ்த்தியர் ஒரு சித்தர் . அவர் என்ன கஞ்சா குடித்துவிட்டுத்தான் மருத்துவத்தை பற்றி ஆராய்ச்சி செய்தாரா ? அழியும் உடலுக்கு அழியா மருந்துகளை கண்டு பிடித்த சித்தர்கள் , தன உடலை இப்படி கெடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது என் திமையான கருத்து .
மற்றப்படி இப்போது நான் தான் கடவுள் , நான் தான் சிவன் , விஷ்ணு , இயேசு என்று சொல்லி கொள்ளும் எந்த நாயும் சித்தர்களோ , உத்தமர்களோ இல்லை ..அதில் உங்களோடு உடன் படுகிறேன்..//


அகத்தியர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழவில்லையென்பதால் அதை பற்றி ஒன்றும் கூறயியலாது, ஆனால் உடலுக்கு அழியா மருந்துகளை கண்டுபிடித்தவர்கள் தங்கள் உடலை கெடுத்து கொள்வார்களா என்ற கேள்விக்கு நடைமுறை வாழ்க்கையே பதில் சொல்லும், என் வீட்டு அருகில் ஒரு டாக்டர் குடித்தே இறந்து போனார்! சித்தர்கள் என்று இன்று சொல்லிகொள்பவர்கள் நான் பார்த்து இப்படி தான் இருக்கிறார்கள்! கற்பனையில் மக்கள் மனதில் இருக்கும் 200 வருடமாக வாழும் சித்தர், தீடிரென வானில் கிளம்பும் சித்தர், பலவருடங்களாக சோறு தன்ணி இல்லாமல் இருக்கும் சித்தர் என பலருண்டு! ஆனா ஆளாத்தான் காட்டமாட்டாங்க!

ராமகிருஷ்ண பரமஹம்சர் புக்கா புடிப்பார் பலருக்கு தெரியும், விவேகானந்தரும் புக்கா பிடிப்பார் எத்தனை பேருக்கு தெரியும், ராம்கி கேன்சரால் தான் இறந்தார் என கூட வரலாறு இருக்கிறது!
மேட்டர் என்னான்னா இவர்க்ளெல்லாம் கடவுளை பார்த்தவர்கள், எனக்கு தெரிந்து கடவுளை நேரில் பார்த்தகாக சொல்வர்கள் ஒன்று போதையில் இருக்கிறார்கள் அல்லது மனச்சிதைவு நோயில் ஆட்பட்டவர்களாக இருப்பார்கள், சந்தேகமிருந்தால் மனநல மருத்துவர்களை கேட்டுப்பாருங்கள்

*****************

// Eswari said...

அக்காலத்தில் ஆன்மீக தேடலில் விடை தெரியாமலா எல்லா மன்னர்களும், பெரிய பெரிய கோவில்கள் கட்டியும் அதன் பராமரிப்புக்காக பல ஏக்கர் நிலங்களையும் விட்டு சென்றார்கள்?

இக்காலத்தில் ஆன்மீக தேடலில் விடை தெரியாமலா ஏ.ஆர். ரக்மான், இளையராஜா, ரஜினி, சுஜாதா..... போன்றோர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள்? அல்லது இவர்கள் எல்லாம் சிந்திக்க தெரியாதவர்களா?

முழுதும் தெரிந்தவன்/புரிந்தவன் எதுவும் கேட்க மாட்டன்.
ஒன்றும் தெரியாதவனும் எதுவும் பேச மாட்டன்
ஆன்மிகத்தை பற்றி அரைகுறையா தெரிஞ்சவன் தான் எல்லாம் தெரிஞ்சவன் போல இப்படி உளருவான். //


இதற்கு நான் கொஞ்சம் விரிவாக பதிலளிக்க வேண்டியுள்ளதால் தயவுசெய்து முழுதாக படித்துவிட்டு சந்தேகங்களை கேட்கவும்!

ஈஸ்வரியின் கேள்வி மன்னர் காலத்தில் இருந்து ஆரம்பிக்கிறது, ஆனால் அதற்கு முன் என்ன நடந்தது என பார்க்கலாம்! மனிதன் குழுக்கலாக இருந்த பொழுது குழுதலைவனின் உடலை பத்திரமாக புதைத்தனர், வயதானவனே குழுத்தலைவன், மற்ற விலங்குகளிடமிருந்தும், இயற்கை சீற்றங்களிலுருந்தும் தப்பித்தால் மட்டுமே வயதாகியும் வாழமுடியும், அவனது அனுபவத்தை பெற அவனை மக்கள் தலைவனாக ஏற்றுகொண்டனர், நாகரீக காலத்தில் வளர்ந்த கலைவடிவம், சிற்பம், ஓவியம் என தனது வளர்ச்சியை பெருக்கி கொண்டது, சமகாலத்தில் இருந்தது போல் அப்போதைய தலைவர்களுக்கும் சிலை செய்தார்கள், கூடவே அவர் பயன்படுத்திய பொருள், செல்லபிராணிகளுடன் சமாதி செய்தார்கள். அங்கேயிருந்த மனிதர்கள் கொஞ்சம் வரலாற்றின் மேல் அக்கறை கொண்டதால் அதன் சுவடுகளை விட்டு சென்றார்கள்!

இந்தியாவின் வரலாறு என எதை சொல்வது, எங்கிருந்து ஆரம்பிப்பது!. சிந்துசமவெளி நாகரிகத்தில் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தது, ஆனால் அதை வழிபட்டதற்கான சான்றுகள் இல்லை, அதன் பின்னர் இந்தியாவின் வரலாறு என சீனாவிலிருந்து வந்த யுவாங் சுவாங், அலெக்ஸாண்டருடன் வந்து தகவல் சேகரிப்பாளர்கள் என வெளிநாட்டவரின் செய்திகளே கடந்த கால இந்தியா, சரி அதையும் நம்பமுடியுமா என்றால் சந்தேகமே, சீன நாட்டை சேர்ந்த
யுவாங் சுவாங் நடுநிலையொடு அவரது நாட்டையும், நம்மையும் ஒப்பிட்டிருப்பார் என சொல்லமுடியாது, மேலும் அவரது பயணகுறிப்புகளில் கோட்டைவாயிலை நெருப்பு கக்கும் ட்ராகன் காத்து கொண்டிருக்கும் என எழுதியுள்ளார், அதை நம்பும் மக்களுக்கு கடவுள் என்னும் மாயையை விளக்குவது எனக்கு நானே முட்டாளாக்கி கொள்வதற்கு சமம், அதனால் நெருப்பு கக்கும் ட்ராகன் இருந்தது என நம்புபவர்கள் இத்தோடு அபீட் ஆகிக்கலாம்!

வரலாறு என்பதே புனைவால் புனையப்பட்ட புனைவு என்பது ஆழநோக்கினால் தெரியும், பலகுழுக்கலாக வாழ்ந்த மனிதர்கள் தனது தலைமை என்ன சொன்னதோ அதையே பின்பற்றி வாழ்ந்தார்கள், அவர்களுக்கு பிடித்த மாதிரி கடவுளை வடிவமைத்து கொண்டார்கள், அதற்கு உதாரனம் இன்று இருக்கும் பல்வேறு கடவுள்களும் மதங்களும், சிலர் இயற்கையை கடவுளாக கொண்டார்கள், கடவுள் உருவமற்றவர் ஆனால் வருவார்!? என்றார்கள்!. மூடநம்பிக்கையில்லாத மதமே கிடையாது சம்பிரதாயங்கள் இல்லாமல் மதமே கிடையாது, அந்த நம்பிக்கைக்கெல்லாம் ஆதாரம் கேட்டால் எதாவது ஒரு புத்தகத்தில் இத்தனாம் பக்கம் இத்தனாம் அதிகாரம் என்பீர்கள், உங்களது அறிவு அந்த புத்தகத்தை தாண்டி வருவதில்லை என்பதை நீங்கள் எப்போது உணரப்போகிறீர்கள்.

வாழும் நெறியை தான் சொல்லிதருகிறது என சொல்லி கொள்ளும் எல்லா மதத்திற்கும் இருண்ட பக்கம் என ஒன்று இருக்கிறது! இன்று இந்து மதம் என்று அழைக்கப்படுவதே பல்வேறு குழுக்கலாக இருந்து பின் ஒருசில சுயநல அல்லது பொதுநலவாதிகளால் ஒன்றினைக்கப்பட்டது, சுயநலம், பொதுநலம் இரண்டையும் குறிப்பிட காரணம் அவர்கள் என்ன நோக்கில் அதை செய்தார்கள் என தெரியாமல் போனதால். ஆதி இதிகாச,புராண, வாய்வழி கதைகளிலுருந்தே அறியப்படுவது கடவுள் என்பவர் இமயமலையில் எதோ ஒரு சிகரத்தில் தனது பரிவாரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே, அல்லது கடவுள் அவதாரங்கள் வடநாட்டில் மட்டுமே தோன்றுவார்கள், எந்த ஒரு புராணகதைகளும் நேரடி இந்திய மொழியில் இல்லை என்பது மற்றொரு உதாரணம்.

மலைவாழ் மக்கள் வழிபட்ட முருகன், வடநாட்டு கடவுளுக்கு வாரிசாக போனது தென் நாடுகளில் பிரபலமாக இருந்ததே காரணமாக இருக்கும், இன்றும் வடநாடுகளில் பெரிதாக முருகனுக்கு கோவில் இல்லை என்பது அதற்கு சான்று, அதே நேரம் கிராம காவல் தெய்வங்களாக இருந்த அய்யனார், கருப்பசாமி போன்றார் வடநாட்டு கடவுளின் உறவினர் ஆகாதற்கு காரணம் அவர்கள் கிராம காவலாளியாக இருந்து உயிர் துறந்த மக்களில் ஒருவர் மேலும் அவர் கண்டிப்பாக நிலபிரபுவாகவோ, வசதியுள்ளவராகவோ, ஊர் பெரியவராகவோ, அக்கால உயர்சாதியினராகவோ இல்லை என்பதே!

ஏன் இத்தனை கடவுள்கள் என்று உளவியல் ரீதியாக பார்த்தால், உயிரினங்களில் மனிதன் மட்டுமே என்னேரமும் உயிர் பயத்துடன் இருக்கிறான், தான் வாழ எதையும் இழக்க தயாராக இருக்கிறான், அவனது பயமே கடவுள் நம்பிக்கைக்கு ஆணிவேராக ஊன்றிவிட்டது, காரணம் பெரும்பாலான மதங்கள் இறப்பிற்கு பின் ஒரு வாழ்வு உண்டு என்றும், இப்பூமியிலேயே மறுபிறவி எடுப்பாய் என்றும்(காக்கா தான், தாத்தான்னு சோறு வைக்கிறது), நம்பிக்கையை ஊட்டி வருகிறது!

உறக்கநிலையில் மூளை முழுதாக ஓய்வு எடுக்காமல் சிறிது விழித்திருக்கும் போது கனவு ஏற்ப்படுகிறது, கனவு ஏற்ப்படவில்லையென்றால் நீங்கள் இறந்தநிலை மனிதர்கள் தான், உங்களை கேட்காமல் இயங்க ஆரம்பித்த உடலுறுப்புகள் மட்டும் தானாக இயங்கி கொண்டிருக்கும், அவைகளின் இயக்கம் நிற்கும் போது நீங்கள் நிரந்தர தூக்கத்தை அடைக்கிறீர்கள், அதன் பின் உங்கள் நினைவுகளாலோ, உங்கள் அனுபவத்தினாலோ துளி அளவும் இந்த பூமிக்கு பயனில்லை! இறப்பு என்பது உங்கள் நினைவுகளுக்கு நிரந்தர தூக்கம், அதன் பின் அவை என்றும் கிடையாது! வாழும் போது அடுத்தவருக்கு உதவியாக இருப்பதோ, உங்களலவில் சந்தோஷமாக இருப்பதோ உங்கள் இஷ்டம், என்ன தான் ஆயிரம் கடவுள்கள் இருந்தாலும் ஒவ்வோரு நாட்டிற்கும் அதன் அரசாங்கமே கடவுள்! அவர்கள் கொடுத்தால் வரம், எடுத்தால் சாபம்!

*************************
பதிவின் நீளம் கருதி இதுடன் முடிக்கிறேன்! ஆங்கேங்கே தொடர்பற்று இருப்பதாக உணர்ந்தால் தயவுசெய்து பின்னூட்டத்தில் கேளுங்கள்,அனைத்திற்கும் நிச்சயமாக பதிலுண்டு!

உங்களது நம்பிக்கையை நியாயப்படுத்தும் கேள்விகளுக்கு எனது தரப்பு பதில்களையே தருகிறேன்! உங்களுடன் எனக்கு எந்த விரோதபோக்கும் கிடையாது, அடுத்தவன் கடவுளை மறந்து அவனுடன் நட்பு பாராட்டுவதை போல் எனது கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு என்னுடன் நட்பு பாராட்டலாம்! எனக்கு கடவுள் மற்றும் கடவுள் நம்பிக்கையை விட நீங்களே முக்கியம்!

329 வாங்கிகட்டி கொண்டது:

«Oldest   ‹Older   1 – 200 of 329   Newer›   Newest»
Anbu said...

me the first...patichittu varen

Anonymous said...

பத்து தடவை படிச்சேன்... ஒண்ணும் புரியலை. புரியற மாதிரி தமிழில் எழுத கூடாதா??

கிருஷ்ண மூர்த்தி S said...

சரியோ தவறோ, எந்த ஒரு விஷயத்தையும் கொஞ்சம் ஆழமாக விவாதம் செய்ய முற்படுவது கொஞ்சம் ஆரோக்கியமான முடிவுகள், புரிதலுக்கு உதவும். அந்த வகையில், இந்த விவாதத்தை வரவேற்கிறேன்.

கடவுள் உண்டா, இல்லையா என்பது ஒரு ட்ராக். கடவுளை நான் மட்டுமே காட்டுவேன் என்று ஏகபோக உரிமை எடுத்துக் கொள்ளும் மதங்கள், அவைகளில் காணப் படும் சில பொதுவான, நிறைய மாறுபட்ட அம்சங்கள் இதெல்லாம் வேறு ட்ராக்.

ட்ராக் மாறி விடாமல் விவாதத்தை நடத்திச் செல்வதே முதலில் பெரிய சவாலாக இருக்கும்! வாழ்த்துக்கள்!

பித்தனின் வாக்கு said...

anbulla val paiyan ungalin karuthukal padithen, evai tharka reathiyaka sari. anal ungalin ella paravil ulla anaithu karuthukalukkum ennidam pathi ullathu anal vilakkama type panna porumai illai. enn email id tharukiran personalaka todarbu koluka lionsudhakar.sudha@gmail.com.
ungalidam oru quater janakshaw kuda ukanthu vivathika asai.

SUBBU said...

கிழிஞ்சிது கிருஷ்னகிரி :)))

Anonymous said...

இப்ப என்ன கடவுள் இருக்காரா? இல்லையா? இருந்த அவர பாக்க என்ன பண்ணும்? இதையும் சொல்லிட்டா கொஞ்சம் வசதியா இருக்கும். ( எதோ கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு , நான் கூட எதோ கவுஜ போலனு நெனச்சுட்டேன்.)

Suresh Kumar said...

அவனது பயமே கடவுள் நம்பிக்கைக்கு ஆணிவேராக ஊன்றிவிட்டது, காரணம் பெரும்பாலான மதங்கள் இறப்பிற்கு பின் ஒரு வாழ்வு உண்டு என்றும், இப்பூமியிலேயே மறுபிறவி எடுப்பாய் என்றும்(காக்கா தான், தாத்தான்னு சோறு வைக்கிறது), நம்பிக்கையை ஊட்டி வருகிறது!//////////////


பயம் தான் கடவுளை தேட வைக்கிறது . கடவுளை என்றில்லாமல் பயத்தின் மூலம் தன்னை மீறிய ஒரு சக்தி நம்மை காப்பாற்றாதா என்ற என்ற எண்ணத்திற்கு மனிதன் உருவாக்கி கொண்டத்து தான் கடவுள் . கால போக்கில் அந்த சக்தியை கண்டே மனிதன் பய பட துவங்கினான் . எப்படி கடந்த காலங்களில் அரசனுக்கு மக்கள் பய பட்டார்களோ அதே போல் தன்னை மீறிய ஒரு சக்தி இருக்கலாம் எனவும் அந்த சக்திக்கும் பய பட்டான் மனிதன் .

நீங்கள் சொல்லியது போல் சுய நலம் உள்ளவன் தான் தன இனம் என்பதை நிலை நிறுத்த கடவுள் என்ற வார்த்தையை பயன் படுத்தினான் ,. பொது நலமிக்கவன் நல்ல ஒழுக்கங்களையும் வாழும் முறைகளையும் கடவுள் என்ற பெயரால் மக்கள் முன் எடுத்து வைத்தான் .

ஆனால் மக்கள் இன்று அதில் காணப்படும் நல்ல கருத்துக்களை பின்பற்றுவதை விட்டு விட்டு மேலோட்டமாக தன்னை அடையாள படுத்தவும் கடவுள் பெயரையும் மதத்தையும் பயன் படுத்துகிறான் .

மனிதாபி மனதோடு நல்லோளுக்கதொடு வாழ்தல் கடவுளும் தேவையில்லை . மதமும் தேவையில்லை .

கடவுள் நம்பிக்கையில் நமது தன்னம்பிக்கை அற்று போகிறது

பித்தனின் வாக்கு said...

இந்த கருத்துகள் எல்லாம் சரி, ஆனால் இது எகிப்து நாகரிக விளக்கமா உள்ளது. கொஞ்சம் இந்திய நாகரிகத்தை விளக்கமா படித்து எழுதவும். முதலில் நகரிங்களின் தோற்றம் வளர்ச்சி பின் அழிவு ஆகிய கருத்துகள் அறிந்து பின் கருத்து கூறவும்.

ஆர்யா, சுமாரிய, எகிப்த் மற்றும் சிந்து நகரிங்களின் வரலாறு நன்கு படிக்கவும்.

ஹிந்து சமயத்தின் முதல் கடவுள் பசுபதி நாதர் ல இருந்து ஆரம்பிக்கவும்.

உங்களுக்கு புரியும்.

கோவி.கண்ணன் said...

//உறக்கநிலையில் மூளை முழுதாக ஓய்வு எடுக்காமல் சிறிது விழித்திருக்கும் போது கனவு ஏற்ப்படுகிறது, கனவு ஏற்ப்படவில்லையென்றால் நீங்கள் இறந்தநிலை மனிதர்கள் ........//

இந்தப் பத்தி மிகவும் சிறப்பாக இருக்கிறது.

வால்பையன் said...

//ஹிந்து சமயத்தின் முதல் கடவுள் பசுபதி நாதர் ல இருந்து ஆரம்பிக்கவும்.//

இதற்கு ஆதாரமாக எதாவது ஒரு புத்தகத்தின் எதாவது ஒரு பக்கம் எனக்கு காட்டப்படுமே!

இந்தியவரலாறு பெரிய புனைவுகளாகத்தான் இருக்கிறது! உதரணமாக ராமாயணம், மகாபாரதம் பொன்ற கதைகளின் கிளைநீட்சியே மற்ற கடவுள் கதைகள்! ஒன்றுகொன்று சிறிதளவேனும் தொடர்பு இருக்கிறது!

படிச்சு படிச்சு சலிச்சு போச்சு தலைவா!
வாங்க ”நெப்போலியனோடு” பேசுவோம்!

கிருஷ்ண மூர்த்தி S said...

"காடுவெட்டி" சுப்பிரமணியன் ஜெயராமனுக்கு,
இன்னும் எத்தனை நாள், எத்தனை பேர்தான் கிருஷ்ணகிரியையே கிழிச்சிட்டு இருப்பீங்க? கிருஷ்ணகிரி பாவமில்லையா?

அப்புறம் "மயிலே, மயிலே இறகு போடு"ன்னா இறகு கிடைச்சிடுமா? வால்பையன் என்னமோ, கடவுளே இல்லைன்னு சொல்ல இப்பத் தான் ஆரம்பிச்சிருக்காரு, அவர்கிட்டே நீங்க என்னடான்னா, கடவுள் இருக்காரா, இல்லையா அவரைப் பாக்கனும்னா என்ன செய்யனும்னு கேக்கறீங்களே!

வரலாறு என்பது முழுக் கற்பனையல்ல. நிறையக் கற்பனை கலப்படமான உண்மை. உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்கப் பொறுமை இல்லாதவர்கள் தான், இப்படிப் பொறுமையில்லாமல், எடுத்த எடுப்பிலேயே, இல்லை, அது இல்லவே இல்லை, அதைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி, அயோக்கியன் என்ற ரேஞ்சில் பேச ஆரம்பிப்பார்கள்!

நமக்குத் தெரிந்ததில், எது உண்மை என்று நாம் புரிந்துகொண்டிருக்கிறோம், அதில் என்ன தவறு இருக்கிறது என்பதிலிருந்து ஆரம்பித்தால், கொஞ்சம் ட்ராக் மாறாமல் இருக்கும்!

Anbu said...

கடவுள் இருக்கிறாரா..இல்லையா..

இது பலராலும் ஆராயப்பட்டு விடை தெரியாத புதிராகவே உள்ளது..

அண்ணன் வால் சொன்னது போல் கடவுளை நேரில் பார்த்தகாக சொல்பவர்கள் ஒன்று போதையில் இருக்கிறார்கள் அல்லது மனச்சிதைவு நோயில் ஆட்பட்டவர்களாக இருப்பார்கள்...இதை நான் உறுதியாக ஒப்புக்கொள்கிறேன்..

கடவுள் தூணிலும் இருப்பார்..துரும்பிலும் இருப்பார் என்கிறார்கள்..

தூணிலும் துரும்பிலும் இருப்பதற்கு எதற்கு கோவில்கள்..சிறப்பு அபிஷேகங்கள்..எல்லாம்...

பிரதோஷம் அன்னிக்கு மட்டும் தான் சாமி வரம் கொடுப்பார் என்றால் மற்ற நாட்கள் எல்லாம் சாமிக்கு விடுமுறையா...

கடவுள் எப்படி தோன்றினார்...???

சிறுவயதிலிருந்தே தன் மகன் எந்த குற்றமும் செய்யக்கூடாது என்பதற்காக நீ தப்பு செய்தால் கடவுள் உன்னை கண்ணை குத்திடுவார் என்று ஆழ்மனதில் மிகவும் பதிய வைத்துவிடுகிறார்கள்..

இதிலிருந்து அவன் எந்த செயல் செய்தாலும் மேல கடவுள் இருக்கார்..

தப்பு செய்றதும் நம்ம..பாவ மன்னிப்பு கேட்பதும் நாமா தான்...இதற்கு இடையில் கடவுள் எதற்கு..????

ஒவ்வொருவரும் தங்களது திறமையும் வயதையும் மீறி தப்பான செயல் செய்ய முயலும் போது அவரவர் மனதில் ஒரு சின்ன நெருடல் இருக்கும்..இது தான் கடவுள்...

உண்மையில் கடவுள் எங்கு தோன்றுகிறார்...

எல்லோரும் போய் கண்ணாடியை பாருங்கள் கடவுள் கண்டிப்பாக தோன்றுவார்...அவர் அவர் மனசாட்சி தாங்க கடவுள்..

Raju said...

\\மூடநம்பிக்கையில்லாத மதமே கிடையாது சம்பிரதாயங்கள் இல்லாமல் மதமே கிடையாது, அந்த நம்பிக்கைக்கெல்லாம் ஆதாரம் கேட்டால் எதாவது ஒரு புத்தகத்தில் இத்தனாம் பக்கம் இத்தனாம் அதிகாரம் என்பீர்கள்,\\

முழுவதும் ஒத்துப்போகிறேன்.
இங்கே அனைத்து கருத்துக்களோடும் நான் ஒத்துப்போவதால், எனக்கு இங்கு விவாதிக்க ஒன்றுமில்லை.
என் நிலையை பதிவாக்குகிறேன்.

Raju said...

\\இப்ப என்ன கடவுள் இருக்காரா? இல்லையா? இருந்த அவர பாக்க என்ன பண்ணும்? இதையும் சொல்லிட்டா கொஞ்சம் வசதியா இருக்கும்.\\

ஒரு 5000 ரூவா அனுப்பி விடுங்க மயில் அக்கா.
நான் அவரக்காட்றேன்.
:)

Raju said...

நல்ல புரிதல் அன்பு.

யோ வொய்ஸ் (யோகா) said...

அன்பே சிவம், சிவமே அன்பு,
நாத்திகம் பேசும் நல்லவர்க்கெல்லாம்
அன்பே சிவமாகும்
ஆத்திகம் பேசும் நல்லவர்க்கெல்லாம்
சிவமே அன்பாகும்

நையாண்டி நைனா said...

இதுக்கு பேரு தான் விவாதமா....
நடத்துங்க ராசா. நடத்துங்க...... இங்கே எனக்கு ஒரு இடம் வேண்டும்... போட்டு வச்சிருங்கோ...

அட... வேடிக்கை பார்க்கதாங்க...

கோவி.கண்ணன் said...

வால்,

இயற்கை வியப்புகள் பற்றிய கற்பனையில் தோன்றியவை மதம், ஆன்மீகம், அதன் உள்ள உண்மைகளைப் பேசுவது அறிவியல்,

இப்படி இரண்டுமே முடிவற்ற தேடலாகத்தான் தொடருது. ஒன்றை ஒன்று தொடர்ப்பு படுத்திப் பேசுவதும் இப்படித்தான், இந்தக் குழப்பம் என்றும் தீராது. ஆசாமி புத்தர் மோதிப் பார்த்துட்டு சாமியாகிவிட்டார் :)

கோவி.கண்ணன் said...

//ஏன் இத்தனை கடவுள்கள் என்று உளவியல் ரீதியாக பார்த்தால், உயிரினங்களில் மனிதன் மட்டுமே என்னேரமும் உயிர் பயத்துடன் இருக்கிறான்,//

மரணம் இல்லாமல் செய்துவிடும், அதன் பிறகு என்ன ஆவோமோ என்கிற கற்பனை, அச்சம் இவையும் காரணம். உயிர்பயம் விலங்குகளுக்கும் உண்டு, மனிதனுக்கு மரண பயம்.

Eswari said...

//இக்காலத்தில் ஆன்மீக தேடலில் விடை தெரியாமலா ஏ.ஆர். ரக்மான், இளையராஜா, ரஜினி, சுஜாதா..... போன்றோர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள்? அல்லது இவர்கள் எல்லாம் சிந்திக்க தெரியாதவர்களா?//
இந்த கேள்விக்கு இன்னும் விடை இல்லை ?????

//முருகன், வடநாட்டு கடவுளுக்கு வாரிசாக போனது //
எப்ப சிவபிரானை வடநாட்டிற்கு பட்டா போட்டு கொடுத்திங்க? சொல்லவே இல்லை??

//அக்காலத்தில் ஆன்மீக தேடலில் விடை தெரியாமலா எல்லா மன்னர்களும், பெரிய பெரிய கோவில்கள் கட்டியும் அதன் பராமரிப்புக்காக பல ஏக்கர் நிலங்களையும் விட்டு சென்றார்கள்?//

//ஒவ்வோரு நாட்டிற்கும் அதன் அரசாங்கமே கடவுள்! அவர்கள் கொடுத்தால் வரம், எடுத்தால் சாபம்!//
அரசாங்கம் ஏன் கோவில் கட்டனும் அதனை பராமரிக்கணும்??

//மூடநம்பிக்கையில்லாத மதமே கிடையாது சம்பிரதாயங்கள் இல்லாமல் மதமே கிடையாது,//
மூடநம்பிக்கைகளும், சம்பிரதாயங்களும், இடையில் வந்தவை,வருபவை, மாறக்கூடியவை/மாறுகின்றவை, பின் மறைந்து போயீ விடுபவை.அதை ஆன்மீகத்தோடு சேர்த்து குழப்பிக்காதிங்க.

// கனவு ஏற்ப்படவில்லையென்றால் நீங்கள் இறந்தநிலை மனிதர்கள் தான்//
என்னப்பா அப்துல் கலாம் சொன்னதை எல்லாம் இங்கு சொல்லுறிங்க?
நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வந்ததில்லையோ?

உள்ளத்தில் உள்ளானடி(டா) ,
அதை உணர வேண்டுமடி(டா)
உள்ளத்தில் உணர்ந்தாய் என்றால்
கோவில் உள்ளேயும் உணர்வாயடி(டா)

//எனக்கு கடவுள் மற்றும் கடவுள் நம்பிக்கையை விட நீங்களே முக்கியம்!//
புல்லரிக்குதுபா...

கோபிநாத் said...

\\உங்களது நம்பிக்கையை நியாயப்படுத்தும் கேள்விகளுக்கு எனது தரப்பு பதில்களையே தருகிறேன்! உங்களுடன் எனக்கு எந்த விரோதபோக்கும் கிடையாது, அடுத்தவன் கடவுளை மறந்து அவனுடன் நட்பு பாராட்டுவதை போல் எனது கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு என்னுடன் நட்பு பாராட்டலாம்! எனக்கு கடவுள் மற்றும் கடவுள் நம்பிக்கையை விட நீங்களே முக்கியம்!\\

நல்லா புரியுது தல ;)

வால்பையன் said...

அடுத்த பதிவிற்கு கேள்விகளை அடுக்கிய ஈஸ்வரிக்கு நன்றி!

Iyappan Krishnan said...

கடவுளின் இருப்பை முழு நாத்திகனிடமும் முழு ஆத்திகனிடமும் விவாதிப்பது தவறு. இருவருமே தங்களின் முடிவே சரி என்று விவாதிப்பார்கள்,

கடவுளின் இருப்பை, உண்மையைத் தேடுகிறவன் அதைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்க மாட்டான் அவனின் இலக்கு வேறு. அறிந்தேன் என்று சொல்பவன் இட்டுக் கட்டிச் சொல்வான். இதுபோன்றவர்கள் அதிகம் என்பதால். அறிந்தவன் சொல்ல மாட்டான். அவன் மீது பைத்தியக் காரன் பட்டம் கட்டப்படும் ஆத்திகர்களாலுமே.

ஆதிகாலந்தொட்டு இது முடிவற்ற விவாதம்.

அ.மு.செய்யது said...

ரொம்ப புளித்து போன தோசைகள் வாய்லயே வைக்க முடியாது.

காரணம் நேற்று அரைத்து மிச்சம் இருந்த மாவையே இன்னைலர்ந்து ஒருவாரம் திரும்ப திரும்ப அரைப்பார்கள்.

g said...

... தடவை படிச்சேன்... ஒண்ணும் புரியலை? ... தடவை படிச்சேன்... ஒண்ணும் புரியலை? ... தடவை படிச்சேன்... ஒண்ணும் புரியலை? ... தடவை படிச்சேன்... ஒண்ணும் புரியலை? ... தடவை படிச்சேன்... ஒண்ணும் புரியலை? ... தடவை படிச்சேன்... ஒண்ணும் புரியலை? ... தடவை படிச்சேன்... ஒண்ணும் புரியலை? ... தடவை படிச்சேன்... ஒண்ணும் புரியலை? ... தடவை படிச்சேன்... ஒண்ணும் புரியலை? ... தடவை படிச்சேன்... ஒண்ணும் புரியலை? ... தடவை படிச்சேன்... ஒண்ணும் புரியலை? ... தடவை படிச்சேன்... ஒண்ணும் புரியலை?
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கோவி.கண்ணன் said...

//Eswari said...
//இக்காலத்தில் ஆன்மீக தேடலில் விடை தெரியாமலா ஏ.ஆர். ரக்மான், இளையராஜா, ரஜினி, சுஜாதா..... போன்றோர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள்? அல்லது இவர்கள் எல்லாம் சிந்திக்க தெரியாதவர்களா?//
இந்த கேள்விக்கு இன்னும் விடை இல்லை ?????
//

சிந்திக்க தெரிந்தவர்கள் எப்படி ஒரு மதத்துக் கடவுள் தான் உண்மை என்று அதிலேயே உழல்கிறார்கள் ?

சிந்திக்கத் தெரிந்தவர்களிம் மதம்/கடவுள் ஏன் பிற மதத்தினரால் கேவலப்படுகிறது ?

சிந்தித்து பதில் சொல்லுங்க

வால்பையன் said...

கோவிஜீ!

உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்!

உதரானத்திற்கு ஏ.ஆர்.ரகுமான், ரஜினி இவர்களெல்லாம் ஐகான்ஸ், பிரபலமடைந்த மனிதர்கள், அவர்களது ஓய்வில்லா பணிகளுக்குகிடையே இமயமலை செல்வதும், மெக்கா செல்வதுமாக இருக்கிறார்கள்!

ஆனால் ஆன்மீகமே வாழ்க்கையாக இருக்கும் பலரை ஒருநாய் சீண்டுவதில்லை ஏன்?

இமயமலையிலேயே வாழ்பவனுக்கு கூட கடவுள் ஒருமுறை காட்சி தரவில்லையே!

க.பாலாசி said...

//ஒவ்வோரு நாட்டிற்கும் அதன் அரசாங்கமே கடவுள்! அவர்கள் கொடுத்தால் வரம், எடுத்தால் சாபம்!//

மத்த எதுவுமே எனக்கு காதுல விழல தலைவா. ஏன்னா இப்பதான் திருப்பதி போயி மொட்ட போட்டுகிட்டு வந்திருக்கேன். ஆனா கடைசியா ஒன்னு சொல்லியிருக்கிங்களே அதுதான் மேட்டரு.

இப்படிக்கு
அரசியல் ஆத்திகன்.

டாஸ்மாக் சேல்ஸ்மேன் said...

வர வர குடிகார பயல்களோட தொல்லை ரொம்ப ஜாஸ்தியா போச்சு. உளறல் ரொம்ப ஓவரா இருக்கு.

Vidhoosh said...

கடவுளை எங்கள் வைகைப் புயல் வடிவேலுவை தவிர யாருமே பார்க்கவில்லை என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்மீக ஈடுபாட்டுக்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

///// Anbu said...

கடவுள் இருக்கிறா
ஒவ்வொருவரும் தங்களது திறமையும் வயதையும் மீறி தப்பான செயல் செய்ய முயலும் போது அவரவர் மனதில் ஒரு சின்ன நெருடல் இருக்கும்..இது தான் கடவுள்...

உண்மையில் கடவுள் எங்கு தோன்றுகிறார்...

எல்லோரும் போய் கண்ணாடியை பாருங்கள் கடவுள் கண்டிப்பாக தோன்றுவார்...அவர் அவர் மனசாட்சி தாங்க கடவுள்..////


Repeat....

---வித்யா

கோவி.கண்ணன் said...

// வால்பையன் said...
கோவிஜீ!

உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்!

//

மன்னிக்க வேண்டும் உங்கள் கருத்துகள் ஏற்புடையதாக இருந்ததால் எதிர்விவாதம் செய்ய ஒன்றும் இல்லை
ஒத்து ஊதினால் ஜால்ராவாகிவிடும் அபாயம் உண்டு
:)

உங்க பார்ட்னர் மணிகண்டன் இன்னும் தூங்கி எழவில்லையா ?

வால்பையன் said...

பாலாஜி!

உங்க திருப்பதி பதிவுல ஒரு கேள்வி கேட்டிருந்தேனே!

மறைத்தல் மேட்டர்!

கோவி.கண்ணன் said...

//இமயமலையிலேயே வாழ்பவனுக்கு கூட கடவுள் ஒருமுறை காட்சி தரவில்லையே!

August 7, 2009 2:55 PM
//

கதவு இடுக்கில் காதை வைத்துக் கேட்டுக் கொண்டிருக்கும் பைத்தியத்திடம் இன்னொருவர் கேட்டாராம், என்ன கேட்கிறாய் ?

இவ்வளவு நேரம் காது கொடுத்துக் கேட்டும் எனக்கே ஒண்ணு கேட்கவில்லை, அதை உனக்கு வேற சொல்லனும் என்று ஆசைப்படுகிறாய் என்று ஒரு அறை விட்டராம் பைத்தியம்.

அவங்க மலையில், காட்டில் உட்கார்ந்து தேடியும் தெரியாத இறைவன், உங்களுக்கு டாஸ்மாக் கடைக்கு வந்து காட்சி கொடுப்பாரா ?
:))))))))))

கோவி.கண்ணன் said...

//Jeeves said...
கடவுளின் இருப்பை முழு நாத்திகனிடமும் முழு ஆத்திகனிடமும் விவாதிப்பது தவறு. இருவருமே தங்களின் முடிவே சரி என்று விவாதிப்பார்கள்,
//

இது பற்றி ஒரு சிறுகதை எழுதி இருக்கிறேன்

ஹேமா said...

வால்பையன்,உங்கள் பதிவுகளுக்கு அடிக்கடி பின்னூட்டம் போடாவிட்டாலும் தவறாமல் படித்துக்கொள்வேன்.இந்தப் பதிவு உங்கள் பதிவுகளுக்குள் வித்தியாசமாக விதிவிலக்காக அருமையாகச் சிந்திக்க வைக்கிறது.ஆழமான சிந்தனை.
விடை தெரியாத கேள்விகளாகத் தொக்கு நிற்கிறது.இடைக்கிடை இப்படியும் எழுதுங்கள்.

Iyappan Krishnan said...

// Anbu said...

கடவுள் இருக்கிறாரா..இல்லையா..

இது பலராலும் ஆராயப்பட்டு விடை தெரியாத புதிராகவே உள்ளது..

அண்ணன் வால் சொன்னது போல் கடவுளை நேரில் பார்த்தகாக சொல்பவர்கள் ஒன்று போதையில் இருக்கிறார்கள் அல்லது மனச்சிதைவு நோயில் ஆட்பட்டவர்களாக இருப்பார்கள்...இதை நான் உறுதியாக ஒப்புக்கொள்கிறேன்..//

இதைத்தான் சொல்றேன்.

இப்ப மனச்சிதைவுன்னு எதைச் சொல்றீங்க ? ஒருத்தர் தான் பார்த்தேன்னு உறுதியா சொல்றதை நீங்க பாக்க முடியலை. அதனால அவனை மனச்சிதைவுங்கறீங்க. (மருத்துவத்தையும் சேர்த்து தான்). ஆக பார்த்ததை உணர்ந்ததை சொல்லும் போது ( கவனிக்கவும் திணிக்கும் போது இல்லை ) அல்லது அவ்வாரு அவன் பார்த்ததாக உணர்ந்ததாக நீங்கள் நினைக்கும் போது அவன் மனச் சிதைவாளன் ஆகிறான்.

உதாரணத்துக்கு பத்து பேர் சேர்ந்து ஒருவனை கொலையாளி என்கிறார்கள். ஆனால் அவன் உண்மையில் கொலையே செய்யவில்லை. அந்த உண்மை அவனுக்கு மட்டுமே தெரியும் என்ற போதில் பத்து பேர் சொல்வது மட்டுமே எடுபடும். உண்மை அறிந்தவனின் வார்த்தை அல்ல :) அதைப் போலத்தான்.

ஜென்னின் கதைப் போல.
ஒரு துறவி சொல்கிறான்

" அந்த மீன் எவ்வளவு சந்தோஷமாக நீந்துகிறது "
அடுத்த துறவி கேட்கிறார். " உனக்கெப்படித் தெரியும் அது சந்தோசமாக இருக்கிறது என்று. ஏனென்றால் நீ அந்த மீனில்லை"
முதல் துறவி சொல்கிறார்

" எனக்குத் தெரியாது என்று உனக்கெப்படித் தெரியும்? ஏனென்றால் நீ நானில்லை "

Eswari said...

//சிந்திக்க தெரிந்தவர்கள் எப்படி ஒரு மதத்துக் கடவுள் தான் உண்மை என்று அதிலேயே உழல்கிறார்கள் ?//
இது என்னப்பா கூத்தா இருக்கு. தனக்கு நல்லா சிந்திக்க தெரியும் என்பதால் எல்லா மதத்திலும் உழல இது ஆன்மிகமா அல்லது .......

போகவேண்டிய பாதைக்கு பல வழிகள் இருந்தாலும் நாம் ஒரு வழியில் மட்டுமே போகமுடியும்

//சிந்திக்கத் தெரிந்தவர்களிம் மதம்/கடவுள் ஏன் பிற மதத்தினரால் கேவலப்படுகிறது ?//
தன்னுடைய பாதை மட்டுமே சிறந்தது என்று நினைப்பதால்...

உள்ளத்தில் உள்ளானடி(டா) ,
அதை உணர வேண்டுமடி(டா)
உள்ளத்தில் உணர்ந்தாய் என்றால்
கோவில் உள்ளேயும் உணர்வாயடி(டா)

Ashok D said...

வால் சார்

இங்க வந்தா குச்சி மிட்டாயும் குருவி பிஸ்கட்டும் கிடைக்கும்ன்னு சொன்னாங்கல!!!

தாங்ஸ் குசும்பன்.

Ashok D said...
This comment has been removed by the author.
Anbu said...

Jeeves said...


\\\\உதாரணத்துக்கு பத்து பேர் சேர்ந்து ஒருவனை கொலையாளி என்கிறார்கள். ஆனால் அவன் உண்மையில் கொலையே செய்யவில்லை. அந்த உண்மை அவனுக்கு மட்டுமே தெரியும் என்ற போதில் பத்து பேர் சொல்வது மட்டுமே எடுபடும். உண்மை அறிந்தவனின் வார்த்தை அல்ல :) அதைப் போலத்தான்.\\\


இது எந்த ஊரிலங்க...

இப்படி நடக்குது...அப்புறம் போலிஸ்.,,,கோர்ட் எல்லாம் எதுக்குங்க..

விசாரணை எதுக்கு..

Anbu said...

\\\\Eswari said...

உள்ளத்தில் உள்ளானடி(டா) ,
அதை உணர வேண்டுமடி(டா)
உள்ளத்தில் உணர்ந்தாய் என்றால்
கோவில் உள்ளேயும் உணர்வாயடி(டா)\\\\\\

இதைத்தான நாங்களும் சொல்கிறோம்...

உள்ளத்திலே உணர்ந்துவிட்டால் கோவில் எதற்கு???

உங்க உள்ளத்தில் உணர்ந்துவீட்டீர்கள் என்றால்
கோவிலுக்கு ஏன் போறீங்க...

இல்லை

உங்க உள்ளம் மேல்
உங்களுக்கே சந்தேகமா...

Anonymous said...

வம்பே உன் பெயர் வால் பையனா? நயம் பட உண்மை சொல்லியிருக்கீங்க? கேள்வியும் சரி பதிலும் சரி படிக்கிறவங்களுக்கு அதை தெரிந்துக் கொள்ள ஒரு வாய்ப்பு..உங்க பொருமைக்கும் வாழ்த்தனும் அருண்..
//
உங்களது நம்பிக்கையை நியாயப்படுத்தும் கேள்விகளுக்கு எனது தரப்பு பதில்களையே தருகிறேன்! உங்களுடன் எனக்கு எந்த விரோதபோக்கும் கிடையாது, அடுத்தவன் கடவுளை மறந்து அவனுடன் நட்பு பாராட்டுவதை போல் எனது கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு என்னுடன் நட்பு பாராட்டலாம்! எனக்கு கடவுள் மற்றும் கடவுள் நம்பிக்கையை விட நீங்களே முக்கியம்!//

உண்மையில் ஈர்த்தது இது அருண்..என்றும் நட்புக்கள் உங்களிடமும் நட்புக்களின் மனங்களில் நீங்களும் வாழ்வீர்கள்....

Eswari said...

Anbu said...
//உள்ளத்திலே உணர்ந்துவிட்டால் கோவில் எதற்கு???

உங்க உள்ளத்தில் உணர்ந்துவீட்டீர்கள் என்றால்
கோவிலுக்கு ஏன் போறீங்க...//

கோவில் உள்ளேயும் காண.......

பசுவின் உடல் முழுக்க பால் இருந்தாலும் காம்பில் தான் கறக்க முடியும்

வால்பையன் said...

//பசுவின் உடல் முழுக்க பால் இருந்தாலும் காம்பில் தான் கறக்க முடியும் //

உடல் முழுவதும் இருப்பது ரத்தம்!
பால் என்பது மார்பகத்தில் சுரக்கும் ஒரு திரவம்!

நாம் தான் எதையும் புனிதப்படுத்துவோமே! அதனால் பால் புனிதமானதாயிற்று!

Eswari said...

//உடல் முழுவதும் இருப்பது ரத்தம்!
பால் என்பது மார்பகத்தில் சுரக்கும் ஒரு திரவம்!//

ரத்தம் தான் சுரப்பிகளின் மூலமாக பாலாகிறது.

அந்த சுரபியாக இருப்பது தான் கோவில்கள்..

வால்பையன் said...

//ரத்தம் தான் சுரப்பிகளின் மூலமாக பாலாகிறது.
அந்த சுரபியாக இருப்பது தான் கோவில்கள்..//

அப்போ வியர்வையும், கண்ணீரும், எச்சிலும் ரத்தம் தானா!?

ஏன் பறவையினங்களுக்கும், பாம்பினங்களுக்கும் ரத்தம் பாலாக சுரப்பதில்லை!?

Maximum India said...

பொதுவாகவே இருதரப்பினரும், கடவுள் இருக்கின்றார் அல்லது இல்லை என்ற முடிவை முதலிலேயே எடுத்துக் கொண்டு அந்த நிலைக்கு ஆதரவாகவே விவாதிக்கிறார்கள். இதனால் காமாலைக் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகவே தோன்றுவதைப் போல, தன நிலைக்கு ஆதரவான விஷயங்கள் மட்டுமே ஒருவர் (மனக்) கண்ணுக்கு தெரிகிறது.

"Selective Bias" என்று அழைக்கப் படும் இந்த "கருத்துக் குழப்பம்" ஆன்மீகத்தில் மட்டுமல்ல, அரசியல், பொருளாதாரம் மற்றும் இதர துறைகளில் பல்வேறு நிலைப் பாடுகளை எடுப்பவர்களுக்கும் கூட உண்டு.

என்னுடைய கருத்தையும் சொல்லிவிடுகிறேன்!

"மனதை வெற்றிடமாக வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிடத்தில் எல்லாம் நிரம்பும்."

நம்புபவர்களுக்கு கடவுள் இருந்து விட்டு போகட்டுமே? நம்பாதவர்களுக்கு கடவுள் இல்லாமலேயே போகட்டுமே? யாருக்கு என்ன நஷ்டம்?

ஒருவர் சுதந்திரம் மற்றவர் மூக்கு வரை நீளாமல் இருக்கும் வரை யாருக்கும் பிரச்சினை இல்லை.

நன்றி.

வால்பையன் said...

//பார்த்ததை உணர்ந்ததை சொல்லும் போது ( கவனிக்கவும் திணிக்கும் போது இல்லை ) அல்லது அவ்வாரு அவன் பார்த்ததாக உணர்ந்ததாக நீங்கள் நினைக்கும் போது அவன் மனச் சிதைவாளன் ஆகிறான்.//

கற்பனைக்கும், நினைவுக்கும் வித்தியாசம் தெரியாத விளிம்பு நிலையே மனச்சிதைவு, அதை பற்றி ஒரு வருடம் இருபது நோயாளிகலிடம் ஆராய்ச்சி செய்தவன் என்ற முறையில் அதை பற்றி எந்த விளக்கமும் என்னால் கொடுக்கமுடியும்!

கடவுள் என்பவர் இந்த வடிவத்தை சார்ந்தவர் என எவரும் கண்டிலர் ஆனால் மனசிதைவால் பாதிக்கப்பட்ட ஒருவனுக்கு கே.ஆர்.விஜயா வடிவில் கடவுள் காட்சியளித்ததாக சத்தியம் செய்த்தான் ஒருவன்!

இப்படிப்பட்ட கேஷ்கள் நிறைய உண்டு!
ராமகிருஷ்ணரே காளி நேரில் வந்து தன்னை கத்தியால் வெட்டியாதாக் சொன்னார், என்னைத்தயா வெட்டினார் என்று கேட்டதற்கு என் ஆசைகள், ஆணவங்கள் என்றார்!

கதை நல்லாயிருக்குல!

உங்க கதையும் நல்லாயிருக்கு!

க.பாலாசி said...

வால்பையன் said...
// பாலாஜி!
உங்க திருப்பதி பதிவுல ஒரு கேள்வி கேட்டிருந்தேனே!
மறைத்தல் மேட்டர்!//

இதற்கான பதிலை நான் எனது பதிலூட்டத்திலே போட்டுவிட்டேனே!

Eswari said...

//அப்போ வியர்வையும், கண்ணீரும், எச்சிலும் ரத்தம் தானா!?//
இவைகள் எல்லாம் உடல் கழிவுகள். இவைகள் ஒழுங்கா வேலை செய்யலைனாலும் உடலுக்கு பிரச்சனை தான்.

//ஏன் பறவையினங்களுக்கும், பாம்பினங்களுக்கும் ரத்தம் பாலாக சுரப்பதில்லை!?//

நா பசுவின் காம்பை உதாரணத்திற்கு சொன்னது, கடவுள் எங்கும் இருந்தாலும் கோவிலில் அவர் வெளிபாடு அதிகமாக உணர முடியும் என்பதற்க்காக. உடனே பாம்பு, பறவைக்கு ஏன் அது இல்லை, இது இல்லை ன்னு கேட்பது உங்களுக்கே கேலியா இல்லையா?

வால்பையன் said...

//நா பசுவின் காம்பை உதாரணத்திற்கு சொன்னது, கடவுள் எங்கும் இருந்தாலும் கோவிலில் அவர் வெளிபாடு அதிகமாக உணர முடியும் என்பதற்க்காக. உடனே பாம்பு, பறவைக்கு ஏன் அது இல்லை, இது இல்லை ன்னு கேட்பது உங்களுக்கே கேலியா இல்லையா?//

நீங்க கடவுளுக்கு உதாரணமா பசுவையும் அதன் பாலையும் சொல்லும் போது எனக்கு கேலியா தான் இருந்தது அதை நீங்கள் புரிந்து கொள்ள நானும் உங்கள் வழியிலேயே வர வேண்டியாதாயிருக்கே!

:)

Eswari said...

//ஏன் பறவையினங்களுக்கும், பாம்பினங்களுக்கும் ரத்தம் பாலாக
சுரப்பதில்லை!?//

எங்களை போன்று ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு பசு போல இரத்தம் பாலக சுரக்கும்
உங்களை போல நாத்திகம் பேசுபவர்க்கு பாம்பு, பறவைய போல ரத்தம் பாலாக
சுரப்பதில்லை

Anbu said...

300 பாலோயர்ஸ்க்கு வாழ்த்துக்கள் வால்

வால்பையன் said...

//எங்களை போன்று ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு பசு போல இரத்தம் பாலக சுரக்கும்
உங்களை போல நாத்திகம் பேசுபவர்க்கு பாம்பு, பறவைய போல ரத்தம் பாலாக
சுரப்பதில்லை //

பசு மட்டுமா பால் சுரக்குது!
நீரில் இருக்கும் திமிங்கலம் பால் சுரக்குது!
மற்ற மீன்கள் சுரப்பதில்லை ஏன்?

முட்டையிடும் பறவைகள் எதுவும் பாலுட்டுவதில்லை
ஏன் ப்ளாட்டிபஸ் மட்டும் முட்டையிடு பால் கொடுக்கிறது!?(ஏன்னா அதுக்கும் சுரக்குது)

மற்றவைகளெல்லாம் ரத்தம் இல்லையா?
திமிங்கலத்துக்கும், ப்ளாட்டிபஸ்சுக்கும் மட்டும் தான் ரத்தம் இருக்கா!?

Eswari said...

//கடவுள் என்பவர் இந்த வடிவத்தை சார்ந்தவர் என எவரும் கண்டிலர்//

உண்மை தான். ஒரு நாமம் ஒரு உருவம் இல்லாதவர்க்கு ஆயிரம் திருநாமம் சூட்டி மகிழ்வது நாம் தான்.

உடனே கடவுளே இல்லைன்னு சொல்லிட்டேன் ன்னு நினைக்காதிங்க.
இதன் அர்த்தம் நாம் இறைவன் மீது நாம் கொள்ளும் அதீத அன்பால் காணும் பொருளாகவும், கருத்தாகவும் இருப்பவன் இறைவன் என்பதாகும்.

வால்பையன் said...

//நாம் இறைவன் மீது நாம் கொள்ளும் அதீத அன்பால் காணும் பொருளாகவும், கருத்தாகவும் இருப்பவன் இறைவன் என்பதாகும். //

அதீத அன்பும், அதீத வெறுப்பும் மனநோய் கூறுகள்!

அப்படி சிக்மெண்ட் ப்ராய்டு சொல்லியிருக்கிறார்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

அதீத அன்பால் கற்பனையில் நடிகையோடு குடும்பம் நடத்தியவன் கதைகள் நிஜத்தில் பலவுண்டு!
நடிகர்களோடு குடும்பம் நடத்திய பெண்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன்!

Eswari said...

//மற்றவைகளெல்லாம் ரத்தம் இல்லையா?
திமிங்கலத்துக்கும், ப்ளாட்டிபஸ்சுக்கும் மட்டும் தான் ரத்தம் இருக்கா!?//

நாத்திகம் பேசும் நிறைய பேர் கடைசியில் ஆதிகத்திற்கு மாறுவர் இந்த பறவை இனங்களில் உள்ள வேறுபாட்டை போல.

வால்பையன் said...

//நாத்திகம் பேசும் நிறைய பேர் கடைசியில் ஆதிகத்திற்கு மாறுவர் இந்த பறவை இனங்களில் உள்ள வேறுபாட்டை போல. //

உங்களின் நேர்மறை சிந்தனை எனக்கு பிடித்திருக்கிறது!
என்னோடு நாத்திகன் ஆகாமல் இருக்க உங்கள் இஷ்ட தெவத்தை வேண்டி கொள்ளுங்கள்!

Raju said...

\\Eswari Said
எங்களை போன்று ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு பசு போல இரத்தம் பாலக சுரக்கும்
உங்களை போல நாத்திகம் பேசுபவர்க்கு பாம்பு, பறவைய போல ரத்தம் பாலாக
சுரப்பதில்லை\\

பசுக்களுக்கு பால் தேவையாக இருக்கிறது. சுரக்கிறது. அதாவது உங்களுக்கு கடவுள் போல.
பாப்ம்புகளுக்கும் பறவைகளுக்கும் பால் தேவையில்லை, அதுபோல் நாத்திகவாதிகளுக்கு கடவுள் தேவையிலை.
சிம்பிள் லாஜிக்.
:)

ers said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில்
மதிப்பு மிக்க பதிவரான தங்களது பதிவு தானாகவே இணைந்துள்ளது...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....



உங்கள் படைப்பை பார்க்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

Eswari said...

//அதீத அன்பும், அதீத வெறுப்பும் மனநோய் கூறுகள்!//
அதீத அன்போடு தான் உங்க அம்மா உங்களுக்கு பால் கொடுத்தாள். அதீத அன்போடு தான் உங்க அப்பாவும் உங்களை வளர்த்தார். அதீத அன்போடு தான் நீங்களும், உங்க மனைவியும் இருப்பீர்கள்.இதெல்லாம் மன நோயனா உங்க அம்மாவுக்கும், உங்க அப்பாவிற்கும், ஏன் உங்களுக்கும் கூட மன நோய் இருக்கு.
நா சொன்ன அதீத அன்பு இது தான். இந்த அன்போடு இறைவனை பார்பவர்களுக்கு அவர்கள் பார்க்கும் பார்வையாக அவர் இருக்கிறார்.

Eswari said...

டக்ளஸ்... said...
nice ur logic.
But நாங்க உங்களை கிறுக்கன் சொல்லாததை போல நீங்களும் இருந்தால் இந்த வாதம் தேவை இல்லாது தான்.

Eswari said...

//என்னோடு நாத்திகன் ஆகாமல் இருக்க உங்கள் இஷ்ட தெவத்தை வேண்டி கொள்ளுங்கள்!//
எப்படி உங்க மனைவியும், தாயும் உண்மையானவர்கள் என்று நம்புகிறீர்களோ அது போல தான் நாங்களும் இறைவனை நம்புகிறோம்.
இப்பவும் நா மாறுவேன் ன்னு நீங்க நெனைச்ச அது உங்க மனைவி, தாயிடம் கொண்ட நம்பிக்கை பொறுத்தது

வால்பையன் said...

//அதீத அன்போடு தான் உங்க அம்மா உங்களுக்கு பால் கொடுத்தாள். அதீத அன்போடு தான் உங்க அப்பாவும் உங்களை வளர்த்தார். அதீத அன்போடு தான் நீங்களும், உங்க மனைவியும் இருப்பீர்கள்.இதெல்லாம் மன நோயனா உங்க அம்மாவுக்கும், உங்க அப்பாவிற்கும், ஏன் உங்களுக்கும் கூட மன நோய் இருக்கு.
நா சொன்ன அதீத அன்பு இது தான். இந்த அன்போடு இறைவனை பார்பவர்களுக்கு அவர்கள் பார்க்கும் பார்வையாக அவர் இருக்கிறார்.//


தன் உயிர் பாதுகாப்பாக இருக்கும் வரை நம்மீது அன்பு மாறாமல் இருக்கும்! தத்துவரீதியாக பார்க்கும் போது தாய்பாசம் தூய்மையானது, காதல் தெய்வீகமானது எனலாம்!

அதையே உளவியலாக பார்க்கும் போது அனைத்திலும் ஒரு சுயநலம் அல்லது மறைப்பொருள் உள்ளது!

நான் சொல்வது உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம் ஆனால் துரதர்ஷ்டவிதமாக இது தான் உண்மையாக இருக்கிறது!

Raju said...

\\Eswari said...
டக்ளஸ்... said...
nice ur logic.
But நாங்க உங்களை கிறுக்கன் சொல்லாததை போல நீங்களும் இருந்தால் இந்த வாதம் தேவை இல்லாது தான்.\\

ஈஸ்வரி, நீங்க சொல்றது எனக்கு சத்தியமா புரியல.
கொஞ்சம் புரியற மாதிரி சொன்னா நல்லாருக்கும்.

Iyappan Krishnan said...

//Anbu said...

Jeeves said...


\\\\உதாரணத்துக்கு பத்து பேர் சேர்ந்து ஒருவனை கொலையாளி என்கிறார்கள். ஆனால் அவன் உண்மையில் கொலையே செய்யவில்லை. அந்த உண்மை அவனுக்கு மட்டுமே தெரியும் என்ற போதில் பத்து பேர் சொல்வது மட்டுமே எடுபடும். உண்மை அறிந்தவனின் வார்த்தை அல்ல :) அதைப் போலத்தான்.\\\


இது எந்த ஊரிலங்க...

இப்படி நடக்குது...அப்புறம் போலிஸ்.,,,கோர்ட் எல்லாம் எதுக்குங்க..

விசாரணை எதுக்கு..
//


அன்பு விசித்திரமான கேள்வி உங்களோடது. இந்தியாலன்னு இல்லைங்க, உலகின் எந்த மூலைக்குச் சென்றாலுமே இது தான் பொதுவிதி. பத்து பேர் சாட்சியம் சொல்றாங்க இவன் கொலை செய்தான் அப்படின்னு. குற்றம் சாட்டப் பட்டவன் இல்லைன்னு மறுக்கிறான். நீங்க சொல்ற சட்டம், போலீஸ், நீதித்துறை விசாரணை எல்லாம் எந்த ஊர்லங்க நிரபராதின்னு குற்றம் சாட்டப் பட்டவனை விடுதலை செஞ்சிருக்கு ? சாட்சியங்களும் சந்தர்பங்களையும் வைத்து தான் நீதி. நீதித்துறைக்கு உண்மையும் விட சாட்சியங்கள் முக்கியம். இல்ல.. நீங்க தப்பா சொல்றீங்கன்னு நீங்க சொல்ல வந்தீங்கன்னா... ஒரே ஒரு உதாரணம் சொல்லுங்க உலகத்தின் எந்த மூலையிலாவது குற்றம் சாட்டப்பட்டவனின் வாக்குமூலத்தை மட்டுமே வைத்து அவன் நிரபராதி அப்படின்னு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கான்னு!


More ever - this discussion is for pre-decided mind set of ppl. either side will keep repeating the same thing again and again and there wont be any end. Good luck guys :)

வால்பையன் said...

//எப்படி உங்க மனைவியும், தாயும் உண்மையானவர்கள் என்று நம்புகிறீர்களோ அது போல தான் நாங்களும் இறைவனை நம்புகிறோம்.
இப்பவும் நா மாறுவேன் ன்னு நீங்க நெனைச்ச அது உங்க மனைவி, தாயிடம் கொண்ட நம்பிக்கை பொறுத்தது//

ஒழுக்கம் என்பது அவரவர் வாழ்க்கையை பொறுத்தது! என் மனைவியோ, அம்மாவோ ஒழுக்கமாக இருக்க வேண்டுமென நான் எப்படி கட்டாயப்படுத்த முடியும்! ஆனால் நான் எவ்வாறு எனது தனிமனித ஒழுக்கத்தை பேணுகிறேன் என்பதே என்னை பொறுத்தது!

ரெண்டு பொண்டாட்டி வைத்து கொள்ளும் கடவுளுக்கு முன் மனிதர்கள் பெரிதாக ஒழுக்கம் கெட்டவர்களாக ஆனார்கள் என்று எனக்கு தோன்றவில்லை.

உங்கள் வாதம் எனக்கு பிடித்திருக்கிறது தொடருங்கள்!

நண்பர்கள் ”மேற்கொண்ட” வாக்கியத்திற்கு சூடாகாமல் பொறுமையாக உங்கள் உங்க விவாதங்களை வைக்க வேண்டி கேட்டு கொள்கிறேன்!

Raju said...

\\அதீத அன்போடு தான் உங்க அம்மா உங்களுக்கு பால் கொடுத்தாள். அதீத அன்போடு தான் உங்க அப்பாவும் உங்களை வளர்த்தார். அதீத அன்போடு தான் நீங்களும், உங்க மனைவியும் இருப்பீர்கள்.இதெல்லாம் மன நோயனா உங்க அம்மாவுக்கும், உங்க அப்பாவிற்கும், ஏன் உங்களுக்கும் கூட மன நோய் இருக்கு.
நா சொன்ன அதீத அன்பு இது தான். இந்த அன்போடு இறைவனை பார்பவர்களுக்கு அவர்கள் பார்க்கும் பார்வையாக அவர் இருக்கிறார்.\\

"அப்போ அதீத அன்பும் அதீத வெறுப்பும் ஆபத்தானதுதான்". அதனாலதான் சாடிஸ்ட்களும் சைக்க்கோக்களும் உலகத்தில் உள்ளனர் என்பதை மறுக்கப் போகிறீர்களா ஈஸ்வரி..?

வால்பையன் said...

//இப்பவும் நா மாறுவேன் ன்னு நீங்க நெனைச்ச அது உங்க மனைவி, தாயிடம் கொண்ட நம்பிக்கை பொறுத்தது //

மதம் மாறியவர்களின் உண்மைதன்மையை இதே நம்பிக்கை அடிப்படையில் பார்க்கலாமா? அல்லது கடவுள் யாராக இருந்தால் என்ன அவன் ஆத்திகவாதியாக உங்கள் பக்கம் இருக்கிறார் என எடுத்து கொள்வீர்களா?

நாஞ்சில் நாதம் said...

அப்படிபோடு அருவாள :))

gulf-tamilan said...

உங்களின் நேர்மறை சிந்தனை எனக்கு பிடித்திருக்கிறது!
என்னோடு நாத்திகன் ஆகாமல் இருக்க உங்கள் இஷ்ட தெவத்தை வேண்டி கொள்ளுங்கள்!

:))) வால் கலக்கறே !!!

Anbu said...

\\\Jeeves said...

//Anbu said...

Jeeves said...


\\\\உதாரணத்துக்கு பத்து பேர் சேர்ந்து ஒருவனை கொலையாளி என்கிறார்கள். ஆனால் அவன் உண்மையில் கொலையே செய்யவில்லை. அந்த உண்மை அவனுக்கு மட்டுமே தெரியும் என்ற போதில் பத்து பேர் சொல்வது மட்டுமே எடுபடும். உண்மை அறிந்தவனின் வார்த்தை அல்ல :) அதைப் போலத்தான்.\\\


இது எந்த ஊரிலங்க...

இப்படி நடக்குது...அப்புறம் போலிஸ்.,,,கோர்ட் எல்லாம் எதுக்குங்க..

விசாரணை எதுக்கு..
//


அன்பு விசித்திரமான கேள்வி உங்களோடது. இந்தியாலன்னு இல்லைங்க, உலகின் எந்த மூலைக்குச் சென்றாலுமே இது தான் பொதுவிதி. பத்து பேர் சாட்சியம் சொல்றாங்க இவன் கொலை செய்தான் அப்படின்னு. குற்றம் சாட்டப் பட்டவன் இல்லைன்னு மறுக்கிறான். நீங்க சொல்ற சட்டம், போலீஸ், நீதித்துறை விசாரணை எல்லாம் எந்த ஊர்லங்க நிரபராதின்னு குற்றம் சாட்டப் பட்டவனை விடுதலை செஞ்சிருக்கு ? சாட்சியங்களும் சந்தர்பங்களையும் வைத்து தான் நீதி. நீதித்துறைக்கு உண்மையும் விட சாட்சியங்கள் முக்கியம். இல்ல.. நீங்க தப்பா சொல்றீங்கன்னு நீங்க சொல்ல வந்தீங்கன்னா... ஒரே ஒரு உதாரணம் சொல்லுங்க உலகத்தின் எந்த மூலையிலாவது குற்றம் சாட்டப்பட்டவனின் வாக்குமூலத்தை மட்டுமே வைத்து அவன் நிரபராதி அப்படின்னு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கான்னு!\\\\

அண்ணா...

நீங்க தமிழ் சினிமா அதிகமா பார்ப்பீங்க என்று நினைக்கிறேன்...

அதில் தான்.

கணம் நீதிபதி அவர்களே... என்று காமெடி பண்ணுவார்கள்..

நீங்களுமா..

Iyappan Krishnan said...

//அண்ணா...

நீங்க தமிழ் சினிமா அதிகமா பார்ப்பீங்க என்று நினைக்கிறேன்...

அதில் தான்.

கணம் நீதிபதி அவர்களே... என்று காமெடி பண்ணுவார்கள்..

நீங்களுமா..//


அன்புண்ணா...

அப்படிங்களா... அப்ப உலகத்துல எல்லா இடத்திலையும் குற்றம் சாட்டப்படுவரோட வாக்குமூலத்தின் படி தான் தீர்ப்பு வழங்குறாய்ங்களா... அடடா... இது எனக்கு நியூஸ் ...

கிருஷ்ண மூர்த்தி S said...

கோவியார்சொன்னது
/இருவருமே தங்களின் முடிவே சரி என்று விவாதிப்பார்கள்,
//

இது பற்றி ஒரு சிறுகதை
எழுதி இருக்கிறேன்//

சிறுகதைதான் எழுத முடியும்.சிறுகதை எழுதக் கொஞ்சம் கற்பனை இருந்தாலே போதுமே!

கிருஷ்ண மூர்த்தி S said...

கோவியார் கேட்டது:
/சிந்திக்கத் தெரிந்தவர்களிம் மதம்/கடவுள் ஏன் பிற மதத்தினரால் கேவலப்படுகிறது ?

சிந்தித்து பதில் சொல்லுங்க/
எப்படிக் கறுப்புச் சட்டை போட்டதாலேயே ஒருவர் பகுத்தறிவாளர் ஆகிவிட்டார் என்று நம்ப வைக்க முடிகிறதோ, அதே போலத்தான்! சிந்திக்கிறவர்கள் எல்லாம், உண்மை என்ன என்பதைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற வேட்கையோடு இருந்தார்களா என்ன?

மதம் கிடக்கட்டும், மனிதர்களே தங்களுக்குப் பிடித்தது தான் சரி, பிடிக்காதது, புரியாதது எல்லாம் கேவலப் படுத்தப் படவேண்டியவையே என்றிருக்கும் போது, ஒரு குழுவாக இருக்கும் மதங்களிடம் அதே குறை தெரிவதில் வியப்பு என்ன இருக்கிறது?

மதங்கள், அவற்றை உருவாக்கியவர்கள் கண்டு சொன்னதை நம்புகிறவர்களால் உருவானவை; அந்த நம்பிக்கைக்கு அப்பால் ஒன்றுமே இல்லை என்று பிடிவாதம், வன்மம் கொள்ளும்போது தான் இத்தகைய நிலை உண்டாகிறது.

ஆன்மிகம் என்பது மதங்களைக் கடந்து போவது! பொது உண்மையைக் காண முயல்வது. மதத்தையும், ஆன்மீகத்தையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்ள வேண்டாம்!

Raju said...

\\அப்படிங்களா... அப்ப உலகத்துல எல்லா இடத்திலையும் குற்றம் சாட்டப்படுவரோட வாக்குமூலத்தின் படி தான் தீர்ப்பு வழங்குறாய்ங்களா... அடடா... இது எனக்கு நியூஸ் ...\\

அன்பு அப்பிடி சொல்லவில்லை ஜீவ்ஸ்.
"குற்றம் சாட்டப்பட்டவனோட வாக்குமூலமும் ஒரு அங்கமாக, அனைத்து நாடுகளிலும் அனைத்து நீதிபதிகளாலும் ஏற்கப்படும்" என்று ஒத்துக் கொள்வீர்களா..?
அவனுக்கும் பேச‌வாய்ப்பு தரப்படும் என்பதுதான் உண்மை. அதுவும் கருத்தில் கொள்ளப்படும். சில நேரங்களில் கொல்லவும் படலாம்.
:)

Anbu said...

\\\டக்ளஸ்... said...

\\அப்படிங்களா... அப்ப உலகத்துல எல்லா இடத்திலையும் குற்றம் சாட்டப்படுவரோட வாக்குமூலத்தின் படி தான் தீர்ப்பு வழங்குறாய்ங்களா... அடடா... இது எனக்கு நியூஸ் ...\\

அன்பு அப்பிடி சொல்லவில்லை ஜீவ்ஸ்.
"குற்றம் சாட்டப்பட்டவனோட வாக்குமூலமும் ஒரு அங்கமாக, அனைத்து நாடுகளிலும் அனைத்து நீதிபதிகளாலும் ஏற்கப்படும்" என்று ஒத்துக் கொள்வீர்களா..?
அவனுக்கும் பேச‌வாய்ப்பு தரப்படும் என்பதுதான் உண்மை. அதுவும் கருத்தில் கொள்ளப்படும். சில நேரங்களில் கொல்லவும் படலாம்.
:)\\\\


Repeat....

Iyappan Krishnan said...

//
Blogger டக்ளஸ்... said...

\\அப்படிங்களா... அப்ப உலகத்துல எல்லா இடத்திலையும் குற்றம் சாட்டப்படுவரோட வாக்குமூலத்தின் படி தான் தீர்ப்பு வழங்குறாய்ங்களா... அடடா... இது எனக்கு நியூஸ் ...\\

அன்பு அப்பிடி சொல்லவில்லை ஜீவ்ஸ்.
"குற்றம் சாட்டப்பட்டவனோட வாக்குமூலமும் ஒரு அங்கமாக, அனைத்து நாடுகளிலும் அனைத்து நீதிபதிகளாலும் ஏற்கப்படும்" என்று ஒத்துக் கொள்வீர்களா..?
அவனுக்கும் பேச‌வாய்ப்பு தரப்படும் என்பதுதான் உண்மை. அதுவும் கருத்தில் கொள்ளப்படும். சில நேரங்களில் கொல்லவும் படலாம்.
:)//


டக்ளஸ்.

அது புரியாமல் எழுதிடவில்லை நான். அதனால் தான் தெளிவாகவே குறிப்பிட்டு இருக்கிறேன். பத்து பேரின் சாட்சியத்தின் முன்பு குற்றம் சாட்டப் பட்டவரின் வாக்குமூலம் செல்லாது. அது பரிசீலனைக்கு உட்படுத்தப் படுமே தவிர அதை மட்டுமே ஆதாரமாகக் கொள்வதில்லை.

இதை மீறி எதாவது விதிவிலக்குகள் இருந்தால் சொல்லுங்கள் தெரிந்துக் கொள்கிறேன்.

:)

வால்பையன் said...

அன்பு!

ஒருவன் கொலை செய்திருக்காவிட்டாலும்
அவன் கொலை செய்திருக்க கூடிய சாத்தியகூறுக்ள் அதிகம் இருந்தால் அவனுக்கு தண்டனை கொடுத்து விடுவார்கள்!

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு. பின்னூட்டங்கள் சூப்பர். கமெண்ட் ஃபாலோ அப்புக்காக.

மங்களூர் சிவா said...

கடவுளை விடுங்க 'தேவதைகள்' நிறைய இருக்கிறார்கள் நான் நம்புகிறேன். மங்களூர்க்கு வாங்க நான் காமிக்கிறேன்
:)))))))))))

கிருஷ்ண மூர்த்தி S said...

/ஒருவன் கொலை செய்திருக்காவிட்டாலும்
அவன் கொலை செய்திருக்க கூடிய சாத்தியகூறுக்ள் அதிகம் இருந்தால் அவனுக்கு தண்டனை கொடுத்து விடுவார்கள்!/

அது அவுங்க அப்பு மந்திரியாகவோ, முந்திரியாகவோ இல்லாதப்ப தான்!

மத்தப்படி, சட்டப்படி, குற்றம் சாட்டப் பட்ட ஒருவருடைய வாக்குமூலம் என்பது மற்ற சாட்சியங்களைப் போல் ஒரு சாட்சியம் மட்டும் தான். குறுக்கு விசாரணைக்கு உட்பட்டது. பெரும்பாலான தருணங்களில், இந்த மாதிரி செய்ய குற்றவாளி தரப்பு வக்கீலே இதை அனுமதிப்பதில்லை. கதை இன்னும் கொஞ்சம் கந்தலாகி விடும் என்பதால்!

தினேஷ் said...

ஒழிக ... ஏண்ணே இப்படி புரியாதெல்லாம் பதிக்கிறீங்க..

கிருஷ்ண மூர்த்தி S said...

/அடுத்த பதிவிற்கு கேள்விகளை அடுக்கிய ஈஸ்வரிக்கு நன்றி!/

பாதி டோண்டுவாக இருந்து இப்போ முக்கால் டோண்டுவாகிக் கொண்டிருக்கிறீர்கள் போல!

அப்போ,அடுத்த தென்திருப்பேரை மகர நெடுங்குழைக் காதனுடைய இணைய பக்தர் ரெடியாயிட்டு வர்றார் போல!

வால்பையன் said...

//தென்திருப்பேரை மகர நெடுங்குழைக் காதனுடைய இணைய பக்தர் ரெடியாயிட்டு வர்றார் போல! //

பேர் ரொம்ப பெருசா இருக்கு!
எனக்கு சொல்ல வராது,
நமிதா கோவில் கட்டட்டும் அவுங்க பக்தராயிடுறேன்!

கிருஷ்ண மூர்த்தி S said...

இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிற, நாமே நம்மையறியாமல் பயன்படுத்திக் கொண்டிருக்கிற புள்ளி விவரமும் கூடக் கடவுள் மாதிரியே கண்ணாமூச்சி காட்டுவதைப் பார்த்திருக்கிறீர்களா?

புள்ளிவிவரமும் கூடக் கடவுள் மாதிரி! மணியாட்டிக் கற்பூரம் காட்டி இருக்குங்கிற மாதிரியும் காட்டலாம்! இல்லேன்னாக்கப் பகுத்தறிவுப் புள்ளிகளாகிக் கிளிப்பிள்ளை மாதிரி இல்லை இல்லைன்னு சொல்லிக் கிட்டே இருந்தாக்க, இல்லைன்னும் ஆக்கிப்புடலாம்!!

ஏறின விலைவாசி அப்படியே ஏறினபடிக்கே இருக்கும், ஆனாக்க நம்ம அரசாங்கம் வெளியிடுற புள்ளிவிவரம் பாத்தாக்க, பண வீக்கம் கொறஞ்சுகிட்டே இருக்கும், ஆனாக்க விலைவாசிப் புள்ளி கூடுற மாதிரிக் கூடி, அப்புறம் கொறயும்! அதே மாதிரி, தேர்தலில் ஜெயிச்சா ஒரு மாதிரி, தோத்துப்போனா வேறமாதிரிப் பேச ஒரே புள்ளிவிவரம் எப்படியெல்லாம் பயன்படும் என்பதில் நம்ம ஆளுங்க ரொம்பவே கில்லாடிங்கறது தெரிஞ்சது தானே!

வால்பையன் said...

அரசியல்வியாதிகளுக்கு மக்களை எப்போதும் முட்டாலாகவே வைத்து கொண்டிருப்பதில் பெரும்பங்கு உண்டு!

மதமும் கடவுளும் இரண்டாம் பட்சம் தான்!

கிருஷ்ண மூர்த்தி S said...

அப்படி வாங்க விஷயத்துக்கு!

அப்புறம் என்ன, முட்டாளாக ஆக்குவதில் எது முதலிடம் வகிக்கிறதோ, அதை விட்டு விட்டு, சிவனேன்னு இருப்பதை ஏன் வம்புக்கிழுக்க வேண்டும்?

அரசியல் வியாதியை வம்புக்கிழுத்தால் ஆட்டோ வரும்! தர்ம அடியும் விழும்!

சாமியை இழுத்தால், வந்தால் வரவு, தரிசனம்! இல்லைன்னாக்க, தர்ம அடி விழாது, ஒன்னும் ஆகாதுன்கிற தைரியம் அதுதானே:-)))

வால்பையன் said...

//முட்டாளாக ஆக்குவதில் எது முதலிடம் வகிக்கிறதோ, அதை விட்டு விட்டு, சிவனேன்னு இருப்பதை ஏன் வம்புக்கிழுக்க வேண்டும்?//

நானா விடுவேன்!

அரசியல் என்ற தலைப்பில் உள்ள லேபிளைப்பார்க்கவும்!

அதிகாரமைதிற்கெதிரான என் குரல் ஒலித்து கொண்டே தான் இருக்கும்!

பீர் | Peer said...

301 க்கு வாழ்த்து.....

பீர் | Peer said...

91 க்கு வாழ்த்து...

கிருஷ்ண மூர்த்தி S said...

அது என்ன 301, அப்புறம் 91?

90, 180 அப்படீன்னு தான் கட்டிங் கேள்விப்பட்டிருக்கேன்! இது என்ன புதுசு:-)

வால்பையன் said...

//அது என்ன 301, அப்புறம் 91?//

301 பாலோயர்ஸ்
91 பின்னூட்டம்!

பீர் | Peer said...

//Blogger வால்பையன் said...
... இதற்கு ஆதாரமாக எதாவது ஒரு புத்தகத்தின் எதாவது ஒரு பக்கம் எனக்கு காட்டப்படுமே!//

வால், நீங்க சொல்லியிருக்கிற ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ராம்கி மற்றும் சிந்து சமவெளி, யுவாங் சுவாங், அலெக்ஸாண்டருடன் வந்தவர்கள் பற்றியெல்லாம் எங்கெருந்து தெரிஞ்சுக்கிட்டீங்க? நெப்போலியனா சொல்லிக்கொடுத்தாரு?

ஐயா, இவங்க தனக்குத் தெரிஞ்சத ஆதாரத்தோட சொல்றாங்க. உங்கட்ட கேட்டா கூகில்ல தேடிப்பாக்க சொல்லுவீங்க அவ்வளவுதான்.

வரலாறு முக்கியம் வால்...

பீர் | Peer said...

பயம்;

கடவுளை நம்புகிறவர்களுக்கு மரணபயம் இல்லை. மரணத்திற்கு பிறகான பயம்.

நினைவிருக்கட்டும்.

கடவுள் மறுப்பாளர்களுக்கு என்ன பயம் என்று, நீங்க தான் சொல்லணும்.

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்பையன் said...

//அது என்ன 301, அப்புறம் 91?//

301 பாலோயர்ஸ்
91 பின்னூட்டம்!

வாழ்க! வளர்க! வால்தான்:-))

பீர் | Peer said...

//Anbu said...
... எல்லோரும் போய் கண்ணாடியை பாருங்கள் கடவுள் கண்டிப்பாக தோன்றுவார்...அவர் அவர் மனசாட்சி தாங்க கடவுள்..//

அன்பு அப்ப கடவுள் இருக்காருன்னு சொல்ற.. இல்லையா...

உன் பிரச்சனை யார் கடவுள் என்பது..அதைப்பற்றி நீ ஒரு இடுகை பதிவு செய். அங்கு விவாதிப்போம்.

வால் பிரச்சனை வேறு... இல்லையா வால்?

பீர் | Peer said...

//Blogger வால்பையன் said...

//இப்பவும் நா மாறுவேன் ன்னு நீங்க நெனைச்ச அது உங்க மனைவி, தாயிடம் கொண்ட நம்பிக்கை பொறுத்தது //

மதம் மாறியவர்களின் உண்மைதன்மையை இதே நம்பிக்கை அடிப்படையில் பார்க்கலாமா? //

கிட்டதட்ட அப்படித்தான். என் தாய் இவளில்லை என்ற உண்மை தெரிந்தபிறகு மாறுவது, வளர்ப்பு தாயைவிட்டு விட்டு.

பீர் | Peer said...

//Blogger டக்ளஸ்... said...
முழுவதும் ஒத்துப்போகிறேன்.
இங்கே அனைத்து கருத்துக்களோடும் நான் ஒத்துப்போவதால், எனக்கு இங்கு விவாதிக்க ஒன்றுமில்லை.
என் நிலையை பதிவாக்குகிறேன்.//


அனைத்து கருத்துக்களும் என்றால்?

விவாதிக்க ஒண்ணும் இல்லைன்னு சொல்லிபோட்டு ஏங்கண்ணா திரும்ப வந்தீங்க?

பீர் | Peer said...

சும்மா...100

பீர் | Peer said...

டயர்டு ஆகிடுச்சு...

யாரையுமே காணோம்,

ப்ரேக் ரூம் போறேன்.

ஜெட்லி... said...

//ஏன் இத்தனை கடவுள்கள் என்று உளவியல் ரீதியாக பார்த்தால், உயிரினங்களில் மனிதன் மட்டுமே என்னேரமும் உயிர் பயத்துடன் இருக்கிறான்//
சூப்பர் ஜி....

அப்பாவி முரு said...

இதைத்தானே எதிர் பார்த்தாய் நந்த குமாரா(வால்)?

வெற்றி-[க்]-கதிரவன் said...

// கடவுள் நம்பிக்கையை விட நீங்களே முக்கியம்!//

என்னனே கடவுள் இல்லன்னு சொல்லிடேல்... இப்படி ஒரு மேட்டர சொன்ன நீதான் கடவுள்... ஏன்னா இத சொல்லுற நானும் கடவுள்

அன்பே சிவம் !!!

***
விடை தெரியாத பல விஷயங்கள் இந்த புவியில் உள்ளது... அதற்க்கு விடை யாராலும் சொல்ல இயலாது.... (என்னன்னு கேக்கபடாது)

அதை எல்லாம் ஏதாவது ஒரு மதத்தோடு தொடர்பு படுத்துவதை ஏற்கவும் இயலாது... -:)

Unknown said...

ஆமா... நான் எங்கிருக்கேன் (பதிவு படிச்சு முடிஞ்சதும் என்னிடமிருந்து வந்த முதல் கேள்வி)

கோவி.கண்ணன் said...

ஸ்டார்ட் மியூஜிக் ...

//கிருஷ்ணமூர்த்தி said...

கோவியார்சொன்னது
/இருவருமே தங்களின் முடிவே சரி என்று விவாதிப்பார்கள்,
//

இது பற்றி ஒரு சிறுகதை
எழுதி இருக்கிறேன்//

சிறுகதைதான் எழுத முடியும்.சிறுகதை எழுதக் கொஞ்சம் கற்பனை இருந்தாலே போதுமே!

August 7, 2009 6:40 PM//

படிச்சுப் பார்த்துட்டு சொல்லி இருக்கலாம். பொதுவாக ஒன்றைப் பழிப்பது எளிது. !!!

//எப்படிக் கறுப்புச் சட்டை போட்டதாலேயே ஒருவர் பகுத்தறிவாளர் ஆகிவிட்டார் என்று நம்ப வைக்க முடிகிறதோ, அதே போலத்தான்! சிந்திக்கிறவர்கள் எல்லாம், உண்மை என்ன என்பதைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற வேட்கையோடு இருந்தார்களா என்ன?//

கருப்புச் சட்டைப் போட்டவர்களும் நாத்திகர்கள், மற்றபடி நாத்திகத்துக்கு அவங்க யாரும் உரிமை கொண்டாடவோ, நாங்கதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீலோக குரு என்று தனக்குத்தானே பட்டம் கொடுத்து கொள்வது இல்லை. உலகில் ஒவ்வொரு பகுதியிலும் மூட நம்பிக்கையாளர்களை எதிர்த்து நாத்திகன் தோன்றுவான். பிற மதத்தினருக்கு நீங்களும் நாத்திகரே !

//மதம் கிடக்கட்டும், மனிதர்களே தங்களுக்குப் பிடித்தது தான் சரி, பிடிக்காதது, புரியாதது எல்லாம் கேவலப் படுத்தப் படவேண்டியவையே என்றிருக்கும் போது, ஒரு குழுவாக இருக்கும் மதங்களிடம் அதே குறை தெரிவதில் வியப்பு என்ன இருக்கிறது?//

தனிமனிதனின் விருப்பு வெறுப்பு சமூகத்தை பாதிக்காது, ஆனால் மதம் என்ற பெயரில் இருக்கும் கட்டுப்பாடுகள் பெரும்பாலும் பெண்களை அடிமையாகவே நடத்துகின்றன. இன்றும் வைதீக சமயம் சார்ந்த கோவில்களில் பெண்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உண்டு. சாதிப் பிரிவினை, மனிதப் பிரிவினை மதத்தில் இருந்து தான் தொடங்குகிறது

//மதங்கள், அவற்றை உருவாக்கியவர்கள் கண்டு சொன்னதை நம்புகிறவர்களால் உருவானவை; அந்த நம்பிக்கைக்கு அப்பால் ஒன்றுமே இல்லை என்று பிடிவாதம், வன்மம் கொள்ளும்போது தான் இத்தகைய நிலை உண்டாகிறது.
//

அதுக்கு யார் பொறுப்பு நாத்திகனா ? இன்பேக்ட் அதைச் சுட்டிக் காட்டவே நாத்திகன் தான் தேவைப்படுகிறான், இல்லாவிட்டால் அவன் அவனுடையதை அவனே கழுவிக் கொள்ளுங்கள் என்பதாகத்தான் பிற மதத்தை ஒரு மதக்காரர்கள் குறை சொல்லும் போது சொல்லுவார்கள்

//ஆன்மிகம் என்பது மதங்களைக் கடந்து போவது! பொது உண்மையைக் காண முயல்வது. மதத்தையும், ஆன்மீகத்தையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்ள வேண்டாம்!//
இது காலம் காலமாக சொல்லிவரும் பொய், அப்படி ஒரு ஆன்மிக வாதிகள் எவருமே இருந்தது கிடையாது. விவேகநந்தராகட்டும், இராமகிருஷ்ணராகட்டும் எல்லோரும் மதம் சார்ந்தவர்களே, அவர்களிடம் மதவெறி இல்லாதிருந்திருக்கலாம், ஆனால் அவர்களை மதப் பாதுகாவலர்களாகத்தான் இந்து மதம் நினைத்துக் கொண்டு விவேகநந்தரை ஆர் எஸ் எஸில் பயன்படுத்துகிறார்கள்

நிகழ்காலத்தில்... said...

மந்திரன் பதிலில்...

மருந்தைக் கண்டுபிடிப்பவன் வாழ்க்கை முறை வேறு,
எவனோ கண்டுபிடித்ததை பிரிஸ்கிரிப்சன் எழுதுபவன் வாழ்க்கை முறை வேறு, அதனாலேயே குடித்து சாகிறான்,

இன்று சித்தன் என்று சொல்பவனை சித்தனாக நம்ப வேண்டியதே இல்லை.

கடவுள் நிலையைப் பார்த்தவர்கள் என்பதற்காக புக்கா சும்மா விடாது
உடலைப் பேணாவிட்டால்...

கடவுளை இன்னும் உருவமாகவோ, உயிராகவோ நினைத்துக் கொண்டிருப்பது முதலில் மாற வேண்டும். அது ஒரு இயற்கை விதி
(சத்தியமா தலைவிதி அல்ல)

பார்க்கும் உருவம், உயிர் அனைத்தையும் கடவுளாக பார்த்தால் அது வேண்டுமானால் போற்றத்தக்க மனநிலை

தருமி said...

//சரியான நேர்கோட்டில் விவாதிக்க சரியான ஆட்கள் கிடைத்தால் தானே எந்த கேள்விக்கும் எதாவது பதில் கிடைக்கும்.//

கிடச்சுதா?

பீர் | Peer said...

// தருமி said...
//சரியான நேர்கோட்டில் விவாதிக்க சரியான ஆட்கள் கிடைத்தால் தானே எந்த கேள்விக்கும் எதாவது பதில் கிடைக்கும்.//

கிடச்சுதா?//

சரியான நேர்கோட்டில் விவாதிக்க சரியான ஆட்கள் கிடைத்தால் தானே?

Admin said...

நாம் ஒரு மதத்தினைப் பற்றிப் பேசும்போது. அந்த மதத்தை பற்றி சற்றேனும் அறிந்துவிட்டு பேசுவது நல்லது. எடுத்த எடுப்பிலேயே அந்தமதத்தின் சமய, சம்பிரதாயங்களையும், அம மதத்தின் தொன்மையினையும் கொச்சைப் படுத்தும்படி பேசுவதும். அந்த மதத்தினை இழிவு படுத்தும் ஒரு செயலாகும்.

இந்து சமயத்தைப் பொறுத்தவரை. பல கடவுளர்கள். இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அவதாரமே. எதற்காக அவதாரங்கள் எடுக்கப்பட்டன. உலகத்திலே அட்டூழியங்களும், கொடுமைகளுக்கு இடம் பெறுகின்றபோது. மக்களை அல்லது அட்டூழியங்களிலே ஈடுபடுகின்றவரை நல்வளிப்படுத்துவதே இந்து மத கடவுளர்களின் அவதாரங்களின் நோக்கமாகும். இறைவன் என்பவன் ஒருவனே. அவனை பல அவதாரங்கலிலே காண்பது இந்து மதம்.

Admin said...

//இமயமலையிலேயே வாழ்பவனுக்கு கூட கடவுள் ஒருமுறை காட்சி தரவில்லையே!//


மனதை ஒரு நிலைப்படுத்துபவனுக்கு, இறைவனை நேசிப்பவனுக்கு கடவுள் காட்சி தருகிறார். அவன் கடவுளை கண்டேன் என்று சொல்கிறான். கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவன் என்ன செய்வான் அதனை மறுக்கிறான். பலர் கடவுளைக் கண்டதற்கு பல வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. நீங்கள் வரலாறுகள் புனைகதை என்று சொல்லலாம். ஒரு சில புனை கதைகள் இருக்கலாம். எல்லாவற்றையும் புனைகதை என்று சொல்ல முடியாது. இமய மலையில் இருப்பவனுக்குக்கூட இன்னும் இறைவன் காட்சி தரவில்லையே என்று எப்படி உங்களால் சொல்ல முடியும். இமய மலையில் மட்டுமல்ல. பல இடங்களிலே இறைவன் பலருக்கு காட்சி தந்து இருக்கிறார்.

Admin said...

//கடவுளை நேரில் பார்த்தகாக சொல்பவர்கள் ஒன்று போதையில் இருக்கிறார்கள் அல்லது மனச்சிதைவு நோயில் ஆட்பட்டவர்களாக இருப்பார்கள்...//


அப்போ இந்து சமயத்திலே கடவுளர்களை நேரடியாகக் கண்டதாகக் கூறப்படுகின்ற தேவார முதலிகளாக இருக்கின்ற திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்........ போன்றோர் போதையிலா அல்லது மனச்சிதைவு நோயிலா இருந்ததாக சொல்கின்ரீர்கள்.

Admin said...

//Anbu said...
\\\\Eswari said...

உள்ளத்தில் உள்ளானடி(டா) ,
அதை உணர வேண்டுமடி(டா)
உள்ளத்தில் உணர்ந்தாய் என்றால்
கோவில் உள்ளேயும் உணர்வாயடி(டா)\\\\\\

இதைத்தான நாங்களும் சொல்கிறோம்...

உள்ளத்திலே உணர்ந்துவிட்டால் கோவில் எதற்கு???

உங்க உள்ளத்தில் உணர்ந்துவீட்டீர்கள் என்றால்
கோவிலுக்கு ஏன் போறீங்க...

இல்லை

உங்க உள்ளம் மேல்
உங்களுக்கே சந்தேகமா...//


எண்கள் உள்ளமே கோவில், கடவுள் எங்கும் எதிலும் இருப்பவர். நாம் எங்கும் கடவுளைக்கான முடியும். நம் உள்ளத்திலும் காண முடியும். ஆனால் நமது மனமோ ஒரு குரங்கு. ஒரு நிலைப்படுத்துவது கடினமே. உள்ளத்திலே இறைவனைக்காண வேண்டும் என்றால் உள்ளத்தை ஒரு நிலைப் படுத்தி இறைவனை நம் உள்ளத்திலே நிலைப்படுத்த வேண்டும். நமது ஆசாபாசங்களை மறந்து மனதை ஒரு நிலைப்படுத்துவதேன்பது முடியாத காரியம். ஆலயங்களுக்குச் செல்கின்றபோது. எமது மனதினை ஒருநிலைப் படுத்த முடியும்.

நிகழ்காலத்தில்... said...

\\சந்ரு said...

//கடவுளை நேரில் பார்த்தகாக சொல்பவர்கள் ஒன்று போதையில் இருக்கிறார்கள் அல்லது மனச்சிதைவு நோயில் ஆட்பட்டவர்களாக இருப்பார்கள்...//


அப்போ இந்து சமயத்திலே கடவுளர்களை நேரடியாகக் கண்டதாகக் கூறப்படுகின்ற தேவார முதலிகளாக இருக்கின்ற திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்........ போன்றோர் போதையிலா அல்லது மனச்சிதைவு நோயிலா இருந்ததாக சொல்கின்ரீர்கள்.\\

ரோடில் போகிற பைத்தியகாரனுக்கு ’நாமெல்லாம்’ மனச் சிதைவு,மனப்பிறழ்வு அடைந்தவர்கள்.:))

வாலுவின் இக்கருத்து முக்கியமானது அல்ல

Admin said...

//வால்பையன் said...

ரெண்டு பொண்டாட்டி வைத்து கொள்ளும் கடவுளுக்கு முன் மனிதர்கள் பெரிதாக ஒழுக்கம் கெட்டவர்களாக ஆனார்கள் என்று எனக்கு தோன்றவில்லை.//


எதற்காக இரண்டு பொண்டாட்டி இந்துக் கடவுளர்களுக்கு வந்தது என்பதை ஆராய்ந்து விட்டு தொடரலாம் என்று நினைக்கிறேன். இந்துக்களைப் பொறுத்தவரை இந்துமத தத்துவங்களுக்கு உண்மையான காரணங்கள் இருக்கின்றன அதனை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். இந்து மத கடவுளர்களுக்கு இரண்டு பொண்டாட்டி வந்ததற்கு எதற்காக வந்தது என்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. அந்த வரலாறுகளை படிக்கவேண்டும்.

மேவி... said...

"சந்ரு said...
//வால்பையன் said...

ரெண்டு பொண்டாட்டி வைத்து கொள்ளும் கடவுளுக்கு முன் மனிதர்கள் பெரிதாக ஒழுக்கம் கெட்டவர்களாக ஆனார்கள் என்று எனக்கு தோன்றவில்லை.//


எதற்காக இரண்டு பொண்டாட்டி இந்துக் கடவுளர்களுக்கு வந்தது என்பதை ஆராய்ந்து விட்டு தொடரலாம் என்று நினைக்கிறேன். இந்துக்களைப் பொறுத்தவரை இந்துமத தத்துவங்களுக்கு உண்மையான காரணங்கள் இருக்கின்றன அதனை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். இந்து மத கடவுளர்களுக்கு இரண்டு பொண்டாட்டி வந்ததற்கு எதற்காக வந்தது என்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. அந்த வரலாறுகளை படிக்கவேண்டும்."

அப்படின்னா பஞ்சலி ஐந்து கொண்டதற்கு காரணங்கள் இருக்கு ..... அதே போல் இப்பொழுது பெண்கள் வைத்து கொண்டால் .... (விவாகரத்து செய்யாமல் ஐந்து பெரும் ஒன்றாக இருபது) சாஸ்திரம் சொல்லும் காரணங்கள் ஒத்து வருமா ... இன்றையே நிலையில்

மேவி... said...

"நிகழ்காலத்தில்... said...
\\சந்ரு said...

//கடவுளை நேரில் பார்த்தகாக சொல்பவர்கள் ஒன்று போதையில் இருக்கிறார்கள் அல்லது மனச்சிதைவு நோயில் ஆட்பட்டவர்களாக இருப்பார்கள்...//


அப்போ இந்து சமயத்திலே கடவுளர்களை நேரடியாகக் கண்டதாகக் கூறப்படுகின்ற தேவார முதலிகளாக இருக்கின்ற திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்........ போன்றோர் போதையிலா அல்லது மனச்சிதைவு நோயிலா இருந்ததாக சொல்கின்ரீர்கள்.\\

ரோடில் போகிற பைத்தியகாரனுக்கு ’நாமெல்லாம்’ மனச் சிதைவு,மனப்பிறழ்வு அடைந்தவர்கள்.:))

வாலுவின் இக்கருத்து முக்கியமானது அல்ல"


யாருக்கு முக்கியமானது இல்லை என்று சொல்லுரிங்க ???

மேவி... said...

"சந்ரு said...
//இமயமலையிலேயே வாழ்பவனுக்கு கூட கடவுள் ஒருமுறை காட்சி தரவில்லையே!//


மனதை ஒரு நிலைப்படுத்துபவனுக்கு, இறைவனை நேசிப்பவனுக்கு கடவுள் காட்சி தருகிறார். அவன் கடவுளை கண்டேன் என்று சொல்கிறான். கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவன் என்ன செய்வான் அதனை மறுக்கிறான். பலர் கடவுளைக் கண்டதற்கு பல வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. நீங்கள் வரலாறுகள் புனைகதை என்று சொல்லலாம். ஒரு சில புனை கதைகள் இருக்கலாம். எல்லாவற்றையும் புனைகதை என்று சொல்ல முடியாது. இமய மலையில் இருப்பவனுக்குக்கூட இன்னும் இறைவன் காட்சி தரவில்லையே என்று எப்படி உங்களால் சொல்ல முடியும். இமய மலையில் மட்டுமல்ல. பல இடங்களிலே இறைவன் பலருக்கு காட்சி தந்து இருக்கிறார்."


அப்படியா ..... கடவுள் என்ன காட்சி தந்தார் .... காலை காட்சியா ????

நீங்கள் சொல்லும் "கடவுள் காட்சி" சம்பவங்களை நானும் படித்து இருக்கிறேன்.... அது எல்லாம் கனவில் நடந்த மாதிரி தான் எல்லோரும் சொல்லி இருக்காங்க .....

அப்படின்னா அவர்களை தவிர மற்றவர்கள் எல்லோரும் பக்தி இல்லாமல் சாமி வணங்குரங்க ன்னு சொல்லுரிங்கள ........

அப்படி விசுவாசிகளுக்கு மட்டும் காட்சி தந்தால் அவர் கடவுள் இல்லை .... ஒரு சராசரி அரசியல்வாதியே

மேவி... said...

கடவுள் இருக்கிறார் ...... ஆனா இல்லை

ஹீ ஹீ ஹீ

மேவி... said...

நேத்து கடவுள் எனக்கு காட்சி தந்தருங்க .....

இப்படி நான் சொன்னால் யாரவது நம்புவிங்கள ?????


பிரபல சாமியார் சொன்னால் மட்டுமே இது மாதிரியான ஸ்டண்ட் எல்லாம் எடுபடும்

கிருஷ்ண மூர்த்தி S said...

/கோவி.கண்ணன் said...

ஸ்டார்ட் மியூஜிக் .../

பிரச்சினையே நீங்கள் போடுவதுதான், போடுவது மட்டும் தான் மியூஜிக்னு நீங்களாகவே நெனச்சுக்கிறதுதான்!

"அதெப்படிப் படிக்காமலேயே...." கோவியானந்தா மாதிரி எனக்கு வள்ளலாரும் பெரியாரும் ஒன்று தான் என்று சொல்கிறவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்!

படித்ததனால் தான், இந்த மாதிரிச் சொல்பவர்கள் வள்ளலாரையும் படித்ததில்லை, பெரியாரையும் படித்ததில்லை என்று சொல்கிறேன்!

/தனிமனிதனின் விருப்பு வெறுப்பு சமூகத்தை பாதிக்காது/
இது என்ன புதுத் தத்துவமா?

/இது காலம் காலமாக சொல்லிவரும் பொய், அப்படி ஒரு ஆன்மிக வாதிகள் எவருமே இருந்தது கிடையாது. /

இது ஒன்றே நீங்கள் வள்ளலாரைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது ஒன்றுமே இல்லை என்பதைக் காட்டுகிறது.

ஆன்மீகவாதிகள் உங்களுடைய பதிவில் பின்னூட்டம் போட வருகிறவர்களா என்ன?
நீங்கள் தான் தேடிப்போக வேண்டும்.

/அவர்களை மதப் பாதுகாவலர்களாகத்தான் இந்து மதம் நினைத்துக் கொண்டு விவேகநந்தரை ஆர் எஸ் எஸில் பயன்படுத்துகிறார்கள்/

ஆர் எஸ் எஸ் இந்துமதத்தின் ஒட்டுமொத்தமான குரல் என்று உங்களுக்கு யார் சொன்னது? இந்து மதம் என்ன நினைக்கிறது என்பதை உள்ளபடிக்கே தெரிந்து தான் பேசுகிறீர்களா அல்லது எவனோ எழுதி வைத்ததை எல்லாம் ஆதாரமாக வைத்துப் பேசுகிறீர்களா?

கோவிக்கண்ணன், வலதுசாரி அதிமந்தத்தனம் இடதுசாரி அதிதீவீர வாதத்திற்குத் தாய் என்பார் லெனின். இருந்த இடம் தெரியாமல், வடக்கே எங்கேயோ கொஞ்சம் ஒரு ஓரத்தில் இருந்த ஆர் எஸ் எஸ் இன்றைக்கு இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்குக் காரணங்கள் கண் முன்னாலேயே இருக்கின்றன. உங்களுக்குப் பார்க்கத் தெரியவில்லை என்பதற்காக ஒட்டு மொத்தமாக, ஆர் எஸ் எஸ் முத்திரை குத்துவது, உங்களுக்கு அதைப் பற்றியும் கூட சரியாகத் தெரியவில்லை என்பது தான்!

Last word freak கடைசியாகச் சொல்கிற வாக்கியம் கூடத் தன்னுடையதாகத் தான் இருக்க வேண்டும் என்பதைத் தான் உங்களுடைய பதிவுகளில், இந்தப் பதிலிலும் கூடப் பார்க்கிறேன்.

ஒரு விஷயத்தை ஏற்பதற்கோ, நிராகரிப்பதற்கோ, உங்களுக்கு நியாயம் என்று படுகிற கருத்துக்களை எடுத்து வையுங்கள்! அதனோடு ஒத்துப் போக முடியாவிட்டாலும் கூட, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்பதை நாங்களும் ஒப்புக் கொள்வோம்!

கிருஷ்ண மூர்த்தி S said...

/ தருமி said...

//சரியான நேர்கோட்டில் விவாதிக்க சரியான ஆட்கள் கிடைத்தால் தானே எந்த கேள்விக்கும் எதாவது பதில் கிடைக்கும்.//

கிடச்சுதா?//

ஐயா வாங்க! வால்பையனை மையமா வச்சு ஒரே நேர்க்கோட்டில் நாமளும் கொஞ்சம் கிடைக்குதான்னு பாக்கலாம்:-)

கிருஷ்ண மூர்த்தி S said...

கோவிக் கண்ணன் சொன்னது:
/கருப்புச் சட்டைப் போட்டவர்களும் நாத்திகர்கள், மற்றபடி நாத்திகத்துக்கு அவங்க யாரும் உரிமை கொண்டாடவோ, நாங்கதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீலோக குரு என்று தனக்குத்தானே பட்டம் கொடுத்து கொள்வது இல்லை/

உண்மையான்னு பெரியார் திடலில் போய்த் தான் கேட்கவேண்டும்!

Eswari said...

இங்கு பேசும் அனைவரிடமும் ஓன்று கேட்கிறேன்.
உங்க எல்லாருக்கும் இனிப்பு, உப்பு, காரம், கசப்பு சுவைகள் எல்லாம் நல்லா தெரியும்,
அது எப்படி இருக்கும் ன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.......

Eswari said...

டக்ளஸ்... said...

//"அப்போ அதீத அன்பும் அதீத வெறுப்பும் ஆபத்தானதுதான்". அதனாலதான் சாடிஸ்ட்களும் சைக்க்கோக்களும் உலகத்தில் உள்ளனர் என்பதை மறுக்கப் போகிறீர்களா ஈஸ்வரி..?//

என் கேள்வி எல்லாம் அதீத அன்போடு பால் குடுக்கும் தாமார்கள் எல்லாம் சாடிச்ட்களா அல்லது சைக்கோக்களா?
இறைவனை தாயாக, தந்தையாக பார்பவர்கள் நாங்கள். எங்களை சாடிஸ்ட், சைக்க்கோபார்த்தால் மனநிலை பாதிப்பு எங்களுக்கு இல்லை உங்களுக்கு தான்

தருமி said...

//கடவுளை நேரில் பார்த்தகாக சொல்வர்கள் ஒன்று போதையில் இருக்கிறார்கள் அல்லது மனச்சிதைவு நோயில் ஆட்பட்டவர்களாக இருப்பார்கள், சந்தேகமிருந்தால் மனநல மருத்துவர்களை கேட்டுப்பாருங்கள்//

கேட்டுப் பார்த்தேன் வால்ஸ். அவங்க சொன்னதாக ---

மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் "டெம்பரல் லோப்' என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான "ஆன்மீக அனுபவங்கள்' ஏற்படுகின்றன'' என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் பெர்சிங்கர்.//

Raju said...

\\இறைவனை தாயாக, தந்தையாக பார்பவர்கள் நாங்கள்.\\

இதை விளக்க முடியுமா..?

Eswari said...

//என் மனைவியோ, அம்மாவோ ஒழுக்கமாக இருக்க வேண்டுமென நான் எப்படி கட்டாயப்படுத்த முடியும்! //

எப்படி இப்படி எல்லாம் உங்க மனதில் கேள்வி வருகிறது?

நான் உங்க தாய் மனைவி ஒழுக்கமாக இருக்க சொல்லி கட்டாயப்படுத்த வேண்டும் என்று சொல்லலை.
அவர்கள் உண்மையானவர்கள் (பத்தினி) என்று நீங்க நம்புகிறீர்களா இல்லையா? இது மட்டுமே என் கேள்வி?

Admin said...

//டம்பி மேவீ said...
"சந்ரு said...
//வால்பையன் said...

ரெண்டு பொண்டாட்டி வைத்து கொள்ளும் கடவுளுக்கு முன் மனிதர்கள் பெரிதாக ஒழுக்கம் கெட்டவர்களாக ஆனார்கள் என்று எனக்கு தோன்றவில்லை.//


எதற்காக இரண்டு பொண்டாட்டி இந்துக் கடவுளர்களுக்கு வந்தது என்பதை ஆராய்ந்து விட்டு தொடரலாம் என்று நினைக்கிறேன். இந்துக்களைப் பொறுத்தவரை இந்துமத தத்துவங்களுக்கு உண்மையான காரணங்கள் இருக்கின்றன அதனை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். இந்து மத கடவுளர்களுக்கு இரண்டு பொண்டாட்டி வந்ததற்கு எதற்காக வந்தது என்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. அந்த வரலாறுகளை படிக்கவேண்டும்."

அப்படின்னா பஞ்சலி ஐந்து கொண்டதற்கு காரணங்கள் இருக்கு ..... அதே போல் இப்பொழுது பெண்கள் வைத்து கொண்டால் .... (விவாகரத்து செய்யாமல் ஐந்து பெரும் ஒன்றாக இருபது) சாஸ்திரம் சொல்லும் காரணங்கள் ஒத்து வருமா ... இன்றையே நிலையில்//


அன்று அவர் ஐந்து கொண்டதற்கு காரணங்கள் இருக்கிறது. எதற்காக என்ன சூழ்நிலையில் ஐந்து கொண்டார் என்பதனையும். இன்று எதற்காக ஐந்து கணவனை எடுக்கின்றார்கள் என்பதனையும் சிந்தித்துப் பாருங்கள் அங்கெ அவர் ஐந்து கொண்டதற்கும். இங்கே இவர்கள் ஐந்து பேரை வைத்துக்கொள்வதட்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறது. சூழ்நிலையினை விளங்கவேண்டும்.

என்னாலும் கடவுள் இல்லை என்று முற்று முழுதாக வாதிட முடியும். உண்மை நிலையினையும் யதார்த்தத்தினையும் உணர்ந்து கொள்ளவேண்டும். எதோ சொல்லவேண்டும் என்பதற்காக எதனையும் பேசுவது நல்ல விடயமல்ல. இந்து சமய வரலாறுகளை ஆழமாக படியுங்கள் ஏன், எதற்கு என்று உங்களுக்கு சரியான விளக்கம் கிடைக்கும்.

Eswari said...

டக்ளஸ்... said...
\\இறைவனை தாயாக, தந்தையாக பார்பவர்கள் நாங்கள்.

இதை விளக்க முடியுமா..?//

தாய் தந்தையரிடம் எதை நாம் பெறுகிறோமோ, எதை எதிர்பார்க்கிறோமோ (பணம், பொருள் தவிர) அதை இறைவனிடம் பார்க்கிறோம், பெறுகிறோம்.
தாய் தந்தையர் நம் மீது எவ்வளவு பாசம், அன்பு, கண்டிப்பு வைத்துள்ளாரோ அதை இறைவன் எங்கள் மீது வைத்துள்ளதை உணர்கிறோம்.

இதையும் விளக்க வேண்டும் என்றால்
இந்த கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்க?
இனிப்பு, உப்பு, காரம், கசப்பு சுவைகள் எல்லாம் நல்லா தெரியும்,
அது எப்படி இருக்கும் ன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்....

Admin said...

டம்பி மேவீ said...
"சந்ரு said...
//இமயமலையிலேயே வாழ்பவனுக்கு கூட கடவுள் ஒருமுறை காட்சி தரவில்லையே!//


மனதை ஒரு நிலைப்படுத்துபவனுக்கு, இறைவனை நேசிப்பவனுக்கு கடவுள் காட்சி தருகிறார். அவன் கடவுளை கண்டேன் என்று சொல்கிறான். கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவன் என்ன செய்வான் அதனை மறுக்கிறான். பலர் கடவுளைக் கண்டதற்கு பல வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. நீங்கள் வரலாறுகள் புனைகதை என்று சொல்லலாம். ஒரு சில புனை கதைகள் இருக்கலாம். எல்லாவற்றையும் புனைகதை என்று சொல்ல முடியாது. இமய மலையில் இருப்பவனுக்குக்கூட இன்னும் இறைவன் காட்சி தரவில்லையே என்று எப்படி உங்களால் சொல்ல முடியும். இமய மலையில் மட்டுமல்ல. பல இடங்களிலே இறைவன் பலருக்கு காட்சி தந்து இருக்கிறார்."


அப்படியா ..... கடவுள் என்ன காட்சி தந்தார் .... காலை காட்சியா ????

நீங்கள் சொல்லும் "கடவுள் காட்சி" சம்பவங்களை நானும் படித்து இருக்கிறேன்.... அது எல்லாம் கனவில் நடந்த மாதிரி தான் எல்லோரும் சொல்லி இருக்காங்க .....

அப்படின்னா அவர்களை தவிர மற்றவர்கள் எல்லோரும் பக்தி இல்லாமல் சாமி வணங்குரங்க ன்னு சொல்லுரிங்கள ........

அப்படி விசுவாசிகளுக்கு மட்டும் காட்சி தந்தால் அவர் கடவுள் இல்லை .... ஒரு சராசரி அரசியல்வாதியே

கடவுள் இல்லை என்று சொல்பவனுக்கு அது கனவு மாதிரி இருக்கலாம். ஆனால் கடவுள் மீது நம்பிக்கை வைத்தவனுக்கு. அது நியக் காட்சியே. கடவுள் காலக் காட்சியா தந்தார் என்று கேட்கும் உங்களுக்கு விளக்கம் தருவது. தேவையற்ற விடயமே என்னத்தை பற்றி பேசுகிறோம் என்பது கூட தெரியாமல் இருக்கிரீர்கள் போலும்.


எனக்கு கடவுள் காட்சி தந்தார் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா. இல்லையே அது கடவுளுக்கும் எனக்கும்தான் தெரியும். அதேபோல்தான் பலருக்கு கடவுள் காட்சி தந்து இருக்கிறார். கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அதனை நம்ப மறுத்துவிட்டனர்.

கடவுள் எவர்மீதும் பாகுபாடு காட்டுபவறல்ல. அவர் அரசியல்வாதியும் இல்லை. கடவுள் எல்லோரையும் வாழ வைத்துக்கொண்டு இருக்கின்றார். உங்களையும் சேர்த்து.

கடவுள் எவரையும் கை விடுவதில்லை. அதற்காக எல்லோருக்கும் தரிசனம் தந்தாள் அவர் கடவுளல்ல. கடவுளுக்குரிய மதிப்பும், மரியாதையும் இல்லாமல் போய் விடும்.

இந்து சமயத்திலே கடவுளை அடைவதற்குரிய வழிகள் இருக்கின்றன அவற்றை முதலிலே அறிந்துவிட்டு தொடருங்கள்...

மேவி... said...

"சந்ரு said...

அன்று அவர் ஐந்து கொண்டதற்கு காரணங்கள் இருக்கிறது. எதற்காக என்ன சூழ்நிலையில் ஐந்து கொண்டார் என்பதனையும். இன்று எதற்காக ஐந்து கணவனை எடுக்கின்றார்கள் என்பதனையும் சிந்தித்துப் பாருங்கள் அங்கெ அவர் ஐந்து கொண்டதற்கும். இங்கே இவர்கள் ஐந்து பேரை வைத்துக்கொள்வதட்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறது. சூழ்நிலையினை விளங்கவேண்டும்.

என்னாலும் கடவுள் இல்லை என்று முற்று முழுதாக வாதிட முடியும். உண்மை நிலையினையும் யதார்த்தத்தினையும் உணர்ந்து கொள்ளவேண்டும். எதோ சொல்லவேண்டும் என்பதற்காக எதனையும் பேசுவது நல்ல விடயமல்ல. இந்து சமய வரலாறுகளை ஆழமாக படியுங்கள் ஏன், எதற்கு என்று உங்களுக்கு சரியான விளக்கம் கிடைக்கும்."


சார் ,

எந்த காரணத்தை கொண்டும் இரண்டு மனைவி என்ற நிலையை ஒற்று கொள்ள முடியாது... நியாய படுத்தவும் முடியாது.......

பஞ்சாலி ஐந்து கணவர் கொண்டதை மகாபாரததில்லையே ஏற்று கொள்ள படாத ஒரு விஷயமாக தான் இருந்துள்ளது. பிறகு கண்ணன் வந்து அதற்க்கான காரணத்தை சொன்ன பிறகு பாண்டவர்களின் அம்மா ஏற்று கொண்டதாக படித்து இருக்கிறேன்....


முருகன் வள்ளியை திருமணம் செய்து கொண்ட பொழுது தேவயானி ஏற்று கொள்ளவில்லை .....

இதே போல் ஸ்ரீனிவாசன் இன்னொரு திருமணம் செய்த பொழுது லஷ்மி ஏற்று கொள்ளவில்லை .....

அதனால் எந்த காலத்திலும் இரண்டாவது திருமணத்திற்கு நியாயம் இருந்தது இல்லை

Raju said...

\\தாய் தந்தையரிடம் எதை நாம் பெறுகிறோமோ, எதை எதிர்பார்க்கிறோமோ (பணம், பொருள் தவிர) அதை இறைவனிடம் பார்க்கிறோம், பெறுகிறோம்.\\

நீங்கள் பணம், பொருள் என குறிப்பிட்டதால் கேட்கின்றேன்.
இறைவனிடம் பணம், பொருள் கேட்காதவர்களை எனக்கு காட்ட முடியுமா..?
அப்படியே அவர்கள் பணம் பெற்றிருந்தால், அதை இறைவன் கொடுத்தது என்று சொல்வீர்களா..?
தருமி அய்யா பதிவுல படித்ததை இங்கே சொல்ல விரும்புகின்றேன்.
"மதம் ஒன்றும் பெற்ற தாய் இல்லை, அதை மாற்றாமலேயே வைத்திருக்க. வெறுமனே அது ஒரு கொள்கைதான்."
இது இறைவனுக்கும் பொருந்தும். பழனி முருகன் கோவில் இல்லையேல் நாகூர் தர்ஹா இரண்டும் இல்லையேல், வேளாங்கன்னி தேவாலயம். ஆனால் தாயை நான் அப்பிடி மாற்றிக் கொள்ள‌ முடியாதென நம்புவீர்களென நினைக்கின்றேன்.


நீங்கள் சுவைகளைப் பற்றி கேட்கும் போதே தெரிகின்றது. நீங்கள் மீண்டும் "பால் சுரப்பிகள்" மாதிரியான மேட்டருக்கு வருகின்றீர்களென..! நீங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வோரு புத்தகத்தையோ ஞானியையோ வரலாற்ற்றையோ மேற்கோள் காட்டினால், நாங்களும் சுவை சம்பந்தப்பட்ட அறிவியல் சார்ந்த புத்தகங்களையும், அறிவியல் அறிஞர்களின் கருத்துகளையும் மேற்கோள்களையும் காட்ட முடியும்தானே..!
:)

மேவி... said...

கடவுள் என்பது ஒருவரே .... அவரை அடைய நான் ஏன் ஒரு சமயத்தை மட்டும் பின் பற்ற வேண்டும் .....

சமயங்களை பின்பற்றாமல் .... நல்லது செய்து வாழ்ந்தவர் பலர்

S.A. நவாஸுதீன் said...

உங்களுடன் எனக்கு எந்த விரோதபோக்கும் கிடையாது, அடுத்தவன் கடவுளை மறந்து அவனுடன் நட்பு பாராட்டுவதை போல் எனது கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு என்னுடன் நட்பு பாராட்டலாம்! எனக்கு கடவுள் மற்றும் கடவுள் நம்பிக்கையை விட நீங்களே முக்கியம்!

இதுதான் தல ரொம்ப பிடிச்ச விஷயம் உங்ககிட்ட.

Eswari said...

நா எந்த matter கும் வரலை. உங்களுக்கு நன்கு தெரிந்த சுவைகள் எப்படி இருக்கும் என்று கேட்கிறேன்?
சரி சுவைகளை விடுங்கள், குழந்தையின் குரலும், புள்ளங்குலளின் இசையும் எப்படி இருக்கும் ன்னு சொல்லுங்க இல்லன்னா
ஒரு குருடன் கிட்டே சிவப்பு கலர் இப்படி இருக்கும் ன்னு சொல்லுவிங்கன்னு சொல்லுங்க?

இதை எல்லாம் விளக்க முடியாது. அதனால் இது எல்லாம் மாயை, பொய் என்றாகி விடுமா?

இறைவனும் அப்படி தான். உங்களால் உணர முடியாத விசயத்திற்கு மாயை, பொய் ன்னு சொல்வதும் முட்டாள் தனம் தான்.

Admin said...

//டம்பி மேவீ said...
சார் ,

எந்த காரணத்தை கொண்டும் இரண்டு மனைவி என்ற நிலையை ஒற்று கொள்ள முடியாது... நியாய படுத்தவும் முடியாது.......

பஞ்சாலி ஐந்து கணவர் கொண்டதை மகாபாரததில்லையே ஏற்று கொள்ள படாத ஒரு விஷயமாக தான் இருந்துள்ளது. பிறகு கண்ணன் வந்து அதற்க்கான காரணத்தை சொன்ன பிறகு பாண்டவர்களின் அம்மா ஏற்று கொண்டதாக படித்து இருக்கிறேன்....


முருகன் வள்ளியை திருமணம் செய்து கொண்ட பொழுது தேவயானி ஏற்று கொள்ளவில்லை .....

இதே போல் ஸ்ரீனிவாசன் இன்னொரு திருமணம் செய்த பொழுது லஷ்மி ஏற்று கொள்ளவில்லை .....

அதனால் எந்த காலத்திலும் இரண்டாவது திருமணத்திற்கு நியாயம் இருந்தது இல்லை//


இந்துக் கடவுளர்களைப் பொறுத்தவரை பல அவதாரங்கள் எடுத்து இருக்கின்றார்கள். ஒவ்வவொரு அவதாரங்களுக்கும் காரணங்கள் இருக்கின்றன. காரணங்களை சொல்வதென்றால் சொல்லிக்கொண்டே போகலாம். அதற்கு இந்த இடம் சரியானதல்ல. (விரைவில் இந்து சமய கோட்பாடுகள், தத்துவங்கள் தொடர்பாக ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்க இருக்கிறேன். அதிலே உங்களுக்கான விளக்கங்கள் வரும்.)

முருகன் இரு திருமணம் செய்ததுக்கும் காரணம் இருக்கிறது. வள்ளி தெய்வயானை யார் என்று தெரியுமா அவர்களை எதற்காக முருகன் திருமணம் செய்தார் என்பது தெரியுமா. எல்லாவற்றுக்கும் காரணம் இருக்கிறது. எல்லாம் அவதாரங்களே. முதலில் இவைகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

Admin said...

//டம்பி மேவீ said...
கடவுள் என்பது ஒருவரே .... அவரை அடைய நான் ஏன் ஒரு சமயத்தை மட்டும் பின் பற்ற வேண்டும் .....

சமயங்களை பின்பற்றாமல் .... நல்லது செய்து வாழ்ந்தவர் பலர்//


கடவுள் என்பது ஒருவர்தான். சமயம் இன்பது நல்வழிப் படுத்துகின்ற கோட்பாடுகளை. இறைவனை அடையக்கூடிய வழி வகைகளைச் சொல்கின்றன. நாம் ஒரு இடத்தை அடைய வேண்டுமாக இருந்தால் ஒரு பாதை வேண்டும். சரி பாதை இருந்தால் போதாது அந்த இடத்தை அடைவதற்குரிய வழிவகைகள் விளக்கங்கள் தேவைப்படுகின்றது. அதே போன்றுதான் சமயமும் நாம் இறைவனை அடைவதற்குரிய வழிவகைகளை சொல்கின்றது. எவரது உதவியும் தேவை இல்லை என்று தனித்து தனது இடத்தை சென்றடைந்தவனும் இல்லாமல் இல்லை. பல கஸ்ரங்களுக்கு முகம் கொடுத்தே அவனால் அடைய தனது இலக்கை அடைய முடிந்தது.

நான் சொல்கின்றேன் இவன் தனது இலக்கை அடைவதற்கு அவன் பட்ட கஸ்டத்தினாலேஎதான் கடவுள் கை கொடுத்து தனது இலக்கை அடைய வைத்து இருக்கிறார்.

மேவி... said...

" சந்ரு said...
முருகன் இரு திருமணம் செய்ததுக்கும் காரணம் இருக்கிறது. வள்ளி தெய்வயானை யார் என்று தெரியுமா அவர்களை எதற்காக முருகன் திருமணம் செய்தார் என்பது தெரியுமா. எல்லாவற்றுக்கும் காரணம் இருக்கிறது. எல்லாம் அவதாரங்களே. முதலில் இவைகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்."

தெரியும் சார்......

தேவயானியும், வள்ளியும் முன் பிறவியில் அக்க தங்கையாக பிறந்து , முருகனை திருமணம் செய்ய விரதம் மேற்கொண்டனர். சரியான முறையில் விரதம் இருந்தால் தேவயானி முதலாவதாக மனம் முடித்தாள் முருகனை, நிறைய இடற்படுகளுடன் வள்ளி விரதம் இருந்ததால் மனித பிறவி கொண்டு இரண்டாவதாக முருகனை மணம் முடிந்தாள்

மேவி... said...

புறநானூறு யில் கூட தலைவன் தலைவி என்று தான் உள்ளதே தவிர ..... தலைவர்கள் தலைவிகள் என்று இல்லை ....


இரண்டு மனைவி .... என்ற கோட்பாடு என்று மக்கள் ஏற்று கொண்டது இல்லை ...அது சமயங்களில் இருந்தால் கூட

மேவி... said...

"சந்ரு said...

(விரைவில் இந்து சமய கோட்பாடுகள், தத்துவங்கள் தொடர்பாக ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்க இருக்கிறேன். அதிலே உங்களுக்கான விளக்கங்கள் வரும்.)"

சந்தோசம் சார் .... அந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் ..... சிக்கிரம் ஆரம்பியுங்கள் ... ஆவலாய் உள்ளேன் அதை பார்க்க

மேவி... said...

"சந்ரு said...

கடவுள் என்பது ஒருவர்தான். சமயம் இன்பது நல்வழிப் படுத்துகின்ற கோட்பாடுகளை. இறைவனை அடையக்கூடிய வழி வகைகளைச் சொல்கின்றன. நாம் ஒரு இடத்தை அடைய வேண்டுமாக இருந்தால் ஒரு பாதை வேண்டும். சரி பாதை இருந்தால் போதாது அந்த இடத்தை அடைவதற்குரிய வழிவகைகள் விளக்கங்கள் தேவைப்படுகின்றது. அதே போன்றுதான் சமயமும் நாம் இறைவனை அடைவதற்குரிய வழிவகைகளை சொல்கின்றது. எவரது உதவியும் தேவை இல்லை என்று தனித்து தனது இடத்தை சென்றடைந்தவனும் இல்லாமல் இல்லை. பல கஸ்ரங்களுக்கு முகம் கொடுத்தே அவனால் அடைய தனது இலக்கை அடைய முடிந்தது.

நான் சொல்கின்றேன் இவன் தனது இலக்கை அடைவதற்கு அவன் பட்ட கஸ்டத்தினாலேஎதான் கடவுள் கை கொடுத்து தனது இலக்கை அடைய வைத்து இருக்கிறார்."


சமய தலைவர்கள் பலர் கடைசி வரைக்கும் கஷ்ட பட்டு தான் உள்ளனர். நான் படித்த வரைக்கும் இறைவனை அடைவது என்பது இறந்து போனால் தான் முடியும் என்று இருக்கிறது......

அப்பர் , இயேசு, இன்னும் பலரை சொல்லலாம். ஆனால் சற்று உன்றி பார்த்தால் இவார்கள் எல்லாரும் சமுதாய மறுமலர்ச்சிக்கு தான் படுபட்டர்களே தவிர இறைவனை அவர்களின் தனிப்பட்ட விஷயமாக தான் இருந்துள்ளது .....

உதாரணம் ; அன்னமையா , ராமானுஜர், புத்தர், இன்னும் பலர்

ramesh sadasivam said...

இந்த விவாதத்தில் என்னை கலந்து கொள்ள அழைத்த ஈஸ்வரிக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது காலம் காலமாக நடந்து வரும் விவாதம். காரணம், நாத்திகர்கள் அவர்கள் அறிவிற்கு அப்பார்ப்பட்டது எதுவுமே இல்லை என நினைக்கிறார்கள்.

நானும் நாத்திகனாக இருந்தவன் தான். ஆனால் கல்லூரியின் முதலாம் ஆண்டு படிக்கையில் இயற்கையை பற்றி அதிகமாக சிந்திக்க சிந்திக்க இயற்கை என்பது சுயேட்சையாக இயங்குகிறது என்பதும் அது கட்டுபடும் விதி மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல என்பதும் புரிந்தது. இயற்கையின் பின் ஒரு அதி புத்திசாலித்தனம் இருக்கிறது என்பது புரிந்தது.

ஒரு கைப்பேசியை கண்டுபிடிக்கவும் மேம்படுத்தவும் எத்தனை விஞ்ஞானிகள் தொடர்ந்து சிந்திக்கிறார்கள். அப்படி இருக்கையில் மனித உடலில் எத்தனை உறுப்புகள் இருக்கின்றன. ஒவ்வொன்றின் பின்னும் எவ்வளவு புத்திசாலித்தனம் இருக்கிறது? அந்த புத்திசாலித்தனத்துக்கு யார் சொந்தக்காரர் என்ற கேள்விகள் என்னுள் எழுந்தன. எனினும் அப்பொழுது நான் இறைவனை வணங்கத் துவங்கவில்லை.

பின் மன ஒருமைப்பாட்டிற்க்காக தியானம் செய்ய முயற்சித்தேன். அப்பொழுது என் கனவுகளை கூட நிறுத்த என்னால் முடிந்தது. அந்த தியானம் பதினேழு நாட்கள் தொடர்ந்தது. அப்பொழுது ஒரு நாள் கண்களை மூடி நெற்றிப் பொட்டின் மத்தியில் என் கவனத்தை வைத்திருந்தேன். அப்பொழுது என் நெற்றிப் பொட்டில் இருந்து ஓர் ஒளி தோன்றி என்னை ஆட்கொண்டது. நான் யார் என்பதோ என் பெயர் என்ன என்பதோ எதுவும் நினைவில்லை. அந்த ஒளி பொன் நிறத்தில் இருந்தது. சுகமாக இருந்தது. அந்த ஒளியினுள் நான் மூழ்கியிருந்தேன். அப்பொழுது ஒளியுனுள் இருந்து, ஒரு குரல் கேட்டது. "நான் உன் பாவங்களை மன்னித்து விட்டேன். உன்னை ஏற்றுக் கொள்கிறேன்" என்றது. நான், "நான் என்ன பாவம் செய்தேன். எதற்காக என்னை நீங்கள் மன்னிக்கிறீர்கள்?" என கேட்டேன். ஒரு கறுப்பு புகை என்னை சூழ்ந்தது. பின் முதலில் என் வீட்டருகில் செல்லும் ஒரு லாரியின் ஒலி எனக்கு கேட்டது. அதன் பிறகு என் உடல் நினைவுக்கு வந்தது. அதன் பிறகு, மற்ற எல்லா நினைவுகளும் திரும்ப வந்து விட்டன. அன்று தான் நான் இறைவன் என்றொருவன் இருப்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டேன்.

நெற்றிப் பொட்டில் இருந்து ஒளி தோன்றுமா எனப்தை நீங்கள் நம்ப மறுக்கலாம். பொய் என்றோ, கற்பனை என்றோ நீங்கள் சொல்ல நினைக்கலாம். ஆனால் இன்று வரை நாத்திகராகவே இருந்து வரும் ஒரு பிரபலத்துக்கும் இதே அனுபவம் கிடைத்திருக்கிறாது. அவர் கவிஞர் வைரமுத்து. இந்த அனுபவம் பற்றி அவர் "இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்" என்கிற புத்தகத்தில் எழுதியுள்ளார். படித்துப் பாருங்கள்.

அவர் நெற்றிப் பொட்டில் ஒளி தோன்றும் பொழுதே இளையராஜாவை கூப்பிட்டிருக்கிறார். அதனால் அந்த ஒளி அவரை ஆட்கொள்ளவில்லை. அந்த ஒளி அவரை ஆட்கொண்டிருந்தால் இன்று ஆன்மிகவாதியாகியிருப்பார்.

எனக்கு குரல் மட்டும் தான் கேட்டது. அந்த ஒளியில் இறைவனின் முகத்தை கண்டவர்கள் இருக்கிறார்கள். இன்றும் இருக்கிறார்கள்.

நாத்திகர்களிடம் இருக்கும் பிரச்சனை என்னவென்றால், அவர்கள் அணுகுமுறை தான். அவர்கள் தீர்மானங்களை சுமக்கிறார்கள். காலியான கோப்பையை தான் நிரப்ப முடியும். ஏற்கனேவே நிரம்பியுள்ள கோப்பையை யாராலும் நிரப்ப முடியாது.

இவர்கள் வாழ்ந்ததே முப்பதோ நாற்பதோ ஆண்டுகள் தான். அப்படியிருக்கையில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இயங்கிவரும் பிரபஞ்சத்தை முழுதும் அறிந்தது போல பேசுவது பேதமை தான்.
இப்பூமியையே முழுதும் பார்க்காதவர்கள் இப்பிரபஞ்சம் முழுதும் தேடியது போல இறைவனை காண இயலாது என்று சொல்வதை என்னவென்று சொல்வது?

இறைவனை உணர்ந்தவர்கள் எல்லாம் மன நிலை மருந்தகத்திலோ, போதைப் பழக்கத்தில் மூழ்கியோ தான் இருக்கிறார்கள் என்பது ஏற்கத்தக்கதல்ல. சத்குரு ஜக்கி வாசு தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர், புட்டபர்த்தி சாய் பாபா போன்ற வாழும் உதாரணங்கள் இருக்கிறார்கள்.

மேலும் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் ஆன்மிகவாதிகள் தான் அதிகம் சாதிக்கிறார்கள். உதாரணாம் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ரஜினிகாந்த், சச்சின்... இன்னும் எத்தனையோ....

அப்துல் கலாமுக்கு தெரியாத விஞ்ஞானமா? அவர் ஆன்மிகவாதியில்லையா?

Admin said...

//டம்பி மேவீ said...
புறநானூறு யில் கூட தலைவன் தலைவி என்று தான் உள்ளதே தவிர ..... தலைவர்கள் தலைவிகள் என்று இல்லை ....


இரண்டு மனைவி .... என்ற கோட்பாடு என்று மக்கள் ஏற்று கொண்டது இல்லை ...அது சமயங்களில் இருந்தால் கூட//


யார் சொன்னது சமயங்களில் கடவுளர்களின் இரண்டு திருமண அவதாரங்கள் இருப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று. சமயங்களிலே கடவுளர்களின் இரண்டு திருமணம் எதற்கு என்று அதன் தாத்பரியங்களையும். இரண்டு திருமணங்களின் அவதாரத்தின் நோக்கத்தையும் உணர்ந்த மக்கள் அதனை ஏற்றுக்கொண்டே இருக்கின்றார்கள். நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிரீர்கள். கோவில்களிலே திருவிழாக்கள், ஏனைய நிகழ்வுகளிலே கடவுளர்களுக்குரிய திருமணங்களை நினைவு கூறுகின்ற ( உதாரணமாக வள்ளி திருமண) பல நிகழ்வுகள் இடம் பெறுகின்றனவே இதிலே பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். கடவுளர்களின் திருமண அவதாரங்களை மக்கள் ஏற்கவில்லை என்றால் என் இத்தனை ஆயிரம் பேர் இந்த நிகழ்வுகளிலே கலந்து கொள்கின்றனர்.


அவதாரங்களையும், அது மக்களுக்கு எதனை உணர்த்துகின்றன என்று உணர்ந்த கடவுள்மிய்து நம்பிக்கை கொண்ட எவருக்கும் இது புரியும்.

Nathanjagk said...

இந்த இடுகை சில கருத்துக்களை முன்வைத்துள்ளது - ​தெளிவாக. அதை வைத்து ​பேசலாம் என்று வந்தால் ஈஸ்வரியின் பின்னூட்டம், அதற்கு​கோவியும் நீங்களும் எழுதிய பதில்கள் என​பெருசாய்​போய்விட்ட மாதிரி இருக்கு. அடுத்து ஒரு இடுகையா?? எதிர்பார்க்கிறேன். ஆனால் ஈஸ்வரியின் கேள்விகளை வைத்து விவாதத்தை முன்னகர்த்திச் செல்ல வேண்டுமா என்ன? கேள்விகள் எப்போதோ பதிலளிக்கப்பட்டு விட்டன. இதனை முன்​வைத்து விவாதிப்பது புதிததான தர்க்கங்களையோ, கருத்துக​ளையோ கொண்டு வராது.​இந்த கருத்து முரண்கள் விவாதிக்க சுவாரஸியமாக இருக்கும், ஆனால் புதிதாய் பெற்றுக்​கொள்ள எதுவும் கிடைக்குமா என்பதே என் ஐயம். அப்படியிருந்தால் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து கவனிக்கிறேன்.

Admin said...

//டம்பி மேவீ said...

சமய தலைவர்கள் பலர் கடைசி வரைக்கும் கஷ்ட பட்டு தான் உள்ளனர். நான் படித்த வரைக்கும் இறைவனை அடைவது என்பது இறந்து போனால் தான் முடியும் என்று இருக்கிறது......

அப்பர் , இயேசு, இன்னும் பலரை சொல்லலாம். ஆனால் சற்று உன்றி பார்த்தால் இவார்கள் எல்லாரும் சமுதாய மறுமலர்ச்சிக்கு தான் படுபட்டர்களே தவிர இறைவனை அவர்களின் தனிப்பட்ட விஷயமாக தான் இருந்துள்ளது .....

உதாரணம் ; அன்னமையா , ராமானுஜர், புத்தர், இன்னும் பலர்//


உங்கள் சொல்வது சிரிப்பாக இருக்கிறது. கடவுளை அடைவது சுலபமான விடயமல்ல. அப்படி சுலபமாக அடைய முடியும் என்றால் அவன் கடவுளல்ல.

அப்பர் போன்றோர் இறந்த பின்னர்தான் கடவுள் தரிசனம் கிடைத்தது என்று யார் சொன்னது. இது உங்கள் அறியாமை. இறைவனைக் கண்டு இறைவனைப்பாடியவர்கள் இந்து சமய குரவர்கள். இறைவனாலேயே பலருக்கு தேவாரம் பாடுவதற்கு அடிஎடுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இப்படி இருக்கும்போது அவர்கள் இறந்த பின்னரே இறைவனின் தரிசனம் கிடைத்ததென்பது உங்களின் அறியாமையைத் தவிர வேறு இல்லை.

Suresh Kumar said...

பின் மன ஒருமைப்பாட்டிற்க்காக தியானம் செய்ய முயற்சித்தேன். அப்பொழுது என் கனவுகளை கூட நிறுத்த என்னால் முடிந்தது. அந்த தியானம் பதினேழு நாட்கள் தொடர்ந்தது. அப்பொழுது ஒரு நாள் கண்களை மூடி நெற்றிப் பொட்டின் மத்தியில் என் கவனத்தை வைத்திருந்தேன். அப்பொழுது என் நெற்றிப் பொட்டில் இருந்து ஓர் ஒளி தோன்றி என்னை ஆட்கொண்டது. நான் யார் என்பதோ என் பெயர் என்ன என்பதோ எதுவும் நினைவில்லை. அந்த ஒளி பொன் நிறத்தில் இருந்தது. சுகமாக இருந்தது. அந்த ஒளியினுள் நான் மூழ்கியிருந்தேன். அப்பொழுது ஒளியுனுள் இருந்து, ஒரு குரல் கேட்டது. "நான் உன் பாவங்களை மன்னித்து விட்டேன். உன்னை ஏற்றுக் கொள்கிறேன்" என்றது. நான், "நான் என்ன பாவம் செய்தேன். எதற்காக என்னை நீங்கள் மன்னிக்கிறீர்கள்?" என கேட்டேன். ஒரு கறுப்பு புகை என்னை சூழ்ந்தது. பின் முதலில் என் வீட்டருகில் செல்லும் ஒரு லாரியின் ஒலி எனக்கு கேட்டது. அதன் பிறகு என் உடல் நினைவுக்கு வந்தது. அதன் பிறகு, மற்ற எல்லா நினைவுகளும் திரும்ப வந்து விட்டன. அன்று தான் நான் இறைவன் என்றொருவன் இருப்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டேன்.//////////////////////

பொதுவாகவே நம் மனதிகுள் ஏற்படும் மாற்றங்கள் நம் சிந்தனைகள் போன்றவற்றை நாம் கடவுள் என்று குழப்பி கொள்கிறோம் .

நாம் தூங்கும் பொது கனவு வருகிறது என்றால் அது நம் மனதை பகல் வேளைகளில் நம் மனதை பாதித்த ஒன்றாக தான் இருக்க வேண்டும் .

நாம் எதை நோக்கிய சிந்தனையில் இருக்கிறோமே . நம் எண்ண சிறகுகளில் எது வர வேண்டும் என நாம் நினைத்து அதை பற்றிய சிந்தனையில் நம் மனதை ஒரு முக படுத்தும் போது அது நமக்கு தோன்றும் . இதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை இது நம் மனது சம்பந்த பட்ட செயல் மூளை சம்பந்த பட்ட செயல் . ஆன்மீக தலைவர்களும் ஆன்மீக குருக்களும் எழுதி வைத்துள்ள பல நல்ல செயல்களை நாம் பின்பற்றுவதில் தவறில்லை . ஆனால் மனிதன் அதில் காணப்படும் நல்ல்ல செயல்களை விட்டு விட்டு மூட நம்பிக்கைகளை பின்பற்றுகிறான் .


கடவுளை மாற மனிதனை நினை இது தான் இப்போதைய தேவை

R.Gopi said...

300௦௦ அடிச்சுட்டு ஆடாம ஸ்ட்ராங்காக நிற்கும் வால்பையன் அவர்களே.... வணக்கம... வாழ்த்துக்கள்......

ஏன், மறுபடியும், இப்படி கடவுள் இருக்கிறாரா என்ற தேடல்.....

கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள், தங்களின் அந்த "இறை" நம்பிக்கையில் "கடவுள்"ஐ தேடுபவர்கள்....

கடவுள் இல்லை என்று சொல்பவர்கள், தேடாமலேயே சொல்கிறார்களோ என்று நினைக்கிறேன்....

நீங்கள் கடவுளை எவ்வளவு வருடம் தேடிவிட்டு கடவுள் இல்லை என்று சொல்கிறீர்கள்......?

ramesh sadasivam said...

சரி வைரமுத்துவிற்கு எப்படி ஒளி தோன்றியது. அவர் இது பற்றியெல்லாம் சிந்திக்கவில்லையே?

ramesh sadasivam said...

//உறக்கநிலையில் மூளை முழுதாக ஓய்வு எடுக்காமல் சிறிது விழித்திருக்கும் போது கனவு ஏற்ப்படுகிறது, கனவு ஏற்ப்படவில்லையென்றால் நீங்கள் இறந்தநிலை மனிதர்கள் ........//

இது ஏற்புடையதல்ல... கோமாவில் இருப்பவர் கூட இறந்த நிலை மனிதர் அல்ல. எல்லா சமயங்களிலும் கனவு வர வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

Admin said...

என்ன கடவுள் இல்லை என்று சொன்னவங்களைக் காணவில்லை....

ramesh sadasivam said...

மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் "டெம்பரல் லோப்' என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான "ஆன்மீக அனுபவங்கள்' ஏற்படுகின்றன'' என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் பெர்சிங்கர்.//

ஏறுக்கு மாறாக என்பது என்ன? என்ன வகையான கோளாறு? அப்படி ஆன்மிக அனுபவங்கள் ஏற்படும் நோயாளிகளுக்கு ஏன் மற்ற எந்த பாதிப்பும் இந்த கோளாறால் ஏற்படுவதில்லை?

ramesh sadasivam said...
This comment has been removed by the author.
ramesh sadasivam said...

சந்ரு சார், ஒரு வேளை தேடிப் பார்க்க கிளம்பி விட்டார்களோ? :)

(சும்மா ஹாஸ்யம் தான். தவறாக நினைக்க வேண்டாம்)

Admin said...

//shri ramesh sadasivam said...
சந்ரு சார், ஒரு வேளை தேடிப் பார்க்க கிளம்பி விட்டார்களோ? :)

(சும்மா ஹாஸ்யம் தான். தவறாக நினைக்க வேண்டாம்)//


இருக்கலாம், இருக்கலாம்...

கடவுளையே தேடாதவர்கள் எதைத்தேடி என்ன....

மேவி... said...

"சந்ரு said...
என்ன கடவுள் இல்லை என்று சொன்னவங்களைக் காணவில்லை...."




சந்ரு சார் கொஞ்சம் வேலை இருந்தது .... அதான் வர முடியல ....

இதோ வந்துடோம் ல ....

சார் நீங்க இருக்கிங்கள ???

மேவி... said...

"சந்ரு said...
//shri ramesh sadasivam said...
சந்ரு சார், ஒரு வேளை தேடிப் பார்க்க கிளம்பி விட்டார்களோ? :)

(சும்மா ஹாஸ்யம் தான். தவறாக நினைக்க வேண்டாம்)//


இருக்கலாம், இருக்கலாம்...

கடவுளையே தேடாதவர்கள் எதைத்தேடி என்ன...."

தேட வேண்டியே விஷயம் நிறைய இருக்க ... நீங்கள் சொல்வது போல் எல்லாவற்றியும் நிறைந்து இருக்கும் கடவுளை ஏன் தேட வேண்டும்

ramesh sadasivam said...

:)

மேவி... said...

"shri ramesh sadasivam said...
சந்ரு சார், ஒரு வேளை தேடிப் பார்க்க கிளம்பி விட்டார்களோ? :)

(சும்மா ஹாஸ்யம் தான். தவறாக நினைக்க வேண்டாம்)"

சார் இங்கே நடப்பது ஒரு நல்ல விவாதமே ... யாரும் தவறாக எடுத்து கொள்ள மாட்டங்க

மேவி... said...

பண்டிகைகள் கொண்டாடுவதனால் மக்கள் இரண்டு மனைவி சிஸ்டம் யை ஏற்று கொண்டு விட்டார்கள் என்று எண்ணி விட வேண்டாம்.... அதை எல்லாம் சந்தோசம் பெற ஒரு வாய்ப்பாக தான் மக்கள் பாக்குறாங்க.....

இன்னுமும் மத போதகர்கள் இறைவன் திருமணத்தை நியாய படுத்தவே போராடி கொண்டு இருக்கிறாங்க

ramesh sadasivam said...

இரண்டு மனிவி எல்லோருக்கும் அமையாது. சிலருக்கு அமையும். அப்பொழுது, மக்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். உதாரணம் எழுத்தாளர் பாலகுமாரன்.

மேவி... said...

மத போதகர்கள் என்னை போல் முட்டாள்களிடம் .... இறைவன் செய்வதற்கு எல்லாம் ஒரு காரணம் உண்டு ... அதை எல்லாம் நீங்கள் செய்ய கூடாது ... அதிலிருந்து இறைவன் நாமுக்கு காட்டும் நெறிமுறைகளை எடுத்து கொள்ள வேண்டுமே தவிர ... அவ்வாறு நாம் செய்தல் கூடாது என்று இன்றும் சொல்லி கொண்டு இருக்கிறாங்க

Maximum India said...

எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

ஒருமுறை மேலாண்மை பயிற்சியின் போது, ஒரு தலைப்பின் மீது விவாதிக்கும் படி நானும் இன்னொரு பயிற்சியாளரும் அழைக்கப் பட்டோம். இருவரும் தமது வாதத் திறமையை அருமையாக வெளிப்படுத்தினோம். பார்வையாளர்களில் ஒரு பகுதியினர் எனக்கும் இன்னொரு பகுதியினர் மற்றவருக்கும் ஆதரவுக் குரல் எழுப்பி வந்தனர்.

இறுதியாக தீர்ப்பு வழங்கும் நேரம் வந்தனர். யார் வெற்றி பெற்றவர் என்பதை அறிந்து கொள்ள அனைவரும் ஆவலாக இருந்தனர். அப்போது கூறப் பட்ட தீர்ப்பு என்ன தெரியுமா?

இரண்டு பேருமே தோற்று விட்டனர் என்று.

அதாவது விவாதம் என்பது விதண்டாவாதம் அல்ல. ஒருவர் கருத்துக்கு மாற்று கருத்து மட்டுமே தேடிக் கொண்டிராமல், மற்றவர் கருத்துக்கும் மதிப்பளித்து, அதிலுள்ள நிறைகளை ஏற்றுக் கொண்டு இருவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வை நோக்கி செல்லும் ஒரு பயணமே விவாதம் ஆகும் என்று தீர்ப்பு அளிக்கப் பட்டது.

இருக்கும் ஒரு பொருளை இல்லையென்றும் இல்லாத ஒரு பொருளை இருக்கிறது என்றும் மற்றவர்களை ஒப்புக் கொள்ள வைக்கும் ஒரு பயணமாக மட்டும் இல்லாமல் உண்மையில் இருக்கிறதா, அப்படி இருந்தால் அது என்னவாக இருக்கும், அதை எப்படி விளங்கிக் கொள்வது என்பது அறிவுத் தேடலாக தொடர்ந்தால் அந்த விவாதம் பங்கு பெற்ற அனைவருக்கும் வெற்றியாக அமையும்.

நன்றி

ramesh sadasivam said...

அது அந்த அந்த மத போதகரின் அறியாமை. தாங்கள் துறவிகள் ஆகிவிட்டதால் திருமணம் செய்வதே தப்பு என்று சொல்பவர்களை கூட நான் பார்த்திருக்கிறேன்.

மேவி... said...

"shri ramesh sadasivam said...
இரண்டு மனிவி எல்லோருக்கும் அமையாது. சிலருக்கு அமையும். அப்பொழுது, மக்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். உதாரணம் எழுத்தாளர் பாலகுமாரன்."


சார் பாலகுமாரன் அவர்கள் இரண்டு மனைவி வைத்து கொண்டால் எனக்கு என்ன .... மக்கள் ஏன் அதை ஏற்று கொள்ள வேண்டும் ... அவரால் முடியுது வைத்து கொண்டார்.....

நான் இங்கு சொல்வது கடவுளை பற்றி மட்டும்

மேவி... said...

" shri ramesh sadasivam said...
அது அந்த அந்த மத போதகரின் அறியாமை. தாங்கள் துறவிகள் ஆகிவிட்டதால் திருமணம் செய்வதே தப்பு என்று சொல்பவர்களை கூட நான் பார்த்திருக்கிறேன்."

antha anthra samiyaara???

மேவி... said...

Maximum India said...


என் கருத்தை மட்டுமே பதிவு செய்கிறேன் ....

Sanjai Gandhi said...

ஸ்ஸ்ஸ்ஸபாஆஆ

ramesh sadasivam said...

#Maxim India

நீங்கள் சொல்வது உண்மை தான். இறை அனுபவத்தை உணர்தவர்களிடம் அதை உணராதவர்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம் தானே? எங்கள் அனுபவத்தை அனுபவிக்காமலே ஏன் அதை எடைபோட வேண்டும்?

மேவி... said...

இறைவன் இருக்கிறார் ....

யார் ஏன் இருக்கிறார் ????

மேவி... said...

"shri ramesh sadasivam said...
#Maxim India

நீங்கள் சொல்வது உண்மை தான். இறை அனுபவத்தை உணர்தவர்களிடம் அதை உணராதவர்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம் தானே? எங்கள் அனுபவத்தை அனுபவிக்காமலே ஏன் அதை எடைபோட வேண்டும்?"

அதே போல் என் கருத்தையும் அனுபவிக்காமலே எப்படி ஏன் எதிர்க்க வேண்டும்

ramesh sadasivam said...

கடவுள் இரண்டு மனிவி வைத்துக் கொள்வதையும் தான் ஏற்றுக் கொண்டார்கள் இல்லையென்றால் ஏன் முருகருக்கு இவ்வளவு வழிபாடுகள்?

Eswari said...

@வால் பையன்
Eswari said...
//உங்க தாய் மனைவி உண்மையானவர்கள் (பத்தினி) என்று நீங்க நம்புகிறீர்களா இல்லையா? இது மட்டுமே என் கேள்வி?//

உங்க அம்மாவையும், மனைவியும் நம்புரிங்களான்னு கேட்டது எனக்கே கொஞ்சம் கஷ்டமா இருக்கு. மன்னிச்சுடுங்க.
பொதுவா அம்மாவையும், மனைவியும் யாராலும் சந்தேக பட முடியாது. சந்தேக பட்டால் அவன் மனுஷன் இல்லை. எப்படி அம்மாவையும், மனைவியையும் உங்களால் சந்தேக பட முடியாமல் நம்ப முடியுதோ அது போல தான் நாங்களும் இறைவனை நம்புகிறோம். பின்னூட்டத்தில் மனது புண் படும்படி ஏதேனும் இருந்தால் மனிக்கவும்.

மேவி... said...

"shri ramesh sadasivam said...
கடவுள் இரண்டு மனிவி வைத்துக் கொள்வதையும் தான் ஏற்றுக் கொண்டார்கள் இல்லையென்றால் ஏன் முருகருக்கு இவ்வளவு வழிபாடுகள்?"


முருகன் தனியாக இருக்கும் பழனியில் தான் கூட்டம் ஜாஸ்தி தல ....


அவரின் இரண்டு மனைவிகளுக்கு தனிய மதிப்பு இல்லை என்று கருதுகிறேன்

ramesh sadasivam said...

கூட்டம் அதிகமாக இருக்கலாம். அதற்காக தெய்வானை வள்ளி சமேத முருகரை யாரும் வழிபடாமல் இல்லையே.

மேவி... said...

இப்படியே போனால் தமிழ் நாட்டின் முக்கிய நபருக்கு கூட இரண்டு பொண்டாட்டி என்று சொன்னாலும் சொல்விங்க போல் இருக்கே

மேவி... said...

"shri ramesh sadasivam said...
கூட்டம் அதிகமாக இருக்கலாம். அதற்காக தெய்வானை வள்ளி சமேத முருகரை யாரும் வழிபடாமல் இல்லையே."

தனிய அவர்களை வழிபாடு பண்ணுறாங்க ல

இல்லையே

ramesh sadasivam said...

நான் அப்படி சொல்ல நினைக்க வில்லை. ஆனால் அவரையும் அவர் நண்பரையும் நம் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் தானே?

Eswari said...

டம்பி மேவீ said...
//இப்படியே போனால் தமிழ் நாட்டின் முக்கிய நபருக்கு கூட இரண்டு பொண்டாட்டி என்று சொன்னாலும் சொல்விங்க போல் இருக்கே//

ஒரு தி.மு.க தொண்டர் முதலமைச்சருக்கு 7 மனைவிகள் ன்னு சொன்னார். (எண்ணிக்கையில் தப்பு இருந்தால் நா பொறுப்பு அல்ல)

மேவி... said...

"shri ramesh sadasivam said...
நான் அப்படி சொல்ல நினைக்க வில்லை. ஆனால் அவரையும் அவர் நண்பரையும் நம் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் தானே?"


அமாம் .... அது என்னோ உண்மை தான் சகா

ramesh sadasivam said...

தனிப்பட்ட முறையில் எதற்கு வழிபட வேண்டும். இங்கே கேள்வி... இரண்டு மனைவிகள் என்ற விஷ்யத்தை மக்கள் ஏற்றார்களா இல்லையா என்பது தானே?

மேவி... said...

"Eswari said...
டம்பி மேவீ said...
//இப்படியே போனால் தமிழ் நாட்டின் முக்கிய நபருக்கு கூட இரண்டு பொண்டாட்டி என்று சொன்னாலும் சொல்விங்க போல் இருக்கே//

ஒரு தி.மு.க தொண்டர் முதலமைச்சருக்கு 7 மனைவிகள் ன்னு சொன்னார். (எண்ணிக்கையில் தப்பு இருந்தால் நா பொறுப்பு அல்ல)'


sorry nga naan maths konjam weak ...


hee hee

ramesh sadasivam said...

:)

ramesh sadasivam said...

சரி.. நான் கொஞ்சம் வெளியே போக வேண்டி உள்ளது... வந்து விவாதத்தில் கலந்து கொள்கிறேன். :)

மேவி... said...

"shri ramesh sadasivam said...
தனிப்பட்ட முறையில் எதற்கு வழிபட வேண்டும். இங்கே கேள்வி... இரண்டு மனைவிகள் என்ற விஷ்யத்தை மக்கள் ஏற்றார்களா இல்லையா என்பது தானே?"


ஒரு வகையில் ஏற்று கொண்டார்கள் என்று தோன்றுகிறது ....

ஆனால் என் கேள்வி அந்த கோட்பாடுகள் எல்லாம் மக்களுக்கு தேவையா என்பதே .......

மேவி... said...

"shri ramesh sadasivam said...
சரி.. நான் கொஞ்சம் வெளியே போக வேண்டி உள்ளது... வந்து விவாதத்தில் கலந்து கொள்கிறேன். :)"


saringa

கோவி.கண்ணன் said...

//கிருஷ்ணமூர்த்தி said...

கோவிக் கண்ணன் சொன்னது:
/கருப்புச் சட்டைப் போட்டவர்களும் நாத்திகர்கள், மற்றபடி நாத்திகத்துக்கு அவங்க யாரும் உரிமை கொண்டாடவோ, நாங்கதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீலோக குரு என்று தனக்குத்தானே பட்டம் கொடுத்து கொள்வது இல்லை/

உண்மையான்னு பெரியார் திடலில் போய்த் தான் கேட்கவேண்டும்!
//

பெரியார் பற்றாளர்கள் அனைவருமே நாத்திகர்கள் கிடையாது. நாத்திகர்களில் பலர் பெரியார் பற்றாளர்கள் அவ்வளவுதான். உலகில் இருக்கும் பல்வேறு நாத்திகர்களுக்கு பெரியார் தலைவரும் கிடையாது.

நாத்திகத்தை பெரியார் திடல் மட்டுமே தாங்கிப் பிடிப்பதாக நீங்கள் தான் நம்புகிறீர்கள். நீங்கள் தான் அங்கு சென்று கேட்க வேண்டும்.

கோவி.கண்ணன் said...

//கிருஷ்ணமூர்த்தி said...


பிரச்சினையே நீங்கள் போடுவதுதான், போடுவது மட்டும் தான் மியூஜிக்னு நீங்களாகவே நெனச்சுக்கிறதுதான்!//

எனது பின்னூட்டத்தை கட்டம் கட்டிக் குறிப்பிட்டு இருந்ததால் ஸ்டார் மியூஜிக் போட்டேன். நீங்களும் போடுங்க நான் தடுக்கவில்லை சார்.

// "அதெப்படிப் படிக்காமலேயே...." கோவியானந்தா மாதிரி எனக்கு வள்ளலாரும் பெரியாரும் ஒன்று தான் என்று சொல்கிறவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்!
படித்ததனால் தான், இந்த மாதிரிச் சொல்பவர்கள் வள்ளலாரையும் படித்ததில்லை, பெரியாரையும் படித்ததில்லை என்று சொல்கிறேன்!//

என்னைப் பற்றி என்னை விட உங்களுக்கு அதிகம் தெரியுமா ? உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் சார். அதுதான் முக்கியம்.

// /தனிமனிதனின் விருப்பு வெறுப்பு சமூகத்தை பாதிக்காது/
இது என்ன புதுத் தத்துவமா?//

தத்துவம் இல்லை உண்மை, உங்களுக்கு ஒன்றை பிடிக்கிறது, பிடிக்க வில்லை என்பதனால் சமூகத்தில் எந்த மாறுதலும் ஏற்படாது. பதவி உள்ளவர்களின் விருப்பு வெறுப்பு மாறுதல் ஏற்படுத்தலாம் அது கூட அவர்கள் ஆட்சியில் இருக்கும் வரைதான். அந்தப் பதவியைக் கொடுப்பதும் சமூகம் தான்.

// இது ஒன்றே நீங்கள் வள்ளலாரைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது ஒன்றுமே இல்லை என்பதைக் காட்டுகிறது.//

கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்று நொந்து கொள்ளும், நம்பிக்கை இழந்தவரா வள்ளலார் என்கிற ஒரு ஆன்மிகவாதி என்று ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டீர்கள் என்றால் விடை உங்களுக்கே கிடைக்கலாம். அவர் ஒரு சமயத்தை ஏற்படுத்த முயன்றார் முடியவில்லை.


//ஆன்மீகவாதிகள் உங்களுடைய பதிவில் பின்னூட்டம் போட வருகிறவர்களா என்ன?
நீங்கள் தான் தேடிப்போக வேண்டும்.//

நான் தேடிப் போகிறேனா ? அவர்களாக வருகிறார்களா ? அப்படி பின்னூட்டங்கள் இருக்கிறதா இல்லையான்னு நீங்களே தேடிப்பாருங்க. என் பதிவில் என்ன இருக்கிறது என்பது எனக்கு நன்றாக தெரியும்

// ஆர் எஸ் எஸ் இந்துமதத்தின் ஒட்டுமொத்தமான குரல் என்று உங்களுக்கு யார் சொன்னது? இந்து மதம் என்ன நினைக்கிறது என்பதை உள்ளபடிக்கே தெரிந்து தான் பேசுகிறீர்களா அல்லது எவனோ எழுதி வைத்ததை எல்லாம் ஆதாரமாக வைத்துப் பேசுகிறீர்களா?//


இதைத்தான் நானும் சொன்னேன். நாத்திகர்கள் அனைவருக்கும் பெரியாரோ, அவருக்கு பின் தன்னை அறிவித்துக் கொண்ட வீரமணியோ நாத்திகர்களின் பிரதிநிதி கிடையாது என்று. நீங்கள் எதை வைத்து பேசுகிறீர்கள் ? கீழே தருகிறேன்

//எப்படிக் கறுப்புச் சட்டை போட்டதாலேயே ஒருவர் பகுத்தறிவாளர் ஆகிவிட்டார் என்று நம்ப வைக்க முடிகிறதோ, அதே போலத்தான்! சிந்திக்கிறவர்கள் எல்லாம், உண்மை என்ன என்பதைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற வேட்கையோடு இருந்தார்களா என்ன?//

எவ்வளோவோ புராணங்கள் கற்பனைக்கு எட்டாத ஆபாசம் நிறைந்தவையாக இருக்கிறது என்பதை உங்களால் ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாரதருக்கும் கிருஷ்ணனுக்கும் பிறந்த 60 பிள்ளைகள் தான் பிரபவ முதல் அட்சய வரை 60 ஆண்டுகள் என்று சொல்லப்படும் கதைகள் நம்பகத்தன்மையோ, அறிவியலோ அல்லது வேறு என்ன விதமான ஆன்மீகம் இருக்கிறது என்று விளக்கினால் அறிந்து கொள்கிறேன்.
ஆராயமல் படிக்காமல் எழுதுகிறார்கள் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் ?
அண்ணாவின் தமிழரும் ஆரியரும் வாங்கிப் படித்துப் பாருங்கள் அதில் புராணக்கதைகளின் உண்மை என்ன வென்று ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கிறார்களா இல்லையா என்று தெரியும்

கோவி.கண்ணன் said...

//இருந்த இடம் தெரியாமல், வடக்கே எங்கேயோ கொஞ்சம் ஒரு ஓரத்தில் இருந்த ஆர் எஸ் எஸ் இன்றைக்கு இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்குக் காரணங்கள் கண் முன்னாலேயே இருக்கின்றன. //

என்ன காரணம் இருக்கின்றன ?
மனுதர்ம நூல்கள் இன்னும் எரிக்கப்படாமல் இருப்பதில் இருந்தே மதவெறி என்பது வாழ்ந்து கொண்டு இருப்பதாகத்தானே பொருள், பல்வேறு மதங்கள் நிலவி வரும் நாட்டில் இந்து மத நம்பிக்கையாளர்களின் இறை நம்பிக்கையை உரமாக்கி ஒரு அமைப்பு வளருவது ஒன்றும் வியப்பே இல்லை.

//உங்களுக்குப் பார்க்கத் தெரியவில்லை என்பதற்காக ஒட்டு மொத்தமாக, ஆர் எஸ் எஸ் முத்திரை குத்துவது, உங்களுக்கு அதைப் பற்றியும் கூட சரியாகத் தெரியவில்லை என்பது தான்!//

முத்திரை என்பதை நீங்களும் மோசமாகத்தான் நினைக்கிறீர்கள், ஆனால் அந்த முத்திரையை பொதுவில் எதிர்பவர்கள் நாத்திகராகத்தானே இருக்கிறார்கள். அது யாருடைய தவறு ?


//Last word freak கடைசியாகச் சொல்கிற வாக்கியம் கூடத் தன்னுடையதாகத் தான் இருக்க வேண்டும் என்பதைத் தான் உங்களுடைய பதிவுகளில், இந்தப் பதிலிலும் கூடப் பார்க்கிறேன்.//

உங்கள் கற்பனைக்கு விளக்கம் என்னால் எழுத முடியாது. என்னைப் பற்றி எனக்குத் தான் நன்றாக தெரியும்.

//ஒரு விஷயத்தை ஏற்பதற்கோ, நிராகரிப்பதற்கோ, உங்களுக்கு நியாயம் என்று படுகிற கருத்துக்களை எடுத்து வையுங்கள்! அதனோடு ஒத்துப் போக முடியாவிட்டாலும் கூட, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்பதை நாங்களும் ஒப்புக் கொள்வோம்!//

அநியாயமாக நான் இங்கே என்ன சொல்லி இருக்கிறேன் ?

Admin said...

//டம்பி மேவீ said...
பண்டிகைகள் கொண்டாடுவதனால் மக்கள் இரண்டு மனைவி சிஸ்டம் யை ஏற்று கொண்டு விட்டார்கள் என்று எண்ணி விட வேண்டாம்.... அதை எல்லாம் சந்தோசம் பெற ஒரு வாய்ப்பாக தான் மக்கள் பாக்குறாங்க.....

இன்னுமும் மத போதகர்கள் இறைவன் திருமணத்தை நியாய படுத்தவே போராடி கொண்டு இருக்கிறாங்க//


சந்தோசத்துக்காவது மக்கள் ஏஉக்கொண்டார்கள்தானே. சரி சந்தோசத்துக்காக ஏற்றுக்கொண்டார்களானால் அவர்கள் புதினம் பார்த்துவிட்டு போய்விடலாம்தானே. ஏன் புனிதமாக வருகின்றார்கள் இறை பக்தியோடு. ஆலயத்திலே கடவுளை வழிபடுகின்றனர். அத்தனை பெரும் முட்டாள்களா சந்தோசத்துக்காக எத்தனையோ இடம் இருக்க. மக்களுக்கு பிடிக்காத இரண்டு திருமண விடயத்துக்கு என் வருகின்றனர். இது முரண்பாடாக இல்லையா. எதோ ஒரு வகையில் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்பது புலனாகின்றதல்லவா.

மேவி... said...

ada vanga sir enge poi irunthinga ....

romba nermaa???

மேவி... said...

"சந்ரு said...

சந்தோசத்துக்காவது மக்கள் ஏஉக்கொண்டார்கள்தானே. சரி சந்தோசத்துக்காக ஏற்றுக்கொண்டார்களானால் அவர்கள் புதினம் பார்த்துவிட்டு போய்விடலாம்தானே. ஏன் புனிதமாக வருகின்றார்கள் இறை பக்தியோடு. ஆலயத்திலே கடவுளை வழிபடுகின்றனர். அத்தனை பெரும் முட்டாள்களா சந்தோசத்துக்காக எத்தனையோ இடம் இருக்க. மக்களுக்கு பிடிக்காத இரண்டு திருமண விடயத்துக்கு என் வருகின்றனர். இது முரண்பாடாக இல்லையா. எதோ ஒரு வகையில் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்பது புலனாகின்றதல்லவா."



they have learnt to adjust with it .....

but we cant say they have accepted it

மேவி... said...

@ சந்ரு :
கடவுளின் இரண்டு திருமணங்கள் பற்றி இன்னும் பல இடங்களில் ஒரு விவாத பொருளாகவே இருக்கிறது... எங்கள் ஊரில் ராதே கலயணம் தின் போது கிருஷ்ணர் ஏன் அப்படி ஜலகிரிடை செய்தார் என்பதை விளக்கவே அந்த விஷேச்த்தின் பொழுது ஒரு நாள் எடுத்து கொள்கிறார்கள். இதே போல் ஹரே கிருஷ்ணா ஹரே ராமவினாரும் இதை சொலவே தனியாக வகுப்பு எடுக்குறாங்க ....

இப்படி நிலைமை இருக்கும் பொழுது எவ்வாறு மக்கள் கடவுளின் இரண்டு திருமணங்களை ஏற்று கொண்டு விட்டனர் என்று சொல்லுரிங்க என்று தெரியல

Admin said...

//டம்பி மேவீ said...
ada vanga sir enge poi irunthinga ....

romba nermaa???//


சற்று வேலைப்பளு நண்பரே அதுதான்...

கிருஷ்ண மூர்த்தி S said...

திரு.கோவி கண்ணன்,

"என்னைப் பற்றி என்னை விட உங்களுக்கு அதிகம் தெரியுமா ? உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் சார். அதுதான் முக்கியம்."

"உங்கள் கற்பனைக்கு விளக்கம் என்னால் எழுத முடியாது. என்னைப் பற்றி எனக்குத் தான் நன்றாக தெரியும்."

உங்களுடைய இந்த வார்த்தைகளில்..!

உங்களைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவு, நீங்கள் அள்ளித் தெளிக்கிற கருத்துக்கள், பின்னூட்டங்களை வைத்தும் தெரிந்து கொள்ள முடியும் என்பது மட்டுமே நான் சொல்ல வந்தது.மறுபடி, உங்களை அறிய ஒரு தடயத்தைத் தந்திருக்கிறீர்கள், அவ்வளவு தான்!

ஏற்கெனெவே, இங்கே பின்னூட்டங்களில், விவாதம் திசைதிரும்பி எங்கேயோ போய்விட்டது. நானும், அதையே செய்ய விரும்பவில்லை.

தருமி said...

வால்ஸ்,

பாவம்'பா நீங்க ... நீங்க் சொல்ல வந்தது என்னவொ. ஆனா இங்கே ரெண்டு பொண்டாட்டி போன்ற'சில்லறை' விசயங்கள் மட்டுமே பேசப் பட்டு மற்றவை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ஆன்மீகம் அப்டிங்றாங்க. ஆன்மீகம்னா என்னன்னு கேட்டா புராணத்துக்கு போய்டுறாங்க. என்னமோ போங்க ..........

மேவி... said...

"தருமி said...
வால்ஸ்,

பாவம்'பா நீங்க ... நீங்க் சொல்ல வந்தது என்னவொ. ஆனா இங்கே ரெண்டு பொண்டாட்டி போன்ற'சில்லறை' விசயங்கள் மட்டுமே பேசப் பட்டு மற்றவை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன."

ஐயா ..... அப்படி இல்லை . நான் மொத்தமாக ஒரு கருத்தை சொல்ல போய் அது எங்கோ எங்கோ போய் விட்டது.....கடவுளே இல்லை என்று சொல்லும் எனக்கு அவரது இரண்டு மனைவி பற்றி எல்லாம் எதற்கு பேச வேண்டும்.

கடவுளை எதிர்க்க போய் நான் கடவுள் செய்யல் என்று அழைக்க படும் ஒவொன்றையும் பற்றி பேச வேண்டியதாக போய் விட்டது....

அப்படி விவாதம் செய்தமைக்கு வருத்துகிறேன்
என்னிடம் விவாதம் செய்ய போய் சந்ரு அவர்களும் இதை பற்றி எல்லாம் பேசினார். அவர் அப்படி பேசியதற்கு நானே காரணம்.......

இதை எல்லாம் தேவை இல்லாத விஷயங்கள் என்று நீங்கள் கருதினால்.... தேவை இல்லாத விஷயங்களை விவாதம் செய்ததற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் ....

என்னிடம் விவாதம் செய்ய போய் தான் சந்ரு அவர்கள் அந்த மாதிரியான கருத்துக்களை முன் வைத்தார்..... மற்றபடி அவர் நல்ல விதமாக பின்னோட்டம் போட்டார். அவரை வழிமாற செய்தது நான் தான்,

மேவி... said...

"தருமி said...


ஆன்மீகம் அப்டிங்றாங்க. ஆன்மீகம்னா என்னன்னு கேட்டா புராணத்துக்கு போய்டுறாங்க. என்னமோ போங்க .........."


சார் .... ஆன்மீகம் என்றால் இதை எல்லாம் தான் நாமது நாட்டில் நம்பி கொண்டு இருக்கிறாங்க.....


உங்களை மாதிரி படித்தவர்களுக்கு ஆன்மீகம் என்றால் ஆன்மா, கடவுளை அடையுதல் என்று இருக்கலாம்.

ஆனால் என்னை அதிகம் உலக அனுபவம் இல்லதவார்களுக்கு ஆன்மீக போதகர்கள் இறைவன் இரண்டு கல்யாணம், கிருஷ்னர் செய்த ஜலகீரிடை, சீதையின் மார்ப்பை கடித்த கிளி, இன்னும் பல , இதை போன்றவற்றை தான் ஆன்மீகம் என்று சொல்லி நாங்கள் வளர்க்க பட்டோம் ....

எங்களை போல் உள்ள பாமர மக்கள் இறைவன் இரண்டு கலயாணம் செய்து கொண்டதை தான் ஆன்மீகம் என்று நம்பி கொண்டு, அதற்க்கு விழ என்ற பெயரில் காசை வெட்டிக்கு செலவு செய்கிறார்கள் .....

என்னை உள்ளவர்களும் இதை தான் நம்பி வளர்ந்தோம்.... அதனால் தான் இரண்டு கலயாணம் பற்றி பேசினேன்.....

ஆன்மீகம் என்றால் இது தான் என்று ஒரு தெளிவான கோட்பாடு இல்லை.... இது தான் ஆன்மீகம் என்றும் சொல்வதற்கும் இல்லை...

ஆன்மீகம் என்பது அவர் அவர் தனிப்பட்ட நம்பிக்கை .....

ஒருவர் எதை வேண்டுமானாலும் ஆன்மீகம் நம்ப வைக்க ஆன்மீக போதகர்கள் நிறைய உள்ளார்கள் ...

இது தான் ஆன்மீகம் என்று நீங்கள் எதை சொலுரிங்க????

மேவி... said...

புராணங்கள் ஆன்மீகம் இல்லை என்றால் .... ஆன்மீகம் என்று சொல்லி ஏன் அதை எல்லாம் அடுத்த தலைமுறைக்கு சொல்லி தருவது ஏன் ???

எனக்கு தெரிந்த ஆன்மீக கூட்டம் என்றால் இதை பற்றி தான் பேசுறாங்க....

கடவுளை அடைவது தான் ஆன்மீகம் தான் என்றால் ; கடவுளை நம்பாமல் நல்வழி நடந்தவர்கள் என்று சொல்லி புராணத்தில் இருக்கிறதே

அப்படி நான் இருக்க கூடாத ???

மேவி... said...

கடவுளே இந்த மாதிரியான சில்லறை தனமான வேலைகளை செய்ததால் தான் ..... இங்கே பல விவாதங்கள் சில்லறை தனமாக இருக்கிறது

«Oldest ‹Older   1 – 200 of 329   Newer› Newest»

!

Blog Widget by LinkWithin