ஆன்மீகபயணமாக வெளிநாட்டவர் இந்தியாவிற்கு வருவது ஒன்றும் புதிதல்ல!
அவர்களது மதத்தை பரப்பவும், நம் நாட்டு கலாச்சாரத்தை தெரிந்து கொண்டு அதை அறியவும் ஆண்டாண்டு காலமாக வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்! ஆனால் உண்மையில் அவர்களது வருகை அவர்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா!? அவர்கள் தேடி வந்ததை அடைந்தார்களா!?
என்றால் கடவுள் நம்பிக்கைக்கு என்ன பதில் வருமோ அதே தான் இதற்கும் பதில்,
“அனுபவிக்க வேண்டியது கடவுள், ஆராய வேண்டியதல்ல”
இப்படி மழுப்பிகிட்டே போகலாம்! மனச்சிதைவு குறைக்கு ஆட்பட்டவர்கள், இறரந்து போனவர்களையும், கடவுளையும் காண்பது எந்த அளவு உண்மையோ அந்த அளவு தான் இந்த ஆன்மீக தேடலுக்கும் பயன், கொஞ்சமாவது சுயமாக சிந்தக்க தெரிந்து கேள்வி கேட்பவர்களை,
“நீ யார்” என்று உன்னையே கேட்டுப்பார், உன் வருகையின் பயன் என்ன? என்று கேனத்தனமாக எதாவது கேட்டு குழப்பி புடுவாங்க!
”நீ யார்” கேள்வி கேட்ட சாமியாரை நாம திரும்பி நீங்க யாருன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவாங்கன்னு தெரியல, அவரு மட்டும் வருகைக்கு முன்னாடி டிக்கெடெல்லாம் ரிசர்வ் பண்ணிட்டு, சாமியாரா போய் மக்களை திருத்த போறேன்னு கங்கணம் கட்டிட்டு வந்த மாதிரியும், நாம ஏன் வந்தோம்னு மறந்துட்டா மாதிரியும் நம்மை வசியம் செய்வதில் வல்லவர்கள் இந்த கடவுள் புரோக்கர்கள்!
இவையெல்லாம் என் சொந்த கருத்துகளே இன்னும் நான் இந்த படத்தை பற்றி எதுவும் சொல்லவில்லை!
*******************
Holy Smoke என்பது இப்படத்தின் பெயர் நாயகனை விட நாயகி உலகம் முழுவதும் அறிந்தவள் டைட்டானிக் பட நாயகி கேத் வின்ஸ்லட் தான் அவர், சுற்று பயணமாக இந்தியா வருபவள் பாபாவின் தொடுதலுக்கு பின்னர் அவர் மேல் மையல் கொண்டு பாபாவைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என இந்தியாவிலேயே தங்கி விடுகிறாள், அவளது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என பொய் சொல்லி அவளது தாயார் அவளை திரும்ப அழைத்து செல்கிறாள்!
இந்திய கலாச்சார உடையான புடவையை அணிந்து கொண்டு இந்தியா மேல் உள்ள காதல் சிறிதும் குறையாமல் இருக்கிறாள் ரூத்(கேத் வின்ஸ்லட்), அவளை கவுன்சிலிங் மூலம் குணப்படுத்த வாட்டர்ஸ்(ஹார்வி கேட்டல்) என்ற மனோதத்துவ டாக்டர் வருகிறார்! சில நம்பிக்கைகளை எதை வைத்தும் தகர்க்க முடியாது, அல்லது சில விசயங்களுக்கு தீர்வு வெறுமையாக தான் இருக்கும், அது தான் நடக்கும் இவள் விசயத்திலும்.
அவளை குணப்படுத்த வந்த டாக்டர் அவளது மேல் காமம் கொண்டு இவள் மேல் பைத்தியாவது வெகு பிராக்டிகலாக மனச்சிதைவை உணர்த்தும் படம், கடைசியில் நாயகனே நாம் இந்தியாவிற்கு போகலாம் என கதறும் அளவுக்கு அவள் மேல் காதல் கொள்ள வைப்பாள் ரூத்.
ஒஷோவின் ”காமத்திலிருந்து கடவுளுக்கு” புத்தகதை படித்திருப்பார் போல, கடவுளின் ஆரம்பமே காமத்திலிருந்து ஆரம்பம் என படம் முழுவதும் செய்தி சொல்லியிருக்கிறார் இயக்குனர்
காமத்தில் கிடைக்கும் சில நொடி இன்பத்தையே உன் வாழ்நாள் முழுவதும் தருவது தான் ஆன்மீகம் என்பது ஓஷோவின் கருத்து, அதாவது சில நொடி மட்டும் என்பது சிற்றின்பம், பல நிமிடங்கள் பேரின்பம் என்ற தியரி மாதிரி, 24 மணிநேரமும் போதையில் இருப்பவனும் பேரின்பத்தில் தான் இருப்பான் போல! சித்தர்கள் சிவபோதையில்(கஞ்சா) என்னேரமும் இருப்பது இதனால் தானா தெரியவில்லை.
படத்தை கேத்தின் நடிப்புக்காக பார்க்கலாம்!
படம், வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க வேண்டியது கட்டாயம்!
57 வாங்கிகட்டி கொண்டது:
படத்தைப் பற்றிய பகிர்தலுக்கு நன்றி அண்ணே.
super stillu...!!
ஓக்கேய் வால் சார்!
சுமோக்கே ஒரு ஹோலியா ...
(அதுக்கு இன்னொரு அர்த்தம் இருக்குங்க ஐயா! - இது எனக்கு நானே)
ஓகே!
ஓகே!வால்
படம் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள் வால்..வரும்போது டிவிடி கொண்டு வரவும்..
JAI HO
பார்த்துட்ட் சொல்ரேன்.. ஸ்டில் சூப்பர்
//சித்தர்கள் சிவபோதையில்(கஞ்சா) என்னேரமும் இருப்பது இதனால் தானா தெரியவில்லை.//
இதற்க்கு யாரும் இன்னும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை ..
அகஸ்த்தியர் ஒரு சித்தர் . அவர் என்ன கஞ்சா குடித்துவிட்டுத்தான் மருத்துவத்தை பற்றி ஆராய்ச்சி செய்தாரா ? அழியும் உடலுக்கு அழியா மருந்துகளை கண்டு பிடித்த சித்தர்கள் , தன உடலை இப்படி கெடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது என் திமையான கருத்து .
மற்றப்படி இப்போது நான் தான் கடவுள் , நான் தான் சிவன் , விஷ்ணு , இயேசு என்று சொல்லி கொள்ளும் எந்த நாயும் சித்தர்களோ , உத்தமர்களோ இல்லை ..அதில் உங்களோடு உடன் படுகிறேன்..
படம் பார்த்துட்டு சொல்றோம் பாஸு.....
//
”நீ யார்” கேள்வி கேட்ட சாமியாரை நாம திரும்பி நீங்க யாருன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவாங்கன்னு தெரியல, அவரு மட்டும் வருகைக்கு முன்னாடி டிக்கெடெல்லாம் ரிசர்வ் பண்ணிட்டு, சாமியாரா போய் மக்களை திருத்த போறேன்னு கங்கணம் கட்டிட்டு வந்த மாதிரியும், நாம ஏன் வந்தோம்னு மறந்துட்டா மாதிரியும் நம்மை வசியம் செய்வதில் வல்லவர்கள் இந்த கடவுள் புரோக்கர்கள்!//
இப்படி அடிக்கடி பொகையைப் போடுறிங்களே. ஆன்மிக நண்பர்கள் தும்முவாங்க !
:)
இங்க இலங்கைல எப்ப இந்த படம் வருமோ தெரியல, வந்தா பார்க்கணும்
அவளை குணப்படுத்த வந்த டாக்டர் அவளது மேல் காமம் கொண்டு இவள் மேல் பைத்தியாவது வெகு பிராக்டிகலாக மனச்சிதைவை உணர்த்தும் படம், ]]
நல்லா சொல்லியிறுக்கீங்க வால்ஸ்
//சிவபோதையில்(கஞ்சா)//
சிவ பானம்னு வேற சொல்லுவாங்க... :)
ஊருக்கு வந்தாதான் பார்க்க முடியும். படம் கொஞ்சம் ஸ்லோவா இருக்குமோ?
Hai Arun ,super post
நல்ல இடுகை வாலு
சூப்பரா இருக்கு
ஓஷோ சொன்னது சரிதான்
நீ யார் - நான் யார் - வேண்டாத கேள்விகள்
பால் விமர்சனம் அருமை
நல்வாழ்த்துகள் வாலு
நோட் பண்ணிக்கிட்டேன் தல :)
"holy smoke!.. ஆன்மீகப்பயணம்"//
படத்த பாத்தா தெரியுது சாமியோவ்!
//மனச்சிதைவு குறைக்கு ஆட்பட்டவர்கள், இறரந்து போனவர்களையும், கடவுளையும் காண்பது எந்த அளவு உண்மையோ அந்த அளவு தான் இந்த ஆன்மீக தேடலுக்கும் பயன்//
//கொஞ்சமாவது சுயமாக சிந்தக்க தெரிந்து கேள்வி கேட்பவர்களை//
அக்காலத்தில் ஆன்மீக தேடலில் விடை தெரியாமலா எல்லா மன்னர்களும், பெரிய பெரிய கோவில்கள் கட்டியும் அதன் பராமரிப்புக்காக பல ஏக்கர் நிலங்களையும் விட்டு சென்றார்கள்?
இக்காலத்தில் ஆன்மீக தேடலில் விடை தெரியாமலா ஏ.ஆர். ரக்மான், இளையராஜா, ரஜினி, சுஜாதா..... போன்றோர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள்? அல்லது இவர்கள் எல்லாம் சிந்திக்க தெரியாதவர்களா?
முழுதும் தெரிந்தவன்/புரிந்தவன் எதுவும் கேட்க மாட்டன்.
ஒன்றும் தெரியாதவனும் எதுவும் பேச மாட்டன்
ஆன்மிகத்தை பற்றி அரைகுறையா தெரிஞ்சவன் தான் எல்லாம் தெரிஞ்சவன் போல இப்படி உளருவான்.
//சித்தர்கள் சிவபோதையில்(கஞ்சா) என்னேரமும் இருப்பது இதனால் தானா தெரியவில்லை//
வார்த்தைகளை பார்த்து உபயோகிக்கவும்.
தோழி ஈஸ்வரியுடன் சேர்ந்து யாராவது சூடான விவாதத்தை ஆரம்பித்து வைத்தால் ஸ்கூலுக்கு போயிட்டு வந்து நானும் கலந்துக்குவேன்!
இதே போன்று உள்ள உங்கள் கேள்விகளை இங்கே அடுக்கலாம்!
அடியேனுக்கு தெரிந்த அளவில் பதில் சொல்கிறேன்!
:))
ரைட்டு!!
வால் தள, என்ன சரக்கை விட்டுட்டு றோம்ப வெயிட் மேட்டர் -ல உட்கார்ந்துகீரிங்க! நான் அப்பாள வாரேன். சர்தார்சி ஜோக் படிக்கப் போறேன்.
சொள் அலகன்
சோக்கா சொன்னீரு
ஏங்க ஈஸ்வரி அந்த பின்னூட்டத்தை எடுத்துடிங்க!
இருக்குற ரெண்டு கண்ணும் மானிட்டர் பார்த்தே நொள்ளையா போச்சு, இதுல நெற்றிகண்ணு வேரயான்னு டைப் அடிக்கலாம்னு வந்தா உங்க பின்னூட்டத்தை காணோம்!
ஓ!
அது இட்லிவடைக்கு போடப்போன பின்னூட்டமா!?
இப்போ தான் பார்த்தேன்!
இல்லாத ஒரு விஷயத்தை பற்றி எதற்கு இவ்வளவு விவாதம். ஏன் எல்லோரும் அவங்க திறனை வேஸ்ட் பண்ணுறாங்க ன்னு தெரியல.
கடவுளும் போதையும் ஓன்று. கண்டவர்களுக்கு இனிக்கும் ; பழக்கம் இல்லாதவர்களுக்கு கசக்கும்.
வாலு ஒஷாவை படிக்க கூட பணம் தர வேண்டும் புத்தகத்திற்கு....... கடவுள் ஓசி டி மாதிரி..... எப்பொழுது வேண்டுமானாலும் ; வெட்டியா இருக்கும் போது பொழுதுபோக்க பேசலாம்
எனது அன்மிக தேடல் என்பது எந்த கோவிலில் எப்போ பொங்கல் கிடைக்கும் என்ற அளவில் இருக்கு
சுலபமாக வியாபாரம் ஆகும் பொருள் கடவுள் மட்டுமே ..... நிறைய காசு பார்க்கலாம்...... அதனால் போதகர் ஆகும் எண்ணம் கூட எனக்கு இருக்கு
:-))
உலகத்தில் சிலர் ஆளுமை அடைவதற்கே கடவுள் என்ற மென்பொருள் (மெய்பொருள்) உருவாக பட்டது
விமர்சனம் நன்று
மனிதர்களே இவ்வளவு கேனையனா இருக்கும் பொழுது ...... மனிதர்களின் முலம் என்று கருத படும் கடவுள் எவ்வளவு பெரிய கேனையனா இருப்பான்........
கடவுள் கட்டாயமாக இருக்கிறார்......
ஆனால் எதற்கு இருக்கிறார் என்று தான் தெரியவில்லை
கடவுளை ஒரு பிரபலமான விற்ப்பனை பொருளாக தான் நான் பார்க்கிறேன்.....
நம்ம கேட் நடிச்ச அந்த சீன் பெட்டரா இந்த சீன் பெட்டரா, அவங்க இப்ப அழகா அப்ப அழகாங்கற உருப்படியான விவாதங்களை விட்டுட்டு கடவுள், சித்தர், ஆன்மீகம், சிந்தனை அப்பிடின்னு வாதம் பண்ற எல்லோரையும் கண்டிக்கிறேன்
dvd கிடைச்சா பார்த்துட்டு சொல்றேன் வால்...
நல்ல விமர்சனம்.
சித்தர்கள் சிவபோதையில்(கஞ்சா) என்னேரமும் இருப்பது இதனால் தானா தெரியவில்லை.////////
இருக்கலாம் . நல்ல பகிர்தல்
சித்தர்னா யாரு வாலு,
நம்ம பழனி சித்தரா?
அந்த வயித்திய சாலை....?
//வால்பையன் said...
தோழி ஈஸ்வரியுடன் சேர்ந்து யாராவது சூடான விவாதத்தை ஆரம்பித்து வைத்தால் ஸ்கூலுக்கு போயிட்டு வந்து நானும் கலந்துக்குவேன்!
இதே போன்று உள்ள உங்கள் கேள்விகளை இங்கே அடுக்கலாம்!
அடியேனுக்கு தெரிந்த அளவில் பதில் சொல்கிறேன்!//
ஓ... அப்ப இது திரை விமர்சனம் இல்லையா?
வாலுக்கு போரடிக்குது போல...நடத்துங்க.
ஐ ம் எ காம்ப்ளான் பாய்!
”நீ யார்” கேள்வி கேட்ட சாமியாரை நாம திரும்பி நீங்க யாருன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவாங்கன்னு தெரியல//
மறுபடியும் கேனத்தனமான ஒரு பதில் தான்... ஆனா சில சிந்தனை வாதிகள் இருக்காங்க ஒரேயடியா எல்லோரையும் சொல்ல முடியாது.
வாங்க! வாங்க! இத்தனை நாள் அடுத்தவர் வீட்டு வாசலிலேயே சரவெடி கொளுத்திப் போட்டுக் கொண்டிருந்த நம்ம வால்பையன், சொந்த வீட்டிலேயே கொளுத்திப் போட ஆரம்பிச்சிருக்காரு!
நாமளும் ஆரம்பிக்க வேணாமா?
//சித்தர்கள் சிவபோதையில்(கஞ்சா) என்னேரமும் இருப்பது இதனால் தானா தெரியவில்லை//
சினிமாவைப் பாத்து ஆன்மீகப் பயணம் போனாக்க அப்படித்தான் இருக்கும்!
//சித்தர்கள் சிவபோதையில்(கஞ்சா) என்னேரமும் இருப்பது இதனால் தானா தெரியவில்லை//
தெரியலையா?
இதேமாதிரி எந்நேரமும் "பகுத்தறிவு போதையிலேயே" இருக்கிற யாரையாவது கூப்பிட்டுக் கேட்கலாமா?
//சித்தர்கள் சிவபோதையில்(கஞ்சா) என்னேரமும் இருப்பது இதனால் தானா தெரியவில்லை.//
இது போன்ற கடுமையான கருத்துக்களை பொறுத்தவரை பொதுமைப் படுத்துவதை இயன்றவரை தவிர்க்கலாமே ப்ளீஸ் ?
மற்றபடிக்கு விமர்சனம் அருமை. உலக சினிமா அதிகம் பார்க்கும் உங்களுக்கு கூடிய சீக்கிரம் கோலிவுட்டில் இருந்து அழைப்பு வர வாழ்த்துக்கள்!
நன்றி.
கொஞ்சம் சீன்கள் பாத்துருக்கேன். பட் 'அந்த' சீன் எதுவும் பாக்கல. பாத்துட்டு பேசுவோம்.
ஓக்கேய் வால் சார்!
என்ன, இன்னும் விவாதம் சூடாகலையா?
இல்லே கொளுத்திப் போட்ட சரவெடி வெடிக்கவே இல்லையா?
கோவிக்கண்ணன் கூட வந்து தும்மிட்டுப் போயிட்டார். ஆனாக்க, இன்னமும் நம்ம தமிழ் ஓவியா ஐயா வரலையே...ஏன் ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?
டம்பி மேவீ ...
poda loosuuuuuuuuuuuuuuu
எதிர்பார்த்த விவாதம் நடக்கவில்லையென்றாலும் எனக்கு தேவையான கேள்விகள் கிடைத்து விட்டது!
கடவுளையும், கடவுள் புரோக்கர்களையும் விமர்சிப்பவர்களை லூசு என்று சொல்லுமளவுக்கு ஆன்மீகவாதிகள் திளிந்த மனதோடு இருப்பதால் நீண்டநாளாக நண்பர்கள் எதிர்பார்த்த காரசாரமான பதிவு அடுத்து!
மதங்களை பற்றியும் கடவுளை பற்றியும் நிறைய சர்ச்சைகள் வருவதுண்டு. கடவுள் என்பவர் மனிதனின் மன ஆரோக்கியத்துக்காக உருவாக்கப்பட்டவர்.
நமது மனம் என்பது அதி பயங்கர சக்தி வாய்ந்ததும் அதே நேரத்தில் பலகீனமானதுமான ஒன்றும். எனவே கடவுளை நான் நம்ப மாட்டேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. கடவுளை நம்பாமலேயே என் மனதுக்கு வேண்டிய பணிவையும் துணிவையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று சொல்கிறவன் மிக சிறந்த பயிற்சிகள் பெற்ற ஒரு அனுபவசாலியாகத்தான் இருக்க வேண்டும். மாறாக நாம் எல்லாம் அற்பம். எனவே கடவுள் நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்கிற போது அது இன்னும் செம்மை படுகிறது என்பது என் கருத்து. கடவுள் என்று சொகிற போது எந்த கடவுளாகவும் இருக்கலாம். மதங்களின் பெயரால் ஊரை ஏமாற்றும் பேர்வழிகளை இனம் கண்டு ஒதுக்க வேண்டும். மேலும் வால் போதையில் கடவுளை காண முடியும் என்கிறார்.
அவர் ஒரு வேளை மந்திரி ஆனால் எல்லா ஒயின் ஷாப்பையும் வழிபாட்டு தலமாக மாற்றிவிடுவார் போலிருக்கிறது.
மேலும் கஞ்சா சாமியார் பற்றி எல்லாம் சொல்வது நல்லதல்ல. நம் அனுபவத்திற்கு. காரணம் இல்லாத கடவுளை பற்றி இதுவரை சொல்லப்பட்டு நம்பப்பட்டு வந்தவற்றை அறியவே நமக்கு ஒரு தலைமுறை போதாது. அந்த மர்ம முடிச்சுகளில் சிக்காமலும்....அது எல்லாம் பொய் என்று போலித்தனமாய் சொல்லி வாழாமலும் கடவுளை அது உருவாக்கப்பட்ட காரணத்துக்காய் பின்பற்றி மன சுகம் பெறுவது நல்லது. எனக்கு கடவுள் தேவை இல்லை என்று சொல்பவர்கள் உண்மையில் ஞானிகள்.
Eswari said...
டம்பி மேவீ ...
poda லோஸூஊஊஊஊஊஊஉ
ஆத்தா ஈஸ்வரி! வாலைத் திருகியாச்சா? காரசாரமாப் பதிவு போடறேன்னு எங்க வால்பையன் கிளம்பிட்டாரும்மா.. கெளம்பிட்டாரு! இனிமே ஆயிரம் வாலா எல்லாம் இல்ல, பத்தாயிரம்வாலாதான்!
சரவெடி வெடிக்கப்போகுது சனங்களே! காதைப் பத்திரமாப் பாத்துக்கங்க!!
நல்லாத்தான் இருக்கு கேட் வின்ஸ்லெட் படம்.
நன்றி எவனோ ஒருவன்
நன்றி அருள்
நன்றி சென்ஷி
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி கதிர்-ஈரோடு
நன்றி நாஞ்சில் நாதம்
நன்றி தண்டோரா
நன்றி கோபி
நன்றி கார்க்கி
நன்றி மந்திரன்
நன்றி இளவட்டம்
நன்றி கோவி கண்ணன்
நன்றி யோ
நன்றி விகேஷ்வரன்
நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி ஜாஃபர்(ஞாபகம் வந்துருச்சு)
நன்றி சீனா
நன்றி கோபிநாத்
நன்றி ஜோதிபாரதி
நன்றி ஈஸ்வரி
நன்றி ரம்யா
நன்றி சொள் அலகன்
நன்றி சூரியன்
நன்றி டம்பீ மேவீ
நன்றி ராதாகிருஷ்ணன்
நன்றி கீத் குமாரசுவாமி
நன்றி ஜெட்லி
நன்றி சுரேஷ்குமார்
நன்றி பீர்
நன்றி ஜெகநாதன்
நன்றி ஆ! இதழ்கள்
நன்றி கிருஷ்ணமூர்த்தி
நன்றி மேக்ஸி
நன்றி அசோக்
நன்றி பப்பு
நன்றி மங்களூர் சிவா
நன்றி விசா
நன்றி சுரேன்!
இதில் கேள்வி கேட்டவர்களுக்கும் எதிர்வினை இரண்டாம் பாகத்தில் அலசப்படும்!
Post a Comment