குவியல்!.(25.08.09)

என்பால் அன்பு கொண்டு, எனக்கு நண்பர்கள் மாறி மாறி வழங்கிய விருதுகளுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது! தனிபதிவாக இடலாம், ஆனால் நமக்கு நாமே பட்டம் கொடுத்து கொள்வது போல் ஃபீல் பண்ணியதால் போடவில்லை, தயவுசெய்து எனக்கு விருதளித்த நண்பர்கள் மன்னிக்கவும், மேலும் இந்த விருதுகளை பிரித்தளிக்கும் பொருளாதார சூழ்நிலையில் தற்போது நான் இல்லாததால் ஒருமாதம் மார்வாடி கடைக்கு அனுப்பிவிட்டு அடுத்த மாதம் பிரித்து தருகிறேன்!

***********************

மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்தி கொள்கிறேன்! நீங்கள் எனக்கு பாலோயராக இருந்து, நான் உங்களுக்கு பாலோயராக இல்லையென்றால் தயவுசெய்து தெரியப்படுத்ததும்!, உங்கள் ப்ளாக் ஐடியை என் மெயிலுக்கு அனுப்பலாம்!

arunero@gmail.com

************************

தமிழோவியாங்கிற பேர்ல ஒருத்தர் எனக்கு பாலோயராக வந்தார், நம்ம பெரியார் புகழ்பரப்பி தமிழ் ஓவியான்னு நினைச்சிகிட்டு போனா, அவரு ஸ்பிலிட் பர்சனால்டியா மாறி, கோவிகண்னன், தமிழோவியா, தமிழச்சின்னு பெரிய பிரபலங்கள் பேரை வச்சிகிட்டு நிக்கிறாரு, தீடிரென்று ரெண்டு நாளைக்கு முன்னாடி என்பேரையும் அவுங்களோட சேர்த்து அவுங்க புகழுக்கு களங்கம் பண்ணிட்டாரு! போலி தமிழோவியா அண்ணே, நான் அம்புட்டு வொர்த் இல்லைனே!

***************************

நண்பர் திரவியநடராஜன் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை பற்றி தனியாக ஒரு வலைப்பூ எழுதுகிறார்! நாம் அனைவரும் நுகர்வோர் என்பதால் நிச்சயமாக பயன்படும் என்று உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்! உங்கள் சந்தேகங்களையும் தீர்த்து வைப்பதாகவும் சொல்லியிருக்கிறார்!

அவரது ப்ளாக்

****************************

நமது வலையுலக நண்பர்கள் சிலர், அவர்களது வலைப்பூவிற்கு வருகை தரும் நண்பர்கள் களைப்பாய் இருந்தால் அவர்களை குஷிபடுத்தும் நோக்கில் அவர்களது ப்ளாக்கில் ரேடியோவை இணைத்திருக்கிறார்கள்! அவைகளெல்லாம் சொந்தமாக கணிணி வைத்து வீட்டிலேயே மேய்ந்து(நான் அலுவலகத்தில் மேய்கிறேன்) கொண்டிருப்பவர்களுக்கு சரியாக இருக்கும்! இங்கே தீடிரென்று என் கணிணி மட்டும் அலறி மற்றவர்களை டரியலாக்குகிறது!
என் நெட்டை பிடுங்கும் முன் பெரியமனது பண்ணி அதை எடுத்து விடுங்கள் ப்ளீஸ்!

***************************

மதுரையில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு நண்பர் ஸ்ரீயும், கார்த்திகைப்பாண்டியனும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள், புத்தகத்திற்காக இல்லையென்றாலும் காந்திராஜன் அவர்களின் இந்தியமரபு ஓவிய மீட்டெடுப்பு பணிக்கு ஒரு எட்டு போய் வரலாம்! அருகில் இருக்கும் நண்பர்கள் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்!

***************************

கவிதைக்கு பதிலா ஒரு சிந்தனை!
(பெண்கள் அடிக்க வராதிங்க)

பெண்களை பழிவாங்க சிறந்த வழி எது?

நகை, புடவை, அழகு பொருள்கள் எல்லாம் வாங்கி கொடுங்க!
ஆனா பார்க்க கண்ணாடி மட்டும் கொடுக்காதிங்க!

67 வாங்கிகட்டி கொண்டது:

Anonymous said...

கடைசி கவுஜ சூப்பர்.. நிசத்துக்கு எதுக்கு அடிக்கணும்???

சரவணன் (Saravanan) said...

தல ...என்ன இது...உங்களுக்கு விளம்பரம் தேவயில்லை...நீங்க இப்படி தான் பழி வாங்குவிங்களோ? நன்றாக உள்ளது...

ப்ரியமுடன் வசந்த் said...

தல இந்தவாட்டி குவியலில் புத்த்க கண்காட்சி,நுகர்வோர் பற்றிய திரவியத்தின் அறிமுகம் பயனளிப்பதாக உள்ளது................ஃபாலோவர் ஆனதுக்கு மிக்க நன்றி

sarathy said...

:-))))))))

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

குவியல் அருமை அருண்.

//பெண்களை பழிவாங்க சிறந்த வழி எது?//

சூப்பர் தல :-)

sakthi said...

mayil said...

கடைசி கவுஜ சூப்பர்.. நிசத்துக்கு எதுக்கு அடிக்கணும்???

repeating

Malini's Signature said...

/இந்த விருதுகளை பிரித்தளிக்கும் பொருளாதார சூழ்நிலையில் தற்போது நான் இல்லாததால் ஒருமாதம் மார்வாடி கடைக்கு அனுப்பிவிட்டு அடுத்த மாதம் பிரித்து தருகிறேன்/

அந்த மார்வாடி கடை அட்ரஸ் கொஞ்சம் குடுங்க எதிர்காலத்தில் பயன்படும். :-)

Suresh Kumar said...

நல்ல குவியல் நல்ல தகவல்கள் கவுஜ சூப்பர்

கார்ல்ஸ்பெர்க் said...

//இங்கே தீடிரென்று என் கணிணி மட்டும் அலறி மற்றவர்களை டரியலாக்குகிறது!//

-மத்தவங்க தான.. அதான பார்த்தேன்.. நம்ம தான் எப்பவும் ஸ்டெடி ஆச்சே :)

- இரவீ - said...

//பெண்களை பழிவாங்க சிறந்த வழி எது?//
அட்ரா சக்கை ... அட்ரா சக்கை ...

Menaga Sathia said...

குவியல் நல்லாயிருக்கு வால்!!

கடைசி கவிதையும் சூப்பர்!!

சென்ஷி said...

:)

கடைசி சிந்தனை ரொம்ப டெர்ரர் :)

அப்துல்மாலிக் said...

வால் குவியலில் நிறைய சிந்தனை இருக்கு

கடைசி வரி சூப்பர்

பீர் | Peer said...

சிந்தனை நல்லாயிருக்கு வால், ;)

இந்தமுறையும் சினிமா மிஸ்ஸிங்.

பீர் | Peer said...

சொல்லமறந்துட்டேன்,

ஏன் வால், ஃபீட் கண்ட்ரோல் பண்ணிட்டீங்க? ஹிட்ஸ்?

அது சரி(18185106603874041862) said...

//
பெண்களை பழிவாங்க சிறந்த வழி எது?

நகை, புடவை, அழுகு பொருள்கள் எல்லாம் வாங்கி கொடுங்க!
ஆனா பார்க்க கண்ணாடி மட்டும் கொடுக்காதிங்க!

//

ம்ஹூம்....இந்த ஐடியா ஒத்து வராது அருண்...

லேடீஸ் நகை, புடவையெல்லாம் வாங்கறதே அவங்களுக்காக இல்ல...அடுத்த வீட்டு பொண்ணுக்கு போட்டியா தான்....நீங்க கண்ணாடி கொடுக்காட்டியும் பக்கத்து வீட்டு பொண்ணு பார்த்தாலே அவங்களுக்கு போதும் ;0))

லேடீஸ்...இதுக்காக என்னை எதிர்த்து (நான்) சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டாம்...நான் அவ்ளோ வொர்த் இல்ல...

Vidhoosh said...

//கவிதைக்கு பதிலா ஒரு சிந்தனை!
(பெண்கள் அடிக்க வராதிங்க)
பெண்களை பழிவாங்க சிறந்த வழி எது?
நகை, புடவை, அழுகு பொருள்கள் எல்லாம் வாங்கி கொடுங்க!
ஆனா பார்க்க கண்ணாடி மட்டும் கொடுக்காதிங்க!//
ஏன்? நீங்க வாங்கி கொடுத்ததெல்லாம் டூப்ளிகேட்டுன்னு தெரிஞ்சுரும்னா?
"அழுகு பொருள்ன்னு சொல்லிட்டு அடிக்கவேண்டாம்னு வேற எதுக்கு கெஞ்சணும்...

இருங்க கோவை சரளாவை அனுப்பி வைக்கிறேன்..

குவியலில் ஊதுபத்தி வாசம் மட்டும் இல்லையே.

--வித்யா

அப்பாவி முரு said...

ஓரண்டை இழுக்க ஒன்னுமில்லாததால் நான் அப்பாலிக்கா வாரேன்

ஆ.ஞானசேகரன் said...

//மேலும் இந்த விருதுகளை பிரித்தளிக்கும் பொருளாதார சூழ்நிலையில் தற்போது நான் இல்லாததால் ஒருமாதம் மார்வாடி கடைக்கு அனுப்பிவிட்டு அடுத்த மாதம் பிரித்து தருகிறேன்!//

கண்டிப்பா கொடுத்து விடனும் நண்பா

ஜெட்லி... said...

//நகை, புடவை, அழுகு பொருள்கள் எல்லாம் வாங்கி கொடுங்க!
ஆனா பார்க்க கண்ணாடி மட்டும் கொடுக்காதிங்க!

//

:)

பித்தனின் வாக்கு said...

ஐயோ எது என்ன விபரிதமான யோசனை. அப்புறம் அவங்க நம்மளை ஏங்க நான் அழகா இருக்கான(ஒரு ஆயிரம் தடவை) கேட்டு நம்மளை ஒரு ஆயிரம் பொய் சொல்ல வைப்பாங்க. இந்த பொய்யை ௲௦ தடவை சொன்னாலும் தப்பு இல்லை.
ஆனா உண்மையை சொல்லிடக் போறீங்க அப்புறம் தட்டுல சோறு கிடைக்காது.

மேவி... said...

"ஒருமாதம் மார்வாடி கடைக்கு அனுப்பிவிட்டு அடுத்த மாதம் பிரித்து தருகிறேன்"


இது நல்ல ஐடியாங்க ....


"போலி தமிழோவியா அண்ணே, நான் அம்புட்டு வொர்த் இல்லைனே!"


எம்புட்டு வொர்த் ன்னு சொன்னால் நல்ல இருக்கும் வால்ஸ்


"அவர்களை குஷிபடுத்தும் நோக்கில் அவர்களது ப்ளாக்கில் ரேடியோவை இணைத்திருக்கிறார்கள்! "


இது தான் காரணமா ....... ஒரு பிரபல பதிவாளர் உங்கள் மேல் கோவமாய் இருக்கிறார் ..... இது தான் காரணம் என்று சொல்லி விடுகிறேன்


"பெண்களை பழிவாங்க சிறந்த வழி எது?"

ஆண்கள் அவர்களை திருமணம் செய்து கொள்ளவது தான் .........

sriram said...

//நீங்கள் எனக்கு பாலோயராக இருந்து, நான் உங்களுக்கு பாலோயராக இல்லையென்றால் தயவுசெய்து தெரியப்படுத்ததும்!//

தெரியப்படுத்தறேன் வாலு

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com

நட்புடன் ஜமால் said...

நுகர்வோர் மேட்டர் பயணானது

---------------

என் கண்களே
அவர் கண்ணாடி

துளசி கோபால் said...

//நகை, புடவை, அழுகு பொருள்கள் எல்லாம் வாங்கி கொடுங்க!//

நகை மட்டும் போதும். (வேணாமுன்னா வேற டிசைன் மாத்திக்குவோம்)

புடவை... ப்ளீஸ் நோ.

பொதுவா ஆண்கள் கலர் ப்ளைண்ட்(-:

அதென்ன அழுகு....

ஓ... அதைத்தான் காய்கறிகள் என்ற பெயரில் உங்க தலையில் கட்டிடுறாங்களே வியாபாரிகள்:-) அதுக்கு எங்களுக்கு கண்ணாடி வேணுமா என்ன?

சீரியஸாச் சிந்திக்கறீங்க? :-)))))

Anonymous said...

குவியல் குதூகலம் அருண்...
இரண்டாவது பத்தி ஆஹா அவ்ளோ நல்லவங்களா நீங்க?
அட இப்பத்தான மதுரைக்கு போய்வந்தேன்....மிஸ் பண்ணிட்டேன்....
பெண்களை பழி வாங்க.... நல்லாவே சிந்திக்கிறீங்க அப்பு....கண்ணாடி தரலைன்னா என்னா உங்க முன்னாடி வந்து நின்னு தண்டனை வழங்கறோம்..இதுக்கு பேசமா கண்ணாடி தந்துடுங்க!!!!

Sanjai Gandhi said...

//நண்பர் திரவியநடராஜன் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை பற்றி தனியாக ஒரு வலைப்பூ எழுதுகிறார்! நாம் அனைவரும் நுகர்வோர் என்பதால் நிச்சயமாக பயன்படும் என்று உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்! உங்கள் சந்தேகங்களையும் தீர்த்து வைப்பதாகவும் சொல்லியிருக்கிறார்!//

பச்ச போர்ட் கடைல சில்ற தர மாட்டேங்கறாங்களாமே. அதுக்கு தீர்வு இருக்கான்னு பார்த்துட்டிங்களா வால்? :))

//மதுரையில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு நண்பர் ஸ்ரீயும், கார்த்திகைப்பாண்டியனும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள், புத்தகத்திற்காக இல்லையென்றாலும் காந்திராஜன் அவர்களின் இந்தியமரபு ஓவிய மீட்டெடுப்பு பணிக்கு ஒரு எட்டு போய் வரலாம்!//

ஆக.. ஸ்ரீ கிட்ட இருந்து இன்னொரு பதிவு வரப் போகுது. வெய்ட் எல்லாம் கொறைச்சிட்டிங்களா வால்? :))

Mythees said...

குவியல் ஜூப்பருங்கோ

Saravanan Trichy said...

:-)))

குசும்பன் said...

//மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்தி கொள்கிறேன்! நீங்கள் எனக்கு பாலோயராக இருந்து, நான் உங்களுக்கு பாலோயராக இல்லையென்றால் தயவுசெய்து தெரியப்படுத்ததும்!, உங்கள் ப்ளாக் ஐடியை என் மெயிலுக்கு அனுப்பலாம்!
//

இதுக்கு பேருதான் கிவ் அண்ட் டேக் பாலிசியா?:))) நல்லா இருங்க:)

Thamira said...

"பெண்களை பழிவாங்க சிறந்த வழி எது?"

ஆண்கள் அவர்களை திருமணம் செய்து கொள்ளவது தான் ...//

இதுக்கு பேர் பழிவாங்குறதா? டம்பிக்கு மூளையே கிடையாதா? ஹிஹி..

உங்கள் ராட் மாதவ் said...

சூப்பர்.... படிச்சதும் அப்படியே 'முனியாண்டி விலாஸ் பிரியாணி' சாப்பிட்ட மாதிரி
இருக்கு... :-)

கிருஷ்ண மூர்த்தி S said...

குவியலில் வாசம் பிடிச்சு வித்யா கண்டுபிடிச்சது:
/குவியலில் ஊதுபத்தி வாசம் மட்டும் இல்லையே./

இப்ப வாசம் புடிச்சுட்டு சொல்லுங்க:))

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்பையன் சொன்னது:
/பெண்களை பழிவாங்க சிறந்த வழி எது?/
இத உங்க ஊட்டுக்கார அம்மா, பொண்ணுகிட்டப் பெர்மிஷன் வாங்கினப்புறம் தானே எழுதினீங்க?

கிருஷ்ண மூர்த்தி S said...

ஆதிமூல கிருஷ்ணன் ஆதியந்தமெல்லாம் பாத்துட்டுக் கேட்டது:
/"பெண்களை பழிவாங்க சிறந்த வழி எது?"

ஆண்கள் அவர்களை திருமணம் செய்து கொள்ளவது தான் ...//

இதுக்கு பேர் பழிவாங்குறதா? டம்பிக்கு மூளையே கிடையாதா? ஹிஹி../

என்னங்க பண்றது? அவர் ஊட்டுக்காரம்மா சொன்னதைத் தானே அவரு சொல்லியாக வேண்டியிருக்கிறது:-))

கிருஷ்ண மூர்த்தி S said...

/ :)

கடைசி சிந்தனை ரொம்ப டெர்ரர் :)

August 26, 2009 12:28 AM
Blogger அபுஅஃப்ஸர் said...

வால் குவியலில் நிறைய சிந்தனை இருக்கு/

எதுல? வால் குவியலிலா, இல்ல வால் பையன் எழுதின குவியலிலா?

க.பாலாசி said...

//ஒருமாதம் மார்வாடி கடைக்கு அனுப்பிவிட்டு அடுத்த மாதம் பிரித்து தருகிறேன்!//

டப்பு ரொம்ப தேவையோ?

//போலி தமிழோவியா அண்ணே, நான் அம்புட்டு வொர்த் இல்லைனே!//

அடடா, என்னா தன்னடக்கம்..

//நகை, புடவை, அழகு பொருள்கள் எல்லாம் வாங்கி கொடுங்க!
ஆனா பார்க்க கண்ணாடி மட்டும் கொடுக்காதிங்க!//

கல்யாணமான புண்ணிவான்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்...

இன்றுதான் உங்களின் குவியலை படிக்கிறேன். சும்மா சோக்கா இரிக்கிது நைனா...

கிருஷ்ண மூர்த்தி S said...

குசும்பன் குசும்போட கேட்டது:
/இதுக்கு பேருதான் கிவ் அண்ட் டேக் பாலிசியா?:))) நல்லா இருங்க:)/

இடைத் தேர்தல், பொதுத் தேர்தல் வர்ற நேரத்துல மட்டும் கிவ்'வர மாதிரி கிவ்வி விட்டு, அஞ்சுவருஷம் டேக்'கரதை விட இது பரவாயில்லையா, இல்லையா?

:-)))

கிருஷ்ண மூர்த்தி S said...

அருண், புத்தகக் கண்காட்சிக்கு நிச்சயம் வருவேன், அதுக்காக சாருவோட சந்திப்பு, அது இதுன்னு பயமுறுத்தாம இருந்தா, நேர்ல சந்திக்கலாம்:-))

மணிஜி said...

மதுரை வருபர்களை நன்றாக கவனிப்போம்ன்னு ஸ்ரீ சொல்லியிருக்காரு..

தினேஷ் said...

/நமது வலையுலக நண்பர்கள் சிலர், அவர்களது வலைப்பூவிற்கு வருகை தரும் நண்பர்கள் களைப்பாய் இருந்தால் அவர்களை குஷிபடுத்தும் நோக்கில் அவர்களது ப்ளாக்கில் ரேடியோவை இணைத்திருக்கிறார்கள்! அவைகளெல்லாம் சொந்தமாக கணிணி வைத்து வீட்டிலேயே மேய்ந்து(நான் அலுவலகத்தில் மேய்கிறேன்) கொண்டிருப்பவர்களுக்கு சரியாக இருக்கும்! இங்கே தீடிரென்று என் கணிணி மட்டும் அலறி மற்றவர்களை டரியலாக்குகிறது!
என் நெட்டை பிடுங்கும் முன் பெரியமனது பண்ணி அதை எடுத்து விடுங்கள் ப்ளீஸ்!//

பெரும்புண்ணியமா போகும் .. எடுத்துருங்க ..

தினேஷ் said...

/பெண்களை பழிவாங்க சிறந்த வழி எது?

நகை, புடவை, அழகு பொருள்கள் எல்லாம் வாங்கி கொடுங்க!
ஆனா பார்க்க கண்ணாடி மட்டும் கொடுக்காதிங்க!//

குடிமக்களை பழிவாங்க சிறந்த வழி எது?

ரம்,பிராந்தி,வோட்கா,விஸ்கி எல்லாம் வாங்கி கொடுங்க!
ஆனா குடிக்க கிளாஸ் மட்டும் கொடுக்காதிங்க!

ஈரோடு கதிர் said...

//நான் அம்புட்டு வொர்த் இல்லைனே//

பொய் சொல்லாதீங்க அருண்

மதுரை செல்லும் முன் தகவல் கொடுங்கள் நானும் வருகிறேன்

VISA said...

//நகை, புடவை, அழகு பொருள்கள் எல்லாம் வாங்கி கொடுங்க!
ஆனா பார்க்க கண்ணாடி மட்டும் கொடுக்காதிங்க!//

தலைவா நீ சொன்ன மாதிரியே ஒரு பொண்ணுக்கு நேத்தைக்கு புடவை நகை அழகு பொருள் எல்லாம் வாங்கி கொடுத்தேன். ஆனா கண்ணாடி மட்டும் கொடுக்கல. அவ பழி வாங்கும் விதமா இராத்திரி எல்லாத்தையும் கழட்டிட்டு எனக்கு கண்ணாடி(ஸ்பெக்ட்ஸ்) கொடுக்கல. இருட்டுல ஒண்ணுமே பாக்க முடியல....ஹீ ஹீ...ஹீ..

thamizhparavai said...

குவியல்ல சமூக சிந்தனை அதிகமா இருக்குது...
திரவியநடராஜன் இணைய இணைப்பிற்கு நன்றி...
சிந்தனை நிதர்சனம்...

அகநாழிகை said...

வால்,

//அண்ணே, நான் அம்புட்டு வொர்த் இல்லைனே!//

ஏன் இந்த கொல வெறி ?

ஜோசப் பால்ராஜ் said...

//ரம்,பிராந்தி,வோட்கா,விஸ்கி எல்லாம் வாங்கி கொடுங்க!
ஆனா குடிக்க கிளாஸ் மட்டும் கொடுக்காதிங்க!//

ஹே ஹே ஹே, சின்னப்புள்ளத்தனமா யோசனை சொல்றாங்கப்பு.
நமக்கெல்லாம் கிளாஸ் வேற தேவையா? அப்டியே சாய்ச்சுர மாட்டோம்?

மிக்ஸிங் எப்டி போடுவன்னு கேட்காதிங்க, நாங்க சரக்கையும், மிக்ஸிங்கையும் தனி தனியா குடிச்சுட்டு ரெண்டு குதி குதிச்சு உள்ளாறயே மிக்ஸிங் போட்டுக்குவோம்.

நல்லா சொல்றாங்க ஐடியா. போங்கப்பு, போயி சட்டு புட்டுன்னு சரக்க வாங்கிட்டு வாங்க.

கோவி.கண்ணன் said...

//மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்தி கொள்கிறேன்! நீங்கள் எனக்கு பாலோயராக இருந்து, நான் உங்களுக்கு பாலோயராக இல்லையென்றால் தயவுசெய்து தெரியப்படுத்ததும்!, உங்கள் ப்ளாக் ஐடியை என் மெயிலுக்கு அனுப்பலாம்!

arunero@gmail.com//

இதுக்குப் பேருதான் மொய் விருந்தா ?

அவ்வ்வ்வ்வ்வ் !

கோவி.கண்ணன் said...

ஆஹா மீ தான் 50 யா ?

அவ்வ்வ்வ்வ்வ்!

கலையரசன் said...

//நான் அம்புட்டு வொர்த் இல்லைனே!//
தன்னடக்கம்.. ம்?

//உங்கள் ப்ளாக் ஐடியை என் மெயிலுக்கு அனுப்பலாம்!//
பட், உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!!

//மார்வாடி கடைக்கு அனுப்பிவிட்டு//
இந்த மார்வாடி கடை அட்ரஸ் சொன்னீங்கன்னா.. நானும் வைக்க வசதியா இருக்கும்!

//உங்கள் சந்தேகங்களையும் தீர்த்து வைப்பதாகவும் சொல்லியிருக்கிறார்//
நீங்க பாட்டுக்கு அவரு பிளாக் அட்ரஸ் குடுத்துட்டீங்க...
நம்ம மக்கள் போயி அவரை..
நீங்க வெறும் நடராஜனா?
இல்ல.. ராஜநடை ராஜனான்னு
கேக்காம இருந்தா சரி!

//தீடிரென்று என் கணிணி மட்டும் அலறி மற்றவர்களை டரியலாக்குகிறது!//
இதெல்லாம் ஒரு பிராபளமா பாசு.. டாஸ்க் பார்ல உள்ள சவுண்டை மியூட் பண்ணி வச்சிக்குங்க! படிக்கும்போது சவுண்டு எதுக்கு?

இந்த மாத குவியல்ல.. உங்க டச் கொஞ்சம் கம்மிதான்!!

கபிலன் said...

கவிதை சூப்பர்!

சப்ராஸ் அபூ பக்கர் said...

பெண்களை பழிவாங்குற சிறந்த வலி சூப்பருங்க.....

வாழ்த்துக்கள்.......

Eswari said...

//அது சரி said...
//
பெண்களை பழிவாங்க சிறந்த வழி எது?

நகை, புடவை, அழுகு பொருள்கள் எல்லாம் வாங்கி கொடுங்க!
ஆனா பார்க்க கண்ணாடி மட்டும் கொடுக்காதிங்க!//

ம்ஹூம்....இந்த ஐடியா ஒத்து வராது அருண்...

லேடீஸ் நகை, புடவையெல்லாம் வாங்கறதே அவங்களுக்காக இல்ல...அடுத்த வீட்டு பொண்ணுக்கு போட்டியா தான்....நீங்க கண்ணாடி கொடுக்காட்டியும் பக்கத்து வீட்டு பொண்ணு பார்த்தாலே அவங்களுக்கு போதும் ;0))//

நா சொல்ல நெனைச்சேன் இவங்க சொல்லிட்டாங்க. இன்னும் கொஞ்சம் நல்லா யோசிங்க.

ஹேமா said...

வால் பையன் ஏன் உங்களுக்கு இவ்ளோ பொறாமை.ஏன் தளங்களில் வானொலிகளை எடுக்கச் சொல்றீங்க.
நீஙக உங்கள் கணணியின் ஒலியை நிறுத்திவிட்டுப் பார்க்கலாம்தானே !ஏனென்றால் சிலருக்குப் பிடித்திருக்கிறது வானொலி.(ஓ... அதனால்தானோ என் தளம் வரமாட்டீங்க !)

வாலு...எல்லாப் பெண்களும் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.அப்பிடியான ஒருத்தரையும் நீங்க சந்திக்கேல்லையோ !

நாஞ்சில் நாதம் said...

:))

யோ வொய்ஸ் (யோகா) said...

எனக்கும் 2 பெண்களை பழி வாங்க இருக்கு. பார்த்த்துகிறேன்.

ஐடியாவுக்கு நன்றி தல

அன்புடன் அருணா said...

//நகை, புடவை, அழகு பொருள்கள் எல்லாம் வாங்கி கொடுங்க!
ஆனா பார்க்க கண்ணாடி மட்டும் கொடுக்காதிங்க!//
பெண்களைப் பழிவாங்கவா...மனைவியைப் பழிவாங்கவா?சரியாச் சொல்லுங்க வால்???

Anonymous said...

என்னுடைய வலைப்பூ பற்றி குவியலில் கூறியதிற்கு நன்றி வால் பையன்!.

பதி said...

//அவைகளெல்லாம் சொந்தமாக கணிணி வைத்து வீட்டிலேயே மேய்ந்து(நான் அலுவலகத்தில் மேய்கிறேன்) கொண்டிருப்பவர்களுக்கு சரியாக இருக்கும்! இங்கே தீடிரென்று என் கணிணி மட்டும் அலறி மற்றவர்களை டரியலாக்குகிறது!
என் நெட்டை பிடுங்கும் முன் பெரியமனது பண்ணி அதை எடுத்து விடுங்கள் ப்ளீஸ்!//

அதே....

:(

Romeoboy said...

நச்சுன்னு கடைசியா ஒரு சூப்பர் மேட்டர் சொல்லி இருக்கிங்க ...

அ.மு.செய்யது said...

//பிரித்தளிக்கும் பொருளாதார சூழ்நிலையில் தற்போது நான் இல்லாததால் ஒருமாதம் மார்வாடி கடைக்கு அனுப்பிவிட்டு அடுத்த மாதம் பிரித்து தருகிறேன் //

இந்த‌ ஐடியா என‌க்கு தோணாம‌ போச்சே !!!!

அ.மு.செய்யது said...

க‌மெண்டு மாட‌ரேஷ‌னா ????? அவ்வ்வ்வ்வ் !!!!!!

Unknown said...

<<

நண்பர் திரவியநடராஜன் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை பற்றி தனியாக ஒரு வலைப்பூ எழுதுகிறார்! நாம் அனைவரும் நுகர்வோர் என்பதால் நிச்சயமாக பயன்படும் என்று உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்! உங்கள் சந்தேகங்களையும் தீர்த்து வைப்பதாகவும் சொல்லியிருக்கிறார்!

>>

யப்பா...

ஒரு உருப்படியான விசயம்...

நன்றி வாலு :)

SUMAZLA/சுமஜ்லா said...

வாலு...இந்த வாலுக்கேத்த நூலுக்கிட்ட ஒரு நாளைக்கு சிக்கித்தான் ஆகணும். அப்போ இந்த பெண்ணிஸ கவுஜ படியுங்கோ! அப்புறம் கண்ணாடியில பாருங்கோ, முக வீக்கத்தை!

கிருஷ்ண மூர்த்தி S said...

/ SUMAZLA/சுமஜ்லா said...

வாலு...இந்த வாலுக்கேத்த நூலுக்கிட்ட ஒரு நாளைக்கு சிக்கித்தான் ஆகணும். அப்போ இந்த பெண்ணிஸ கவுஜ படியுங்கோ! அப்புறம் கண்ணாடியில பாருங்கோ, முக வீக்கத்தை!/

எதை?வால் நூலான கதையா?

அவர் ஏற்கெனெவே சிக்கிட்டாருங்கோ!கராத்தே குங் புன்னு கத்து வச்சிருக்கிற பொண்ணைப் பெத்த பெருமையில தாங்க, ரகசியமா கவுஜயெல்லாம் படிக்கிறாருங்கோ!

ஒருவன் தான் பெற்றதையே உலகுக்குக் கொடுக்கிறான் என்று சொல்வதையும் நீங்கள் சொல்வதையும் சேர்த்து வைத்துப் பார்த்தால்.........?

ஆஹா .......அங்க வாங்கறது எல்லாம் தான் இங்க வந்து விழுதா:-))

Anonymous said...

என்ன வால்! ஒரு எஸ் எம். எஸ் அனுப்பியிருந்தா, நானும் வந்திருப்பேன்லா?. இருந்தாலும் ஏரொடுக்கு லொல்லு ஜாஸ்தி தான்.

வால்பையன் said...

நன்றி மயில்
நன்றி சரவணன்
நன்றி பிரியமுடன் வசந்த்
நன்றி T.V.Radhakrishnan
நன்றி சாரதி
நன்றி பாலகுமாரன்
நன்றி சக்தி
நன்றி ஹர்சினி அம்மா
நன்றி சுரேஷ் குமார்
நன்றி கார்ல்ஸ்பெர்க்
நன்றி இரவீ
நன்றி Mrs.Menagasathia
நன்றி சென்ஷி
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி பீர்
நன்றி அதுசரி
நன்றி விதூஷ்
நன்றி அப்பாவி முரு
நன்றி ஆ,ஞானசேகரன்
நன்றி ஜெட்லி
நன்றி பித்தன்
நன்றி டம்பி மேவீ
நன்றி ஸ்ரீராம்
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி துளசிகோபால்
நன்றி தமிழரசி
நன்றி சஞ்சய் காந்தி
நன்றி மைத்தீஷ்
நன்றி குட்டிபிரபு
நன்றி குசும்பன்
நன்றி மங்களுர் சிவா
நன்றி ஆதிமூல கிருஷ்ணன்
நன்றி RAD MADHAV
நன்றி கிருஷ்ணமூர்த்தி
நன்றி பாலாஜி
நன்றி தண்டோரா
நன்றி கதிர்-ஈரோடு
நன்றி விசா
நன்றி தமிழ் பறவை
நன்றி அகநாழிகை
நன்றி ஜோசப் பால்ராஜ்
நன்றி கோவி கண்ணன்
நன்றி கலையரசன்
நன்றி கபிலன்
நன்றி சப்ராஸ் அபூ பக்கர்
நன்றி ஈஸ்வரி
நன்றி ஹேமா
நன்றி நாஞ்சில் நாதம்
நன்றி யோ வாய்ஸ்
நன்றி அன்புடன் அருணா
நன்றி திரவிய நடராஜன்
நன்றி பதி
நன்றி ராஜராஜன்
நன்றி அ.மு.செய்யது
நன்றி மஸ்தான்
நன்றி SUMAZLA/சுமஜ்லா
நன்றி lawforus

!

Blog Widget by LinkWithin