தோற்றம் - பரிணாமம்

அண்ணே, இந்த உலகம் எப்படி உருவாச்சுன்னு சொல்லுங்கண்ணே

மண்டைகுள்ள ஏற்கனவே இருப்பதையெல்லாம் கழட்டி அக்கட்ட வச்சிட்டு கேளு. இல்லைனா எல்லாத்தையும் எது கூடவாவது கம்பேர் பண்ணிட்டு இருப்ப

சரி சொல்லுங்க.

ஒண்ணுமேயில்ல

என்னாண்னே பொசுக்குன்னு முடிச்சிட்டுங்க

அடேய், இப்ப தான் ஆரம்பிச்சிகிறேன். எதுவுமேயில்ல அதாவது nothing. சரியா ஒண்ணுமேயில்ல என்பது ப்ளாங்க். அதற்கு கற்பனை கூட தேவையில்ல. ஒரு விபத்து ஏற்பட்டது. அதாவது ஒரு எனர்ஜி உருவாச்சு

இந்தா மாட்டிகிட்டிங்க

என்னடா.

நீங்க சொல்ற எனர்ஜி தான் நாங்க சொல்ற கடவுள்

சரி வச்சிக்கோ

அப்ப கடவுள் இருக்குன்னு ஒத்துகிறிங்களா

நீ தான் கடவுள் இல்லைன்னு ஒத்துகிட்ட

என்ன சொல்றிங்க

நான் nothingனு சொன்னேன். நீ godனு சொன்ன. அப்படினா nothing is god, god is nothing.

திரும்பவும் கடவுள் இல்லைன்னு சொல்றிங்களா

நான் ஆரம்பத்தில் இருந்தே அதை தானடா சொல்லிகிட்டு இருக்கேன்

சரி மேல சொல்லுங்க

உருவான எனர்ஜி ஒரு அழுத்தம் உருவாக்குச்சு, அழுத்தம் இருந்தால் நகர்வு இருக்கும், நகரனும்னா அதற்கு இடம் வேணும். அங்க தான் ஒன்னுமேயில்லயே. ஆக அந்த எனர்ஜி நகரமுடியாமல் வெடிச்சது. அது தான் பெருவெடிப்பு எனப்படும் பிக்பேங்க்.



அதுகுள்ள இருந்து இத்தனையும் வந்துச்சா?

அதென்ன ஃப்ரிஜ்ட் பொட்டியாடா உள்ள இருந்து வர்றதுக்கு. அந்த வெடிப்பு கொடுத்த அழுத்தம் வெப்பத்தை உண்டாச்சு, வெப்பம் மின்னோட்டத்தை உருவாக்குச்சு. அதுக்கு அளவுன்னு எதும் கிடையாது. ஆனா “இடத்தை உருவாக்கியது” அந்த மின்னோட்டம் தான் முதல் பொருள்னு சொல்லலாம்.



மின்னோட்டம்னா அலை தானே, அது எப்படி பொருளாகும்.

அந்த மின்னோட்டம் ஒரு பந்து மாதிரி வேகமாக சுற்றிகொண்டே இருந்தது. இதை புரிய வைக்கனும்னா சைக்கிள் டயர் எடுத்துக்கோ அது சுற்றாம இருக்கும் போது உன்னால் ஒரு பொருளை அதன் இடையில் வீச முடியும். அதுவே வேகமா சுற்றும் போது அது ஒரு தடுப்பா செயல்பட்டு தடுக்கும்ல.

அங்க போக்ஸ் கம்பி இருக்கும்ல.

பாயிண்ட் பிடிச்சிட்ட, அங்க போங்க்ஸ் கம்பி இருக்கு தடுத்தது. ஆனா வேகமான காத்து எப்படி பொருளை தடுக்குது. உன்னால் ஒரு பலூனை மேல் நோக்கி ஊதியே தள்ளி முடியும், அந்த இடத்தில் பொருளா இல்லாத காற்று தடுப்பா இருக்குதுல்ல. அது மாதிரி அந்த மின்னோட்டத்தின் வேகம் தடுப்பா செயல் பட்டு உலகின் முதல் பொருளாக உருவெடுத்தது. அங்கே தான் இடமும், காலமும் உருவாச்சு



அந்த பொருளுக்கு எதும் பேரு இல்லையா?

இதெல்லாம் நான் படிச்சு சொல்லல, அதுக்கு அவங்க எதாவது பேர் வச்சிருப்பாங்க. நீ அந்த கற்பனையில் அந்த பொருளை மட்டும் நினைச்சிக்கோ

அந்த ஒரு பொருளில் உலகம் எப்படி உருவாச்சு

அந்த பெருவெடிப்பு அங்கேயே நிற்கல. அதன் அழுத்தம் தந்த விசை அது இடத்தை உருவாக்கிக்கொண்டே போனது. அந்த அழுத்தம் எவ்ளோன்னு உனக்கு புரியும் படி சொல்லனும்னா இந்த மொத்த பிரபஞ்சத்தையும் அந்த ஒன்றை புள்ளியில் இருந்து வெளிபட்டதுன்னா அதோட அழுத்தத்தையும், வேகத்தையும் பார்த்துக்கோ

மொத்த பிரபஞ்சமுமா, முதல்ல அதென்ன ஃபிர்ட்ஜ் பொட்டியான்னு கேட்டிங்க

முதல் பொருள் உருவாச்சுன்னு சொன்னேன்ல, அதில் இருந்து பரிணாமம் பெற்று மாறியது தான் இந்த பிரபஞ்சம். இடம் விரிவடையும் போது அந்த மின்னோட்ட பொருள் மேலும் மேலும் உருவாகிக்கொண்டே இருந்தது. அது ஒன்றை ஒன்றை ஈர்த்து மேலும் வெப்பத்தை உண்டாக்கி மின்னோட்டம் அதிகமாகிக்கொண்டே போனது. பொருள் அதிகமாக ஆக மேலும் அழுத்தம் ஏற்பட்டு அது ஒன்றுடன் ஒன்று இணைந்தது. உருவம் பெற்றது. அந்த உருவத்தை சுற்றி மின்னோட்டங்கள் சுற்றி வந்தன.

ரைட்டு, எலைக்ட்ரான், புரோட்டான் பற்றி சொல்றிங்க

அதான் இந்த உலகமும்.



எலைக்ட்ரானும், புரோட்டனும் போட்டுகொண்ட போட்டியில் அல்லது அழுத்தத்தில் ஏகப்பட்ட தனிமங்கள் உருவாகின. தனிமங்கள் இணைந்து உலோகங்கள் உருவாகின. உலோகங்கள் இணைந்து கோள்களாக மாறின. இப்படி தான் உலகம் உருவாச்சு.

இதான் உண்மைன்னு எதை வச்சு சொல்றிங்க.

முதல் காரணம், அந்த பெருவெடிப்பின் தாக்கம் இன்னும் இந்த பிரபஞ்சம் விரிவடைந்துக்கொண்டே இருக்கு. இரண்டாவது காரணம் அந்த மின்னோட்டங்கள் இன்னும் இணைந்தும் பிரிந்தும் புது கோள்களை உருவாக்கியது. இருக்கும் கோள்கள் அழித்தும் மீண்டும் உருவாகுது

அதற்கு ஏன் கடவுளை மறுக்கனும்

கடவுள் தோற்றம் நோக்கம் கொண்டது. ஆனால் பெருவெடிப்பு எந்த நோக்கமும் கொண்டதல்ல, அதற்கு நீ நன்றி சொல்லவும் தேவையில்ல. ஏன்னா அது ஒரு விபத்து.

கடவுளுக்கும் உங்க அறிவியல் கோட்பாடும் எந்த இடத்தில் வேறுபடுது

உலகம் கடவுளால் படைக்கபட்டது என்றால் அதற்கு நிலைதன்மை இருக்கும். அணுக்கள் மாறி மாறி பிரிந்தும், சேர்ந்தும் நிலையற்ற தன்மை இருக்காது. கடவுள் தான் உலகத்தை படைத்தார் என்றால் கடவுளை படைத்தது யார் என்ற கேள்வியும் வரும்

அதான் முதல்ல நீங்க சொன்ன எனர்ஜி

அதை நான் திரும்பவும் சொல்றென். நத்திங் இஸ் காட், காட் இஸ் நத்திங்


3 வாங்கிகட்டி கொண்டது:

Prasaad.C said...

சூப்பர் தல

Atheist said...

பெரு வெடிப்பு என்பது உண்மையில் ஒரு வெடிப்பே அல்ல. அது பெரு விரிவாக்கம் என்பதுதான் சரி.

https://profmattstrassler.com/articles-and-posts/relativity-space-astronomy-and-cosmology/history-of-the-universe/big-bang-expansion-not-explosion/

மொத்தப் பிரபஞ்சமும் சுருங்கி விரிவடைதல் என்பது பல பில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை நடக்கிறது என வைத்துக் கொண்டால் எல்லாம் சரியாக வரும். இப்பொழுது எல்லாம் விரிவாகிறது. அப்புறம் எல்லாம் சுருங்கி ஒரு புள்ளியாக மாறும். அப்புறம் அதுவே மறுபடியும் விரிவாகும். அப்பொழுது அது புதுப் புது உலகங்களை உருவாக்கும். இது இப்படியே நடந்து கொண்டே இருக்கும். இதற்கு கடவுள் தேவையில்லை! ஆற்றலின் தத்துவமே செயலாக நடைபெறுகிறது!

பித்தனின் வாக்கு said...

அருமை, ஆனா ஒரு சக்தியை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு சக்தி இன்னோரு சக்தியாக மாறும் என்று ஒரு தத்துவம் சொல்லிவிட்டு,

ஒன்னும் இல்லாத நத்திங்ல திடிர்னு ஒரு சக்தி வருது, அது பெருவெடிப்பா மாறுது, என்றால் சொன்னா எப்படி?.

வெறும் சக்தின்னு சொல்ற எனர்ஜில எப்படி?. வெளிப்புற தாக்கம் இல்லாது பியுசன்,ஃபிக்சன் என்ற செயல்பாடு நடக்குது.

சரி பெருவெடிப்புக்கு முன்னர் பிரபஞ்ச நிலை என்ன?.

ஒருவேளை புராணங்களில் சொல்லும் யுக கோட்பாடாக இருக்கலாம் அல்லவா?. எல்லாம் இருந்து ஒரு புள்ளியில் குவிந்து (பியுசன்) அப்புறம் பெருவெடிப்பா மாறி மறுபடியும் உருவாகி, இனி மறுபடியும் குவிந்து பிரபஞ்சம் செத்து, செத்து விளையாடாதா?.

பெருவெடிப்பு கான்சப்டே ஒரு டுபாக்கூர்தான், அப்படி எல்லாம் இல்லை, பெருவெடிப்பு என்பது ஒரு நெபுலா( பால்வெளி அடங்கிய பகுதி) மட்டும்தான்,அதையும் தாண்டி லோகங்கள் (பெருவெளியில்) உள்ளது என்ற கொள்கை பற்றி?.

!

Blog Widget by LinkWithin