ரசிகன் - தொண்டன் - பக்தன் பாகம் 2

அடிப்படையில் இந்த மூணுபேருமே ஒரே கேட்டகிரி தான். தன் ரசனையும், கொள்கையும், நம்பிக்கையும் தான் பெருசு என அதிகபட்சமாக கொலை செய்யும் அளவுக்குக்கூட போவாங்க. இந்த மூணு பேருமே பொதுபுத்தி அடிப்படையில் பெரும்பான்மை பக்கம் தான் இருப்பதாக காட்டிக்கொள்வதில் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வார்கள். இவர்களுக்கு செலிபிரட்டி வொர்ஷிப் கண்டிப்பா செய்யனும். தன்னம்பிக்கை குறைந்தவர்கள். தம்மை யாரிடமாவது ஒப்புக்கொடுத்தே ஆகவேண்டும் இவர்களுக்கு.

இந்த லிஸ்ட்டை பற்றி நிறைய அலசலாம். ஆனாலும் இன்னைக்கு பார்க்கப்போறது தொண்டர்கள் பற்றி. குறிப்பாக அதிமுக தொண்டர்கள் பற்றி.

புரட்சிதலைவி அம்மா வழியில் ஆட்சி நடத்தப்படும் என்பதே இந்திய அரசியலைப்புசட்டபடி கோர்ட் தீர்ப்பை அவமதிப்பது. மக்களை முட்டாள் ஆக்குவது. குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட, மக்கள் பணத்தை கொள்ளையடித்த ஒருவரை இன்னும் தம் தலைமையாக கொள்வது நாங்களும் அதே தான் செய்வோம் என்பதை தவிர வேறென்ன கொள்கையாக இருக்கமுடியும்



இந்த மூணு பேரிடமும் இருக்கும் தவறான, அதை விசமானன்னு கூட சொல்லலாம். எல்லா தில்லுமுல்லுகளையும் ஆதாரத்தோடு நிரூப்பித்தாலும் யார் சார் தப்பு பண்ணலன்னு வந்து நிற்பார்கள். இவர்களின் கொள்கை பிடிப்பு என்பது அவனை பிடிக்கல அதுனால இவனை பிடிச்சிருக்கு என்பதாகவே இருக்கு. அதிமுகவின் முதன்மை கொள்கை திமுக எதிர்ப்பு மட்டுமே.



மன்னார்குடி குடும்பம் கையில் கட்சி போனதும் முகநூலில் பலர் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார்கள். அதில் ஒருவர் இரட்டை இலை சின்னம் யாருக்கு போகுதோ அவர்களை ஆதரிப்பேன்னு பதிவு போட்ருக்கார். செலிபிரட்டி மோகம், சின்னம் என்ற ப்ராண்ட் மோகம் தான் இவர்கள் கொள்கை போல. அதனால் தான் கட்சிகள் மக்களை அனைவரையும் முட்டாளாக நினைத்து அந்த சின்னத்தில் கழுதை நின்னாலும் ஜெயிக்கும்னு சொல்றாங்க. அப்படினா ஓட்டு போடும் உங்கள் அனைவரையும் கழுதைன்னு சொல்றாங்கன்னு அர்த்தம். அது தெரியாம குட்டிசுவற்றில் பேப்பர் பொறுக்குவதில் பிஸியா இருக்காங்க இந்த தொண்டர்கள்.



செயல்படாத அரசுன்னு போன ஆட்சியிலே சொன்னேன். ஜெயலலிதாவிற்கு பிறகு அரசியல் பழகாமல் யோகாசனம் பழகிய அமைச்சர்கள் மக்கள் நலதிட்ட பணிகளை யோசிப்பதை விட கட்சியை காப்பாற்றுவது, தன் பதவியை காப்பாற்றுவது என தியானநிலையில் பிஸியா இருக்காங்க

மோடி அரசு மன்னார்குடி குடும்பத்தின் மீது வன்மம் வைத்தே தாக்குதுன்னு வச்சிகுவோம். அது கூடாதுன்னா அடுத்து திமுக ஆட்சிகள் அவர்கள் ஊழலை வெளிகொண்டுவர மாட்டோம்னு சொல்றிங்களா உபிஸ்? நாங்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்னு நீங்களே ஒத்துகிறிங்க. அதிமுகவை காப்பாத்தி நீங்க என்ன பண்ண போறிங்கன்னு எனக்கு புரியவேயில்ல. உங்க கட்சியில் இருப்பவனும் அதிமுக நல்ல கட்சி போலன்னு ஓடிபோயிருவான்

1 வாங்கிகட்டி கொண்டது:

ராஜி said...

எது எப்படியோ தமிழ்நாட்டு மானம் காத்துல போய் நாசமாவும் போகுது

!

Blog Widget by LinkWithin