நீங்களும் உங்க புண்ணாக்கு சடங்குகளும்!

ஒரு ஊர்ல ஒரு மடம் இருந்தது. அங்கே நிறைய மாணவர்களும் ஒரு குருவின் இருந்தார். அந்த மாணவர்களுக்கு தினம் பாடம் சொல்லிக்கொடுப்பது அந்த குருவோட வேலை.

நல்லா போய்கிட்டு இருந்தா அந்த மடத்துகுள்ள திடீர்னு ஒரு பூனை வந்தது. குறுக்கும் மறுக்குமா ஓடிகிட்டு மாணவர்களை படிக்க விடாமல் தொந்தரவு பண்ணிகிட்டே இருந்தது.

என்ன பண்ணலாம்னு யோசிச்ச குரு, அந்த பூனைய பிடிசசு தூண்ல கட்டுங்கடான்னு உத்தரவு போட்டாரு, மாணவர்களும் அந்த பூனைய பிடிச்சு தூண்ல கட்டுனாங்க. வகுப்பு முடிந்ததும் அவுத்து விட்ருவாங்க. ஆனா அந்த கிறுக்கு பூனை மறுநாளும் மடத்திற்கு வந்தது. மாணவர்கள் பிடிச்சு கட்டி போடுவாங்க. இது அப்படியே தொடர்ந்தது.

ஒரு நாள் அந்த பூனை செத்து போச்சு. வகுப்புக்கு வந்த மாணவர்கள் பூனைய தேடுறாங்க எங்கேயும் கிடைக்கல. உடனே எல்லாரும் கூடி, குரு வந்தா பூனை எங்கன்னு கேட்பாரு. நாம ஊருகுள்ள போய் எதாவது பூனைய பிடிச்சிட்டு வந்து கட்டி வைக்கலாம்னு முடிவு பண்ணி அப்படியே பண்ணாங்க.



ஒருநாள் அந்த குருவும் செத்து போய்ட்டாரு, பின் அந்த மடத்துக்கு புதுசா ஒரு குரு வந்தாரு. அவரு வரும் போது தூண்ல பூனை கட்டப்பட்டு இருந்தது. இது என்னப்பான்னு கேட்டாரு. எங்க பழைய குரு சொல்லியிருக்காரு. வகுப்பு நடக்கும் போது தூண்ல பூனைய கட்டிப்போடச்சொல்லி. அதான் நாங்களும் பண்றோம்னு சொன்னாங்க. புது குருவும் எதோ காரணம் இருக்கும் போல. சரி இருக்கட்டும்னு விட்டுட்டாரு.



இதை ஏன் சொல்றேன்னா. கலாச்சாரம்,, பண்பாடு, மயிரு, மட்டைன்னு ஏன்னு காரணமே தெரியாம நீங்க பண்ற சடங்கு, சம்ருதாயங்கள் எல்லாமே இப்படி பூனைய தூண்ல கட்டுன கதை தான். தாத்தன் பண்ணான் அதான் நானும் பண்றேன்னு சொல்ல தெரியுமே தவிர அதை ஏன் பண்ணான்னு சொல்லத்தெரியாது.



அதெல்லாம் முட்டாள்தனம்னு சொன்னா என்னை பைத்தியகாரன்னு சொல்விங்க. சரி சொல்லிட்டு போங்க. அதானே உங்களுக்கு தெரியும்

1 வாங்கிகட்டி கொண்டது:

sharfudeen said...

சடங்குகளுக்கான அவசியம் நம்பிக்கை சார்ந்ததில்லே...என்னுடைய அனுமானம் - அன்றைய மக்களுக்கு பொழுது போக்கு என்று வரையறையில் எதுவும் இல்லை...ஒன்று கூடி களிப்பது மட்டுமே பிரதான பொழுதுபோக்கு...ஆகவே சடங்கு, திருவிழா...etc etc
- sharfudeen
kodaikanal

!

Blog Widget by LinkWithin