பார்ன் இன் சில்வர் ஸ்பூன்னா வசதியான குடும்பத்தில் பிறப்பது தானே, ஆனா நான் அப்படி தான் வாழ்ந்தேன் என் பால்யத்தில்.
மதுரை தங்கரீகல் தியேட்டர் முன்னாடி பிரேமாவிலாஸ்னு ஒரு அல்வா கடை இருக்கும். அங்க தான் எங்கப்பா வேலை பார்த்தார். ரீகல் தியேட்டரில் ப்ரூஸ்லி படம் போட்டா ஒரு ஆட்டோகாரர்ட்ட பணம் கொடுத்து என்னை வீட்ல வந்து கூட்டிகிட்டு, அவரும் என் கூட படம் பார்த்து, இண்டர்வெல்லில் முத ஒரு ஐஸ்கிரீம், படம் போடப்போகும் சமயம் ஒரு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து படம் முடிந்ததும் வீட்ல கொண்டு போய் விடனும்.
ஏழு வயசில் என் பிறந்தநாளுக்கு திருப்பரங்குன்றம் போற வழி ரெண்டாவது பாலத்துக்கு கீழ ஒரு பிள்ளையார் கோயிலில் அன்னதானம் பொட்டார். புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் வந்த மாதிரி எனக்கு அந்த கோவிலில் தான் ஞானம் வந்தது. எல்லாம் சரி, இந்த கல்லு எப்படி சாமியாகும்னு அப்ப தான் கேட்டனாம்.
எங்கப்பா என்னை அடிச்சதில்ல, கேள்வி கேட்டாதன்னு சொன்னதில்ல. மொத பையன்னு செம செல்லம். ரெண்டாவது படிக்கும் போது என் பாக்கெட் மணி ரெண்டு ரூபாய். அப்ப பால் ஐஸே 15 பைசா தான்னா பார்த்துக்கோங்க. என் கிளாஸுக்கே வாங்கி தருவேன். அப்ப பழகியது இப்ப ஃப்ரென்ஸ்க்கு சரக்கு வாங்கி கொடுத்து நாசமா போனேன்.
ப்ரேக்கிங் பாயிண்ட்ன்னு பார்த்தா அப்பா, அம்மா பிரிஞ்சு நான் ஈரோடு வந்தது. கேட்க ஆளில்லாமன்னு சொல்றதை விட கத்து கொடுக்க ஆளில்லாமன்னு சொல்லலாம். 14 வயசிலயே தண்ணி, தம்மு எல்லாம் கத்துகிட்டேன். கூடவே மனிதன் என்ற கெட்ட பழக்கமும். இன்று வரை என்னுடன் பழகும் யார்ட்டயும் சாதி கேட்டதும் இல்ல, பார்ப்பதும் இல்ல. என்னை வாழ வைத்த மனிதத்தை பிரிச்சி பார்க்க எனக்கு பிடிக்கல
ஊனமுற்ற பெண்ணை கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேன். டைவர்ஸ் ஆன பொண்ணு ஒன்னு பிடிச்சு கல்யாணம் பண்ணேன். வர்ஷா பிறந்தப்ப கண்ணுல தண்ணி வந்துருச்சு. என்னடா பொண்ணுன்னு அழுகிறியான்னு அம்மா கேட்டாங்க,. இல்லம்மா அவளுக்கு எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்னு நினைச்சேன்னு சொன்னேன். ஒன்னே போதும்னு நினைச்சேன். அவ விருப்பம் போல வருணாவும் எட்டு வருசம் கழிச்சி பிறந்தா.
ஆயிரம் முரண்பாடு இருந்தாலும் ஒன்னா தான் இருந்தோம். முதல் கண்ணம்மா வந்தா பிரச்சனை ஆச்சு. 4 வருசம் தனியா போய்ட்டா, திரும்ப வரப்போறா. இன்னைக்கு இப்ப பேசினோம். வர்ஷாவும், வருணாவும் பேசினாங்க. கண்ணம்மா, கன்னுகுட்டியெல்லாம் தூக்கி போட்டு நான் பெத்த ரெண்டு செல்லகுட்டிகளை நல்லா வளர்க்கனும்.
நல்ல வேளை ரெண்டும் பொண்ணா பெத்தேன். இல்லைனா அவனுக்கு நல்லது சொல்லி கொடுத்தே என் வாழ்க்கை போயிருக்கும்
இந்த பிறந்தநாளும் எனக்கொடு ப்ரேக்கிங் பாயிண்ட்
எவளாவது லவ் பண்ண மாட்டாளான்னு தொங்கிட்டு திரியிறதை விட என் பொண்ணுங்களை நல்லா வளர்க்க கவனம் செலுத்தலாம்
நான் வாழ்த்து என்ன கிழிச்சேனு நான் சொல்ல வேண்டியதில்ல, என் பொண்ணுங்க காட்டுவாங்க அதை
ஹேப்பி பர்த்டே டு மீ
4 வாங்கிகட்டி கொண்டது:
தான் என்ன செய்துகொண்டு இருக்கோம்னு எப்போதாவது ஒருத்தர் யோசிக்க ஆரம்பித்தால் அதற்கு பின் அவருக்கு யாருடைய யோசனையும் தேவையில்லை...காரணம் அவரது சிந்தனைகளே தேவைப்படும் போது சுய பரிசோதனை செய்துகொள்ளும். ஆனால் நான் கண்டுபிடிச்சது ?! ஒரு விஷயம்....நாம் செய்த தவறுகளை திருத்தி மனதுக்கு மகிழ்ச்சியான சூழல் வாய்த்துக்கொண்ட பிறகு நாம் முன்னே செய்த வினைக்கு எதிர்வினை வரும் பாருங்கள்...அதனை தாண்டுவதுதான் மேட்டர்! ( உதாரணம் - பத்து வருடம் ஏதோ ஒரு பழக்கத்தினால் வாழ்க்கையின் நாட்களை பாழாக்கி அதன் பின் அதையெல்லாம் விட்டொழித்து மீண்ட பிறகு அதன் எதிர்வினை ( நோய் /அவ மரியாதை/கடன் தொந்தரவு ) வாட்டும் பாருங்கள்...அதனை தாண்டுவதுதான் மேட்டர்.
வாழ்த்துகள்...உங்களுக்கும் உங்களது புதிய எண்ணங்களுக்கும்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளம் நண்பரே! உங்கள் இரண்டு பெண்களும் நல்லன எலாம் பெற்று வளர்ந்திட இனிய தமிழ்ப் புத்தாண்டில் வாழ்த்துகிறேன்!
- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
நல்ல மனிதன் கண்டிப்பாக நல்ல தந்தையாகத்தான் இருப்பான்..
பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாலு...
மதுரைக்காரங்களின் பொது குணம்.நானும் மதுரைக்காரன்தான்.
Post a Comment