ஒழுக்கக்கோட்பாட்டு விதிகளும், மதமும்!

நம் விருப்பம் சார்ந்த உணர்வுகளுக்கு ஒரு விலை உண்டு, உதாரணமாக எனக்கு உப்புமா பிடிக்காது என்பவர்களை ஆயிரம் ரூபாய் தர்றேன் சாப்பிடுறியான்னு கேட்டா சரின்னு சொல்வாங்க. இந்த விலையில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் நிச்சயமாக விருப்பம் சார்ந்த உணர்வுக்கு விலையுண்டு

ஆனால் ஒழுங்கம் சார்ந்த உணர்வுகள் தன் மற்றும் தம் சார்ப்பு பிம்பம் சார்ந்தவை. அவைகளை உடைப்பது ஓட்டுமொத்த ஒழுக்க கோட்பாட்டு விதிகளையும் உடைப்பது. பொது வெளியில் யாவரும் செய்ய தயங்குவர். உதாரணம் உங்க அம்மா ஒழுங்கமில்லாதவள்னு சொல்ல உங்களுக்கு விலை பேசப்பட்டால் மறுப்பீர்கள்.

கடவுள் நம்பிக்கை ஒழுங்கம் சார்ந்த விதிக்களுக்குள் அடங்கியது தான் அதனை பற்றிய கேள்விகளுக்கு கோபம் அடைதலும், சுயபரிசோதனையாக தம் நம்பிக்கையை தாமே கேள்வி கேட்காமல் இருப்பதும்.

ஒரு பகுத்தறிவாளன் ஆன்மீகவாதியின் ஒழுக்கவிதிகளுக்குள் அடங்க மாட்டான். அவன் தம் அடிக்காமல், பாக்கு போடாமல் இருப்பது தன் ஆரோக்கியத்திற்காக, நான் ஒழுக்கமானவன் என்று பறைசாட்டிக்கொள்ள அல்ல. ஒரு ஆன்மிகவாதி அவன் ஒழுக்க கோட்பாட்டை அவனே மீறினாலும் கடவுள் நம்பிக்கை என்ற ஒழுக்க விதியின் முன்னால் அவைகள் கடுகு. கடவுள் நம்பிக்கை எல்லா தவறுகளுக்கும் அபராதம் கட்டி அவனை சொர்க்கத்திற்கு அனுப்பும் என நம்ப வைக்க பட்டுள்ளான்.

இயற்கையை கட்டுபடுத்த தெரியாமல் அதனை கண்டு அஞ்சி, அதனை வணங்கி வந்த மனிதன் என்று தனி மனிதனை தொழ ஆரம்பித்தானோ அன்றே கடவுளும், கடவுள் மறுப்பாளனும் தோன்றினான். நிச்சயமாக முதல் கடவுள் பெரும் புத்திசாலியாகவும், வீரனமாகவும் இருந்திருக்க வேண்டும். குழு மக்கள் தம்மை காக்க வந்தவனாக தொழுது கடவுள் ஆக்கினர்.



பகுத்தறிவும் ஆரம்பத்தில் இருந்தே இருக்கு. ஆனால் இந்த கதவை திறக்காதே, உன் உயிர் போய்விடும் என்று பயப்படுத்தியே வளர்க்கப்பட்ட ஒருவன், அவன் ஆர்வத்தையும் தாண்டி கடவுளுக்கு அப்பால் யோசிக்க மறுக்கும் காரணம் உயிர் பயம். ஆனால் கடந்த சில நூற்றாண்டுகளாக அறிவியல் வளர்ச்சியின் கூடவே பகுத்தறிவும் வளர்ந்து வருகிறது.

பல தலைமுறைகளாக கோவில் பூசாரியாக இருந்தவனின் வாரிசு கடவுள் மறுப்பாளனாக சிந்திக்கிறான். பல தலைமுறைகளாக ஆண்ட பரம்பரை என சாதி பெருமை பேசியவனின் வாரிசு சாதி மறுப்பாளனாக தம்மை அடையாள படுத்திக்கொள்கிறான். இந்த வளர்ச்சிக்கு அடிப்படை கல்வி விழிப்புணர்வு. சமூக விழிப்புணர்வு. மனிதம் சார்ந்த உணர்வு. மாற்று சிந்தனை.

யாரும் பிறக்கும் போதே அறிவாளியும் இல்லை, முட்டாளும் இல்லை. நாம் எங்கே செல்ல வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்கிறோம்

5 வாங்கிகட்டி கொண்டது:

ராஜி said...

அறிவியல் யுக்த்தில் பகுத்தறிவு மட்டுமல்ல மூட நம்பிக்கையும் வளர்ந்து வந்துள்ளது சகோ

வால்பையன் said...

ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தா ஃபார்வேர்ட் பண்ணுன்னு மிரட்டுறாங்கல்ல, அப்படி தான் மூடநம்பிக்கையும் பரப்பப்படுது :)

'பரிவை' சே.குமார் said...

மூட நம்பிக்கை இப்போ அதிகமாத்தான் போகுது...
நல்ல பகிர்வு.

Angel said...

//நாம் எங்கே செல்ல வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்கிறோம்//

well said

எனக்கு மனசுக்கு பிடிச்சா அது நியாயம்னு பட்டா உடனே செய்வேன் ..

Julian Christo said...

Onnum Purila bro

!

Blog Widget by LinkWithin