கேள்வி: நீங்கள் ஏன் எந்த கட்சியிலும் உங்களை இணைத்துக்கொள்ள வில்லை?
பதில்: ஒரு இடத்தில் இரண்டு பொருள் இருந்தாலே அங்கே ஒப்பீடு(compare) அரசியல் வந்து விடும். இரண்டு பொருளும் ஒரே மாதிரி இருந்தாலும் ஒன்னு வலபக்கம் இருக்கு, ஒன்னு இடப்பக்கம் இருக்கு. வலம் பெருசா, இடம் பெருசா என்றோ. ஒன்னு மேலே இருக்கு, ஒன்னு கீழே இருக்கு. மேல் பெருசா, கீழ் பெருசா என்றோ எதாவது ஒன்றிற்கு சிறப்பமைப்பு கொடுத்து அதனுடன் தன்னை இணைத்துக்கொள்வதே பொதுபுத்தி என்பதாகும்.
ஒப்பீடு என்ன அவ்ளோ பெரிய குற்றமா என்பவர்களுக்கு.
அனைத்து பிரச்சனைகளின் அடிநாதமே அங்கே தான் ஆரம்பிக்கிறது.
இது சரி என்று ஒன்றை ஏற்றுக்கொள்வதை விட, எது நமக்கு வசதி என்று ஏற்றுக்கொள்ள தெடங்கியது இந்த ஒப்பிட்டளவில் தான். ஒருவர் இரண்டு விதங்களாக இஸங்களில் சிக்கிக்கொள்கிறார். ஒன்று திணிக்கப்படுதல், இன்னொன்று மற்றவைகளை விட இது பரவாயில்ல என்ற மதிப்பீடு
ஒரு இஸத்தை ஏற்றுக்கொண்டு விட்டால் நீங்கள் அந்த வட்டத்திற்குள் நுழைந்துவிட்டீர்கள். இப்பொழுது உங்களால் அந்த வட்டத்தின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடியும். அதில் இருக்கும் தவறுகள் உங்களுக்கு மறைக்கப்படும் அல்லது பார்க்க விரும்ப மாட்டீர்கள். ஒவ்வொரு கட்சி தொண்டனுக்கும், ஒவ்வொரு மதவாதிக்கும் இது பொருந்தும்.
தவறுக்கு நியாயம் கற்பிப்பது, சிறப்பானது என்று நினைத்தவுடன் இருப்பதால் நானும் சிறப்பானவன் என்ற மமதை கொள்வது. நான் சிறப்பானவன் என்பதை நிரூப்பிக்க பிற இஸங்களை சிறுமைக்குள்ளாக்குவது இவைகள் உங்கள் இயல்பாகிவிடும். உங்கள் இஸத்தின் தவறுக்கெல்லாம் வக்கிலாகி நிற்பீர்கள், பிற இஸத்தின் தவறுக்கு நீதிபதி ஆகிவிடுவீர்கள்.
அதே நேரம் பிறர் என் மீது போர்த்தும் அடையாள போர்வை மீது எனக்கு எந்த அக்கறையும் இல்லை. பார்பனியத்தை விமர்சித்தால் தலித் என்பது, தலித் தவறுகளை சுட்டிக்காட்டினால் உயர்சாதிய திமிர் என்பது. இஸ்லாத்தை விமர்சித்தால் காவி என்பது, காவியை விமர்சித்தால் பச்சைகளிடன் காசு வாங்கிட்டான் என்பது. இது போன்ற உங்கள் இயலாமைகள் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தியதில்லை.
அதிமுகவை கேள்வி கேட்டால், திமுக ஒழுங்கா என்பார்கள்.
பாஜகவை கேள்வி கேட்டால் காங்கிரஸ் ஒழுங்கா என்பார்கள்
இதுவே மதவாததிற்கும். தன்னை நியாயபடுத்திக்க பிறர் மீது குற்றங்களை சுமத்துவது ஒருபோதும் பதில் ஆகாது. அவ்வாறு செய்பவர்கள் தன் தவறுகளை மறைப்பதோடு, அவர்கள் ஒருபொழுதும் திருந்தப்போவதில்லை என்பதை ஆணித்தரமாக பறைசாட்டுகிறார்கள்.
என்னுடம் பேசும் நண்பர்கள், நான் உங்கள் ரசிகன் என்றால் நான் மிகவும் வருத்தப்படுவேன். என் ரசிகன் என்றால் என்னை கொண்டாடுகிறீர்கள். பின் என் தவறுகளுக்கும் நியாயம் கற்பிக்க ஆரம்பிப்பீர்கள். என் தவறுகளை நீங்கள் சுட்டிக்காட்டாமல் எனக்கு ஒருபொழுதும் அது தெரியப்போவதில்லை. எனக்கு வாசகர்களை விட நண்பர்களே நெருக்கமாக உணர்கிறேன். நீங்கள் அனைவரும் என் நண்பர்கள் தான்.
டீ.ராஜேந்தரை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரம்பகாலங்களில் கதை, திரைகதை மொக்கையா இருந்தாலும் இசையும், பாடல் வரிகளும் உலகதரம் வாய்ந்தவை. அவரை ஏத்தி விட்டு மேலே கொண்டு போய் சிதறு தேங்காய் போல் உடைத்துவிட்டார்கள். ஆனால் இன்றும் அந்த புகழ் போதையில் இருந்து வெளியே வர முடியாமல் வாய்லயே வடை சுட்டுகிட்டு இருக்கார்.
சசிகலாவை பார்க்க போன கம்யூனிஸ்டுகளையும் விமர்சிக்க முடியுது என்றால் கட்சி சாராமல் அவர்களை வட்டத்திற்கு வெளியே இருந்து பார்ப்பதால் தான் முடிகிறது. எழுத்தை கொண்டாடுங்கள். எழுத்தாளனுடன் நண்பனாக இருங்கள், நடிப்பை கொண்டாடுங்கள், நடிகனுடன் நண்பனாக இருங்கள்.
#வாலியிஸம்

1 வாங்கிகட்டி கொண்டது:
அபத்தங்களே உருவான நிகழ்வுகளால் பின்னப்பட்ட வாழ்க்கையின் அர்த்தம் தேடி அலைபவனே மனிதன்!
Post a Comment