தோழா தோழா!

என்னுரை: என் மீது உள்ள நட்பினால் சில இடங்களில் வெகு உயரத்துக்கு என்னை தூக்கியிருக்கிறார்! எதாவது மிகையாக தெரிந்தால் பொருத்தருள்க!, நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் இன்று பதிவை வெளியிடுகிறேன்!

தமிழரசியின் ப்ளாக்


"அருண், உங்க வலைப்பூவில் நான் எழுதனும்" என்றேன்!...

"ஓ.. தாராளமா" என்றார் சிரித்து கொண்டே, ....

என்னை யாரேனும் கேட்டிருந்தால் சிரித்து மழுப்பி மறுத்திருப்பேன்.இவரிடம் சம்மதம் வாங்கியும் நான் எடுத்துக் கொண்ட காலவரையறை ஓராண்டுக்கும் மேல், என்ன தான் நானொரு புதுமைப்பெண் , தைரியசாலி என என்னைக் காட்டிகொண்டாலும் ஒரு நட்பைப் பகிர எனக்கு துணிவு வர எனக்கு இத்தனை கால தாமதம் ஆனதன் காரணம் எனக்கு இன்னும் புரியவில்லை.


இவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருத்தி. நட்பு ரீதியாக பார்த்தால் எப்போதாவது சாட்டில் ஹாய் சொல்வதும் "நலமா? சாப்பிட்டீங்களா?" இத்தோடு முடிந்து போகும். அதிகபட்சம், சுயநலமாய், நான் பதிவு போட்டால், நானாக, "போய்ப் படிங்க! அருண்" என சொல்லுவேன், மேலும் இவர் பதிவுகள் வெகுவாக கவரும் போது ஒரு மிஸ்டுகால் கொடுப்பேன், இவர் அழைத்தால் பாராட்டி சற்று நேரம் பேசுவோம். அதுவும் மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே!

முதலில் இவரை சென்னை பதிவர் சந்திப்பில் பார்த்தபொழுது இப்படியும் எளிமையும், எதார்த்தமுமாய் போலியில்லாத பேச்சுநடை இருக்க முடியுமா எனத் தோன்றியது. "ஒன்பதாவது மட்டுமே படித்திருக்கிறேன்" எனச் சொல்லும் இவரின் புத்தகம் படிக்கும் ஆர்வமும் பதிவுகளை சிறப்பாய், தெளிவாய், உறுதியாய் எழுதுவதும் நம்மை வியக்கச் செய்வது உண்மை தானே!

"எப்படி இப்படி எழுதுறிங்க?" என்றால், "நிறைய ஹோம்வொர்க் பண்றேங்க" என்கிறார். கம்ப்யுட்டர் ஆன் பண்ணி கீபோர்டுல நடந்த நிகழ்வுகளுக்கும், கற்பனைகளுக்கும் உருவம் கொடுப்பதாய் எண்ணி கவிதை என எழுதி வரும் எனக்கு இவரது பதில் ஆச்சர்யமாக இருந்தது, இவரது எழுத்துக்களின் ஆளுமையின் ரகசியம் புரிந்தது எனக்கு!


ஒரு சராசரி மனிதனின் இயல்பான குணங்களான சரி, தவறு இவற்றிற்கு அப்பாற்பட்டு இவரிடம் நான்
தேர்ந்தெடுத்தது நட்பு. பல ஆண்டு உடன் இருந்து பேசிப் பழகி வந்த உறவுகளையும் தாண்டி இவர் நட்பு ஏனோ பிடித்திருக்கிறது. தினமும் நான்கு எஸ்.எம்.எஸ். காலை, மாலை தொலைபேசி உரையாடல், வாரமோ, மாதமோ சந்திக்க வேண்டும் என எதுவுமே தோன்றாமல்...

“தங்கம் விலை போல்” கிடுகிடுவென உயரும் இவரது பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வியந்து புருவம் உயர்ந்த வைக்கும். மனசெல்லாம் பொறாமையை சுமந்து கொண்டு, "எப்படிங்க இது சாத்தியம்?" என கேட்பேன். "எல்லாம் அன்பால் வந்தவங்க" எனச்சொல்லுவார். "இப்படி அபாரமா எழுதுவது எப்படி?" என்றால் "உங்களைப் போன்றவர்களின் அன்பால் தான்" என்பார். பதிவுகளையும் அதற்கு இடும் கருத்துக்களையும் நட்புக்கு சம்பந்தம் இல்லாமல் என்றும் பார்த்துக் கொள்வார் அது வேறு இது வேறு என்று.... மெதுவாய் புரிந்தது எனக்கு நட்பின் ரகசியம். "இவர் பதிவுகளை பார்வையிட்டு நட்பாய் பழகி வருபவர்களின் எண்ணிக்கை லட்சங்களை தொடுவது இப்படித்தானோ ! " என.

நெருங்கிய நண்பர், எனது மிகச்சிறந்த நண்பர் என்ற இப்படிப்பட்ட கூற்றை தாண்டி இவரது தெளிவான நோக்கு, மனித இயல்பின் யதார்த்தத்தை இவர் எடுத்துக் கையாளும் விதம், எதையும் மனித உணர்வில் அணுகுவது என இவை, இவரிடம் என்னை ஈர்த்த விசயங்கள். என் எழுத்துகளில் நிஜம் எது? கற்பனை எது? என மிகச்சரியாக படித்த கணம் கணிப்பார். நான் வருத்தப்படாத அளவுக்கு ஒரே வரியில் எடுத்துச் சொல்லி புரியவும் வைப்பார்

ஆனாலும் எனக்கு இவர் மேல் கோபம் உண்டு, அது ஆதங்கமா என்று கூட தெரியவில்லை. இந்த கல்லுளிமங்கன் இதுவரை என் எழுத்துக்களை பாராட்டியதேயில்லை, ஒரு கனிவுக்காக கூட.
கொஞ்சம் பெரிய மனசு பண்ணி சொல்லுவார். " நீங்க கவிதை எழுதுபவர் இல்லை, கவிதையாகவே வாழ்பவர்" என்று.... வசிஷ்டர் வாழ்த்தியது போல் மகிழ்ச்சியாக இருக்கும்!


ஒருவர் பற்றி பலருக்கு பல்வேறு கருத்துகள் இருக்கும். இவர் வலைப்பூவில் எழுதுகிறேன் என்பதால் இவரை பாராட்டியே எழுதுறேயே என்று முழிச்சிகிட்ட என் மனசாட்சி கேட்டது, அதற்கு மனசு சொன்னது அவரு எப்பவாவது உன்னிடம் தன்னை நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ வந்து சொன்னாரா? அவர் நிறைகளை மட்டும் எடுத்து கொள், குறைகள் உன்னை ஒன்னும் செய்யாது என்று! உணர்ந்தேன் இது தானே இவரிடம் நம்மை நட்பாக இருக்க செய்தது என. இது இலக்கு இல்லா இலக்கணம் கொண்டது, இவரை என் வலைப்பூவில் எழுதி சிறப்பிக்க நினைத்தேன். என்னை அறிந்தவர்களின் இலக்கு வெறும் நூறுகளில் தான். இங்கே எழுதினால் ஆயிரக்கணக்கான நண்பர்களால் எங்கள் நட்பு வாழ்த்தப்படட்டும் என்றே இங்கு எழுத நினைத்தேன். மதம், இனம், மொழி, வயது, நிறம், ஆண், பெண் என்ற அனைத்து கோட்பாட்டிற்கும் அப்பாற்பட்டது நட்பு. நண்பர்கள் தினத்தில் இதை இங்கு எழுதுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன், என் அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகூறி என் நண்பனுக்கு சின்ன சிரிப்பை பரிசாக தந்து விடைபெறுகிறேன்!

தமிழரசி





73 வாங்கிகட்டி கொண்டது:

Rajan said...

இங்க என்ன நடக்குது!

சௌந்தர் said...

உங்கள் நடப்புக்கு வாழ்த்துக்கள்

பரிசல்காரன் said...

:)

sathishsangkavi.blogspot.com said...

உங்கள் நட்பு மென்மேலும் தொடர என் இனிய வாழ்த்துக்கள்...

Rajan said...

போட்டோல யாரு தல!

Rajan said...

//பதிவுகள் வெகுவாக கவரும் போது ஒரு மிஸ்டுகால் கொடுப்பேன்//

உங்களது எளிமையும் எதார்த்தமும் பிரமிக்கச் செய்கின்றன!

Rajan said...

//எப்படி இப்படி எழுதுறிங்க என்றால் நிறைய ஹோம்வொர்க் பண்றேங்க என்றார்..//

எந்த ஹோம்ல தல!

ஜில்தண்ணி said...

உங்க நட்பு பொறாமை பட வைக்கிறது வால் அண்ணே :)

உங்க நட்பு தமிழரசி அவர்களின் பதிவின் லிங்கை கொடுங்க :)

Rajan said...

//“தங்கம் விலை போல்” கிடுகிடுவென உயரும் இவரது பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வியந்து புருவம் உயர்ந்த வைக்கும். //


ஹா ஹா ஹா! அது ஒரு விட்ஜெட்டு மேடம்! நாங்களெ கிரியேட் பண்ணிக்குவோம்! வேணா பாருங்க அடுத்த வாரம் 5000ன்னு போட்டுக்கறோம்!

Rajan said...

//ஆனாலும் எனக்கு இவர் மேல் கோபம் உண்டு, அது ஆதங்கமான்னு கூட தெரியல.//

ஒரு தென்றல் புயலாகி வருதேஏஏஏஏஏஏஏஏஏஏஏ!

ஜில்தண்ணி said...

@ராஜன்

//ஹா ஹா ஹா! அது ஒரு விட்ஜெட்டு மேடம்! நாங்களெ கிரியேட் பண்ணிக்குவோம் //

ஐ அந்த மிட்டாயி எனக்கும் வேணும் :)

VIKNESHWARAN ADAKKALAM said...

//எந்த ஹோம்ல தல!//

இந்த கேள்வி எனக்கு பிடிச்சிருக்கு...

Rajan said...

//ஐ அந்த மிட்டாயி எனக்கும் வேணும் :) //


வாங்கிக்குவோம்!

Rajan said...

//நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் இன்று பதிவை வெளியிடுகிறேன்!//


ஏன் தல மட்டையா?

ஜில்தண்ணி said...

வால் சிஸ்டத்துல என்ன கேம் விளையாடுறீங்க :)

வித்யாசமா இருக்கே

Unknown said...

:-))

அஷீதா said...

//எப்படி இப்படி எழுதுறிங்க என்றால் நிறைய ஹோம்வொர்க் பண்றேங்க என்றார்..//

எந்த ஹோம்ல தல!


:))))))) superuuuu

அஷீதா said...

//எப்படி இப்படி எழுதுறிங்க என்றால் நிறைய ஹோம்வொர்க் பண்றேங்க என்றார்..//

எந்த ஹோம்ல தல!


:))))))) superuuuu

அஷீதா said...

ஹா ஹா ஹா! அது ஒரு விட்ஜெட்டு மேடம்! நாங்களெ கிரியேட் பண்ணிக்குவோம்! வேணா பாருங்க அடுத்த வாரம் 5000ன்னு போட்டுக்கறோம்!//


adhu enna widget enakkum sollunga... :))))))

அ.முத்து பிரகாஷ் said...

தமிழ்!

உங்க பதிவோட வரிகள் மிக எளிமையாய் உண்மையாய்.நான் தி.க.காரன்.வால் எங்க கழகம் குறித்து மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருந்தாலும் அதையும் தாண்டி எனக்கு அவரை பிடிக்கும்.நானும் வாலோட குரல் தொடர்பும் வச்சுக்க விரும்புறேன்,ஒரு மூணு நாலு மாசத்துக்கு அப்புறமா.உங்களோட ப்ளாக் பக்கம் இன்னொரு நாள் வந்து பார்க்கிறேன்.

// இவர் பதிவுகள் வெகுவாக கவரும் போது ஒரு மிஸ்டுகால் கொடுப்பேன், இவர் அழைத்தால் பாராட்டி சற்று நேரம் பேசுவோம் //
தயவு செய்து மிஸ்டுகால் கொடுக்கிற பழக்கத்தை மாத்திக்குங்க தமிழ் .மிஸ்டுகால் கொடுக்கிற பொண்ணுங்களையும் மிஸ்ட் காலுக்கு விழுந்தடிச்சுகிட்டு கால் பண்ற ஆண்களையும் கண்டாலே மனசுக்கு கோபமாயிருக்கு.மிக மிக தவிர்க்க முடியாத தருணங்கள் தவிர்த்து மிஸ்ட் கால் கல்ச்சர் அறவே தவிர்க்கப் பட வேண்டிய ஒன்று .பெற்றோர் குழந்தை உறவாக இருந்தாலும் கூட.

தமிழ் அமுதன் said...

///மதம், இனம், மொழி, வயது, நிறம், ஆண், பெண் என்ற அனைத்து கோட்பாட்டிற்கும் அப்பாற்பட்டது நட்பு//



நல்லா சொல்லி இருக்கீங்க தமிழ்...!

நான் வால் பையனை சந்தித்த போது முதல் தடவை சந்திக்கின்றோமே ஒரு எண்ணம் தோன்றவே இல்லை. எதோ பல நாள் பழகிய நண்பனை பார்க்கும் உண்ர்வே ஏற்பட்டது ...!

மிகவும் எளிமையான,இனிமையான
ஜீனியஸ் அவர்..!

ஹேமா said...

வாலு.....நாங்களும்
நண்பர்கள்தான் உங்களுக்கு !

மனம் நிறைந்த வாழ்த்துகள்.

அமைதி அப்பா said...

வாழ்க உங்கள் நட்பு.

அன்பரசன் said...

வாழ்த்துக்கள்

மார்கண்டேயன் said...

அருண், இதுக்கு மேல நட்ப பாக்க முடிஞ்சா, அந்தப் படத்த போடுங்களேன் !!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்க உங்கள் நட்பு.

பா.ராஜாராம் said...

நண்பர்களுக்கு,

வாழ்த்துகள்!

செல்வா said...

///அவர் நிறைகளை மட்டும் எடுத்து கொள், குறைகள் உன்னை ஒன்னும் செய்யாது என்று! ////
நானும் அப்படியே ..!!

///என் மீது உள்ள நட்பினால் சில இடங்களில் வெகு உயரத்துக்கு என்னை தூக்கியிருக்கிறார்! எதாவது மிகையாக தெரிந்தால் பொருத்தருள்க!, நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் இன்று பதிவை வெளியிடுகிறேன்!///

அப்படியெல்லாம் இல்லேங்க .. உண்மையத் தான் சொல்லிருக்காங்க ..!!

நசரேயன் said...

வால், புகைப் படத்தைப் பார்த்தா கம்ப்யூட்டரை ஆட்டையப் போட்டது மாதிரி இருக்கு.

Jey said...

நட்புக்கு வாழ்த்துக்கள்.

தமிழ் பொண்ணு said...

யோவ் அருண் நான் உன் ப்ளாக் ல பதிவு போடுறதுனா மட்டும் ஒன்பது கேள்வி கேக்குற.. இப்போ இன்னா யா நடக்குது இங்க ?

அருண் பிரசாத் said...

தொடரட்டும் உங்கள் நட்பு. வாழ்த்துக்கள்

பின்னோக்கி said...

நட்பைப் பற்றிய அழகான வெளிப்பாடு.

போட்டோல டிரேடிங் ஸ்கிரீன் இருக்கு. எந்த புரோக்கர் ?

Rajan said...

//யோவ் அருண் நான் உன் ப்ளாக் ல பதிவு போடுறதுனா மட்டும் ஒன்பது கேள்வி கேக்குற//


கரெக்டா தான் தல கேட்டு இருக்கீங்க!

sriram said...

அன்பின் அருண்..
தமிழரசி எழுதியதை நான் உணர்ந்திருக்கிறேன். உன்னை நான் இது வரை சந்தித்ததில்லை, இருந்தாலும் ஒரு நல்ல நட்பு மலரக் காரணம் உன் எளிமையும் பழகும் தன்மையுமே காரணம். ஆயிரமாயிரம் கருத்து வேற்றுமை இருப்பினும் மனிதரையும் அவரின் கருத்தையும் பிரித்துப் பார்க்கும் குணம் உனக்கு உண்டு, உனக்கு பாரெங்கும் நண்பர்கள் இருப்பதில் எனக்கு வியப்பெதுமில்லை.

என்றும் நட்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஜெயந்தி said...

உங்களின் நட்பிற்கு வாழ்த்துக்கள்.

vinthaimanithan said...

என்னங்க இது அநியாயம்?

vinthaimanithan said...

//ஹா ஹா ஹா! அது ஒரு விட்ஜெட்டு மேடம்! நாங்களெ கிரியேட் பண்ணிக்குவோம்! வேணா பாருங்க அடுத்த வாரம் 5000ன்னு போட்டுக்கறோம்// இதுதான் ரக்சியமா ஓய்! கிட்டவந்து கொஞ்சம் எனக்கும் சொல்லிக்கொடும்

vinthaimanithan said...

வாலை இனி ரெட்டைவால்னு கூப்பிடலாமா?! சந்தோஷத்துல புதுசா ஒண்ணு முளைச்சிருக்கணுமே?

vinthaimanithan said...

அவங்க கவிஞர் இல்லையா? அதான் வாலப் பத்தி அநியாயத்துக்கு பொய் சொல்றாங்க.... யாரும் நம்பிடாதீங்க!

sakthi said...

நட்புக்கு வாழ்த்துக்கள்

தமிழ் பொண்ணு said...

//"ஓ.. தாராளமா" என்றார் சிரித்து கொண்டே, ....//
வால்பையன்: ஹிஹீ நான் எப்பவுமே கெக்க பெக்கே சிரிச்சு கிட்டே தாங்க இருப்பேன்.

தமிழ் பொண்ணு said...

//“தங்கம் விலை போல்” கிடுகிடுவென உயரும் இவரது பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வியந்து புருவம் உயர்ந்த வைக்கும்//

ரைட்.. ;)

தமிழ் பொண்ணு said...

//முதலில் இவரை சென்னை பதிவர் சந்திப்பில் பார்த்தபொழுது இப்படியும் எளிமையும், எதார்த்தமுமாய் போலியில்லாத பேச்சுநடை இருக்க முடியுமா எனத் தோன்றியது.//

இது மிக சரியான விஷயம்.மதுரை பிளாக்கர் மீட்டிங் போது அப்படி தான் எனக்கும் தோன்றியது...

தமிழ் பொண்ணு said...

//"எப்படி இப்படி எழுதுறிங்க?" என்றால், "நிறைய ஹோம்வொர்க் பண்றேங்க" என்கிறார். //

ஆமாம்.பதிவு எழுதுறதுகாகவே ஒரு மளிகை கட நோட் ஒன்னு போடு ஹோம் வொர்க் பண்றார்.

தமிழ் பொண்ணு said...

கன்க்ராட்ஸ் அருண்.விகடன்ல குட் ப்ளாக் தேர்வு செய்யபட்டத்துக்கு.மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்..தல நீங்க எங்கயோ போய்டீங்க...கலக்குறீங்க போங்க..

ஆ.ஞானசேகரன் said...

//என் அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகூறி என் நண்பனுக்கு சின்ன சிரிப்பை பரிசாக தந்து விடைபெறுகிறேன்!

தமிழரசி//

வாழ்த்துகள்... தமிழ்

உங்களின் நட்புக்கு பாராட்டுகள்

cheena (சீனா) said...

அன்பின் அருண், தமிழரசி

இதுதான நட்பென்பது - வலை உலகத்தில் எதையும் எதிர்பாராத நட்பென்பது இதுதான்.

நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

தர்ஷன் said...

// மனசெல்லாம் பொறாமையை சுமந்து கொண்டு, "எப்படிங்க இது சாத்தியம்?" என கேட்பேன். "எல்லாம் அன்பால் வந்தவங்க" எனச்சொல்லுவார்.//

தொர பன்ச் டயாலாக் எல்லாம் சொல்லி இருக்கு

தென்னவன். said...

/*
//பதிவுகள் வெகுவாக கவரும் போது ஒரு மிஸ்டுகால் கொடுப்பேன்//

உங்களது எளிமையும் எதார்த்தமும் பிரமிக்கச் செய்கின்றன! */

சிரிப்ப அடக்க முடியலங்க.... :)))

Thamira said...

மச்சி.. திஸ் இஸ் டூ மச்சி.! ஹிஹி..

பனித்துளி சங்கர் said...

ஆயிதமற்ற நீண்ட வார்த்தை சண்டைகளுக்கு பிறகு நிசப்தம் எட்டும் போர்களம் போன்ற ஒரு புதுமை தங்களின் தளத்தில் இன்றையப் பதிவு . நன்றி நண்பரே . .

ஜெய்லானி said...

என் இனிய நட்பு நாள் வாழ்த்துக்கள்...

Chitra said...

வாழ்த்துக்கள்!

ஷங்கர் said...

vazhthukkal val

Unknown said...

நட்புக்கு வாழ்த்துக்கள்

GEETHA ACHAL said...

வாழ்த்துகள்...தமிழரசி உங்கள் தோழியா..தமிழரசி சொல்வது சரி தான்...நல்லா இருக்கு பதிவு என்று சொன்னால் என்ன குறைச்சா போய்விடுவிங்க...இனிமேல் நல்லா இருக்குனு சொல்லனமாக்கும் ...உங்கள் நட்பு தொடர வாழ்த்துகள்...

நாடோடி said...

உங்க‌ள் ந‌ட்பு தொட‌ர‌ என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்....

Anonymous said...

அஹா இங்கயும் நாடகத்த நடதிட்டாய்களா...தமிழ்லே பிளான் பண்ணாலே தங்காது இதுலே இங்கிலிஷ்லே வேற பிளான் பண்றைங்க...

மங்குனி அமைச்சர் said...

உங்கள் நட்புக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

உங்க புது புகைபடம் அருமை தல.இந்த கம்ப்யூட்டர் வெச்சுகிட்டா இத்தன அலும்பு பண்றிங்க..ஐ மீன் இவ்வளவு கலை படைப்புகளை உருவாக்குறீங்க ரியலி சூப்பர்ப்

Anonymous said...

அடுத்த நண்பர்கள் தினத்துல இன்னொரு தோழிய பதிவு போட வெச்சிருங்க தல..கலைஞர் பாராட்டு விழா தொடர்ச்சியா கலைஞர் டிவியில பார்த்துட்டீங்க போல...

Anonymous said...

நண்பர்கள் தினத்தில் ஒரு நட்பின் கதை.வித்தியாசமான பதிவு.

மங்களூர் சிவா said...

மொதல்ல வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

/
ராஜன் said...

இங்க என்ன நடக்குது!
/
ரிப்பீட்டு!

மங்களூர் சிவா said...

/
ஹா ஹா ஹா! அது ஒரு விட்ஜெட்டு மேடம்! நாங்களெ கிரியேட் பண்ணிக்குவோம்! வேணா பாருங்க அடுத்த வாரம் 5000ன்னு போட்டுக்கறோம்!
/

ROTFL
:))))))))))))))

மங்களூர் சிவா said...

/
உனக்கு 'பாரெ'ங்கும் நண்பர்கள் இருப்பதில் எனக்கு வியப்பெதுமில்லை.

/

:))))))

Eswari said...

joke joka irukku

prince said...

இந்த காலத்தில ரொம்ப பெருமை பாராட்ட பட வேண்டிய நட்பு தான். வாழ்த்துக்கள் நண்பா!!

Anonymous said...

முதல் முறை வருகிறேன்..
எளிமையான அதே சமயம் ஒரு மேலோங்கிய நட்பு பற்றி படிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி.

உங்களை விட இதனை எழுதிய தமிழரசி மீது எனக்கு தனி மரியாதை வருகிறது.
ஒருவர் மீதுள்ள நட்பை இதை விட அழகாக அழுத்தமாக யாராலும் சொல்ல முடியாது..

உங்கள் நட்பு தொடர் என் வாழ்த்துக்கள்.

//ஒரு சராசரி மனிதனின் இயல்பான குணங்களான சரி, தவறு இவற்றிற்கு அப்பாற்பட்டு இவரிடம் நான்
தேர்ந்தெடுத்தது நட்பு. பல ஆண்டு உடன் இருந்து பேசிப் பழகி வந்த உறவுகளையும் தாண்டி இவர் நட்பு ஏனோ பிடித்திருக்கிறது. தினமும் நான்கு எஸ்.எம்.எஸ். காலை, மாலை தொலைபேசி உரையாடல், வாரமோ, மாதமோ சந்திக்க வேண்டும் என எதுவுமே தோன்றாமல்...//

இந்தப் பதிவில் என்னை பெரிதும் கவர்ந்த வரிகள் இவை..
இந்த வலைப்பூவை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர் ப்ரின்ஸ்க்கு நன்றி.

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்க வளர்க நட்புடன்...!

Babu (பாபு நடராஜன்} said...

யாருங்க தமிழரசி

mohamedkamil said...

படிக்கிறதுக்கே ஜில்லுன்னு இருக்கு. தமிழரசி மாதிரி ரசிகைகள் இருக்கும்வரை வால்பையன் இன்னும் அதிகமாக எழுதனும். வாழ்த்துக்கள்

!

Blog Widget by LinkWithin