உமா சங்கருக்காக ஒரு கண்டனமும், அரசிடம் ஒரு வேண்டுகோளும்

உமாசங்கர் பற்றி முழுமையாக அறிய

ஊழல் நிறைந்த ஆட்சி நிலைத்து நிற்காது என்பது மனித நாகரீகம் தொடக்கத்தில் இருந்து நாம் பார்த்து கொண்டிருப்பது தான்!, எல்லாம் தெரிந்துமே இந்தியா ஊழலில் மிக முக்கிய இடத்தில் இருக்கிறது, இதை சொல்வது சர்வதேச புள்ளிவிபரம்! அவர்களுக்கு தெரிந்தே இவ்வளவு என்றால் நாம் தினம் தினம் பார்த்து கொண்டிருப்பது எத்தனை, கால ஓட்டத்தில் மறைந்தது, அதை நாம் மறந்தது எத்தனை! சரி நமக்கு தெரிந்தே இத்தனை என்றால் நமக்கு தெரியாமல் எத்தனை இருக்கும்! ஆக ஊழலில் இந்தியாவின் இடம் டாப்பில் இருப்பது கண்கூடாக தெரிகிறது!

இதெற்கெல்லாம் யார் காரணம்!?, இந்தியன் படத்தில் ஒரு வசனம் வருமே, ”மற்ற நாடுகளில் கடமையை மீறுவதற்கு லஞ்சம், நம் நாட்டில் மட்டும் தான் கடமையை செய்வதற்கே லஞ்சம்”, பத்து, இருபது வாங்குபவனால் சமுதாயத்திற்கு பெரிய இழப்பு வந்துவிடுமா என்றால் இல்லை, அவைகள் உணவக டிப்ஸ் போல் ஆகிவிட்டது, ஆனால் கோடிக்கணக்கான பணம் லஞ்சம் மற்றும் ஊழலில் இந்தியாவில் களவாடப்படுகிறது, கூடவே நம் உரிமைகளும்.

சினிமாவில் ஹீரோ சாகசம் செய்தால் விசில் அடித்து கைத்தட்டுவோம், உண்மையில் அதே போன்ற துணிச்சலான செயலை ஒருவன் செய்தால், ”பாவம் பிழைக்கத்தெரியாதவன்.” உண்மையில் இம்மாதிரி பிழைக்க தகுதியில்லாத, கையாலாகாத, அதிகாரமையத்தை எதிர்க்கத்தெரியாத பொதுமக்களால் பல பல நேர்மையான அதிகாரிகள் தங்கள் பணியை விட்டே விலகி சென்றிருக்கிறார்கள்!, உங்களைப் போய் எதாவது சாகசம் செய்ய சொன்னார்களா? ஒருவன் அதிகாரமையத்திற்கு எதிராக போராடுகிறான், உனது ஆதரவு கரத்தையாவது நீட்டலாமே!

நூத்துக்கு முப்பத்தியைந்து மதிப்பெண்கள் பெற்று ”ஆத்தா நானும் பாஸாகிட்டேன்” என்று எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் சொல்ல முடியாது! அத்தனையும் உழைப்பு, அவர்களது நோக்கமும் மக்களுக்கு தொண்டாட்றுவது, ஆனால் அதிகாரமையத்தில் அமர்ந்தவுடன் தனக்கும் அதே புத்தி வந்து எத்த்னையோ அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு சலாம் போட்டு தங்களது கடமையை மறக்கிறார்கள், அவர்களுக்கு மத்தியில் உமாசங்கர் ஐ.ஏ.எஸ் அவர்கள், தன்ன்னால் கண்டுபிடிக்கபட்ட ஊழல் காரணமாக தற்பொழுது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்!

அவரது படிப்பை அவமான படுத்தியிருக்கிறார்கள், அவரது நேர்மையை அவமான படுத்தியிருக்கிறார்கள் காரணம், அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யபட்ட காரணமாகயிருந்த மயிருக்கும் பெறாத சாதி!, உமாசங்கர் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட வேண்டும்! அவர் கண்டுபிடித்த ஊழல்கள் அனைத்தும் உடனே விசாரிக்கப்பட வேண்டும்!, இவைகளை மறுக்கும் தமிழக அரசிற்கு எனது கண்டணங்களை தெரிவித்து கொள்கிறேன்!சுயமரியாதையுள்ள ஒவ்வொரு தோழரும் உங்களது கண்டணங்களையும் பதிவு செய்ய வேண்டுகிறேன்!, தொடர்ந்து ஊக்கப்படுத்தி கொண்டிருக்கும் தருமி ஐயாவிற்கும் நன்றி!

47 வாங்கிகட்டி கொண்டது:

வால்பையன் said...

வேலைப்பளுவின் காரணமாக தாமதமாகிவிட்டது தோழர்களே!

vasu said...

இந்த பதிவையே என் தளத்தில் மறு பதிவு செய்து கொள்ளலாமா?

செல்வம் said...

இது குறித்தான எனது பதிவு

http://kadalaiyur.blogspot.com/2010/08/blog-post.html

அன்புடன்
செல்வம்

Anonymous said...

அரசுக்கு என் கண்டனங்கள்!

http://balajisaravana.blogspot.com/2010/08/blog-post_18.html

வால்பையன் said...

பதிவை பயன்படுத்தி கொள்ள, உங்களது மாற்றம் செய்து கொள்ள முழு அனுமதி அளிக்கிறேன்!

Unknown said...

நேர்மையான அதிகாரியின் சொல் நிச்சயம் அம்பலத்தில் ஏறும்!

vasu said...

மிக்க நன்றி... உங்கள் பதிவையே அப்படியே மீள்பதிவே செய்கிறேன்.

pradeep said...

வால்,பதிவுக்கு பாராட்டுக்கள்.ஆனால் எங்கயோ உதைககற மாறி இருக்கே.இந்த விசயம் கோர்ட்ல இருக்கு!பாத்து பதிவு இடுங்கள்.IAS officers asso.ஒன்னுமே சொல்லாம இருக்காங்க?இன்னும் பல கேள்விகள் பலருக்கும் பதில் இல்லாமல் இருக்கு.

vasu said...

உங்கள் பதிவை அப்படியே copy , பேஸ்ட் செய்திருக்கிறேன். மீண்டும் உங்களுக்கு என் நன்றி...

செல்வா said...

பணிச்சுமை காரணமாக எனது வலைப்பூவில் இதற்கு ஆதரவாக பதிவிட முடியவில்லை .. இருந்தாலும் இந்தப் பின்னூட்டத்தின் வாயிலாக எனது ஆதரவினை திரு உமா சங்கர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

tsekar said...

Govt must be reconsider his suspension.I support Umasankar IAS

~TSEKAR

சசிகுமார் said...

மக்களுக்கு நல்லதா செய்ய கூட விட மாட்டேங்குறாங்களே என்னடா நாடு இது, என்னுடைய கண்டனத்தை அழுத்தமாக இங்கு பதிக்கிறேன்

உமர் | Umar said...

ஊழலுக்கு எதிராய் குரல் கொடுப்போம்!
நேர்மைக்கு ஆதரவாய் தோள் கொடுப்போம்!

தருமி அவர்களின் பதிவிலும், பின்னூட்டங்களிலும் உமா சங்கருக்கு ஆதரவான பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன.

ஜெயந்த் கிருஷ்ணா said...

எனது கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்!

Katz said...

I will use your post.

Mythees said...

தல உங்க பதிவ copy எடுத்து என் ப்ளோக்ல போட்டுக்கலாமா ...

Unknown said...

அரசுக்கு என் கண்டனங்கள்!

Mythees said...

இடுகை இட்டாச்சு.
http://blog.eesh.co.in/2010/08/blog-post_18.html

seethag said...

ஒரு விதத்தில் இது நல்ல முன்னேற்றம் வால். என் தந்தை பலவருட்னக்களுக்கு முன் அரசு மருத்துவரஅக இருந்தபோது அதிமுக, திமுக ,இரண்டாலும் நன்றாக பந்தாடப்பட்டவர். எங்களுடய் படிப்பு அதனால் தடைப்பட்டதும் உண்டு. இன்று நாமெல்லாரும் இதை எதிர்க்கிறோம் என்பதே நல்ல விஷயம்

Jey said...

எனது கண்டனத்தயும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

Rajan said...

காட்டுத்தனமான கண்டனங்கள்!

Rajan said...

//அவரது படிப்பை அவமான படுத்தியிருக்கிறார்கள்//


அதெல்லாம் ஒரு மேட்டரா!

Rajan said...

//அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யபட்ட காரணமாகயிருந்த மயிருக்கும் பெறாத சாதி!, //

அவருக்கு கிறுக்கு பிடிச்சிருச்சுன்னு நெனைக்கறேன்! எலெக்சன் நேரத்துல தேவை இல்லாம தேன் கூட்ட கலச்சி விட்டுட்டாரு! ஊழல் விஞ்ஞானின்னு புகழ்பெற்ற நம்ம தலைவர் இப்பிடி வர வர ஆடு புளுக்க போட்டா மாதிரி கிறுக்கு தனமா பண்றது ஏன்னு தெரியல!

செ.சரவணக்குமார் said...

அரசுக்கு எனது கடுமையான கண்டனங்கள்.

பதிவர் நண்பர்களின் நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்.

வால்பையன் said...

உமாசங்கர் பற்றி முழுமையாக அறிய

வால்பையன் said...

http://senkodi.wordpress.com/2010/08/18/umasankar/

கொல்லான் said...

பட்டாசு வால்

தமிழ் பொண்ணு said...

மதிப்பிற்குரிய பதிவர்களுக்கு,

உமா ஷங்கர் மீதான நியாயம் இல்லாத குற்றச் சாட்டுகள் நீங்கும் வரை அனைத்து பதிவர்களும் வேறு வகை பதிவுகள் எழுத வேண்டாம் என்று வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன்.இது புதிதாக வரும் பயனர்களுக்கு இதை பற்றி அறிந்து கொள்ளவும் அவர்களின் ஆதரவும் கிடைக்க உதவும்.நான் இதை பற்றி நாளிதழ்களில் செய்திகளை தேடிய போது எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பது வருத்தமாக இருந்தது.அது போல் வேறு வகை பதிவுகள் வெளி வந்தால் இந்த பதிவுலக புரட்சியின் வேகம் குறைய வாய்புகள் அதிகம்.தருமி அவர்களுக்கும் உமா ஷங்கர் பற்றி பதிவினை போடும் அனைவர்க்கும் என்னுடைய ஆதரவு நிச்சயமாக இருக்கும்.

தமிழ் பொண்ணு said...

பொதுவாக பொழுது போக்கிற்கும் மொக்கை பதிவுகளுக்கும் வந்து குவியும் கமண்டுகள், அரசாங்க அடக்குமுறை பற்றிய பதிவிற்கு அவ்வளவாக யாரும் கமன்ட் போட வராமல் இருப்பது கவலை அளிக்கிறது.மக்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தான் இந்திய சட்டமே தவறாக வரையுருக பட்டு விட்டது.படிக்காத பாமர மக்களுக்கு கெல்லாம் தெரிந்தது ஒன்றே ஒன்று தான் - ஒரு வோட்டிற்கு யாரு அதிகமாக காசு தருகிறார்கள் என்பது.இந்த பழக்கம் தற்போதைய அரசியல் பிரமுகர்கள் அறிமுகப்படுத்தியது.நியாமான தீர்ப்பு வரும் என்று எதிர் பாக்கின்றேன்.நல்ல வேலை நீதி மன்றம் என்று ஒன்று இல்லாவிட்டால் அவ்வுளவு தான்.ஆனால் நீதி மன்றத்திற்கும் கல்தா காட்டி விடுகின்றனர்.இந்த ஊழல் அரசியலும் ஒரு நாள் முடிவிற்கு வரும்.அதற்கான நேரமும் நெருங்கி கொண்டே வருகின்றது.

உமர் | Umar said...

//அரசாங்க அடக்குமுறை பற்றிய பதிவிற்கு அவ்வளவாக யாரும் கமன்ட் போட வராமல் இருப்பது கவலை அளிக்கிறது.//

பெரும்பாலும் பதிவாகவே இட்டுவிட்டார்கள். இன்று தமிழ்மணம் திரட்டியில் நிறைந்திருந்தவை, உமா சங்கருக்கான ஆதரவு பதிவுகளே. தருமி அவர்களின் பதிவில், பெரும்பாலான பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன.

நாடோடி said...

அர‌சுக்கு எதிராக‌ என‌து க‌ண்ட‌ன‌ங்க‌ளை இங்கு ப‌திவு செய்கிறேன்..

சாமக்கோடங்கி said...

இதோ தல.. நானும் வந்துட்டேன்...

அலைகள் பாலா said...

என் கண்டனங்களை தனி பதிவாக போட்டுட்டேன்.

Jerry Eshananda said...

Bravo....

ராஜ நடராஜன் said...

//வால்,பதிவுக்கு பாராட்டுக்கள்.ஆனால் எங்கயோ உதைககற மாறி இருக்கே.இந்த விசயம் கோர்ட்ல இருக்கு!பாத்து பதிவு இடுங்கள்.IAS officers asso.ஒன்னுமே சொல்லாம இருக்காங்க?இன்னும் பல கேள்விகள் பலருக்கும் பதில் இல்லாமல் இருக்கு.//

தருமி அவர்களின் இடுகையில் உமாசங்கரின் விண்ணப்பம் குறித்த வரிகளின் சாரத்தையும்,அரசு வெளியிட்ட பதவி நீக்கத்திற்கான காரணத்தையும் படித்து விட்டு இந்த பின்னூட்டம்.

பின்னூட்டமிட்ட பிரதீப் அவர்களுக்கு!கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கிற்கான செய்திகளை ஊடகங்கள் மக்கள் முன் கொண்டு வருவதில்லையா?அதுவும் உமாசங்கருக்கான நிகழ்வுகளை விவாதிக்காமல் இருந்தால் அரசு இயந்திரத்தின் சுயநலங்களால் இன்னும் கதைகள் ஜோடிக்கப்பட்டு நீங்கள் சொல்லும் உதைக்கிற மாதிரி இருக்கே சந்தேகம் இன்னும் வலுவூட்டப்படும்.IAS officers assகள்(உங்கள் வரிகளே) குரல் கொடுத்த பொதுப்பிரச்சினையை அல்லது தமது பிரச்சினைகளைக் கூட இதுவரை நான் கேள்விப்பட்டதேயில்லை.

இதுவரை உமாசங்கர் மட்டுமே கணை தொடுத்திருக்கிறார்.சகுனிகளின் தகுடுதத்த எதிர்க்கணை வரும்போது உங்கள் சந்தேகமான பல கேள்விகள் பலருக்கும் பதில் இல்லாமல் இருக்கு விளக்கப்படும்.அதற்கான துவக்க விழாவாக 27 வருடம் கழித்து வால்பையன் சொன்ன சாதி என்ற மயிரு தூசி தட்டி பைனாகுலரில் பெரிதாக்கப்பட்டிருக்கிறது.

ஒரு வினைக்கு எதிர்வினை என்பது நியூட்டன் விதியாக இருந்தாலும் அரசு இயந்திரத்திற்கு மட்டும் வினைக்கான எதிர்வினையை எப்படி இரட்டிப்பாக்குவது என்பதில் முனைப்பு அதிகமாக இருக்கும்.

உமாசங்கரின் குரலே நீதியின் பக்கம் இருப்பதாக நீதி தேவதை கருப்புத்துணியைக் கழட்டி விட்டு தீர்ப்பு சொல்லட்டும்.

pradeep said...

நன்றி நடராஜன்.பார்ப்போம்.அரசின் சட்டமன்ற பதிலுக்கு தான் காத்திருக்கிறோம்.

தருமி said...

//தருமி அவர்களின் பதிவில், பெரும்பாலான பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன.//

ஏதாவது இடுகைகள் விட்டுப் போயிருந்தால் இங்கோ, அங்கோ தெரிவியுங்கள்.

Good citizen said...

எனது கண்லனத்தையும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

தமிழ் பொண்ணு said...

நான் என்னுடைய ஆதரவை தெரிவிக்கும் வகையில் நேற்று உமாசங்கர் (ஐ. ஏ.எஸ்) அவர்களுக்கு கடிதம் அனுப்பினேன்.அதில்,எனக்கு மறுமொழி இட்டுள்ளார்.//


Thanks a million for your support.

Regards

Umashankar.எங்களுடைய ஆதரவு உங்களுக்கு என்றும் இருக்கும்.நான் என்னால் முடிந்த வரை ஆதரவு திரட்டி கொண்டு இருக்கின்றேன்.பதிவுலகில் உங்களுக்கு ஆதரவு பலமாக இருகின்றது.மக்கள் அனைத்தையும் கவனித்து கொண்டு இருகின்றனர்.உங்களுடைய புரட்சிக்கு என்னடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
thanks.--
C.Umashankar IAS., (TamilNadu Cadre)
e-governance Specialist
Chennai, Tamilnadu
India

Co-Moderator:
http://groups.yahoo.com/group/eGovINDIA
Mankind deserves open standards and open source software. Only the chosen ones get its taste. Others just hear the taste.

Chennai:
Ph: 91-44-42020423

//
என்னுடைய மின்னஞ்சல்கு நன்றி சொல்லியுள்ளார்.என்னுடைய கடிதத்திற்கு மறுமொழி இட்டதற்கு உமா ஷங்கர் அவர்களுக்கு நன்றி.நீங்களும் உங்களுடைய ஆதரவினை தெரிவிக்கலாம்.

தமிழ் பொண்ணு said...

என்னுடைய மின்னஞ்சல் :

எங்களுடைய ஆதரவு உங்களுக்கு என்றும் இருக்கும்.நான் என்னால் முடிந்த வரை ஆதரவு திரட்டி கொண்டு இருக்கின்றேன்.பதிவுலகில் உங்களுக்கு ஆதரவு பலமாக இருகின்றது.மக்கள் அனைத்தையும் கவனித்து கொண்டு இருகின்றனர்.உங்களுடைய புரட்சிக்கு என்னடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
----

உமா ஷங்கர் அவர்களின் மறுமொழி:

Thanks a million for your support.

Regards

Umashankar.

--
C.Umashankar IAS., (TamilNadu Cadre)
e-governance Specialist
Chennai, Tamilnadu
India

Co-Moderator:
http://groups.yahoo.com/group/eGovINDIA
Mankind deserves open standards and open source software. Only the chosen ones get its taste. Others just hear the taste.

Chennai:
Ph: 91-44-42020423


//வால்கு என்னோட கமன்ட் புரியலியாம்.அதன் திரும்ப போட்டு இருக்கேன்.

Anonymous said...

தைரியம் இருந்த தலைமை செயலகம் முன்னாடி நின்னு கத்துடா பாக்கலாம். நாறிடுவ...அப்புறம் நீ டவுசர்லேயே ஒண்ணுக்கு போவது எப்படி அப்படின்னு வழக்கம் போல ஒரு மொக்கையை ஓசி பிளாகுல எழுதுவ. அதையும் எல்லாவனும் படிச்சிட்டு ஆஹா, ஓஹுன்னு உன்னுடைய முதுகை சொறிவானுங்க. ஒரு பயலும் உனக்கு சப்போர்ட்டுக்கு வர மாட்டான், பாக்குறியா. எனக்கு தைரியம் கிடையாது...ஒத்துக்கறேன். மொத்தல இந்த மாதிரி அலெக்ஸ்சாண்டர் குதிரைக்கு குண்டி கழுவி விட்டவன் ரேஞ்சுக்கு ஹீரோயிசம் காட்டாதே. ஏதாவது நக்கலா எழுதினமா, போனம்மான்னு இரு. நீ கேட்கமாட்டே, என்னா உனக்கு ஒரு இமேஜ் மயிறு இருக்கறதா நீயே கற்பனை பண்ணிகிட்டே...கருமம், இப்படியே இருந்து தொலைங்க...வேற என்ன சொல்றது...உனக்கும் உன் முதுகு சொறி நண்பர்களுக்கும் ஒரு பெரிய கும்பிடு.

வால்பையன் said...

//சாரு புழிஞ்சதா said...
தைரியம் இருந்த தலைமை செயலகம் முன்னாடி நின்னு கத்துடா பாக்கலாம். நாறிடுவ...அப்புறம் நீ டவுசர்லேயே ஒண்ணுக்கு போவது எப்படி அப்படின்னு வழக்கம் போல ஒரு மொக்கையை ஓசி பிளாகுல எழுதுவ. அதையும் எல்லாவனும் படிச்சிட்டு ஆஹா, ஓஹுன்னு உன்னுடைய முதுகை சொறிவானுங்க. ஒரு பயலும் உனக்கு சப்போர்ட்டுக்கு வர மாட்டான், பாக்குறியா. எனக்கு தைரியம் கிடையாது...ஒத்துக்கறேன். மொத்தல இந்த மாதிரி அலெக்ஸ்சாண்டர் குதிரைக்கு குண்டி கழுவி விட்டவன் ரேஞ்சுக்கு ஹீரோயிசம் காட்டாதே. ஏதாவது நக்கலா எழுதினமா, போனம்மான்னு இரு. நீ கேட்கமாட்டே, என்னா உனக்கு ஒரு இமேஜ் மயிறு இருக்கறதா நீயே கற்பனை பண்ணிகிட்டே...கருமம், இப்படியே இருந்து தொலைங்க...வேற என்ன சொல்றது...உனக்கும் உன் முதுகு சொறி நண்பர்களுக்கும் ஒரு பெரிய கும்பிடு.//மிஸ்டர். மொச்சகொட்டை!

உங்களால இந்த ப்ளாக்குலயே சுய அடையாளத்தோடு கமெண்ட் போட முடியல!, நீங்களெல்லாம் தைரியத்தை பத்தி பேசுறிங்க!

தைரியம்னா என்னான்னு தெரியுமா உங்களுக்கு, அதை தெரிஞ்சிகிட்டு பிறகு சொல்ல வாங்க பிரதர்!

அதுக்கு முன்னாடி வராதிங்க, நாறுது நீங்க வந்தாலே!

வால்பையன் said...

//சாரு புழிஞ்சதா said...
தைரியம் இருந்த தலைமை செயலகம் முன்னாடி நின்னு கத்துடா பாக்கலாம். நாறிடுவ...அப்புறம் நீ டவுசர்லேயே ஒண்ணுக்கு போவது எப்படி அப்படின்னு வழக்கம் போல ஒரு மொக்கையை ஓசி பிளாகுல எழுதுவ. அதையும் எல்லாவனும் படிச்சிட்டு ஆஹா, ஓஹுன்னு உன்னுடைய முதுகை சொறிவானுங்க. ஒரு பயலும் உனக்கு சப்போர்ட்டுக்கு வர மாட்டான், பாக்குறியா. எனக்கு தைரியம் கிடையாது...ஒத்துக்கறேன். மொத்தல இந்த மாதிரி அலெக்ஸ்சாண்டர் குதிரைக்கு குண்டி கழுவி விட்டவன் ரேஞ்சுக்கு ஹீரோயிசம் காட்டாதே. ஏதாவது நக்கலா எழுதினமா, போனம்மான்னு இரு. நீ கேட்கமாட்டே, என்னா உனக்கு ஒரு இமேஜ் மயிறு இருக்கறதா நீயே கற்பனை பண்ணிகிட்டே...கருமம், இப்படியே இருந்து தொலைங்க...வேற என்ன சொல்றது...உனக்கும் உன் முதுகு சொறி நண்பர்களுக்கும் ஒரு பெரிய கும்பிடு.//மிஸ்டர். மொச்சகொட்டை!

உங்களால இந்த ப்ளாக்குலயே சுய அடையாளத்தோடு கமெண்ட் போட முடியல!, நீங்களெல்லாம் தைரியத்தை பத்தி பேசுறிங்க!

தைரியம்னா என்னான்னு தெரியுமா உங்களுக்கு, அதை தெரிஞ்சிகிட்டு பிறகு சொல்ல வாங்க பிரதர்!

அதுக்கு முன்னாடி வராதிங்க, நாறுது நீங்க வந்தாலே!

Unknown said...

//தைரியம் இருந்த தலைமை செயலகம் முன்னாடி நின்னு கத்துடா பாக்கலாம். //
உங்களுக்கு அடிப்படை தைரியம் இல்லாமல் பேசுவதை முதலில் நிறுத்துங்கள்.

//நாறிடுவ...அப்புறம் நீ டவுசர்லேயே ஒண்ணுக்கு போவது எப்படி அப்படின்னு வழக்கம் போல ஒரு மொக்கையை ஓசி பிளாகுல எழுதுவ. //

நீங்க மட்டும் ஓசில இப்டி கமன்ட் போடலாமா?

//அதையும் எல்லாவனும் படிச்சிட்டு ஆஹா, ஓஹுன்னு உன்னுடைய முதுகை சொறிவானுங்க. //

நல்ல இருந்த நல்ல இருக்குனு சொல்லுவாங்க.அப்பறம் உங்கள மாதிரி நல்ல பதிவுக்கு முட்டாள் தனமா யாரும் பதில் சொல்ல மாட்டாங்க.

//ஒரு பயலும் உனக்கு சப்போர்ட்டுக்கு வர மாட்டான், பாக்குறியா. எனக்கு தைரியம் கிடையாது...ஒத்துக்கறேன். //


இப்போது தெரிகிறதா.ஏன் நம் நாடு முன்னேற வில்லை என்று.
இது போல கோழைகள் தைரியம் இல்லை என்று சொல்லவதொடு அல்லாமல் ஆதரிப்பவர்களையும் கிண்டல் செய்வார்களாம்.அதுவும் அர்த்தம் அற்ற கமண்டுகளுக்கு.

//ஏதாவது நக்கலா எழுதினமா, போனம்மான்னு இரு//


நீ வந்தோமா படிச்சோமான்னு இரு.


//கேட்கமாட்டே, என்னா உனக்கு ஒரு இமேஜ் மயிறு இருக்கறதா நீயே கற்பனை பண்ணிகிட்டே//


அந்த கற்பனைய வடிவமைச்சு குடுத்ததே நீங்க தான்.//கருமம், இப்படியே இருந்து தொலைங்க...வேற என்ன சொல்றது...//


நாங்க எப்படி இருந்த என்ன.உங்களுக்கு சோறு கிடைக்குதுல.//உனக்கும் உன் முதுகு சொறி நண்பர்களுக்கும் ஒரு பெரிய கும்பிடு///


நன்றி நன்றி நன்றி ..

Unknown said...

//தைரியம் இருந்த தலைமை செயலகம் முன்னாடி நின்னு கத்துடா பாக்கலாம். //
உங்களுக்கு அடிப்படை தைரியம் இல்லாமல் பேசுவதை முதலில் நிறுத்துங்கள்.

//நாறிடுவ...அப்புறம் நீ டவுசர்லேயே ஒண்ணுக்கு போவது எப்படி அப்படின்னு வழக்கம் போல ஒரு மொக்கையை ஓசி பிளாகுல எழுதுவ. //

நீங்க மட்டும் ஓசில இப்டி கமன்ட் போடலமாக்கும் ?

//அதையும் எல்லாவனும் படிச்சிட்டு ஆஹா, ஓஹுன்னு உன்னுடைய முதுகை சொறிவானுங்க. //

நல்ல இருந்த நல்ல இருக்குனு சொல்லுவாங்க.அப்பறம் உங்கள மாதிரி நல்ல பதிவுக்கு முட்டாள் தனமா யாரும் பதில் சொல்ல மாட்டாங்க.

//ஒரு பயலும் உனக்கு சப்போர்ட்டுக்கு வர மாட்டான், பாக்குறியா. எனக்கு தைரியம் கிடையாது...ஒத்துக்கறேன். //


இப்போது தெரிகிறதா.ஏன் நம் நாடு முன்னேற வில்லை என்று.
இது போல கோழைகள் தைரியம் இல்லை என்று சொல்லவதொடு அல்லாமல் ஆதரிப்பவர்களையும் கிண்டல் செய்வார்களாம்.அதுவும் அர்த்தம் அற்ற கமண்டுகளுக்கு.

//ஏதாவது நக்கலா எழுதினமா, போனம்மான்னு இரு//


நீ வந்தோமா படிச்சோமான்னு இரு.


//கேட்கமாட்டே, என்னா உனக்கு ஒரு இமேஜ் மயிறு இருக்கறதா நீயே கற்பனை பண்ணிகிட்டே//


அந்த கற்பனைய வடிவமைச்சு குடுத்ததே நீங்க தான்.//கருமம், இப்படியே இருந்து தொலைங்க...வேற என்ன சொல்றது...//


நாங்க எப்படி இருந்த என்ன.உங்களுக்கு சோறு கிடைக்குதுல.//உனக்கும் உன் முதுகு சொறி நண்பர்களுக்கும் ஒரு பெரிய கும்பிடு///


நன்றி நன்றி நன்றி ..

vels-erode said...

இவர் நல்ல் ஒரு ஐ.ஏ.எஸ். அலுவலர் என அடையாளம் காணப்பட்டுத்தான் சில திறமையான் பணிகளை அவரிடம் இட்டனர் அரசினர். அட என்னதான் சர்டிஃபிகேட் தவறுகள் இருக்கட்டுமே? வேலையே செய்யாத, வேலைக்கே ஆகாத எத்தனிய அரசுப் பணியாளர்களைப் பார்த்துத்தானே இருக்கோம்?
எல்காட்-டின் திறமையான அலுவலர் என எல்லோரும் மதிக்கும் உமாசங்கரி அவர்களுக்கு அலுவல் நிமித்தம் என்ன குறை கண்டது அரசு?

அதற்காகவாவது பரிவு காட்டலாமே?

அப்பிடியானால் எல்லா எம்.எல்.ஏக்களின் லிஸ்ட்டஒயும் எடுப்போமா? முன்னாள், இன்னாள் மந்தி(ரி) களின் சர்டிஃபிகேட் எல்லாம் பார்க்கலாமா?

எது நாறும்?

A.S.RAVI said...

I strongly condemn tamilnadu govt.. i am fully support C. Umashakar. IAS...

!

Blog Widget by LinkWithin