வீணையடி நீ எனக்கு!!!!!!

எச்சரிக்கை:கல்யாணம் ஆகாதவங்க இப்படியே ஓடிப்போயிருங்க, உங்களுக்கு விளக்கம் கொடுக்க என்னால முடியாது!, படிச்சிட்டு அப்படி ஆகிருச்சு, இப்படி ஆகிருச்சுன்னு சொன்னா நான் பொறுப்பல்ல!

***********************கருவண்ணக் கூந்தல் காட்டிலிருந்து
சறுக்கி விழுந்த பனிமலையாய் நெற்றி
முழுதும் சொல்லும் உன்னைப்பற்றி....

தடம் பதிக்கும் முதல் முத்தம்
உயிருக்குள் கேட்கும் ஒரு சத்தம்
கருவண்ண இரு நிலவுக்குள் தொலைந்து
புன்னகையின் கன்னக்குழியில் தேடுகிறேன்

பிடரி முடியில் விரல் கோர்த்து தூக்குவேன்
கண்களுக்குள் கரைந்து செல்ல ஏங்குவேன்
சாய்நிலை சத்தத்தில் முத்தம் கொடுப்பேன்
உன் சிணுங்கலின் போது யுத்தம் எடுப்பேன்

இதழ் ஊற்றில் அமுதம் குடிப்பேன்
காதோரம் லேசாய் கடிப்பேன்
தோள் மீது சாய்ந்து இருக்கும் சிரம்
உனை காதலாய் வளைக்கும் என் கரம்

இடை வளைத்து இறுக்கும் போது
வளைந்து நிற்பாய் பெண்ணே.....
இடையில் வெளி குறையும் போது
வெட்கி குனிவாய்........

பூவில் ஊறும் தேனை சுவைக்க காத்திருக்கேன் -உன்
தேவை அறிந்து என் தேகம் தர பார்த்திருக்கேன்.....
தேன் குழைத்த திராட்சைகள் சொர்க்கத்தின் சாவியா?
சந்தோசத்தில் சாவது இதுதானா........
எனக்கதறுவது என் ஆவியா?

கைதேர்ந்த உழவனாய் உடம்பில் நான் ஏர் ஓட்ட
உன் பட்டு விரல்கள் என் மார்பில் தேர் ஓட்ட
இக்கணம் உலகம் நின்றாலும் சந்தோசமடி செல்லமே....

81 வாங்கிகட்டி கொண்டது:

கொல்லான் said...

மீ த பஸ்ட்.

sakthi said...

appo naan 2 nd aa

sakthi said...

ரொமான்ஸ் கவிதையா !!!!

poruki said...

தல இதுக்கு பேரு தான் பொறுக்கிதனமான காதலோ ?? :)

நசரேயன் said...

என்னைய மாதிரி சின்ன பையன்களுக்கு இடம் இல்லை

மயில் said...

அதிகமா தமிழரசிகூட பேசும் போதே நினைச்சேன், இப்படி எதுனா அசம்பாவிதம் நடக்கும்னு..நடந்துடுத்தேஏஏஏஏஎ :))

மயில் said...

இப்பத்தான் ரெண்டாவது பொன்னு பிறந்ததா ஞாபகம்.. இல்ல சொல்லவேண்டியது கடமை :)

cheena (சீனா) said...

அன்பின் வால்

அதென்ன தமிழரசி ...... விஜி டீடெயில்ட் ரிபோர்ட் பிளீஸ்

வாலு - அதென்ன காதல் ரசம் சொட்டச் சொட்ட காதல் கவிதை - கல்யாணம் ஆனவங்களுக்கு விளக்கம் கொடுக்கலாமா - முத்தம் சத்தம் - கன்னக்குழியில் என்ன தேடுகிறாY ....

முத்தத்துடன் யுத்தமா....

அமுதம் குடித்து, லேசாய்க் கடித்து, சாய்ந்த சிரத்துடன், வளைக்கும் கரம். கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது.

தேனைச் சுவைத்து,தேவை அறிந்து தேகம் பகிர்ந்து, தேனில் ஊறிய திராடசைகள் புசித்து, நன்கு உழவு செய்து ....... அடடா

வாலு ரெண்டாவது பொண்ணு பொறந்தாச்சு - நெனெவிருக்குல்ல

நல்வாழ்த்துகள் வாலு
நட்புடன் சீனா

sriram said...

ரெண்டு குட்டி போட்டப்புறமும் அடங்க மாட்டியா நீயி???

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

பின்னங்கால் பிடதில அடிக்க ஓடிட்டேன்!!!

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

//ரெண்டு குட்டி போட்டப்புறமும் அடங்க மாட்டியா நீயி???//


ரெண்டு குட்டியோட சேர்த்து, வால் நீளமாகிவிட்டது! அதுதான்!

ஆட்டையாம்பட்டி அம்பி said...

வாழ்த்துக்கள்! ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானதில்!! நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் அய்யா!

இந்தக் கவிதையை இப்பொழுது நீங்கள் எழுதினதைப் பார்க்கும்போது...உங்களது "பல நாள்" ஏக்கம் எனக்கு புரிகிறது!

அடுத்த குழந்தைக்கு Advance வாழ்த்துக்கள்!!!

சிவாஜி said...

:)

R Gopi said...

\\எச்சரிக்கை:கல்யாணம் ஆகாதவங்க இப்படியே ஓடிப்போயிருங்க, \\

மனைவி ஊரில் இல்லையென்றால் அவங்களும் இப்படியே ஓடிப்போயிருங்க

sasi said...

தல அடுத்து உங்களுக்கு பையனா இல்ல பொண்ணா?

எறும்பு said...

உங்க ஏக்கம் புரியுது அண்ணே.. அடுத்த குழந்தைக்கு வாழ்த்துக்கள்.
:)

வால்பையன் said...

என்ன கொடுமை சார் இது!
கொஞ்சம் ரொமாண்டிக்கா கவிதை எழுதினா உடனே அடுத்த குழந்தைக்கு போயிர்றதா?

ஆட்டையாம்பட்டி அம்பி said...

//வீணையடி நீ எனக்கு!!!!!!?

கொஞ்ச நாள் வீணையை மீட்டாதிங்க..இது எல்லோருக்கும் நல்லது. புரிந்து கொள்வீர்கள் என்று நிகைக்கிறேன். சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகவும்.

பனங்காட்டு நரி said...

////எச்சரிக்கை:கல்யாணம் ஆகாதவங்க ////

ம்ம்ம்.......ம்ம்ம்ம்.......ம்ம்ம்ம் ....., பெருமூச்சையா இது ...

திருஞானசம்பத்.மா. said...

நான் நேரடியா இங்க வந்துட்டேன்..

திருஞானசம்பத்.மா. said...

நான் நேரடியா இங்க வந்துட்டேன்..

தமிழ் அமுதன் said...

///எச்சரிக்கை:கல்யாணம் ஆகாதவங்க இப்படியே ஓடிப்போயிருங்க, உங்களுக்கு விளக்கம் கொடுக்க என்னால முடியாது!, படிச்சிட்டு அப்படி ஆகிருச்சு, இப்படி ஆகிருச்சுன்னு சொன்னா நான் பொறுப்பல்ல!///


சரி நான் படிக்கல...!

மார்கண்டேயன் said...

//கொஞ்சம் ரொமாண்டிக்கா கவிதை எழுதினா உடனே அடுத்த குழந்தைக்கு போயிர்றதா?//

சும்மா நடிக்காதீங்க பாஸு, கொழந்த பொறந்ததுக்கு 'அடுத்த வாரிசு' ன்னு டைட்டில் வைக்கும் போதே நெனச்சேன், புரியுது உங்க நிலம, அது வரைக்கும் பழச இந்த மாதிரி அசை போடுங்க

கும்க்கி said...

ம்க்கும்...

எதிர்பார்த்த கொமெண்ட்டே காணோம்.

மருதையில கரெண்ட் கட்டோ..?

sriram said...

//ஆட்டையாம்பட்டி அம்பி said... //வீணையடி நீ எனக்கு!!!!!!? கொஞ்ச நாள் வீணையை மீட்டாதிங்க//

அம்பி .. தப்பா சொல்லப் படாது..

கொஞ்ச நாளைக்கு வீணையை மீட்டிக்கிட்டு மட்டும் இருங்கன்னு சொல்லணும். சந்தேகம் இருந்தா மருத்துவரை கேக்காதீங்க- எனக்கு போன் பண்ணுங்க :)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வேங்கை said...

நல்ல கவிதை
நல்லா இருக்கு வால் பையன்
உண்மையாகவே நீங்க வால் பையன் தான்

அது சரி said...

இதை எழுதினது வால்பையனா இல்லை கருணாநிதியா? :)))

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அவுட் ஆப் ஆர்டர்..

தமிழரசி said...

காதல் வீணை வார்த்தைகளாய் மீட்டப்பட்டுள்ளது...ஒரு போர்க்களம் பனி விழும் மலர்வனமாய் பனிப்பாறை ஒன்று மலர் ஒன்று தீண்ட கரைந்தோடுவது போல் இந்த காதல் பாலாறு

தமிழரசி said...

எறும்பு said...
உங்க ஏக்கம் புரியுது அண்ணே.. அடுத்த குழந்தைக்கு வாழ்த்துக்கள்.
:)

என்னது ஏக்கமா? அடுத்த குழந்தையா? என்னங்க அருண்....

தமிழரசி said...

மயில் said...
அதிகமா தமிழரசிகூட பேசும் போதே நினைச்சேன், இப்படி எதுனா அசம்பாவிதம் நடக்கும்னு..நடந்துடுத்தேஏஏஏஏஎ :))

ஏன் தாயீ என்னைய வம்புக்கு இழுக்கறேல்...

தமிழரசி said...

cheena (சீனா) said...
அன்பின் வால்

அதென்ன தமிழரசி ...... விஜி டீடெயில்ட் ரிபோர்ட் பிளீஸ்

கிளம்பிட்டாங்கையா....... கிளம்பிட்டாங்க......

அண்ணா நீங்களுமா?

தமிழரசி said...

ஆட்டையாம்பட்டி அம்பி said...
வாழ்த்துக்கள்! ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானதில்!! நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் அய்யா!

இந்தக் கவிதையை இப்பொழுது நீங்கள் எழுதினதைப் பார்க்கும்போது...உங்களது "பல நாள்" ஏக்கம் எனக்கு புரிகிறது!

அடுத்த குழந்தைக்கு Advance வாழ்த்துக்கள்!!!

என்னங்க என்ன நடக்குது இங்க ஏக்கம்... வாழ்த்துக்கள்.... அருண் இருங்க தங்கைக்கு போன் பண்ணி தகவல் சொல்லிடறேன் .....

தமிழரசி said...

தமிழ் அமுதன் said...
///எச்சரிக்கை:கல்யாணம் ஆகாதவங்க இப்படியே ஓடிப்போயிருங்க, உங்களுக்கு விளக்கம் கொடுக்க என்னால முடியாது!, படிச்சிட்டு அப்படி ஆகிருச்சு, இப்படி ஆகிருச்சுன்னு சொன்னா நான் பொறுப்பல்ல!///


சரி நான் படிக்கல...!

தமிழ் இது உங்களுகே கொஞ்சம் அதிகமா தெரியலை நீங்களும் அருணும் ஒரு மாதிரியாத்தான் இருக்கீங்க

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
வால்பையன் சைட்...
என்ன கொடுமை சார் இது!
கொஞ்சம் ரொமாண்டிக்கா கவிதை எழுதினா உடனே அடுத்த குழந்தைக்கு போயிர்றதா?
//
கரெக்டா கேக்குறீங்க....

Anbu said...

:-))

இந்திரா said...
This comment has been removed by the author.
இந்திரா said...

சரி சரி
சீக்கிரமே “அடுத்தடுத்த வாரிசு“னு பதிவு எதிர்பாக்கலாம்.. அப்படி தானே வால் சார்??

ஆறுமுகம் said...

ஒன்னைய போயி நல்லவன்னு நெனச்சான் பாரு
(இது அய்யனாரின் ஒரு கவிதைக்கு மின்னுது மின்னல் போட்ட பின்னூட்டம்)

அனு said...

நடத்துங்க... :)

க.பாலாசி said...

//எச்சரிக்கை:கல்யாணம் ஆகாதவங்க இப்படியே ஓடிப்போயிருங்க, //

நீங்க சொல்லி நான் கேட்காம இருந்திருக்கனா... வரும்போது குச்சிமுட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கியாங்க...

பின்னோக்கி said...

நான் ரொம்ப சின்ன பையனாக இருப்பதால் இந்தக் கவிதையைப் படிக்கவில்லை. எச்சரிக்கை மட்டும் பார்த்துவிட்டு பின்னூட்டம்.. அப்படி சொன்ன நம்பவா போறீங்க. :)

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அண்ணன் காட்டுக்குதிரை போல,திமிறிகொண்டும் கட்டிளம் காளையாக பாய்ந்து கொண்டும் தான் இருக்கிறேன் என்பதை நமக்கு நினைவு படுத்த விரும்புகிறாரோ

அன்பரசன் said...

ரொமான்ஸூ பிரமாதம் தல..
கலக்குங்க..

ஜோதிஜி said...

வாலு ரெண்டாவது பொண்ணு பொறந்தாச்சு - நெனெவிருக்குல்ல

அட புதிய செய்தி எனக்கு.

ஏன் கல்யாணம் ஆன படிக்கக்கூடாதா தல?

mythees said...

:)

ரசித்தேன்....

சி. கருணாகரசு said...

இடை வளைத்து இறுக்கும் போது
வளைந்து நிற்பாய் பெண்ணே.....
இடையில் வெளி குறையும் போது
வெட்கி குனிவாய்........//

நீங்கதான் எழுதுனிங்களா?
வயது கூடினாலும்... காதல் மிக திடமாஇருக்கே அதான் கேட்டேன்.

சி. கருணாகரசு said...

கவிதை மிக சிறப்பு.
பாராட்டுக்கள்.

சி. கருணாகரசு said...

கவிதையின் வார்த்தைகளின் உயிர் இருக்கு. பாராட்டுக்கள்.

சி. கருணாகரசு said...

மீண்டும் மீண்டும் அப்பாவாக வாழ்த்துக்கள்.

அகல்விளக்கு said...

//கல்யாணம் ஆகாதவங்க இப்படியே ஓடிப்போயிருங்க,//

ஓஓஓஓ.....

சரி.... நான் படிக்கல........
அப்படின்னு சொன்னா நம்பவா போறீங்க.....

:)

ஹேமா said...

காமத்துப்பாலில் இல்லாததையா வாலு நீங்க சொல்லிட்டீங்க.
அழகான கவிதை.பாராட்டுக்கள்.

madurai ponnu said...

அருமையான கவிதை.(உங்கள் மனைவியை நினைத்து எழுதியதாக இருந்தால் மட்டும் இது நல்ல கவிதை)

ப.செல்வக்குமார் said...

அதெப்படி அப்படி போறது ..
படிச்சிட்டு சந்தேகம் கேக்காம வேணா போய்டறேன்..

ராஜ ராஜ ராஜன் said...

ஐ...!
லவ்வு லவ்வா இருக்கே...!

http://communicatorindia.blogspot.com/

d said...

Sir, please create two static pages. go to layout, click posting, edit pages, click blue color new page button....then create archive bay dates and sitemap by categories as like nagarjunan in

http://nagarjunan.blogspot.com/

you can use the following two links

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html

and

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-sitemap-for.html

d said...

Sir, please create two static pages. go to layout, click posting, edit pages, click blue color new page button....then create archive bay dates and sitemap by categories as like nagarjunan in

http://nagarjunan.blogspot.com/

you can use the following two links

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html

and

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-sitemap-for.html

ராஜன் said...

எப்பிடி தல இப்பிடி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம உங்களால ரொமான்ஸ் கவிதயெல்லாம் எழுத முடியுது!

ராஜன் said...

//எச்சரிக்கை:கல்யாணம் ஆகாதவங்க இப்படியே ஓடிப்போயிருங்க,//


ஐ! ஏன்?

ராஜன் said...

//உங்களுக்கு விளக்கம் கொடுக்க என்னால முடியாது!, //


வேறென்னதான் முடியும்! வயசாயிட்டாலே இப்பிடிதான்!

ராஜன் said...

//படிச்சிட்டு அப்படி ஆகிருச்சு, இப்படி ஆகிருச்சுன்னு சொன்னா நான் பொறுப்பல்ல!//

இப்பிடியெல்லாம் வேற நெனப்பிருக்கா! யோவ் படிச்சுட்டு உனக்கு எப்பிடியாச்சும் ஆவா இருந்தா சரி!

ராஜன் said...

//கருவண்ணக் கூந்தல் காட்டிலிருந்து
சறுக்கி விழுந்த பனிமலையாய் நெற்றி //


அதுக்கு கீழ மீன புடிக்க உக்காந்து இருக்கற கருங்கரடியாய் நீ!

ராஜன் said...

//தடம் பதிக்கும் முதல் முத்தம்
உயிருக்குள் கேட்கும் ஒரு சத்தம்//


அது உம்ம சம்சாரம் பூரிக்கட்டைல திருச்சாத்து சாத்துன சத்தமா இருக்கும்!

ராஜன் said...

//புன்னகையின் கன்னக்குழியில் தேடுகிறேன்//

யோவ் 20 வயசுல இருந்தாதான்யா கன்னக்குழி 49 வயசு கெழவிக்கி அது டொக்குய்யா!

ராஜன் said...

//பிடரி முடியில் விரல் கோர்த்து தூக்குவேன்//

செத்துரப் போவுது! வயசான காலத்துல ஏன்யா டார்ச்சர் பண்ற!

ராஜன் said...

//உன் சிணுங்கலின் போது யுத்தம் எடுப்பேன்//


அய்யோ ராமா! என்ன ஏன் இந்தமாதிரி கழிசடப் பசங்க கூட எல்லாம் கூட்டு சேர வெக்கற

ராஜன் said...

//இதழ் ஊற்றில் அமுதம் குடிப்பேன்//


கோல்கேட் வாங்கிட்டு போங்க நெக்ஸ்ட் டைம்!

ராஜன் said...

//காதோரம் லேசாய் கடிப்பேன்//


அம்மணி லோலாக்கு பத்தரம்!

ராஜன் said...

//இடை வளைத்து இறுக்கும் போது
வளைந்து நிற்பாய் பெண்ணே.....//

பக்கவாதமா இருக்கப்போவுது!

ராஜன் said...

//இடையில் வெளி குறையும் போது
வெட்கி குனிவாய்........//

அப்ப மட்டும் கூப்பிடுங்க என்னயும்!

ராஜன் said...

//பூவில் ஊறும் தேனை சுவைக்க காத்திருக்கேன்//


அப்பிடியே உக்காந்திருக்க வேண்டியதுதான்!

ராஜன் said...

//உன்
தேவை அறிந்து என் தேகம் தர பார்த்திருக்கேன்.....//


முட்டிக்கறதுக்கு செவுரு வேற ஒண்ணுமில்லயே!

ராஜன் said...

//தேன் குழைத்த திராட்சைகள் சொர்க்கத்தின் சாவியா?//

இப்பிடி சாவடிக்கறயே நாங்க என்ன பாவியா?

ராஜன் said...

//கைதேர்ந்த உழவனாய் உடம்பில் நான் ஏர் ஓட்ட//


வா நீ அவினாசிக்கு தேர் ஓட்டி காட்டறேன்!

ராஜன் said...

//இக்கணம் உலகம் நின்றாலும் சந்தோசமடி செல்லமே....//


அப்பிடியே போயி ரெண்டு பேரும் தண்ணியில்லாத குட்டைல தல கீழா குதிச்சிடுங்க!

Anandkrish said...

அருமையான எழுத்துகள், உணர்வுகளை சுண்டுகின்றன அழகாய்.

ஞாஞளஙலாழன் said...

கல்யாணம் ஆகல. ஆனா புரியுதே!

விஜய்கோபால்சாமி said...

///
அப்பிடியே போயி ரெண்டு பேரும் தண்ணியில்லாத குட்டைல தல கீழா குதிச்சிடுங்க!
///

ஹலோ, ஆரம்பத்துலேந்தே இவரு ராங்கா பேசுறாருங்க...

டார்ச்சர் பண்றார் யுவர் ஹானர்...

புரட்சித்தலைவன் said...

must read http://www.dinamalar.com/News_Detail.asp?Id=72473

VIKNESHWARAN said...

//உங்களுக்கு விளக்கம் கொடுக்க என்னால முடியாது!//

பரவால பாஸ் ஒரு வீடியோ வெளியாக்கி கொடுத்திடுங்க...

//கண்களுக்குள் கரைந்து செல்ல ஏங்குவேன்//

அடடடா...

//உன் தேவை அறிந்து என் தேகம் தர பார்த்திருக்கேன்.....//

பிசினசா பண்றிங்களா பாஸ்...

dravidamani subbaih said...

அருமை

!

Blog Widget by LinkWithin