உமாசங்கருக்காக -- ஒரு விண்ணப்பம்




உமாசங்கர் நியாயமான அதிகாரி, அவர் மீது அரசு ஏவி இருக்கும் கொடூரத்தை நாம் கண்டும் காணாமலும் இருக்க வேண்டுமா? -- இந்தக் கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டபோது எனக்குத் தோன்றிய பதில் - ஏன் பதிவர்களாகிய நாம் அனைவரும் இம்முறை நம் ஒட்டு மொத்த ஆதரவை அந்த அதிகாரிக்குத் தெரிவிக்கக் கூடாது. அப்படி நாம் ஏதும் செய்தாலும் அது எந்த அளவுக்கு அவருக்கு உதவும் என்பதை விடவும், ஓரளவாவது நாம் நம் கடமையைச் செய்தோம் என்ற நல்ல உணர்வு நமக்கு ஏற்படலாம். அதற்காகவாவது எனக்குத் தோன்றிய ஒன்றை உங்களிடம் கூறுகிறேன். சரியென்றால் ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு சின்ன காரியம் செய்வோம்.

இந்த அதிகாரி தவறான காரணங்களுக்காக அரசால் தண்டிக்கப்படுகிறார் என்ற எண்ணமுள்ள பதிவர்கள் அனைவரும் ஒன்றாக, ஒரே நாளில் --வருகின்ற வாரத்தில் ஒரு நாள் - புதன் / வியாழக் கிழமை -- நாலைந்து வரிகள் கொண்ட ஒரே ஒரு இடுகையை அவரவர்கள் பதிவில் இடுவோம். அந்த ஒரு நாளில் ஒரே மாதிரியான இடுகைகள் இட்டு நம் ஒற்றுமையான உணர்வை அரசுக்குத் தெரிவிப்போம்.

இதனால் என்ன பயன் என்று கேட்பீரின், என்ன பயன் கிடைக்குமென்று தெரியாது. ஆனால் முழு இணையப் பதிவுலகமே ஒரு மனிதனின் பின்னால் நின்றால் அது அந்த மனிதனுக்கு நிச்சயம் தேவையான மன வலுவைத் தரும். அரசும் சிந்திக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.

ஒருவேளை நான் ஒரு எதிர்க்கட்சிக்காரன், அதற்காக இந்த முயற்சி என்று யாரேனும் நினைத்தால் அவர்களுக்கு ஒரு வார்த்தை: அந்தக் கட்சி, அதன் தலைவர்கள் எதுவுமே என் மரியாதைக்குரியதல்ல. கனவில் கூட நான் அந்தக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன் என்ற உறுதி எனக்கு எப்போதும் உண்டு.

இது நிச்சயமாக நியாயம் செத்து வரும் வேளையில் ஒரு தனி மனிதன் பல எதிரப்புகளையும் தாங்கி நியாயத்தின் பக்கம் நிற்கிறானே, அவனுக்கு நம்மாலான எளிய இந்த உதவியைச் செய்வோமே என்ற ஒரே எண்ணம்தான்.

வாருங்கள் ... ஒன்றுபட்டு நின்று நாம் நினைப்பதைச் செயலில் காட்டுவோம். இத்தனை பதிவர்கள் ஒன்றிணைந்தால் நல்லது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையோடு ஒன்றிணைவோம். வாருங்கள் ....



பி.கு.
1.
அவ்வாறு இடுகையிட சம்மதிப்பின், யாராவது நல்ல நான்கு வரிகள் தயார் செய்து அளித்தால் அதை அனைவருமே ஒட்டு மொத்தமாக ஒன்று போல் இடுகையிடலாம்.

2. //கார்த்திகைப் பாண்டியன் said... புதன்கிழமை.. எல்லாருமே செய்யலாம் ஐயா..// அப்படியானால், எல்லோரும் புதன் கிழமை ஒன்றுபோல் இப்பதிவை இடுவோம்.

3. கா.பா. போன்ற பதிவர்கள் இதை மறுபதிப்பாக இட்டால் இன்னும் பலரின் கண்களுக்குப் போய்ச் சேரும். Please ... மறு பதிப்புகள் வரவேற்கப்படுகின்றன.

4. பால், சாதி, சமயம், இருக்குமிடம் எந்த வேறுபாடுமின்றி இதில் ஒன்றுபடுவோமே ...

5. நண்பர்களுக்கும் இச்செய்தியை இட்டுச் செல்லுங்கள். ஒன்றாக இடுகை இட உதவுங்கள்.

6.ஒட்டு மொத்தக்குரல் அரசை அடையும்


(நன்றி:தருமி ஐயா)

34 வாங்கிகட்டி கொண்டது:

vasu said...

ஊழலுக்கு எதிரான நம் ஆதரவை நிச்சயம் தெரிவிக்க வேண்டும். நான் ready...

http://rkguru.blogspot.com/ said...

கண்டிப்பாக புதன் அன்று பதிவின் முலம் உமசங்கருக்கு துணை நிற்போம்....சென்ற ஞாயிரு அன்று 'மனிதம்' என்ற மனித உரிமை மீறல் என்ற அமைப்பில் உள்ள நண்பர்கள் உமாசங்கர் வீட்டிற்கு சென்று ஆதரவினை தெரிவித்தார்கள். என்னையும் அழைத்தார்கள் ஆனால் என்னால் செல்ல முடியவில்லை அப்போது வேலை நிமித்தமாக வெளியில் இருந்தேன். கண்டிப்பாக வருகிறேன் என்று சொல்லி சரியான நேரத்திற்கு என்னால் செல்ல முடியவில்லை. எனக்காக அவர்கள் காத்திருக்காமல் அவர்களை போகசொல்லிவிட்டேன். உமாசங்கரை சந்திக்க முடியாததை நினைத்து மிகவும் வருந்தினேன். நல்ல மனிதர்கள் எங்கு இருந்தாலும் அவர்களை வரவேற்கணும், நம் ஆதரவினை தெரிவிக்கணும். அப்போது சென்று ஆதரவு தெரிவிக்க முடியாததை வரும் புதன் அன்று நீங்கள் சொல்லியதுபோல் என் பதிவில் கண்டிப்பாக அவருக்கு நம் இணைய நண்பர்களின் ஆதரவு குரல் ஒட்டுமொத்தமா இருக்கும்.

நல்ல ஆதரவு பதிவை வெளியிட்டதர்க்கு உங்களுக்கு இணைய நண்பர்கள் சார்பில் என் பாராட்டுகள் தெரிவித்துகொள்கிறேன்.
என் வலைபதிவு: http://rkguru.blogspot.com/

செல்வா said...

//அவ்வாறு இடுகையிட சம்மதிப்பின், யாராவது நல்ல நான்கு வரிகள் தயார் செய்து அளித்தால் அதை அனைவருமே ஒட்டு மொத்தமாக ஒன்று போல் இடுகையிடலாம்.///
நிச்சயமாக பதிவிடுவோம் ..!! ஊழலுக்கு எதிராக நமது ஆதரவைத் தெரிவிப்போம் ..
அந்த நான்கு வரிகள் எங்கே பதிவிடப்படும் என்பதையும் தெரியப்படுத்துங்கள் .!!

Unknown said...

எனது ஆதரவும் உண்டு ..

PB Raj said...

வால்பையன்

குடும்பம் கல்லா கட்ட
தமிழ்நாடு கஜானா கலி
சுட்டிகாட்டிய அதிகாரி துரோகி?
இது இன்ன நீதி?

ஓகே வா?

Jerry Eshananda said...

Bravo...Bravo....

ஜெயந்த் கிருஷ்ணா said...

எனது ஆதரவும் உண்டு ..

Jerry Eshananda said...

I render my support from the bottom of my heart, for this kind of such a Immaculate attempt.

Jerry Eshananda said...

Save Sankar From State Terrorism.

ஜில்தண்ணி said...

ஊழலை எதிர்த்த இப்படிப்பட்ட மனிதரை ஆதரித்து புதன் கிழமை நானும் என் பின் நிற்கிறேன்

வால் பையனின் முயற்சிக்கு பாராட்டுக்கள்

tsekar said...

உமசங்கருக்கு துணை நிற்போம்..
படிக்கும் எல்லோரும் -பின்னூட்டம் போட்டால்(10,0000) -அரசின் கவனத்தை ஈர்க்கலாம்

tsekar

அருள் said...

உமசங்கருக்கு துணை நிற்போம்..

sathishsangkavi.blogspot.com said...

அருண் உங்க முயற்சிக்கு பாராட்டுக்கள்....

Unknown said...

We all young generation should support Umashankar for his anticorruption action.

Anonymous said...

சொல்லிடீங்கல்ல சும்மா பின்னி பெடல்லெடுதுடலாம் பாஸூ.

அமுதா கிருஷ்ணா said...

அருண் முயற்சிக்கு பாராட்டு..செய்து விடலாம்..

Anonymous said...

பாராட்டப்பட வேண்டிய நல்லதொரு முயற்சி..
வாழ்த்துக்கள்.
கண்டிப்பாக பின்பற்றலாம்.

துணிந்து சொல்பவன் said...

ஒரு உண்மையான அரசு ஊழியருக்கு ஏற்பட்டுள்ள இந்த சிக்கலை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும், ஒப்புக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் தன் மீது சுமத்தப் பட்ட குற்றசாட்டு குறித்து இதுவரை அவர் வாய் திறக்க வில்லையே அது ஏன்? மதம் மாறிய தாழ்த்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்ற அரசு விதியை மீறினாரா இல்லையா? அது குறித்து யாரும் வாய் திறக்க மாட்டீர்களா?

இப்படி சொல்வதால், என் கடமையை புதன்கிழமை அன்று செய்யாமல் இருக்கப் போவதில்லை, உங்களைப் போலவே நானும் என் ஆதரவை நிச்சயம் உமாசங்கருக்கு தெரிவிக்கிறேன்

vasu said...

//வருகின்ற வாரத்தில் ஒரு நாள் - புதன் / வியாழக் கிழமை -- நாலைந்து வரிகள் கொண்ட ஒரே ஒரு இடுகையை அவரவர்கள் பதிவில் இடுவோம்.

வருகின்ற புதன் என்றால் நாளையா? அடுத்த புதன் கிழமையா?

Jey said...

புதன் எல்லோரும் இதை பதிவாக இடுவோம்.

நாடோடி said...

ந‌ல்ல‌ விச‌ய‌ம் க‌ண்டிப்பா செய்ய‌லாம்..

Unknown said...

ஆதரவு தெரிவிப்பவர்கள் தயவு செய்து பின்வரும் முறையீட்டு பதிவிலும் விண்ணப்பம் செய்யவும்

http://www.petitiononline.com/Umashank/petition.html

பவள சங்கரி said...

கண்டிப்பாகச் செய்யலாம். நானும் ரெடி பாஸ். நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்.

R. Gopi said...

மற்ற பதிவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளாத வரையில் நான் நினைப்பது என்னவென்றால், இன்ட்லி, தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் ஒரு நாள் மட்டும் இதைப் பற்றிய பதிவு மட்டுமே சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யலாம். திரட்டிகளைப் பார்வையிடும் அனைவருக்கும் கூட இந்த விஷயம் போய்ச் சேர்ந்தால் நல்லதுதானே.

தமிழ் பொண்ணு said...

அவசியமான அங்கீகரிக்க வேண்டிய பதிவு.ஒருவர் புரட்சி செய்தால் அனைவரும் அதற்கு முன் வர வேண்டும்.இல்லையெனில் அவர்கள் நசுக்க பட்டு விடுவார்கள்.பிளாக்கர் பதிவர்கள் அனைவர்க்கும் நன்றிகள்.

தருமி said...

//ஒரு நாள் மட்டும் இதைப் பற்றிய பதிவு மட்டுமே சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யலாம். //

எனக்கும் இதுதான் ஆசை.

அலைகள் பாலா said...

நானும் முழு ஆதரவு தருகிறேன்..

தருமி said...

நாளை நானிடுவதாக உள்ள இடுகையின் அடக்கம்:



உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.


அரசு இது போன்ற அதிகாரிகளுக்கு தண்டனைகளைத் தருவதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இவ்விடுகை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

KUTTI said...

உமா சங்கருக்கு துணை நிற்போம்..

மனோ

வினோ said...

எனது ஆதரவும் உண்டு ..

salam nainar said...

வாசகன் என்ற முறையில் என் ஆதரவு

http://rkguru.blogspot.com/ said...

பதிவின் மூலம் ஆதரவை தெரிவித்துவிட்டேன். ஆதரவு தெரிப்பதற்கு காரணமாக இருந்த உங்களுக்கு எங்கள் நன்றிகள்...

என் பதிவு: http://rkguru.blogspot.com/2010/08/blog-post_18.html

ஆறுமுகம் said...

அண்ணெ
துணின்து சொல்பவனின் கருத்துக்களொடு உடன் படுகிரென்.

ஆறுமுகம்
ஹைதராபாத்

suneel krishnan said...

நாம் உமா ஷங்கர் போன்ற நல்ல உள்ளங்களின் பின்னால் இல்லை என்றால் , நல்லது செய்து கொண்டு இருக்கும் ஓரிரு நல்ல அதிகாரிகளுக்கும் தவறான செய்தியை சொல்வது போல் ஆகும் , இது ஒரு வெகு ஜன போராட்டமாக மாறினால் ஒழிய அரசியல் அதிகாரங்களை தாண்டி கொண்டு செல்வது சிரமமே .
எனது பரிபூரண ஆதரவு உமா ஷங்கர் அவர்களுக்கு

!

Blog Widget by LinkWithin