டுவிட்டர் மொக்கைஸ்!

என் மேல்
உனக்கு கோபம்
என்றாலும் மகிழ்ச்சி
கோபம் இல்லைனா
இரட்டை மகிழ்ச்சி!

0*0

என்னவளுடன் பேசும் போது
நாள் முழுவதும் நொடியாச்சு
காத்திருக்கும் பொழுது
கணப்பொழுதும் யுகம் ஆச்சு
ஐன்ஸ்டீன் அனுபவசாலி தான்!

0*0

அட இன்னும் காணாமே
எனும் போது லப்டப்,
தொடர் பூகம்பமாய்
நெஞ்சுக்குள்!என்னவளுக்கு
துயில் இன்னும்
கலையவில்லையோ
எனக்கு இன்னும்
விக்கலே வரல!

0*0

எல்லா வண்ண
மலர்களும்
உன் முன்னால்
அழகில்லை,
உன் தலைப்பின்னல்
ஏறிய பின் தான் அழகு!

0*0

அழகிகள் சிறுபான்மையினர்
என் நெஞ்சில் என்னவளுக்கு
நூறு சதவிகிதம் இடஒதுக்கீடு

0*0

இசைப்பிரியர்களை
நண்பர்களாக்குவதில்லை
என்னவள் சிரிப்பை
எட்டாவது சிம்பொனியென்று
அள்ளி சென்று விடுவார்கள்!


****************


எனது டுவிட்டர் ஐடி

www.twitter.com/mokkaiwriter

(இவ்ளோ மொக்கைக்கு அப்புறமும் யாராவது சேருவாங்க!?)

47 வாங்கிகட்டி கொண்டது:

சௌந்தர் said...

மொக்க நல்ல மொக்கை

LK said...

ithu nalla iruku. ithaye continue pannunga

பரிசல்காரன் said...

//கழையவில்லை//

செம்மொழி மாநாட்டுக்கு வரலியா நீங்க?

அஷீதா said...

இசை பிரியர்களை
நண்பர்களாக்குவதில்லை
என்னவள் சிரிப்பை
எட்டாவது சிம்பொனியென்று
அள்ளி சென்று விடுவார்கள்!//

:) nalla irukkunga indha mokkai

ப.செல்வக்குமார் said...

நல்ல இருக்கு அண்ணா ..!! நான் ஏற்கெனவே உங்களை TWITTER இல் பின்தொடர்கிறேன் ..!!

Chitra said...

இசை பிரியர்களை
நண்பர்களாக்குவதில்லை
என்னவள் சிரிப்பை
எட்டாவது சிம்பொனியென்று
அள்ளி சென்று விடுவார்கள்!


....ரைட்டு! :-)

ஜில்தண்ணி - யோகேஷ் said...

வால் அந்த கடைசி ட்வீட்டு தான் செம டாப்பு

இன்னும் நிறைய லவ் மூட எதிர்பாக்குறோம்

பட்டாபட்டி.. said...

O..நல்லாத்தான் இருக்கி...

வேற என்னாத்தை சொல்ல...ஹி..ஹி

கொல்லான் said...

எப்பூடி ஏறக்குறைய எல்லா பதிவர்களும் இந்த வாரம் கவுஜை எழுதிருக்காங்க.

ஆனாலும் உங்க ''கவுஜை'' நல்ல மொக்கைதான்.

ராஜன் said...

//என் மேல்
உனக்கு கோவம்
என்றாலும் மகிழ்ச்சி
கோவம் இல்லைனா
இரட்டை மகிழ்ச்சி!//


பக்கத்துல குடும்ப மலர கவுத்தி வெச்சிருக்கீங்களா?

ராஜன் said...

//அட இன்னும் காணாமே
எனும் போது லப்டப்,
தொடர் பூகம்பமாய்
நெஞ்சுக்குள்!//


முட்டிக்க செவுரே இல்ல இங்க

ராஜன் said...

//எல்லா வண்ண
மலர்களும்
உன் முன்னால்
அழகில்லை,
உன் தலை பின்னல்
ஏறிய பின் தான் அழகு!//


அட்டு பீசுகளுக்கு கவிதை எழுதுவோர் சங்கம் ஆரமிக்கலாமா தல!

ராஜன் said...

//அழகிகள் சிறுபான்மையினர்
என் நெஞ்சில் என்னவளுக்கு
நூறு சதவிகிதம் இடஒதுக்கீடு//


ஃபிகர் ஹீத் ஜமாத்!

ராஜன் said...

//இசை பிரியர்களை
நண்பர்களாக்குவதில்லை
என்னவள் சிரிப்பை
எட்டாவது சிம்பொனியென்று
அள்ளி சென்று விடுவார்கள்!
//

எனக்கு லவ்டேல் மேடி கன்னாலத்துல கேட்ட சிரிப்புதான் நியாபகம் வருது! அவ்வ்வ்வ்வ்

ராஜன் said...

//(இவ்ளோ மொக்கைக்கு அப்புறமும் யாராவது சேருவாங்க!?)//


வாஸ்தவந்தான்!

மாரி-முத்து said...

//என்னவளுக்கு
துயில் இன்னும்
கலையவில்லையோ
எனக்கு இன்னும்
விக்கலே வரல!//

பிடித்துப் போனது
இந்த மொக்கை...

ஹேமா said...

//என்னவளுக்கு
துயில் இன்னும்
கலையவில்லையோ
எனக்கு இன்னும்
விக்கலே வரல!//

வாலு...இந்தவாரம் வித்யாசமா யோசிக்கிறீங்க !

வெறும்பய said...

இசை பிரியர்களை
நண்பர்களாக்குவதில்லை
என்னவள் சிரிப்பை
எட்டாவது சிம்பொனியென்று
அள்ளி சென்று விடுவார்கள்!

///

அட இது வேறயா...

கே.ஆர்.பி.செந்தில் said...

0*0

madurai ponnu said...

கவுஜலாம் நல்லா தான் இருக்கு. :)

tamildigitalcinema said...

உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil/

நியோ said...

காதல்னு வந்துட்ட பகுத்தறிவாவது வெங்காயமாவது ...?
நன்னாருக்குங்கோ !!!!!
மதுரை பொண்ணு கன்னத்துல கை வச்சுட்டாங்க பாருங்க தல !

சி. கருணாகரசு said...

மொக்கைன்னு பார்த்தா மிக அருமை....
கவிதையா பார்த்தா சுமார்தான்.

சி. கருணாகரசு said...

மொக்கைன்னு பார்த்தா மிக அருமை!
கவிதைன்னு பார்த்தா மாகா கொடுமை!!

எப்படி இந்த கவிதை????

Princess Macaw said...

அட இன்னும் காணாமே
எனும் போது லப்டப்,
தொடர் பூகம்பமாய்
நெஞ்சுக்குள்!என்னவளுக்கு
துயில் இன்னும்
கலையவில்லையோ
எனக்கு இன்னும்
விக்கலே வரல!


nice...

Sangkavi said...

//எல்லா வண்ண
மலர்களும்
உன் முன்னால்
அழகில்லை,
உன் தலை பின்னல்
ஏறிய பின் தான் அழகு!//

இது சூப்பரு....

Nanum enn Kadavulum... said...

spelling mistakes...!!!!!!!!!!!!
Otherwise very Good as Mokkai.

fa said...

செம மொக்கை

fa said...

இதுக்குதான் ராஜன் கூட சேராதிங்கன்னு சொன்னது.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

அவ்வ்வ்வ்வ்.. வாலு நீயுமாய்யா.. கவுஜ எழுத ஆரம்பிச்சுட்ட..?

VISA said...

//மொக்கைன்னு பார்த்தா மிக அருமை....
கவிதையா பார்த்தா சுமார்தான்.//

மொக்கை கவிதைன்னு பாத்த செம ஜோர் வால்

தருமி said...

வரட்டா ... ?

கும்மி said...

//(இவ்ளோ மொக்கைக்கு அப்புறமும் யாராவது சேருவாங்க!?)//

அது என்னமோ தெரியல, ஒங்க ட்விட்டர் ப்ரோபைல் பாத்துட்டு எல்லாரும் எனக்கு பால்லோயர் ஆயிர்றாங்க. (ஆனா, நான் இப்பெல்லாம் ட்விட்டர் பக்கம் எட்டிக்கூட பாக்குறதில்ல. (யோவ் ஒன்ன பங்காளியா சேத்ததுக்கு, இதுவரைக்கும் ஒரு பதிவு கூட போடலே; ட்விட் போடலேன்னு யார் கேட்டது அப்படிங்கறாரு ராஜன்) )

கும்மி said...

//fa said...//

fa கொஞ்ச நாளா இங்கேயே குடித்தனம் நடத்துற மாதிரி தெரியுது!

விந்தைமனிதன் said...

ஆனாலும் இது ரொம்ப அநியாய மொக்கைங்க.... படிக்கும்போதே நெஞ்சு, .... எல்லாம் கொதிக்குது!

பனங்காட்டு நரி said...

///இசைப்பிரியர்களை
நண்பர்களாக்குவதில்லை
என்னவள் சிரிப்பை
எட்டாவது சிம்பொனியென்று
அள்ளி சென்று விடுவார்கள்!///

தல ,
இது superu !!!!!!!!!

ராஜன் ,
நேத்து தான்யா உன் கவிதையெல்லாம் படித்தேன் !!!!! ஒன்னே ஒன்னு மட்டும் தான் புரிஞ்சிது :(
நானெல்லாம் நிறைய படிக்கணும் போல ,

Thuvarakan said...

great anna.....

மங்குனி அமைசர் said...

இது மொக்க மாதிரி தெரியலையே ???? யாருக்கோ சேதி அனுப்புறமாதிரி இருக்கே ?

ஒரே லவ் பீலிங்க்ஸ் ஆக இருக்கு , எனவே நண்பர்களே இதில் ஏதோ உள்குத்து உள்ளது , உசார் (யாருப்பா அங்க வால்ஸ வாட்ச் பண்ண ரெண்டு ஆள் போடுங்க )

Anonymous said...

அருண் வரபோறது நண்பர்கள் தினமா காதலர் தினமான்னு சந்தேகம் வந்தது....எல்லாம் சின்ன சின்ன ரோஜாவாய் சிரிக்கிறது

fa said...

//fa கொஞ்ச நாளா இங்கேயே குடித்தனம் நடத்துற மாதிரி தெரியுது!//

அதுக்குதான் நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாமுன்னு நெனச்சேன். இப்டின்னு தான் தெரில.

சசிகுமார் said...

சூப்பர் நண்பா

பிரதீபா said...

//எட்டாவது சிம்பொனியென்று// அடிசக்கைன்னான !! :)

பிரதீபா said...

//எட்டாவது சிம்பொனியென்று// அடிசக்கைன்னான !! :)

ரோஸ்விக் said...

//(இவ்ளோ மொக்கைக்கு அப்புறமும் யாராவது சேருவாங்க!?) //

நல்லவேளை நான் இந்த ட்விட்டர் பக்கம் இன்னும் போகலை... :-)))

Anonymous said...

http://thaanthonry.blogspot.com/p/archive_29.html

see archive page in my blogger.(archive show all post titles by dates in a single static page).create it for your blog to find all post titles in a single static page. follow steps here

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html

http://thaanthonry.blogspot.com/p/site-map.html

see my site map. (site map shows all post titles by categories in a single static page)

for site map follow steps for creating archive page. But regarding code there is a change. place the code in this link

http://www.abu-farhan.com/2010/05/table-of-content-and-accordion-for-blogger/

create both archive(all post titles by dates) and site map(all post titles by categories) and make readers to have a user friendly blog.

sweatha said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாளிகளிடமும் ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும்
வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

Krishnan said...

Hi ValPaiyan,

Please enable Wordpress or OpenID account.

!

Blog Widget by LinkWithin