தியானம்!

தியானத்தில் ஆர்வமுள்ள ஒரு நண்பருடன் நடந்த உரையாடல் முதலில்!

0*0

அண்ணா! ஒருத்தர்கிட்ட மீடியேட்டர் ஆகனும்னு சொன்னேன், கண்டபிடி திட்டுறாரு,

அட எங்கிட்ட சொல்லியிருந்தேன்னா, நான் ஆக்கி விட்ருபேனே!

உங்களுக்கு தான் அதிலெல்லாம் நம்பிக்கையில்லையே!

பேய் மேல நம்பிக்கையில்லைனா, மீடியேட்டர் எப்படி ஆகுறதுன்னு தெரியாதாக்கும்.

எப்படின்னு சொல்லுங்கண்ணா!

முதல்ல நான் கொடுக்குற லெட்டரை ஒரு பொண்ணுகிட்ட கொண்டு போய் கொடு, அது தான் மீடியேட்டரின் பாலபாடம்!

என்னைய அடி வாங்க சொல்றிங்களா!?

என்னாங்கடா இது, பேய் கிட்டகூட பேசுவேங்குறானுங்க, பெண்ணுகிட்ட அடிவாங்க பயப்படுறானுங்க!

****

அண்ணா! புதுசா ரெய்கின்னு ஒரு யோகா இருக்காம், அதை கத்துக்கலாம்னு இருக்கேன்!

தம்பி சும்மா அதையும், இதையும் கத்துகிறதால வாழ்க்கை முழுமை அடையாது.

வேற என்னான்னா பண்றது?

you should not be a follower, be a Creator!

புரியிற மாதிரி சொல்லுங்கண்ணா!

தம்பி, நீ கத்துகுற யோகா, தியானம் எல்லாம் முன்னாடியே, இதை செஞ்சா இது நடக்கும்னு எழுதி வச்சது, அது நடக்காட்டியும், நீ நடந்ததுன்னு நம்புவ! ஏன்னா இது மாதிரி விசயங்கள் வெறும் நம்பிக்கையில் தான் கட்டமைக்கபட்டுள்ளன!

இல்லைனா நடந்துருக்கு!

அதுக்கான விளக்கம் கடைசியா சொல்றேன்!

என்னை என்ன தான் பண்ண சொல்றிங்க?

புதுசா ஒண்ணு கண்டுபிடி, மல்லாந்து படுத்துக்கிட்டு, காலை ரெண்டு காலையும் மேலே தூக்கி அப்படியே கும்பிடுற மாதிரி இறக்கி தினமும் அரைமணி நேரம் செஞ்சு உங்களுக்கு ”ஹைட்ராசில்” வராதுன்னு சொல்லு அதுக்கு வெதராசனம்னு பெயர் வை!

அடி வாங்க வச்சிருவிங்க போலயே!

நித்தியானந்தா மாதிரி உன்னைய ஒரு ராஜேஸானந்தாவா ஆக்கலாம்னு பார்த்தா விட மாட்டிகிறியே!


****

அது ஏண்டா தம்பி, குண்டிலினின்னு அசிங்கமா பேர் வச்சிருக்காங்க,

கீழே இடுப்புக்கு நடுவுல இருந்து ஒரு சக்தி கொஞ்சம் கொஞ்சமா தலைக்கு ஏத்தனும், ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் ஒரு பெயர் இருக்கு!

எல்லாரும் வாய்ல சாப்பிட்டு கீழே இறக்குவாங்க, நீங்க கீழே இருந்து மேலே ஏத்துறிங்க!
நாம் ஃப்ரெண்டிலினின்னு(front) புதுசா ஒரு தியானம் சொல்லி தருவோமா!?

அண்ணே ஆளை விடுங்க!

*****

http://krpsenthil.blogspot.com/2010/06/18_30.html

இந்த லிங்கில் இருக்கும் வீடியோ பார்த்த பிறகு வேண்டுமென்றே வம்பிழுத்து தயார் பண்ண பதிவு இது!

மூளை இரண்டு பாகங்களாக அமையபட்டிருக்கிறது, வலது, இடது என அடையாளப் படுத்தபட்டாலும் ஒவ்வொன்றிற்கும் தனிதனி வேலைகள் உண்டு!

ஞாபகம் வைத்தல், ஒன்று செய்தால் அதை வேறு ஒன்றுடன் ஒப்பிடும் வேலையை ஒரு பகுதி செய்கிறது, உணர்வு பூர்வமாகவும், லாஜிக்காவும் தனிதனியே செயல்பட மூளையின் இரண்டு பாகங்களும் மிக முக்கியம்!, ஆனால் மனிதர்கள் ஆன்மிகம் என்ற பெயரில் தியானத்தினால் கடவுளை அடைய வழி என்று மூளையின் செயல்பாட்டை செயற்கையாக தடுகிறார்கள்!, தன்னிச்சையாக தூண்டபட்ட மூளையினால் லாஜிக் பகுதி செயலிழந்து இல்லியூசன் எனப்படும் பரவசநிலை உண்மையென நம்ப வைக்கிறது!


மனம் ஒருநிலைப்படுவது தியானத்தினால் மட்டுமே என்று கூற்றை ஏற்று கொள்ளமுடியாது, எதாவது ஒன்றையே தொடர்ந்து சிந்தித்து மற்றவற்றை ஒதுக்குவதற்கு தியானம் பயன்படுகிறது என்றால். வேறு எதையும் சிந்திக்காமல் ஒரே வேலையை செய்யும் தொழிலாளிகள் அனைவரும் தியானம் தானே செய்கிறார்கள்!?, மன்நிலைபாடு தியானத்தினால் கைகுடுவதில்லை என்பதை முதலில் உணருங்கள், அது உங்களது ஆர்வத்தினால் ஏற்படுகிறது, ஆர்வமுகுதியில் நீங்கள் செய்யும் வேலையை வேறு எதுவும் சாதாரணமாக தடுத்துவிட முடியாது. உதாரணம்:செக்ஸ்

நண்பர் சதீஷ், மூச்சு பயற்சி பற்றி எழுதியிருந்தார், அதில் நாட்டமுள்ள பலரும் அதை வரவேற்று ஊக்கப்படுத்தியிருந்தார்கள், ஆனால் யாருமே மாற்று கண்ணோட்டத்தில் யோசிப்பதில்லை, மண்வெட்டி எடுத்து தினமும் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைப்பவனுக்கு மூச்சுப்பயிற்சியும் தெரியாது, குண்டிலினியும் தெரியாது, ஆனால் அவனை போல் ஆரோக்கியமான இயற்கை மனிதர்களை உங்களால் காட்டமுடியுமா!?

தியானம், யோகா போன்றவற்கை வெறும் உடற்பயிற்சியாக பார்ப்பது பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை, தயவுசெய்து அவையெல்லாம் கடவுளை அடையும் வழி என்று திரிக்கும் பார்பனீய தந்திரத்துக்கு பலியாகாதீர்கள்!

இது சும்மா கொசுறு!

94 வாங்கிகட்டி கொண்டது:

ஷங்கர் said...

எப்படி இப்படி சிந்தனை பூராவும் இதலயே இருக்குமா தல:)) நான் எல்லாம் எல்லாவற்றையும் சுயமாக சோதனை செய்ஞ்சு தான் நல்லது தப்பு எல்லாம் பார்பேன்

வால்பையன் said...

@ ஷங்கர்

சுயமாக சோதனை செய்வது தவறில்லை!

தியானம், யோகா ஆக்யவற்ரை உடற்பயிற்சியோட ஒப்பிட்டால் நான் எதுவும் சொல்லப்போவதில்லை, கடவுளை அடையும் ஞானமார்க்க வழின்னா முட்டியை பெயர்க்க வேண்டியது தான்!

ஷங்கர் said...

////மண்வெட்டி எடுத்து தினமும் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைப்பவனுக்கு மூச்சுப்பயிற்சியும் தெரியாது,////

தல உண்மை அவர்களுக்கு இருக்கும் சிக்ஸ் பாக் gymku போன்னாலும் வராது...நானெல்லாம் gymku போறத விட்டதே இவர்களை பார்த்துதான் ...வெறும் நடை பயிற்சிதான்

வால்பையன் said...

இங்க பாரு கூத்தை

சங்கர் said...

குண்டிலினியை எழுப்புறதுன்னா என்ன தல?

கொல்லான் said...

//மண்வெட்டி எடுத்து தினமும் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைப்பவனுக்கு மூச்சுப்பயிற்சியும் தெரியாது, குண்டிலினியும் தெரியாது, ஆனால் அவனை போல் ஆரோக்கியமான இயற்கை மனிதர்களை உங்களால் காட்டமுடியுமா!?//

ஆனா இன்னைக்கு எத்தனை பேரு வியர்வை சிந்தி உழைக்கிறார்கள்? காத்தாடிக்கி கீழ உக்காந்து வேலை செய்யற மேல்வர்க்க மனிதர்களிடமிருந்து காசு பறிக்கும் தந்திரம் தான் இதெல்லாம். புத்தியுள்ளவன் பிழைத்துக்கொள்வான்.

கொல்லான் said...

அண்ணன் பேரு இனிமே நவீன ஈ.வே.ரா.
(என்னா ஒரு ஒத்துமை பாருங்க மகா ஜனங்களே. ரெண்டு பேரும் ஈரோடு.)

வால்பையன் said...

//அண்ணன் பேரு இனிமே நவீன ஈ.வே.ரா.
(என்னா ஒரு ஒத்துமை பாருங்க மகா ஜனங்களே. ரெண்டு பேரும் ஈரோடு.)//

நான் நானாக இருக்கவே விருப்புகிறேன் தோழரே!
அவரை மாதிரி, இவரை மாதிரி என்பதை என் கொள்கைக்கு அவமானமாக நினைக்கிறேன்!

Anonymous said...

குண்டலினியை எதுக்கு எழுப்பறது, கு..டி அடிக்கவா

Unknown said...

அதுபாட்டும் ஒரு ஓரமா தூங்கிட்டு போவுது.. எதுக்காக எழுப்ப வேணும்.. இல்லன்னா ஒரு அலாரம் வாங்கி கொடுத்தா போதுமில்ல..

priyamudanprabu said...

உள்ளேன் அய்யா

Unknown said...

பெரிய காமெடி நடக்குது அதுக்கு வகுப்புகள் நடக்குது.. நானும் ரொம்ப நாளா முயற்சி பண்ணி ரொம்ப குருமார்களிடம் பயிற்சி எடுத்து.. ஒன்னும் ஆகல,
இன்னமும் ஆராய்சிகள் தொடருது..

உருப்படியாக இருப்பது யோகா மட்டுமே ..

அடுத்த வாரம் முதல் வாழ்வின் பரிணாமங்களை பற்றிய படங்களை அலசலாம் என்றிருக்கிறேன்... நெறைய சீன் இருப்பதால் (அதுக்குதான் கூட்டமே) பிச்சிகிட்டு போகுன்னு நெனக்கிறேன்..

அராகன் said...

http://video.google.com/videoplay?docid=-27495246532379659#

Ashok D said...

//மனம் ஒருநிலைப்படுவது தியானத்தினால் மட்டுமே என்று கூற்றை ஏற்று கொள்ளமுடியாது, எதாவது ஒன்றையே தொடர்ந்து சிந்தித்து மற்றவற்றை ஒதுக்குவதற்கு தியானம் பயன்படுகிறது என்றால்//

முற்றிலும் தவறான definition வால்.

தியானம் என்பது மனமற்று போவது. நம் very soulலை touch பண்ணுவது :)

Ashok D said...

தொடர்ந்து தியானம் பண்ணுவது...

followupக்கு (மெயிலில் பெற)

Rajan said...

//குண்டிலினியை எழுப்புறதுன்னா என்ன தல?//

அதான் தெளிவா இருக்கே தல!

Rajan said...

//தொடர்ந்து தியானம் பண்ணுவது...

followupக்கு (மெயிலில் பெற)//


தொடர்ந்து தியானம் பண்ணினா ஃபாலோ அப் கமெண்டெல்லாம் மெயிலில் வருமா! அட இது தெரியாம நான் அந்த பாக்ஸ கிளிக் பண்ணிட்டு இருக்கேன் வருசக் கணக்கா!

வால்பையன் said...

//தியானம் என்பது மனமற்று போவது. நம் very soulலை touch பண்ணுவது :) //

மூளையின் ஆதார செயலை நிறுத்தி முட்டாளாவது என்று தெளிவாக சொல்லியிருக்கலாமே தல!

சீறினா தான் அது சிங்கம்,
சிந்திச்சா தான் அது மூளை!

வால்பையன் said...

//
தொடர்ந்து தியானம் பண்ணினா ஃபாலோ அப் கமெண்டெல்லாம் மெயிலில் வருமா! அட இது தெரியாம நான் அந்த பாக்ஸ கிளிக் பண்ணிட்டு இருக்கேன் வருசக் கணக்கா! //

உங்களது மெயில் ஐடியும் சேர்ந்து விட்டேன், அதனால் தான் ஆல் இன் ஆல் கமெண்டுகள் உங்களுக்கு மெயிலில் கிடைக்கிறது, வால்பையன் கமெண்டும் வேணுமா?!

Rajan said...

//நெறைய சீன் இருப்பதால் (அதுக்குதான் கூட்டமே) பிச்சிகிட்டு போகுன்னு நெனக்கிறேன்..//


சீன் இருந்தா வாயத் தொறந்துட்டு பாப்பானுக பேரு சிவன் பாருவதின்னு போட்டா கொதிச்சுப் போயிருவானுக... தூக்குனதெல்லாம் தொங்கிடும்

Rajan said...

//முதல்ல நான் கொடுக்குற லெட்டரை ஒரு பொண்ணுகிட்ட கொண்டு போய் கொடு, அது தான் மீடியேட்டரின் பாலபாடம்!//


அந்த பொண்ணு மதுரப் பொண்ணா தல!

Rajan said...

//
புதுசா ஒண்ணு கண்டுபிடி, மல்லாந்து படுத்துக்கிட்டு, காலை ரெண்டு காலையும் மேலே தூக்கி அப்படியே கும்பிடுற மாதிரி இறக்கி//

இது தனியா பண்ணனுமா இல்ல ஜோடியாவா!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆர்வமுகுதியில் நீங்கள் செய்யும் வேலையை வேறு எதுவும் சாதாரணமாக தடுத்துவிட முடியாது. உதாரணம்:செக்ஸ்
//


இது பாயிண்ட்.....

Rajan said...

//கீழே இடுப்புக்கு நடுவுல இருந்து ஒரு சக்தி கொஞ்சம் கொஞ்சமா தலைக்கு ஏத்தனும்,//


அவ்வளவு தூரத்துக்கு ஏத்த முடியுமா

வால்பையன் said...

//அந்த பொண்ணு மதுரப் பொண்ணா தல! //


நானும் மதுர தான் தல!
இப்போ இருக்குறது தான் ஈரோடு!

சரி மதுரையில ஒரே ஒரு பொண்ணு தான் இருக்கா!?

Rajan said...

//சரி மதுரையில ஒரே ஒரு பொண்ணு தான் இருக்கா!? //


ஆமா மீனாச்சின்னு பேரு!

Rajan said...

//ஆர்வமுகுதியில் நீங்கள் செய்யும் வேலையை வேறு எதுவும் சாதாரணமாக தடுத்துவிட முடியாது. உதாரணம்:செக்ஸ்
//


பின்ன 63 வயசுல லிப்பு கிஸ்ஸெல்லாம் வேறெப்பிடி!

Unknown said...

//.. அவரை மாதிரி, இவரை மாதிரி என்பதை என் கொள்கைக்கு அவமானமாக நினைக்கிறேன்! ..//

அருமை.. :-))

மார்கண்டேயன் said...

// சீன் இருந்தா வாயத் தொறந்துட்டு பாப்பானுக. .. //

இந்த நேரத்துல மட்டும் எப்படி, மல(த)ம், பே(ஜா)தி எல்லாம் மறந்து போகுது ?

. . .

என்னவோ போங்க . . . யாரவது அவுத்து போட்டு காமிக்கும் போது . . . புண்படாத மனசு . . . கேள்வியே கேக்காம நம்புற விஷயத்த கேள்வி கேட்கும் போது புன்பட்டுப்போயிதுடுதா . . . ?

செல்வா said...

///மனம் ஒருநிலைப்படுவது தியானத்தினால் மட்டுமே என்று கூற்றை ஏற்று கொள்ளமுடியாது, எதாவது ஒன்றையே தொடர்ந்து சிந்தித்து மற்றவற்றை ஒதுக்குவதற்கு தியானம் பயன்படுகிறது என்றால். வேறு எதையும் சிந்திக்காமல் ஒரே வேலையை செய்யும் தொழிலாளிகள் அனைவரும் தியானம் தானே செய்கிறார்கள்!?, மன்நிலைபாடு தியானத்தினால் கைகுடுவதில்லை என்பதை முதலில் உணருங்கள்///


நானும் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் .. தியானம் செய்வதால் மனம் ஒருநிலை படுகிறது என்றால் , நம்மால் தியான நிலையிலேயே இருக்க முடியுமா ...? உண்மையிலேயே அப்படி ஒருநிலைப்பட்டு இருப்பதின் பயன் என்னை ...??

செல்வா said...

/////அண்ணன் பேரு இனிமே நவீன ஈ.வே.ரா.
(என்னா ஒரு ஒத்துமை பாருங்க மகா ஜனங்களே. ரெண்டு பேரும் ஈரோடு.)//

நான் நானாக இருக்கவே விருப்புகிறேன் தோழரே!
அவரை மாதிரி, இவரை மாதிரி என்பதை என் கொள்கைக்கு அவமானமாக நினைக்கிறேன்! ///

நானும் மதுர தான் தல!
இப்போ இருக்குறது தான் ஈரோடு!///

ஆனா நான் ஈரோடு தானுங்க ... பிறந்தது வளர்ந்தது எல்லாமே .... :-)

வால்பையன் said...

http://theepandham.blogspot.com/2010/07/blog-post_2052.html

இந்த எச்சரிக்கை பதிவுக்கு எனது பின்னூட்டம், ஒரு வேளை அழைக்கபட்டால் என்ன செய்வது, அதான் இங்கேயும், வால்பையனிலும்!

****

எச்சரிக்கை என்பதை அந்த பதிவுக்கு பதில் சொல்லிட்டு செய்திருந்தால் மகிழ்ந்திருக்கலாம், ஆனால் ஒன்றும் சொல்லாமல் எச்சரிக்கை விடுத்தால், நாங்கள் அப்படி தாண்டா!, நீ எதையும் கேள்வி கேட்கக்கூடாது, கேட்டா எல்லா இஸ்லாமியனும் ஒன்று சேர்ந்து உன்னை எச்சரித்து பதிவிட்டு மகிழ்வோம் என்பது போல் இருக்கிறது!

ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்லனும், பதில் சொல்ல தெரியல என்பதற்காக, கேள்வி கேட்டவனை முட்டாள் என சொல்லக்கூடாது!

உங்க எச்சரிக்கை எனது தாவாக்கட்டை அரிப்புக்கு சமம், ஒரு விரல் போதும் சொறிந்து கொள்ள!

அது சரி(18185106603874041862) said...

//
மனம் ஒருநிலைப்படுவது தியானத்தினால் மட்டுமே என்று கூற்றை ஏற்று கொள்ளமுடியாது,
//

அதெல்லாம் கூட எனக்கு கவலை இல்லை...இப்படி எல்லாப் பேரும் தியானத்துல உக்காந்து குண்டிலினி எந்திரிச்சி எந்த வேலையும் செய்யாம கோவிலு கொளம்னு போய் உக்காந்துட்டா யாரு தான் வேலை பாக்கறது? திங்கிறதுக்கு சோறு எங்கருந்து வரும்?

ஆசையே துன்பத்துக்கு காரணம்னு சொல்லி வச்சிட்டு அவரு பொட்டி படுக்கையை கட்டிக்கிட்டு போயிட்டாரு...பயிர் வளரணும்னு விவசாயி ஆசைப்படாட்டி புத்த பிட்சுக்கு மட்டுமில்ல, எவனுக்கும் சோறு கிடையாது...

இதெல்லாம் கேட்டா எங்க மத உணர்வுகளை புண்ணாக்கு படுத்தறீங்கன்னு ஆரம்பிச்சுடுவாய்ங்க...

ஸ்ஸ்ஸப்ப்ப்பா...

அது சரி(18185106603874041862) said...

நீங்க குடுத்திருக்க நியூஸ்லருந்து...

அதுல இருக்க பேரு மேல எனக்கு ஒரு டவுட்டு...

அது என்ன பாலாஜி(எ) மனோவா? பாரதி என்ற எஸ்தர்??

ஒரு பேரு இந்துப் பேரு, இன்னொரு பேரு கிறிஸ்டியன் பேரு...காரணம்?? உங்களுக்காவது வெளங்குதா? :)))

வால்பையன் said...

பாரதி என்று பாரதி மேல் உள்ள பற்றீனால் பெயர் வைத்து மதபற்றின் படி எஸ்தர் என அழைத்திருக்கலாம்!

பாலாஜி நிச்சயம் கிறிஸ்துவ பெயர் கிடையாது!

எனக்கு முருகன் என்றொரு நண்பன் உண்டு, அவன் மதம் மாறி கிறிஸ்டோபர் என்று வைத்து கொண்டான், இன்னும் பலர் அவனை முருகன் என்றே அழைக்கிறார்கள், அது போல் மதம் மாறியவான இருக்கலாம்!

மதத்தில் பிறந்தவனை விட மாறியவன் பெரிய கிறுக்கனாக இருப்பான்!

அது சரி(18185106603874041862) said...

//
வால்பையன் said...
பாரதி என்று பாரதி மேல் உள்ள பற்றீனால் பெயர் வைத்து மதபற்றின் படி எஸ்தர் என அழைத்திருக்கலாம்!

பாலாஜி நிச்சயம் கிறிஸ்துவ பெயர் கிடையாது!

எனக்கு முருகன் என்றொரு நண்பன் உண்டு, அவன் மதம் மாறி கிறிஸ்டோபர் என்று வைத்து கொண்டான், இன்னும் பலர் அவனை முருகன் என்றே அழைக்கிறார்கள், அது போல் மதம் மாறியவான இருக்கலாம்!

மதத்தில் பிறந்தவனை விட மாறியவன் பெரிய கிறுக்கனாக இருப்பான்!

//

இல்ல பாஸ்...இதுல இன்னொரு பெரிய பிரச்சினை இருக்கு..

சட்டப்படி, தாழ்த்தப்பட்டவங்க மதம் மாறினா அவங்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. அவங்க பிற்படுத்தப்பட்டவங்க லிஸ்ட்ல வந்துடுவாங்க...அதுக்காக ஸ்கூல் செர்டிஃபிகேட்ல ஹிண்டு பேரு, ஆனா அவங்க கிறிஸ்டியனா இருப்பாங்க..

இட ஒதுக்கீடு வாங்கறதுக்காக இப்படி மோசடி பண்றாங்கன்னு ஹின்டுவா இருக்க தாழ்த்தப்பட்டவங்க ஏதோ ஒரு ஊர்ல புகார் செஞ்சு முன்னாடி ஒரு பிரச்சினை நடந்தது.

இதுவும் அந்த மாதிரி டபுள் கேமான்னு தெரியலை...அதான் கேட்டேன்.

வால்பையன் said...

//இதுவும் அந்த மாதிரி டபுள் கேமான்னு தெரியலை...அதான் கேட்டேன். //


பிச்சை எடுக்குறதுக்காக என்ன வேடம் வேண்டுமாலும் போட தயக்காத மனிதர்கள், உழைச்சா என்ன கேடுன்னு தெரியல!?

அது சரி(18185106603874041862) said...

//
வால்பையன் said...

மதத்தில் பிறந்தவனை விட மாறியவன் பெரிய கிறுக்கனாக இருப்பான்!

//

கொஞ்ச நாள் முன்னாடி சித்தார்தன் என்ற‌ பெரியார் தாசன் என்ற அப்துல்லான்னு ஒருத்தர் இருந்தாரு....இப்பிடி யாருக்காவது அடிமையாவோ இல்லை தாசனாவோ இருக்கதுல அவருக்கு அப்படி என்ன தான் ஆசைன்னு தெரியலை..இதுல வேற சுயமரியாதைக்காரன்னு சொல்லிப்பாரு..

இப்ப அவர் யாருக்கு தாசனா இருக்காரு? இன்னமும் அல்லா அடிமையா இல்ல கட்சி மாறியாச்சா?

Rajan said...

//இப்ப அவர் யாருக்கு தாசனா இருக்காரு? இன்னமும் அல்லா அடிமையா இல்ல கட்சி மாறியாச்சா? //


குல்லா போட்டு மானங்கெட்டதால அண்ணன விஜய் டீவியும் கழட்டி உட்டுடுச்சு!

வால்பையன் said...

//இப்ப அவர் யாருக்கு தாசனா இருக்காரு? இன்னமும் அல்லா அடிமையா இல்ல கட்சி மாறியாச்சா? //


பசை உள்ள பக்கம் ஒட்ட நினைப்பார், ஆனா போயிருக்குறது சிங்க குகை, திரும்புதல் கடினம், அப்படி திரும்புனா என்னவாகும் தெரியுமுல்ல!





























சொர்க்கத்தில் நித்தியகன்னிகைகள் கிடைக்காது!

செல்வா said...

//பாரதி என்று பாரதி மேல் உள்ள பற்றீனால் பெயர் வைத்து மதபற்றின் படி எஸ்தர் என அழைத்திருக்கலாம்!///

அப்படின்னா கோமாளி ..??

அது சரி(18185106603874041862) said...

//
வால்பையன் said...

பசை உள்ள பக்கம் ஒட்ட நினைப்பார், ஆனா போயிருக்குறது சிங்க குகை, திரும்புதல் கடினம், அப்படி திரும்புனா என்னவாகும் தெரியுமுல்ல!

சொர்க்கத்தில் நித்தியகன்னிகைகள் கிடைக்காது!

//

இந்த நித்திய கன்னி மேட்டருல எனக்கு நிறைய டவுட்டு இருக்கு..

மொதல்ல, இந்த லேடீஸ் அனுப்புற மேட்டரு, செத்தவுடனேயே நடக்குமா இல்லை இறுதி நாள்னு சொல்ற ஒலகத்துல இருக்க எல்லாப் பயபுள்ளைகளும் மண்டைய போடற வரை வெய்ட் பண்ணனுமா?

அப்புறம் அனுப்பி வைக்கிற கன்னிங்க கூட எதுனா கசமுசா நடந்துட்டா அப்புறமும் அவங்க கன்னிங்க தானா? அவங்களை வேற யார்ட்டனா அனுப்பி வைப்பாங்களா (என்னய்யா இது...ரொம்ப அசிங்கமா இருக்கே)

சொர்க்கத்துல மொத்தமா எத்தனை கன்னிங்க இருக்காங்க?

இப்பிடி ஆளனுப்பி வைக்கிறதுக்கு அங்க எத்தனை ஆளுங்க வேலை பார்க்கிறாங்க? அதுல பெரிய மாமா யாரு?

எல்லாத்தையும் தெரிஞ்சிகிட்டா கணக்கு போட்டு முன்னாடி துண்டு போட வசதியா இருக்கும்ல? அதுக்குத் தான் :)))

வால்பையன் said...

//இப்பிடி ஆளனுப்பி வைக்கிறதுக்கு அங்க எத்தனை ஆளுங்க வேலை பார்க்கிறாங்க? அதுல பெரிய மாமா யாரு?

எல்லாத்தையும் தெரிஞ்சிகிட்டா கணக்கு போட்டு முன்னாடி துண்டு போட வசதியா இருக்கும்ல? அதுக்குத் தான் :)))//


தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுப்படும்,
இல்லையென்று சொல்வதில்லை!

ஹேமா said...

வாலு..வந்தேன்.படிச்சேன் !

Kumky said...

உள்ளேன் அய்யா...

:))

மங்குனி அமைச்சர் said...

மண்வெட்டி எடுத்து தினமும் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைப்பவனுக்கு மூச்சுப்பயிற்சியும் தெரியாது, குண்டிலினியும் தெரியாது///

கரக்ட்டு தல, இடைல ஒரு லேடிஸ் யோக பண்றாங்கல்ல , அவக போட்டோ இன்னும் நாலஞ்சு போட்டு இருக்கலாம்

மங்குனி அமைச்சர் said...

இங்க பாரு கூத்தை///

தல லிங்க பாத்தேன் , இது இன்னும் நடக்களைஎன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன் , நடந்துருச்சா ????

http://rkguru.blogspot.com/ said...

கண்ணா பின்னா என்று யோசிப்பிங்க போல...

Ashok D said...

//மூளையின் ஆதார செயலை நிறுத்தி முட்டாளாவது என்று தெளிவாக சொல்லியிருக்கலாமே தல!//

மனம்ன்னா என்னன்னு நீங்க நினைக்கறீங்க வால்

வால்பையன் said...

//மனம்ன்னா என்னன்னு நீங்க நினைக்கறீங்க வால் //

அறிவு வேறு, மனம் வேறு என்று நம்புகிறவரா நீங்கள்!?

வால்பையன் said...

யோகாவால நல்லது நடக்கும்னா எதுக்கு தக்காளி இந்த விளம்பரம்!


http://www.youtube.com/results?search_query=shilpa+shetty+yoga&aq=2s

Ashok D said...

Collections* of thoughts = மனம்..

(*Collections = our so called thoughts(past), remembrance in conscious and unconscious part, and so on)

வால்பையன் said...

//Collections* of thoughts = மனம்..

(*Collections = our so called thoughts(past), remembrance in conscious and unconscious part, and so on) //


remember of thoughts!?

ஏன் இப்படி?

Ashok D said...

அதான் மனம்

வால்பையன் said...

//அதான் மனம் //

அப்ப அறிவு எங்க இருக்கு?

ரெண்டுக்கும் வித்தியாசம் என்ன?

கல்வெட்டு said...

.

// அசோக்,

Collections* of thoughts = மனம்..

(*Collections = our so called thoughts(past), remembrance in conscious and unconscious part, and so on)///

***

அசோக்,
மனம் என்ற ஒரு வஸ்தாது இல்லை.

மனித உடலில் சிந்தனை கட்டளை உணர்வு எல்லாம் மூளையே.

மனம் இதைச் செய்கிறதா?
our so called thoughts(past), remembrance in conscious and unconscious part, and so on ???? ஏன் காமெடி செய்கிறீர்கள்?

**

Q1: மனம் என்பதன் அறிவியல் பெயர் என்ன?
Q2:அது எங்கே உள்ளது?
Q3: அது என்ன வேலை செய்கிறது?


----------------------


தகவல்:
ஒருவேளை நீங்கள் இதயத்தை மனம் என்று சொன்னால்...

இதயம் என்பது "இரத்த பம்ப்" மட்டுமே. அது எதையும் உணராது மற்றும் முடிவும் எடுக்காது.

மூளைச் சாவு என்பது மூளைசெயல் இழந்தவர்களை குறிக்கும். அவர்களுக்கும் "இரத்த பம்ப்" வேலை செய்து கொண்டுதான் இருக்கும் . மூளை செயல்திறன் இழந்ததால் ஒரு உணர்வும் அற்று இருப்பார்கள்.

"இரத்த பம்ப்" ஆல் உணர முடியும் என்றால் அவர்கள் ரியாக்ட் செய்வார்கள்.

மருத்துவ உலகில் மூளை செயல்திறன் இழந்து "இரத்த பம்ப்" வேலை செய்பவர்கள் ரியாக்ட் செய்ததாக தகவல் இல்லை. "இரத்த பம்ப்" so called thoughts(past), remembrance in conscious and unconscious part, and so on ???? காரணம் என்றால் மூளை ?

**

Ashok D said...

மனம் என்பதே குப்பை கூடைதான் வால் :)

அதில் அறிவு என்பதெல்லாம் கொஞ்சம் வெள்ளையடிக்கப்பட்ட விஷயங்களே

Ashok D said...

கல்வெட்டு.. உங்கள் மனம் எத்தனை வார்த்தைகளை திறமையாய் கொட்டுகிறது பார்த்தீர்களா.. அழகாய் பண்படுத்தப்பட்ட rationalizing மனம் உங்களுடையது :)

வால்பையன் said...

//மனம் என்பதே குப்பை கூடைதான் வால் :)

அதில் அறிவு என்பதெல்லாம் கொஞ்சம் வெள்ளையடிக்கப்பட்ட விஷயங்களே //


வெள்ளையடிக்க அது என்ன சுவரா!?
மனிதனின் ஆதாரபுள்ளியே அவனது அறிவு தான்!

வால்பையன் said...

//கல்வெட்டு.. உங்கள் மனம் எத்தனை வார்த்தைகளை திறமையாய் கொட்டுகிறது பார்த்தீர்களா.. அழகாய் பண்படுத்தப்பட்ட rationalizing மனம் உங்களுடையது :) //


அப்ப அவருக்கு அறிவு இல்லையா!?

:)

Ashok D said...

//வெள்ளையடிக்க அது என்ன சுவரா!?
மனிதனின் ஆதாரபுள்ளியே அவனது அறிவு தான்!//
அறிவு என்பதை விட அறிதல் என்பதே சரியானது... அவரவர் அறிதல் அவரவர் மனதை பொறுத்தே அமையும்...
அஷோக்கின் மனம் வேறு அருணின் மனம் வேறு ...

Ashok D said...

//அப்ப அவருக்கு அறிவு இல்லையா!?

:) //

யோவ் வால்.. நல்லா சிண்டு முடியறப்பா நீ

கல்வெட்டு said...

அசோக் மேட்டருக்கு வாங்க :-))


Q1: மனம் என்பதன் அறிவியல் பெயர் என்ன?
Q2:அது எங்கே உள்ளது?
Q3: அது என்ன வேலை செய்கிறது?


மூன்று கேள்விக்கும் மூளைச்சாவு/ இரத்த பம்ப் மேட்டருக்கு பதில் ப்ளீஸ்

வால்பையன் said...

//அறிவு என்பதை விட அறிதல் என்பதே சரியானது... அவரவர் அறிதல் அவரவர் மனதை பொறுத்தே அமையும்...
அஷோக்கின் மனம் வேறு அருணின் மனம் வேறு ...//

அசோக்கின் அறிவு வேறு, அருணின் அறிவு வேறு,
அது அவர்கள் வாழ்ந்த சூழ்நிலையையும், அவர்களது தனிபட்ட ஆர்வத்தையும் பொறுத்து பெற்று கொண்டது, இதில் மனம் எங்கே வந்தது, அப்படி ஒரு வஸ்து எங்கே என்ற கேள்விக்கு பதிலை காணோமே!?

Ashok D said...

Q1: அறிவியல் என்றால் என்ன?
Q2:அது எங்கே உள்ளது?
Q3: அது என்ன வேலை செய்கிறது?

கல்வெட்டு said...

//Q1: அறிவியல் என்றால் என்ன?
Q2:அது எங்கே உள்ளது?
Q3: அது என்ன வேலை செய்கிறது?//

Thanks Ashok !

Ashok D said...

//இதில் மனம் எங்கே வந்தது, அப்படி ஒரு வஸ்து எங்கே என்ற கேள்விக்கு பதிலை காணோமே!?//

உடலில் ’உயிர்’ எங்கே உள்ளது. அதுபோலதான் மனமும்.

வால்பையன் said...

//Q1: அறிவியல் என்றால் என்ன?
Q2:அது எங்கே உள்ளது?
Q3: அது என்ன வேலை செய்கிறது? //


அறிவியல் என்பது அறிவை பயன்படுத்தி வெளிபடுத்துவது!

அது எங்கே இருக்கு, என்ன வேலை செய்கிறது என கேட்பதற்கும் அறிவு வேண்டும்!

ஆனா பாருங்க, சில நேரங்கள் அர்த்தமில்லாத கேள்வியை உங்கள் அறிவு கேட்க வைக்கிறது!

வால்பையன் said...

//உடலில் ’உயிர்’ எங்கே உள்ளது. அதுபோலதான் மனமும். //

உங்கள் கூற்றுபடி மனம் தான் முதல், அதிலிருந்து அறிவு வருதா?!

கல்வெட்டு said...

அசோக்,

உயிர் இருப்பதாக நான் சொல்லவில்லை. நீங்கள் மனம் பற்றிச் சொன்னதால் இந்தக் கேள்வி.

உடலின் பாகங்களைப் பற்றிய கேள்வியை அறிவியல் என்றால் என்ன என்று கேட்டு திசை திருப்பலாம். அது உங்கள் விருப்பம். இதைத் தொடரவில்லை விளையாட்டக இருந்தாலும் இந்த உரையாடல் நேரவிரயம்.

நன்றி!

Ashok D said...

//அறிவியல் என்பது அறிவை பயன்படுத்தி வெளிபடுத்துவது!//

அறிவியல் என்பதின் எச்சங்கள் தான் ஹைட்ரஜன் பாம்ஸ் & Nuclear bombs...

நாம் உபயோகபடுத்தும் ஏஸியும், fridgum தான் ஓஸோன் ஓட்டைக்கு முக்கிய முக்காத காரானிகள் வால்...

அறிவியல் leads to destruction...just destructing this beautiful earth

””அறிவியல் என்பது மனித மனதின் புறவழிச்சாலை”

Ashok D said...

”தியானம் என்பது மனித மனத்தின் அகவழிச்சாலை..”

கல்வெட்டு said...

.

யோகா கற்க சிறந்த ஆசிரியர்:
http://www.youtube.com/watch?v=rv4ZMIpuhKE

***

யோகா / தியானங்கள் /குரு /டவுசர்/ பற்றி "U. G. Krishnamurti" நிறைய பேசி உள்ளார். The Mystique of Enlightenment (http://www.well.com/user/jct/mystiq2.htm) ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும். இவர் எல்லா புனிதங்களையும் களைத்துப்போடும் ஒரு மனிதர். he is no more ...has passed away on March 22, 2007

.

Ashok D said...

//அது எங்கே இருக்கு, என்ன வேலை செய்கிறது என கேட்பதற்கும் அறிவு வேண்டும்!

ஆனா பாருங்க, சில நேரங்கள் அர்த்தமில்லாத கேள்வியை உங்கள் அறிவு கேட்க வைக்கிறது!//

அப்படியென்றால் பத்தியாக நான் எழுதி தள்ளியிருக்கவேண்டும் வால்...

நான் ஒரு பத்து வரிகளில் கவிதையில் லயிப்பவன்... அது சிறு சிறு வரிகளில்...

Ashok D said...

கல்வெட்டு

யோகா தியானம் கற்றுக்கொள்ள G.Krishnamoorthy, Osho, Shiva sutras 108, patanjali yoga sutras... இப்படி நிறைய புத்தகங்கள் உள்ளன.

u.g யும் சிறுவயதில் கடுமையான யோகசூத்திரங்கள் கற்று தேர்ந்தவர் என்பது உங்களுக்கு தெரியுமா...

கல்வெட்டு said...

.

அசோக்,
//u.g யும் சிறுவயதில் கடுமையான யோகசூத்திரங்கள் கற்று தேர்ந்தவர் என்பது உங்களுக்கு தெரியுமா...//

அவரை இங்கே குறிப்பிடக் காரணமே அதுதான். அதைக் கரைத்துக்குடித்தவர் கடைசியில் அது குப்பை என்ரு சொல்லிவிட்டார். அதனால் ஒரு பயனும் இல்லை என்று சொல்லிவிட்டார்.

அது உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டால் நீங்கள் எதையாவது ஏடாகூடமாக கேட்கலாம்.

//G.Krishnamoorthy, Osho, Shiva sutras 108, patanjali yoga sutras//

இந்த வியாபாரிகளிடம் சென்று வித்தை கற்கும் அளவிற்கு எனக்கு எந்த தேவையும் இல்லை.

.

Ashok D said...

//அவரை இங்கே குறிப்பிடக் காரணமே அதுதான். அதைக் கரைத்துக்குடித்தவர் கடைசியில் அது குப்பை என்ரு சொல்லிவிட்டார். அதனால் ஒரு பயனும் இல்லை என்று சொல்லிவிட்டார்.//
ஏனென்றால் அந்த வயதில் காதல் அல்லவா செயதுயிருக்கவேண்டும்.. அவருக்கு தியானத்தை போதித்தால்? விளைவு இப்படிதான் போகும்... வயதான காலத்தில்தான் அவர் இழப்பை உணர்ந்தார்... ஆதலால் குப்பையென பிதற்றினார்...

புரிகிறதா... Buddha vice versa ...:)

//அது உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டால் நீங்கள் எதையாவது ஏடாகூடமாக கேட்கலாம்.//

அப்ப்டியெல்லாம் நாங்க சொல்லமாட்டோம்.. நீங்க தான் utube அப்புறம் ug அப்புறம் linkellam கொடுத்தீங்க... அதலால்தான் ‘உங்களுக்கு தெரியுமா’ன்னு சொல்லவேண்டியதாகியது

Ashok D said...

//இந்த வியாபாரிகளிடம் சென்று வித்தை கற்கும் அளவிற்கு எனக்கு எந்த தேவையும் இல்லை//

நானும் முதலில் ஏகலைவனாக தான் பழகினேன்.. அப்புறம் இவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.. சரிதான் என..

(அதற்காக எந்த tution feesum கொடுக்கல யான்) :)

Ashok D said...

என்னப்பா யாரையும் கானோம்... ஆனா i dont have any website links... or utubes... but I have my 'beyond mind' itz speaks spontaneously without any prejudices..

just need 'drop ur minds'... then no need to speak.. :)

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

தியானம், யோகா ஆக்யவற்ரை உடற்பயிற்சியோட ஒப்பிட்டால் நான் எதுவும் சொல்லப்போவதில்லை, கடவுளை அடையும் ஞானமார்க்க வழின்னா முட்டியை பெயர்க்க வேண்டியது தான்!


வழிமொழிகிறேன் வால்

கல்வெட்டு said...

அசோக்,

//அப்ப்டியெல்லாம் நாங்க சொல்லமாட்டோம்.. நீங்க தான் utube அப்புறம் ug அப்புறம் linkellam கொடுத்தீங்க... அதலால்தான் ‘உங்களுக்கு தெரியுமா’ன்னு சொல்லவேண்டியதாகியது//

அந்த சில்பா இணைப்புகளும் யூஜி யிம் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல.

உங்கள் பெயரையோ உங்களின் கேள்விகளை /பின்னூட்டங்களை மேற்கோள்காட்டி நான் பேசுவது மட்டுமே உங்களுக்கானது. அறிவியல் என்றால் என்ன என்ற உங்களின் கேள்வியிலேயே நான் ஆஃப் ஆகிவிட்டேன். இந்தப்பதிவில் உரையாடல் முடிந்தது அதோடு.

மறுபடியும் நீங்கள் நான் சொன்ன யூஜி மேட்டரை நீங்கள் மேற்கோள் காட்டியதால் அடுத்தபதில்.

யுஜி பிதற்றினாரா அல்லது பிராண்டினார அல்லது போதையில் மட்டையானரா என்பது யோகாவையும் அல்லது யுஜியையும் பிராண்டுபவர்களுக்கு .

எனக்கு இல்லை :‍))

நன்றி!

*

Ashok D said...

thankZ கமார்கட்டு.. அதாவது sweetkattu... கல்வெட்டு :)

Ashok D said...

//உங்கள் கூற்றுபடி மனம் தான் முதல், அதிலிருந்து அறிவு வருதா?!//

அதான் வால்

கல்வெட்டு said...

.

நன்றி அசோக்!

(இடமாறு தோற்றப்பிழை போல D.R அசோக் என்பது டாக்டர் (Dr) அசோக் என்றே வாசித்துவிடுகிறேன்)


.

Ashok D said...

அதுவும் சரியே...

Dr. in all subjects ;)

Ashok D said...

but I am not a doctor..

புலவன் புலிகேசி said...

எதுக்கு கடவுளை அடையனும். முதல்ல மனுசனா இருந்தாலே போதும் கடவுள் என்ற குணம் ந்மக்குள்ளேயே இருப்பதைக் கண்டறியலாம். நல்ல பதிவு தோழரே..

Unknown said...

//சீறினா தான் அது சிங்கம்,
சிந்திச்சா தான் அது மூளை!//

கலக்கல்

ஜில்தண்ணி said...

//you should not be a follower, be a Creator!//

நல்லா சொன்னீங்க தல

// மதத்தில் பிறந்தவனை விட மாறியவன் பெரிய கிறுக்கனாக இருப்பான்! //

எல்லாம் மூளை சலவையின் வேலை தானே

ரொம்ப தேவையான பதிவுதான் வால்

முனியாண்டி பெ. said...

மிகவும் ரசித்தேன்.

Unknown said...

தலை

குறிப்பா அந்த குண்டிலினி மேட்டர் சூப்பர். நச்சரிச்சு எனக்கு பதிலா 300 கட்டி அதக் கத்துக்க கூட்டிட்டுப் போனார் ஒரு சொந்தக்காரர். எதுவும் ஏறலை. நல்லா தூங்கிட்டு வந்துட்டேன்.

Romeoboy said...

என்ன கொடுமை பாஸ் இது ?? உங்களுக்கு மட்டும் எல்லா பின்னுடம் அந்த அந்த டைம்க்கு வந்துடுது, காலைல இருந்து எனக்கு வந்த பின்னுடம் எல்லாம் இன்னும் பதிவுல வரவே இல்லையே :(

நா.பூ.பெரியார்முத்து said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி

www.periyarl.com - பகலவன் திரட்டி



உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

p said...

(எனக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை...)
தனியாக ஒருநாள் தியானம் செய்து பாருங்கள்... அது அருமையான நல்ல அனுபவம்... மற்றபடி கடவுளையெல்லாம் அடைய முடியாதுதான்... தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் பரவாயில்லை..

இதை முயற்சி செய்து பாருங்கள்.......
முதல்படியாக தங்கள் வீட்டில் உள்ள கடவுளறையில் அல்லது மொட்டைமாடியில் தனியாக அமைதியாக உட்காருங்கள்... மனதைக் கட்டுப்படுத்தாமல் தங்கள் மனம் என்ன சிந்திக்கிறது என்பதை மட்டும் மேலாண்மை செய்யுங்கள்... வயிறு காலியாகவும், மாலை நேரமாகவும் இருந்தால் நலம்... இதைப் படித்துப் பாருங்கள் http://youthful.vikatan.com/youth/Nyouth/ganesan42_120610.asp
இது எனது சொந்த அனுபவம்..

மற்றபடி குருவெல்லாம் தேவையில்லை... தங்கள் தைரியத்திற்குப் பாராட்டுக்கள்... மற்றபடி உடலுறவு உச்சத்தையும் தியான உச்சத்தையும் ஒப்பிட இயலாது... இரண்டு வேறு வேறானவை... தியான உச்சநிலைக்குப் பின்பு.. மனம் ஒரு அசாத்திய அமைதி நிலையை அடையும்...

நன்றி

!

Blog Widget by LinkWithin