பரிணாமம் - செக்ஸ்

குறிப்பு:பதிவிலுள்ள சில சொற்கள் உங்களுக்கு அசெளகரியத்தை அளிக்கலாம், செக்ஸ் என்பது உயிரினம் அனைத்திற்கும் பொது மற்றும் அதை தெரிந்து கொள்வதில் தவறில்லை என்பதால் நான் இதை எழுதுகிறேன்!

ஏற்கனவே பலமுறை சொன்னது தான், பரிணாமம் பற்றிய என்னுடைய தொடர் முழுக்க முழுக்க என்னுடய புரிதல் மட்டுமே! புற உலகில் நான் பார்க்கும் விசயங்களில் பரிணாமத்திற்கான சுவடுகள் உணரப்பட்டு அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன், அவைகளில் உள்ள அதிகபட்ச சாத்தியகூறுகளை அறிவது நமது உரையாடலில் தான் இருக்கிறது!

****************

பரிணாமம் தொடரில் எனது சென்ற பதிவான இனபெருக்கம் சேப்டரில் உயிரின் மிக முக்கிய தேவை இனபெருக்கம் என்று குறிப்பிட்டிருந்தேன்! மேலும் பின்னூட்டத்தில் மனிதனை தவிர பிற விலங்குகளுக்கு ஓரினசேர்க்கை பிரியம் இருக்காது எனவும் சொல்லியிருந்தேன், ஆனால் விலங்குகளுக்கு ஓரினசேர்கையில் விரும்பம் உண்டு என்று அதற்கான சுட்டியை நண்பர் கொடுத்திருந்தார், அது பற்றி நண்பர்களிடம் விவாதித்து தொகுத்த கட்டுரை இது!

இயற்கை உயிரின இனபெருக்கத்தில் அதிகம் ஊக்கப்படுத்துவது பாலூட்டிகளை தான், அவைகளால் திறனான சந்ததியினரை உருவாக்க முடிந்ததே காரணம்!, தாவரங்கள் மற்றும் அதன் நீட்சியாக இன்னும் பல உயிரினங்கள் தனது துணையை தேர்தெடுக்க வல்லமை அற்று இருக்கின்றன!, தாவரங்களின் மகரந்தசேர்க்கை அதன் விருப்பபடி நடக்காது, மீன்களில் பல வகைகள் ஒன்று கூடி முட்டையையும், விந்தையும் பீச்சி அடித்து இனப்பெருக்கம் செய்கின்றன, ஆயிரக்கனக்கான மீன்கள் என்பதால் எந்த மீனின் விந்து எந்த முட்டையுடன் சேரும் என்பதும் தெரியாது, மேலும் நான் ஏற்கனவே சொன்னது போல், தாவரங்களுக்கு பூக்க எப்படி ஒரு காலம் இருக்கிறதோ, அதே போல் மீன்களுக்கும் இனபெருக்கத்திற்கு ஒரு காலம் இருக்கிறது!

இனப்பெருக்க காலம் பரிணாம வளர்ச்சியில் இன்னும் பல விலங்குகளுக்கு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது!, ஆனால் பாலூட்டிகளில் நினைத்த மாத்திரத்தில் ஆண், பெண்ணுடன் சேர முடியாது, அங்கே பெண்ணின் தேவை பிரதானம், அவளது சம்மதத்தின் பேரில் மட்டுமே ஆண் அணுக முடியும், இவையெல்லாம் காட்டில் மட்டும் நடப்பதல்ல, ஒருகாலத்தில் காட்டி விலங்காக இருந்த நாய்கள் தற்போது தெருவில் இனபெருக்கத்திற்காக போடும் சண்டையை பார்த்திருக்கலாம்!, பலசாலியான ஒரு ஆணால் மட்டுமே ஆரோக்கியமான சந்ததியினரை உருவாக்க முடியும் என்பதே இயற்கையின் நியதி!

வருடத்தில் ஒரு முறை இனபெருக்க காலம் முடிந்து விட்டால் மீண்டும் அடுத்த பருவம் வரை காத்திருக்க வேண்டும்!, ஆனால் இனபெருக்கம் என்பது உயிரியல் உந்துசக்தி, அவற்றால் சாமனியமாக அதை அடக்க இயலாது!, ஒரு பலசாலி விலங்கு வெற்றி பெற்றால் அதற்கு அடுத்த பலசாலி விலங்கு ஒன்று அந்த கூட்டத்தில் நிச்சயம் இருக்கும், அவைகள் அதற்கு கீழ் உள்ள ஆண் விலங்குகளை தனது உடல் தேவைக்கு பயன்படுத்தி கொள்கின்றன!, ஆனால் அது தொடருமா அல்லது அந்த வருடம் மட்டும் தானா என்பதே ஓரினசேர்க்கை சரியா தவறா என்பதற்கான கேள்வி!

சிங்ககூட்டங்களின் வாழ்க்கை சற்றே வித்தியாசமானது, பூனை குடும்பத்தில் பெரும்பாலும் அப்படி தான், இரண்டிற்கும் மேற்பட்ட பெண் சிங்கங்கள் இருக்கும் கூட்டத்தை ஒரு ஆண் சிங்கம் கட்டுபாட்டில் வைத்திருக்கும், பெண் சிங்கங்கள் வேட்டையாட ஆண் சிங்கம் முதலில் உண்டு மிச்சத்தை பெண் சிங்கங்கள் எடுத்து கொள்ளும், இனபெருக்க காலத்தில் நாடோடி சிங்கங்கள்(இவை பற்றி பின்னால்) துணையை தேடி வரும், அப்போது அதனுடம் சண்டையிட்டு அந்த ஆண் சிங்கம் வெற்றிபெற்று விட்டால் பழைய பெண் சிங்கங்கள் அதற்கே, அதன் பின் வரும் குட்டிகள் தாயின் பராமரிப்பில் இரண்டு வருடம் இருக்கும், இரண்டு வருடம் கழித்து ஆண் குட்டிகள் கூட்டத்திலிருந்து துரத்தியடிக்கபட்டு பெண் குட்டிகள் மட்டும் கூட்டத்தில் இருக்கும்! அவ்வாறு துரத்தியடிக்கபட்ட ஆண் குட்டிகள் நாடோடி சிங்கங்கள் என அழைக்கபடுகின்றன, அவைகள் குட்டியிலிருந்தே ஒன்றாக இருப்பதால் சில ஒன்றாகவே வேட்டையாடவும், பெண் வேட்டைக்கும் செல்கின்றன! அவ்வாறு செல்லும் பொழுது கூட்டத்தில் குட்டிகள் இருந்தால் கூட்டதலைவனுக்கு துணையாக பெண் சிங்கங்களும் களத்தில் குதிக்கும், ஏனென்றால் ஒருவேளை நாடோடி சிங்கங்கள் வெற்றிபெற்று விட்டால் முதலில் கூட்டத்தில் இருக்கும் ஆண் குட்டிகளை கொன்று விடும்!, இவ்வாறு இனபெருக்க காலத்தில் தோற்ற நாடோடி சிங்கங்கள் சிலசமயம் ஓரினசேர்க்கையில் ஈடுபடலாம்!

பென்குயின்கள் பெரும்பாலும் ஓரிணை கொள்கையை கடைபிடிக்கின்றன, இனபெருக்க காலத்தில் முட்டையை ஆண் அடைகாக்க, பெண் வேட்டைக்கு சென்று தேவையான புரதத்தை உடலுக்கு ஏற்றி கொண்டு கொஞ்சம் உணவையும் வாயில் கவ்வி வரும், பொறிந்திருக்கும் குஞ்சுகளுக்கு அது உணவாக அளிக்கப்படும், மீண்டும் குஞ்சுகள் சிலகாலம் பெண் பென்குவின்கள் பாதுகாப்பில் இருக்கும், அப்பொழுது ஆண்கள் வேட்டைக்கு சென்று திரும்பும்!, எல்லாம் சரி இங்கே ஓரினசேர்க்கைக்கு என்ன வேலை என்பது தானே கேள்வி, உணவு சேகரிக்க செல்லும் பென்குயின்கள் எத்தனை உயிரோடு திரும்பும் என்பது மிக முக்கியம் தானே!, ஜோடி இழுந்த ஒரு பென்குயின், அதே போல் ஜோடி இழந்த இன்னொரு பென்குயினுடன் இணைத்து கொள்கிறது, வைஅகள் தாயின்றி இருக்கும் குட்டிகளை எடுத்து வளர்க்கும்!, அவைகளுக்குள் ஓரினசேர்க்கை இருக்குமா என்பது சரியாக தெரியவில்லை!

மற்றொரு முக்கியமான விசயம், சுயமைதுனம் செய்து கொள்ளும் அளவுக்கு கரவசதி, குரங்கினத்தை தவிர மற்ற விலங்குகள் எதற்கும் இல்லை என்பதும் கவனிக்கபட வேண்டிய விசயம், ஆகையால் அறிவியல் கூற்றுபடி அந்த நேரத்துக்கு அவைகளின் ஓரினசேர்க்கை தவிர்க்க முடியாததாகிறது, அவ்வாறு இல்லாவிடில் அவற்றிற்கு, உடலுறவின் மீது நாட்டம் போய்விடும் என்கிறார்கள்!, இதில் குறிபிட்ட ”குரங்கினம்”, மனிதனையும் சேர்த்து தான்!

மனிதனுக்கு ஏன் உடை!

வேட்டை விலங்குகள் தாக்க, இரையிடம் இரண்டு இலக்குகள் வைத்திருக்கின்றன, ஒன்று அதன் கழுத்து, அடுத்து அதன் விதைப்பை, நிமிர்ந்த நின்ற மனிதன் வசதியான கைகளால் கழுத்தை காப்பாற்றி கொள்ளலாம், ஆனால் விதைப்பையை! அதனால் அதை மறைக்கப்பழகினான், மரபு சார்ந்த விசயங்கள் தொடர்ந்து சந்ததியினருக்கும் பழகுவது போல், குழந்தைகளுக்கு மறைப்பான் அணிவிக்கப்பட்டு, பின் பெண்களுக்கும் அணிவிக்கப்பட்டது, இவை இடுப்பை மறைக்கத்தான் என்பதை நிறுபிக்க இன்றும் பல பழங்குடியினர் மார்பை மறைக்க எந்த மறைப்பானும் பயன்படுத்துவது இல்லை!

ஓரினசேர்க்கை மனிதனுக்கு தேவையா என தனிபதிவா தான் எழுதனும் போல, இது பெருசாயிருச்சு!, அதனால் இங்கே மனிதனின் உடைக்கும், ஓரினசேர்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்ற சஸ்பென்ஸோடு பதிவை முடிக்கிறேன்!

ஓரினசேர்க்கை குறித்து முன்பு நான் எழுதிய இரண்டு பதிவுகள்!

ஒன்று

இரண்டு

42 வாங்கிகட்டி கொண்டது:

நசரேயன் said...

முத வெட்டா ?

Anonymous said...

நான் ஆஜர். ஓட்டு போட்டாச்சு. பை பை

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...
This comment has been removed by the author.
ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

Evolution : Sex Part 1 : http://www.youtube.com/watch?v=L7qNJee8t9I&feature=related

கோவி.கண்ணன் said...

இந்தப்பதிவு நல்லா இருக்கு. ஆதாம் ஏவாள் மறைத்துக் கொண்டது பற்றி வேற விளக்கம் இருக்கு. கனியை புசித்ததால் அவங்களுக்கு வெட்கம் வந்துட்டாம். :)

vasu said...
This comment has been removed by the author.
Unknown said...

இருக்க வேண்டியது தான்.ஆனால் அதுக்காக திராவிட தமிழ் பன்னாடைகள் பாக்டீரியா மாதிரி குட்டி போட்டு தள்ளணுமா என்ன?இந்த முண்டங்கள் இன்னும் பாக்டீரியா லெவலிலிருந்து பரிணாம வளர்ச்சி அடையவில்லையா?

cheena (சீனா) said...

நோ கமெண்ட்ஸ் - இப்போதைக்கு

கோவி.கண்ணன் said...

//பரிணாமத்தில் செக்ஸ் எப்படி தேவைப்பட்டது என்பது பற்றிய பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி...//

இதே கேள்வியை மதவாதிகளிடம் வேறு மாதிரி கேட்டு பார்க்கனும்,

"எல்லாத்தையும் சரியாகவே செய்ததாகச் சொல்லப்படும் இறைவனின் மனிதப் படைப்பினுள் ஓரின நாட்டம் இறைவனின் பிழையா ?"

Ashok D said...

sex = ஆசை = பரிணாமம் = வளர்ச்சி

எல்லாதுக்கும் base செக்ஸ்தான் வால்.. மாற்றுக்கருத்து தேவையில்லை. so தலைப்பு சரியே...

ஜில்தண்ணி said...

செக்சை பற்றிய பதிவாக இருப்பதால் இதை சொல்கிறேன்

நம் மனித இனத்துக்கு ரொம்ப நெருக்கமான உறவாகிய உராங்குட்டான் குரங்கு இனம் நேருக்கு நேர் செக்ஸ் தான் வைத்துக் கொள்ளுமாம்,அதோடு அங்கு சில நேரங்களில் வன்புணர்ச்சி கூட நடைபெறுமாம்,மனிதனோடு எவ்வளவு ஒத்துப் போகிறது பாருங்க

அதை போல மனிதக் குரங்கு இனத்தில் செக்சை பொருத்த வரை உறவு முறை என்பது முற்றிலும் இல்லாமல் போகிறது,வளர்ந்த ஆண் குரங்குகள் தேவைபட்டால் தன் தங்கை மற்றும் தாயிடம் கூட உறவு கொள்ள துணிந்ததாம்

மதனின் "மனிதனுக்குள் ஓர் மிருகம்" புத்தகம் படித்திருக்கிறீர்களா,இல்லையென்றால் ஒரு முறை படியுங்கள்,புட்டுப் புட்டுப் வைத்திருப்பார் அத்தனையும்

நல்ல பதிவு வால் ! தொடருங்கள்

Unknown said...

///வருடத்தில் ஒரு முறை இனபெருக்க காலம் முடிந்து விட்டால் மீண்டும் அடுத்த பருவம் வரை காத்திருக்க வேண்டும்!///

இத வச்சிக்கிட்டுதான் அவனவன் “ஏண்டா கார்த்திகை மாசத்து நாய் மாதிரி அலையிறேன்னு” சொல்ல ஆரம்பிச்சுட்டானுங்களா!!!

ராம்ஜி_யாஹூ said...

வருடத்தில் ஒரு முறை இனபெருக்க காலம் முடிந்து விட்டால் மீண்டும் அடுத்த பருவம் வரை காத்திருக்க வேண்டும்!

இந்த வரி மனித வாழ்வில் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்,

ஆண்களுக்கு பொருந்தாது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பதிவு நன்று வால்!

webworld said...

மிக்க நன்றி வால் அண்ணன் அவர்களே!...இன்னும் அமேசான் நதியை ஒட்டிய பகுதியை சேர்ந்த பழங்குடியினர் உடையை ஒரு பொருட்டே நினைப்பதில்லை என்பதே உண்மை....

- இரவீ - said...

நடத்துங்க தல ... ஒரு முடிவோட இருக்குற மாதிரி இருக்கு :)

Unknown said...

செக்ஸ் பற்றி இன்னும் விரிவா அலசி இருக்கலாம் தல

Kumky said...

:))

ஓ கே.

ஒட்டு போட்டுட்டேன்..கணக்கில் வைத்துக்கொள்ளவும்.

Thekkikattan|தெகா said...

வால், தொடர் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. தொடருங்க. படிக்கவும் சுவாரசியம் குறையவில்லை.

//இந்த வரி மனித வாழ்வில் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்,

ஆண்களுக்கு பொருந்தாது.//

ராம்ஜி_யாஹு, பெண்களில் வருஷத்திற்கு ஒரு முறையே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதனைக் கூறுகிறீர்களா, இல்ல சீசன் டைம்ல மட்டும் விலங்குகள் உலகில் செய்வது மாதிரி மனித பெண்களிலும் நடக்கிறதுங்கிறீங்களா...

ஆமான்னா... அப்படியா??? நான் மனித ஆண்/பெண் இருபாலாரும் நேரங்காலமில்லாம கூடலாம்னுல்ல தெரிஞ்சு வைச்சிருக்கேன்...

Pradeep said...

Good one boss!!!!

ஆட்டையாம்பட்டி அம்பி said...

நண்பரே!

சில கேள்விகள்?

///குறிப்பு:பதிவிலுள்ள சில சொற்கள் உங்களுக்கு அசெளகரியத்தை அளிக்கலாம், செக்ஸ் என்பது உயிரினம் அனைத்திற்கும் பொது மற்றும் அதை தெரிந்து கொள்வதில் தவறில்லை என்பதால் நான் இதை எழுதுகிறேன்!///

நீங்கள் கொடுத்த குறிப்பு சரி. ஆனால் அசெளகரியமான சொற்களை ஏன் தமிழில் எழுதாமல் வட மொழியில் எழுதி இருக்கிறீர்கள்? வட மொழியில் எழுதினால் எங்களுக்கு அசெளகரியமாக இருக்காதா? கெட்ட வார்த்தை என்று நீங்கள் நினைக்கும் சொல் எந்த மொழியில் இருந்தால் என்ன?

///மற்றொரு முக்கியமான விசயம், சுயமைதுனம் செய்து கொள்ளும் அளவுக்கு கரவசதி, குரங்கினத்தை தவிர மற்ற விலங்குகள் எதற்கும் இல்லை என்பதும் கவனிக்கபட வேண்டிய விசயம்.///

இந்த "கரவசதி" சொல்லை நீக்கி விடுங்கள். இது அயோத்தியை எனக்கு நினைவு படுத்துகிறது. கரவசதிக்கு பதில் கை வசதி என்று எழுதலாம். அல்லது குரங்கினத்தை தவிர மற்ற விலங்குகள் எதற்கும் கையால் அடித்து சுய இன்பம் பெரும் அளவிற்கு கை வசதியாக அமையவில்லை என்று எழுதலாம். அது என்ன "சுயமைதுனம்" "முஷ்டிமைதுனம்" அதை தமிழிலே "கை மூட்டி அடிப்பது" இல்லை "கை அடிப்பது" என்று சொல்லுங்களேன். வட மொழியில் எழுதினால் கெட்ட வார்த்தை நல்ல வார்த்தையாக மாறி விடுமா? ஆங்கில படங்களில் F**k சொன்னாலும் அந்த படத்திற்கு "U" certificate. தமிழில் ஓxx என்று சொன்னால் அந்த ஓxx வை நீக்கினால் தான்
"U" certificate. இல்லை அதை நீக்காவிட்டால் A certificate - உம கிடைக்காது. ஏன் ஆங்கிலம் தெரிந்த குழந்தைகள் F**k வார்த்தையை கேட்டால் கெட்டுப் போய்விடாதா?

குண்டலினி நல்ல வார்த்தை! ஆனால் அதன் மூலம் ஆன குண்டி கெட்ட வார்த்தை. முடி என்ற வடசொல் நல்ல வார்த்தை. மயிறு என்ற தமிழ் சொல் கெட்ட வார்த்தை. இது என்னடா. அவன் எது கெட்ட வார்த்தை என்று சொல்ல்றானோ அது கெட்ட வார்த்தை, அவன் எது நல்ல வார்த்தை என்று சொல்ல்றானோ அது நல்ல வார்த்தை. இது சரியான அழுகுணி ஆட்டம். இது மாதிரி எவ்வளோவோ சொல்லலாம். சில அறிவு ஜீவிகளின் தமிழ் பத்திரிக்கைகளில் இந்த மாதிரி பழனி காளிமுத்து சேலம் சிவராஜ் (சிவராஜ் என்று நினைக்கிறன்) மற்றும் பலர் விளம்பரம் செய்கிறார்கள். சுயமைதுனம் சொப்பன ஸ்லகிதம் முஷ்டிமைதுனம் அவைகளின் கெடுதல் பற்றி. அதுவும் பின் அட்டையில். 13 மற்றும் 15 வயது குழந்தைகள் அதை படித்து விட்டு என்னை "அப்பா சுயமைதுனம் என்றால் என்ன? சொப்பன ஸ்லகிதம் என்றால் என்ன? முஷ்டிமைதுனம் என்றால் என்ன? என்று கேட்கிறார்கள். இதை தமிழிலே எழுதினால் எனக்கு ஏற்பட்ட சங்கடத்தையாவது தவிர்த்து இருக்கலாம். செய்வார்களா???

///உயிரினங்களில் இனபெருக்கத்திற்கு கூடுதல் தகுதி பெற்ற ஒரே விலங்கு மனிதன் மட்டுமே, பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பிறகே உச்சகட்டம்(orgasm) என்பது மனிதனுக்கு மட்டுமே வாய்த்த ஒரு அரிய நிகழ்வு என்பது புரிந்தது, மனிதனுக்கு நெருங்கிய உயிரினமான சிம்பன்சியை தவிர வேறு எந்த விலங்குகளும் சுயமைதுனம் செய்து கொள்ள விரும்பியதில்லை.///

இதற்க்கு ஆதாரம் எதாவது இருக்கிறதா? திருப்தியில் உள்ள குரங்குகள் சிம்பன்சி வகையை சேர்ந்தது அல்ல ! நான் திருப்தியில் உள்ள மனித குரங்குளை சொல்லவில்லை!!!!!!!!!

இதற்க்கு ஆதாரம் எதாவது இருக்கிறதா? திருப்தியில் உள்ள குரங்குகள் சிம்பன்சி வகையை சேர்ந்தது அல்ல!

நான் திருப்தியில் உள்ள மனித குரங்குளை சொல்லவில்லை!!!!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரைட்டு....

Jey said...

voted.

Karthick Chidambaram said...

தேவையான தொடர். நல்ல பதிவு. இன்னும் எழுதுங்கள்.

Karthick Chidambaram said...

தேவையான தொடர். நல்ல பதிவு. இன்னும் எழுதுங்கள்.

Karthick Chidambaram said...

கேபிள், ஜாக்கி,ஹாலிவுட் பாலா, கருந்தேள் மற்றும் ஜெட் லீ அவர்களின் பதிவுகளை படிப்பது வழக்கம். ஜாக்கி எழுதுவது அழகு.
மற்றவர்கள் புதியவர்கள்.

Karthick Chidambaram said...

கேபிள், ஜாக்கி,ஹாலிவுட் பாலா, கருந்தேள் மற்றும் ஜெட் லீ அவர்களின் பதிவுகளை படிப்பது வழக்கம். ஜாக்கி எழுதுவது அழகு.
மற்றவர்கள் புதியவர்கள்.

செல்வா said...

//வைஅகள் தாயின்றி இருக்கும் குட்டிகளை எடுத்து வளர்க்கும்!, ///
நம்பவே முடியலைங்க ..!!

தொடர்ந்து எழுதுங்கள் ..!!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

தல ,,

ஜூபரு ..கலக்குங்க ....யாராவது எனக்கு வோட்டு போட கற்றுகொடுங்களேன் !!!!!ப்ளீஸ் ப்ளீஸ்

தமிழ் பொண்ணு said...

அது வால்பையனுகே தெரியாது.:) அருண் நான் சொல்றது கரைகட் தான ..
;)

தமிழ் பொண்ணு said...

//பனங்காட்டு நரி said...
தல ,,

ஜூபரு ..கலக்குங்க ....யாராவது எனக்கு வோட்டு போட கற்றுகொடுங்களேன் !!!!!ப்ளீஸ் ப்ளீஸ்
//

அது வால்பையனுகே தெரியாது.:) அருண் நான் சொல்றது கரைகட் தான ..

Anonymous said...

அப்ப நாம காட்டியும் கொடுக்கறோம் கூட்டியும் கொடுகொறோமா பாஸ்?

hiuhiuw said...

// madurai ponnu said...

அது வால்பையனுகே தெரியாது.:) அருண் நான் சொல்றது கரைகட் தான ..//

ஆமா தல ! பதிவுல எந்த மேட்டர் உங்களுக்கே தெரியாதுன்னு நான் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?

அப்பிடியே இருந்தாலும் அது அம்மணிக்கு எப்புடி தெரியும்?

வால்பையன் said...

@ ஆட்டையாம்பட்டி அம்பி!

சுயமைதுனம், கரம் இவைகளெல்லாம் தமிழ் இல்லையா!?

சத்தியமா எனக்கு தெரியாதுங்க!

மங்குனி அமைச்சர் said...

உள்ளேன் ஐயா

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///சுயமைதுனம், கரம் இவைகளெல்லாம் தமிழ் இல்லையா!?

சத்தியமா எனக்கு தெரியாதுங்க!///

நண்பரே!
நான் சில கேள்விகள் என்று தான் போன பின்னூட்டதில் எழுதி உள்ளேன். நான் என்றும் ஒரு மாணவன் என்ற முறையில். அதிலும் எனக்கு தமிழ் அறிவு மிக மிக குறைவு. மேலும் உங்கள் தமிழ் மீது ஒரு மரியாதை உண்டு. இருந்தாலும் நீங்கள் எழுப்பிய வினாவுக்கு எனது பதில்.

நான் ‘கரம்' தமிழ் சொல் இல்லை என்று சொல்லவில்லையே? அந்த சொல் சரியாக இல்லை என்பதால் நீக்கி விடுங்கள் என்று தான் சொன்னேன். அப்புறம் எல்லோரும் புரிந்து கொள்ளும்படி கை என்று எழுதுங்கள் என்று சொன்னேன்.

‘மைதுனம்' தமிழ் சொல் அல்ல! உடலுறவு மற்றும் புணர்ச்சி தான் மைதுனம் என்ற வட சொல்லின் தமிழாக்கம். உடலுறவு புணர்ச்சி என்றாலே இருவர் வேண்டும். அப்புறம் எப்படி ஒருவர் மட்டும் செய்வது சுயமைதுனம் ஆகும்?. ஆகவே சுயமைதுனம் தமிழ் சொல் அல்ல என்பது மட்டுமல்லாமல் சுயமைதுனம் என்பது ஒரு அர்த்தமற்ற சொல்லும கூட.

சுயமைதுனம் என்ற இந்த சொல் ஒரு ‘முரண்தொடை.' முரண்தொடை என்றால் என்ன என்று தமிழர்களுக்கு தெரியுமா? ஏன் தெரியாது? தமிழர்களுக்கு தான் எல்லா தொடையும் நன்றாகத் தெரியுமே!

வால்பையன் said...

சுயமைதுனம் என்பதற்க்கு பதிலாக சுயஇன்பம் என்றூ இருந்தால் சரியாக இருக்கும் இல்லையா!?

இனி எழுதும் பொழுது மாற்றி கொள்கிறேன்!

நன்றி!

அன்புடன் நான் said...

மிருகங்களிடம் பாலுறவு சந்ததிக்காக மட்டுமா? அல்லது மனிதனைப்போல் உணர்வு பசிக்குமா?

ஏனேனில் நாய் கார்த்திகை மாதத்தை மட்டும் தேர்ந்தேடுப்பது ஏன்? (மற்ற காலங்களில் அதற்கு பாலுறவு எண்ணம் இல்லையா?)

அன்புடன் நான் said...

வால்பையன் said...

@ ஆட்டையாம்பட்டி அம்பி!

சுயமைதுனம், கரம் இவைகளெல்லாம் தமிழ் இல்லையா!?

சத்தியமா எனக்கு தெரியாதுங்க!//

இதுல ”சுயம்” என்பதும் ”கரம்” என்பதும் சமஸ்கிருதம்.... சுயத்திற்கு ”தனி” கரத்திற்கு “கை” இதுதான் சரி.
பதிவு மிக ஆரோக்கியமான எழுத்து நடையிலத்தான் இருக்கு, பாராட்டுக்கள்.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

'தனிமையில் இனிமை' இது நல்ல இருக்கே!

தனிமையில் இனிமை காண முடியுமா இது ஒரு தமிழ் பாடல் சரியா?

தனிமையில் இனிமை அல்லது தனிமையில் இன்பம் இதில் எது சரி?

Chandru said...

//ஒருவேளை நாடோடி சிங்கங்கள் வெற்றிபெற்று விட்டால் முதலில் கூட்டத்தில் இருக்கும் ஆண் குட்டிகளை கொன்று விடும்!//
இதில் ஒரு நுணுக்கம் இருக்கிறது பெண்குட்டிகளையும்தான் கொல்லும்.பெண் சிங்கம் பால் கொடுக்கும் வரை கலவிக்கு தயாராகாது என்பதால் குட்டிகளை கொன்று விட்டால் விரைவில் கலவிக்கு தயாராகிவிடும்,என்பதால் பட்டத்துக்கு வந்தவுடன் பால் குடிக்கும் குட்டிகளை கொன்றுவிடும்.

!

Blog Widget by LinkWithin