குவியல்!..(07.07.10)

இன்று தோழர் ”சிரி”ராம் அவர்களுக்கு இன்று(07.07.10)பிறந்தநாள், அமெரிக்காவில் இருக்கும் பாஸ்டனில் இருக்கிறார், குறைந்தது மாதத்திற்கு இரண்டு முறையாவது போனில் அழைப்பார், சிலசமயம் பாராட்டுவதற்கும், பல சமயம் திட்டுவதற்கும், நட்பு பலப்படும் போது உரிமையும் வலுப்படுவது இயற்கை தானே!, அமெரிக்காவிற்கு செல்ல இருக்கும் விசா பிரச்சனைகளை விரிவாக எழுத இருந்தார், யாராவது கிள்ளி வைத்து எழுத வைக்கவும்!, அவரது பிறந்தநாள் வாழ்த்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்! !


அவரது வலைப்பூ

ஆர்குட் தளம்!


**************

சனிக்கிழமை பெங்களுர் சென்றிருந்தேன் அலுவலக விசயமாக, நானும், இன்னொரு பெண்ணும்(யாருன்னு தெரியாதுங்க) தவிர பஸ்ஸில் யாருமே இல்லை, எங்கள் இருவருக்காக கோலார் வரை அந்த பஸ் போகுது, ரெண்டு பேருக்கும் சேர்ந்தே நூறு ருபாய் தான் டிக்கெட்! காலை 8 மணி என்றாலும் இரண்டே பேருக்காக ஒரு பஸ் என்பது கொஞ்சம் ஓவர் தானே! தமிழகத்தில் இப்படி நடந்தால் என்ன செய்திருப்பார்கள்!?

அங்கே வேலையை முடிச்சிட்டு மீண்டும் சிவாஜிநகர் வந்தேன்!, அங்கே தமிழ் தெரிந்த ஒரு கஸ்டமரிடம், எம்.ஜி.ரோடு போக வழி கேட்டேன், வெகு சிரத்தையாக! சில,பல லெஃப்டு, ரைட்டுகளை சொன்னார், நானும், அதை அப்படியே பாலோ பண்ணி போய் சேர்ந்துட்டேன், கிட்டதட்ட இரண்டரை கிலோமீட்டருக்கு மேல் இருக்கும்!, அங்கேயும் வேலையை முடிச்சிட்டு நடக்க சங்கடபட்டு ஒரு ஆட்டோ பிடித்தேன், ட்ரைவர் ட்வெண்டி என்றார், செவண்டி தான் எனக்கு சரியா கேக்கலையோ என மீண்டும் கேட்டேன்! அது ட்வெண்டியே தான், ஏறி அமர்ந்தால் ஒரு லெஃப்டு, ஒரு ரைட்டு, சிவாஜிநகர் வந்துருச்சு!, கடைக்காரர்கிட்ட போய், ஏன்யா என்னை இப்படி சுத்தவிட்டேன்னு கேட்டா, அவன் சொல்றான், நான் வந்தது ஒன்வேயாம்!

நடந்து போறவனுக்கு எதுக்குய்யா ஒன்வே! உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா!? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

***************

எனது நண்பன் ஒருவன், ஹோட்டலில் குக்கா இருக்கான், அவனது இரு பெண் குழந்தைகள் திருச்சியில் படிக்கிறார்கள், இருவரும் முதல் ரேங்க் எடுக்கும் மாணவிகள், அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்க நினைத்த பள்ளி நிர்வாகம் சாதி சான்றிதழ் கேட்கிறது, நண்பனோ சாதிசான்றிதழ் தர மறுக்கிறான்!, அது பற்றி நான் கேட்ட சந்தேகத்திற்கு நண்பர் கல்வெட்டு போட பதிவு தான் இது, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது!.

நண்பன் பிறப்பால் கிறிஸ்தவன் என்பதால் அதுவே போதும் என்கிறார் வலையுலக சட்ட ஆலோசகர் திரவியநடராஜன்!, இன்னும் முழுசா தெரியல, பள்ளியில் விசாரிக்க சொல்லியிருக்கேன்!


***************

சினிமா பார்ப்பது சில வருடங்களாக வெகுவாக குறைந்து விட்டது! கிருஷ்ணமூர்த்தி சார் பரிந்துரையின் பேரில் “கடவுள்” என்ற சுஜாதாவின் புத்தகம் படித்து கொண்டிருக்கிறேன்(தினம் மூணு பக்கம்), அறிமுகத்தில் அனைத்து மதங்களும் அலசபட்டிருக்கிறது, பின் வேற்றுகிரகவாசிகள், ஆவி, இயல்புநிலை தாண்டிய அதிகபடியான சக்தி, கனவு நிஜமாகுதல் என பயணப்படுகிறது, விரிவா ஒரு பதிவில் அலசனும்!

****************

நிறைவேறும் நிராசைகள்!(கவிதை மாதிரி)

உமிழ்ந்த எச்சில் போல்
ஒரு பிண்டம்
எங்கேயும் பறக்க நினைக்க
கற்பனை சிறகுகள்
தரையிலேயே நிற்க நினைக்காத
தலைகன கால்கள்
அண்டத்தையும் அளக்க நினைக்கும்
எல்லையில்லாத ஆசைகள்
ஆனாலும் இன்னொரு
எச்சில் பிண்டமே
அவனுக்கு சாத்தியமாகிறது

67 வாங்கிகட்டி கொண்டது:

பழமைபேசி said...

நண்பருக்கு, பிறந்த நாள் வாழ்த்துகள்!

திரவிய நடராஜன் said...

வால்! உங்க நண்பரின் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் முகவரியை கொடுங்கள் முதலில்.

Nanum enn Kadavulum... said...

நல்ல கவிதை !!

Sukumar Swaminathan said...

பாஸ்டன் ஸ்ரீராம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

Mrs.Menagasathia said...

நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!!

கிருஷ்ணமூர்த்தி said...

ஸ்காலர்ஷிப் பிற்படுத்தப் பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கானது என்றால் பள்ளி நிர்வாகம் கேட்பது தவறல்ல.

கடவுள் இருக்கிறாரா புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்திருப்பது குறித்து சந்தோஷம்.

Jey said...

happy birthday to mr.sriram.

கே.ஆர்.பி.செந்தில் said...

ஸ்ரீராமிற்கு வாழ்த்துக்கள்.. அந்த சுஜாதா புத்தகம் அவ்வளவு விரிவா அலசல தல..

ஜெட்லி... said...

//சினிமா பார்ப்பது சில வருடங்களாக வெகுவாக குறைந்து விட்டது//


ரொம்ப நல்ல விஷயம் அண்ணே....
நானும் முயற்சி பண்றேன்...!!

dheva said...

முதலில் பாஸ்டன் தோழர் ”சிரி”ராம் க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாஸ்!

//உமிழ்ந்த எச்சில் போல்
ஒரு பிண்டம்
எங்கேயும் பறக்க நினைக்க
கற்பனை சிறகுகள்
தரையிலேயே நிற்க நினைக்காத
தலைகன கால்கள்
அண்டத்தையும் அளக்க நினைக்கும்
எல்லையில்லாத ஆசைகள்
ஆனாலும் இன்னொரு
எச்சில் பிண்டமே
அவனுக்கு சாத்தியமாகிறது
//

அட்டகாசமான எதார்த்த உண்மை பாஸ்!

சுஜாதாவின் "கடவுள்"ன்ற புத்தகத்தை விட..."கடவுள் இருக்கிறாரா"ன்னு ஒரு புத்தகம் இருக்கு பாஸ் அது நல்ல சுவாரஸ்யமானது...! என்கிட்ட மின்புத்தகம் இருக்கு நாளைக்கு உங்களுக்கு அனுப்புறேன்...!


குவியல் அருமை பாஸ்!

ஜில்தண்ணி - யோகேஷ் said...

கவிதை நல்லாயிருக்கு வால் :)

ராம்ஜி_யாஹூ said...

in kerala too the auto fare is very low.

ராம்ஜி_யாஹூ said...
This comment has been removed by the author.
ராம்ஜி_யாஹூ said...

wishes to boston raam

in kerala too the auto fare is normal

நசரேயன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்ரீ ராம்

revathy rkrishnan said...

Entha time ku vanthaalum unga blog la kootam irukunga. Athuke ungala vaazthalam vaalu. Sari en birthday ku neenga post podave illaye? Ennai yen pa yaarum blogger ah accept panna mattringa

sriram said...

நன்றி அருண்.

வாழ்த்திய நல்ல உள்ளங்கள் - பழமை பேசி, சுகுமார், மேனகா, ஜே, செந்தில், தேவா, ராம்ஜி & நசரேயனுக்கு நன்றி

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பா.ராஜாராம் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்ரீராம்!

ஒன்வே, நடைப் பயணம், :-))

கும்க்கி said...

வாலு..,

ஒரு வேல உருப்பட்ருவீரோ...?

பதிவு வெளங்குமுங்க சாமி.

கலாநேசன் said...

நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

GEETHA ACHAL said...

உங்களுடைய நண்பருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....

ILA(@)இளா said...

யாராவது கிள்ளி வைத்து எழுத வைக்கவும்!//
அருவா ஒன்னு பார்சல்!


ஸ்ரீராமை வாழ்த்த

sriram said...

//பா.ராஜாராம் said...
பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்ரீராம்!//

தன்யனானேன் பா.ரா..

//ILA(@)இளா said...//
யாராவது கிள்ளி வைத்து எழுத வைக்கவும்! அருவா ஒன்னு பார்சல்!//

இளா - அப்புறம் ட்ரீட் கேன்சல் பண்ணிப்புடுவேன்.... :)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

நசரேயன் said...

//இளா - அப்புறம் ட்ரீட் கேன்சல்
பண்ணிப்புடுவே//

ட்ரீட் போஸ்டன் வாசிகளுக்கு மட்டமா இல்லை பக்கத்து ஸ்டேட் வரைக்கும் வருமா ?

♥ ℛŐℳΣŐ ♥ said...

அப்பா ஒருத்தனாவது உங்களை பலிவாங்கிடானே. சந்தோசம்

கல்வெட்டு said...

//நடந்து போறவனுக்கு எதுக்குய்யா ஒன்வே! உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா!? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!//

:-)))))).

ஹேமா said...

கவிதை அருமையான விஷயம் சொல்லுது வால்.

நேசமித்ரன் said...

ஸ்ரீ ராமுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

:)

கடவுளிருக்கிறாராவா ?

’ஒரு விஞ்ஞானப் பார்வை ’அதே சுஜாதாதான் படிச்சு பாருங்க வால்

:)

கிரி said...

//நடந்து போறவனுக்கு எதுக்குய்யா ஒன்வே! உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா!? //

ஹி ஹி ஹி என்ன கொடுமை சார்! :-))))

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாஸ்டன் ஸ்ரீராம்

பட்டாபட்டி.. said...

பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்ரீராம் !!

என். உலகநாதன் said...

ஸ்ரீராமுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்.

அருண் சார்,

இந்த மாதிரி நிறைய எழுதுங்க.

NARI said...

கவிதையை படித்தேன் முகத்தில் தெறிக்கிறது எச்சில். வலையுலகில் தெறித்ததைவிடவா என்று கேட்கக்கூடாது.

அன்பின் ஸ்ரீராமுக்கு என் வாழ்த்துக்கள்

VISA said...

Boston sir many many happy returns of the day

கும்க்கி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம்..

வெறும்பய said...

நண்பருக்கு, பிறந்த நாள் வாழ்த்துகள்!

கவிதை நல்லாயிருக்கு ..

காவேரி கணேஷ் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.

வால், நல்ல எழுத்து நடை..

தருமி said...

ஸ்ரீராமிற்கு வாழ்த்துக்கள்..

ஈரோடு கதிர் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம்..

|| நான் வந்தது ஒன்வேயாம்!||

அதுசெரி

மங்குனி அமைச்சர் said...

first "HAPPY BIRTHDAY"

மங்குனி அமைச்சர் said...

///கடைக்காரர்கிட்ட போய், ஏன்யா என்னை இப்படி சுத்தவிட்டேன்னு கேட்டா, அவன் சொல்றான், நான் வந்தது ஒன்வேயாம்!////

வால்ஸ் , ஒன்னு அவனுக்கு உன்னைய பத்தி ஏற்கனவே தெரிஞ்சு இருக்கணும் ,தக்காளி மாட்னாண்டான்னு சுத்த விட்ருக்கான் , இல்ல இதில் எது வெளிநாட்டு சதி இருக்கு (எனக்கு எதுவாஇருந்தாலும் சந்தோசம் தான் )

மங்குனி அமைச்சர் said...

///பின் வேற்றுகிரகவாசிகள், ஆவி, இயல்புநிலை தாண்டிய அதிகபடியான சக்தி, கனவு நிஜமாகுதல் என பயணப்படுகிறது, விரிவா ஒரு பதிவில் அலசனும்!///

நடக்கட்டு காத்திருக்கிறோம்

Vidhoosh(விதூஷ்) said...

அதானே பார்த்தேன், வடமொழியை பயன்படுத்தாமல் ஸ்ரீராம் பெயரை எழுதிய தமிழ் மைந்தன் வாழ்க.. :D

happy birthday sriram

விக்னேஷ்வரி said...

நண்பருக்குப் பிறந்த நாள் வாழ்த்தும், உங்களுக்கு கவிதைக்கான வாழ்த்தும்.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

சிரி ராமுக்கு வாழ்த்துக்கள்!!!

ஜோதிஜி said...

அண்ணே உங்கள் தமிழ் உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?

பாஸ்டன் ஸ்ரீராம் என்றால் டக்ன்னு மண்டையில ஏறியிருக்கும். கீழே பார்த்தவுடன் தான் புரிந்தது.

என்னுடைய ராமுக்கு வாழ்த்துகள்.

சச்சரவு இல்லாம வந்த இடுகைக்கும் வாழ்த்துகள்.

சசிகுமார் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்

ராஜன் said...

குவியல்!

ம்ம்ம்

தும் ததா!

ராஜன் said...

//வாலு..,

ஒரு வேல உருப்பட்ருவீரோ...?

பதிவு வெளங்குமுங்க சாமி.//

@கும்க்கி

ஆளு நாட்டுலதான் இருக்கீரா?

வந்து ஒருநாள் சண்முகா லாட்ஜ்ல ருமப் போடுமய்யா!

ராஜன் said...

//சனிக்கிழமை பெங்களுர் சென்றிருந்தேன் //

பெண்களூராமே!

ராஜன் said...

//ரெண்டு பேருக்கும் சேர்ந்தே நூறு ருபாய் தான் டிக்கெட்!//


அவ்வ்வ்வ்வ்வ்வ்! உள்குத்து இல்லயே!

ராஜன் said...

//சினிமா பார்ப்பது சில வருடங்களாக வெகுவாக குறைந்து விட்டது! //


ஆமா பிட்டு படத்தயெல்லாம் சினிமான்னு சொல்ல முடியாது

ப.செல்வக்குமார் said...

//தமிழகத்தில் இப்படி நடந்தால் என்ன செய்திருப்பார்கள்!?//

பஸ் நடந்தா போச்சு ..!!??!!

Mythili said...

KUVIAL MIGA ARUMAI.

HAPPY BIRTHDAY TO MR.SRIRAM

மங்குனி அமைச்சர் said...

ராஜன் said...

//ரெண்டு பேருக்கும் சேர்ந்தே நூறு ருபாய் தான் டிக்கெட்!//


அவ்வ்வ்வ்வ்வ்வ்! உள்குத்து இல்லயே!///


ராஜன் , எனக்கும் அதே டவுட்டு தான்

மங்குனி அமைச்சர் said...

ராஜன் said...

//சினிமா பார்ப்பது சில வருடங்களாக வெகுவாக குறைந்து விட்டது! //


ஆமா பிட்டு படத்தயெல்லாம் சினிமான்னு சொல்ல முடியாது////


ராஜன் சார், பீர கூல்ட்ரிங்க்சாவும் , முட்டைய வெஜ்ஜாவும் மாதத்தின மாதிரி , பிட்டு படத்த இப்ப சின்னத்திரை படமா மாத்திட்டாங்க

cheena (சீனா) said...

அன்பின் ஸ்ரீராமிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - தகவலுக்கு நன்றி வால் - நட்புடன் சீனா

கும்க்கி said...

ராஜன் said...

@கும்க்கி

ஆளு நாட்டுலதான் இருக்கீரா?

வந்து ஒருநாள் சண்முகா லாட்ஜ்ல ருமப் போடுமய்யா!

ஏன் யாரையாச்சும் கும்மனுமா ராஜன்..?
:))

டம்பி மேவீ said...

பெங்களூர் ஆ இல்லை அது பெண்களூர் ஆ ...

தோழர் ஸ்ரீராம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

"நண்பன் பிறப்பால் கிறிஸ்தவன்"

எனக்கு தெரிந்த வரைக்கும் பிறப்பால் ஆம்பளை, பொம்பளை ஏன் அலியாக இருக்க முடியும் ...நீங்கள் சொல்லி தான் பிறப்பால் கிறிஸ்தவனாக இருக்க முடியும் என்று தெரிந்து கொண்டேன்

வால்பையன் said...

//எனக்கு தெரிந்த வரைக்கும் பிறப்பால் ஆம்பளை, பொம்பளை ஏன் அலியாக இருக்க முடியும் ...நீங்கள் சொல்லி தான் பிறப்பால் கிறிஸ்தவனாக இருக்க முடியும் என்று தெரிந்து கொண்டேன் //


மொக்கசாமி!

அவனது பெற்றோர் கிறிஸ்தவர்கள் என்பதால் அவனும் கிறிஸ்தவன் என்றேன்! சாதியோடு சேர்ந்து அவன் மதத்தையும் எதிர்கிறான் என்பது இன்னும் மகிழ்ச்சி!

அவனது மகள் ஐ.ஏ.எஸ் படிக்க ஆசைப்படுவதாக சொன்னான், இவனது முற்போக்கு சிந்தனை அந்த பெண்ணின் படிப்பை பாதித்து விடக்கூடாது என்பது அவனது கவலை!

வால்பையன் said...

//எனக்கு தெரிந்த வரைக்கும் பிறப்பால் ஆம்பளை, பொம்பளை ஏன் அலியாக இருக்க முடியும் ...நீங்கள் சொல்லி தான் பிறப்பால் கிறிஸ்தவனாக இருக்க முடியும் என்று தெரிந்து கொண்டேன் //


மொக்கசாமி!

அவனது பெற்றோர் கிறிஸ்தவர்கள் என்பதால் அவனும் கிறிஸ்தவன் என்றேன்! சாதியோடு சேர்ந்து அவன் மதத்தையும் எதிர்கிறான் என்பது இன்னும் மகிழ்ச்சி!

அவனது மகள் ஐ.ஏ.எஸ் படிக்க ஆசைப்படுவதாக சொன்னான், இவனது முற்போக்கு சிந்தனை அந்த பெண்ணின் படிப்பை பாதித்து விடக்கூடாது என்பது அவனது கவலை!

வால்பையன் said...

//இந்த இரு ஈன பிறவிகளும் திருந்தாத ஜென்மங்கள். //


அன்பு நண்பர் சுல்தான் அவர்களுக்கு, நாங்கள் ஈன பிறவிகள் என்று அழைக்கபட்டால், எங்களால் முகமது ஈனபிறவி என்று அழைக்கபடும் போது உங்களுக்கு கோபம் வரக்கூடாது, உங்களுக்கு வேண்டப்பட்டவர் என்பதற்காக அவரின் தில்லாலங்கடிகளை நாங்கள் வெளிகொணராமல் இருக்க முடியாது!

நீங்கள் எங்களுக்கு என்ன த்ருகிறீர்களோ, அதுவே நாங்கள் உங்களுக்கு தருகிறோம், மேலும் எனது பல பின்னூட்டங்கள் நீங்கள் வெளியிடாமல் இருப்பதால் மேலும் நாங்கள் பதிவிட்டு “சில” இஸ்லாமிய மதவெறியர்களின் முகதிரையை கிழிக்க வேண்டியிருக்கு!

இந்த பின்னூட்டமும் வருமா என தெரியாது, ஆகவே இனி இஸ்லாமியர்களுக்கு போடு எல்லா பின்னூட்டமும் எனது பதிவிலும் இடப்படும்!

http://islamicfold.blogspot.com/2010/07/blog-post.html

ராஜன் said...

//அவற்றையெல்லாம் விட பல படிகள் மேலாய் முஹம்மது நபி (அன்னாரின் மீது சாந்தி தவழுவதாகுக) அவர்கள், இவ்வுலகத்தின் குறைந்தது ஐந்திலொரு பகுதி மக்களால் தம் உயிரினும் மேலாய் மதித்து போற்றப்படும் பெரும் தலைவர், //

அதெல்லாம் உங்களுக்கு... எமக்கென்ன அவசியம்? உம்மை யாரிங்கு நாம் எழுதுவதை வந்து படிக்க சொல்லி வெத்தலை பாக்கு வெச்சது?

Anonymous said...

kuviyal eppavum pol.unga nanbaruku peranthanaal vazhthukkal....kavithai konjam purinthadhu konjam puriyalai...varigal sariya thodukalaiyonu enaku thonudhu arun...

ராஜன் said...

//varigal sariya thodukalaiyonu enaku thonudhu arun...//அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வெச்ச மாலை!

மணக்கும் ஒரு மணிக்கழுத்தில் விழுந்ததிந்த வேள

அச்சாரம்.... அடடட.....

அட... கொய்யால said...

ஏன்டா வாலுராம‌ன‌ அவ‌தாரா புருச‌ன் இல்ல‌ன்டியாமே

ராமாயனத்த கட்டுக் கதன்னு சொன்னியாம‌

அப்பெடி சொல்லுன‌தும் இல்லாம‌ ராவ‌ண‌னுக்கும் , க‌ட‌த்திட்டு வ‌ந்த‌ சீதா தேவிக்கும் புற‌ந்த‌து தான் யாழ்பான‌த்துல‌ அலையுதுன்னியாமே

யேன்டா கிறுக்கு ப‌ய‌லே

என்ன‌டா இந்த‌ முர‌ன்பாடு , அப்போ புள்ளையாரு யாருடா? புருடாவா?

முருகன் யாரு உம் பாட்டியோட கல்ல புருசனா?ஆமா... ஒட்ட நறுக்கிடுவே ஆமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

பாஸ்டன் ஸ்ரீராம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

Arun..nice post

!

Blog Widget by LinkWithin