பரிணாமம் - முட்டையா? கோழியா?

குறிப்பு - பரிணாமம் பற்றிய தொடர் முழுக்க முழுக்க எனது புரிதல் மட்டுமே, நான் பார்த்தவற்றை, உணர்ந்தவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன், அதிலுள்ள அதிகபட்ச சாத்தியகூறுகளை நமது உரையாடல் தீர்மானம் செய்யும்!

********

கடந்த வாரம் உலகளாவிய பிரச்சனை ஒன்று முடிவுக்கு வந்தது, அது பல நூற்றாண்டுகளாக இருந்த ஒரு கேள்விக்கான விடை, கோழியிலிருந்து முட்டை வந்ததா?, முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்ற கேள்வியே அது, நான் சிறு வயதிலேயே தர்க்க ரீதியாக அது கோழி தான் என்று விவாதித்தாலும், கடந்த வாரம் வந்த ஆராய்ச்சியின் முடிவு விஞ்ஞான ரீதியாக அதை உறுதி செய்துவிட்டது, ஆனாலும் சில நண்பர்கள் அதை தர்க்க ரீதியாக ஏற்க மறுக்கிறார்கள், கோழி தான் முதல் என்றால் அது படைப்புவாத கொள்கைக்கு ஆதரவாக இருக்கிறது என்கிறார்கள், இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் அது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது என்கிறார்கள்!, கடவுளையே நோண்டி நொங்கெடுக்கும் போது கோழியை மட்டும் விட்டு வைக்கலாமா!?

ஊர் வாயை அடைக்கனும் என்றால், ஊருக்கு என்ன வாயா இருக்கு என்று கேட்பது போலத்தான் கோழி என்றால் நேரடியாக கோழியை விவாதத்துக்கு எடுத்து கொள்வது, கோழி என்றால் முதல் முட்டையிட்ட உரியினம் என்று தான் எடுத்து கொள்ள வேண்டும், அது பறவையாகவும் இருக்கலாம், பல்லி போன்ற ஊர்வனவையாகவும் இருக்கலாம், மீனாகவும் இருக்கலாம், அல்லது விதையை உற்பத்தி செய்த தாவரமாகவும் இருக்கலாம், சென்ற பதிவிலேயே தாவர விதைக்கும், முட்டைக்கும் இருக்கும் அடிப்படை ஒற்றுமைகள் பற்றி எழுதினேன், சரி இங்கே தாவரம் எதுக்கு என்கிறீர்களா!? அது தான் நான் பத்து வருடம் முன்னால் செய்த விவாதமே!


ஒருசெல் உயிரினங்கள் தனது பிரதியை நகலெடுத்து இனப்பெருக்கம் செய்தன, அவைகளின் வாழ வேண்டிய நிர்பந்தம், அவைகளை பல செல் உயிரினங்களாக மாற்றியது. அவைகளுக்கு இனபெருக்கம் அப்பொழுதும் தேவைபட்டது, சில தாவரங்கள் வேர் வழியாகவே தனது பிரதியை நகலெடுத்தன! கிழங்கு வகைகளை நாம் உணவாக உட்கொண்டாலும் அவை சற்றே தடித்த வேர் தான் என்பதை ஒப்பு கொள்வீர்கள் என நம்புகிறேன், அதில் ஏற்பட்ட மாற்றம் மூடிய வேர்கள் கடலை போன்ற விதைகளை உருவாக்கியது, அவைகளை அப்படியே விட்டுவிட்டாலும் அருகில் அந்த வேர் மூலம் அடுத்த கடலை செடி வந்துவிடும்!


அடுத்த வானம் பார்த்த விதைகளை உருவாக்கும் முயற்சி ஆரம்பித்தது, அதன் காரணம் ஒரே இடத்தில் அருகருகில் முளைக்கும் செடிகளுக்கு தேவையான ஊட்டசத்து கிடைப்பதில்லை, அப்படியே வானம் பார்த்த விதைகளை உருவாக்க நினைத்தாலும் இன்னும் அதில் முழுபரிணாமம் அடையாத செடிகள் தான் ரோஜா, மல்லிகை போன்ற செடிகள், நன்றாக பார்த்துள்ளீர்களா!? அந்த பூக்களில் விதைகள் உருவாகாது, ஆனால் கனகாம்பரம், சூரியகாந்தி போன்ற பூக்கள் காய்க்காமலேயே தனக்குள் விதைகளை உருவாக்கி கொள்கிறது. முன்னரே சொன்னது தான் காய்கள் அனைத்தும் மூடப்பட்ட விதைகளே அதை தாவர முட்டைகள் என்று அழைக்கலாம்!  




தனது உடலிலேயே தனது கருவை முழு காலமும் வளர்க்க முடியாத உடல் வளர்ச்சியை தான் ஆரம்ப கட்ட உயிரினங்கள் பெற்றிருந்தன!, சில உயிரினங்கள் அப்படியே முட்டையிலும் கூட முழு வளர்ச்சி அடைய முடியாதவைகளாக இருக்கின்றன, அது முட்டையின் மீதான தவறல்ல, அந்த உயிரினத்திற்கு முழு வளர்ச்சியடைய இன்னும் அதிக காலம் தேவைப்படுவதே, அதற்கு உதாரணங்களாக லார்வா புழுக்களை காட்டலாம், எறும்பு, தேனி, பட்டாம்பூச்சியில் ஆரம்பித்து பரிணாமத்தின் அடுத்த உதாரணமான தவளையும் காட்டலாம்!.


தனது உடலுகுள்ளாகவே முழு வளர்ச்சியும் கொடுக்க முடிந்த உயிரினம் பாலூட்டியாக மாறியது, தனது வாரிசுகள் தனியாக உணவை தேடும் வரை அதை பாதுகாப்பது பெரும்பாலும் அனைத்து உயிர்களுக்கும் உள்ளன, ஆயினும் பாலூட்டியாக இருப்பது அதிகபட்ச பாதுகாப்பு எனவே பரிணாமம் பாலை சுரக்க வைத்தது, அவை இருபாலருக்கும் பொதுவானது என்பதால் தான் ஆண்களுக்கும் முலைகாம்பு உள்ளது, அதற்கான சுரப்பிகள் தேவையான அளவு சுரப்பதில்லை ஆண்களுக்கு, பாலூட்டியாக ஒரு பறவை மாறியதற்கான உலகம் முழுவதும் ஒப்புகொண்ட ஆதாரம் ப்ளாட்டிபஸ், அது அடிப்படையில் வாத்து குடும்பத்தை சேர்ந்தது!


தொடரும்!

106 வாங்கிகட்டி கொண்டது:

கோவி.கண்ணன் said...

ரோஜாவில் 100 வகை, பல்வேறு வண்ணங்களில் இன்றும் இருக்கின்றன மாறுபட்ட நிறம் இவற்றின் பரிணாமத்திற்கான தேவை என்ன ?. அதாவது செடி, விதை அனைத்தும் ஒன்று போலவே இருந்து பூவின் நிறம் மட்டும் மாறி இருக்கும் தாவிர வகைகள் உண்டு, நிறம் மட்டும் மாறுவதற்கான காரணம் எனக்கு புரியவில்லை.

வால்பையன் said...

//நிறம் மட்டும் மாறுவதற்கான காரணம் எனக்கு புரியவில்லை. //

மனித தோலில் இருக்கும் மெலனின் போலத்தான் அதுவும்!, மண்ணின் தன்மை, சுற்றுசூழல் குறித்து நிறம் மாறியது, ஆனால் பல இடங்களில் இருந்து இன்று ஒரே இடத்தில் வளர்க்கபடுகிறது!

ஜி.டி.நாயுடு ஒரே மரத்தில் பல சுவையுள்ள பழங்களை உருவாக்கியதை இங்கே நினைவு கூறுகிறேன்!

ஷங்கர் said...

///கடவுளையே நோண்டி நொங்கெடுக்கும் போது கோழியை மட்டும் விட்டு வைக்கலாமா!?////

ரைட் ...

தல ,
நீ என்ன சொல்லவர ? பல முட்டையிடும் பறவைகளின் பரிணாம வளர்ச்சி தான் கோழி என்றா ?

ஷங்கர் said...

///பல முட்டையிடும் பறவைகளின் பரிணாம வளர்ச்சி தான் கோழி என்றா ///
குரங்கிலிருந்து மனிதன் என்பது போலவா ?

வால்பையன் said...

//பல முட்டையிடும் பறவைகளின் பரிணாம வளர்ச்சி தான் கோழி என்றா ? //

பிரதியெடுக்கும் செல்களிருந்து முட்டைவிடும் உயிரினமாக மாறிய பரிணாம கிளையில் ஒரு உயிரினம் தான் கோழி!

பல முட்டைகள் என்பது அதன் வாழும் தகவமைப்பை பொறுத்து அமைகிறது! கோழியால் ஒரே நேரத்தில் பல முட்டைகள் இட முடியாவிட்டாலும் தொடர்ந்து அது 30 முட்டைகள் வரை இடும், அதாவது தினம் ஒன்று!

வால்பையன் said...

//குரங்கிலிருந்து மனிதன் என்பது போலவா ? //


அந்த கிளையில் அதிகம் பலனடைந்தது மனிதன் என்ற உயிரினம் என கொள்லலாம், அடுத்து சிம்பன்சி!

ஷங்கர் said...

ஓகே ஓகே ..,,நீங்கள் ஒன்பதாவது தான் படிசீங்களா ???

வால்பையன் said...

//ஓகே ஓகே ..,,நீங்கள் ஒன்பதாவது தான் படிசீங்களா ??? //

பள்ளி படிப்பு ஒன்பதாவது வரை மட்டுமே!
உலக படிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது!

எனக்கு இரண்டாவது வகுப்பெடுத்த டீச்சர் +2 தான், ஆனால் கூட படித்த சுரேஷ் இன்று டாக்டர்!
டீச்சர் மேல் தப்பா, சுரேஷ் மேல் தப்பா!

நமக்கு பாடம் எடுக்க பரந்த உலகம் இருக்கு, சின்ன பள்ளி எதுக்கு!

ஷங்கர் said...

///உலக படிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது///

இது matteru ......,இதுக்காகத்தான் நானும் தேடி தேடி படிசிண்டுருகேன் தல .....வாழ்த்துக்கள்

அரோக்கியமான விவாதம் ஆரம்பிக்கட்டும்

hiuhiuw said...

//கடந்த வாரம் உலகளாவிய பிரச்சனை ஒன்று முடிவுக்கு வந்தது, அது பல நூற்றாண்டுகளாக இருந்த ஒரு கேள்விக்கான விடை, கோழியிலிருந்து முட்டை வந்ததா?, முட்டையிலிருந்து கோழி வந்ததா?//


அப்பிடியே புள்ளிராசாவுக்கு எயிட்ஸ் வருமான்னும் கண்டு புடிச்சு சொல்லிட்டா பரவால்ல

hiuhiuw said...

//அது அடிப்படையில் வாத்து குடும்பத்தை சேர்ந்தது!//

அட நம்ம ஃபேமிலி

MR.BOO said...

//
நமக்கு பாடம் எடுக்க பரந்த உலகம் இருக்கு, சின்ன பள்ளி எதுக்கு!//

Super...

செல்வா said...

நன்றாக இருக்கிறது ..
தொடருங்கள் உங்கள் ஆராய்ச்சியை..
விரைவில் அடுத்த பதிவினை எதிர்பார்க்கிறேன் ..!

DR said...

கலக்குறீங்க போங்க... என்னென்னமோ சொல்றீங்க...

உங்க பிளாக் மொத்தத்தையும் ஒரு நாள் உக்காந்து படிக்கணும் போல... அவ்வளவு விஷயம் இருக்குது...

தொடர்ந்து எழுதுங்க...

pinkyrose said...

///கடவுளையே நோண்டி நொங்கெடுக்கும் போது கோழியை மட்டும் விட்டு வைக்கலாமா!?////


நிஜமாவே நீங்க வால்பையன் தான் :)

தமிழ் பொண்ணு said...

இந்த ஆளு பரிணாமம் பரினமமா எழுதி கொல்றான்யா...கேக்க ஆளு இல்லாம போயிருச்சு.

ஹேமா said...

தேடல்கள் தொடருட்டும் வாலு.
வாசிக்க அதிசயமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கு.பல கேள்விகளையே மீண்டும் மீண்டும் தோண்டி எடுக்கிறது பதிவு !

தமிழ் பொண்ணு said...

// நான் சிறு வயதிலேயே தர்க்க ரீதியாக அது கோழி தான் என்று விவாதித்தாலும், கடந்த வாரம் வந்த ஆராய்ச்சியின் முடிவு விஞ்ஞான ரீதியாக அதை உறுதி செய்துவிட்டது//

தல நீங்க எங்கயோ போய்டீங்க ...தல நீங்க எங்கயோ போய்டீங்க....தல....நீங்க...

Jey said...

கட்டுரை, நுணுக்கமான தகவல்களுடனும், அடிப்படை தெளிவுடனும் இருக்கு தல, தொடருங்கள்...

அகல்விளக்கு said...

குப்பண்ணா ஹோட்டல்ல கோழி இறைச்சிய சாப்பிடாம ஆராய்ச்சி பண்ணிணப்பவே நினைச்சேன்....

ஆனாலும் நல்லாருக்கு தல....

நிறைய கத்துக்கணும்னு தோணுது...

Prasanna said...

மனிதனின் அடுத்த கட்டம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது :)

Unknown said...

கோழியிலிருந்துதான் முட்டையே..
முட்டையிலிருந்து குஞ்சுதான் வரும்..
ஹி .. ஹி ...

Unknown said...

பல சமையங்களில் முட்டையில் இருந்து
ஆம்லேட்.. ஆபாயில் எல்லாம் கூட வரும்..

கல்வெட்டு said...

.


அறிவியல் கட்டுரைகளை எளிய மொழியில் தொடர்ந்து சொல்கிறீர்கள். நன்றி வால்!

**


மதப்புத்தகங்கள் படியும் கோழிதான் முதல்.முட்டையில் இருந்து கோழி வந்திருக்காது. கடவுள் முட்டைகளைப் படைக்கவில்லை. கோழிகளைத்தான் படைத்தார்.

மதப்புத்தகம் 1:

ஆதாரம்(1):
ஆதாம் ஏவாளை அடல்ட் ஆகத்தான் ( வயது வந்தவர்களாக) உருவாக்கினார் என்று சொல்கிறார்கள். குழந்தையாகவோ கருவாகவோ படைக்கவில்லை. அது போல கோழி மற்றும் சேவலை அடல்ட் ஆகத்தான் படைத்திருப்பார்.

ஆதாரம்(2):
மேலும் முக்கிய உதாரணம். ஆதாம் ஏவாள் இருக்கும் போது பாம்பு இருந்தது (சர்ப்பம்) பாம்பின் முட்டை இருந்ததாக மதப்புத்தம் சொல்லவில்லை. எனவே பாம்பு முதலில் படைக்கப்பட்டது போல கோழியும் முதலில் படைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மதப்புத்தகம் 2:
நாளை நடக்கவிருக்கும் அறிவியல் குவாண்டம் நிகழ்ச்சிமுதல் எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் எல்லாத் தகவல்களையும் கொண்ட எங்கள் புத்தகத்தில் கோழி மற்றும் முட்டைகளைப் பற்றி எந்தவிதமான படைப்புக்குறிப்பும் இல்லாததால் கோழி மற்றும் முட்டைகள் இருப்பதாக இன்றுவரை நாங்கள் நம்பவில்லை.


...

உமர் | Umar said...

இனிமேல் நானும் நோ மற்றும் கல்வெட்டு அவர்களின் பாணியிலேயே பதில் அளிப்பது என்று முடிவு செய்துவிட்டேன்.

// எங்கள் புத்தகத்தில் கோழி மற்றும் முட்டைகளைப் பற்றி எந்தவிதமான படைப்புக்குறிப்பும் இல்லாததால் கோழி மற்றும் முட்டைகள் இருப்பதாக இன்றுவரை நாங்கள் நம்பவில்லை.//

ஆனாலும் , நாங்கள் கோழிகளையோ, முட்டைகளையோ சாப்பிடுவதில்லையா என்று நீங்கள் கேட்க விரும்பினால், விஜே அவர்களுடனான பகிரங்க விவாதத்தில் மட்டுமே கேட்க வேண்டும்.

கல்வெட்டு said...

.

இந்த அறிவியல் பதிவு கும்மியாக்கப்படுவதில் எந்த விருப்பமும் இல்லை.

ஆனால் கும்மி என்ற நபர்

// ஆனாலும் , நாங்கள் கோழிகளையோ, முட்டைகளையோ சாப்பிடுவதில்லையா என்று நீங்கள் கேட்க விரும்பினால், விஜே அவர்களுடனான பகிரங்க விவாதத்தில் மட்டுமே கேட்க வேண்டும்.//

இப்படி எல்லாம் சொல்வதால் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.

1. யாராக‌ இருந்தாலும் அவர்கள் இறைவனைவிடப் பெரியவர்கள் கிடையாது.

2. ஒட்டகம் பற்றிச் சொன்ன இறைவன் கோழி மற்றும் முட்டை பற்றிச் சொல்லவில்லை. எல்லாப் படைப்புகளுக்கும் இறைவனே காரணம்.

3.எனவே இன்றுவரை கோழி மற்றும் முட்டைகள் இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் நம்பிக்கையாளர்கள்.

4.அப்படி கோழி மற்றும் முட்டை இருப்பதாக நம்பிவிட்டால் அது வால் போன்றவர்கள் சொல்லும் பரிணாமத்தை ஏற்றதாகிவிடும்.

*

கல்வெட்டு said...

.

:-)

.

ஜில்தண்ணி said...

விலங்கு முட்டையும் தாவர விதையையும் ஒப்பிடுவது சரியான வாதம் தான்

இரண்டும் இனப்பெருக்கம் தானே

தொடருங்கள்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அறிவியல் கட்டுரைகளை எளிய மொழியில் தொடர்ந்து சொல்கிறீர்கள். நன்றி வால்!

/////


ரிப்பிட்டு


"வால்"த்துக்கள் ....

உமர் | Umar said...

//இப்படி எல்லாம் சொல்வதால் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.//

பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்தும் இணைய தளத்தில் இதுபோன்று விவாதிப்பது முறையல்ல. இதைப் பற்றி ஏற்கனவே நாத்திகர்களுடன் நடந்த விவாதத்தில் குறிப்பிட்டுள்ளோம்.

:-))))

Unknown said...

//ஒருசெல் உயிரினங்கள் தனது பிரதியை நகலெடுத்து இனப்பெருக்கம் செய்தன,//

பிரதியை நகல் எடிப்பது இனப்பெருக்கம் என்றால் இப்போழுதும் தான் செல்கள் நகலேடுகின்றன, அவைகள் இனப்பெருக்கமா? அல்ல குஞ்சு போரித்தோ முட்டை இட்டோ செய்வது இனப்பெருக்கமா.

//அவைகளின் வாழ வேண்டிய நிர்பந்தம், அவைகளை பல செல் உயிரினங்களாக மாற்றியது.//

அவைகளுக்கு வாழ வேண்டிய நிர்பந்தம் என்ன? தன்னை பற்றியே தெரியாத, ஒரு அறிவு கூட இல்லாத ஒரு உயிரினம் எப்படி பல செல் உயிரினமாக மாற தெரிஞ்சது, அதற்கு தேவை என்ன?

//ஆயினும் பாலூட்டியாக இருப்பது அதிகபட்ச பாதுகாப்பு எனவே பரிணாமம் பாலை சுரக்க வைத்தது//

நல்ல கற்பனை.

//அவை இருபாலருக்கும் பொதுவானது என்பதால் தான் ஆண்களுக்கும் முலைகாம்பு உள்ளது,//

தேவை இல்லாததால் ஆண்களுக்கு முலை காம்பாக மாறியது எனில், காம்பாக மாறிய முலை ஏன் இன்னும் மறையவில்லை, அதற்கு ஆணுக்கு என்ன தேவை, ஒரு வேலை எதிர்காலத்தில் மறைந்து விடுமோ??

ஒரு செல் உயிருக்கு ஜோடியாக மாற வேண்டிய தேவை என்ன?

நண்பர் வால்பையன் அவர்களுக்கு கற்பனை திறன் அதிகம் போல!!

Radhakrishnan said...

நன்றாக வாசித்து கொண்டு வரும்போதே அப்படியே அந்தரத்தில் தொங்கவிட்டது போன்று ஒரு உணர்வு. எதற்கு அவசரகதியாக முடித்தீர்கள் என தெரியவில்லை. இன்னும் சற்று விபரமாக எழுதி இருக்கலாம் என தோன்றுகிறது. நல்ல முயற்சிகள். தொடரட்டும் அருண். அறிவியலின் மூலம் மனிதர்களின் மனம் திறக்கலாம்.

Unknown said...

கலக்குறீங்க தல...

வால்பையன் said...

//தனுசுராசி said...

கலக்குறீங்க போங்க... என்னென்னமோ சொல்றீங்க...

உங்க பிளாக் மொத்தத்தையும் ஒரு நாள் உக்காந்து படிக்கணும் போல... அவ்வளவு விஷயம் இருக்குது...//


முதல் வருகைக்கு நன்றி தோழரே!
சமீபகாலமாக தான் இம்மாதிரியான ஆராய்ச்சிகள் எல்லாம், முன்னர் பயங்கர மொக்கைகள் தான் அதிகமா இருக்கும்!

வால்பையன் said...

//madurai ponnu said...

இந்த ஆளு பரிணாமம் பரினமமா எழுதி கொல்றான்யா...கேக்க ஆளு இல்லாம போயிருச்சு.//


ஏங்க அம்மணி,உங்களுக்கு ரொம்ப போரடிக்குதா?, திரும்பவும் கவிதை எழுதட்டுமா?

வால்பையன் said...

//ஹேமா said...

தேடல்கள் தொடருட்டும் வாலு.
வாசிக்க அதிசயமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கு.பல கேள்விகளையே மீண்டும் மீண்டும் தோண்டி எடுக்கிறது பதிவு !//


பரிணாமத்தின் ஆதாரங்கள் நம் கண் முன்னாலே இறைந்து கிடக்கிறது, கடவுள் நம்பிக்கை அதை நம்ப மறுக்கிறது!

தமிழ் பொண்ணு said...

// வால்பையன் said...


பள்ளி படிப்பு ஒன்பதாவது வரை மட்டுமே!
உலக படிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது!//

எதுல போய் முடிய போகுதோ..

//எனக்கு இரண்டாவது வகுப்பெடுத்த டீச்சர் +2 தான், ஆனால் கூட படித்த சுரேஷ் இன்று டாக்டர்!
டீச்சர் மேல் தப்பா, சுரேஷ் மேல் தப்பா! //

ரெண்டும் இல்ல.படிக்குற காலத்துல படிக்காம டீச்சர் மேலயும் சுரேஷ் பையன் மேலயும் போட்டு எஸ்கேப் ஆகா கூடாது.

//நமக்கு பாடம் எடுக்க பரந்த உலகம் இருக்கு, சின்ன பள்ளி எதுக்கு!//

அதான் தல அடிக்கடி ஏபீசிடி தப்ப சொல்றார் போல.. :)

வால்பையன் said...

//அகல்விளக்கு said...

குப்பண்ணா ஹோட்டல்ல கோழி இறைச்சிய சாப்பிடாம ஆராய்ச்சி பண்ணிணப்பவே நினைச்சேன்....//


ஆமா தல!
சாப்பிடும் போதேல்லாம் இந்த ஆராய்ச்சி எனக்கு!

வால்பையன் said...

//பிரசன்னா said...

மனிதனின் அடுத்த கட்டம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது :)//


எனக்கும் தான் தல!

மிகுந்த ஆவலாக இருக்கு! ஆனா பார்க்கத்தான் நாம இருக்க மாட்டோம்!

:-)

வால்பையன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...

கோழியிலிருந்துதான் முட்டையே..
முட்டையிலிருந்து குஞ்சுதான் வரும்..//

holyox செல்வம் வேறு ஒரு புது விளக்கம் கொடுத்திருந்தார் பார்த்திங்களா?

வால்பையன் said...

//கல்வெட்டு said...
.
அறிவியல் கட்டுரைகளை எளிய மொழியில் தொடர்ந்து சொல்கிறீர்கள். நன்றி வால்! //


நன்றி தல!
அனைத்தும் எனது புரிதலிருந்தே எழுதுவதால் எளிமையாக இருக்கிறது, காரணம் நானொரு மக்கு சாம்பிராணி தானே!


//ஒட்டகம் பற்றிச் சொன்ன இறைவன் கோழி மற்றும் முட்டை பற்றிச் சொல்லவில்லை. எல்லாப் படைப்புகளுக்கும் இறைவனே காரணம்.//

அப்போதைய அறிவுக்கு எட்டியது தவிர வேறெதுவும் மதபுத்தகத்தில் இல்லை என்பதே உண்மை!

வால்பையன் said...

//ஜில்தண்ணி - யோகேஷ் said...

விலங்கு முட்டையும் தாவர விதையையும் ஒப்பிடுவது சரியான வாதம் தான்

இரண்டும் இனப்பெருக்கம் தானே //


உண்மை தான் தல!
பழைய பதிவு ஒன்றில் சொல்லியிருந்தேன், பாதி தாவரமான பவழப்பாறைகள், முட்டையையும், விந்தையும் பீச்சியடித்து இனபெருக்கம் செய்கின்றன! தாவரத்திலுருந்து பரிணமத்ததின் ஆதாரம் அது!

வால்பையன் said...

//பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்தும் இணைய தளத்தில் இதுபோன்று விவாதிப்பது முறையல்ல. இதைப் பற்றி ஏற்கனவே நாத்திகர்களுடன் நடந்த விவாதத்தில் குறிப்பிட்டுள்ளோம்.//


அடுத்த பதிவு மறந்துருச்சா!

அந்த வீடீயோ பார்த்திங்கள்ள?

தலைப்பு என்ன தெரியுமா?

”பிஜேவின் உளரல்கள்”

பார்ப்போம் இதுக்கு எத்தனை எச்சரிக்கை பதிவு வருதுன்னு!

priyamudanprabu said...

தொடருங்கள்

உமர் | Umar said...

//”பிஜேவின் உளரல்கள்”//

பிஜேயின் உளறல்கள் - 1

தொடர் பதிவு. வரும் செவ்வாய் பதிவிடுவோம்

வால்பையன் said...

//கார்பன் கூட்டாளி said...

//ஒருசெல் உயிரினங்கள் தனது பிரதியை நகலெடுத்து இனப்பெருக்கம் செய்தன,//

பிரதியை நகல் எடிப்பது இனப்பெருக்கம் என்றால் இப்போழுதும் தான் செல்கள் நகலேடுகின்றன, அவைகள் இனப்பெருக்கமா? அல்ல குஞ்சு போரித்தோ முட்டை இட்டோ செய்வது இனப்பெருக்கமா.//


செல்கள் நகலெடுப்பது இனபெருக்கம் இல்லையென்று உங்களிடம் யாராவது சொன்னார்களா!?

//அவைகளுக்கு வாழ வேண்டிய நிர்பந்தம் என்ன? தன்னை பற்றியே தெரியாத, ஒரு அறிவு கூட இல்லாத ஒரு உயிரினம் எப்படி பல செல் உயிரினமாக மாற தெரிஞ்சது, அதற்கு தேவை என்ன? //

தன்னை பற்றி தெரியாத, அறிவே இல்லாத என்று உங்களுக்கு சொல்ல தெரிஞ்சது மாதிரி தான், அதற்கும் மாற தெரிஞ்சது, அது அது அதன் வாழ்க்கைக்கு தேவையான தகவமைப்பை தேடி கொள்கின்றன!

//ஆயினும் பாலூட்டியாக இருப்பது அதிகபட்ச பாதுகாப்பு எனவே பரிணாமம் பாலை சுரக்க வைத்தது//

நல்ல கற்பனை.//

ஆறே நாளில் உலகமும், உயிரினங்களும் படைக்கபட்டது என்பதை விட என் கற்பனை நல்ல கற்பனை என்றால் நானும் இறைதூதர் ஆகிவிடுவேன்! பரவாயில்லையா!?

//தேவை இல்லாததால் ஆண்களுக்கு முலை காம்பாக மாறியது எனில், காம்பாக மாறிய முலை ஏன் இன்னும் மறையவில்லை, அதற்கு ஆணுக்கு என்ன தேவை, ஒரு வேலை எதிர்காலத்தில் மறைந்து விடுமோ??//

பாலூட்டிகள் கரு உற்பத்தி ஆகும் போது ஆணா, பெண்ணா என்று முடிவு செய்வதில்லை, அதன் பின்னே மாறுகிறது, சந்தேகம் இருந்தால் மருத்துவரை கேட்டு தெரிந்து கொள்ளவும்! அதில் ஏற்பட்ட மரபணு சிக்கல் தான் அரவாணிகள்!
படைப்புவாதபடி ஆதாம், ஏவாள் என்ற இருபால் தானே, அரவாணிகள் யாரால் படைக்கபட்டது தோழரே!

//ஒரு செல் உயிருக்கு ஜோடியாக மாற வேண்டிய தேவை என்ன?//

கலப்பின இனபெருக்கம் அதைவிட அதிகபடியான ஆரோக்கியமுள்ள உயிரினத்தை தோற்றுவிக்கும்! ஒரு செல் உயிரியில் இருந்து நேரடியாக ஜோடியாகவில்லை, அதன் பின் இருபால் உறுப்பையும் தன்னகத்தே கொண்ட உயிரினம் தோன்றியது(இன்னும் இருக்கு), அதிலிருந்து தான் தனிதனியாக பிரிந்தது!

//நண்பர் வால்பையன் அவர்களுக்கு கற்பனை திறன் அதிகம் போல!!//

ஏற்கனவே சொன்னது தான், மதபுத்தகத்தை விட என் கற்பனை சிறந்தது என்றால் நான் தான் அடுத்த இறைத்தூதர்!

வால்பையன் said...

//V.Radhakrishnan said...

நன்றாக வாசித்து கொண்டு வரும்போதே அப்படியே அந்தரத்தில் தொங்கவிட்டது போன்று ஒரு உணர்வு. எதற்கு அவசரகதியாக முடித்தீர்கள் என தெரியவில்லை. இன்னும் சற்று விபரமாக எழுதி இருக்கலாம் என தோன்றுகிறது. நல்ல முயற்சிகள். தொடரட்டும் அருண். அறிவியலின் மூலம் மனிதர்களின் மனம் திறக்கலாம்.//


எனது பல பரிணாம தொடர் பதிவுகள் நீங்கள் சொல்வது போல் தோன்றுவதாக தான் பலர் சொல்கிறார்கள்!

நண்பரே இது சினிமா படமல்ல, தொடர் பதிவு அப்படி தான் தோன்றும், அப்படி தோன்றினால் தான் விசயம் சுவாரஸ்யமானது என அர்த்தப்படும், எனக்கு நீங்கள் கொடுத்த பரிசு அந்த வாக்கியம்!

இன்னொரு வேண்டுகோள், அந்தரத்தில் தொங்குது என்ற குழப்பமடைவதை விட என்ன விட்டு போச்சுன்னு நீங்களும் யோசிச்சு சொன்னா இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகர ஏதுவாக இருக்கும்!

வால்பையன் said...

//கலாநேசன் said...

கலக்குறீங்க தல...//


நிறைய பேர்த்துக்கு இதுனால வயித்தை கலக்குதாம்!

:)

வால்பையன் said...

//படிக்குற காலத்துல படிக்காம டீச்சர் மேலயும் சுரேஷ் பையன் மேலயும் போட்டு எஸ்கேப் ஆகா கூடாது.//

நான் படித்த ஒன்பதாவது வரை முதல் ரேங்க் நான் தான்!

//அதான் தல அடிக்கடி ஏபீசிடி தப்ப சொல்றார் போல.. :)//

கற்றது கைமண் அளவு தானே!

வால்பையன் said...

//கும்மி said...

//”பிஜேவின் உளரல்கள்”//

பிஜேயின் உளறல்கள் - 1

தொடர் பதிவு. வரும் செவ்வாய் பதிவிடுவோம்//


சீக்ரெட் ஒப்பன் பண்ணாதிங்க தல!

உமர் | Umar said...

//சீக்ரெட் ஒப்பன் பண்ணாதிங்க தல! //

நீ ஒரு ஓட்ட வாய்டா கும்மி!

தமிழ் பொண்ணு said...

//வால்பையன் said...
நான் படித்த ஒன்பதாவது வரை முதல் ரேங்க் நான் தான்.கற்றது கைமண் அளவு தானே!
//
தல நீங்க மட்டும் தான் கிளாஸ் ல படிசீங்கள? கல்லாதது நம்ம வால் அளவு.

Unknown said...

கார்பன் கூட்டாளிக்கு அளித்த பதில்...
உண்மையிலேயே ஒன்பதாவது வரை படித்தீரா வால்பையன்? சத்தியமாய் நம்ப இனிமேல் முடியாது... எதோ எழுதப்படிக்க தெரிந்தவர் என்று வேண்டுமானால் நம்புகிறேன்...

...ம்ம்ம்...

யார் வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் கற்பனையாக எதுவும் எவ்வளவு கேவலாமாகவும் எழுதலாம் பதிவுலகில் என்பதற்கு நல்ல உதாரணம் இந்த பிளாக்...

...bloggers have no boundary...

வால்பையன் said...

@ வதூவசி


அவர் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார், அதற்கு என் பதிலை சொல்லியிருக்கேன், அதற்கு மறுப்பு சொல்ல வேண்டும், அல்லது அது குறித்த உங்கள் கருத்தை சொல்ல வேண்டும், சம்பந்தமில்லாமல் உளரி கொட்டுவது தான் மதவாதிகளின் குணம் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளீர்கள்!

என்ன செய்ய, நீங்கள் கண் கட்டபட்ட குதிரைகள் தானே!

நேசமித்ரன் said...

//Archeological findings have indicated that the 'mother of all poultry' is the Southeast (SE) Asian Red jungle fowl (RJF) (Gallus gallus). Since domestication of chicken has been observed at the Indus valley as early as 3,200 BC, it is believed to be the epicenter of chicken domestication [1]. However, later day excavations in Peiligan Neolithic sites of China have raised questions about the exclusive domestication at Indus valley, suggesting alternate and possibly earlier domestication centers [2]. It is proposed that G. gallus, the wild RJF found in the forests of SE Asia and India//


https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2474866/

:)http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2697995/pdf/1297-9686-35-5-403.pdf

:)

Please check thalaivarae

வால்பையன் said...

@ நேசமித்ரன்

பீட்டரில் நான் வீக் என்று தெரிந்துமா எத்தனை லிங்க்!

சுருக்கமா யாராவது நண்பர்கள் மொழிபெயர்த்து சொல்லுங்களேன்!

Unknown said...

//அதற்கு மறுப்பு சொல்ல வேண்டும், அல்லது அது குறித்த உங்கள் கருத்தை சொல்ல வேண்டும்//

ஏன் சொல்ல வேண்டும்...?

தேவை இல்லை...

ஆவண்ணாவுக்கு அப்புறம் ஐயன்னா என்று நீங்கள் எழுதுவீர்கள்... அது தவறு என்று அதற்கு அரிச்சுவடி பாடம் எடுத்து ஆதாரத்துடன் பின்னூட்டம் எல்லாம் கொடுத்து உங்கள் அறிவை வளர்க்க வேண்டும் என்று எனக்கொன்றும் அவசியம் இல்லை...

'பின்நூட்டமிடுபவர்களை முதலில் திட்டி, அதற்கு அவர்கள், தாங்கள் சொன்னது சரி என்று ஆதாரங்களுடன் சொல்லும்போது அந்த/மற்றவரின் பின்னூட்டங்கள் மூலவாகவே நான் என் அறிவை பெறுவேன்' என்ற வரட்டுப்பிடிவாதத்தை விட்டுவிட்டு இணையம் மூலம் பல அறிவியல் தளங்களை நீங்களே தேடி பயின்று இனியாவது விஷயங்களை உண்மையாக தெரிந்து கொள்ளலாமே...

எப்பூடி.. said...

கோழியில் இருந்துதான் முட்டை வந்தது, ஏன்னா கோழிப்புரியாணியில் முட்டை இருக்கும், ஆனா முட்டை புரியாணியில் கோழி இருக்காதே :-)

எப்பூடி.. said...

வால்பையன்

//பீட்டரில் நான் வீக் என்று தெரிந்துமா எத்தனை லிங்க்!//

நீங்களுமா? என் இனம் நீங்கள்:-)

Radhakrishnan said...

//வால்பையன் said...

எனது பல பரிணாம தொடர் பதிவுகள் நீங்கள் சொல்வது போல் தோன்றுவதாக தான் பலர் சொல்கிறார்கள்!

நண்பரே இது சினிமா படமல்ல, தொடர் பதிவு அப்படி தான் தோன்றும், அப்படி தோன்றினால் தான் விசயம் சுவாரஸ்யமானது என அர்த்தப்படும், எனக்கு நீங்கள் கொடுத்த பரிசு அந்த வாக்கியம்!

இன்னொரு வேண்டுகோள், அந்தரத்தில் தொங்குது என்ற குழப்பமடைவதை விட என்ன விட்டு போச்சுன்னு நீங்களும் யோசிச்சு சொன்னா இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகர ஏதுவாக இருக்கும்!//

குழப்பம் ஏதுமில்லை அருண். திடீரென நிறுத்தியது போன்றொரு உணர்வு, இந்த கடைசி வரிகளை வாசித்து பாருங்கள்.

//பாலூட்டியாக ஒரு பறவை மாறியதற்கான உலகம் முழுவதும் ஒப்புகொண்ட ஆதாரம் ப்ளாட்டிபஸ், அது அடிப்படையில் வாத்து குடும்பத்தை சேர்ந்தது!//

அப்புறம் என மனதில் கேள்வி எழுவது நியாயம் அல்லவா? மேலும் தாவரம் தனியான விசயமாகவும், விலங்கினங்கள் தனியான விசயமாகவும் சொல்லி ஒரு இணைப்பை உருவாக்கி இருந்தால் சிறப்பாக இருக்கும், அப்படி இல்லாதபட்சத்தில் விலங்குகளை பற்றி முழுதும் எழுதிவிட்டு பின்னர் தாவரத்தை முழுதும் எழுதினால் புரிந்து கொள்ள ஏதுவாகும். விலங்கு தாவரம் விலங்கு என எழுதும்போது ஒரு கோர்வையின்றி காணப்படுகிறது.

எனது மனதில் பட்டது, தவறு இருப்பின் மன்னிக்கவும். நீங்கள் உங்கள் எண்ண ஓட்டத்தில் எழுதும்போது அந்த எழுத்துக்கு இருக்கும் தனித்தன்மை மறையாது என்பதும் நீங்கள் அறிந்ததுதான்.

வால்பையன் said...

@வதூவசீ

ஏன் சொல்ல வேண்டும்...?
தேவை இல்லை...//

தெரியாதுன்னு சொல்றதுக்கு இவ்ளோ பில்டப்பா!

//ஆவண்ணாவுக்கு அப்புறம் ஐயன்னா என்று நீங்கள் எழுதுவீர்கள்... அது தவறு என்று அதற்கு அரிச்சுவடி பாடம் எடுத்து ஆதாரத்துடன் பின்னூட்டம் எல்லாம் கொடுத்து உங்கள் அறிவை வளர்க்க வேண்டும் என்று எனக்கொன்றும் அவசியம் இல்லை...//


அறிவை வளர்க்க வக்கில்லாதவருக்கு தவறை கண்டுபிடிக்க மட்டும் முட்டி உயருதாக்கும்!


//இணையம் மூலம் பல அறிவியல் தளங்களை நீங்களே தேடி பயின்று இனியாவது விஷயங்களை உண்மையாக தெரிந்து கொள்ளலாமே...//


இதுவும் இணையம் தாமய்யா!
நான் என்ன உங்கள் விட்டில் உட்கார்ந்தா அரட்டை அடித்து கொண்டிருக்கிறேன்!, மத புத்தகத்தை தவிர வேறெதும் படிக்காதவருக்கு அந்த புத்தகத்தை தவிர வேறென்றும் தெரியாது! பிறகு எதுக்கு இவ்வளவு அலட்டல்!

வால்பையன் said...

//குழப்பம் ஏதுமில்லை அருண். திடீரென நிறுத்தியது போன்றொரு உணர்வு, இந்த கடைசி வரிகளை வாசித்து பாருங்கள். //

முட்டை என்ற விதை பற்றி எழுதியதால் அத்தோடு நிறுத்தி கொண்டேன்!

மனிதனின் விரைகுண்டு இருக்கும் பையை ”விதைப்பை” என்றே அழைப்பார்கள் என்று தான் முடிக்க இருந்தேன்! இங்கே தான் கலாச்சாரகாவலர்கள் தடியை கையில் பிடித்து கொண்டு நிற்கிறார்களே, அதனால் எடுத்துவிட்டேன்!

வால்பையன் said...

http://islamicfold.blogspot.com/2010/07/blog-post.html


இந்த பதிவில் நான் இட்ட பின்னுட்டம் எர்ரர் காட்டுது, அதனால் இங்கே பிரித்து இடுகிறேன்!

**********


//குர்ஆன் என்பது அல்லாஹ் தன் தூதவரான ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிக்கு அருளியது.//

ஆறு நாளில் மொத்த உலகையும் படைத்த கடவுள் அந்த ஜிப்ரீலை எப்போது படைத்தார், எங்கே வைத்திருந்தார்!

//அது நபியுடைய காலத்திலேயே மனித மனங்களில் தொகுக்கப்பட்டு விட்டது. அது இறைவனால் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.//

பாதுகாக்கபடும் என உறுதியளிக்கப்பட்டும் அதன் மூலம் ஏன் அழிக்கபட்டது, அவர்களுக்கு கடவுளின் உறுதி மேல் நம்பிக்கை இல்லாததாலா!?

//ஹதீஸ்கள் எனப்படும் நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவை செவிவழியாக ஒருவர் பின் ஒருவராக செய்தியாகத்தான் அறிவிக்கப்பட்டு வந்தது. நபியவர்களின் காலத்திற்கு பிந்தைய நூறாண்டுகளுக்குப் பின்னரே அவை தொகுக்கப்பட்டது. //


குரானும் முகமது வழியாகவே அதாவது முகமதுவின் சொல் வழியாகவே பிறரிடம் சொல்லப்பட்டது, ஹதீஸ் மாதிரியே குரானும் முகமதுவின் மறைவுக்கு பின்னரே தொகுப்பட்டது, ஏற்கனவே சொன்னது போல் அதன் மூலம் மொத்தமாக அழிக்கப்பட்டு விட்டது, அப்போது அதன் நம்பகதன்மையில் சந்தேகம் வந்துவிடுகிறதே!

எனது ப்ளாக்கில் நான் சொல்வதெல்லாம் உண்மை என்று ஒரு வார்த்தை எழுதினால் அனைத்தும் உண்மையாகிவிடுமா!?
புத்தகத்தில் இருக்கு என்பதற்காக கண்மூடித்தனமாக நம்புவது தான் பகுத்தறிவா!?

வால்பையன் said...

//எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.//

குறை என்றால் முக்மதுவின் நடத்தைக்கு களங்கம் ஏற்படுத்துவது போல் இருந்தால், சரி தானே!
ஹதீஸின் முன்வடிவத்தில் முகமது இஸ்லாம் அல்லாத பெண்னை வைத்திருந்தார், அதுவும் மணமுடிக்காமல் என்று இருந்தது, ஆனால் முகமது பெயருக்கு களங்கம் வந்துவிடக்கூடாதே என அழிக்கபட்டது!, எது உண்மை என தெரியாமல் எவ்வாறு பின் வந்தவர்கள் அவற்றை அழிக்கலாம்!

முகமது நிச்சயமாக உத்தமராக தான் இருப்பார் என்ற குருட்டு நம்பிக்கை தானே!

வால்பையன் said...

//ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல ஞாபக சக்தியுடன் இருந்து பிற்காலத்தில் ஞாபக சக்தியில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவருக்கு எப்போது தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.//


ஞாபகசக்தி இளமையில் அபாரமாக இருக்கும் என யார் சொன்னது!?, அப்படியிருப்பின் படிக்கும் அனைவரும் நூத்துக்கு நூறு வாங்கனுமே!


//ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.//

அது முக்கியமான தகவல் எனும் பட்சத்தில் எது சரியான பெயர் என்ற ஆராய்ச்சியை தொடரணுமே, அதை விட்டு எதாவது ஒருமுறை சொன்னதை மட்டும் வைத்து கொண்டு, அதிலிருந்து கேள்வி கேட்டால் அது பலவீனமான ஹதீஸ் என்று சொதப்புவது ஏன்!?

வால்பையன் said...

//மொழி, இனம், பாரம்பரியம், மார்க்கத்தில் பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது புகழ்ந்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால் அவைகளும் பலவீனமாகும்.//

ஆக மொழி,இனம்,பாரம்பரியம் பற்றி மார்க்கத்திலேயே பிரிவினை உள்ளது என ஒப்பு கொள்கிறீர்கள், அனைவரையும் படித்த கடவுள் எப்படி ஒரு கண்ணில் வெண்னையும், ஒரு கண்ணில் சுண்னாம்பும் வைக்கிறான்!, அப்படி செய்வானேயானல் அவன் எப்படி கடவுளாக இருக்க முடியும்!?

//ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.//

ஹதீஸ் என்பது முகமதுவின் நண்பர்கலிடமிருந்து தொகுக்கபட்டதா!? அல்லது சொல்நயம் மிக்க கலை வல்லுனர்களிடம் இருந்து தொகுக்கபட்டதா?!

வால்பையன் said...

//தந்தை வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தால், தந்தையிடமிருந்து செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும் பலவீனம்.//

சிறுவயது என்றால் என்ன கணக்கு வைத்திருப்பீர்கள், என் தந்தை எனக்கு ஏழு வயதில் சொன்னது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு!? ஒருவேளை தந்தை தாயிடம் சொல்லி, தாய் மூலமாக ஒரு ஹதீஸ் வந்தால் அதை எப்படி நிராகரிப்பீர்கள்!

//ஒரு தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின் மகன் அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.//

செய்தி முக்கியமா!? சொன்னவர் பெயர் முக்கியமா!?, அப்படியே பெயர் இருந்தாலும் அது சரியான பெயர் தான் என்பதை எப்படி உறுதி செய்கிறீர்கள், ஏனென்றால் ஹதீஸ் தொகுக்கபட்டது முகமது இறந்த நூறாண்டுகளுக்கு பிறகு, அக்காலத்தில் அங்கே மூன்று தலைமுறை ஏற்பட்டிருக்கும்! அப்படியானால் ஹதீஸ் முழுவதுமே நம்பலதன்மை அற்றதா!?

வால்பையன் said...

//இறைவன் கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும் பேசலாம், தவறில்லை என்ற கொள்கை வாதிகள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.
இப்படி ஏராளமான வழிகளில் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன.//


கருணையாளன் உரு உயிரை காப்பாற்ற சொல்லக்கூடிய பொய்யை கூடவா அனுமதியான்!, சரி யாருமில்லாத தீவில் ஒரு இஸ்லாமியன் மாட்டி கொண்டான், அங்கே பன்றிகள் மட்டுமே உள்ளது, குரானில் மறுக்கபட்டது என்பதற்காக எதையுமே சாப்பிடாமல் உயிர் விட வேண்டுமா!?

//குர்ஆனுடன் எந்த வகையிலும் ஒத்துப் போகாத - முரண்பட்டே நிற்கும் ஹதீஸ்கள் ஏதாவது இருந்தால் அப்போது நாம் குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட வேண்டும். ஹதீஸ்கள் முக்கியம் என்று குர்ஆனை அலட்சியப்படுத்தி விடக் கூடாது //


எது நமக்கு சாதமாக இருக்கோ, அதை எடுத்துக்கனும் என்று ஒப்பனாக சொல்லிவிடலாமே தல!


சரி, இந்த பின்னூட்டத்திற்கு நான் கேட்ட கிராஸ் கேள்விகளை ஆல் இன் ஆலில் பதிவாக போட்டு கொள்கிறேன்!, நிச்சயமாக நாகரிமாக இருக்கு, இங்கே கேட்டது மாதிரியே, அதற்கும் பதில் சொல்லிவிடுங்கள் ப்ளீஸ்

கிருஷ்ண மூர்த்தி S said...

ராதாகிருஷ்ணன் சொல்வது சரிதான் வால்ஸ்!

கொஞ்சம் பழைய பதிவுகளை எடுத்துக் கொண்டு கோர்வையாகச் சொல்லியிருக்கிறோமா அல்லது தொடர்பே இல்லாமல் பேசப்பட்ட விஷயங்கள் பாதியிலேயே விடப்பட்டிருக்கிறதா என்பதை நீங்களே ஒருதரம் பார்த்துக் கொள்வது நல்லது.

வால்பையன் said...

//கொஞ்சம் பழைய பதிவுகளை எடுத்துக் கொண்டு கோர்வையாகச் சொல்லியிருக்கிறோமா அல்லது தொடர்பே இல்லாமல் பேசப்பட்ட விஷயங்கள் பாதியிலேயே விடப்பட்டிருக்கிறதா என்பதை நீங்களே ஒருதரம் பார்த்துக் கொள்வது நல்லது. //


பரிணாமம் என்ற தொடராக எழுதினாலும் அவ்வபோது எனக்கு தோன்றுவதை குறிப்பெடுத்து அதை எழுதி வருகிறேன் நண்பரே! இது கொர்வையற்று தான் இருக்கும் என்பது நன்கு அறிவேன், நிச்சயம் எழுதி முடித்த பின் கோர்வையாக்கி மென்நூலாக்கலாம்!

தமிழ் பொண்ணு said...

//
வால்பையன் said...
பீட்டரில் நான் வீக் என்று தெரிந்துமா எத்தனை லிங்க்!

சுருக்கமா யாராவது நண்பர்கள் மொழிபெயர்த்து சொல்லுங்களேன்!//

ஓகே வால்.நான் கண்டிப்பா சொல்றேன்.அது வந்து என்ன சொல்ல வராங்கனா ..ஹலோ ஒரு நிமிஷம்...ஒரு காபி வாங்கிட்டு வாங்க..தெளிவா சொல்றேன்..

வால்பையன் said...

//ஓகே வால்.நான் கண்டிப்பா சொல்றேன்.அது வந்து என்ன சொல்ல வராங்கனா ..ஹலோ ஒரு நிமிஷம்...ஒரு காபி வாங்கிட்டு வாங்க..தெளிவா சொல்றேன்.. //


காபி வாங்கி கொடுத்தே காலியாயிருவேனே!

hiuhiuw said...

ஏய்!

ஏய்

இங்க என்னா நடக்குது மேன்!

Unknown said...

//செல்கள் நகலெடுப்பது இனபெருக்கம் இல்லையென்று உங்களிடம் யாராவது சொன்னார்களா!?//

செல்கள் நகலெடுப்பது இனப்பெருக்கம் என்று உங்களுக்கு யார் சொன்னது? உங்களுடைய செல் நகலெடுக்க பட வில்லை எனில் கருவிலயே இருந்துருப்பீர். நீங்கள் வளர்ந்தீர இல்ல இனப்பெருக்கம் அடைந்தீர?
அதிலும் குருத்தனு மட்டுமே நகலெடுக்கும்,

//தன்னை பற்றி தெரியாத, அறிவே இல்லாத என்று உங்களுக்கு சொல்ல தெரிஞ்சது மாதிரி தான், அதற்கும் மாற தெரிஞ்சது, அது அது அதன் வாழ்க்கைக்கு தேவையான தகவமைப்பை தேடி கொள்கின்றன!//

உங்களுடைய வாதப்படி அமீபாவிற்கும் அறிவு இருக்கு என்று கூறுகிறீரா?
அனைத்து விலங்கிற்கும் பசி தான் வளர்ச்சிக்கு காரணம்? பசி இல்லாத செல்களை யார் வளர்த்தது?

//ஆறே நாளில் உலகமும், உயிரினங்களும் படைக்கபட்டது என்பதை விட என் கற்பனை நல்ல கற்பனை என்றால் நானும் இறைதூதர் ஆகிவிடுவேன்! பரவாயில்லையா!?//

ஆகா மறைமுகமாக ஒத்துகொள்கிரீர்கள் உங்களுடையதும் கற்பனை என்பதை?

//பாலூட்டிகள் கரு உற்பத்தி ஆகும் போது ஆணா, பெண்ணா என்று முடிவு செய்வதில்லை, அதன் பின்னே மாறுகிறது, சந்தேகம் இருந்தால் மருத்துவரை கேட்டு தெரிந்து கொள்ளவும்!//

உடலுறவின் போது ஆணின் 23 குரோமோசோம்களும் பெண்ணின் 23 குரோமோசோம்களும் இணையும் 23 வது குரோமோசோம்கலான பாலின குரோமோசோம்கள் தான் ஆணா இல்லை பெண்ணை என்பதை முடிவு செய்யும். இந்த செய்தி கரு உருவாகக்கூடிய நேரத்தில் உருவாகக்கூடிய குருத்தனுவில் பதிந்து இருக்கும், இவைகள் குரோமோசோம்கள் சேர்கயிலயே தெரிந்து விடும், மனிதன் அறிய வாய்ப்பு இல்லை, நல்ல மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

//அதில் ஏற்பட்ட மரபணு சிக்கல் தான் அரவாணிகள்!
படைப்புவாதபடி ஆதாம், ஏவாள் என்ற இருபால் தானே, அரவாணிகள் யாரால் படைக்கபட்டது தோழரே!//

மரபணுவில் பிழைகள் ஏற்படும் போது உயிரின் தோற்றம் சிதையும், வேறு உயிராக மாறாது இதற்கு உதாரணம் அரவாணிகள் தான், அதுவும் ஒரு குறையே தவிர வேறு ஒரு உயிர் இல்லை. கை கால்கள் ஊனமாக இருந்தால் கூட வேறு ஒரு படைப்பு என்பீரோ?

//ஏற்கனவே சொன்னது தான், மதபுத்தகத்தை விட என் கற்பனை சிறந்தது என்றால் நான் தான் அடுத்த இறைத்தூதர்!//

ஆகா இறைதூதர் ஆகலாம் என்று முடிவு எடுத்துவிட்டீர்கள், வெறும் கற்பனை திறன் பத்தாது, மதங்களை மிஞ்சிய சட்ட திட்டங்களை உங்களால் இயற்ற முடியுமா??
பரிணாமம் என்பது அறிவியல் பூர்வமாகவும் ஏற்கமுடியாத ஒரு கட்டுக்கதை என்பதை என்னுடைய முதல் பதிவில் இட்ட விளகத்திர்கே இன்னும் பதில் வரவில்லை, ஒரு வேலை தயாரித்து கொண்டு இருக்கிறிரோ??

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

@ கார்பன் கூட்டாளி...
///பின்நூட்டமிடுபவர்களை முதலில் திட்டி, அதற்கு அவர்கள், தாங்கள் சொன்னது சரி என்று ஆதாரங்களுடன் சொல்லும்போது அந்த/மற்றவரின் பின்னூட்டங்கள் மூலவாகவே நான் என் அறிவை பெறுவேன்'/// ---நான் சொன்னதை மெய்ப்பிக்க வந்துவிட்டீர்களே... வாலை எல்லாம் தலையாக மாற்ற வேண்டும் என்ற அவசியம் உங்களுக்கு இல்லை. வால் வாலாகவே இருந்துவிட்டு போகட்டுமே... வாலில்தான் பகுத்தறிவு என்ற சிந்திக்கும் மூளை இருக்கிறது என்று வால் சொன்னால் இருந்துவிட்டுத்தான் போகட்டுமே. தலை என்று மெய்ப்பித்துக்காட்டவேண்டிய அவசியம் நமக்கு இல்லையே. படிக்காத பகுத்தறிவற்ற குடிகாரனின் பரிணாமம் எது என்றால் வால்பையன்தான் என்று தெரிந்து கொள்வோம்...

Mythees said...

:)

வால்பையன் said...

//படிக்காத பகுத்தறிவற்ற குடிகாரனின் பரிணாமம் எது என்றால் வால்பையன்தான் என்று தெரிந்து கொள்வோம்...//

பன்னிப்பயலே உன் காசிலா நான் குடித்தேன்!, உனக்கு பதில் சொல்ல தெரியலைனா எங்கேயாவது பன்னி மேய்க்க போக வேண்டியது தானே!

உனக்கு புரோபைலும் இல்ல, அடையாளமும் இல்ல! நீயெல்லாம் என்னை சொல்ல வந்துட்ட! சோத்ததானே திங்கிற, இல்ல வேறெதையுமா!, தெரியலைன்னா மூடிகிட்டு போக வேண்டியது தானே!

Unknown said...

//நான் சொன்னதை மெய்ப்பிக்க வந்துவிட்டீர்களே... வாலை எல்லாம் தலையாக மாற்ற வேண்டும் என்ற அவசியம் உங்களுக்கு இல்லை. வால் வாலாகவே இருந்துவிட்டு போகட்டுமே...//

நண்பரே, யாரையும் யாராகவும் மாற்றவேண்டிய அவசியம் எனக்கு இல்லை, ஆனால் அவருடைய கருத்துக்கள் கற்பனை என்பதை முறையான ஆதாரங்களை வைத்து நிரூபிக்க வேண்டும், அவர் அதை ஏற்று கொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டாலும், பின்னோட்டம் இடும் அனைவரும் 6 அறிவோடுதான் இருக்கிறார்கள், நடுநிலையானவர்கள் நடுநிலையோடு சிந்திப்பார்கள்.

//வாலில்தான் பகுத்தறிவு என்ற சிந்திக்கும் மூளை இருக்கிறது என்று வால் சொன்னால் இருந்துவிட்டுத்தான் போகட்டுமே.//

அவர் ஆதாரத்துடன் குறுப்பிடுவாரானால் அதையும் கார்பன் கூட்டாளி ஏற்று கொள்வான். இல்லையேல் நம்முடைய நாகரிகமான விமர்சனத்தை நடுநிலையாளர்கள் ஏற்றுகொள்வார்கள்.

வால்பையன் said...

//செல்கள் நகலெடுப்பது இனப்பெருக்கம் என்று உங்களுக்கு யார் சொன்னது? உங்களுடைய செல் நகலெடுக்க பட வில்லை எனில் கருவிலயே இருந்துருப்பீர். நீங்கள் வளர்ந்தீர இல்ல இனப்பெருக்கம் அடைந்தீர?
அதிலும் குருத்தனு மட்டுமே நகலெடுக்கும்,//


ஆதியில் இருந்த ஒரு செல் உயிரிகள் நகலெடுத்தே தன் இனபெருக்கம் செய்தன, இன்றும் அவை இனபெருக்கம் செய்வதாலே வளர்ச்சி அடைகிறது உயிரினம், நான் மட்டும் மட்டுமல்ல, அனைவருமே ஒரு செல்லிலிருந்து வளர்ந்தவர்கள் தான்!

//உங்களுடைய வாதப்படி அமீபாவிற்கும் அறிவு இருக்கு என்று கூறுகிறீரா?
அனைத்து விலங்கிற்கும் பசி தான் வளர்ச்சிக்கு காரணம்? பசி இல்லாத செல்களை யார் வளர்த்தது?//

அந்தந்த உயிரினம் அதன் தேவைகேற்ப அறிவை பெற்றுள்ளன, செல்கள் திட உணவை தான் உணவாக எடுத்து கொள்ளவேண்டும் என அவசியமில்லையே, அது காற்றிலிருந்து உணவை எடுத்து கொள்ளலாமே!

//ஆறே நாளில் உலகமும், உயிரினங்களும் படைக்கபட்டது என்பதை விட என் கற்பனை நல்ல கற்பனை என்றால் நானும் இறைதூதர் ஆகிவிடுவேன்! பரவாயில்லையா!?//

ஆகா மறைமுகமாக ஒத்துகொள்கிரீர்கள் உங்களுடையதும் கற்பனை என்பதை?//

நீங்கள் நேரடியாகவே ஒப்புகொள்கிறீர் வேத புத்தகம் அனைத்தும் கற்பனை தான் என்று!

வால்பையன் said...

//உடலுறவின் போது ஆணின் 23 குரோமோசோம்களும் பெண்ணின் 23 குரோமோசோம்களும் இணையும் 23 வது குரோமோசோம்கலான பாலின குரோமோசோம்கள் தான் ஆணா இல்லை பெண்ணை என்பதை முடிவு செய்யும். இந்த செய்தி கரு உருவாகக்கூடிய நேரத்தில் உருவாகக்கூடிய குருத்தனுவில் பதிந்து இருக்கும், இவைகள் குரோமோசோம்கள் சேர்கயிலயே தெரிந்து விடும், மனிதன் அறிய வாய்ப்பு இல்லை, நல்ல மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.//

ஆணின் அணுக்கள் தமது வேலையை ஆரம்பிக்கும் முன்னரே கரு வளர்ச்சியடைக்கிறது என்கிறேன், நல்ல மருத்துவர் சொன்னது தான் இது!


//மரபணுவில் பிழைகள் ஏற்படும் போது உயிரின் தோற்றம் சிதையும், வேறு உயிராக மாறாது இதற்கு உதாரணம் அரவாணிகள் தான், அதுவும் ஒரு குறையே தவிர வேறு ஒரு உயிர் இல்லை. கை கால்கள் ஊனமாக இருந்தால் கூட வேறு ஒரு படைப்பு என்பீரோ?//

மரபணு பிழையால் ஏற்படும் மாற்றம் தெரிய லட்சம் வருடங்கள் கூட ஆகலாம் தோழரே!, கைகால் ஊனமாக என்றல்ல, சில உயிரினங்கள் கண் பார்வையை இழந்து அதற்கு பதிலாக வேறு புலனின் ஆதிக்கத்தை பெறுகின்றன!

//மதங்களை மிஞ்சிய சட்ட திட்டங்களை உங்களால் இயற்ற முடியுமா??
பரிணாமம் என்பது அறிவியல் பூர்வமாகவும் ஏற்கமுடியாத ஒரு கட்டுக்கதை என்பதை என்னுடைய முதல் பதிவில் இட்ட விளகத்திர்கே இன்னும் பதில் வரவில்லை, ஒரு வேலை தயாரித்து கொண்டு இருக்கிறிரோ?? //


சட்டதிட்டம் அரசாங்கம் கூட தான் இயற்றுது, அது என்ன கடவுள் வேதமா!?
உங்கள் விளக்கத்திற்கான பதில்கள் தான் தொடராக வந்து கொண்டிருக்கிறது!

வால்பையன் said...

//பின்னோட்டம் இடும் அனைவரும் 6 அறிவோடுதான் இருக்கிறார்கள், நடுநிலையானவர்கள் நடுநிலையோடு சிந்திப்பார்கள்.//

நானும் இதை வழிமொழிகிறேன், நான் எழுதுவதை விவாதபொருளாக தான் வைத்திருகின்றேனே தவிர, நான் சொல்வது மட்டுமே உண்மை என்று எங்கேயும் சொல்லவில்லை!


//அவர் ஆதாரத்துடன் குறுப்பிடுவாரானால் அதையும் கார்பன் கூட்டாளி ஏற்று கொள்வான்.//

சாத்தியகூறுகளின் தேடலே என் வேலையும்!

Unknown said...

///ஆணின் அணுக்கள் தமது வேலையை ஆரம்பிக்கும் முன்னரே கரு வளர்ச்சியடைக்கிறது என்கிறேன், நல்ல மருத்துவர் சொன்னது தான் இது!///(?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?)
---யார் அந்த "நல்ல(?)மருத்துவர்" என்று நான் கேட்கமாட்டேன். கார்பன் கூட்டாளி கேட்டாலும் கேட்பார்....

//உனக்கு 'மண்டையும்' இல்ல, 'மூளையும்' இல்ல! நீயெல்லாம் என்னை சொல்ல வந்துட்ட! சோத்ததானே திங்கிற, இல்ல வேறெதையுமா!, தெரியலைன்னா மூடிகிட்டு போக வேண்டியது தானே!//---ஆறாவது படிக்கும் மாணவர் சொல்வார் உங்களைப்பார்த்து இந்த பதிலுக்காக...

....ம்ம்ம்ம்...

எனக்கிது தேவையா?

Unknown said...

//அந்தந்த உயிரினம் அதன் தேவைகேற்ப அறிவை பெற்றுள்ளன, செல்கள் திட உணவை தான் உணவாக எடுத்து கொள்ளவேண்டும் என அவசியமில்லையே, அது காற்றிலிருந்து உணவை எடுத்து கொள்ளலாமே!//

ஆதாரத்துடன் நிரூபித்தல் ஏற்றுக்கொள்ளலாம்.

//நீங்கள் நேரடியாகவே ஒப்புகொள்கிறீர் வேத புத்தகம் அனைத்தும் கற்பனை தான் என்று!//

இல்லை கற்பனையும் உண்மையும் கலந்தது.

//சட்டதிட்டம் அரசாங்கம் கூட தான் இயற்றுது, அது என்ன கடவுள் வேதமா!?//

அரசாங்கங்களே மத சட்டத்தை தான் அடிப்படையாக வைத்து செயற்படுகிறது.

//மரபணு பிழையால் ஏற்படும் மாற்றம் தெரிய லட்சம் வருடங்கள் கூட ஆகலாம் தோழரே!, கைகால் ஊனமாக என்றல்ல, சில உயிரினங்கள் கண் பார்வையை இழந்து அதற்கு பதிலாக வேறு புலனின் ஆதிக்கத்தை பெறுகின்றன//

அறிவியலால் நிரூபிக்கப்படவில்லை.

மங்குனி அமைச்சர் said...

நிறையா படிப்பிங்க போல வால்ஸ் , நிறைய மெசேஜ் கலக்ட் பண்ணிருக்கிங்க

அன்புடன் நான் said...

சில தாவர இனத்தில்... விதையும் இருக்கு, அதேதாவரத்த் வெட்டி நட்டாலும் காய்க்கிறது எப்படி?

செங்கொடி said...

பரிணாமம் குறித்து மிக எளிமையாக கூறிவருகிறார்கள். சிற்ப்பாக இருக்கிறது, தொடருங்கள்.

செங்கொடி

hiuhiuw said...

//சில தாவர இனத்தில்... விதையும் இருக்கு, அதேதாவரத்த் வெட்டி நட்டாலும் காய்க்கிறது எப்படி?

//


வெட்டி நட்டாலும் வளருதா? கொடுத்து வெச்ச மவராசன் நீங்க!

வால்பையன் said...

//மங்குனி அமைசர் said...

நிறையா படிப்பிங்க போல வால்ஸ் , நிறைய மெசேஜ் கலக்ட் பண்ணிருக்கிங்க//


நிறைய விவாதிப்பேன், படித்ததை மட்டும் பகிர்ந்து கொண்டால், கேள்விக்கு பதில் சொல்ல முடியாதே!

வால்பையன் said...

//சி. கருணாகரசு said...

சில தாவர இனத்தில்... விதையும் இருக்கு, அதேதாவரத்த் வெட்டி நட்டாலும் காய்க்கிறது எப்படி?//


நகலெடுக்கும் ஆதி இனபெருக்க முறை தான் வெட்டி நடுவது, தாவரசெல்லுக்கு அது இன்னமும் சாத்தியமாகிறது, விலங்கு செல்லில் நட்சத்திரமீனுக்கு மட்டும் சாத்தியம்!

வால்பையன் said...

//செங்கொடி said...

பரிணாமம் குறித்து மிக எளிமையாக கூறிவருகிறார்கள். சிற்ப்பாக இருக்கிறது, தொடருங்கள்.//


நன்றி தோழர்!

Anonymous said...

ஆணி போய், ஆடி போய், ஆவணி போன டாப்பா வருவே...அதுவரைக்கும் இப்படிதான் உளறுவ.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல முயற்ச்சி... நல்ல இடுக்கை... இன்னும் சற்று சொல்லியிருக்கலாமோ.....

ஆ.ஞானசேகரன் said...

நான் ஒண்ணுமே சொல்லலங்கோ.உங்க எல்லாருக்கும் சொல்லச் சொல்லி ஒரு நியூஸ் வந்திருக்கு.சொல்லிட்டேன் ஆளை விடுங்க !

ஆ.ஞானசேகரன் said...

நான் ஒண்ணுமே சொல்லலங்கோ.உங்க எல்லாருக்கும் சொல்லச் சொல்லி ஒரு நியூஸ் வந்திருக்கு.சொல்லிட்டேன் ஆளை விடுங்க !

DR said...

@ஆ ஞானசேகரன் " இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாமோ"

இன்னைக்கு ஆரம்பிச்சு நாளைக்கு முடியிர கதை இல்லை இது. அவரு எப்போ எப்போ கண்டுபுடிக்கிறாரோ அப்போ எல்லாம் எழுதுவாரு. நீங்க இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வச்சிராதீங்க...

வால், நீங்க எழுதுங்க...

Unknown said...

ரெண்டுமே நல்லா டேஸ்ட்டாதானே இருக்கும். என்ன பிரச்சினை.... ;)

Ashok D said...

முட்டையில் பொடிமாஸும்... கோழியில் தந்தூரியும்.. சாப்பிட சுவையானவை... உடலுக்கு ஆராக்கியமானவையும் கூட

virutcham said...

பரிணாமம் குறித்த உங்கள் பதிவுகள் படித்தேன். அதிரடி பதிவுகள்( கொஞ்சம் அடாவடி , கொஞ்சம் கொச்சை ) தான் எழுதுவீர்கள் என்ற என் எண்ணம் மாறியது.
பரிணாமம் பற்றி எழுதும் போது அடுத்த பதிவுகளில் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அதாவது ஒரு உயிரினம் வாழ்வை தக்க வைத்துக் கொள்ள காலப் போக்கில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொண்டது என்று சொல்லும் போது அதன் மாற்றங்கள் நிகழ்ந்த காலங்களாகச் சொல்லப் படுவது நம் மனித இனத்தை பற்றிய வரலாறுக்கு ரொம்ப.... முந்தையது.
கடவுளை காட்டு நம்புகிறேன் என்று சொல்லும் ஒரு கடவுள் மறுப்பாளனின் அதே போன்றே கேள்வியை இந்த மாற்றங்களைக் காட்டு நம்பறேன் என்று சொல்லும் கடவுள் நம்பிக்கையாளனுக்கும் கேட்க உரிமை இருக்கு இல்லையா? ஆதாரம் என்று சொல்லும் போது ethiopia போன்ற நிலப் பரப்புகளில் கண்டெடுத்த fossils ஒருங்கிணைக்கப்பட்டு விஞ்ஞானம் கொடுக்கும் விளக்கங்கள் ஏன் மனித இனம் அறியப்பட்ட இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் ஒரு பெரும் மாற்றம் நிகழவில்லை என்பதற்கு பதில் ஆகாது.

கடவுளை உன்னையும் என்னையும் போலப் பார்த்தேன் நீயும் பார் என்றே ராமகிருஷ்ணர் விவேகானந்தர் duo வாழ்ந்த காலம் இந்த விஞ்ஞான விளக்க theories -ஐ விட வெகு சமீபம் என்பதால் விஞ்ஞானம் கொஞ்சம் வளரட்டுமே. இந்த இடைவெளி நிரப்பப் படும் போது அது புரியும்.

மேலும் energy can neither be created nor destroyed என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உயிர் என்று நம் உடலில் இருப்பது என்ன? அது வெறும் காற்றா, அதை உடலில் தக்க வைக்கும் அந்த சக்தி எது? உயிர்களின் ஆயுள் என்பதில் இருக்கும் நிலையற்ற தன்மை இதையும் கருத்தில் கொண்டு எழுதும் போது தான் பரிணாமம் நாத்திகம் சரியாக விளங்கும்

virutcham said...

பரிணாமம் குறித்த உங்கள் பதிவுகள் படித்தேன். அதிரடி பதிவுகள்( கொஞ்சம் அடாவடி , கொஞ்சம் கொச்சை ) தான் எழுதுவீர்கள் என்ற என் எண்ணம் மாறியது.
பரிணாமம் பற்றி எழுதும் போது அடுத்த பதிவுகளில் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அதாவது ஒரு உயிரினம் வாழ்வை தக்க வைத்துக் கொள்ள காலப் போக்கில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொண்டது என்று சொல்லும் போது அதன் மாற்றங்கள் நிகழ்ந்த காலங்களாகச் சொல்லப் படுவது நம் மனித இனத்தை பற்றிய வரலாறுக்கு ரொம்ப.... முந்தையது.
கடவுளை காட்டு நம்புகிறேன் என்று சொல்லும் ஒரு கடவுள் மறுப்பாளனின் அதே போன்றே கேள்வியை இந்த மாற்றங்களைக் காட்டு நம்பறேன் என்று சொல்லும் கடவுள் நம்பிக்கையாளனுக்கும் கேட்க உரிமை இருக்கு இல்லையா. ஆதாரம் என்று சொல்லும் போது ethiopia போன்ற நிலப் பரப்புகளில் கண்டெடுத்த fossils ஒருங்கிணைக்கப்பட்டு விஞ்ஞானம் கொடுக்கும் விளக்கங்கள் ஏன் மனித இனம் அறியப்பட்ட இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் ஒரு பெரும் மாற்றம் நிகழவில்லை என்பதற்கு பதில் ஆகாது.

கடவுளை உன்னையும் என்னையும் போலப் பார்த்தேன் நீயும் பார் என்றே ராமகிருஷ்ணர் விவேகானந்தர் duo வாழ்ந்த காலம் இந்த விஞ்ஞான விளக்க theories -ஐ விட வெகு சமீபம் என்பதால் விஞ்ஞானம் கொஞ்சம் வளரட்டுமே. இந்த இடைவெளி நிரப்பப் படும் போது அது புரியும்.

மேலும் energy can never be created nor destroyed என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உயிர் என்று நம் உடலில் இருப்பது என்ன? அது வெறும் காற்றா, அதை உடலில் தக்க வைக்கும் அந்த சக்தி எது? உயிர்களின் ஆயுள் என்பதில் இருக்கும் நிலையற்ற தன்மை இதையும் கருத்தில் கொண்டு எழுதும் போது தான் பரிணாமம் நாத்திகம் சரியா புரியும் இல்லையா ?

virutcham said...

பரிணாமம் குறித்த உங்கள் பதிவுகள் படித்தேன். அதிரடி பதிவுகள்( கொஞ்சம் அடாவடி , கொஞ்சம் கொச்சை ) தான் எழுதுவீர்கள் என்ற என் எண்ணம் மாறியது.
பரிணாமம் பற்றி எழுதும் போது அடுத்த பதிவுகளில் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அதாவது ஒரு உயிரினம் வாழ்வை தக்க வைத்துக் கொள்ள காலப் போக்கில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொண்டது என்று சொல்லும் போது அதன் மாற்றங்கள் நிகழ்ந்த காலங்களாகச் சொல்லப் படுவது நம் மனித இனத்தை பற்றிய வரலாறுக்கு ரொம்ப.... முந்தையது.
கடவுளை காட்டு நம்புகிறேன் என்று சொல்லும் ஒரு கடவுள் மறுப்பாளனின் அதே போன்றே கேள்வியை இந்த மாற்றங்களைக் காட்டு நம்பறேன் என்று சொல்லும் கடவுள் நம்பிக்கையாளனுக்கும் கேட்க உரிமை இருக்கு இல்லையா? ஆதாரம் என்று சொல்லும் போது ethiopia போன்ற நிலப் பரப்புகளில் கண்டெடுத்த fossils ஒருங்கிணைக்கப்பட்டு விஞ்ஞானம் கொடுக்கும் விளக்கங்கள் ஏன் மனித இனம் அறியப்பட்ட இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் ஒரு பெரும் மாற்றம் நிகழவில்லை என்பதற்கு பதில் ஆகாது.

கடவுளை உன்னையும் என்னையும் போலப் பார்த்தேன் நீயும் பார் என்றே ராமகிருஷ்ணர் விவேகானந்தர் duo வாழ்ந்த காலம் இந்த விஞ்ஞான விளக்க theories -ஐ விட வெகு சமீபம் என்பதால் விஞ்ஞானம் கொஞ்சம் வளரட்டுமே. இந்த இடைவெளி நிரப்பப் படும் போது அது புரியும்.

மேலும் energy can neither be created nor destroyed என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உயிர் என்று நம் உடலில் இருப்பது என்ன? அது வெறும் காற்றா, அதை உடலில் தக்க வைக்கும் அந்த சக்தி எது? உயிர்களின் ஆயுள் என்பதில் இருக்கும் நிலையற்ற தன்மை இதையும் கருத்தில் கொண்டு எழுதும் போது தான் பரிணாமம் நாத்திகம் சரியாய் புரியும் இல்லையா ?

virutcham said...

Error


Request-URI Too Large
The requested URL /comment.g... is too large to process.

---
I repeatedly get this error. Not sure if my comment got submitted.
If it got submitted don't get annoyed for submitting it multiple times

மார்கண்டேயன் said...

//எனக்கு இரண்டாவது வகுப்பெடுத்த டீச்சர் +2 தான்//

இரண்டாவதிலேயே, ஆசிரியர் என்ன படித்திருக்கிறார் என்ற அளவிற்கு சிந்தனை விரிந்திருப்பது ஆச்சர்யமே,
இந்த அளவிற்கு விரிந்த சிந்தனையோடு ஒன்பதாம் வகுப்பு வரை பொறுமையுடன் பள்ளியில் படித்தது அதை விட ஆச்சர்யமே,

இனி உங்கள் பாணியில்,

ரெண்டாப்புலேயே, வாத்யாரம்மா என்ன படிச்சிர்காங்கன்னு 'பரிமாண ? / பரிணாம' ஆராய்ச்சி பண்ணிர்கத தெரிஞ்சுக்கும் போது . . .
நல்ல வேல சாமியோவ், ஒன்பாதாவதோட நிறுத்திட்டீங்க . . .
இல்லேன்னா . . . நான் ஏன் மேற்கொண்டு படிக்கவில்லைன்னு ஒரு ப்ளாக் உருவாயிர்க்கும்

Unknown said...

//மேலும் energy can neither be created nor destroyed என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். //

மாற்றுக்கருத்து இல்லாமல் ஏற்று கொள்ள வேண்டிய கருத்து. யாராலும் எந்த ஒரு பொருளையும் புதிதாக ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது, அப்படியெனில் இவ்வுலவும் முழுவதையும் உருவாக்கியது யார்?

ஆறு அறிவு உள்ள மனிதனாலேயே ஒரு சிறு பொருள் கூட உருவாக்கமுடியவில்லை எனில் ஆறு அறிவுள்ள மனிதனை உருவாக்கியது யார்?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

///கடவுளை காட்டு நம்புகிறேன் என்று சொல்லும் ஒரு கடவுள் மறுப்பாளனின் அதே போன்றே கேள்வியை இந்த மாற்றங்களைக் காட்டு நம்பறேன் என்று சொல்லும் கடவுள் நம்பிக்கையாளனுக்கும் கேட்க உரிமை இருக்கு இல்லையா?///

கலக்குறீங்க போங்க...

virutcham said...

http://www.virutcham.com/?p=3571
எனக்குப் பிடித்த பதிவுகளில் உங்களின் இந்தப் பதிவையும் சேர்த்து இருக்கிறேன்.

!

Blog Widget by LinkWithin