பரிணாமம்-எதிர்வினை உரையாடல்!

9:14 PM R@ng@: unga post-la oru chinna hole irukku

21 minutes
9:36 PM me: எங்கே?
  R@ng@: வளர்ச்சி என்கிற இடத்தில்
9:37 PM நான் ஒரு புது வகையான கண்ணோட்டத்தில் அதை பார்க்கிறேன் 
9:41 PM  me: எப்படி? 
 R@ng@: பெரிசா இருக்கும் பரவாயில்லையா? 
9:42 PM சரி..சொல்றேன்.. 
9:45 PM சொல்லவா? 
9:46 PM me: தாரளமா 
 R@ng@: இரண்டாம் உலகப்போர் நடந்த காலம் அப்போ பிலிப்பைன்ஸ் தீவுகளில் போர் விமானங்கள் அவசரகதியில் தரையிறக்கப்பட்டன..
    
அங்கே குடியிருந்த ஆதிவாசி மக்கள் அவர்களை கடவுள் என்று நினைத்துகொண்டனர்..அந்த வீரர்களின் வெள்ளை தோல், அவர்கள் இதற்கு முன் பார்த்திறாத பறக்கும் விமானங்கள்...அவர்கள் கொடுத்த அறுசுவை உணவுகள் என்று..போர் முடியும் வரை அந்த மக்கள் அந்த விமானிகளையும் போர்வீரர்களையும் கடவுளாகவே பார்த்தனர்..
    
போர் முடிந்து..அவர்கள் கிளம்பி சென்ற பிறகும், அவர்கள் நினைவாய் சின்னங்கள், விமான பொம்மைகளை உருவாக்கி வழிபட ஆரம்பித்துவிட்டனர்..இப்போதும் அந்த சிலைகளும், விமான பொம்மைகளும் அங்கு உள்ளன..!!
  சாப்டு வரேன் 
9:47 PM me: இதற்கும் பரிணாம வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? 

38 minutes
10:26 PM R@ng@: அந்த பிலிப்பைன்ஸ் என்கிற வார்த்தைக்கு பதிலா..பூமி கிரகம் என்கிற வார்த்தைய போட்டு பாருங்க 
10:27 PM me: போட்டு 
10:28 PM R@ng@: ஆமாங்க..அப்போ புதுசா ஒரு விளக்கம் கிடைக்கும் 
 me: :)
  நாமளா சொல்லிக்க வேண்டியது தான்
  புதிய பொருள்களை அதுவும் பறக்கும் ஒன்றை பார்த்ததனால் அவர்கள் பயந்தார்கள்
  ஆதி மனிதன் நெருப்புக்கும், மின்னலுக்கும் பயந்தா மாதிரி 
10:29 PM R@ng@: :)
  அப்படி பயந்து கிடந்த மனிதர்களை எது உசுப்பிவிட்டது? 
10:30 PM me: அவைகளை கட்டுபடுத்த முடிந்த போது
  உதாரணமாக நெருப்பு 
10:31 PM R@ng@: உண்மை..ஒத்துக்கறேன்..அப்படியே இருந்தாலும்..அவர்கள் வளர்ச்சி..இப்போதைய ஆப்பிரிக்க பழங்குடிகளாகவே இருந்திருக்கணும்..எப்படி நாகரிங்களா பிரிந்தது? 
 me: சும்மா இல்லப்பா
  40000 வருடங்கள் ஆச்சு அதற்கு 
10:33 PM R@ng@: சரி..20000 வருடங்களுக்கு முந்தைய நாகரிகம் எகிப்தியத்தை எடுத்துக்குவோம்..அவர்களுக்கு எப்படி பிரிமிடை கட்டும் அளவுக்கு அறிவு வந்தது..(இந்த காலத்து கட்டிட வல்லுனர்களே கட்ட தயங்கும் ஒரு விஷயத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்) 
10:34 PM me: பிரமீடுக்கு வயசு 20000 ம்னு யார் சொன்னது? 
 R@ng@: நான் எகிப்தியத்தின் வயதை தான் 20000ம்முன்னு சொன்னேன்..பிரமிடை அல்ல..அல்ல.. 
10:35 PM me: அரசனுக்கு மரியாதை தர தேவைபட்ட பிரமாண்டமோ பிரமீடு
  இப்போது கட்டதயங்கும் என்ற வார்த்தை மிகை,
  இப்போதும் முடியும் 
10:37 PM R@ng@: முடியும்..அனால் அதற்கு ஆகும் பொருட்செலவும் , உழைப்பும் 120 எம்பயர்ஸ்டேட் பில்டிங்குகள் கட்ட ஆகும் செலவினங்களுக்கு சமம்
  அதான் தயங்குகிறார்கள்.. 
 me: இன்று பணம் என்ற மதிப்பு இருக்கு 
10:38 PM ஒவ்வொரு பொருளுக்கும் விலை இருக்கு
  அன்று என்ன இருந்தது!? 
 R@ng@: பொருளாதாரம் இல்ல பாஸ்.நான் பேச வரது டெக்னாலஜி 
10:39 PM me: டெக்னாலஜி என்பது துறை சார்ந்தது அல்லவா! 
10:40 PM இன்று மத்த துறையிலும் மனிதன் முன்னேறியுள்ளான்
  பிரமீடு கட்டிடக்கலையின் ஆரம்பம் 
10:41 PM R@ng@: சரி..நீங்கள் ஒரு பில்டிங் இன்சினியராக விரும்புகிறீர்கள்..அப்போ பிறந்த உடனே இன்ஜினியார்கிடுறீங்களா? 
10:42 PM me: படிப்படியாக தானப்பா பிரமீடு உருவாச்சு
  அதற்கு முன் இருந்த சிறிய கட்டிடங்கள் காலத்தால் அழிஞ்சு போச்சு
  ரங்க்ஸ் நீங்க குழந்தையா இல்ல
  நடிக்கிறிங்களா?
  பிரமீடு மட்டுமே கட்டினான் எகிப்தியன் என்று எங்கேயாவது இருக்கா
  அவன் என்ன பிரமீடுகுள்ளவா வாழ்ந்தான் 
10:46 PM R@ng@: குரங்குகள் இன்னும் ஏன் குரங்குகளாகவே இருக்கின்றன 
 me: அடடே!
  ப்ரிணாம வளர்ச்சி என்பது சொடுக்கிடும் நேரத்தில் நடப்பதில்லை
  அவைகளின் மாற்றம் நம் வாழ்நாளில் கண்டுபிடிக்க முடியாது
10:47 PM அண்ணே அனைத்தும் விரிவாய் பதிவில் வரும் அண்ணே 
 R@ng@: சொல்லிதராமல் நீங்கள் இந்த கணினியில் டைப் பண்ணி இருக்க முடியுமா? 
 me: நீங்க என்னைய கிறுக்காக்குற மாதிரி எனக்கு தெரியுது!
  வேணும்னே கலாய்க்கிறிங்க 
 R@ng@: இல்ல பாஸு
  நான் கண்டுகிட்டதை சொல்றேன்..அவ்வளவே
10:48 PM ஒரு சொல்லிதரல்..ஒரு தூண்டுகோல் தான் நம்மை ஆதிவாசிகளில் இருந்து நகர வாசிகளாக மாற்றி இருக்கிறது.. 
 me: தூண்டுகோலும் கிடையாது மண்னாங்கட்டியும் கிடையாது
10:49 PM வாழும் தேவையை பூர்த்தி செய்ய அவனுக்கு தேவையானதை உருவாக்கி கொண்டான்! 
10:50 PM R@ng@: அப்படியே ஆகட்டும் 
 me: அப்படித்தான் ஆச்சு
  எல்லாமே காடு தான் முதலில் 
 R@ng@: everthing has some probablity 
 me: அழித்து தான் நகரம் உருவாச்சு
10:51 PM தமிழ் தமிழ் 
 R@ng@: எல்லாவற்றிக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு வாய்ப்புகள் உண்டு 
10:52 PM me: தகுதியுள்ளது பிழைக்கும்
  வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுதல் தகுதி வாய்ந்தது 
 R@ng@: புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிகாண்பதில்லை
  வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
10:53 PM மனிதன் ஒரு காட்டு விலங்கு..அவனுக்கு எதோ ஒரு தூண்டுகோல் கிடைத்ததால் தான் அவன் வளர்ந்தான்..இல்லையேல் நாகரிகமாவது மண்ணாங்கட்டியாவது..இது என் வாதம் 
10:55 PM me: என்ன தூண்டுகோல்னு சொல்லுங்க
  புத்தியுள்ளன்னு ஒரு பாட்டு பாடினா அது உண்மையாயிரும்மா
  தத்துவம் என்பதே ஒரு பேத்தல்
10:56 PM அதுவும் கடவுள் மாதிரி நம்பிக்கை சார்ந்ததே 
 R@ng@: டார்வினிஸமும் அப்போ பேத்தல் தான் 
 me: இருக்கலாம்
  உரையாடல் உறுதி செய்ய அல்லவே,
  சிந்திப்போம் 
 R@ng@: ம்ம்..நான் தூண்டுகோல்னு சொல்றது 
10:57 PM me: சொல்றது? 
 R@ng@: வேற்று கிரக மனிதர்களை..(ஜீவராசிகளை)ன்னு வெச்சிக்கலாம் 
 me: :)
10:58 PM இருக்கலாம் 
 R@ng@: நான் முதன்முதலில் கூறிய அந்த பிலிப்பைன்ஸ் விஷயத்தை ஒப்பிட்டு பாருங்கள்.. 
 me: சாத்தியகூறுகளை ஆராய்ந்து பதிவிடுங்கள்
  ஒப்பீடு சாத்தியகூறு ஆகாது 
10:59 PM R@ng@: பலர், பல விதங்களின் ஆராய்ந்துவிட்டு, இன்று அவர்கள் அமெரிக்க அரசையே கேள்விகேட்கும் அளவிற்கு வந்துவிட்டார்கள்
  இந்த சங்கதி தெரியுமா?
11:00 PM அவர்களின் கேள்வி “ஏன் இன்னும் வேற்றுகிரக வாசிகள் பற்றிய உண்மைகளை மக்களிடம் இருந்து மறைக்கிறீர்கள்?” என்பதே 
 me: இருந்தே தானே மறைக்க? 
 R@ng@: பல லட்சம் பேருக்கு இவைகள் இருப்பது தெரியும்..நம் இஸ்ரோவுக்கும் கூட..!! 
11:01 PM me: :)
  அந்த பல லட்சத்தில் நீங்களும் ஒருவரா? 
 R@ng@: வாய்ப்புகள் அடிப்படையில் ஏற்றுகொள்கிறேன்
11:03 PM என் கருத்து படி பார்த்தால் நாம் வணங்குவது வேற்றுகிரக மனிதர்களையொ என்று கூட தோன்றுகிறது? 
 me: சாத்தியகூறுகள் என்னன்னா சொன்னா நானும் தெரிஞ்சுகுவேன்
  பல லட்சம் பேர் நம்புறாங்ககிறதுக்காக நான் எந்த மதத்தையும் ஏற்கலையே
  கடவுளுக்கு என்ன சாத்தியம்னு கேள்வி கேக்குறேனே
  நீங்களாவது சொல்லுங்க 
11:04 PM R@ng@: உங்களை சுற்றி லட்சம் ஆடுகள் நின்னுகிட்டு இருந்தா நீங்க சிங்கம் இல்லைன்னு ஆகிடுமா?
  கடவுள் இப்போ பிரச்சனை இல்லை..பிரச்சனை Origin of Human Culture 
11:05 PM me: அதற்கு தான் சாத்தியகூறுகள் கேட்கிறேன்
  சரியா சொன்னா ஏத்துக்க போறேன் 
11:06 PM R@ng@: சாத்தியக்கூறை சொல்லவா? இல்லை ஒரு விஷயத்தை தேடி பாக்குறீங்களா?
  How Nasca Lines used? னு தேடி பாருங்க
  கூகுள் பண்ணவும் 
 me: உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்
  தமிழில் சொல்லுங்க
 R@ng@: நாஸ்கா லைன்கள் என்பது தென் ஆப்பிரிக்க கண்டத்தில் அர்ஜெண்டினா நாட்டில் உள்ள பாலைவனத்தில் காணப்படும் மிகப்பெரிய ஓவியங்கள் மற்றும் கோடுகள் 
11:08 PM me: அவை மனிதனால் உருவாக்கப்பட்டவைகள் தான் 
11:09 PM R@ng@: ஆமாம்
  ஆனால் ஒரு விஷயம் என்னவென்றால்..அவகளை 12000 அடி உயரத்தில் பறந்த படி பார்த்தால்தான் முழுமையாக தெரியும் 
11:10 PM me: ஜுஜுபி
  தாரளமாக செய்யலாம் 
 R@ng@: இப்போ செய்யலாம்..நீங்க பறந்த படி பார்க்கலாம் 
11:11 PM me: இடம் வாங்கி கொடுங்க 
 R@ng@: ஆனால் அப்போது 3500 வருடங்களுக்கு எப்படி செய்திருக்க முடியும்
  ஏன் செய்ய வேண்டும்? 
 me: அப்போ மனிதன் முட்டாள்னு யார் சொன்னது
11:12 PM அவனுக்கு பிடிச்சிருக்கு செஞ்சிருக்கான் 
 R@ng@: உஸ்ஸப்பா..ஏன் வானத்துல இருந்து பாக்குற மாதிரி செஞ்சிருக்கான்? 
 me: மேலும் அவை 3500 வருடங்கள் பழமையானவை என்பதற்கு ஆதாரம் இல்லை 
 R@ng@: இருக்கு.. 
11:13 PM me: எங்கே? 
  பாரும் 
11:15 PM me: 2,000 years ago
  நாளை பேசலாம் 
 R@ng@: ஓக்கே  ************************** உலகத்திற்கெல்லாம் ஒரே கடவுள்னு ஒரு கும்பல், ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கடவுள்னு ஒரு கும்பல், நீ தான் கடவுள்னு ஒரு கும்பல், கடவுளே இல்லைன்னு ஒரு கும்பல், கடவுள் என்பது வேற்றுகிரகவாசிகள்னு இப்போ புதுசா!

ஆனா நல்லாயிருக்கு!
சாத்தியகூறுகளை ஆராய்வோம்!


****************************
சில எழுத்து பிழைகளை(நான் செய்தது) மட்டும் மாற்றியிருக்கிறேன் ரங்க்ஸ், நல்லொரு உரையாடலாக அமைந்தது, நண்பர்களின் கருத்துகளையும் கேட்போம்!

39 வாங்கிகட்டி கொண்டது:

உமர் | Umar said...

ஸ் ஸ் யப்பா இப்பவே கண்ணக் கட்டுதே.

அகல்விளக்கு said...

அவரு கரைக்டா தான் தல சொல்லியிருக்காரு...

நானும் நாஸ்கா லைன்ஸ் பத்தி யோசிச்சிருக்கேன்....

Sridhar R said...

"R@ng@: நாஸ்கா லைன்கள் என்பது தென் ஆப்பிரிக்க கண்டத்தில் அர்ஜெண்டினா நாட்டில் உள்ள பாலைவனத்தில் காணப்படும் மிகப்பெரிய ஓவியங்கள் மற்றும் கோடுகள்"

தென் ஆப்பிரிக்க அல்ல அது தென் அமெரிக்கா

வேற்றுகிரகவாசிகள்னு இப்போ புதுசா!
நடத்துங்க நடத்துங்க......

அகல்விளக்கு said...

எல்லாம் இண்டியானா ஜோன்ஸ் பாத்த எபெக்ஃடு...

சைவகொத்துப்பரோட்டா said...

வேற்று கிரக வாசிகளா!!! இன்ட்ரஸ்டிங்.

அகல்விளக்கு said...

ஆனா... நம்ம ஊருலயோ...
இல்ல வேற எங்கயாவதோ கூட வேற்றுகிரக வாசிங்க மாதிரி கடவுள் இல்லையே...

நம்ம கடவுள்ங்க எல்லாம் புலித்தோல்ல இல்ல குந்திகிட்டு இருக்காங்க...

அகல்விளக்கு said...
This comment has been removed by the author.
அகல்விளக்கு said...

//R@ng@: நான் முதன்முதலில் கூறிய அந்த பிலிப்பைன்ஸ் விஷயத்தை ஒப்பிட்டு பாருங்கள்..//

ஒப்பிட்டு பார்த்தாலும் கூட...
அவர்கள் 'தாங்கள் பார்த்த உருவ மாதிரிகளை அல்லவா செய்து வழிபடுகிறார்கள்'....

ஆதி மனிதஇனம் அப்படி செய்திருந்தாலும் கூட சுவடுகள் இல்லையே....

உதாரணமாக... நாஸ்கா லைன்ஸ் முற்றிலுமாக காற்று அதிகமில்லாத இடத்தில் இருந்ததால் இன்னும் பிழைத்திருக்கிறது...

ஒருவேளை அவர்கள் அப்போது 12000 அடி உயரம் பறக்கக் கூடிய இயந்திரங்கள் எதையாவது கண்டறிந்திருக்கலாம்.... அதை வரலாற்றில் பதிவு செய்வதற்காக கூட அவர்கள் நாஸ்கா படங்களை வரைந்திருக்கலாம்...

அகல்விளக்கு said...

//அவர்களின் கேள்வி “ஏன் இன்னும் வேற்றுகிரக வாசிகள் பற்றிய உண்மைகளை மக்களிடம் இருந்து மறைக்கிறீர்கள்?” என்பதே//

ரோஸ்வெல் நிகழ்ச்சி... அப்புறம் அவங்களோட சீக்ரெட் செக்டார் பத்தி நீங்க சொல்றீங்க...

இது உண்மையா இருக்கும் பட்சத்தில் மறைக்க என்ன அவசியம் வேண்டி கிடக்கு...

ISRO க்கு இந்த மேட்டர் மட்டும் தெரிந்திருந்தால் நிச்சயம் அது கசிந்து பறந்திருக்கும்...

Kumky said...

பொயக்க தெரியாத புள்ளைங்களா இருக்கே....
அய்யோ பாவம்.

அகல்விளக்கு said...

பரிணாம வளர்ச்சிக்கும், ஏலியன்ஸ்க்கும் என்னப்பா சம்பந்தம்...

டாப்பிக்க மாத்தாதீங்கப்பா....

பரிணாம வளர்ச்சி முழுக்க முழுக்க உடல் மற்றும் சூழ்நிலை பொறுத்ததுதான்...

வேறு வேறு இடங்களில்
வேறு வேறு சூழ்நிலையில் புதிதாக வாழ ஆரம்பிக்கும் ஒரே இனத்தை சேர்ந்த உயிரினம், காலப்போக்கில் சூழ்நிலைக்கேற்றவாறு உடல் மாற்றம் பெறும்.

அந்த மாற்றத்தினால் அதன் நடவடிக்கைகளும் மாறும் (இப்போ இந்த இடத்துல இப்போதைய மனிதனின் மனத்தையும், அப்போதைய உயிரினத்தின் skill, unskill கொண்டு நிரப்பிக்கலாம், so... survival of the fittest)...

//இன்றைய கண்டுபிடிப்பில் பரிணாம வளர்ச்சி ஏணியை போன்று ஒரே மாதிரி செல்வதல்ல, அது ஒரு மரத்தின் கிளைகளை போல ஒரே குடும்பம் பல வடிவங்களை பெற்றது//

இதுல ஒருத்தன் புதுசா வந்து...
இத இப்படி செய்யக்கூடாது... அத அப்படித்தான் செய்யணும்னு அட்வைஸ் பண்ணினதா சொல்றதெல்லாம் கட்டுக்கதை பாஸ்....

பரிமாண வளர்ச்சி பற்றி மட்டும் பேசுவோம்...

நாகரீக வளர்ச்சிய அப்பாலிக்கா வச்சுக்கலாம்... (ஏன்னா.. கடவுள் இந்த காலகட்டத்துலதான் நுழைச்சிருக்காரு...)

உமர் | Umar said...

//பரிமாண வளர்ச்சி பற்றி மட்டும் பேசுவோம்...

நாகரீக வளர்ச்சிய அப்பாலிக்கா வச்சுக்கலாம்... (ஏன்னா.. கடவுள் இந்த காலகட்டத்துலதான் நுழைச்சிருக்காரு...)//

கரெக்ட்டுப்பா. டாபிக்க மாத்தாதீங்க.

(உங்க கமெண்டுல இலக்கணப்போலி எட்டிப்பாத்திரிச்சு. கவனம்)

அகல்விளக்கு said...

//(உங்க கமெண்டுல இலக்கணப்போலி எட்டிப்பாத்திரிச்சு. கவனம்)//

அப்படின்னா என்னா தல...

Unknown said...

//"R@ng@: நாஸ்கா லைன்கள் என்பது தென் ஆப்பிரிக்க கண்டத்தில் அர்ஜெண்டினா நாட்டில் உள்ள பாலைவனத்தில் காணப்படும் மிகப்பெரிய ஓவியங்கள் மற்றும் கோடுகள்" //

இதுக்கும் பரிணாம வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்

அகல்விளக்கு said...

ஆங் கண்டுபிடிச்சிட்டேன்....

//அவரு கரைக்டா தான் தல சொல்லியிருக்காரு...
நானும் நாஸ்கா லைன்ஸ் பத்தி யோசிச்சிருக்கேன்....//

இது நாஸ்கா லைனுக்கு மட்டும்தாங்க கும்மி....

:-)

உமர் | Umar said...

//ஆங் கண்டுபிடிச்சிட்டேன்....//

நான் சொன்னது பரிணாம - பரிமாண

அகல்விளக்கு said...

நான் இந்த ஆட்டைக்கு வரல...

அந்த வீடியோவ பாத்து முடிக்கையில தல சுத்துது...

http://www.peabody.yale.edu/exhibits/treeoflife/film_discovering.html

உமர் | Umar said...

//நான் இந்த ஆட்டைக்கு வரல...

அந்த வீடியோவ பாத்து முடிக்கையில தல சுத்துது...//

ஒன்னியும் கவலைப்படாதீங்கோ. Canopy பத்தியும் பேசினாதான் பரிமாணம் முழுமை பெறும்.

உமர் | Umar said...

// பரிமாணம் முழுமை பெறும்//

பாருங்க அந்த விடியோவப் பத்தி பேசுனதும் இலக்கணப்போலி சதிராடுது

அகல்விளக்கு said...

//Canopy பத்தியும் பேசினாதான் பரிமாணம் முழுமை பெறும்.//

அப்ப நான் Canopy-ல வந்து கலந்துக்கிறேன்...

அந்த காலகட்டத்தின் பரிணாமம்தான் மிக முக்கியமானது...

(அப்பாடா.... பரிணாமம்-னு கரீட்டா சொல்லிட்டேன்....)

சத்யராஜ்குமார் said...

Erich von Daniken's "Chariots of Gods" புத்தகத்தில் இந்த உரையாடல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது.

Chitra said...

உலகத்திற்கெல்லாம் ஒரே கடவுள்னு ஒரு கும்பல், ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கடவுள்னு ஒரு கும்பல், நீ தான் கடவுள்னு ஒரு கும்பல், கடவுளே இல்லைன்னு ஒரு கும்பல், கடவுள் என்பது வேற்றுகிரகவாசிகள்னு இப்போ புதுசா!


.......... Religion is evolving...... ha,ha,ha,ha...

COMMON MAN said...

பரிணாம வளர்ச்சி முழுமை அடையல, முழுமை அடையும்போது கடவுள் தோன்றுவார்.

அவனவன கட்டையால அடிச்சி, ஏண்டா நான் வர்றதுகுள்ள இந்த இடத்தையே (பூமி) கலீஜ் பண்ணி வெச்சிருக்கீங்களே, உங்கள மாதிரிதானே மத்ததையும் படைச்சேன் அதுங்கள்ளாம் அதனதன் வேலைய பர்ர்குதுல்ல, உங்களுக்கென்னடா வெங்காயம் ஆராய்ச்சி, ஆறறிவு, மண்ணாங்கட்டி அப்படின்ட்டு, நம்மள எல்லாத்தையும் காலி பண்ணிட்டு திரும்பவும் மிருகங்கள மட்டும் உட்டுட்டு போவார், ஆனா பாருங்க இந்தவாட்டி பன்னிலேர்ந்து மனுஷன் பொறந்து நிறைய குட்டிங்க போட்டு இந்த பிரபஞ்சத்தையே காலி பண்ணப்போறான்.. (எழுதி வெச்சிக்குங்க - எதுக்கும் ஆதாரம் கிடையாது :) இதுவும் அதுல ஒன்னு)என்னது வேற்று கிரக வாசியா??..ஆமா அதுக்குத்தான் இன்னும் பன்னிக்காய்ச்சல் வரல, வந்தா அதையும் காலி பண்ணிடலாம்..

புலவன் புலிகேசி said...

இன்னும் கடவுளை எங்கெல்லாம் தேடப் போறாங்களோ...?

TechShankar @ டெக்‌ஷங்கர் said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

திவ்யாஹரி said...

//கும்மி said...

ஸ் ஸ் யப்பா இப்பவே கண்ணக் கட்டுதே.//

same blood.

அன்புடன் நான் said...

.தூண்டுகோலும் கிடையாது மண்னாங்கட்டியும் கிடையாது
10:49 PM வாழும் தேவையை பூர்த்தி செய்ய அவனுக்கு தேவையானதை உருவாக்கி கொண்டான்!//

மனிதன் ஒரு காட்டு விலங்கு..அவனுக்கு எதோ ஒரு தூண்டுகோல் கிடைத்ததால் தான் அவன் வளர்ந்தான்..இல்லையேல் நாகரிகமாவது மண்ணாங்கட்டியாவது..இது என் வாதம்//

இந்த இரண்டையுமே...என் மனம் ஏற்கிறது..... ஆன அதைவிட எது உண்மை என்பதை அறிய ஆவலும் பிறக்கிறது... பகிர்வு...உண்மையிலே மிரட்டலாத்தான் இருக்கு.

Romeoboy said...

அட இது போன பதிவவிட சூப்பரா இருக்கு. நல்ல பகிர்வு தலைவரே

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்ஸ்!

இந்தப் பதிவின் வழியாக என்ன சொல்ல வருகிறீர்கள்?

முதல் பதிவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

சொதப்பாமல் ஒரு விவாதத்தை நடத்தப் போரடிக்கிறதா?

மங்குனி அமைச்சர் said...

சார் இயேசு - 2010 ஆண்டுகள் , முகமது நபி - 1431 ஆண்டுகள் இவை இரண்டும் தனி மனிதனால் (கூட்டங்கள் அல்ல ) சொல்லப்பட்டது, ஹிந்துயிசத்தின் ஆர்ஜின்(மிக பெரியது ) பற்றி எனக்கு தெரியவில்லை . மனிதர்களை ஒழுக்க கட்டுப்பாட்டுக்குள் (பயமுறுத்தி) வைக்கவே கடவுள் உருவாக்கப்பட்டதாக என் எண்ணம்.

அகல்விளக்கு said...

//மங்குனி அமைச்சர் said.//

அமைச்சரே...

க.க.க.போ......

Prabhu said...

அய்யா புதுசா வேற்று கிரக வாசியா? பல காலமா ப்டிச்சிட்டு இருக்கேன்... அவங்க நாம் வச்சிருக்க பல கடவுள்கள் வேற்றுகிரகம் தான், கிருஷ்ணரே வேற்றுக் கிரக வாசி, குருஷேத்திரமே ஒரு அதிநவீன யுத்தம். அவரோட டெக்னாலஜிகல் உதவிய நாடினார்கள் எனும் ஆட்களும் உண்டு. அட, குருஷேத்திரத்தில் குண்டு வெடிப்புக்கான அடையாளம் இருக்கு என்று கூட கதை சொல்வதுண்டு.

தர்ஷன் said...

அவரு நிறைய இங்கிலீஷ் படம் பார்ப்போரோ
ஆனால் வால் அவர் சொல்வதைப் போன்ற நம்பிக்கை உள்ள ஒரு கூட்டம் உள்ளது. Aliens ஐ கடவுளாக வழிபடுகிறார்கள். அந்த மதம் பெயர்தான் தெரியவில்லை
அப்புறம் விஷயத்தை நேரடியாக சொல்லாமல் சுத்தி வளைச்சு நல்ல ஸ்டைலா விஷயத்துக்கு வாரார் இல்லையா

பனித்துளி சங்கர் said...

இதுல இவளவு விசயங்கள் இருக்கா . மிகவும் அருமை .

Rajan said...

//அந்த சிலைகளும், விமான பொம்மைகளும் அங்கு உள்ளன..!! சாப்டு வரேன்//

அதெல்லாம் சாப்பிடக் கூடாதுங்க ! ஜீரணம் ஆவாது ! சாருக்கொரு கொத்து புரோட்டா பார்சல் !

Rajan said...

//அர்ஜெண்டினா நாட்டில் உள்ள பாலைவனத்தில் காணப்படும் மிகப்பெரிய ஓவியங்கள் மற்றும் கோடுகள் //


ஆமாமா ! ஆயிரத்தில் ஒருவன் ல காமிச்சாங்களே ! நடராஜர் நிழல் ஓவியம்

பித்தனின் வாக்கு said...

நல்ல பகுத்தறிவு, ஹிந்து மதத்தில் சொல்வது மட்டும் ஒத்துக் கொள்ளக்கூடாது. மற்றபடி யார் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளலாம். இப்ப இப்படிகூட கதை விட ஆரம்பிச்சுட்டிங்களா? ரைட்டு நடக்கட்டும். எவ்வளேவே பார்த்துட்டேம். இது என்ன?.

கையேடு said...

தூண்டுகோல் - இனப்பெருக்கம்

கலாச்சாரம் - பரிணாமத் தடை

விரிவாக விரைவில் உரையாடலாங்க.

தருமி said...

சத்யராஜ், பப்பு சொல்வது போல் Eric von Danikenன் சில நூல்களில் பல ஆச்சரியமான விவரங்கள் கிடைக்கும். நாஸ்கா, குருஷேத்திர யுத்தம், பைபிளில் உள்ள Exodus, எகிப்திய பிரமிடுகள், வெகுகாலத்திற்கு முந்தி வரையப்பட்ட உலக வரைபடங்கள், ஒரே மாதிரியான பழைய குகைச் சித்திரங்கள் --- இன்னும் பலப்பல --- மிகவும் ஆச்சரியமான நூல்களும், விவாதங்களும் ...

!

Blog Widget by LinkWithin