சென்ற வாரம் ஞாயிற்றுகிழமை(20.02.10) நண்பர் பரிசலின் புத்தகமும், யூத்து கேபிள் சங்கர் புத்தகம் வெளியிடப்பட்டது! தவிர்க்கமுடியாத சில காரணங்களால் நேரில் செல்ல முடியவில்லை!
வாழ்த்த வயதில்லாத காரணத்தால் வணங்கி கொள்ளலாம்! என்னை பொறுத்தவரை இது அவர்களுக்கு ரொம்ப தாமதமான அங்கீகாரம்! பரிசல் பல வருடங்களுக்கு முன்னரே வெகுஜன பத்திரிக்கையில் கதைகள் எழுதியவர்! தொடர்ந்திருந்தால் இன்னேரம் ஆந்திரா பக்கமோ, கர்நாடகா பக்கமோ பிரபல எழுத்தாளராகி இணையத்தில் எதாவது ஒரு சாமியாருக்கு கொ.ப.செ வேலை பார்த்திருக்ககூடும்! கேபிளும் சாதாரணமானவர் அல்ல! சினிமா துறையில் இருப்பவர்களுக்கு தெரியும், ஒவ்வொரு சீனும் ஒரு சிறுகதை என்று! அதற்கேற்றார்போல் அவரது கதைகள் நல்ல முதிர்ச்சியாய் இருப்பதாக நண்பர்கள் சொல்ல கேட்டேன்! மேலும் பல புத்தகங்கள் எழுதி தமிழுக்கு சேவை செய்ய வேண்டும் எனதே என் வேண்டுகோள்!
****************
தோழர் அதிஷாவின் திருமணம் நேற்று(18.02.10) கோவையில் நடந்தது, நானும் எனது பாஸும் போயிருந்தோம்! ஏற்கனவே அங்கே சஞ்சய் அங்கிள், வடகரை வேலன் அண்னாச்சி, தோழர் லக்கி, தோழர் ”வெள்ளிநிலா” ஷர்புதீன் மேடையை கலகலப்பாக்கி கொண்டிருந்தார்கள்!(நாங்கள் உன்ளே நுழையும் நேரம் போட்டோ எடுத்து கொண்டிருந்தார்கள்), நாங்களும் போட்டோ எடுத்து கொண்டோம்! பிறகு சாப்பாடு! சாம்பார், வத்தகுழம்பு, ரசம், தயிர் என்று அமர்களமாக இருந்தது! அனுமதி அளித்திருந்தால் கொஞ்சம் வத்தகுழம்பு பார்சல் பண்ணியிருப்பேன்! பிறகு வெகு நேரம் தோழர்களுடன் பேசி கொண்டிருதோம்! மண்டபத்திலிருந்து கிளம்பி சஞ்சய் அங்கிள் அறைக்கு சென்றோம்!
மனிதர் பெரிய புத்தக பிரியராக இருக்கிறார்!, சமையல் செய்வது எப்படி போன்ற ஏராளமான அறிவியல் தற்காப்பு கலைகள் புத்தகங்கள் நிறைய உள்ளன!, பி.டி விதைகள் பற்றி பேசிய போது, அது தவறில்லை என்றார்! அவர் பி.டி. பருத்தி விதைகள் உபயோகிக்கிறாராம்! பருத்தி சாப்பிடும் பொருளாக இருந்தால் என்னவாகும் என்று அவருக்கு தெரியுமா, தெரியாதா என்று எனக்கு தெரியவில்லை!, தோழர் லக்கியுடனும் வெகு நேரம் அரசியல் பேசி கொண்டிருந்தோம்!(எல்லா அரசியலும் தான்) மிக அருமையான சந்திப்பாக இருந்தது!
நிறைய படங்களை தோழர் ஷர்புதீன் வெளியிட்டிருக்கிறார், பார்த்து கொள்ளுங்கள்!
*************************
google buzz என்பது பயங்கர தொந்தரவாக இருந்தது எனக்கு! நல்லவேளையாக நண்பர் நட்புடன் ஜமால் காப்பாற்றினார், உங்களுக்கும் தொந்தரவாக இருந்தால் இதை பின்பற்றி காத்து கொள்ளலாம்!, எதுவுமே புரியாத போது என்ன தான் அதை வைத்து கொண்டு செய்வது, நீங்களே சொல்லுங்கள்!
**********************
the village!
மனோஜ் நைட் சியாமளனின் படம்! இவரது படங்கள் அனைத்துமே அமானுஷ்ய தன்மை நிறைந்த படங்கள் தான்!, ஆனால் இந்த படம் தமிழில் வந்த விசில் என்ற படம் மாதிரியான கதை! urban legent என்ற படமும் அதே மாதிரி தானாம்! நிச்சயமாக தமிழை பார்த்து மனோஜ் காப்பியடித்திருக்க வாய்ப்பில்லை! மனோஜின் திரைக்கதை வடிவம் எனக்கு ரொம்ப பிடிக்கும்! இந்த படமும் திரைக்கதையில் மீண்டும் நிறுபித்திருக்கிறது!
புனைக்கதைகள் காலங்காலமாக உண்டு, அதில் வரும் சில சம்பவங்கள் சில நடந்து விட்டால் அந்த புனைகதையே உண்மையாக திரிக்கப்படும்! இறுதிநாள் எனப்படும் மதநம்பிக்கையாளர்களின் கடைசிநாள், எப்போதெல்லாம் எரிமலை வெடித்து பூகம் வருகிறதோ அப்போதெல்லாம், இதோ இறுதிநாள் அருகில் வந்து விட்டது என்று புருடா விடவைக்கும்! பல கோடி ஆண்டுகளாக எரிமலைகள் வெடித்து கொண்டு தான் இருக்கிறது, பூகம்பம் வந்து கொண்டு தான் இருக்கிறது! ஆனால் மதவாதிகள் தான் நம்ப தயாராய் இல்லை! சரி வாங்க கதைக்கு போவோம்!
ஒரு கிராமத்தில் பல வருடங்களாக ஒரு புனை கதை இருக்கிறது! அந்த கிராமத்தை சுற்றியுள்ள காட்டில் ஒரு விலங்கு போன்று ஒன்று உள்ளது! காட்டிற்க்குள் மனிதர்கள் போனால் கொன்று விடும்! அவ்வபோது கிராமத்திற்குள் வந்து எச்சரிக்கை விடுக்கும் என்பது கதை! அதில் சில நடப்பது போல் தெரிய கிராம மக்கள் அங்கிருந்து நகராமல் அங்கேயே வாழ பழகி விடுகிறார்கள், மின்சார வசதி கூட இல்லாமல், நகர தொடர்பு இல்லாமல்! ஒரு இளைஞன் மட்டும் நகரத்து செல்ல அனுமதி கேட்கிறான், மறுக்கப்படுகிறது!, சில நாட்களில் அவனுக்கும், அதே ஊரை சேர்ந்த பார்வையிழந்த ஒரு பெண்ணுக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது! அந்த பெண்னை ஏற்கனவே விரும்பிய ஒருவன், அந்த இளைஞனை கத்தியால் குத்திவிடுகிறான்!
இளைஞனை காப்பாற்ற முடியாத சூழ்நிலை, ஆனால் பார்வையிழந்த பெண் தான் நகரத்துக்கு சென்று மருத்து வாங்கி வருவதாக கூறுகிறாள்! நீண்ட வாக்குவாதத்துக்கு பின் ஊர் மக்களால் அனுப்பி வைக்கப்படுகிறாள், வழியில் அந்த மிருகத்தையும் சந்திக்கிறாள்! பிறகு என்ன ஆனாள், இளைஞன் பிழைத்தானா என்பதையும், அந்த மிருகன் என்ன? அல்லது யார் என்பதையும் ஸ்டார் மூவீஸில் படம் போடும் போது பார்த்து கொள்ளுங்கள்!
இன்று ஸ்டார் மூவிஸில் என்ன படம் என அறிய!
********************
ஏ.ஜோக்!
ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண், பாதிரியாரை பார்க்க செல்கிறாள்!
அய்யா, நான் இரண்டு கிளிகள் வளர்க்கிறேன்! அவை எப்போதும் ஒரே வார்த்தையை தான் சொல்கின்றன என்றாள்!
என்ன என்றால் பாதிரியார்!
நான் ஒரு விபச்சாரி, உனக்கு சுகம் தரட்டுமா என்பதே அது என்கிறாள்!
என்னிடம் இரு கிளிகள் இருக்கின்றன, அவைகள் எப்போதும் ஜெபித்து கொண்டே இருக்கும், அவைகளிடயே விட்டால் அவைகள் ஜெபித்து உன் கிளிகளை திருத்திவிடும் என்றார்!
கிளிகள் பாதிரியாரின் கூண்டுக்குள் விடப்பட்டன! விபச்சாரியின் கிளிகள் வழக்கம் போல் நாங்கள் விபச்சாரிகள், உங்களுக்கு சுகம் தரட்டுமா என்றது!
உடனே பாதரியாரின் கிளி ஒன்று,
சொன்னேன் பார்த்தியா நமது ஜெபத்துக்கு கடவுள் செவி மடுத்துவிட்டார் என்றது!
62 வாங்கிகட்டி கொண்டது:
ஓகே..
உங்களுக்கு மட்டும் ஏன் வால் பின்னாடி இருக்கோ..!
Present Arun
சுவாரஸ்யமான குவியல்.. :)
முடியலே ...!
குவியல் நல்லா இருக்கு...
குவியல் நன்று. அதிஷாவிற்கு வாழ்த்துக்கள்.. கேபிள் மற்றும் பரிசல் புத்தக வெளியீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்தி விமர்சனமும் பண்ணிட்டேன்...
அந்த் ஜோக்கு, சோக்குத்தான்
நேரில் வரவில்லையெனினும் வாழ்த்தியமைக்கு நன்றி வால்!
நல்ல பதிவு. திருமணப் படங்கள் நேரில் பார்க்க முடியாத எங்களுக்கு ஒரு வாய்ப்பு. அவருக்கும் எனது வாழ்த்துக்கள். நன்றி வால்ஸ்.
ரொம்ப லேட் வாலு ...இந்த படம் வந்து சில பல வருஷம் ஆய்டுச்சு !!!!
அட கொன்னியான்.. புருடா விட அளவே இல்லையா? சமையல் புத்தகம் எல்லாம் என்னிடன் இல்லை இல்லை இல்லை.. டிவிடியாக மட்டுமே வைத்திருக்கிறேன்.. :))
நான் பிடி பருத்தியைத் தான் ஆதரிப்பதாக சொன்னேன்.. கத்தரிக்காயை அல்ல... மேலும் எந்த ஒரு கண்டுபிடிப்பும் ஆரம்பத்தில் பல பாதக அம்சங்களைக் கொண்டிருக்கும்.. அதில் உள்ள குறையைத் தான் நீக்க வேண்டுமே ஒழிய அந்த தொழில்நுட்பமே வேண்டாம் என சொல்வது ஏற்புடையது அல்ல என்பது என் தாழ்மையான கருத்து.. பிடி தொழில்நுட்பத்தால் விவசாயிகளுக்கு செலவு குறையும்.. வரவு அதிகரிக்கும்.. சுகாதாரக் கேடுகள் பற்றிய பிரச்சனைகளை தொடர்ச்சியான ஆய்வின் மூலம் நிவர்த்தி செய்ய முடியும்..
"ஸ்ரீனிவாசன் said...
ரொம்ப லேட் வாலு ...இந்த படம் வந்து சில பல வருஷம் ஆய்டுச்சு !!!!"
பாஸ் .....இந்த மாதிரி பழைய படங்களை(யாருக்கும் தெரியாத படங்களை ) பற்றி எழுதினால் தான் இலக்கியவாதியாக முடியும் ......புது படங்களை பற்றி எழுத கேபிள் சங்கர் இருக்கிறாரே
அதிஷாவுக்கு வாழ்த்துக்கள்
நல்லாயிருக்குங்க அருண்.
வால்ஸ் நீங்கள் பாட்டின பாட்டை கேட்ட போதையில் இருந்தே இன்னும் வெளிய வரல
பி.டி கத்தரி பற்றிய உங்கள் கருத்துதான் எனது கருத்தும் நண்பா
விஜய்
சூப்பர் குவியல் தல...
அதிஷாவிற்கு வாழ்த்துக்கள்
yes sir...
//என்ன தான் அதை வைத்து கொண்டு செய்வது, நீங்களே சொல்லுங்கள்!//
ஆமா ! பேரே சரியில்ல ! புச்சு கிச்சுனு !
//கொ.ப.செ வேலை பார்த்திருக்ககூடும்!//
என்ன ஒரு நாகரீகம் ! இனி நம்மள எவனாவது அசிங்கமா திட்டட்டும் !
//பருத்தி சாப்பிடும் பொருளாக இருந்தால் என்னவாகும் என்று அவருக்கு தெரியுமா, தெரியாதா என்று எனக்கு தெரியவில்லை!//
நூல் நூலா வருமா தல !
//மனோஜ் நைட் சியாமளனின் படம்!//
பகல்ல படம் எடுக்க மாட்டார் போல
//அந்த கிராமத்தை சுற்றியுள்ள காட்டில் ஒரு விலங்கு போன்று ஒன்று உள்ளது! காட்டிற்க்குள் மனிதர்கள் போனால் கொன்று விடும்! //
அப்ப விலங்குதான் தல !
//இளைஞனை காப்பாற்ற முடியாத சூழ்நிலை, ஆனால் பார்வையிழந்த பெண் தான் நகரத்துக்கு சென்று மருத்து வாங்கி வருவதாக கூறுகிறாள்! நீண்ட வாக்குவாதத்துக்கு பின் ஊர் மக்களால் அனுப்பி வைக்கப்படுகிறாள், வழியில் அந்த மிருகத்தையும் சந்திக்கிறாள்! பிறகு என்ன ஆனாள், இளைஞன் பிழைத்தானா என்பதையும், அந்த மிருகன் என்ன? அல்லது யார் என்பதையும் ஸ்டார் மூவீஸில் படம் போடும் போது பார்த்து கொள்ளுங்கள்!//
இதுல பாட்டே இல்லையா ? அப்ப நாம இடைல போயி தம்மடிக்க முடியாதா ?
தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள், அந்த ஜோக், ஹா...ஹா...
//
உடனே பாதரியாரின் கிளி ஒன்று,
சொன்னேன் பார்த்தியா நமது ஜெபத்துக்கு கடவுள் செவி மடுத்துவிட்டார் என்றது!//
கிளிகளும் கோட்டான்களும் எம்மைச் சூழ்ந்துள்ளன
//ஸ்டார் மூவீஸில் படம் போடும் போது பார்த்து கொள்ளுங்கள்!//
குட் ஐடியா.....
urban legend விசில் மாதிரி படம் இல்லை வால் அந்தப் படத்தின் அப்பட்டமான் காப்பிதான் இது
அத்தனை பகிர்வும் நல்லாயிருந்தது..... கடைசியில் வாலும் இருந்தது.
வால்ண்ணா... ரைட்டுங்கண்ணா..
குவியல் நல்லாருக்கு...........
JOKE SUPER
A joke la avvalavaga kick illai vaals
intha PADATHAI scary movie 4 LA SEMAIYA KINDAL ADITHU IRUPPARGAL
அதிஷாவிற்கு வாழ்த்துக்கள்!!
A :-))))
நல்லது..நடத்துங்க..:)
வால் அந்த படம் ஒரு அற்புதமான டுவி்ஸ்ட்... அந்த பெண் மருந்தக்கு வெளியே வரும் போது, வயிற்றில் ஓங்கி குத்து விட்டால் எப்படி இருக்கும்? அது போல் அந்த காட்சி இருக்கும்...
வாலு - சூப்பர் குவியல்
இரு புத்தகங்களூம் வாங்கி விட்டேன் - படிச்சிட்டுச் சொல்றேன்
அதிஷாவின் திருமணம் - வாழ்த்துகள் புதிய மணமக்களுக்கு -
பல படங்கள் வெளியிட்ட ஷர்புதீனுக்கு நன்றி
பச் - பாப்போம் - தேவைன்னா நிறுத்திடுவோம்ல
கடசி சோக்கு சும்மா நச்சுன்னு இருக்கு
நல்வாழ்த்துகள் வாலு - மற்றும் பாசூ
//சென்ற வாரம் ஞாயிற்றுகிழமை(20.02.10)
எங்கையோ உதைக்குது
அருண் சார், அந்த கிளி ஜோக் நான் கொஞ்ஜம் வேறமாதிரி படிச்சிருக்கேன்.
இருந்தாலும் பதிவில் ஏதாவது ஒரு வில்லங்கம் வச்சிடுறீங்க.
பிச்சு உதறிடீங்க
//நான் சந்தியாவந்தனத்தை தமிழிலே செய்கிறேன்.//
அது யாரு சந்தியா வந்தனம் ! சிவனோட செட்டப்பா அத நீங்க எதுக்கு தமிழ்ல செய்யனும் ! நாங்க தெலுங்குல செய்யறோம் அனுப்பி வைங்க
@ அனானி!
:)
வால் அவர்களே! அந்த மனநிலை தவறிய அனானியின் கமெண்டை நீக்கி விடுங்களேன்; மிகவும் அசிங்கமான மனப்போக்கினையே அது வெளிப்படுத்துகின்றது. உங்கள் பதிவினைப் படிப்பவர்களுக்குத் தெரியும், அது எவ்வளவு கேவலமாய் இருந்தால் நீங்கள் நீக்கி இருப்பீர்கள் என்று.
அந்த அனானி கமெண்ட் குறித்து சைபர் கிரைமில் இருந்து தொடர்பு கொண்டார்கள்! ராஜன் ப்ளாக் ஐடியையும் கொடுத்திருக்கிறேன்!
எனது ப்ளாக்கை கண்காணிக்கும் மானிட்டர் பொருத்தியுள்ளார்கள் நண்பரே!
திரும்ப அந்த அனானி வரவதற்கக தான் அந்த கமெண்ட் அப்படியே இருக்கிறது!
சைபர் கிரைமின் தகவல் படி அந்த அனானி ஏற்கனவே எனக்கு கமெண்ட் போட்ட ஆள் தானாம்! எப்படியும் அவன் களி திங்க போவது உறுதி!
உங்களுடைய blog-ல் இருக்கும் feedjit traffic feed-ல் இருந்து அந்த அனானியின் ip-யை ட்ரேஸ் செய்யமுடியுமே. முயன்றுப் பார்க்கவும்.
//உங்களுடைய blog-ல் இருக்கும் feedjit traffic feed-ல் இருந்து அந்த அனானியின் ip-யை ட்ரேஸ் செய்யமுடியுமே. முயன்றுப் பார்க்கவும். //
சமீபத்தில் ஆரம்பித்த ஒரு பிரபல நிறுவனத்தின் பத்திரிக்கையிலும், தமிழகத்தில் பெயர் பெற்ற இரண்டு புலனாய்வு பத்திரிக்கையில் ஆள் இருக்கிறார்கள்! இந்த மாதிரி கேஸ் தான் நண்பா தேடுறோம், விடுங்க நாங்க பார்த்துகிறோம்னு சொல்றப்பா நாம சொல்ல என்ன இருக்கு!
சென்ற வருடத்தின் ஆரம்பித்தில் போலி டோண்டு என்ற டெக்க்னிக்கல் கில்லாடியவே சைபர்கிரை முன்னால் நிறுத்தியது நமது ப்ளாக் உலகம்! அந்த அனானி சமீபத்தில் ப்ளாக் எழுத வந்திருப்பார் போல!
அதனால் ஒரே கமெண்டில் நிறுத்தாமல் வரிசையாக காப்பி பேஸ்ட்! ஆனா பாவம் அது தான் அவருக்கு ஆப்பா மாறி போச்சு!
இனி அந்த் ஐபி எங்கே போனாலும் கண்கானிப்பாங்க, தனி ஆளா, கூட்டு களவானியான்னு பார்ப்பாங்க, மொத்தமா தூக்கிட்டு போய் ப்ளாக்கில் எப்படி கமெண்ட் போடனும்னு சொல்லி கொடுப்பாங்க!
நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன்! நீ கொடுக்குறதை வாங்கிகிட்டா அது எனக்கு, இல்லைனா உன்னுடயது, இப்போ கூட நான் அப்படி தான் விட்டுட்டேன்! ஆனா என் முன்னாடி ப்ளாக்கில் கமெண்ட் போட்டவங்க கம்ப்ளைண்ட் கொடுத்துட்டாங்க! நான் என்ன செய்ய!?
கம்ப்ளைன்ட் கொடுத்த வரையிலும் நல்லதே. கருத்தை எதிர்கொள்ள திராணியற்று, மிகவும் கூழ்த்தரமாய் கமெண்ட் போடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாய் இருக்கும்.
அனானி ஆப்ஷனை நீக்கியதற்கு வாழ்த்துகள்.
//அனானி ஆப்ஷனை நீக்கியதற்கு வாழ்த்துகள். //
சைபர் கிரைமின் வேண்டுகோளுக்காவே அதை செய்தேன்!
பெண் பதிவர்களும் உங்களுக்கு கமெண்ட் போடுறாங்க! குற்றவாளிகளை பொறி வைத்து பிடிப்பதை நாங்கள் பார்த்து கொள்கிறோம், நீங்கள் முடிந்தவரை அவர்களை தவிருங்கள்னு சொல்லிட்டாங்க!
அதனால் எடுக்க வேண்டியதாகி போச்சு!
எனது ப்ளாக் லேபிளில் சைக்கோ என்ற லீபிளில் இருக்கும் ஒஅழய பதிவை படியுங்கள், போலி டோண்டுவின் ஐபியை அப்போதே எடுத்து போஸ்ட் போட்டிருக்கிறேன்!
அதை கண்டுபிடிப்பதெல்லாம் இன்றைய தொழில்நுட்பத்தில் சப்ப மேட்டர்! ஆனா கடவுள் காப்பாத்துவார்னு நம்பிக்கையில் ஆத்திக நண்பர்கள் இங்கே கதறிட்டு போயிருக்காங்க! பார்ப்போம்! எந்த கடவுள் காப்பாத்த வர்றாருனு!
// பார்ப்போம்! எந்த கடவுள் காப்பாத்த வர்றாருனு!//
இந்தக் கடவுள் காப்பாத்துவாருன்னு அவரும், அவரு காப்பாத்துவாருன்னு ஐவரும் இருந்துட்டாருன்னு , புதுசா ஒரு கதை விடுவாங்க.
குவியல் அவியல் போல சுவை!
கிளி ஜோக்.. கிகிகிகி..
///சமையல் புத்தகம் எல்லாம் என்னிடன் இல்லை இல்லை இல்லை.. டிவிடியாக மட்டுமே வைத்திருக்கிறேன்.. :))
நான் பிடி பருத்தியைத் தான் ஆதரிப்பதாக சொன்னேன்.. கத்தரிக்காயை அல்ல... ///
சஞ்சய்:: புருடா விட அளவே இல்லையா? இது "ஆண்டவனு"க்கே அடுக்காது... :))
//நான் பிடி பருத்தியைத் தான் ஆதரிப்பதாக சொன்னேன்.. கத்தரிக்காயை அல்ல... ///
சஞ்சய்:: புருடா விட அளவே இல்லையா? இது "ஆண்டவனு"க்கே அடுக்காது... :)) //
திருமதி வித்யா, நான் என்ன புருடா விட்டேன் என்று விளக்கம் ப்ளீஸ்..
நாங்கள் அன்று என்னப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது எதற்காக இதை சொன்னேன் என்பதெல்லாம் தெரியாமல் வார்தைகள் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைப்பது சரியாகத் தெரியவில்லை.
சஞ்சய்: :) புருடா என்று oversight-தில் சொல்லிவிட்டதற்கு sorry :)
ஆனாலும், நீங்கள் எழுதப் போகும் பி.டி. பற்றிய பதிவுக்காக காத்திருக்கிறேன். :) நன்றீஸ்.
வித்யா, மன்னிப்பெல்லாம் வேண்டாம்.. நீங்கள் என் நண்பர் என்பதால் உரிமையில் சொல்லிவிட்டேன் என்று சொல்லி இருக்கலாம்.. :) அதை ஏண்டா நீ செய்யலைனு கேக்காதிங்க.. உங்க அனுபவம் தானே என் வயது.. :))
மீண்டும் உங்கள் கவனத்திற்கு, நான் பிடி தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறேன். குறிப்பாக பிடி பருத்தியை. பிடி கந்தரிக்காய் பற்றி நீங்கள் எழுதி இருந்த பதிவில் இருந்த சில காரணங்களுக்காக( அது உண்மையா என்று எனக்குத் தெரியவில்லை) அதை ஆதரிக்கவில்லை. ஒரு வேளை அதில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பூச்சிகளின் ஜீன்களை திணிக்கவில்லை என்று தெரிந்தால் மறுகனமே கத்தரிக்காயையும் ஆதரிப்பேன்.
பிடி பருத்தியின் ஆதாயம் பற்றி உங்கள் பதிவில் தேவைக்கு அதிகமாகவே எழ்திவிட்டேன். ஆகவே இப்போதைக்கு அதைப் பற்றி பதிவெழுதும் எண்ணம் இல்லை..
//உங்க அனுபவம் தானே என் வயது.. :))
////
இப்படி எல்லாம் சொல்லி என்னை கிழம்னு சொன்னதை பற்றி எந்த வருத்தமும் இல்லை. ஆனா.. உங்களை யூத்னும் சொல்லிட்டீங்க பாருங்க ...அதான்... கண்ணுல ரத்தக் கண்ணீர்... இதை எல்லாம் கேக்க யாருமே இல்லையா..
தங்கள் பதிவுக்கு நன்றிகள்..
East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.
Have a look at here too..
Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos
தங்கள் பதிவுக்கு நன்றிகள்..
East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.
Have a look at here too..
Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos
Post a Comment