சென்ற சனிக்கிழமை அலுவல் நிமித்தமாக நானும் எனது பாஸும் நாகர்கோவில், மார்தாண்டம் சென்றோம்! அந்த பக்கத்தில் பதிவர்கள் யாரும் தெரியாததால், யாரையும் சந்திக்க முடியவில்லை, நல்லபுள்ளையாக வேலையை மட்டும் பார்க்க முடிந்தது, காரணம் அன்று வள்ளலார் தினம்!
நாகர்கோவிலில் பேருந்தில் ஏறி அமர்ந்தோம், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், கார்த்திக், நக்மா நடித்து வெளிவந்த ”பிஸ்தா” படம் ஒடியது, ஏற்கனவே பார்த்தப்படம் என்றாலும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத நகைச்சுவை, இங்கே ஒரு செய்தி, நான் பெரும்பாலும் இப்படி பேருந்துகளில் பிட்டு(பாதி)படம் பார்த்து தான் டி.வி.டி வாங்கி முழுப்படம் பார்க்கிறேன்!
மார்த்தாண்டத்தில் பேருந்து நிறுத்தம் அருகிலேயே ”முபாரக்” என்ற அசைவ உணவு விடுதி இருக்கிறது, காலை எட்டு மணிக்கே மூணு ஆட்டை வெட்டி சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள், சுவையும் குறைவில்லாமல் இருந்தது, அவ்வழியே செல்பவர்கள் அங்கே ருசி பார்த்து விட்டு செல்லலாம்! பிறகு ஒரு ஐந்து கிலோ மீட்டர் நடை பயணமாக ஊரை சுற்றினோம், ஊரின் மையத்தை தவிர மற்ற இடங்களில் இன்னும் பச்சையம் கற்பழிக்கப்படாமல் இருக்கிறது, இன்னும் எத்தனை நாளைக்கோ தெரியவில்லை!
மதியமே கிளம்பி மீண்டும் நாகர்கோவில், அதிசயமாக பார்வதி என்ற பெரிய விடுதியில் தாக சாந்தி கிடைத்தது, பின் பிரபு என்ற அசைவ உணவி விடுதியில் சாப்பாடு, விலை கொஞ்சம் அதிகம் தான், சுவை நன்றாக இருந்தது, கூட்டம் அதிகமாக இருப்பதால் ருசித்து சாப்பிட முடியாத குறை உண்டு, நாகர்கோவில் செல்பவர்கள் அங்கே கை நனைத்து செல்லலாம், அதற்கு முன் விலை பட்டியலையும் கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள், மாவாட்டும் வேலை மிஞ்சும்!
அதன் பின் செத்தவிளை என்ற இடத்தில் இருக்கும் கடற்கரைக்கு சென்றோம், புகைப்பட கருவி எடுத்து செல்லவில்லை, அதனால் இந்த தடவை எழுத்து பதிவு மட்டுமே! அழகான கடற்கரை!. சுற்றுலா செல்பவர்கள் அமைதியாக கடலை ரசிக்க சிறந்த இடம்!
இனிமேல் தான் இருக்கு மேட்டரே! அனைத்தும் முடிந்து பழைய பேருந்து நிலையத்தில் ரயில்நிலையம் போகும் வண்டிக்காக நின்று கொண்டிருந்தோம், 36ஏ வண்டி கடக்கும் போது, ரொம்ப நேரமா அப்போ கிடைக்கல இப்போ எத்தனை போகுது பாருங்க செத்தவிளைக்குன்னு பாஸிடம் சொல்லி கொண்டிருந்தேன், பின்னால் இருந்து ஒரு பெரியவர் இது ரயில்நிலையம் போகும் வண்டியா என கேட்டார்!(அவருக்கு தமிழ் தெரியாது, நடந்த உரையாடல்கள் அனைத்து அரைகுறை ஆங்கிலத்திலேயே நடந்தது!)
கவனிக்க அவர் தான் வந்து கேட்டார், அதற்கு முன் நாங்களும் பலரிடம் விசாரித்து கொண்டிருந்தோம், அதையும் அவர் கவனித்து கொண்டு தான் இருந்தார், நாங்களும் அங்கே தான் போகிறோம் வரும் போது சொல்கிறோம் என்று அமைதியாக கவனிக்க ஆரம்பித்தோம், வண்டி வரவும் பாஸ் முன்னாடி சென்றார், அந்த பெரியவரிடம் ஒரு பெரிய பையும், ஒரு தண்ணீர் பாட்டிலும் இருந்தது, வண்டிக்கு அருகில் சென்ற பாஸ் “அந்த கேனையாவது எடுங்க என்றார்” நான் திரும்பி அந்த பையை எடுத்து வண்டியில் ஏறினேன்!, பாஸ் தான் பையை எடுக்க சொன்னதாக அவர் நினைத்து கொண்டார் போல!
வண்டி ஏறிய பெரியவர் முதலில் என் பிறந்த தேதி கேட்டார், சொன்னேன், நீங்கள் சுயநலவாதி, அம்மா அப்பாவை கூட கவனிக்க மாட்டிங்க என்றார், நான் சிரித்து கொண்டேன், பாஸிடம் தேதி கேட்டார், அவர் சொன்னவுடம் நீங்கள் நர்ஸ் மாதிரி எல்லாருக்கும் உதவி செய்விங்க என்றார், நான் ஒரு talking animal என்று அந்த பெரியவரிடம் சொன்னேன்! பாஸுக்கு ஒன்றும் புரியவில்லை, ரயில்நிலையம் உள்ளே சென்றதும் ஆரம்பித்தார் சொற்பொழிவை, தலைவர் பாபாவின் சீடராம், கிட்டதட்ட இரண்டு மணிநேரம் தொடர் மழை, அருகில் அமர்ந்திருந்த நான் அந்த எச்சில் மழையில் கிட்டதட்ட நனைந்தே விட்டேன்!
ஒருமுறை பறந்து கொண்டிருந்த விமானத்தில்!? தீடிரென எரிபொருள் தீர்ந்து விட்டதாம், பைலட் பாபாவை நினைத்து கோண்டாராம் வண்டி எரிபொருள் இல்லாமல் 450 கிலோ மீட்டர் பறந்து தானாகவே லேண்ட் ஆனதாம், எனக்கோ பிபி எகிறி கொண்டிருக்கிறது, பாஸ் வேண்டுமென்றே அவரை உசுப்பேத்தி கொண்டிருக்கிறார், உஸ் என்றால் நல்லது நடக்கும் என்கிறார் அந்த பெருசு, கேன்ஸர் குணமாகுதாம், செத்தவன் பிழைக்கிறானாம், பாபா நினைத்தால் எதையும் ஆக்கவும் முடியுமாம், எதையும் அழிக்கவும் முடியுமாம்!
எங்கே எதற்கு வந்தீர்கள் என்றேன், இந்தியாவிலிருக்கும் எல்லா கோவிலையும் சொல்லிவிட்டு கேரளாவில் கோவில் சுற்ற செல்வதாக கூறினார், உலகில் அத்தனை கடவுள் இருக்கிறதா என்றேன், இல்லை அனைத்தும் ஒரே கடவுள் தான் என்றார், ஒருமுறை ”சிவன் செம மூடில் இருந்தப்ப விஸ்ணு பெண் வேடம் போட்டு போய் குனிந்து நின்றாராமே” என கேட்க தொண்டை வரை வந்து விட்டது, வயதானவர்களை ஏன் கடுப்படிக்க வேண்டாம் என விட்டுவிட்டேன், அவரது லிஸ்டில் குருவாயூரும் இருந்தது, சிவன், விஸ்ணுவுக்கு பிறந்தது தான் அய்யப்பன் என பு(ருடா)ராணம் சொல்லுது!
நான் வெளியே சென்றிருந்த சின்ன இடைவெளியில் பாஸ் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதை சொல்லிவிட்டார். பாஸ் அங்கிருந்து ஈரோட்டிற்கு செல்வதால் அவரது வண்டி வந்தததும் ஏறி சென்று விட்டார், நான் மதுரை செல்வதால் எனக்கான வண்டிக்காக காத்து நின்றேன், என் கையை காட்டச்சொல்லி ரேகை பார்த்தார், எனக்கு சுதந்திரமான சிந்தனைகள் என்றார், இன்னும் என்ன என்னமோ சொன்னார் கடைசில் ”உன் கூட வந்தவர் வேஸ்டு” என்றார், நான் அவரிடம் வேலை பார்ப்பவன் என அவருக்கு தெரியாததால் செமையாக ஓட்ட ஆரம்பித்தார், ஒழுங்கா உணவு கூட ஆர்டர் பண்ணதெரியாது, நீ என்ன சாப்பிடுவிவோ அதையே தான் அவரும் ஆர்டர் பண்ணுவார் என!
எல்லாம் முடித்த பின் அவர் தான் எனது பாஸ் என்றதும் அவரது முகம் சுருங்கி விட்டது,
வயதான காலத்தில் அவருக்கு எதற்கு அத்தனை முகஸ்துதி என தெரியவில்லை, பெரிய கடவுள் பக்தர் என வேறு சொல்லி கொண்டார், எங்கள் இருவரையும் அவருக்கு உதவி செய்ய பாபா அனுப்பி வைத்ததாக சொல்லினார், அத்தோடு நிறுத்தியிருந்தால் அவர் நம்பிக்கை என வயதான காலத்தில் கெடுப்பானேன் என்று விட்டுவிட்டேன் ஆனால் முதலில் நர்ஸ் மாதிரி என்று புகழ்ந்தவர், பின்னர் சுயபுத்தியில்லாதவர் என்கிறார், ஏனென்றார் அப்பொழுது பக்கத்தில் இருப்பது நான் மட்டுமே!
அவருக்கு லோயர் பெர்த் தான் அலாட் ஆயிருந்தது, வண்டியில் அவ்ர் ஏறும் பொழுது அங்கே ஒரு பெண் தனது குழந்தையோடு தூங்கி கொண்டிருந்தார், அவரால் எதுவுமே பேசமுடியவில்லை, என்னா சார் பாபா ஆப்பு வச்சிட்டாரான்னு கேக்கலாம்னு அதுக்கு ஆங்கிலத்தில் என்னான்னு தெரியல! அப்போ அவர் முழிச்ச முழி இருக்குதே!
வாழ்க கடவுள் நம்பிக்கை, வளர்க ஊரை ஏமாற்றும் பொழைப்பு!
67 வாங்கிகட்டி கொண்டது:
கடவுள் பெயர்தான் ஏமாற்றுவதற்கு சிறந்த வழி எனப் புரிந்த பிழைக்கத் தெரிந்த கில்லாடி மனிதர்.
நல்ல பயனக் கட்டுரை வால். ஒரு சின்ன குற்றம் கண்டு பிடிக்கும் வேலை.
//நாகர்கோவிலில் ரயிலை ஏறி அமர்ந்தோம், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், கார்த்திக், நக்மா நடித்து வெளிவந்த ”பிஸ்தா” படம் ஒடியது, ஏற்கனவே பார்த்தப்படம் என்றாலும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத நகைச்சுவை, இங்கே ஒரு செய்தி, நான் பெரும்பாலும் இப்படி பேருந்துகளில் பிட்டு(பாதி)படம் பார்த்து தான் டி.வி.டி வாங்கி முழுப்படம் பார்க்கிறேன்//
//அதுக்கு ஆங்கிலத்தில் என்னான்னு தெரியல// இப்படி சொல்லலாம். "Did Baba screw you?" நீங்க சொல்ல நெனச்சத ரொம்ப கேவலமா இல்லாம சொன்னதா இருக்கும். இல்லன்னா அந்த நாலெழுத்து வார்த்தய போட்டுக்குங்க.
இப்படி நிறைய பேர் கிளம்பியிருக்காங்க. பாத்து....
ஏன் ஏன் இப்படி நடக்குது உங்களுக்கு... ஒரு நாள் பாபாவே வந்து.. வாலுக்கு ஒரு நல்ல வழிக்காட்டனும்
இப்படிக்கு D.R.Ashok பெயரில் வந்த பாபா.
followupkku
முதற்கன் வள்ளலார் வாழ்க..
மொத பாதி கேபிள் பதிவ பார்த்த எபக்ட்ஸ்..:))
there are lot of good hotels available in Nagercoil (gowrisankar, aasadh, anjali, vijay,uduppi...)
Aha
வாலு ...நீங்களும் தொண்டைத் தண்ணி வத்திப்போற அளவுக்குக் கத்திக்கிட்டுத்தான் இருக்கீங்க.யார் கவனிக்கிறாங்க.
உங்களையே ஒரு நாளைக்கு வாலு சாமியாராக்கிடுவாங்க.கவனம் !
உங்களுக்குன்னு வகையா வந்து மாட்டறாங்க பாருங்க :)
பயணத்தை சுவாரசியமாக்கியதோடு பதிவையும் பலனுள்ளதாக்கியதற்கு மகிழ்ச்சி!
பாஸு, மேலே இருப்பது பழைய படம் தானே...
வள்ளலார் அவரை காப்பாத்திட்டார்ன்னு நினைச்சிக்க வேண்டியதுதான்.
பாத்துங்க இராசா!
கடைசியில் சுயநலவாதி யாரு என்று அவரே சொல்லிவிட்டார். இந்த மாதிரி இடத்துக்கு தகுந்த மாதிரி ஆளுங்க நிறைய பேரு இருக்கானுங்க ..
கரெக்டா தேடி வருவாங்களோ?
//வாழ்க கடவுள் நம்பிக்கை, வளர்க ஊரை ஏமாற்றும் பொழைப்பு! //
என்ன பன்னுறது அப்படிதான் இருக்கு.... பாம்பு திண்கின்ற ஊருக்கு போனால் நடு துண்டு நமக்கு நண்பா
இப்படி நிறையப்பேர் உண்டு!!
உங்களை மட்டும் பார்த்து தேடி வருவாங்களோ அண்ணா....
பதிவும் பயணமும் அருமை..
பாபான்னா யாரு ! படத்துல ரஜினிக்கு வானத்துல ஸீன் காட்டுவாரே அவுரா
//ஒரு பூஜியத்தை விட்டுடீங்க இன்னு நினைகிறேன். என்னை பொறுத்தவரை வளர்ந்த நாடுகளில் உள்ள அறுபது வயது கிழவி கூட ரொம்ப நல்ல யோசிக்கறா .//
அதையும் பாத்துட்டீங்களா ? நீங்க பலம் தின்னு கொட்டை போட்டவர்தான்
ஓ........
இத அவர் படிச்சு இருப்பாரா.!!!
தல உங்களுக்குன்னே வந்து சிக்குவாங்களோ?
இதெல்லாம் உங்களுக்கு வெச்ச சூனியம்தான் ..... செக்கரம் ஒரு பரிகாரம் பண்ணனும்
வள்ளலார் நாள்’ல ஒரு அசைவ மேட்டரு...பவானியில் ஒரு கடவுள் மறுப்பாளர் ஜோதிடம் பொய் என நிரூபிப்பதாக கூறி,ஜோதிடம் கற்றுகொண்டார்.பின்னர் அது உண்மை என புரிந்துகொண்டார்.ஒரு விசயத்தை பற்றி முழுதும் தெரிந்து கொள்ளாமல்,அரை குறை ஆட்களிடம் வாதாடி பின்னர் அந்த சப்ஜெட்டே பொய் ,பித்தலாட்டம் என குதிப்பது சிருபிள்ளைதனம் என நினைக்கிறேன்.குருடர்கள் யானை யை தடவி கண்டறிவது போலத்தான்.அண்ணாமலை யூனிவர்சிட்டியில் கூட ஜோதிட பாடம் வந்து விட்டது சார்.அந்த ஜோதிட பேராசிரியர்களிடம் வாதம் செய்து பாருங்களேன்...
//வள்ளலார் நாள்’ல ஒரு அசைவ மேட்டரு...பவானியில் ஒரு கடவுள் மறுப்பாளர் ஜோதிடம் பொய் என நிரூபிப்பதாக கூறி,ஜோதிடம் கற்றுகொண்டார்.பின்னர் அது உண்மை என புரிந்துகொண்டார்.ஒரு விசயத்தை பற்றி முழுதும் தெரிந்து கொள்ளாமல்,அரை குறை ஆட்களிடம் வாதாடி பின்னர் அந்த சப்ஜெட்டே பொய் ,பித்தலாட்டம் என குதிப்பது சிருபிள்ளைதனம் என நினைக்கிறேன்.குருடர்கள் யானை யை தடவி கண்டறிவது போலத்தான்.அண்ணாமலை யூனிவர்சிட்டியில் கூட ஜோதிட பாடம் வந்து விட்டது சார்.அந்த ஜோதிட பேராசிரியர்களிடம் வாதம் செய்து பாருங்களேன்... //
இங்க அரை குறை ஆளுன்னு யாரை சொல்றீங்க சுப்பையா வாத்தியாரையா ?
வாதம் என்ன பூதம் என்ன எத வேணாலும் செய்யலாம். வரச்சொல்லுங்க
//பவானியில் ஒரு கடவுள் மறுப்பாளர் ஜோதிடம் பொய் என நிரூபிப்பதாக கூறி,ஜோதிடம் கற்றுகொண்டார்.பின்னர் அது உண்மை என புரிந்துகொண்டார்.//
பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குறேன்னு சொன்ன ஒரு வைத்தியர் பின்னாடி பைத்தியம் ஆயிட்டார்!
ஆர்.கே.எஸ். இந்த மாதிரி கதையெல்லாம் எங்களுக்கும் ஆயிரம் தெரியும்!
//.அண்ணாமலை யூனிவர்சிட்டியில் கூட ஜோதிட பாடம் வந்து விட்டது சார்//
கிளி ஜோசியமா எலி ஜோசியமா ?
இங்க அரை குறை ஆளுன்னு யாரை சொல்றீங்க சுப்பையா வாத்தியாரையா ?//
இந்த கட்டுரையில் இவருடன் வாதாடியுள்ள நபரை சொன்னேன்
கிளி ஜோசியமா எலி ஜோசியமா ?//அதை அங்கு போய் விசாரித்து கொள்ளுங்கள்
//பின்னாடி பைத்தியம் ஆயிட்டார்!//
நல்ல வேளை முன்னாடி ஆயிருந்தா என்ன ஆவறது
//அதை அங்கு போய் விசாரித்து கொள்ளுங்கள்//
பிம்பிளிக்கி பியாப்பி
வாழ்க கடவுள் நம்பிக்கை, வளர்க ஊரை ஏமாற்றும் பொழைப்பு! //
ஹாஹாஹா நல்லாருக்கு பதிவு.
ஆர்.கே.எஸ். இந்த மாதிரி கதையெல்லாம் எங்களுக்கும் ஆயிரம் தெரியும்!//தெரிஞ்சு ஏன் அதன் மீது நம்பிக்கை கொண்டவர்களின் மனதை நோகடிக்கிறீங்க...
//.ஒரு விசயத்தை பற்றி முழுதும் தெரிந்து கொள்ளாமல்,அரை குறை ஆட்களிடம் வாதாடி பின்னர் அந்த சப்ஜெட்டே பொய் ,பித்தலாட்டம் என குதிப்பது சிருபிள்ளைதனம் என நினைக்கிறேன்//
யார் அரை வேக்காடு என தெரிந்து கொள்ள உடனடியாக மருத்துவ பரிசோதனை தேவைப்படுகிறது!
நீங்க முழுசா வெந்துட்டிங்கல்ல! அது போதும் தல!
//தெரிஞ்சு ஏன் அதன் மீது நம்பிக்கை கொண்டவர்களின் மனதை நோகடிக்கிறீங்க...//
இதில் நோவதற்கு என்ன இருக்கிறது! சக்தி படைத்த கடவுள் என் கண்ணை தான் பிடுங்கிட்டு போகட்டுமே! இல்லை எனக்கு யாராவது சூனியம் தான் வையுங்களேன், அடங்கிகிட்டு இருக்கேன்!
ஒருவேளை மஞ்ச கலரு கல்லு போட்டா அமைதியா இருப்பேனோ!?
மஞ்ச கலரு போடாதீங்க ! அப்பறம் கிழிஞ்சிரும் ! வேணா ரோஸ் கலர் போடுங்க
//நீங்க முழுசா வெந்துட்டிங்கல்ல! அது போதும் தல!//
ரெண்டு முட்ட தோச! ஒரு ஆனியன் ஊத்தாப்பம் ஒரு ஆபாயில் பார்சல்
//மனதை நோகடிக்கிறீங்க...//
சொல்லால் அடிச்ச சுந்தரி !
மனம் சுட்டுவிட்ட சோகம் என்னடி !
சொல்லால் அடிச்ச சுந்தரி !
மனம் சுட்டுவிட்ட சோகம் என்னடி !//இது யாருங்க குறுக்க ஒண்டி புலி
இதில் நோவதற்கு என்ன இருக்கிறது! சக்தி படைத்த கடவுள் என் கண்ணை தான் பிடுங்கிட்டு போகட்டுமே! இல்லை எனக்கு யாராவது சூனியம் தான் வையுங்களேன், அடங்கிகிட்டு இருக்கேன்//
இதை விட பெரியார் நிறைய சொல்லிட்டு செத்து போய்ட்டார் அதுக்கெ நாங்க அடங்கல..
//இது யாருங்க குறுக்க ஒண்டி புலி//
கொண்டித் தோப்பு மாமனுக்கு உண்டிச் சோறு ஊட்டி விட்டா ... உச்சி முடி நட்டுக்குன்டி மப்புல ! உன் நெனப்புலதான் போத கூட நிக்குல
//இதை விட பெரியார் நிறைய சொல்லிட்டு செத்து போய்ட்டார் அதுக்கெ நாங்க அடங்கல..//
அவரு யாரைய்ல்லாம் ஒட்டுனாரோ அவனுங்க செத்த பிறகுதான் தான் மண்டைய போட்டார் ! அதுவும் அந்த பாலாப் பண சிக்கன் பிரியாணிய தின்னதால வந்தவென
வால்பையன் கிட்ட சிக்குரவுங்க எல்லாம் ரூம் போட்டு யோசிக்கிற பார்ட்டிகளோ?
//அதுக்கெ நாங்க அடங்கல.. //
அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, இப்பவெல்லாம் பொண்ணுங்க ”அடக்கமான” பசங்களை தான் விரும்புறாங்க.
உங்கள் கொள்கையை மறுபரிசீலனை செய்யுங்கள்!
வரு யாரைய்ல்லாம் ஒட்டுனாரோ அவனுங்க செத்த பிறகுதான் தான் மண்டைய போட்டார் ! அதுவும் அந்த பாலாப் பண சிக்கன் பிரியாணிய தின்னதால வந்தவென//
அவரு மூட நம்பிக்கை யை ஓட்ட வந்தவருன்னு நினச்சேன் அப்ப மூட நம்பிக்கை மண்டய போட்ருச்சா
//அவரு மூட நம்பிக்கை யை ஓட்ட வந்தவருன்னு நினச்சேன் அப்ப மூட நம்பிக்கை மண்டய போட்ருச்சா //
அதுக்கு சாவு மணி அடிக்க தான் நாங்க வந்துருக்கோம்ல, இனி மண்டையை போடும்!
//பொண்ணுங்க ”அடக்கமான” பசங்களை தான் விரும்புறாங்க.//
சுடுகாட்டுலயா?
பாபா-ஜீக்கு பதிலா, பாப்பா-ஜி பத்தி பேசியிருந்தா, எப்படி இந்த பதிவை எழுதி இருப்பீங்க- மிஸ்டர் வால்பையன்?
//பாபா-ஜீக்கு பதிலா, பாப்பா-ஜி பத்தி பேசியிருந்தா, எப்படி இந்த பதிவை எழுதி இருப்பீங்க- மிஸ்டர் வால்பையன்?//
அவரோட செல் நம்பர வாங்கிட்டு வந்துருப்பாரு ! அந்த மேட்டர் அவரு பாசுக்கே கூட தெரியாத மாதிரி பாத்துப்பாரு
எப்பவோ நண்பன் திருமணத்துக்கு மார்த்தாண்டம் போனது...அப்போ அரிசி அங்கே சிவப்பு நிறமாக பெரிய அளவில் இருக்கும். இப்போ எப்படியோ...
boss!!! அது செத்தவிளை இல்ல, சொத்தவிளை....
பாஸுட்ட எல்லாம் சொல்லியாச்சா..?
இந்த பகுத்தறிவுவாதிகள் நிலவில் மனிதன் இறங்கினான் என்றால் நம்புகிறார்கள், ஆனால் ஜோதிடத்தையோ, கடவுளையோ நம்புவதில்லை. இதில் முரண்படுவது என்னவென்றால் இரண்டிலுமே அவர்களுக்கு அனுபவம் இல்லை என்பதே. ஒரு வேலை கடவுளுக்கு 'இயற்கை' என்று பெயர் வைத்து நம்புகிறார்களோ என்னவோ.
எங்க போனாலும் இந்த மாதிரி ஆளுங்க தொல்ல தாங்க முடியல...ஊர ஏமாத்தி பேர் வாங்குறவங்க. நீங்க திட்டிருக்கனும் தல.
உங்களுக்கென்றே வந்து மாட்டுது பாருங்க.....ம்ம்ம்ம்ம் எப்படியோ பலியாடு கணக்காக இருந்திருக்கீங்க....பேச தெரிந்தும் பேசமுடியா சூழலில் வால்பையன்...ஹ்ஹஹஹாஹா.................எல்லாம் அவன் செயல்....ஹ்ஹஹஹ்ஹஹா
தமிழரசி said...
உங்களுக்கென்றே வந்து மாட்டுது பாருங்க.....ம்ம்ம்ம்ம் எப்படியோ பலியாடு கணக்காக ...ஹ்ஹஹஹாஹா........ ....ஹ்ஹஹஹ்ஹஹா..
தல.,
உங்ககிட்ட பேசுனவரும் கால்நடையாம்..
நீங்க ஒரு பலி ஆடாம்..
இம்புட்டும் சொல்லிட்டு என்ன ஆனந்தமா சிரிக்கறாங்க பாருங்க....
மிஸ்டர். வால் பையன்... சொத்தவிளை பீச் க்கு செத்தவிளை ன்னு போட்டா நாளபின்ன யாரு சார் எங்க ஊருக்கு வருவா???
அடுத்த தடவை மார்த்தாண்டம் வரும் போது சொல்லுங்க........ நமக்கு அந்த பக்கம் தான்
வாழ்க கடவுள் நம்பிக்கை, வளர்க ஊரை ஏமாற்றும் பொழைப்பு!
..........சரியான நக்கல். ஹா,ஹா,ஹா,ஹா.....
எல்லாம் தெரிந்த/முடிந்த பாபா அந்த பெரியவரை (பாபா பக்தரை)உங்களிடம் அனுப்பியதை என்னவென்று சொல்வது!
வெள்ளம் வந்து ஒரு ஊரே அழிந்துபோனது. ஊரில் பலரும் இறந்துபோனார்கள். தப்பி ஓடிய சிலர் ஒரு குருவிடம் போய் சேர்ந்தார்கள்.
ஒருவர் குருவிடம் கேட்டார்,”ஐயா, ஏன் கடவுள் என்க ஊரை அழிச்சார்?” .
குரு சொன்னார்,”ஊரில் உள்ள கெட்டவங்களை அழிக்க”.
“எங்க ஊரிலிருந்த நல்லவங்களையும் ஏன் கொன்னார்?.”
குரு யோசித்துவிட்டு, ”கெட்டவங்களுக்கெதிரா சாட்சி சொல்வதற்கு”.
‘நம்பிக்கையுள்ளவன் எல்லாத்துக்கும் விடை சொல்வான்’
//குரு யோசித்துவிட்டு, ”கெட்டவங்களுக்கெதிரா சாட்சி சொல்வதற்கு”.
‘நம்பிக்கையுள்ளவன் எல்லாத்துக்கும் விடை சொல்வான்’//
யோசிச்சா, குழந்தை கூட பதில் சொல்லும்! அதற்கு எதற்கு நம்பிக்கை!
Post a Comment