தமிழர்கள் மட்டுமல்ல, உலகிலுள்ள பலபேருக்கு தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள் தான் கண்ணுக்கு தெரிவார்கள்!ஆனால் வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்த்தால் உண்மை வேறு மாதிரி இருக்கிறது! ரத்தம் தோய்ந்த தீவிரவாதத்தின் வரலாறு பூமியின் இரண்டு பெரிய மதங்களுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டது, அதாவது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே மதத்தின் பெயரால் மாற்று மதத்தவர் கூண்டோடு அழிக்கப்பட்டனர், அந்த மதத்தின் அடையாளங்கள், குறிப்புகள், கலாச்சாரங்கள் அனைத்தும் அழிக்கபட்டுவிட்டது! அந்த மத தீவிரவாதத்தின் தலைவன் கூன்பாண்டியன் என்ற இந்து, கழுவிலேற்றி கொல்லபட்ட 800 மாற்று மதத்தவர்கள் சமணர்கள்!
மதத்தை பற்றி கேள்வி எழுப்பினால் மதவாதிகளின் பதில், கீதையை படித்து தெளிவுருங்கள், குரானை படித்து தெளிவுருங்கள்! மாவோகானில் குண்டு வைத்த பெண் சாமியார் கீதையை படிக்காமலா இருந்திருப்பார், இல்லாமலா அவரை சாமியாராக ஏற்று கொண்டார்கள், டுவின் டவரில் இடித்த இஸ்லாமியன் குரானை படிக்காமலா இருந்திருப்பான்! இல்லாமலா அவனை தேர்வு செய்திருப்பார்கள்! வேதபுத்தகத்தில் நீங்கள் காட்டும் தெளிவுக்கு சமமாக குழப்பத்தை என்னாலும் காட்டமுடியும்!
எவனொருவன் என் மதம் அமைதியே உருவானது என்கிறானோ அவனது வீட்டில் வெடிமருந்துகள் சேமித்து வைத்திருக்கிறான் என சந்தேகம் உருவாகிறது, எவனொருவன் என் மதத்தில் தீவிரவாதம் எனும் புற்றுநோய் பரவி கொண்டிருக்கிறது, என் சகோதர மக்கள் நிலையை கண்டு நான் வருந்துகிறேன் என்கிறானோ அவனுக்குள் மனிதம் இருக்கிறது, மதம் அவன் கண்களை மூடவில்லை என காட்டுகிறது, அவனால் ஒருநாள் மதம் எனும் பேய் ஒழிந்து மனிதம் தழைக்கும் என நம்பிக்கை பிறக்கும்! ஆனால் யார் அவ்வாறு சொல்வது, மாட்டிக்காத வரைக்கும் அவன் என் மதம், மாட்டிக்கிட்டால் அவன் குரானை, கீதையை சரியாக படிக்கவில்லை என பல்டி அடிப்பது!
நான் உன்னிடதில் சமாதானம் செய்யவரவில்லை!, தாய்க்கும்,சேய்க்கும், அண்ணனுக்கும், தம்பிக்கும் பிரிவினை உருவாக்கவே வந்தேன் என பைபிள் சொல்கிறது! நான் யூதர்களை காக்கவே வந்தேன் எனும் இயேசுவின் வசனம், கடவுள் ஒரு இனத்தை மட்டுமே காப்பார், மற்றவர்களையெல்லாம் கைவிட்டு விடுவார் எனும் அவநம்பிக்கையை விதைக்கிறது! உன் அண்டை அயலாரையும் நேசி என்ற அதே குரானில் தான், இறுதிநாளுக்கு முன் கடவுள்(அல்லா) நம்பிக்கையாளருக்கும், நம்பிக்கையல்லாதவருக்கு யுத்தம் மூளலாம் என்றும் இருக்கிறது!, நம்பிக்கையற்றவனால் நீ கொல்லப்பட்டால் உனக்கு சொர்க்கம் நிச்சயம் என சொல்லப்படுவதாலேயே அவன் தற்கொலை படை தீவிரவாதியாகிறான். சத்திரியனுக்கு தொழில் தர்மம் கொலை செய்வது, நீ அவனை கொல்லாவிட்டால் அவன் உன்னை கொல்லுவான் என போதிக்கிறது கீதை, எங்கே இருக்கிறது அமைதி!
விவசாயமே வாழ்வின் ஆதாரம் அனைவரும் கிராமத்து ஓடி சென்று விவசாயம் பாருங்கள் என்ற சீனபுரட்சியும் ஒரு வகையில் தீவிரவாதமே, அந்த சம்பவத்தால் மட்டும் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருப்பார்கள் என்கிறது வரலாறு! ஆட்சி பொறுப்பில் இருந்தாலும், ஹிட்லரும், ராஜபக்ஷேயும் செய்தது தீவிரவாதமே! உன்னால் தானே என் விடுதலை பறிபோயிற்று உன்னை பழிவாங்கினால் என் மனசு ஆறும் என்று ராஜிவ்காந்தியை படுகொலை செய்தது தீவிரவாதமே! மக்களை காக்கவே படையை அனுப்புகிறேன் என்று எண்ணைய் வளத்தை திருடிய புஷ்ஷின் செயலும் தீவிரவாதமே, அவன் என்னை அடிப்பான் நான் மட்டும் வாங்கிகுனுமா என்று தான் மதசண்டையின் ஆரம்பம் தொடங்குகிறது! விட்டுகொடுத்தல் எனும் சொல் மதசார்பை மீறி தன் கெளரவ பிரச்சனையாக மாறிவிட்டது! எங்கிருந்து வரும் அமைதி!
நான் எந்த மதத்தை பற்றியோ, கடவுளை பற்றியோ எழுதினாலும் ஒரே லேபிள் “இறைநம்பிக்கை” மட்டுமே, ஆரம்பத்திலிருந்தே அதே தான், எனக்கு எல்லா மதமும் ஒன்று தான், எல்லா கடவுளும் ஒன்று தான், உங்களுக்கு பல பல வடிவங்களிலும், பல பல பெயர்களில் இருந்தாலும் எனக்கு குழுமனப்பான்மையை உருவாக்கி மக்களிடயே அமைதியை குழைத்து அடிச்சிகிட்டு சாவுங்கடான்னு உருவாக்கப்பட்டதே கடவுள்! அப்படிபட்ட கடவுளை என்னால் எப்படி ஏற்றுகொள்ள முடியும், இதுவரை மனித சமுதாயத்திற்கு எள்ளலவும் பயனில்லாத கடவுளை நான் எப்படி வணங்கமுடியும்!
அமெரிக்காவின் அடக்குமுறைகள் இங்கே பட்டியிலபட்டிருக்கிறது
இந்துத்துவா தீவிரவாதம் இங்கே!
106 வாங்கிகட்டி கொண்டது:
தெளிவான பார்வை உங்களது வால். இறை நம்பிக்கை உள்ள என்னாலே உங்கள் கருத்துக்களை வாசித்து, மதிக்க முடிகிறது. வியக்கிறேன்.
அருமையான பதிவு தல....
இருங்க படிச்சிட்டு வந்து மிச்சத்த சொல்றேன்...
//எவனொருவன் என் மதத்தில் தீவிரவாதம் எனும் புற்றுநோய் பரவி கொண்டிருக்கிறது, என் சகோதர மக்கள் நிலையை கண்டு நான் வருந்துகிறேன் என்கிறானோ அவனுக்குள் மனிதம் இருக்கிறது, மதம் அவன் கண்களை மூடவில்லை என காட்டுகிறது, அவனால் ஒருநாள் மதம் எனும் பேய் ஒழிந்து மனிதம் தளைக்கும் என நம்பிக்கை பிறக்கும்! ஆனால் யார் அவ்வாறு சொல்வது, மாட்டிக்காத வரைக்கும் அவன் என் மதம், மாடிக்கிட்டால் அவன் குரானை, கீதையை சரியாக படிக்கவில்லை என பல்டி அடிப்பது!//
நிறைய யோசிக்க வைத்துவிட்டீர்கள் தல....
நீங்கள் சொல்வது உண்மைதான்...
//என்னாலும் காட்டமுடியும்!//
பங்காளி SOFT நான் காட்டுனா அவ்ளோதான் ! நாறீடும் >>>
//மதத்தை பற்றி கேள்வி எழுப்பினால் மதவாதிகளின் பதில், கீதையை படித்து தெளிவுருங்கள், குரானை படித்து தெளிவுருங்கள்!//
அவர்கள் சொல்ல மாட்டார்கள் ! ஏனென்றால் கீதையும் குரானும் சரோஜா தேவி புஸ்தகம் அல்ல படிக்கறது கொஞ்சம் கஷ்டம் !
//அவன் குரானை, கீதையை சரியாக படிக்கவில்லை என பல்டி அடிப்பது!//
கீதை நான் முழுசா படிச்சிருக்கேன் ! நான் வழக்கமாக சவரம் செய்யும் அழகுக் கலைக் கூடத்தின் சுவரில் பல வருடங்களாக தொங்கிக் கொண்டு இருக்கிறது !
சமுதாயம் பற்றிய உங்கள் தெளிவான பார்வைக்கு வாழ்த்துக்கள்.
நீங்க சொல்றது சரிதாங்க, நீங்க வணங்கவும் வேண்டாம், கொண்டாடவும் வேண்டாம். நல்லதொரு கருத்துகளை அருமையாக பகிர்ந்து இருக்கீங்க. தனி மனிதனின் ஒழுக்கக்கேடான செயல்களுக்கெல்லாம் மதங்களும், கடவுள்களும் ஒரு காரணி அவ்வளவே. நான் தவறு செய்கிறேன் எனில் என் மதமும், கடவுளும் எப்படி பொறுப்பேற்க முடியும். மதம் மட்டும் கடவுளை குறை சொல்லாத ஒரு பார்வை இருந்தால் இந்த மனிதர்களின் குறைகள் தெரியும் என்கிறேன் நான். எழுதப்பட்ட நூல்கள் எல்லாம் புனித நூல்கள் அல்ல, இதற்காகவே வேத நூல் எனும் ஒரு கதையை எழுதி வைத்திருக்கிறேன். இந்த மனிதர்கள் திருந்தாதவரை மனிதம் திருந்தாது என்றுதான் உங்கள் பதிவின் சாரமாக எடுத்துக்கொள்கிறேன்.
அருமை....
இதைத்தான் என்னால் சொல்ல முடியும்...
தொடர்ந்து எழுதுங்கள்...
அழகான ஆர்ப்பாட்டமில்லா வார்த்தைகளுடன் ஒரு எதிர்ப்பு. நல்லாயிருக்கு வால்.
தலைப்பில் உள்ள தீவிரவாதம், ஒழிக்கப்பட வேண்டியது.
சொக்கா எழுதிகின்ன வாலு.. நம்புளுக்கு தான் ஒன்னும் பிரில... இன்னிக்கி டாஸ்மாக் இருக்குதா இல்லியான்னு தான் கவல நம்புளுக்கு..
அம்சாக்கா கடை புரோட்டா.. சால்னா அவ்வளவுதான்.. உலகே மாயம் வாழ்வே மாயம்...
பதிவு சூப்பரு... no questions :)
இப்பவெல்லாம் எழுதும் போது கொஞ்சம் மென்மையான போக்கை கையாள்கிறீர்களோ
அடிக்கிற அடியில் தாரை தம்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா?
//அந்த மத தீவிரவாதத்தின் தலைவன் கூன்பாண்டியன் என்ற இந்து,//
என்னங்க இது. இந்து என்ற சொல்லாடலே இப்பொழுது 100 வருடங்களுக்கு முன் தான் வந்ததுனு ஒரு எடத்துல சொல்றீங்க. ஆனா, இன்னொரு இடத்துல, க்குன்பாண்டியன் செய்ததால் அவன் இந்துனு சொல்றீங்க.
எனக்கு தெரிந்து இந்த 800 கொலைகளுக்கான குறிப்புகளோ அல்லது ஆதாரமோ இது வரை யாரும் கொடுத்தது இல்லை. அப்படியே ஒரு வேளை இருந்தாலும் அது கண்டிக்கதக்கதே. ஆனா பாருங்க, இந்திய வரலாற்றில் இதை போன்ற படுகொலைகள் அதிகமாக நிகழ்ந்திருக்காது என்பது என் கருத்து. இதை விட அதிக, எண்ணிக்கையிலான கொலைகளை கிருத்துவமும் (400 ஆண்டுகால சிலுவை போர்), இஸ்லாமும் செய்துள்ளன. இதெல்லாம் வரலாறு.
பெண் சாமியார் குண்டு வெடித்தாலும் அவளை யாரும் கொண்டாடுவது இல்லை. கொண்டாடும் கும்பல் ஒரு சிறு கூட்டமாக இருக்கும்.
இயேசு என்னவோ நல்லவர் தான். ஆனால், அவர் பெயரால தானே இத்தனை இலட்ச மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்? அதையெல்லாம் விட்டுவிட்டு இதை தான் பெரிது படுத்துவீர்கள்.
சக மனிதனை எந்த பெயர் சொல்லி கொலை செய்தாலும் அவர்கள் தீவிரவாதிகள் தான். தன் மதத்துக்காக கொலை செய்கிறான் என்றால், அந்த மதத்துக்காரர்கள் அவனை ஆதரித்தாலோ / குறைந்த பட்சம் எதிர்க்காமல் இருந்தாலோ அவர்களும் உடன் படுகிறார்கள் என்று தான் அர்த்தம். அவர் செய்வதும் இந்து தீவிரவாதம் தான்.
இந்த பெண் சாமியாரை இந்துக்கள் கண்டிக்காமல் அவரை ஆதரித்தால் அவர் நிச்சயம் இந்து தீவிரவாதி தான். அதற்காக மற்ற மதங்கள் செய்த / செய்கின்ற அட்டூழியங்களை நியாபப்படுத்தாதீர்கள். தவறான விஷயத்துக்கு துணை போனால், அது யாராக இருந்தாலும், அவர்களும் அழிந்து தான் போவார்கள்.
இந்துத்வா தீவிரவாதம் சமீபமாக தான் ஆரம்பித்திருக்கிறது. இதை இந்துக்கள் கூடிய விரைவில் தடுப்பார்கள். தடுக்க வேண்டும். இல்லையென்றால், இவர்களுக்கும் மற்ற மத தீவிரவாதிகளுக்கும் வித்தியாசம் இல்லை.
60 ஆண்டுகளுக்கு முன் கோட்சே நடத்திய கொலைக்கு தண்டனையும் அனுபவித்துவிட்டான் கோட்சே. ஆனால், இன்னமும் அவனை பற்றி பேச்சு ஓயவில்லை. ஆனால், 60 பேரை கொலை செய்த தீவிரவாதிகளை இந்த 'செக்குலர்' அரசு சத்தமில்லாமல் விடுதலை செய்துள்ளது. அதை பற்றி மட்டும் யாரும் கேள்வி கூட கேட்க கூடாது. ஏனென்றால் அவனுக்கு குடும்பம் இருக்கிறது. ஏன், செத்தவனுக்கு குடும்பம் இல்லையா?
அட போங்கப்பா!!!
@ சீனு
பதிவை முழுசா படிக்கலையா!?
நான் எங்கே இந்து தீவிரவாதத்தை மட்டும் எதிர்த்து கொண்டிருக்கிறேன்!
உங்களுடய இந்துத்துவா ஆதரவை இப்படித்தான் காட்டனுமா!?
கம்யூனிசத்திலும் தீவிரவாதம் இருந்தது என்று சொல்லியிருக்கேன் பாருங்க.
ஆணித்தரமான கருத்துக்கள்,,,கண்ணோட்டம்..நல்ல பதிவு...
இப்படிப்பட்ட எழுத்துகளே நாம் இன்னும் வாழ முடியும் என்று நம்பிக்கை தருகின்றன. வாழ்த்துகள்.
***
சத்திரியனுக்கு தொழில் தர்மம் கொலை செய்வது
***
அப்படியா ?
இந்த மாதிரி எழுதறது கூட எனக்கு மிகப்பெரிய தீவிரவாதமா தான் தெரியுது :)-
இப்படி மென்மையா யார் மனசும் நோகாம பதிவு போட்டால் யாருய்யா உன்னை திட்டப்போறா.கைதட்டுகிறேன் வால் பையா
//உங்களுடய இந்துத்துவா ஆதரவை இப்படித்தான் காட்டனுமா!?//
என்னுடைய இந்துத்துவ ஆதரவை இப்படி தான் காட்டனும் என்று இல்லை. வெளிப்படையாகவே காட்டிக் கொள்வேன். என் ஆர்குட் பார்த்தானே உங்களுக்கு தெரிந்திருக்கும்...
இங்கு பிரச்சினையே ஒப்பீட்டில் தான். இந்து தீவிரவாதம் பற்றி பேசுபவர்கள் 2 விஷயங்கள் மட்டும் தானெ பேசுவார்கள். ஒன்று, சமனர்கள் கழுவில் ஏற்றப்பட்டது (அதற்கு ஆதாரம் கேட்டால் தரமாட்டார்கள்). இரண்டு, சமீபமாக கிளம்பியிருக்கும் சாக்வி போன்றவர்கள். அல்லது இவை இரண்டை சுற்றி மட்டுமே இருக்கும். வரலாற்றில் வேறு எதுவும் கிடைக்கவில்லையா?
பிக்பாக்கெட்டுக்கும், கொலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதற்காக பிக்பாகெட்டை போற்ற சொல்ல வில்லை. அதும் ஒழிக்கப்படவேண்டிய ஒன்றே. இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இரண்டும் சம அளவு இல்லை என்று தான் சொல்லவருகிறேன்.
//அடிக்கிற அடியில் தாரை தம்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா?//
ம்ம்ம்ம் ! பொட்டு வெச்சு பூ வெக்காம விடாது போல இருக்கே
வாலு நீங்களா எழுதிருக்கிங்க?அருமை....
//இங்கு பிரச்சினையே ஒப்பீட்டில் தான். இந்து தீவிரவாதம் பற்றி பேசுபவர்கள் 2 விஷயங்கள் மட்டும் தானெ பேசுவார்கள். ஒன்று, சமனர்கள் கழுவில் ஏற்றப்பட்டது (அதற்கு ஆதாரம் கேட்டால் தரமாட்டார்கள்). இரண்டு, சமீபமாக கிளம்பியிருக்கும் சாக்வி போன்றவர்கள். அல்லது இவை இரண்டை சுற்றி மட்டுமே இருக்கும். வரலாற்றில் வேறு எதுவும் கிடைக்கவில்லையா?//
சமணர்கள் வரலாறு சேகரிக்கபட்டு வருகிறது, விரைவில் புத்தகம் அனுப்புகிறேன்!
இந்துத்துவா தீவிரவாதம் பற்றி எழுத மட்டும் இந்த பதிவை ஆரம்பித்திருந்தால் ,குஜராத், கல்கத்தா என போய் கொண்டே இருக்கலாம்! நான் மத தீவிரவாதத்தையே தொட்டு செல்கிறேன்!
நீங்கள் சொல்லவருவது இந்து மதத்தவர்கள் பிக்பாக்கெட்டுகள், மற்ற மதத்தவர்கள் கொலைகாரர்கள்!
தன் மதத்தை நியாயபடுத்துபவனை எப்படி பார்க்க தோன்றும் என பதிவிலேயே சொல்லியிருக்கிறேன்!
:)
//மணிகண்டன் said...
***
சத்திரியனுக்கு தொழில் தர்மம் கொலை செய்வது
***
அப்படியா ?
இந்த மாதிரி எழுதறது கூட எனக்கு மிகப்பெரிய தீவிரவாதமா தான் தெரியுது :)-//
நீங்கள் கீதையை கூட பதிவை படிப்பது போல் ஸ்கிப் பண்ணி, ஸ்கிப் பண்ணி தான் படிப்பிங்களா!?
போர் களத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணனின் உததேசம் என்ன!?
good post
எதிர்பார்த்தது தான்... :))
//போர் களத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணனின் உததேசம் என்ன!?//
வாங்கிய சரக்கை வந்திஎடுத்து அழிக்காதே ! என்று பரமாத்மா சொன்னார்
வால் சமணர்கள் கழுவேற்றல் சைவை Vs சமணச் சண்டை.
இந்து என்ற வார்த்தைப் பிரயோகம் அதற்குப்பிறகு வந்தது.
இந்திய அரசியைல் அமைப்புச் சட்டத்தில் இன்னும் இந்து யார் என்ற குழப்பத்தில் Article 25 (2)(b) இப்படிச் சொல்கிறது.
////Explanation II.—In sub-clause (b) of clause (2), the reference to Hindus shall be construed as including a reference to persons professing the Sikh, Jaina or Buddhist religion, and the reference to Hindu religious
institutions shall be construed accordingly.//
மானாவாரியாக சீக்கியர்கள், ஜெயின்,பெளத்தம் என்று எல்லாவற்றையும் கலந்துகட்டி அடிக்கிறது.
***********
இந்தியாவில் இந்து என்று அறியப்படும் மதம் உண்மையில் வர்ணாசிரமம்தான்.
சைவம், வைணவம், நாட்டார் தெய்வங்கள் என்று எல்லாவற்றிலும் இன்று பொதுவாக இருப்பது கீதையோ அல்லது நான்கு வேதங்களோ இல்லை. சாதிதான் பிராதானம் .
இந்தியாவிற்கு வர்ணாசிரமத்தின் கொடை பார்ப்பனிசம்.
***
சமணர்கள் கழுவேற்றல் என்பது மறைக்கப்பட்ட ஒரு வரலாற்றுத்தகவல். தமிழகத்தில் சமணர்களின் குகைக்கோவில்கள், வரலாறுகள் எல்லாம் ஸ்வாக செய்யப்பட்டுவிட்டது.
நெடிய ஆராய்ச்சி தேவை.
**
சைவமும் அதன் எதிரியான சமணமும் இன்று இந்து என்ற ஒரே குடையில் வந்திவிட்டபின் சொல்ல என்ன இருக்கிறது?
எல்லா மதத்திற்கும் ஒரே அஜெண்டாதான்.
நாய்களுக்க்கு டை கட்டிவிடுவதால் யாரும் அதை வாங்க மிஸ்டர் நாய் என்று சொல்வது இல்லை. அது என்றும் நாய்தான்.
அதுபோல என்ன பெயரில் வந்தாலும் மதங்களின் நோக்கம் ஒன்றுதான்.
**
.
//நம்பிக்கையற்றவனால் நீ கொல்லப்பட்டால் உனக்கு சொர்க்கம் நிச்சயம் என சொல்லப்படுவதாலேயே அவன் தற்கொலை படை தீவிரவாதியாகிறான்.//
இதனால்தான் அல்லது மட்டுமே என்று கூறுகிறீர்களா?
....... :)
....... :)
@ கல்வெட்டு
சைவ, வைணவ, சமண குழப்பங்கள் நிச்சயமாக எனக்குண்டு!
இந்து என்ற பெயர் ஆங்லியேயர்களால் பொதுவாக வழங்கப்பட்டது என அறிவேன்! ஆனால் அவனால் பெயர் சூட்டபட காரணம் அடிப்படையாக ஒன்று இருக்கிறதல்லவா அதை வைத்தே இந்து என்று குறிப்பிட்டேன், அல்லது நான் உருவ வழிபாடு நம்பிக்கையுடய கூன் பாண்டியன் என்று எழுதியிருக்கலாம்!
அதனை மாற்ற விரும்பவில்லை, 24.02.10 வரை நான் இவ்வாறு தான் தவறாக நினைத்து கொண்டிருந்தேன் என்பதற்கு எனக்கு ஆதாரமாக அப்படியே இருக்கட்டும்!
இந்தியாவெங்கும் பலவாறாக இருந்த நாட்டார் தெய்வங்கள் மறைக்கப்பட்டு ஆரியர்களின் கடவுள்கள் திணிக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் ஆகின்றன! வம்சாவழியாக குலதெய்வம் என்ற பெயரில் இயங்குவதால் நாட்டார் தெய்வங்கள் தப்பியது எனவும் சொல்லலாம், எப்போது ஆரிய கடவுள்கள் உள்நுழைந்தனவோ இப்போதே இந்து என்ற பதத்தை குறிப்பிட ஒரு அடையாள பெயர் வந்துவிட்டதாக நான் உணர்கிறேன்!, அப்போது அதற்கு அந்த பெயர் இல்லையென்றாலும்!
*************
மேலும் உரையாலில் கலந்து கொள்வீர்கள் என ஆர்வமுடன் இருக்கீறேன்!
நீங்கள் சொல்வது எல்லாம் மனிதர்கள் செய்த தவறுகள் . இங்கே கடவுள் எங்கே வந்தார் ?
கொஞ்ச நாட்களாகவே ரொம்ப காரமாகவே பதிவு வருகிறதே . இந்த சூட்டை தணிக்க ஒரு ஜாலி பதிவு போடுங்களேன் ..
//நீங்கள் சொல்வது எல்லாம் மனிதர்கள் செய்த தவறுகள் . இங்கே கடவுள் எங்கே வந்தார் ?//
கடவுள் பெயரால் மனிதன் செய்த தவறுகள்! கடவுள் இருந்தா தானே வருவதற்க்கு!
அடுத்த வாரம் சூட்டை தணிப்போம்!
//நம்பிக்கையற்றவனால் நீ கொல்லப்பட்டால் உனக்கு சொர்க்கம் நிச்சயம் என சொல்லப்படுவதாலேயே அவன் தற்கொலை படை தீவிரவாதியாகிறான்.//
இதனால்தான் அல்லது மட்டுமே என்று கூறுகிறீர்களா? //
இதனாலும் என்று கூறலாம்!
இஸ்லாமியர்களுக்கு அம்மதத்தை சாரதவர்கள் அனைவரும் இபிலீஸ் என்னும் சாத்தானின் கைகூலிகள், சாத்தானால் ஏவப்பட்டவர்கள், அதாவது கெட்டவர்கள் என்று வைத்து கொள்வோமே!
சினிமாவில் நல்லவர்கள், கெட்டவர்களை என்ன செய்வார்கள்!?
//சீனு said.........
....எனக்கு தெரிந்து இந்த 800 கொலைகளுக்கான குறிப்புகளோ அல்லது ஆதாரமோ இது வரை யாரும் கொடுத்தது இல்லை. அப்படியே ஒரு வேளை இருந்தாலும் அது கண்டிக்கதக்கதே.
...இதை விட அதிக, எண்ணிக்கையிலான கொலைகளை கிருத்துவமும் (400 ஆண்டுகால சிலுவை போர்), இஸ்லாமும் செய்துள்ளன. இதெல்லாம் வரலாறு.
...பெண் சாமியார் குண்டு வெடித்தாலும் அவளை யாரும் கொண்டாடுவது இல்லை. கொண்டாடும் கும்பல் ஒரு சிறு கூட்டமாக இருக்கும்.
இயேசு என்னவோ நல்லவர் தான். ஆனால், அவர் பெயரால தானே இத்தனை இலட்ச மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்?
அதையெல்லாம் விட்டுவிட்டு இதை தான் பெரிது படுத்துவீர்கள்.
//
வால்,
சீனு என்பவர் கேட்கும் கேள்வி மிகவும் நியாயமானது. சிறந்த ஒன்று.
எனது ஓட்டு "சீனு"க்கே!!
**
"வால்" மற்றும் "சீனு"வின் உரையாடலில் இருந்து எனது புரிதல்.
1. எல்லாரும் * சாப்பிடுகிறார்கள்.
2. * சாப்பிடுவது சரியல்ல என்று வால் சொல்கிறார்.
3. சீனு அதை ஒப்பீட்டளவில் பார்த்து...
Mr X ஒரு கவளம் * சாப்பிடுகிறார்
Mr Y 2 கவளம் * சாப்பிடுகிறார்
Mr Z 10 கவளம் * சாப்பிடுகிறார்...
எனவே Mr X சாப்பிடும் ஒரு கவளம் * ஐ பெரிது படுத்த வேண்டாம் என்கிறார்.
//
அதையெல்லாம் விட்டுவிட்டு இதை தான் பெரிது படுத்துவீர்கள்.//
**
இது சரியே என்று படுகிறது. * சாப்பிடும் போட்டியில் போய் * சாப்பிடுவது தவறு என்று சொல்லக்கூடாது.
யார் எந்த அளவு சாப்பிடுகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்.
வால் செய்வது சரியல்ல.
.
//...குழுமனப்பான்மையை உருவாக்கி மக்களிடயே அமைதியை குழைத்து அடிச்சிகிட்டு சாவுங்கடான்னு உருவாக்கப்பட்டதே கடவுள்! அப்படிபட்ட கடவுளை என்னால் எப்படி ஏற்றுகொள்ள முடியும், இதுவரை மனித சமுதாயத்திற்கு எள்ளவும் பயனில்லாத கடவுளை நான் எப்படி வணங்கமுடியும்!//
இப்டி எழுதியிருக்கீங்க. நான் கொஞ்சம் வித்தியாசமாக எழுதியிருக்கிறேன்.
//தெளிவு பட்ட நம் மனித சமுதாயத்தின் முன்னோர்கள் நமக்காக ஏற்படுத்திக் கொடுத்த 'சுமைதாங்கித் தூண்கள்' நம் கடவுளர்கள். அவைகள் கற்கள்தான்; வெறும் சுதைகள்தான். ஆனால், மனதிற்கு இதம் அளிக்க மனிதனால், மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள். சிறு வயதில் கடவுள் பயம் தேவை - மனத்தை நல்வழிப் படுத்த; வயதும், மனமும் வளர வளர அந்தக் கடவுள் concept தேவையில்லை; செத்த பிறகு மோட்சமாவது, நரகமாவது. இருக்கும்போது உன்னையும் என்னையும் 'மனிதம் உள்ள மனிதனாக' வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும்.//
கொஞ்சம் வித்தியாசம்தான் ...
//* சாப்பிடும் போட்டியில் போய் * சாப்பிடுவது தவறு என்று சொல்லக்கூடாது.
யார் எந்த அளவு சாப்பிடுகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்.//
ஹாஹாஹா!
அது சரி!
கொலைக்கு தூக்கு தண்டனை என கொள்வோம்!
ஒருவன் நூறு கொலை செய்தான் என்பதற்காக அவனை நூறு முறை தூக்கில் போட முடியுமா!?
எது எப்படியோ சீனூ அரசியலில் நின்றால் என் ஓட்டும் அவருக்கு தான்!
(மற்றவர்கள்)சாப்பிடுவதை குறைப்பார் என்ற நம்பிக்கையில்!
மதத்தீவிரவாதத்தை பற்றி மிக நன்றாக சொல்லியிருந்தீர்கள். அப்படியென்றால் மத மிதவாதம் என்று ஒன்று இருக்கிறதா?. அதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?.
மதத்தில் கொலைகாரர்கள் தான் உள்ளார்கள் என்று சொல்லியுள்ளீர்கள், மதமில்லாத உங்களிடத்தில் வன்முறை எண்ணமே இல்லையா?
நீங்கள் மதத்தை எதிர்க்கிறீர்களா? இல்லை வன்முறையை எதிர்க்கிறீர்களா?
அன்பு வாலண்ணா, உங்கள் பதிவில் ஒரு வரலாற்றுப் பிழை இருக்கிறது. வெறும் 800 சமணர்கள் என்று எழுதிவிட்டீர்கள். கழுவேற்றம் செய்தது 8000 சமணர்களை. இப்போதும் மதுரையில் கள்ளழகர் திருவிழாவின் போது கழுவேற்றம் என்று ஒரு திருவிழாவும் நடைபெறுகிறது. ஆதாரம் கேட்போர் மதுரைப் பக்கத்து பெரிசுகளைக் கேட்டால் சொல்வார்கள்.
வாலு இன்னிக்கி ரொம்ப தெளிவா எழுதிடிங்க... என்னாச்சி?, எதுக்கு இப்பிடி? (மப்பு கொஞ்சம் சாஸ்தியா போச்சோ)
சரி கடவுள் அப்பிடின்னு ஒரு கான்செப்டே இல்ல, மதமே இல்ல அப்பிடின்னு வெச்சிகுங்க.
இதுவேரிக்கும் நடந்த இத்தனை கொலை அழிவு எல்லாம் இல்லாம இருந்து இருக்குமுன்னு நம்பரின்களா ?
வேற எதாவது பேருல இதையே தான் செஞ்சு இருப்பானுவ இந்த பாவிக..
ஆச, அதிகாரம், புகழ், அடக்கி ஆளனுமுன்ற வெறி எல்லா மனுசனுக்கும் இருக்கு, அத மாத்த முடியாது.
நான், நான் செய்யுற ஏதோ ஒன்னு, இல்ல இருக்குற ஏதோ ஒன்னு உன்ன விட சிறப்ப காட்டனும், ஒருத்தன் கடவுள வெச்சு காட்டறான் ஒருத்தன் சாதிய வெச்சோ, நெரத்த வெச்சோ காட்டறான்
எல்லா கடவுளும் மதமும் ஆரம்பத்துல ஒரு நல்ல நோக்கத்தோட நல்ல மனுசன்களால உருவாக பட்டது தான், பொறவு போக போக (நம்ம நாடு சனநாயகம் மாதிரி) உருபடாம போச்சி, கெடுத்த நம்பள (அந்த கெடுக்கறது இல்ல) உட்டுட்டு கடவுளமதத்த குத்தம் சொல்லி இன்ன பெரயோசனம் சொல்லு (மப்புல ஓவரா ஒளர்ரனோ)
உடு உடு போயி புள்ள குட்டிங்கள படிக்க வெப்போம் (என்னத்த இன்னுல்லாம் கேக்க படாது)
//மதத்தில் கொலைகாரர்கள் தான் உள்ளார்கள் என்று சொல்லியுள்ளீர்கள், மதமில்லாத உங்களிடத்தில் வன்முறை எண்ணமே இல்லையா?
நீங்கள் மதத்தை எதிர்க்கிறீர்களா? இல்லை வன்முறையை எதிர்க்கிறீர்களா? //
வன்முறையின் ஆரம்பம் மதமாக இருக்கிறதே என வருத்தப்படுகிறேன், எதிர்க்கிறேன்! என்னிடத்தில் வன்முறை எண்ணம் இருக்குமாயின் மாற்றி கொள்ளவே முயல்வேனே தவிர அதை நியாயப்படுத்த மாட்டேன்!
பொருளாதார குற்றங்கள் தனிதனியாக நடக்கின்றன, மத குற்றங்கள் கூட்டம் கூட்டமா நடக்கின்றன! நான் இரண்டையுமே எதிர்க்கிறேன்!
நான் தவறு செய்கிறேன் என்று உணராதவனுக்கு சாதாரணமாக சொன்னால் புரிய மறுக்கிறது, அதனால் தான் இங்கே சில ஆதாரங்களுடன்!
பொருளாதார குற்றவாளிகளுக்கு உளவியல்ரீதியான சிகிச்சை அளிக்கலாம்!
அன்பு வால் (வாழ்),
தன் கருத்தை தீவிரமாக பரப்பும் முயற்சியில் ஈடுபடும் போதுதான் அவ்வாதம் தீவிர வாதம் ஆகிறது.. இதில் பெரும்பாலோனோர் விதிவிலக்கல்ல.. அதில் ஆயுதம் துணையாகும்போது வார்த்தை வன்முறை, வாழ்க்கை வன்முறையாகிறது...
கடவுளை நம்புபவனை நீங்கள் சகித்துக் கொள்ள முடியாததால் நீங்கள் உங்கள் பங்குக்கு தீவிரமாக எழுதுகிறீர்கள்.. உங்கள் வாதத்தை தீவிரமாக்கும் பொருட்டு எல்லா மதங்களையுமே சகட்டுமேனிக்கு பந்தாடுகிறீர்கள்... நாத்திகம் பேசும் (பேசிய) மனிதர்களின் கொள்கைகளால் விளைந்த வன்முறைகளையும் பட்டியலிட்டால் இன்னும் கொஞ்சம் பேர் தெரிந்து கொள்வார்கள்..
உங்கள் முந்தைய பதிவில் நீங்கள் (காட்டுப்) புலிக்கு ஆதரவு என்று கூற வேண்டிய ஒரு நல்ல விஷயத்தில் கூட 'சிவன்' என்று கோடிக்கணக்கானோரால் வணங்கப்படுபவரை கேவலமான வார்த்தைகளால் விமர்சித்தீர்கள்.. இது என்ன வாதம்? தீவிர வாதமா ? மிதவாதமா? ஹிந்து தீவிரவாதி என்று என்னைக் கூறி விடாதீர்கள்...இதையே நீங்கள் வேறொரு மதத் தலைவரையோ, கடவுளையோ சிறுமைப்படுத்திக் கூறியிருந்தாலும் நான் இதையே தான் கூறி இருப்பேன்..
எல்லா மதங்களும் தோன்றிய காலத்தே இருந்த சூழ்நிலைகளுக்கு பொருந்தின.. அந்த சூழ்நிலையில் நாம் வாழாததால் அது குறித்து சரியான பார்வையை நம்மால் எப்படி கூற முடியும்? இன்றைக்கு நாமே வேறு விதமான வாழ்க்கை முறையை உருவாக்கி கொண்டோம்.. இதற்குப் பொருந்தும் நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு, வேண்டாததை தள்ளி விட்டால் பிரச்சினை இல்லை...
தனி மனிதன் யோசிக்க ஆரம்பித்து திருந்தலாம்..அவனை யோசிக்க வைப்பதற்காக வன்மத்தை விதைப்பதும், நம்பிக்கைகளை அவமானப் படுத்துவதும் நியாயமா?
"மதம் சட்டை மாதிரி...உடலை மறைத்து கொள்ள அணிந்து கொள்ளலாம்..உள்ளாடை தெரியும்படி கிழித்துக் கொள்ளக் கூடாது...
என் சட்டை மட்டும்தான் அழகு, உன் சட்டை அசிங்கம் என்று சொல்லும் போதோ அல்லது எனக்கு சட்டையில்லாமல் சுதந்திரமாக இருப்பது பிடித்திருக்கிறது - ஆனால் உன் தந்தையும் தாத்தனும் போட்டு விட்ட சட்டை ஓட்டை - அதனால் எல்லோரும் சட்டையைக் கழட்டுங்கள் என்று சொல்லும்போதோதான் பிரச்சினை தோன்றுகிறது.
ஒன்றிரண்டு ஓட்டையை தைத்துக் கொள்கிறோம்... அதற்காக சட்டையை தூக்கிப் போடச் சொல்லாதீர்கள்...
நன்றி..
//Mr X ஒரு கவளம் * சாப்பிடுகிறார்
Mr Y 2 கவளம் * சாப்பிடுகிறார்
Mr Z 10 கவளம் * சாப்பிடுகிறார்...
எனவே Mr X சாப்பிடும் ஒரு கவளம் * ஐ பெரிது படுத்த வேண்டாம் என்கிறார்.
//
பெரிது படுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை. எவர் தின்றாலும் * ஒன்று தான். ஆனால், உங்களுக்கு 10 * சாப்பிடுபவர்கள் யோக்கியசிகாமனிகள் என்றும், ஒரு * சாப்பிடுபவர்கள் 'மட்டும்' தான் புடுங்கிகள் என்றும் நீங்கள் சொல்வது தான் விளங்கவில்லை.
(சே! சரியான * கணக்கு கூட்டத்தில வந்து மாட்டிகிட்டேன்).
//உங்கள் முந்தைய பதிவில் நீங்கள் (காட்டுப்) புலிக்கு ஆதரவு என்று கூற வேண்டிய ஒரு நல்ல விஷயத்தில் கூட 'சிவன்' என்று கோடிக்கணக்கானோரால் வணங்கப்படுபவரை கேவலமான வார்த்தைகளால் விமர்சித்தீர்கள்//
இது தான் இந்த கூட்டத்தினரிடையேயான பிரச்சினை. இவர்கள் செய்தால் மட்டும் தீவிரவாதம் இல்லையாம். ஆனால், அடுத்தவன் செய்தால் மட்டும் தீவிரவாதமாம்.
நானும் நாத்திகன் தான். எந்த கடவுளும் இல்லை என்று நம்புபவன் தான். ஆனால், அதற்காக அடுத்தவனின் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது கிடையாது, இதை போன்ற கூட்டத்தினரை போல.
..
சீனு சொன்னது..
//ஆனால், உங்களுக்கு 10 * சாப்பிடுபவர்கள் யோக்கியசிகாமனிகள் என்றும், ஒரு * சாப்பிடுபவர்கள் 'மட்டும்' தான் புடுங்கிகள் என்றும் நீங்கள் சொல்வது தான் விளங்கவில்லை.//
சீனு ,
//10 * சாப்பிடுபவர்கள் யோக்கியசிகாமனிகள் என்றும், ஒரு * சாப்பிடுபவர்கள் 'மட்டும்' தான் புடுங்கிகள் என்றும் நீங்கள் சொல்வது//
இப்படி யார் சொல்லியுள்ளார்கள்?
வால் ?
அப்படியென்றால் ஓவர் டூ வால்.
**
சீனு நீங்கள் சொன்னது..உங்கள் தகவலுக்காகாக மட்டும்..
//சீனு said.........
....எனக்கு தெரிந்து இந்த 800 கொலைகளுக்கான குறிப்புகளோ அல்லது ஆதாரமோ இது வரை யாரும் கொடுத்தது இல்லை. அப்படியே ஒரு வேளை இருந்தாலும் அது கண்டிக்கதக்கதே.
...இதை விட அதிக, எண்ணிக்கையிலான கொலைகளை கிருத்துவமும் (400 ஆண்டுகால சிலுவை போர்), இஸ்லாமும் செய்துள்ளன. இதெல்லாம் வரலாறு.
...பெண் சாமியார் குண்டு வெடித்தாலும் அவளை யாரும் கொண்டாடுவது இல்லை. கொண்டாடும் கும்பல் ஒரு சிறு கூட்டமாக இருக்கும்.
இயேசு என்னவோ நல்லவர் தான். ஆனால், அவர் பெயரால தானே இத்தனை இலட்ச மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்?
அதையெல்லாம் விட்டுவிட்டு இதை தான் பெரிது படுத்துவீர்கள்.
//
.
//வன்முறையின் ஆரம்பம் மதமாக இருக்கிறதே என வருத்தப்படுகிறேன், எதிர்க்கிறேன்! என்னிடத்தில் வன்முறை எண்ணம் இருக்குமாயின் மாற்றி கொள்ளவே முயல்வேனே தவிர அதை நியாயப்படுத்த மாட்டேன்!//
நன்றி. சோ...வன்முறையில்லாத மதத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்கள்.
நியாயமான வன்முறை சம்மதமா? அதாவது தவறான செயல்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை சொல்கிறேன். அல்லது எங்கு தவறு நடந்தாலும் அதை பொறுத்துக்கொண்டு வன்முறையில்லாமல் இருப்பீர்களா?
அல்லது எதை வன்முறையென்கிறீர்கள்?? ஏனென்றால் எல்லோருமே வன்முறைக்காக ஏதேனும் ஒரு நியாயம் வைத்திருக்கிறார்கள்.
உங்கள் எல்லாக் கருத்துகளிலும் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், பொதுவாக தீவிரவாதம் என்கிறே ஒன்றை எதிர்த்து இருப்பதால் நான் அதை வரவேற்கிறேன்.
தீவிரவாதத்தை எதிர்ப்பதில் மத வேற்றுமை பார்க்க வேண்டியது இல்லை. வலியில் என் வலி, உன் வலி என்று ஒன்று இருக்கா என்ன?
நன்றி.
http://www.virutcham.com
//இப்படி யார் சொல்லியுள்ளார்கள்?//
Read the article again and the links, please.
...and...I don refer to this post alone, but the entire concept 'created' by you...
சமுதாயம் பற்றிய உங்கள் பார்வை அருமை.
வாழ்த்துகள் தல......
.
//சீனு said...
Read the article again and the links, please.
...and...I don refer to this post alone, but the entire concept 'created' by you...//
சீனு ,
நான் உங்களின் பின்னூட்டத்திற்கு மட்டுமே எனது புரிதல் என்று சொன்னேன்.
எவன் எந்த அளவில் செய்தாலும் தவறு என்பது தவறுதான். அதில் என்ன எண்ணிக்கை அளவீடு தேவை?
"குறைந்த எண்ணிக்கையைப் பெரிது படுத்த வேண்டாம்" என்ற தொனியில் அமைந்த உங்களின் பின்னூட்டத்திற்கு மட்டுமே எனது எதிர்வினை. உலகளாவிய பின்னூட்டச் சுட்டிகள் அனைத்திற்குமானது அல்ல.
.
accepted -:)
.
வேலு,
"வன்முறையின் வரையறை" என்பது அது யாரின் பார்வையில் இருந்து பார்க்கப்படுகிறது என்பதைப் பொறுத்து மாறும்.
ஆட்டை அறுத்துச் சாப்பிடுதல் மனிதனின் பார்வையில் உணவாகவும் (உணவிற்கான நியாயமான தேவை), சக ஆட்டின் பார்வையில் வன்முறையாகவும் இருக்கும்.
Finding Nemo படத்தில் மீனுக்காக நாம் வருந்துவோம், Brother Bear படத்தில் அந்த Bear சாப்பிட மீன் கிடைக்காதா என்று வருந்துவோம்.
எனவே இதுதான் வன்முறை அல்லது இதுதான் தீவிரவாதம் அல்லது நல்லது என்று எந்த வரையறையும் இல்லை.
எல்லாம் இடம் ,காலம் சூழல் , நமது பார்வை, நாம் முன்னரே அறிந்துள்ள வரலாற்றுத் தகவல்கள் என்று பல காரணிகளைப் பொறுத்து மாறும்.
****
மதம் என்பது ஒரு குழு அரசியல்.
உங்களை ஒருவர் சினப்படுத்திவிட்டார். நீங்கள் அவரை அடிக்கிறீர்கள். உங்கள் பார்வையில் நீங்கள் செய்வது சரி. அவரது பார்வையில் அதே செயல் தவறு. இது இருவருக்கு இடையே உள்ள பிரச்சனை.
ஆனால் "கட்டமைக்கப்பட்ட மதத்தில்" ஒருவன் ஏதேனும் ஒரு விமர்சனம் வைத்தால் , அதை ஏற்க அல்லது எதிர்க்க உலக அளவில் ஒரு பெரிய கூட்டமே இருக்கும். ஏன் என்றால் மத அரசியலின் அளவு பெரியது. அதன் தாக்கமும் அதிகம்.
மதத்தால் விதைக்கப்பட்ட அழிவுகள் இப்படிப்பட்டவை.
**
தனிமனித குணங்களை மதத்தால் நல்வழிப்படுத்த இயலவில்லை என்றால் எதற்கு மதம் என்பதே கேள்வி.
இல்லை மதம் நல்வழிப்படுத்துகிறது என்றால் , ஏன் இவ்வளவு மதச் சண்டைகள் ?
**
1. மதமற்ற மனிதனும் சண்டை போடுகிறான்.
2. மதம்பிடித்த மனிதனும் சண்டைபோடுகிறான்....
எனும் போது மதத்தின் பங்கு இங்கே என்ன என்பதுதான் கேள்வி? (குறைந்தபட்சம் எனது கேள்வி)
**
//இது தான் இந்த கூட்டத்தினரிடையேயான பிரச்சினை. இவர்கள் செய்தால் மட்டும் தீவிரவாதம் இல்லையாம். ஆனால், அடுத்தவன் செய்தால் மட்டும் தீவிரவாதமாம்.//
நான் எங்கேயும் என்னை நியாயப்படுத்தவில்லை!
//நானும் நாத்திகன் தான். எந்த கடவுளும் இல்லை என்று நம்புபவன் தான். ஆனால், அதற்காக அடுத்தவனின் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது கிடையாது, இதை போன்ற கூட்டத்தினரை போல. //
இன்னொருமுறை சொல்லுங்க!
:)
//நன்றி. சோ...வன்முறையில்லாத மதத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்கள்.//
அப்படி தான் ஆரம்பித்தது! பின் என் மதம் பெருசா, உன் மதம் பெருசான்னு ஆரம்பிச்சு இங்க வந்து நிக்குது!
//நியாயமான வன்முறை சம்மதமா? அதாவது தவறான செயல்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை சொல்கிறேன். அல்லது எங்கு தவறு நடந்தாலும் அதை பொறுத்துக்கொண்டு வன்முறையில்லாமல் இருப்பீர்களா?
அல்லது எதை வன்முறையென்கிறீர்கள்?? ஏனென்றால் எல்லோருமே வன்முறைக்காக ஏதேனும் ஒரு நியாயம் வைத்திருக்கிறார்கள். //
நீதிமன்றத்தில் குற்றவாளிக்காக வாதடும் போது சூழ்நிலை, சந்தர்ப்பம், மனநிலை போன்ற பல விசயங்களை அலசுகிறார்கள், முன்னரே சொன்னது போல் பொருளாதார குற்றங்கள் வேறு வகை மதரீதியான குற்றங்கள் வேறு வகை!
உன் உயிருக்கு ஆபத்து என்றால் நீயும் வன்முறையில் ஈடுபடுவதை தவிர வேறுவழியில்லை என்பது தான் உயிரியல் தத்துவம்! இது எல்லா உயிர்களுக்கும் சமமானது!
komensukku
test
ஆச்சர்யமான உலகம் இது !!!!
வால்பையன் said... @ February 25, 2010 5:22 PM
உங்களுடய இந்துத்துவா ஆதரவை இப்படித்தான் காட்டனுமா!?
//
*****
சீனு said... @ February 25, 2010 6:19 PM
//என்னுடைய இந்துத்துவ ஆதரவை இப்படி தான் காட்டனும் என்று இல்லை. வெளிப்படையாகவே காட்டிக் கொள்வேன். என் ஆர்குட் பார்த்தானே உங்களுக்கு தெரிந்திருக்கும்...//
சீனு said... @
February 25, 2010 8:25 PM
// நானும் நாத்திகன் தான். எந்த கடவுளும் இல்லை என்று நம்புபவன் தான். //
???
.
வால்பையன்,
வெறுமனே மதநம்பிக்கையும், மூடநம்பிக்கைகளும் மட்டும் மதத்தீவிரவாதத்தை தோற்றுவிப்பதில்லை. அதை அரசியல் சமூக, பொருளாதாரக் காரணங்களே தீர்மானிக்கின்றன. அதுவும் உலகம் பூராவும் ஒரே மாதிரியாக அமைவதில்லை.
சான்றாக இசுலாமிய பயங்கரவாதம் என்று சொல்லப்படுவதைப் பார்த்தால் இது ஏதோ சில முட்டாள்தனமான மதவாதிகளால் உருவாக்கப்பட்டது போல தோன்றலாம். அது உண்மையல்ல.
இசுலாமியர்கள் அதிகம் வாழும் வளைகுடா நாடுகளில் இருந்த ஜனநாயகவாதிகள், கம்யூனிஸ்ட்டுகளைக் கொன்று மன்னர்களும் சர்வாதிகாரிகளும் பரம்பரை ஆட்சியை நிறுவுவதற்கு காரணம் அமெரிக்கா. பெட்ரோல் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக அங்கே ஜனநாயகத்தை தடை செய்து மதவாதத்தை ஊக்குவித்த்து அமெரிக்காதான்.
சதாம் உசேன், பின்லேடன், தாலிபான் எல்லாரும் அமெரிக்க தயாரிப்புகள்தான். பின்னர் இவர்கள் அமெரிக்காவிற்குத் தேவைப் படவில்லை என்பதால் இப்போது இசுலாமிய பயங்கரவாதம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் இசுலாமிய தீவிரவாதம் என்பது இந்துமதவெறியின் எதிர்விளைவு. மசூதி இடிப்பிற்கும், குஜராத் இனப்படுகொலைக்கும் காரணமான இந்துமதவெறியர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால் இசுலாமிய தீவிரவாதம் இங்கே வந்திருக்காது.
இப்படி நாட்டுக்கு நாடு மதத்தீவிரவாதங்களின் பின்னணி மாறுபடுகிறது. இதை நாம் நேரில் சந்திக்கும் போது விரிவாக பேசலாம்.
.
வினவு,
நாட்டுக்கு நாடு மதத்தீவிரவாதங்களின் காரணம் மாறுகிறது.
அமெரிக்கா அரபு நாடுகளில் விளையாடுகிறது.
இந்தியா பாகிஸ்தான் தனக்குள்ளே விளையாடுகிறது?
ஆனால் சொல்லி வைத்தாற்போல் ஏன் அமெரிக்கா Vs இஸ்லாம் நாடுகள் இந்து Vs இஸ்லாமியர்கள் என்று இஸ்லாத்தில் முடிகிறது?
ஏனென்றால் இஸ்லாத்தில் சீண்டப்படக்கூடிய பழமைவாதங்கள் உள்ளது.
இலங்கைப் பிரச்சனையை இந்து பெளத்தம் என்று அல்வா கிண்ட பி.ஜே.பி முயற்சி செய்தது. அந்த வாதம் இந்து பெரும்பான்மை நாட்டில் அது தமிழ் நாட்டு எல்லையைக்கூட தாண்டவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக கம்யூனிஸ்டுகளின் முன்னோடி உலக அறிவாளி இந்து ராமே இதை இந்துப்பிரச்சனையாகப் பார்க்காமல் இலங்கரத்னா பிரச்சனையாகப் பார்த்தார்.
****
இணையத்தில் நீங்கள் பைபிளையும் , வர்ணாசிரமத்தியும் விமர்சித்தால் யாரும் அதைச் சீண்டமாட்டார்கள்.
தாலியைத் தூக்கி "நீயா நயா" வில் தெருவில் எறிந்தால்கூட யாரும் சீந்தமாட்டார்கள்.
ஆனால் ... "அல்லா என்பது அரபியில் கடவுள்" அது எல்லாக் கடவுளுக்கும் பொதுவான் அரபி வார்த்தை என்றோ,
இஸ்லாத்தில் அறிவியல் இல்லை என்றோ... அல்லது பர்தா பற்றி வாஙக பேசுவோம் என்று "நீயா நாயா" அழைத்தாலோ ... இஸ்லாம் மதவாதிகளிடம் இருந்து ஆப்பு வந்துவிடும்.
சுலபத்தில் உணர்ச்சிவசப்படு விலைபோகக்கூடியதாக உள்ள எதுவும் விலைபேசப்படும்.
பின் லேடன், சதாம், குவைத் நாடு, அரபி நட்டின் அரசர்கள் என்று இவர்கள் எல்லாம் எபப்டி விலைபோகக்கூடியவர்களாகவே உள்ளார்கள்? அமெரிக்கா ஆட்டிப்படைக்கிறது.
**
உங்களை ஜெயலலிதா விலைக்கு வாங்கி அவர் கருத்தை உங்கள் பதிவுகளில் எழுத வைத்தால் அது விலைபோன உங்களின் குற்றமா ? அல்லது ஜெயலலிதாவின் குற்றமா?
(மன்மோகன் எப்படி விலைபோனர் என்று கேட்டு காமெடி செய்யக்கூடாது. அவர் ஸ்டாக் பேப்பர் மாதிரி. அவரை அவரே விற்க முடியாது. எல்லாம் அந்த ஸ்டாக்கை வைத்து இருக்கும் ஓனர் அம்மாவின் வர்த்தகம்.)
***
சென்ற நூற்றாண்டுகளில் சைவம்,வைணவம் என்று இந்தியாவில் ஆடி ஓய்ந்துவிட்டது.
சிலுவைப்போர்,சூனியக்காரிகள், ஜெர்மானிய நிறவெறி என்று உலக அளவில் பல சித்தாந்தங்கள் ஆடி ஓய்ந்துவிட்டது.
இந்த நூற்றான்டு இஸ்லாத்தின் ஆண்டு. இதுவும் ஒரு நாள் மாறி புதியதாக வேறு மதம் அல்லது சித்தாந்தம் ஆட்டைக்கு வரும்.
**
தங்கள் பணி தொடரட்டும்..சச்சின் 200பற்றி எழுதிக்கொண்டு இருக்கும் பதிவர்களில் தங்களைப் போன்ற ஒரு சில பதிவர்களின் எழுத்துக்களே எனக்கு மிகுந்த நம்பிக்கை தருகிறது. மதத் திவீரவாதம் இல்லாத மதங்களே கிடையாது..திவீரவாதத்தில் என்ன பாகுபாடு..நாங்கள் கொஞ்சம் நீங்கள் நிறைய என்று..எழுதுங்கள் நிறைய..திவீரவாதத்தையும் மதச்சகிப்புத் தன்மையையும் குழப்பிக் கொள்ளக்கூடாது.
உஙகளைப் போன்றவர்களிடம் தான் எதிர்வரும் காலம் உள்ளது.. வாழ்த்துக்கள் ..
தாங்கள் ஈரோடு என்று நினைத்து இருந்தேன்,,சிவகங்கை,கருப்பாயூரணி என்றதும் எனக்கு சந்தோஷம்.பார்க்கலாம் என்ற விருப்பம்..
நாட்டார் தெய்வங்கள் பற்றிய பெரியார் சிந்தனைகள் பற்றி அய்யா தொ.ப.எழுதிய நூல் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளேன் .. எனது வலைத்தளத்தில் பார்க்கவும்.. தொ.ப.,வின் அந்தப் புத்தகத்தை நேரம் கிடைத்தால் வாங்கிப் படிக்கவும்.
Hi. I love Your post. I love Sachin the Master.
Have a look @ here too.
Anjali Tendulkar Rare Photos
வால், தலைப்புல சந்திப்பிழை.
***
நீங்கள் கீதையை கூட பதிவை படிப்பது போல் ஸ்கிப் பண்ணி, ஸ்கிப் பண்ணி தான் படிப்பிங்களா!?
போர் களத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணனின் உததேசம் என்ன!?
***
பதிவானாலும் சரி, கீதையானாலும் சரி - காண்டக்ஸ்ட் புரிஞ்சிக்க முயற்சி செய்யணும் :)-
மெத்தப்படித்த, பதவியாசையற்ற, எளிதில் உணர்ச்சிவசப்படாத மன்மோகன், பிரணாப் மற்றும் சிதம்பரம் போன்ற பொருளாதார வல்லுனர்கள் அமெரிக்காவின் சூழ்ச்சிகளுக்கு பலியாகும் போது சர்வாதிகார சுகம் கண்ட மன்னர்களும் அதிபர்களும் எம்மாத்திரம். இந்த நூற்றாண்டு இஸ்லாமிய நூற்றாண்டு அல்ல. எண்ணெய் வள நூற்றாண்டு. மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் இருக்கும் வரை உலக அளவில் இந்த ஆட்டம் தொடரும். இந்தியாவில் இந்துத்துவம் இந்த ஆட்டத்தைப் பயன்படுத்தி பதவி ஆதாயம் தேடவே முனையும்.
வழி மொழிகிறேன்
.
S..
நீங்கள் சொன்னது எல்லாம் சரி ஆனால்... //மெத்தப்படித்த, பதவியாசையற்ற, எளிதில் உணர்ச்சிவசப்படாத மன்மோகன், பிரணாப் மற்றும் சிதம்பரம் போன்ற பொருளாதார வல்லுனர்கள்// ......இது பெரிய காமெடி
மனிதன் என்றால் உணர்ச்சி வேண்டும்.
அந்த "உணர்ச்சி" அவனுக்கு "வச"ப்படவேண்டும்.
அதாவது உணர்சியை தன் வசப்படுத்தி நெறிப்படுத்தி கையாளாத் தெரிய வேண்டும்.
அவன் படும் உணர்ச்சி அவன் அளவில் சமூகத்தை நலனுக்காக இருக்க வேண்டும்.
-----------------
ப.சி நிதியமைச்சராய் இருந்தபோது விதர்பாவில் நடந்த விவசாயக் கொலைகள் எதையும் அவர் கண்டுகொண்டதே இலை.
ஆனால், பங்கு மார்க்கெட்டில் ஒரு சின்ன சத்தம் என்றால் ஓடி வந்து விளக்கம் கொடுப்பார். இப்போது உள்துறையில் இருந்துகொண்டு என்ன செய்கிறார்? மணிப்பூரில் நடக்கும் கொடுமையை என்றாவாது பேசியிருப்பாரா?
குண்டுவெடித்தால் மட்டும் பேட்டி கொடுக்க அமைச்சர் தேவை இல்லை. அரசாங்க அதிகாரிகள் போதும்.
இன்னொருவர் விவசாயச அமைச்சராய் இருந்து கொண்டு கிரிக்கெட் நடத்துவதில் காலம் தள்ளுகிறார். சர்க்கரை விலை ஏறுகிறது என்றால்.."ஏன் சர்க்கரை சாப்பிட வேண்டும்" என்கிறார்கள் அவரின் கட்சிக்காரர்கள்.
http://www.indianexpress.com/news/pawar-under-fire-ncp-mouthpiece-says-not-eating-sugar-wont-kill/577020/
"சாப்பிட ரொட்டி இல்லை" என்று சொன்னால் "கேக் சாப்பிடலாமே" என்று சொன்ன மன்னர்களின் வாரிசுகள் இவர்கள்.
இவர்களை வழிநடத்தும் மன்மோகன் என்ன செய்வது என்று தெரியாமல் மற்ற ஒருவரின் கட்டளைக்கு காத்து இருக்கிறார்.
உள்ளூரில் ஒருவர் ..... விடுங்கள் ...சபிக்கப்பட்ட நாடு இந்தியா :-((((
.
தல பிரயோசனமில்லாக் கடவுளை நாம் வணங்கவும் தேவையில்லை, மதிக்கவும் தேவையில்லை. நல்ல பார்வை தல...
எண்ணாயிரம் என்ற ஊரில் இருந்த சமணர்கள் தான் போட்டியில் தோற்று தாமாகவே கழுவேறினார்களாம். அதனால் எண்ணாயிரம் சமணர்களைக் கொன்ற கூன் பாண்டியன் என்று அவனுக்கு பட்டப் பெயர்.(?) மிகவும் பிரபலமான இந்த விளக்கம் இங்கு ஏனோ தட்டுப்படவில்லை. வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. 72 பின்னூட்டங்களிலும் தப்பி விட்டது. என்னத்த சொல்ல,,,,,
//அன்பு வாலண்ணா, உங்கள் பதிவில் ஒரு வரலாற்றுப் பிழை இருக்கிறது.//
அதனாலென்ன தங்காய் ! பிழைக்கொரு பொன் கழித்து மீதம் மட்டும் தந்தால் போகிறது
//நாய்களுக்க்கு டை கட்டிவிடுவதால் யாரும் அதை வாங்க மிஸ்டர் நாய் என்று சொல்வது இல்லை. அது என்றும் நாய்தான்.//
புதிய தத்துவம் 9856 !
//இப்படி நாட்டுக்கு நாடு மதத்தீவிரவாதங்களின் பின்னணி மாறுபடுகிறது. இதை நாம் நேரில் சந்திக்கும் போது விரிவாக பேசலாம்.//
யாருக்கு மூக்கு ஓடைப் போவுதோ தெரியல !
நல்ல பதிவு தல.., எல்லா நூற்றாண்டுகளிலும் ரத்த ஆறு ஓடி உள்ளது.., அவை அனைத்தும் கடவுளின் பெயரால் செய்யப்பட்ட கொலைகளே
மதம் என்றால் religion. யாரோ ஒருவரால், இப்படித்தான் கடவுள்; இவைதான் உங்களிடம் எதிர்பார்க்கப்படுகின்றன; எதிர்பார்ப்பின்படி வாழுங்கள் எனச்சொல்கிறார். அவரே அவர் கருத்துகளடங்கிய நூலை எழுதுகிறார்; அல்லது அவர் சொன்னதாக மற்றவர்கள் எழுதுகிறார்கள்.
This is the main characterristic of a religion.
A founder,
one or more books,
many followers who accept his teachings.
This is the religion you are talking about here. This is the religion from which has emerged the so-called fundamentalism, or terrorism.
இம்மதம்தான் உங்கள் பிரச்சனை. இல்லயா?
நான் அடிக்கடி (இங்கேயும் வெளியேயும்) சொல்வது:
மதம் வேறு. ஆன்மிகம் வேறு. ஆன்மிகத்துக்கு மதம் துணபுரியலாம். ஆனால் கண்டிப்பாக தேவையில்லை.
ஆன்மிகம் என்பது spirituality. அது மதம் உள்ளவருக்கு இல்லாமலும் இருக்கலாம்.
பாமரமக்களுக்கு மதங்கள் ஒரு கலாச்சாரத்தையும் தருவதால், மதங்களுக்கிடையே நடப்பது ஒரு கலாச்சார ஆக்கிரப்பு (Power to impose one culture upon a people replacing or annihilating their indigenous culture) இதுவே மதத்தீவிரவாதத்தின் மூலம்.
கோடானுகோடிக்கணக்கான இந்துக்களுக்கும், கிறுத்தவர்களுக்கும், இசுலாமியருக்கும், பவுத்தர்களுக்கும், ஜெயினர்களுக்கும், சீக்கியர்களுக்கும்
(இன்ன பிறமத மக்களுக்கும்) மதங்கள் தீவிரவாதமில்லா வாழ்க்கையைத் தருகின்றன. அவர்கள் அமைதியாகத்தான் வாழ்கிறார்கள்.
அவர்களை ஏன் வா.பை கண்டு கொள்ளவில்லை?
கடவுள் உண்டு என்று நம்பிவாழ்ந்தால், ஒருவன் கெட்டவனாதில்லை. நம்பாவிட்டால் அவன் நல்லவனாகிவிடுவான் என்றும் சொல்வதற்கில்லை.
//கடவுள் உண்டு என்று நம்பிவாழ்ந்தால், ஒருவன் கெட்டவனாதில்லை. நம்பாவிட்டால் அவன் நல்லவனாகிவிடுவான் என்றும் சொல்வதற்கில்லை.//
பன்ச்சு போதும் தல ! நீ பில்ட் அப்ப ஏத்து
//அவர்களை ஏன் வா.பை கண்டு கொள்ளவில்லை?//
அம்மணமா திரியரவனதான் கோவணம் கட்ட சொல்லணும் ! உடுத்திட்டு இருக்கரவன்கிட்ட அத நீட்டுனா நல்லாவா இருக்கும்
//யாருக்கு மூக்கு ஓடைப் போவுதோ தெரியல !//
நீங்க கூட இருக்கும் போதுமா?
@@@நாத்திகம் பேசும் (பேசிய) மனிதர்களின் கொள்கைகளால் விளைந்த வன்முறைகளையும் பட்டியலிட்டால் இன்னும் கொஞ்சம் பேர் தெரிந்து கொள்வார்கள்..///
எனக்கு தெரிஞ்சு எந்த கோவிலையும் நாத்திகன் இதுவரைக்கும் உடைச்சதிள்ள..பொம்பளைய கோவிலுக்குள்ள கூட்டிட்டு பொய் ப்ளூ பிலிம் எடுத்ததில்ல...நீங்க எத சொல்றீங்கனு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சார்...//இயேசு இருக்காருன்னு சொல்றதுக்கு நக்மா தேவபட்ற மதத்துக்கும் தான் கடவுள் இருக்காருன்னு நிரூபிக்க ஜிகாத்ங்கற பேர்ல அடுத்தவன கொல்ற மதத்துக்கும் ,சங்கர மடத்துக்குள்ள எழுவது வயசுல செக்ஸ் தேவபட்ற மாண்புமிகு சங்கராசார்யார கடவுளா நெனைச்சு போய் அவர்கிட்ட மண்டிபோட்டு பிச்ச எடுக்கற மதத்துகிட்டையும் போய் சொல்லுங்க சார். இதெல்லாம் தப்புன்னு...இப்போ கூட குரல் குடுக்கலைனா நாத்திகம் செத்துரும் சார்...இனிமே எங்க குரல் சத்தமா கேக்கும்...கேக்கலைனா கூப்டு செவுட்டு அடிச்சு சொல்லுவோம்..நீ பண்றது தப்புன்னு...!!!!!
//கேக்கலைனா கூப்டு செவுட்டு அடிச்சு சொல்லுவோம்..நீ பண்றது தப்புன்னு...!!!!!
//
ம்ம்ம்ம் ... கிளப்புங்கள்
வாலு...தொடர்ந்து அசத்தலான பதிவுகள்.விஷயத்தைச் சரியா விளங்கப்படுத்த உங்களால மட்டும் சரியா முடியுது.பாராட்டுக்கள் வாலு.
//நீங்க கூட இருக்கும் போதுமா?//
புயலாச்சு பெரும் மழையாச்சு இந்த வெளக்கு அதிலும் எரியுது எரியுது !
@ வால் பையன்
..// பெருசா ஆச்சர்யபடுறதுக்கு ஒண்ணுமில்லை, அது மனிதனுக்கே உரிய குணம் தான், எங்க கூட்டம் இருந்தாலும் நம்ம மக்களால எட்டிபார்க்காம இருக்க முடியாது, உதாரணத்துக்கு சொல்லனும்னா குரளி வித்தை காட்டுறவன் கூடவே ஒரு நாலு பேரை வச்சிருப்பான், முதலில் அவனுங்க தான் சுத்தி நிப்பானுங்க, அரைமணி நேரத்தில் இருபது, முப்பது பேர் சேர்ந்திருவாங்க, ஆனா கடைசி வரைக்கும் அவன் கூடவே இருந்த அந்த நாலை பேரை நம்மால கண்டுபுடிக்கவே முடியாது, இப்பெவெல்லாம் அந்த மாதிரி வித்தை காட்டும் பொழுப்பு நடக்கிறதில்லை, ஆனாலும் மனுசன் புத்தி மட்டும் மாறாதே, அதனால தான் பெரும்பான்மைகிட்ட தன்னை ஒப்பு கொடுத்துகிட்டு சுத்துறான்!//..
@ வால் பையன்
..//டிஸ்கி:எனக்கும் சலிப்பா தான் இருக்கு, என்ன தான் சொன்னாலும் யோசிக்கவே மாட்டோம்னு சொல்றவங்களுக்கு திரும்ப திரும்ப சொல்லனுமான்னு, ஆனா இப்படி கொஞ்சமாவது யோசிக்கிறதால தான் எனக்கு இன்னும் கிறுக்கு பிடிக்காம இருக்கு!//..
@ மோனி
எத்தன பேரு வந்தாலும்
நீ சலிக்காம விளையாடு நண்பா...
உன்னை நேர்ல சந்திக்கணும் ...
விரைவில் வாய்ப்பிருந்தா சந்திப்போம்..
மெயிலிடுறேன்
அல்லது
அலைபேசுறேன்...
முட்டாள்கள்
இந்தியாவுக்கு மட்டுமா சொந்தம்?
அது உலகத்துக்கே சொந்தம்.
- தந்தை பெரியார்
தல, பின்னி பெடலெடுத்து ஒடச்சு ஓடு கமுதறீங்க...
//மக்களை காக்கவே படையை அனுப்புகிறேன் என்று எண்ணைய் வளத்தை திருடிய புஷ்ஷின் செயலும் தீவிரவாதமே, அவன் என்னை அடிப்பான் நான் மட்டும் வாங்கிகுனுமா என்று தான் மதசண்டையின் ஆரம்பம் தொடங்குகிறது! விட்டுகொடுத்தல் எனும் சொல் மதசார்பை மீறி தன் கெளரவ பிரச்சனையாக மாறிவிட்டது! எங்கிருந்து வரும் அமைதி//
என்ன சொல்ல வர்ரீங்க! அமெரிக்கா என்றொரு நாடு. ஈராக்கை, ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தால், விட்டுகொடுத்துவிட்டு அந்த மக்கள் அமைதி காக்க வேண்டுமா?
// உன்னால் தானே என் விடுதலை பறிபோயிற்று உன்னை பழிவாங்கினால் என் மனசு ஆறும் என்று ராஜிவ்காந்தியை படுகொலை செய்தது தீவிரவாதமே//
போகிறபோக்கில் பல உயிர்கள் போனதை விடுதலை என்ற ஒரு வார்த்தையில் அடக்கிவிட்டீர்களே! ராஜீவும், அவனுடைய அம்மாவும் இலங்கையில் கொளுத்தி போட்ட வெடிதான் இன்று ஈழத்தமிழர்வாழ்வை குப்பைமேடக்கியது.
உங்களின் இந்தக் கட்டுரையை நீங்கள் எழுதினீர்களா? அல்லது கமலஹாசன் எழுதிக் கொடுத்தாரா? சரியாக குழப்புகிறது.
எனக்குப் புரிந்தவை...இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகின் சிறந்த மதத்தீவிரவாதி கூன்பாண்டியன் என்கிறீர்கள். மதவாதிகளைப் பற்றி தங்கள் கருத்தை சொல்கிறீர்கள். இனப்பிரச்சனை, கம்யுனிசம், அமெரிக்க சர்வாதிகாரம் என்று ஒரு சுற்றுவந்து... விட்டுக்கொடுத்தால் அமைதி ஏற்படும் என்று அகிம்சையை போதிக்கிறீர்கள்.
.
//
Blogger Jo Amalan Rayen Fernando said...
கடவுள் உண்டு என்று நம்பிவாழ்ந்தால், ஒருவன் கெட்டவனாதில்லை.
//
தோ ..இங்க பாருங்க மக்களே
ஜெயிலில் களி தின்னும் எல்லாரும் கடவுளை நம்பாதவர்களே.
கடவுளை நம்பியவன் கெட்டவன் ஆவதே கிடையாது.
ரோட்டில் ஒண்ணுக்குப்போற கஸ்மாலம் முதல் லஞ்சம் வாங்கும் பேமானி வரை அய்யப்பன் கோவிலுக்கு போகும் அல்லக்கை தொடங்கி கற்பழிக்கும் பாதிரி வரை கொலை செய்யும் மார்க்கவாதிகள் எல்லாம் ..... சமூக சீர்திருத்த சிற்பிகள். கடவுளை நம்பி கெட்டவனாகாத முத்துகள்.
இந்தியாவில் இருப்பவர்களில் 90 சதவீதம் (ஒரு குத்து மதிப்பு) ஏதோ ஒரு கடவுளை நம்புபவர்கள் தான். அப்படி இருந்தும் இந்தியா ஏன் இப்படி லஞ்சம் ,தரித்திரம், கொலை கொள்ளை என்று உள்ளது?
**
கேட்டால் அவர்கள் உண்மையான மதவாதிகள் இல்லை அல்லது உண்மையான ஆன்மீகவதிகள் இல்லை என்பீர்கள்.
வேடமிடும் பொறம்போக்கு ஆன்மீக/மத/கடவுள்வாதிகளைக்கூட களையெடுக்கத் தெரியாத கடவுள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?
.
follow upkku..
//@ SureshDurairajan said... //
// சரி கடவுள் அப்பிடின்னு ஒரு கான்செப்டே இல்ல, மதமே இல்ல அப்பிடின்னு வெச்சிகுங்க.
இதுவேரிக்கும் நடந்த இத்தனை கொலை அழிவு எல்லாம் இல்லாம இருந்து இருக்குமுன்னு நம்பரின்களா ? //
அருமையான கேள்வி....என்ன வால் ..நீங்களும் உங்கள் கூட்டத்தாரும் .....ஜாலியா இந்த கேள்விய choicil விட்டுடீங்க ? தையரியமா சட்டு புட்டுனு பதில் சொல்லிட்டு போங்க. சும்மா ஆயிரம் கேள்விகள் கேட்கறீங்க, நாம ஒரு கேள்வி கேட்டா பதில் வர மறுக்கிறது .....ஆராய்ச்சியிலேயே பாதி கேள்வி போயிடுது....
சுரேஷ் சார் ....வரலாறு மிக்க தெள்ள தெளிவா இருக்கு....மதமே இல்லை, கடவுள் கான்செப்ட் இல்லை என்று சொன்னவர்கள் ...எந்த எந்த நம்பிக்கையில் எவ்வளவு மில்லியன் உயிர்களை கொன்றார்கள் என்று .....ஒரு வேலை அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்திருந்தால் கொடும் கொலைகள் நடக்காமல் இருந்திருக்கலாம்....
சீனு சொன்னது...//பெண் சாமியார் குண்டு வெடித்தாலும் அவளை யாரும் கொண்டாடுவது இல்லை. கொண்டாடும் கும்பல் ஒரு சிறு கூட்டமாக இருக்கும்.// அய்யா சீனு ஏனிப்படி போய் புளுகுகிரீர்கள்? கொண்டாடும் முதல் மனிதன், அத்வானி. அடுத்தது மோடி, அடுத்து அசோக் சிங்கால்...... இப்படி போகுது... இவர்களெல்லாம் ஒரு சிறு கூட்டம்தானா? சரிய்யா.... நம்பிக்குறோம்யா....
மேலும் சீனு சொன்னது...///இந்த பெண் சாமியாரை இந்துக்கள் கண்டிக்காமல் அவரை ஆதரித்தால் அவர் நிச்சயம் இந்து தீவிரவாதி தான்./// --அப்படியாய்யா... ரொம்ப சரியாத்தான் சொல்றீக... நீங்கதான்யா உண்மையை ஒலகரிய சொல்றீக....
அப்டீன்னா நீங்க யாருய்யா?
சீனு சொன்னது: ///என்னுடைய இந்துத்துவ ஆதரவை இப்படி தான் காட்டனும் என்று இல்லை. வெளிப்படையாகவே காட்டிக் கொள்வேன். என் ஆர்குட் பார்த்தானே உங்களுக்கு தெரிந்திருக்கும்...///
ஓஹோ...கூட இருந்தே குழி பறிப்பதுதான் உம்ம கொள்கையாயா.... உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பன்னாதேயா... அப்புறம் யாரும் ஆடயில சேத்துக்க மாட்டான்க...அம்புட்டுதான் சொல்வேன்....
சீனு சொன்னது: ///நானும் நாத்திகன் தான். எந்த கடவுளும் இல்லை என்று நம்புபவன் தான். /// ---யோவ்... நீ என்ன லூசாயா? அடச்சே... இவ்வளவு நேரம் 'இது' கூடவா பேசிக்கிட்டு இருந்தேன்....
வால்,
இத்தனைப் பேர்களுக்கும் எப்படி பதில் எழுதி இன்னமும் நீங்கள் நலமாக இருக்கிறீர்கள்?
கேள்விக் கணை வந்து பாயுதே!
மதத்துக்கு ஆதரவான எல்லோருமே யாரோ ஒரு மனிதனையாவது சரியானக் காரணம் இன்றி நிராகரிக்கிறார்கள்.
இதுத் தவிர்க்கபடனும்கிறது தான் நாத்திகம்! என்பதை விளக்க நிறைய முயற்சி செய்ய வேண்டி இருக்கிறது.
//அருமையான கேள்வி....என்ன வால் ..நீங்களும் உங்கள் கூட்டத்தாரும் .....ஜாலியா இந்த கேள்விய choicil விட்டுடீங்க ? தையரியமா சட்டு புட்டுனு பதில் சொல்லிட்டு போங்க. சும்மா ஆயிரம் கேள்விகள் கேட்கறீங்க, நாம ஒரு கேள்வி கேட்டா பதில் வர மறுக்கிறது .....ஆராய்ச்சியிலேயே பாதி கேள்வி போயிடுது....
சுரேஷ் சார் ....வரலாறு மிக்க தெள்ள தெளிவா இருக்கு....மதமே இல்லை, கடவுள் கான்செப்ட் இல்லை என்று சொன்னவர்கள் ...எந்த எந்த நம்பிக்கையில் எவ்வளவு மில்லியன் உயிர்களை கொன்றார்கள் என்று .....ஒரு வேலை அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்திருந்தால் கொடும் கொலைகள் நடக்காமல் இருந்திருக்கலாம்//
அடடா அப்படியா! உதாரணத்திற்கு ஹிட்லர் மிகுந்த கிருத்துவ நம்பிக்கையுடையவன்.
மனிதன் கொலை, கொள்ளை அடிப்பது அவனுடைய குணத்தைக் காத்துகிறது. அதோடு நாங்கள் நின்றுவிடுகிறோம். இதில் பாவ,புண்ணிய கணக்கு சொல்லுவது ஆன்மீகவாதிகளின் வேலை. அப்ப்டி செய்தால் குற்றம் குறையுமென்றால், அதிகமான ஆன்மீகவாதிகள் வசிக்கும் உலகில் குற்றம் குறைந்திருக்கவேண்டுமே.
@குட்டிபிசாசு
//அடடா அப்படியா! உதாரணத்திற்கு ஹிட்லர் மிகுந்த கிருத்துவ நம்பிக்கையுடையவன்.//
அடடா அப்படியா ....மிகுந்த கிறிஸ்தவ நம்பிக்கையுடன் தான், திருச்சபைகளை அடக்கி வைத்திருந்தார.....நீங்கள் சொல்வதை பார்த்தல் ஐரோப்பா கண்டம் முழவதிலும் கிறிஸ்தவம் பரபிருபாரே. ...மதங்களை ஒடுக்க நினைத்தவர்களும் நாத்திகர்கள் தான்...
ஸ்டாலின் ..எவ்வளவு பேரை கொன்றார் என்று பாருங்கள், கம்யூனிஸ்ட் நாடுகளில் மதங்களை சேர்ந்தவர்களை கொன்ற எண்ணிகையை தேடி பாருங்கள் ....(பின் லேடன் --நெருங்கவே முடியாத எண்ணிகையா இருக்கும்...)
//மனிதன் கொலை, கொள்ளை அடிப்பது அவனுடைய குணத்தைக் காத்துகிறது. அதோடு நாங்கள் நின்றுவிடுகிறோம். ///
யப்பாடா ....வால் நல்லா புரிஞ்சிகோங்க .....மறுபடியும் நிதானமா ஒருக்கா படிச்சு பாருங்க ..... நீங்கள் இதையாவது கவனித்து படிப்பீர்கள் என்று நினைக்கிறன் .. ஏன்னா சொன்னவர் உங்கள் கூட்டத்தை சேர்ந்தவர் தான் போல இருக்கு ,,
@குட்டிபிசாசு ..//அதோடு நாங்கள் நின்றுவிடுகிறோம்//
சாரிங்க, அதோடு யாரும் நிக்கல, மேல பதிவ பாருங்க, 9/11 தீவிரவாதிகள் படம் 20 பேர் போட்ட்ருக்கார் ......FBI க்கு தெரியுதோ இல்லையோ ...இவருக்கு தெரிஞ்சிருக்கு 20 பேரும் குரானை நன்கு படித்தவர்கள் என்று ...பயங்கர ஆறாய்ச்சி பாஸ்....
@ சாமுவேல்!
எந்த கேள்வியையும் சாய்ஸில் விடுவதில்லை, முக்கியமான கேள்விகளையெல்லாம் மீண்டும் பதில் இட்டு பதில் எழுதுவேன்!
உங்களுக்காக அந்த கேள்விக்கு பதில்!
மதம் இல்லையென்றாலும் கொலை, கொள்ளை நடக்கலாம், ஆனால் அதற்கும் ஒரு காரணம் இருக்குமில்லையா!? இப்பொழுது மதத்தை எதிர்ப்பது போல் அப்பொழுது அந்த காரணத்தை எதிர்ப்போம்!
மதமொ, மண்ணாங்கடியோ என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கட்டும், எங்கள் விருப்பம் மனிதம் காக்கபட வேண்டும் என்பதே!
//ஸ்டாலின் ..எவ்வளவு பேரை கொன்றார் என்று பாருங்கள், கம்யூனிஸ்ட் நாடுகளில் மதங்களை சேர்ந்தவர்களை கொன்ற எண்ணிகையை தேடி பாருங்கள்//
கம்யூனிசத்தில் உள்ள தீவிரவாதத்தையும் சாடி இருக்கிறேன் சாமுவேல்!
நான் எங்கேயும் வன்முறையை ஆதரிப்பதாக எழுதவில்லை!
//மனிதன் கொலை, கொள்ளை அடிப்பது அவனுடைய குணத்தைக் காத்துகிறது. அதோடு நாங்கள் நின்றுவிடுகிறோம். ///
யப்பாடா ....வால் நல்லா புரிஞ்சிகோங்க .....மறுபடியும் நிதானமா ஒருக்கா படிச்சு பாருங்க ..... நீங்கள் இதையாவது கவனித்து படிப்பீர்கள் என்று நினைக்கிறன் .//
அவர் ”காட்டுகிறது” என அடிக்க நினைத்திருப்பார் என நினைக்கிறேன்
//அதோடு யாரும் நிக்கல, மேல பதிவ பாருங்க, 9/11 தீவிரவாதிகள் படம் 20 பேர் போட்ட்ருக்கார் ......FBI க்கு தெரியுதோ இல்லையோ ...இவருக்கு தெரிஞ்சிருக்கு 20 பேரும் குரானை நன்கு படித்தவர்கள் என்று ...பயங்கர ஆறாய்ச்சி பாஸ்.... //
நிச்சயமாக சொல்வேன், அவர்கள் குரானை நன்கு படித்தவர்கள்!, அவர்கள் கூலிக்கு கொலை செய்வதில்லை, கொள்கைக்கு செய்கிறார்கள்! அதனை தான் நான் மதவாதம் என்கிறேன்!
//இத்தனைப் பேர்களுக்கும் எப்படி பதில் எழுதி இன்னமும் நீங்கள் நலமாக இருக்கிறீர்கள்?
கேள்விக் கணை வந்து பாயுதே!//
அவர்களது கேள்விகள் எனக்கு பதிலை தேடும் ஆர்வத்தை தூண்டுகிறது! என் வாழ்வின் சிறப்பான தருணமாக நான் இதை உணர்கிறேன்!
@ குட்டிபிசாசு!
விட்டு கொடுத்தல் நலம் அதைவிட நலம் பிறர் சொத்தை அபகரிக்காமல் இருத்தல்!
மனிதம் என்று வந்து விட்டால் சக மனிதனின் பொருளுக்கு நாம் ஆசைப்பட போவதில்லை, அப்படியே அவனுக்கு சில தேவைகள் இருந்தாலும் அவனை அபகரிக்கும் நிலைக்கு தள்ளாமல் இன்னொரு சக மனிதன் அவனுக்கு உதவி செய்தால் அவன் அந்த நிலைக்கு செல்லவும் தேவையில்லை!
அமெரிக்காவில் இருக்கும் ஒரு குடிமகனுக்கு ஆப்கானிஸ்தானை காக்க வேண்டும் எனும் ஆர்வம் இருப்பதில்லை, இது அதிகாரவர்க்கம் சார்ந்த சிந்தனை மட்டுமே! அதிகாரத்திற்கே உரிய விரிவுபடுத்தும் உள்நோக்கம் எல்லா அதிகாரமைத்திலும் ஒளிந்திருக்கிறது!
மதன் என்றால் இந்து, இஸ்லாம் மட்டுமல்ல!
இன்றைய நிலையில் பெரியாரிஸம் ஒரு மதம், கம்யூனிஸம் ஒரு மதம்!
என்று ஒருவன் தன் கொள்கைகளை நிலைநாட்ட அடுத்தவர் செத்தாலும் பரவாயில்லை என்று நினைக்கிறானோ அதுவே ஒரு மதமாகிறது!
// மதமொ, மண்ணாங்கடியோ என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கட்டும், எங்கள் விருப்பம் மனிதம் காக்கபட வேண்டும் என்பதே!///
ரைட்டு வால்..... தெளிவான பதில். i like your answer. அப்புறம் நேரம் இருந்தால் இந்த சுட்டியை பார்க்கவும்....
http://www.hindu.com/2010/01/12/stories/2010011255100900.htm
கண்டிப்பா தனிபட்டா தாக்குதலா நினைக்க வேண்டாம்...அந்த சுட்டியில் justice Krishna Iyer என்ன சொல்றார்னா. மனிதம் குடி போதையினால் தான் அழிந்திட்டு இருக்காம்.....என்னுடைய விருப்பமும் மனிதம் காக்கபட வேண்டும் என்பதே!
///மனிதம் குடி போதையினால் தான் அழிந்திட்டு இருக்காம்.....என்னுடைய விருப்பமும் மனிதம் காக்கபட வேண்டும் என்பதே!///
---அப்படி போடு.....
வாலுல நெருப்ப பத்த வச்சிட்டியே பரட்ட....
இஸ்லாம் மீது இவ்வளவு கொலை வெறியா?
ஆதாரபூர்வமாக கைது செய்யப்பட ஒரு பயங்கரவாதி. ஒத்த ஆள். அவருக்கு போட்டியாக இருபத்து மூன்று பேரா? (ஓரிருவரை தவிர பலரை யாருன்னே தெரியலை.)
அநியாயமாய், 1:23 விகிதம் தந்த உம்ம கொலைவெறிக்கு 1:3 விகிதம் தந்த உன்னைப்போல் ஒருவன் கமல்ஹாசனின் மதவெறி எவ்வளவோ தேவலாம்.
எவனொருவன் என் மதம் அமைதியே உருவானது என்கிறானோ அவனது வீட்டில் வெடிமருந்துகள் சேமித்து வைத்திருக்கிறான் என சந்தேகம் உருவாகிறது, எவனொருவன் என் மதத்தில் தீவிரவாதம் எனும் புற்றுநோய் பரவி கொண்டிருக்கிறது, என் சகோதர மக்கள் நிலையை கண்டு நான் வருந்துகிறேன் என்கிறானோ அவனுக்குள் மனிதம் இருக்கிறது, மதம் அவன் கண்களை மூடவில்லை என காட்டுகிறது,
........... interesting write-up!
நண்பரே கடவுள் இல்லை என்பதற்க்கு என்ன ஆதாரம்? கடவுள் இருக்கிறார் என்பதற்க்கு என்ன ஆதாரம்? என்பதுதான் தங்களின் பதிலா ? இல்லை ஆதாரம் இருக்கிறதா ?அப்படி என்றால் அதை சரியாக விளக்க முடியுமா?
இல்லாத ஒன்னுக்கு ஆதாரம் கேட்டால் எப்படி தோழரே!
நீங்க இருக்குன்னு சொல்றிங்க, நீங்க தான் ஆதாரம் கொடுக்கனும்!
வால் பையன் சார் உங்கள் சிந்தனைகள் மிக அருமை தொடரட்டும் உங்கள் பதிவுகள் BY P.G.KUMARAN KUMBAKONAM
குமரன் சார்
மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு!
Post a Comment