சென்ற வார இறுதியில் பிறந்தநாள் கொண்டாடிய அன்பு அண்ணன் ஜமால் அவர்களுக்கும், கார்பரேட் கம்பர் நர்சிம் அவர்களுக்கும் தனிப்பதிவாக போட்டு வாழ்த்து சொல்லமுடியவில்லை!
வாரஇறுதி விடுமுறை நாட்கள் சதி செய்துவிட்டது! அதனால் இங்கேயே அவர்களுக்கு வாழ்த்து சொல்லிகிறேன்! அட்வான்ஸ் வாழ்த்தாக நாளை(31.07.09) பிறந்தநாள் கொண்டாடப்போகும் சித்தர் லதானத்திற்கும் கூடி வாழ்த்துரைப்போம்!
*****************************
இனி ஒவ்வொரு குவியலிலும் ஒரு சினிமா பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்!
இந்த வாரம் glass house-the good mother
தலைப்பை பார்த்தவுடன் செண்டிமென்டல் டச்சிங் படமுன்னு கணக்கு போட்டா நீங்க தோத்துத்டிங்கன்னு அர்த்தம்! படம் பக்கா சஸ்பென்ஸ் திரில்லர்!
கதைக்கு முன்னால் சில விசயம்!
படத்தில் மொத்தம் எட்டே கேரக்டர்! அதில் ஓரிரு காட்சிகளில் வருபவர் நான்கு பேர்!
ஒரு பெரிய வீட்டில் மொத்த படமும், கைதேர்த்த இயக்குனர் என்றால் இரண்டே நாளில் படத்தை எடுத்திருப்பார்!
வீட்டில் விடுதி போல் குழந்தைகளை பாதுகாக்கும் வேலை பார்ப்பவர்கள் ஈவும், ரேமாண்டும்
அந்த வீட்டில் புதிதாக வரும் அபே மற்றும் ஈதனை பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கு, இரண்டு நாளில் ஈதன் பயங்கர நோய்வாய் படுகிறான்! ஈவ் அருகிலேயே இருந்து பார்த்து கொள்கிறாள்! ஒரு பாசமிகு தாயைப்போல் நடந்து கொள்கிறாளே என்று நினைத்தால் விழுகிறது பேரிடி!, ஈவ் அவனுக்கு தினமும் உணவில் விசம் கலந்து கொடுப்பதை கண்டுபிடிக்கிறாள் அபே!
சிறுவயதில் இறந்த போன தனது மகன் டேவிட்டை சரியாக கவனிக்க முடியாமல் பேரண்டிங் பிரஷ்சரால் பாதிக்கப்பட்டவள் ஈவ்! அங்கு வரும் சிறுவர்களுக்கு உணவில் விசம் கலந்து படுக்கையில் இருக்கும் போது நன்றாக கவனித்து கொள்கிறாள், அவர்கள் எழுத்து விட்டால் கவனிக்க முடியாதோ என்ற எண்ணத்தில் தினமும் உணவில் விசம்! அபேவுக்கு தெரிந்தவுடன் படம் ராக்கெட் வேகம்!
இயல்பான திரைக்கதை, அபேவாக நடித்த சிறுமியின் சிறப்பான நடிப்பு நம்மை படத்தில் கட்டிப் போட்டு விடுகிறது!
**************************
சமீபத்தில் நண்பர் ஸ்ரீதர் எழுதியிருந்த இந்த பதிவைப்பார்த்து நண்பர்கள் என்னை அழைத்திருந்தார்கள்! என்ன இப்படி எழுதியிருக்கார் நீங்க பார்க்கலையா? எதுவும் சொல்ல்லையா என்று?, எனக்கு சொல்ல ஒன்றுமில்லை காரணம் ஸ்ரீதர் பொய்யாக எதுவும் எழுதவில்லை பின் என்ன நான் சொல்வது மேலும் ஸ்ரீதர் பட்டதெல்லாம் சும்மா ஒரு பார்ட் தான்! எழுத்தாளார் வாமு.கோமுவெல்லாம் பாவம் வாராவாரம் படுகிறார்!
என்னை பற்றி ஸ்ரீதர் சொல்லியதால் நானும் ஸ்ரீதரை பற்றி ஒன்று!
ஸ்ரீதர் மூஞ்சியை பார்த்து யாரும் பச்சபுள்ளைன்னு நினைச்சிகாதிங்க, அவர் மதுரையில் பிரபல நாட்டாமை!. நசுங்காத சொம்பும், ஆலமரமும் இல்லாமல் பல பஞ்சாயத்துகளை தாடியை தடவி கொண்டே தீர்ப்பு சொல்லுவார்! போன வருடம் மைனர் “குஞ்சை” சுட்டது கூட அவர்தான்!
****************************
பதிவின் கீழ் நமது பெயர் அழகாக தெரிவது எப்படின்னு சிலர் கேட்டிருந்தார்கள்!
இந்த வலைத்தளத்துக்கு சென்று உங்களது பெயரை கொடுத்து அதில் போட்டிருகும் படி தொடருங்கள், உங்கள் பதிவின் கீழேயும் அழகான கையெழுத்து தயார்!
***************************
கவிதை வேற சொல்லனுமா!
ரயிலின் ஓசையில்
குழந்தையின் அழுகையில்
மழையின் சாரலில்
மரத்தின் ஆடலில்
எல்லோருக்குமான
கவிதை உண்டு!
யாரேனும் எனக்கான
கவிதையை பார்த்தீர்களா!
65 வாங்கிகட்டி கொண்டது:
mee firstaa?
aammaaa mee thaan firstu..hai..hai...
எல்லாருக்கும் என் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..
மைனர் “குஞ்சை” சுட்ட மைனர் ?
//பதிவின் கீழ் நமது பெயர் அழகாக தெரிவது எப்படின்னு சிலர் கேட்டிருந்தார்கள்!
இந்த வலைத்தளத்துக்கு சென்று உங்களது பெயரை கொடுத்து அதில் போட்டிருகும் படி தொடருங்கள், உங்கள் பதிவின் கீழேயும் அழகான கையெழுத்து தயார்!
//
நாம ஏற்கனவே உங்ககிட்ட இருந்து காப்பி அடிச்சு போட்டாச்சு
/ரயிலின் ஓசையில்
குழந்தையின் அழுகையில்
மழையின் சாரலில்
மரத்தின் ஆடலில்
எல்லோருக்காமன
கவிதை உண்டு!
யாரேனும் எனக்கான
கவிதையை பார்த்தீர்களா//
சரக்கின் வாசத்தில்
போதமகனின் அழுகையில்
வாந்தியின் நாற்றத்தில்
குடிகாரன் ஆடலில்
எல்லோருக்கும்
போதை உண்டு
யாரேனும் என்னோட
வேட்டியை பார்த்தீர்களா?
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
கையெழுத்து தகவலுக்கு நன்றி வால்பையன்!!
பார்த்தேன்.. வாசித்தேன்.. ரசித்தேன்.. ஓட்டளித்தேன்
படம் அருமை ஆனால் படத்தை பற்றி இன்னும் கூடுதல் த்கவல்கல் வேண்டும்..அப்ப்டியே நீங்கள் படிக்கும் புத்த்கங்கள் பற்றியும் எழுதலாம்
/*சரக்கின் வாசத்தில்
போதமகனின் அழுகையில்
வாந்தியின் நாற்றத்தில்
குடிகாரன் ஆடலில்
எல்லோருக்கும்
போதை உண்டு
யாரேனும் என்னோட
வேட்டியை பார்த்தீர்களா?*/
Ithu toppu.
kalakkal suriyan.
குவியல் நல்லா இருந்துச்சு.
கையெழுத்து தகவலுக்கு நன்றி.
super kuviyal
குவியல் குளியல்
//இனி ஒவ்வொரு குவியலிலும் ஒரு சினிமா பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்//
ஒன்லி இங்கிலி பீச்சு படமா! :-)
இனி ஒவ்வொரு குவியலும் சினிமாவிற்காகவே எழுதப்படும்.
இதுவும் அப்டிதானா வால்?
//என்ன இப்படி எழுதியிருக்கார் நீங்க பார்க்கலையா? எதுவும் சொல்ல்லையா என்று?, எனக்கு சொல்ல ஒன்றுமில்லை காரணம் ஸ்ரீதர் பொய்யாக எதுவும் எழுதவில்லை //
அது பொய்யாக இருக்காதுன்னு எங்களுக்கும் தெரியும்.
ஏன்யா அந்தப் பாடுபடுத்துனங்கிறதுதான் கேள்வி?
எதோ குவித்துவிட்டிங்க.... வந்தோம். குவிக்கப்போறிங்க சரி குவிங்க பார்க்க வருகிறோம்...
வாழ்த்துகளுக்கு நன்றி
மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
கவிதை அழகு.
வால் நல்ல குவியல்....கூடவே கவிதை நன்றாக இருந்தது.
//யாரேனும் எனக்கான
கவிதையை பார்த்தீர்களா//
அண்ணே !!! அப்படியே தருமபுரி,மரியாதை இந்த மாதிரி படங்கள பத்தியெல்லாம் எழுதுவீங்களா !!!????
//ஒவ்வொரு குவியலிலும் ஒரு சினிமா பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்// நல்ல திட்டம்! தினம் ஒரு முட்டைங்கிற மாதிரி இதுவும் ஒரு ஊட்டச்சத்தா இருக்கும்.
நாட்டாமை கதையக்கேட்டதியும் ஒண்ணுக்கு முட்டறாப்ல ஆயிடுச்சு.. அப்புறமா கவித படிச்சதியும் டவுசரே ஈரமாயிடுச்சுங்!
/ஒவ்வொரு குவியலிலும் ஒரு சினிமா பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்/ நன்றி.
நன்றி வால் பையன் அவர்களே பதிவில் பேர் போட கொடுத்த ஐடியா நன்ற இருக்கிறது
ம்ம் குவியலா?
ஜமால் அண்ணனுக்கு வாழ்த்துகள்...
மீ இருபத்தைந்து ஒன்லி...
நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு
ரயிலின் ஓசையில்
குழந்தையின் அழுகையில்
மழையின் சாரலில்
மரத்தின் ஆடலில்
எல்லோருக்காமன
கவிதை உண்டு!
யாரேனும் எனக்கான
கவிதையை பார்த்தீர்களா!
அருமை
கையெழுத்து நல்லாருக்கு.
கவிதை அருமை அருண்
புத்தகத் திருவிழா பற்றிய தகவல்களை சீக்கிரம் வெளியிடுங்க.
அன்பின் வால்
குவியல் அருமை அருமை
கவிதை - கையெழுத்து தக்வல் - முக்கியமாக பட விமர்ச்னம் - அனைத்தும் அருமை
சித்தர் லதானந்திற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
வால் உனது எழுத்து அனைவரையும் கவர்கிறது.
நல்வாழ்த்துகள்
வாழ்த்துக்கு நன்றிகள் வால்..தல.
நல்ல படம். :)
--வித்யா
அண்ணன் லதானத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!!
ஒரு சீனப் படம், பிரேசில் படம், தாய்லாந்து படமுன்னு உன்னுடை ரேஞ்சிக்கு எழுது தல..!
இனி ஒவ்வொரு குவியலிலும் ஒரு சினிமா பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்!///////////////////////////
ஒவ்வெரு வாரமுமா ? இந்த வாரம் என்ன படம் முழுக்க விஷம் பரிமாற்றம் போல இருக்கு .
நாளை பிறந்த நாள் காணும் நண்பருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வால் ஸ்ரீ சொன்ன மாதிரியே ஃப்லாட் ஆனது உண்மையா?
லதானந்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
/
சரக்கின் வாசத்தில்
போதமகனின் அழுகையில்
வாந்தியின் நாற்றத்தில்
குடிகாரன் ஆடலில்
எல்லோருக்கும்
போதை உண்டு
யாரேனும் என்னோட
வேட்டியை பார்த்தீர்களா?
/
haa haa
:))
அந்த கையெழுத்து தகவலுக்கு நன்றி
நல்லாருக்கு வால்!
இம்மாதிரியான நேரடிக் கவிதைகளை நேசிக்கும் இடத்திற்கு இப்போது வந்திருக்கிறேன் போலும்.
நல்லாருக்கு வால்!
டாஸ்மாக் குளியல்
நல்ல குவியல் வால்!
///சரக்கின் வாசத்தில்
போதமகனின் அழுகையில்
வாந்தியின் நாற்றத்தில்
குடிகாரன் ஆடலில்
எல்லோருக்கும்
போதை உண்டு
யாரேனும் என்னோட
வேட்டியை பார்த்தீர்களா?///
சிரிப்ப அடக்க முடியல...!
மைனர் குஞ்சை சுட்டாரா?
நம்ம அடுப்புதானா? இல்ல தந்தூரி அடுப்பா?
மைனர் குஞ்சை சுட அடுப்பெல்லாம் தேவை இல்லை..
மைனர் பாதங்களுக்கிடையில் பத்த வச்சா போதும்...
என்னது மைனர் குஞ்ச சுட்டுட்டங்களா?
கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா வால்??
எளிய கவிதைகளே ஏராளமான பொருள் பொதிந்ததுதான்.
நன்றாகவிருக்கிறது கவிதை யார் எழுதியது என்று தெரியாதவரை.
ஸ்ரீதர் செய்தது மிகப்பெரும் தவறாகத்தான் படுகிறது.விருப்பமில்லாதவர் ஒதுங்கிப்போயிருக்கலாம்.
உதவி செய்த பின் அதை பதிவேற்றியது அருவருப்பான செயலாகத்தான் படுகிறது.
அது அவர்களுக்கே உரிய அம்சம்.
வாசிப்பு மூலம் நோக்கப்படும் எவருமே ஒழுக்க சீலர்களோ அல்லது தெய்வாம்சம் பொருந்திய ராமன்களோ கிடையாது.எல்லோர்க்குள்ளும் எல்லாவிதமான உணர்ச்சிகளும் இருக்கத்தான் செய்கின்றன.
எவன் எண்ணத்த பே.........என்று பதிவு போடுவதன் மூலம் என்ன சாதிக்க நினைக்கிறார்கள் இவர்களென தெரியவில்லை.
படம் பற்றிய விமர்சனம் தெளிவு.இது இப்போது ரிலீஸான தமிழ் படக்கதை அல்லவே.முழுதும் க்ளைமாக்ஸ் உட்பட எழுதலாம் என்பது எனது அவா.
இன்று பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டிருக்கும் சுதந்திர காட்டு சிங்கத்திற்க்கு வாழ்த்துக்கள்.
வழக்கம் போல கவிதை சூப்பர். உலக சினிமா விளம்பரம் அருமை.
நானும் ஸ்ரீதர் பதிவை பார்த்தேன். உங்கள் நலம் விரும்பி என்ற முறையில், "உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்" என்று மட்டும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
நமக்கு ஏத்த படம் இல்லை ....குழந்தைகளை துண்புறுத்துவதை படத்தில் பார்த்தாலும் ....ம்ம்ம்
மைனர் குஞ்சை பற்றி அறிந்து கொண்டேன்....
என்னை வேற ஓசி டிக்கெட்லே போனியான்னு கேக்குறிங்க...
என்னை மாதிரி சில பேரால்தான் தமிழ் சினிமா வாழுது
வால்....
குவியலும் நல்லா இருக்கு, கவிதையும் நல்லா இருக்கு தல
கவிதை:::::)!!
:)
//ரயிலின் ஓசையில்
குழந்தையின் அழுகையில்
மழையின் சாரலில்
மரத்தின் ஆடலில்
எல்லோருக்குமான
கவிதை உண்டு!
யாரேனும் எனக்கான
கவிதையை பார்த்தீர்களா//
என்னிடம் இருக்கிறது.... வேண்டுமா....
:-) நல்லா இருந்தது உண்மையை ஒத்துகிட்டதுக்கே உங்களுக்கு சரக்கு சிலை செய்யனும்
//இந்த வலைத்தளத்துக்கு சென்று உங்களது பெயரை கொடுத்து அதில் போட்டிருகும் படி தொடருங்கள், உங்கள் பதிவின் கீழேயும் அழகான கையெழுத்து தயார்!//
நாங்களும் செஞ்சிட்டோம்ல. தகவலுக்கு நன்றி அண்ணாத்தே!
ஜமாலுக்கும் மற்றும் கார்பரேட் கம்பர் நர்சிம் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களும்.....
அப்பால கவுஜ சூப்பர் பா
நீங்கள் எழுதிய பதிவுக்கும் இந்தக் கட்டுரைக்கும் தொடர்பில்லை. இருந்தாலும் உங்களின் பார்வைக்கு, உங்களின் சிந்தனைக்கு இந்த கட்டுரையை பதிவு செய்கிறேன்.
"இப்பல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறாங்க? பாப்பான், தமிழன் என்றெல்லாம் பிரிப்பது சரியா? என்று கேட்கும் ஏமாளித் தமிழர்களின் சிந்தனைக்கு கீழ் கண்ட கட்டுரையை பதிவு செய்கிறேன். படியுங்கள் தெளியுங்கள்.
"ஆவணி அவிட்டம்!
இப்பல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறாங்க? நீங்கதான் தேவையில்லாமல் பாப்பான், தமிழன் என்றெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க, இதெல்லாம் அவுட்டேட் என்று கூறும் படித்த மேதாவிகள் பார்ப்பனர் அல்லாதாரில் உண்டு. கெட்டியாக மூடிக்கொண்டிருக்கும் இந்த அறியாமைக் கண்களைத் திறக்க இதோ ஒரு செய்தி. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் திரு. வைத்தியநாதய்யரை ஆசிரியராகக் கொண்ட தினமணி (1.8.2009, பக்கம் 4) ஏட்டில் இடம்பெற்றுள்ள சேதிதான்.
ஆவணி அவிட்டத் தினத்தன்று (ஆகஸ்ட் 5) இணைய தளம் மூலம் வேத மந்திரங்களைக் கேட்டு பூணூல் மாற்றிக் கொள்ளும் வசதியை டிரெடிஷனல் விஸ்டம் என்ற அமைப்புச் செய்துள்ளது.
www.traditionalwisdom.in என்ற இணைய தளம்மூலம், கட்டணம் ஏதுமின்றி, வெளிநாட்டில் உள்ளோரும் அன்றைய தினம் வேத மந்திரங்களைக் கேட்டு பூணூலை மாற்றிக் கொள்ளலாம். அதற்கான நேரங்கள் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்கள் அறிய... (ஒரு முகவரி கொடுக்கப்பட்டுள்ளது).
..... ..... .....
இதற்குப் பிறகும் இப்பல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறாங்க? என்று எவராவது மே(ல்)தாவித்தனமாகச் சொல்வார்களே யானால் அவர்களுக்கு ஆப்புக் கொடுக்க இதனைக் கத்தரித்து சட்டைப் பைக்குள்ளேயே தயாராக வைத்துக் கொள்ளலாம்.
பூணூலை மாற்றுவது எதற்காக? அழுக்கடைந்த சட்டையைச் சலவை செய்து மாற்றிக்கொள்வது போன்றதா இது?
அதுவரை பார்ப்பனச் சிறுவனாக இருந்தவன், துவிஜாதியாக இரு பிறப்பாளனாக பிராமணனாக ஆக்கப்படுவதற்குப் பெயர்தான் பூணூல் கல்யாணம். வருடந்தோறும் அதனைப் புதுப்பித்துக் கொள்வதற்குத்தான் இந்த ஆவணி அவிட்டம்.
இன்னும் சில அறிவு ஜீவிகள், ஏன் சார் நம்ப ஆசாரி, பத்தர், செட்டியார் எல்லாம்கூட பூணூல் போட்டுக் கொள்கிறார்களே, பார்ப்பனர்களை மட்டும் குறை சொல்லலாமா? என்று கேட்பதுண்டு.
இது புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதைதான். சாஸ்திரத்தில் சூத்திரர்கள் பூணூல் போட இடம் இல்லையே.
சூத்திரன் பிராமண ஜாதிக் குறியைபூணூல் முதலியவற்றைத் தரித்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும் (மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 224) என்கிறது மனுதர்மம்.
பார்ப்பனர்கள் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் என்று ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, பூணூல் மாட்டுவது புதுப்பிப்பது என்பது நம்மைச் சூத்திரன் என்று இழிவுபடுத்தும் அதிகாரப்பூர்வமான ஏற்பாடு என்பதை சற்சூத்திரர்கள் அறிவார்களாக!
"தமிழர்களே, உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய பார்ப்பானைப் பிராமணன் என்று அழையாதீர்!"
- தந்தை பெரியார்.
--------------------- மயிலாடன் அவர்கள் 1-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை"
Jaathi pisasugal...
Pala peruku theriyaatha poonool matrum inaiya thala vasathiyai arimugap padutthi vaitthatharku nandri tamil oviya...
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
வால் பையன் கண்டிப்பா நம்பி என்னுடைய பிரட் ஹல்வா செய்து சாப்டுங்க.நான் கேரண்டி.சூப்பெரா இருக்கும்.என் ப்ளாக்கில் தங்கள் வருக்கைக்கும்,கருத்திற்கும் நன்றி.அடிக்கடி வாங்க.(நம்பிக்கை தான் வாழ்க்கை)
அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com
கவிதை அருமை..
மற்றபடி குவியலில் என்னமோ குறையுதே..!!
நன்றி நைனா
நன்றி சூரியன்(கவிதை சூப்பர்)
நன்றி Mrs.Menagasathia
நன்றி கீத் குமாரசாமி
நன்றி அக்னிபார்வை(எழுதுகிறேன்)
நன்றி அக்பர்
நன்றி T.V.Radhakrishnan
நன்றி உடன்பிறப்பு
நன்றி கிரி
நன்றி பீர்
நன்றி அப்பாவி முரு
நன்றி சந்ரு
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி விசா
நன்றி அ.மு.செய்யது
நன்றி ஜெகநாதன்
நன்றி மாதேவி
நன்றி யோ
நன்றி ஜோதிபாரதி
நன்றி சுப்பு
நன்றி சக்தி
நன்றி shortfilmindia.com
நன்றி கதிர்
நன்றி ஸ்ரீ
நன்றி சீனா
நன்றி நர்சிம்
நன்றி விதூஷ்
நன்றி கலையரசன்
நன்றி வசந்த்
நன்றி சுரேஷ்குமார்
நன்றி சிவா
நன்றி வெயிலான்
நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்
நன்றி தண்டோரா
நன்றி நாஞ்சில்நாதம்
நன்றி ஜிம்ஷா
நன்றி பப்பு
நன்றி மைனர்குஞ்சு ஆவி
நன்றி மைனர்வாழ்(ல்)
நன்றி பித்தன்
நன்றி நேசமித்ரன்
நன்றி கும்க்கி
நன்றி மேக்ஸி
நன்றி கிறுக்கன்
நன்றி ஜெட்லி
நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி ஷஃபிக்ஸ்
நன்றி சப்ராஸ் அபூ பக்கர்
நன்றி தமிழ் நண்பன்
நன்றி சுரேஷ்
நன்றி நிஜாம்
நன்றி ஷீ-நிசி
நன்றி தமிழ் ஓவியா
நன்றி அனானி
நன்றி அம்மு மது
நன்றி தூயா
நன்றி பட்டிகாட்டான்!
மறுபடியும் இப்பவாச்சும் தோணுச்சே சொன்னா, அடிக்க வருவீங்களா, வால்?
//மறுபடியும் இப்பவாச்சும் தோணுச்சே சொன்னா, அடிக்க வருவீங்களா, வால்? //
என்னண்ணே செய்ய
இருக்குற ஆணியும் புடுங்கனும்
நண்பர்களுக்கு பின்னூட்டம் போடனும்!
நம்ம பதிவுலயும் எதையாவது எழுதி தொலைக்கனும்!
டவுசர் கிழியுது!
இனிமே அன்னனைக்கு பதில் சொல்ல ட்ரை பண்றேன்!
Post a Comment