செத்த கடவுள்!...

செத்த கடவுள்!





லட்சோபலட்ச வருடங்கள்
தாவாகட்டையில் கைவைத்து
சும்மா தான் இருந்தேன்
பொழுது போகாமல்
வானத்தை படைத்தேன்
பூமியை படைத்தேன்
காடு,மலைகள் என கடைவிரித்தேன்
அத்தோடு நிறுத்தியிருக்கலாம்
மனிதனை படைத்தேன்
நான் செத்தேன்.


***********************




கடவுளுக்கே காசுகொடுத்தவன்!





பெருமாள்கோவில்
முருகன்கோவில்
சிவன்கோவில்
எல்லா கோவிலும் சுத்தியாயிற்று
உண்டியல் இல்லாத
கோவில்கள் இல்லை
ஆயிரத்தை நூறாக்கி
ஓட்டையில் போட்டாச்சு
பூசாரி சொன்னார்
காணிக்கை கடவுளுக்காம்
அப்போ நான் யார்!?

87 வாங்கிகட்டி கொண்டது:

அப்பாவி முரு said...

me the firstuuuuuuu

அப்பாவி முரு said...

கவிதைகள் நன்றாக உள்ளது.,


கும்மிகள் ஸ்டார்ட் ஆக உள்ளதால் நான் வழிவுட்டுக்கிறேன்

உங்கள் ராட் மாதவ் said...

//அத்தோடு நிறுத்தியிருக்கலாம்
மனிதனை படைத்தேன்
நான் செத்தேன்.//

நல்ல வேலை அந்த மனிதன் நாங்கள் இல்லை..
ஒருவேளை நீங்களோ ???? :-))

அகநாழிகை said...

வால்பையன்,

இரண்டு கவிதைகளும் நன்றாக இருக்கிறது.

//தாவாகட்டையில்//
தாடையில், முகவாய்க்கருகில் என்றெல்லாம் கூட சொல்லலாம்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

SUBBU said...

முதல் ஒன்னு நச்சி

ஜ்ப்ச்ஹ்ஜ்ப்ச்குஇந்ஹ்ந்ச்ன்

ச்ந்சிஒந்ஹ்சிஒந்ஜ்ச்ந்ச்ஜ்க்ந்’க்ஷ்ச்
க்ஷ்ச்’ச்ச்ஜொந்க்ச்’[ப்க்ஷ்ல்ச்ந்
ச்க்‌ஷ்க்ஷ்ச்ச்ந்ஜ்ச்;ல்க்ஷ்ச்ஜ்க்க்ஷ்
அக்ஷ்ல்க்ச்ஹ்ஜ்ந்க்ஷ்ச்ஜ்லொக்ஷ்க்மச்;க்ஷ்
க்ஷ்க்க்க்ஷ்ஜ்ச்க்ஷ்;ப்க்

:))))))))))))))))

வால்பையன் said...

////தாவாகட்டையில்//
தாடையில், முகவாய்க்கருகில் என்றெல்லாம் கூட சொல்லலாம்.//

பூவ, பூன்னு சொல்லலாம்!
புய்பம்னு சொல்லலாம்!, நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்!

உங்கள் ராட் மாதவ் said...

//////தாவாகட்டையில்//
தாடையில், முகவாய்க்கருகில் என்றெல்லாம் கூட சொல்லலாம்.//

பூவ, பூன்னு சொல்லலாம்!
புய்பம்னு சொல்லலாம்!, நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்!//

அட ரெண்டு விளக்கமும் நல்லாத்தான் இருக்கு :-)

ஈரோடு கதிர் said...

//மனிதனை படைத்தேன்
நான் செத்தேன்//

சூடான வார்த்தைகள்

கவிதை அருமை அருண்

Ashok D said...

:)

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்பையன் சொன்னது:
/பூவ, பூன்னு சொல்லலாம்!
புய்பம்னு சொல்லலாம்!, நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்!/

காதுல சுத்தரதுன்னும் சொல்லலாமே:-))

/ஓட்டையில் போட்டாச்சு
பூசாரி சொன்னார்
காணிக்கை கடவுளுக்காம்
அப்போ நான் யார்!?/

இன்னுமா இது புரியல?
சரி, சரி, இதே மாதிரி இன்னும் நூத்தியாறு பாக்கிக் கவுஜையும் எழுதி முடிங்க!
அஷ்டோத்தரம் முடிஞ்சதும் தான் தெரியுமோ என்னமோ:-))

யோ வொய்ஸ் (யோகா) said...

முதல் கவிதை இரண்டாவதை விட நன்றாக இருந்தது. அப்புறம் ரெண்டாவது முதலாவதை விட நல்லா இருந்துச்சி. மொத்தத்தில ரெண்டுமெ சூப்பர். சிலருக்கு இந்த இரண்டும் சுடலாம். ஏனென்றால் உண்மை சுடும் தானே.

கடைசி கொஞ்ச நாளா கடவுள் கலாச்சாரம் என உங்கள் தலை உருளுது.எப்படியோ இந்த கவிதைக்கும் பல பேர் உங்களை திட்டுவாங்க.. ஆனாலும் இது தான் உண்மை தலைவா!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ஒரே கவிஜு மழையா பொழியுறீங்க.

//ஆயிரத்தை நூறாக்கி
ஓட்டையில் போட்டாச்சு//

உள்குத்து இருக்கோ Mr.பானபத்ர ஒனாண்டி?

சென்ஷி said...

/பூசாரி சொன்னார்
காணிக்கை கடவுளுக்காம்
அப்போ நான் யார்!?//

அப்போ பூசாரி யார்? :)

யாசவி said...

இப்படி புரியற மாதிரி எழுதுங்க வாலு

Eswari said...

@RAD MADHAV
//நல்ல வேலை அந்த மனிதன் நாங்கள் இல்லை..
ஒருவேளை நீங்களோ ???? :-))//
நா சொல்ல நெனைச்சேன். RAD MADHAV சொல்லிட்டாரு

க.பாலாசி said...

இரண்டு கவிதைகளும் நன்றாக இருக்கிறது.

ennachu en thalaikku. Mudiyala.

Mahesh said...

லட்சோபலட்ச விநாடிகள்
முகவாய்க்கருகில் கைவைத்து
சும்மா தான் இருந்தேன்
பொழுது போகாமல்
ப்ளாக் எழுத ஆரம்பித்தேன்
கதைகள் சொன்னேன்
எதிர்கவுஜ, மொக்கை என கடைவிரித்தேன்
அத்தோடு நிறுத்தியிருக்கலாம்
கவிதை(யும்) எழுதினேன்
...
...
மவனே... செத்தீங்க !!!!

இஃகி.... இஃகி.... இஃகி !!!

Vidhoosh said...

///கும்மிகள் ஸ்டார்ட் ஆக உள்ளதால் நான் வழிவுட்டுக்கிறேன்///

மீ த ரிப்ப்பீட்ட்ட்டு ....

-வித்யா

Anonymous said...

இரண்டு கவிதைகளுமே அர்த்தம் உள்ளவை. நன்றாக வந்திருக்கின்றது

Menaga Sathia said...

2 கவிதைகளும் நன்றாக இருக்கு வால்!!

பித்தனின் வாக்கு said...

மனிதனை படைத்ததொடு நிறுத்தி இருக்கலாம் அனால் நான் செய்த தவறு.

வால்பையனும் படைத்தென், அவன் என்னை கொன்றுவிட்டான்.

அண்ணா நீங்க எளுத மறந்ததை நான் எளுதிவிட்டன் சரியா?

சப்ராஸ் அபூ பக்கர் said...

:-)

கார்ல்ஸ்பெர்க் said...

//////தாவாகட்டையில்//
தாடையில், முகவாய்க்கருகில் என்றெல்லாம் கூட சொல்லலாம்.//

பூவ, பூன்னு சொல்லலாம்!
புய்பம்னு சொல்லலாம்!, நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்!//

--இங்க தான் நீங்க நிக்குறீங்க!!!

அப்பறம், இப்படி கவிதையா எழுதுனா நானெல்லாம் என்னங்க கமெண்ட் எழுதுறது??

அ.மு.செய்யது said...

வால் !! ஸ்கோர் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க..நடத்துங்க...

இரண்டு க‌விதையுமே ந‌ல்லாருக்கு.

ஆ.ஞானசேகரன் said...

//மனிதனை படைத்தேன்
நான் செத்தேன்.//
நல்லாயிருக்கு நண்பரே

ஹேமா said...

உங்களுக்கு இவ்வளவு கவிதை ரசனை இருக்கு .அப்போ ஏன் என் பக்கம் வருவதில்லை?.அப்படியே என் அடுத்த தளத்தில் உங்களுக்குப் பிடித்த ஒரு விடயம் போட்டிருக்கேன்.
வாங்க.

உண்மையில் முதல் கவிதை அருமை.நானும் இந்தக் கருவில் ஒரு கவிதை எழுதியிருக்கேன்.

சரவணன் (Saravanan) said...

தல அருமையான கவிதை......

. said...

2 கவிதைகளும் நன்றாக இருக்கு... :)

அழகான வார்த்தை வடிவமைப்புங்க... :) அந்த பூ உதாரணமும் அழகா இருக்கு!! ;) :)

kumar said...

தல‌ நாமெல்லாம் பன்னிங்க மறந்துட்டியளா?

kumar said...

முதல் கவிதை சூப்பர்

sakthi said...

அருமை வால்

Anonymous said...

முதல் கவிதை சூப்பர்

When it is high time said...

First poem:

God says -

'I created everything when I wanted as a relaxation. I was happy in doing the act of creation. Finally, I created man. He became my Frankenstein's monster. He killed me."

This is the poem.

What was the intention of God when he created all things before man? What was his intention when he created man finally?

When do we feel happy or unhappy? When we expect. If our expectations fail, we become unhappy; if successful ,we become happy.

Should God expect something when he does a thing like we do? Did he do the act of expectation before the act of creation?

What the poet says by 'god getting killed by man' is that God expected something, but that expectation was belied by man.

The basic flaw in the poem is to give God the same identity or features that characterize man: all human foibles like love, hate, expectations, disappointments etc. Hindu puranaas may make God in anthropomorphic form, giving features of man. But that is to help us feel closer to God. The Hindus say it is a path towards the real godhead which is formless and featureless, beyond time and space: Inestimable, Illimitable and Ineffable God.

When such a God cant be grasped, and passeth all human understanding, how can we dare to fathom his intentions? To understand God is to limit him. To limit him is to subject him to the power of man.

The poem cavils at the concept of Godhead. To dustbin it should go.

நாஞ்சில் நாதம் said...

:))

When it is high time said...

Second poem:

May not go to dustbin.

The priest's statement is symbolic. By saying that the money goes to god, he meant it was for the maintenance or running of the temple. If the temple is a popular one, like Tirupathi, the money dropped in Hundis is excess, so it goes to run charities also. There, the priest would say, your money is not going to God only (i.e running the temple) but to help the poor by way of charities.

I wonder what would this cavalier poet write back when he heard the priest saying as I wrote.

Much things can be written but it will make this poem also to go to dustbin. I want to save it at least.

Hence, stopping here.

Radhakrishnan said...

கவிதைகள் நன்றாக இருக்கிறது. மிகவும் அருமை. மனிதனைப் படைத்ததும் மனிதர்களே கடவுளாகிப் போனதன் மர்மம் சொல்கிறது.

உண்டியல் அது சரி.

When it is high time said...

On my criticism of his two poems in his older post, the blogger replied something.

Here, I would like to make it clear a truism concerning poems and poets.

Poets write. When the moving finger writes, the poem belongs to him. When it is delivered, it is no longer his.

In Tamil poetry grammar, it is called தற்கிழமை - பிறிதின்கிழமை.

தற்கிழமை - கருக்கொள்ளும்போதும், எழுதும் போதும். அனைத்தும் கவிஞனுக்கு சொந்தமே. அங்கு நமக்கு இடமில்லை.

பிறிதின்கிழமை - வெளியிடப்பட்ட பின். கவிஞனுக்கு, அது சொந்தமில்லை. அஃதாவது, அது சொல்லும் பொருள் அல்லது சொல்வதாக எடுத்துக்கொள்ளும்பொருள், எதற்கும் கவிஞன் சொந்தம் கொண்டாடமுடியாது. அவற்றுகெல்லாம் பொதுமக்களான நாமே உரிமையெடுப்போம். அஃதாவது, நாம் விரும்பியவண்ணம் பொருளை எடுத்துக்கொள்வோம்.
கவிஞன் கைகட்டி வேடிக்கைதான் பார்க்கலாம். அவன் கவிதை புகழப்பட்டால், மகிழ்ச்சி கொள்ளலாம். இல்லாவிட்டால், அவன் எதையும் செய்யலாம் விமர்சனம் செய்யும் பொதுவானவரைத் தொடாதமட்டும்.

The two concepts sometimes lead to torture on the part of the poet. Because people sharply criticize you, giving meaning you have not intended. Or, saying things which hurt you. It requires equanimity to withstand all.

When his famous poem, Ode to Nightingale, was savagely critiised in a magazine, Keats, the poet, tried to commit suicide. Thereafter, he fell ill; and finally died, at the age of 24.

There is a better way to escape all: Write poem, put up for public and then, run away without looking back.

சின்னப் பையன் said...

:-))))

Unknown said...

Why do you want to hurt others feelings?

அவர் அவர் நம்பிக்கை அவர்க்கு.

வால்பையன் said...

// Mãstän said...

Why do you want to hurt others feelings?
அவர் அவர் நம்பிக்கை அவர்க்கு.//

இருக்கட்டும் நான் ஒன்னும் தப்பா சொல்லலையே!

மனிதனின் நாகரீக அறிவுக்கு முன்னால் கடவுள் என்ற பேச்சே இல்லையே! இன்று துவைத்து காயப்போடுகிறோமா இல்லையா!?
அதை தான் சொல்லியிருக்கிறேன்!

When it is high time said...

கவிஞருக்கு கவிதை சொந்தமல்ல, மஸ்தான். திரும்ப படிக்கவும்.

நீதிபதி தண்டனையோ, விடுதலையோ கொடுக்கிறார். He cant change his sentence, if it is harsh, because you will be hurt. He has to do his duty. The critic has to say what he feels; not what others wish for.

When it is high time said...

நிறைய பின்னூட்டங்களில் இங்கே,

கவிதைகள் நன்றாக வந்திருக்கிறது;

என்று எழுதுகிறார்கள்.

கவிதைகள் - plural.

கவிதைகள் நன்றாக இருக்கின்றன. வந்திருக்கின்றன - என்றுதானே எழுதவேண்டும்.

இப்படிப்பட்ட இலக்கணப்பிழைகள் இங்கு மட்டுமல்ல, பத்திரிக்கைகளில் கூட காண்கிறோம்.

கிருஷ்ண மூர்த்தி S said...

நெருஞ்சி முள்ளாக இருந்து இப்பக் கத்துற மீனாக மாறியவர் சொன்னது:

/இப்படிப்பட்ட இலக்கணப்பிழைகள் இங்கு மட்டுமல்ல, பத்திரிக்கைகளில் கூட காண்கிறோம்./
பத்திரிகையா - பத்திரிக்கையா?
இன்னாதிது?
தொடர்ந்து ஆறு பின்னூட்டங்கள், இதுக்கு அந்த ஆப்பரசனே பெட்டர் போல இருக்கே!

Thomas Ruban said...

மனிதனை(மனிதர்களை) படைத்தால் சாவேன் என்று படைத்தவனுக்கு தெரியாதோ?

வால்பையன் said...

//மனிதனை(மனிதர்களை) படைத்தால் சாவேன் என்று படைத்தவனுக்கு தெரியாதோ? //

கடவுளால் தூக்கமுடியாத கல்லை படைக்க முடியுமா!?
அப்படி படைத்தால் அந்த கல்லை கடவுளால் தூக்க முடியாது அல்லவா!?
அப்போ கடவுளுக்கு தெரியாத விசயங்களும், முடியாத விசயங்களும் உண்டு!

தெரியாத விசயம்=வால்பையன்
முடியாத விசயம்=வால்பையன்

வேந்தன் said...

இரண்டு கவிதையும் நன்றாக இருக்கு :)))

உங்கள் ராட் மாதவ் said...

//கடவுளால் தூக்கமுடியாத கல்லை படைக்க முடியுமா!?
அப்படி படைத்தால் அந்த கல்லை கடவுளால் தூக்க முடியாது அல்லவா!?
அப்போ கடவுளுக்கு தெரியாத விசயங்களும், முடியாத விசயங்களும் உண்டு!//

டச்சிங்... பாயிண்ட்...
இனிமே உங்க பேரு வால் பையன் இல்லை.
சுவாமி அருணா நந்தா .... :-)

வால்பையன் said...

//சுவாமி அருணா நந்தா .... :-)//

நந்தாவை எதுக்கு பாட்னர்ஷிப் சேர்க்குறிங்க!
நானே தனியா சமாளிச்சுகிறேன்!
இப்பவெல்லாம் ஜெயிலில் சிக்கன் போடுறாங்களாம்!

தினேஷ் said...

சித்தர் வாலு

Saravanan Trichy said...

தல பின்னுறிகளே!

NO said...

அன்பான நண்பர் திரு வால் பையன்,

என்ன சார் அப்படி கிண்டல் பண்ணுறீங்க கடவுள?

ஒண்ணு புரிஞ்சிக்கோங்க, கடுவுள் ரொம்ப கெட்டிக்காரரு, அவ்வளவு வருஷம் சும்மா இருந்தாலும், மனுஷன படைக்கும்போது அதான், ஆதாமையும் ஏவாளையும், வெள்ளைகாரனாகத்தான் படைச்சாரு. சீனகாரனாகவோ இல்ல கொரியாகாரணாகவோ படைத்திருந்தால் வச்சிகொங்களேன், ஆப்பிள உட்டுப்புட்டு, பாம்ப இல்ல அடிச்சி தின்னுருப்பாங்க? அப்புறம் நம்ம தலைஎழுத்தெல்லாம் வேற மாதிரியில்ல போயிருக்கும்!

இதெல்லாம் புரியாம கவிதை கழுதைன்னு பாவம் அவர என் சார் கிண்டல் பண்ணுறீங்க? வேலைப்பாருங்க சார்.

நன்றி

Thamira said...

ஹை.. கவுஜ நலாதான்பா இருக்குது.!

வழிப்போக்கன் said...

அர்த்தமுள்ள கவிதைகள்....

Anonymous said...

2012 ல் உலகம் அழியுமா?

பல திக்குகளிலிருந்து வாதங்கள்.
(மின்னஞ்சலில் வந்த விசயம்)


1.மயன் காலண்டர் 21.12.2012 பூமியின் அழிவு நாள் என சொல்லுகிறது.




2.சூரியனிலிருந்து வெளிபடும் வெப்பக் கதிர்வீச்சு (சூரியப் புயல்)2012 அதீதமாய் மனித குலத்தையே பொசுக்கலாம்.

3.ஐரோப்பிய விஞ்ஞானிகளின் விஷப் பரிடசை அணுப் பரிசோதனை 2012ல்( 27 கி,மிக்கு குகை அமைத்து வெடிச் சோதனை)
.
4. பைபுளும் 2012 ல் சாத்தானுக்கும் தேவனுக்கும் நடக்கும் இறுதி சண்டை உலக் அழிவுக்கு காரணமாகலாம்.

5.அமெரிக்க மஞ்சள்கல் தேசியப் பூங்காவில் உள்ள சூப்பர் எரிமலை வெடித்து சிதறும் நாள் 2012ல்,அது எழுப்பும் புழுதிச் சாம்பல் சூரியனயே மறைக்கும் பனிப் புயல் தோன்றி பேரழிவுக்கு வழி செய்யலாம்


6.பூமியின் காந்த வடது இடது முனைகள் பக்கவாட்டில் வேகமாய் நகர்வது 2012ல் அதிகமாகி காந்த பீல்டு சமன் நிலை தவறி அனத்து உயிரினக்களும் பொசுங்கி...........


விஞ்ஞான சான்றுகளின் அடிப்படையில் விவாதம் தொடங்கட்டுமே!

டோண்டு அல்லது வால்பையனை விவாதத்தை தொடங்க அழைக்கிறேன்

Thomas Ruban said...

//கடவுளால் தூக்கமுடியாத கல்லை படைக்க முடியுமா!?
அப்படி படைத்தால் அந்த கல்லை கடவுளால் தூக்க முடியாது அல்லவா!?
அப்போ கடவுளுக்கு தெரியாத விசயங்களும், முடியாத விசயங்களும் உண்டு!

தெரியாத விசயம்=வால்பையன்
முடியாத விசயம்=வால்பையன்//

புரியவில்லை!புரியவில்லை.

மந்திரன் said...

இதை கவிதை என்று ஒத்துக் கொள்ளமாட்டேன்
ஆனால் கருத்துகள் , அதை சொன்ன விதம் அருமை ..

ஜெட்லி... said...

ரெண்டுமே நச்....

கலையரசன் said...

கடவுளை விட கூடாதுன்னு கங்கனம் கட்டிகிட்டு கரகம் ஆடுறீங்க போல....
ஆடுங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

அடக்கடவுளே.......

Maximum India said...

ஆத்திகனை விட நாத்திகன்தான் கடவுளை அதிகம் நினைப்பான் என்பது உங்கள் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது.

நடத்துங்க! நடத்துங்க!
:-)

நன்றி!

தருமி said...

ஒரு சின்ன பொறாமை வால்ஸ். ஏன்னா என் பதிவுகளில் இத்தனை 'கடவுள் மறுப்பாளர்களை'க் கண்டதில்லை.

அததுக்கு ஒரு வாய்ப்பு.

- இரவீ - said...

கரும்பலகையில் ஒற்றை வெண் புள்ளியையும் ...
தூரத்து நிலவின் கலங்கமுமே கண்ணில் படுது, என்ன செய்ய ...???

கோபிநாத் said...

கலக்கல் தல ;)))

மேவி... said...

present sir ........

மங்களூர் சிவா said...

//அத்தோடு நிறுத்தியிருக்கலாம்
மனிதனை படைத்தேன்
நான் செத்தேன்.//

:))

Unknown said...

I am ... புளியம் பிரியாணி .. Not.. புலியம்...
Anyways Its ok Ma...
ஜனங்களுக்கு நாலு நல்ல கருத சொல்ல விட மாட்டிங்களே..
வாழ்க பார்பன ஆதிக்கம்

கார்த்திகைப் பாண்டியன் said...

வார்த்தைகள் அருமை தல..

கிருஷ்ண மூர்த்தி S said...

//தருமி said...

ஒரு சின்ன பொறாமை வால்ஸ். ஏன்னா என் பதிவுகளில் இத்தனை 'கடவுள் மறுப்பாளர்களை'க் கண்டதில்லை.

அததுக்கு ஒரு வாய்ப்பு.//

அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல தருமி ஐயா!
வாத்தியாரா இருக்குறதுல ரெண்டு எடஞ்சல் இருக்கு!
ஒண்ணு, யாராவது நம்ம வால் மாதிரி, எதுத்துக் கேள்வி கேக்க ஆரம்பிச்சா, பெஞ்சு மேல ஏத்தி வுட்டுடறீங்க, இனிமே என் க்ளாசுக்குல்லாரையே நுழையாதேன்னு தடை உத்தரவும் போட்டுடறீங்க!

ரெண்டாவதா,ஹோம் வொர்க் எல்லாம் பசங்களுக்குத் தான், வாத்தியாருக்கு இல்லன்னு அப்பப்ப சொல்லாம, சிலநேரங்களில் சொல்லியே!

இங்க பாருங்க, நம்ம வால்ஸ் எப்படி ஹோம் வொர்கைத் தான் பண்றவிதத்துல பண்ணி அத்தோட, மத்தவங்களும் ஹோம் வொர்க் பண்ண ஒத்தாசையா இருக்கார்னு!

அவ்ளோதான்:-))

கிருஷ்ண மூர்த்தி S said...

/ அடக்கடவுளே.......

August 18, 2009 10:48 PM
Blogger Maximum India said...

ஆத்திகனை விட நாத்திகன்தான் கடவுளை அதிகம் நினைப்பான் என்பது உங்கள் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது./

இதுல சந்தேகம் வேறயா:-))

ஆத்திகம்பேசறவங்க, நேரா க்யூ வரிசையில் நின்னு, காத்துக் கிடந்தது கடவுளைப்பாக்க முயற்சி பண்றவங்க! நிறைய சமயம் கவுண்டர்ல, டிக்கட் தீர்ந்துபோய் அடுத்த சோவோ, இல்லேன்னா என்னிக்கு எந்த ஷோவோன்னு தெரியாம இருக்குறவங்க!

வால்பையன் மாதிரி, கவிதை எழுதிக் கலக்கி நாத்திகம் பேசறதெல்லாம், வி ஐ பி வி வி ஐ பின்னு சொல்றாங்களே அந்த ரகம்!

வந்தப்பவே ஷோ பாத்துடலாம்!

அடக் கடவுளே! ஏன் இப்படின்னுதான் நானும் ரொம்ப நாளாவே கேட்டுகிட்டிருக்கேன்!

RAHAWAJ said...

அருமை வால்,நல்லா இருக்கு

Anonymous said...

//No said...
அன்பான நண்பர் திரு வால் பையன்,

என்ன சார் அப்படி கிண்டல் பண்ணுறீங்க கடவுள?

ஒண்ணு புரிஞ்சிக்கோங்க, கடுவுள் ரொம்ப கெட்டிக்காரரு, அவ்வளவு வருஷம் சும்மா இருந்தாலும், மனுஷன படைக்கும்போது அதான், ஆதாமையும் ஏவாளையும், வெள்ளைகாரனாகத்தான் படைச்சாரு. சீனகாரனாகவோ இல்ல கொரியாகாரணாகவோ படைத்திருந்தால் வச்சிகொங்களேன், ஆப்பிள உட்டுப்புட்டு, பாம்ப இல்ல அடிச்சி தின்னுருப்பாங்க? அப்புறம் நம்ம தலைஎழுத்தெல்லாம் வேற மாதிரியில்ல போயிருக்கும்!

இதெல்லாம் புரியாம கவிதை கழுதைன்னு பாவம் அவர என் சார் கிண்டல் பண்ணுறீங்க? வேலைப்பாருங்க சார்.

நன்றி//

தங்கல் வரவு நல வறவாகட்டும். வெலுத்துக் கட்டுங்க

சொள் அலகன்

Unknown said...

இது ஏதோ புரியற மாதிரி இருக்கே..
:-)

கிருஷ்ண மூர்த்தி S said...

/Blogger பட்டிக்காட்டான்.. said...

இது ஏதோ புரியற மாதிரி இருக்கே..
:-)/

மொதல்ல கையக் குடுங்க! உங்களுக்குக் கடவுள் யார்னு தெரிஞ்சு போச்சு!!

தருமி said...

கிருஷ்ணமூர்த்தி ஐயா,
//எதுத்துக் கேள்வி கேக்க ஆரம்பிச்சா, பெஞ்சு மேல ஏத்தி வுட்டுடறீங்க, இனிமே என் க்ளாசுக்குல்லாரையே நுழையாதேன்னு தடை உத்தரவும் போட்டுடறீங்க!//

எப்பவுமே அப்ப்டிதாங்க ஐயா, என் வகுப்புள்ள நுழைஞ்சுட்டா நல்லபடியா க்ளாசுக்குள்ள இருக்கணுங்க ..இல்லாட்டி தூக்கு எறிஞ்சிர்ரதுதாங்க. ஆனா நீங்க சொல்ற மாதிரி கேள்வி கேட்டா அப்டில்லாம் பண்றதில்லைங்க. மருவாதி .. அது மட்டும்தாங்க வேணும்.

ஆனா இந்தப் பிரச்சனை இங்க எதுக்குங்க. நான் அந்த மாதிரி பதிவுகளில் இருந்தது முந்தி இருந்திச்சி. இப்போவெல்லாம் அதுக்கு யாரும் சான்ஸ் கொடுத்ததேயில்லைங்க. நீங்க மனசுல ஒண்ணு கேள்வியில வேற அப்டின்றதுமாதிரி சொல்றீங்க .. நேரடியாவே பேச எனக்குப் பிடிக்கும்.

தருமி said...

//ரெண்டாவதா,ஹோம் வொர்க் எல்லாம் பசங்களுக்குத் தான், வாத்தியாருக்கு இல்லன்னு அப்பப்ப சொல்லாம, சிலநேரங்களில் சொல்லியே!//

கொஞ்சம் திரும்பிப் பாருங்களேன். என் பதிவுகளில் யார் யாருக்கு ஹோம் ஒர்க் கொடுத்ததுன்னு ...

Unknown said...

//.. கிருஷ்ணமூர்த்தி said...

/Blogger பட்டிக்காட்டான்.. said...

இது ஏதோ புரியற மாதிரி இருக்கே..
:-)/

மொதல்ல கையக் குடுங்க! உங்களுக்குக் கடவுள் யார்னு தெரிஞ்சு போச்சு!! ..//

ஏன் இந்த கொலைவெறி..??!!

"உழவன்" "Uzhavan" said...

இரண்டும் அருமை. நான் எப்போதும் வீட்டு உண்டியலில்தான் காசு போடுவேன். கோவில் உண்டியல் பக்கம் பார்ப்பதேயில்லை :-)

பித்தனின் வாக்கு said...

நன் எப்பவும் வீட்டு உண்டியயலில் தான் போடுவன்.

தலைவா பொய் சொல்லந்தீங்க போடுவீங்களா? எடுப்பிங்களா?

"உழவன்" "Uzhavan" said...

//தலைவா பொய் சொல்லந்தீங்க போடுவீங்களா? எடுப்பிங்களா?//



போடுறதே எடுக்குறதுக்குத்தான தலைவா :-)

Anonymous said...

* ஆசைகளை அடக்கிக் கொள் வதற்கும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மனதை அடக்கிப் பழகுவதற்கும் ஆன்மிகம் நமக்குக் கற்றுத் தருகிறது.
* விலைவாசியைக் கட்டுப்படுத்த மட்டுமே நாம் முயற்சிக்கிறோம். ஆனால், யாரும் மனதைக் கட்டுப் படுத்துவதில் நாட்டம் கொள் வதில்லை.
* இரும்பிலும், துணியிலும் உற்பத்தித்திறனை அதிகரிக்கச் செய்வதில் ஆவல் கொள்கிறோம். அதைக் காட் டிலும் மனதில் நல்ல எண்ணங்களை உற்பத்தி செய்வதில்லை.
* புளிப்பு, கசப்பின்றி இனிமையாக இருக்கும் கனிகளை நாம் கடவுளுக்குப் படைக்க விரும்புகிறோம். ஆனால், தூய்மையான எண்ணங்கள் கொண்ட மனம் என்னும் கனியைப் படைக்கவே அவர் விரும்புகிறார்.
* வாழ்க்கையில் வசதிகளும், செல்வமும் வந்துபோகும். அதனால், அவற்றை நாடி வாழ்க்கையை வீணாக்கி விடக்கூடாது. நம்மால் முடிந்த சேவைகளைச் செய்வதே நிலையான அமைதியைத் தரும்.
* மனிதப்பிறவி கிடைப்பது அரிது. உலக இன்பங்களைத் தேடுவதிலும், அவை கிடைக்காவிட்டால் வேதனைப் படுவதிலுமே பொழுதைக் கழித்து விடுகிறோம்.

கோவி.கண்ணன் said...

//கோவி கண்ணன் + தமிழோவியா +தமிழச்சி said...
* ஆசைகளை அடக்கிக் கொள் வதற்கும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மனதை அடக்கிப் பழகுவதற்கும் ஆன்மிகம் நமக்குக் கற்றுத் தருகிறது.
//

இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அப்பதான் அடுத்தவன் அப்பனுக்கு பிள்ளையாக நடிக்காமல் இருக்க முடியும்.

வால்பையன் said...

நன்றி அப்பாவி முரு
நன்றி RAD MADHAV
நன்றி அகநாழிகை
நன்றி சுப்பு
நன்றி கதிர்-ஈரோடு
நன்றி அசோக்
நன்றி கிருஷ்ணமூர்த்தி
நன்றி யோ
நன்றி பாலகுமாரன்
நன்றி சென்ஷி
நன்றி யாசவி
நன்றி ஈஸ்வரி
நன்றி பாலாஜி
நன்றி மகேஷ்
நன்றி விதூஷ்
நன்றி சின்ன அம்மணி
நன்றி Mrs.Menagasathia
நன்றி பித்தன்
நன்றி சப்ராஸ் அபூ பக்கர்
நன்றி கார்ல்ஸ் பெர்க்
நன்றி அ.மு.செய்யது
நன்றி ஆ.ஞானசேகரன்
நன்றி ஹேமா
நன்றி சரவணம்
நன்றி பிரியங்கா
நன்றி குமார்
நன்றி சக்தி
நன்றி மகா
நன்றி ஸ்வார்டு பிஷ்
நன்றி நாஞ்சில் நாதம்
நன்றி வெ.இராதாகிருஷ்ணன்
நன்றி ச்சின்னப்பையன்
நன்றி மஸ்தான்
நன்றி Thomas Ruban
நன்றி வேந்தன்
நன்றி சூரியன்
நன்றி குட்டிபிரபு
நன்றி நோ
நன்றி ஆதிமூல கிருஷ்ணன்
நன்றி வழிப்போக்கன்
நன்றி பித்தன்
நன்றி அனானி
நன்றி மந்திரன்
நன்றி ஜெட்லி
நன்றி கலையரசன்
நன்றி பிரியமுடன் வசந்த்
நன்றி மேக்ஸி
நன்றி தருமி
நன்றி இரவீ
நன்றி கோபிநாத்
நன்றி டம்பி மேவி
நன்றி மங்களூர் சிவா
நன்றி புளியம்
நன்றி கார்த்திகைப்பாண்டியன்
நன்றி RAHAWAJ
நன்றி சொள் அலகன்
நன்றி பட்டிகாட்டான்
நன்றி உழவன்
நன்றி போலி கோவிகண்ணன்
நன்றி கோவிகண்ணன்

பா.ராஜாராம் said...

ரெண்டுமே ரொம்ப பிடிச்சு இருக்கு அருண்.ரெண்டாவது ரொம்ப...

Unknown said...

//மனிதனை படைத்தேன்
நான் செத்தேன்.//
உண்மையான வார்த்தைகள்..!

Unknown said...

//மனிதனை படைத்தேன்
நான் செத்தேன்.//

உண்மையான வார்த்தைகள்..!

Unknown said...

//மனிதனை படைத்தேன்
நான் செத்தேன்.//

உண்மையான வார்த்தைகள்..!

பித்தனின் வாக்கு said...

manithanai padaithathal avaru sethu ponathu irukkattum, ennaiyum ungalaiyum padaithathal avaru thinam, thinam sethu poraru, athukku enna panna. kavithai nalla irukku.

!

Blog Widget by LinkWithin