செத்துப்போன தருணங்கள்!




வட்டமாக முடியப்போன
கோடொன்று
வளைந்து வளைந்து
ஆரம்பத்தின்
முடிவைத் தேடியது
என் பாதத்திற்கடியில்
ஒளிந்திருந்த முடிவு
ஆரம்பித்தது


*************************



செத்துப்போன தருணங்களில்
உயிர்தெழ ஆசையில்லை
நினைவலையில் ஒளிந்திருந்த
காற்றலைகள் கடனாக
உயிர் தந்து பின்பு
கடனாளி என்றது

61 வாங்கிகட்டி கொண்டது:

அகல்விளக்கு said...

தல கலக்கிட்டீங்க போங்க

அகல்விளக்கு said...
This comment has been removed by the author.
அகல்விளக்கு said...

தல கலக்கிட்டீங்க போங்க

VIKNESHWARAN ADAKKALAM said...

பாஸ் நல்லா தானே இருந்திங்க... என்னாச்சி திடீர்னு...

ரெண்டு போத்தல் விஸ்க்கி அடிச்சா மாதிரி இருக்கு...

நட்புடன் ஜமால் said...

என்னா ஆச்சு வால்ஸ்

சும்மா மிரட்டுது வரிகள்


---------------------


அருமையாக இருக்குங்க.

சென்ஷி said...

அசத்தல்!

யோ வொய்ஸ் (யோகா) said...

வைரமுத்து வீட்டுக்கு போக வேண்டி வந்துடுமோ?

மணிஜி said...

அவிங்க இன்னும் உன் வீட்டுக்கு வரலையா?

ஈரோடு கதிர் said...

//காற்றலைகள் கடனாக
உயிர் தந்து பின்பு
கடனாளி என்றது//

அருமை அருண்

அப்பாவி முரு said...

இப்ப எப்பிடி மூஞ்சி சிரிச்ச வாக்குல இருக்கு,

அதைவிட்டு எப்பபாத்தாலும் (சண்டைபோட்டதால்) அழுதுக்கிட்டேவும்,

நல்லாவா இருந்துச்சு??

Beski said...

ரெண்டாவது சூப்பரு.
(அப்போ மொத இது சரியில்லையான்னு கேக்கக்கூடாது... அது சரியா புரியல... வெக்கத்துல காலால கோலம்போடுறத சொல்றீங்களோ!)

ஹேமா said...

சொற்கள் லாபகமாகக் கோர்த்த அழகும் கருவும் அருமை.

Raju said...

எங்க ஊரு அனுஜன்யா வாழ்க...!
ஈரோட்டுக் கவி வாழ்க..!
மதுரை மாமுனி வாழ்க..!

Raju said...

இன்னிக்கி என்ன சரக்கடிச்சீங்க சாமீ..
கொஞ்சம் சொன்னீங்கன்னா, நானும் அடிச்சுட்டு கவிதை எழுதுவேன்ல.

Raju said...

\\அகல் விளக்கு said...
தல கலக்கிட்டீங்க போங்க\\

கலக்காம அடிச்சதுனாலதாங்க கவிதை.

Admin said...

ஒண்ணுமே புரியல்ல தல.....

கவிதை மாதிரின்னு சொல்றது இதுதானா......

Raju said...

\\ தண்டோரா ...... said...
அவிங்க இன்னும் உன் வீட்டுக்கு வரலையா?\\

யாரு..?
விழுப்புரம் பார்ட்டீஸா..?
பல்லாவரம் பக்கம் இருந்தா அப்டியே ஈரோட்டுப்பக்கம் அனுப்பி விடுங்க சாமிகளா...?

Raju said...

\\சந்ரு said...
ஒண்ணுமே புரியல்ல தல.....\\

நீங்க இன்னும் வளரனும்...!
:)

வழிப்போக்கன் said...

kavithai kalakkal...

Ashok D said...

1. புள்ளி

2. 7

Ashok D said...

அதேப்படி செத்துபோனபின்னாடி உயிர்தெழ ஆசை?

(இப்படி தான்ப்பா கேள்வி கேப்ப, நாங்க எழுதியிருந்தால்)

Admin said...

//டக்ளஸ்... said...
இன்னிக்கி என்ன சரக்கடிச்சீங்க சாமீ..
கொஞ்சம் சொன்னீங்கன்னா, நானும் அடிச்சுட்டு கவிதை எழுதுவேன்ல.//


தண்ணி அடிச்சாத்தான் கவிதை வருமோ


எனக்கும் சொல்லுங்க தல அந்த தண்ணி எந்த ரகம் என்று....

Admin said...

// D.R.Ashok said...
அதேப்படி செத்துபோனபின்னாடி உயிர்தெழ ஆசை?

(இப்படி தான்ப்பா கேள்வி கேப்ப, நாங்க எழுதியிருந்தால்)//


அப்படிப்போடு....
அது கேள்வி...
திரும்பவும் ஒரு தரம் கேளு ராசா...

Admin said...

//டக்ளஸ்... said...
\\சந்ரு said...
ஒண்ணுமே புரியல்ல தல.....\\

நீங்க இன்னும் வளரனும்...!
:)//



எப்படிங்க வளரலாம்...

Beski said...

//தண்ணி அடிச்சாத்தான் கவிதை வருமோ //
அப்படியெல்லாம் இல்ல.
ஆனா போதைலதான் கவிதை வரும்... அந்த போதை பெண்ணாகக்கூட இருக்கலாம்.

Admin said...

//எவனோ ஒருவன் said...
//தண்ணி அடிச்சாத்தான் கவிதை வருமோ //
அப்படியெல்லாம் இல்ல.
ஆனா போதைலதான் கவிதை வரும்... அந்த போதை பெண்ணாகக்கூட இருக்கலாம்.//


நீங்க ரொம்ப தெளிவாத்தான் இருக்கிங்க...

Beski said...

//சந்ரு said...
நீங்க ரொம்ப தெளிவாத்தான் இருக்கிங்க...//

ஆமா.
அதெல்லாம் நாளை இரவுதான்.

Admin said...

//எவனோ ஒருவன் said...
//சந்ரு said...
நீங்க ரொம்ப தெளிவாத்தான் இருக்கிங்க...//

ஆமா.
அதெல்லாம் நாளை இரவுதான்.//

எங்களையும் செர்த்துகங்க நண்பா நாங்களும் உங்க வழிக்கு வாரம்...

தேவன் மாயம் said...

வால்! எதிர் கவிதையிலிருந்து நைஸா கவிஞனாகிக் கொண்டே இருக்கீர்!!!!

இரவுப்பறவை said...

கவிதைகள் அழகு..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

என்னமோ நடக்குது ....மர்மமாய் இருக்குது. வாலுக்கு என்ன ஆச்சு? நான் அப்பவே சொன்னேன், வர வர வாலு இலக்கியவாதி ஆகிட்டாப்புலன்னு,யாரும் நம்பல.இப்போ எல்லாரும் நம்புறீங்களா?

Mythees said...

//நினைவலையில் ஒளிந்திருந்த
காற்றலைகள் கடனாக
உயிர் தந்து பின்பு
கடனாளி என்றது//

கவிதை...கவிதை.....

Vidhoosh said...

எல்லாம் அனுவின் ஆசிர்வாதம்.
வாழ்க.
வெட்கம் அழகு.
கடன் வாங்கினா மறந்துருவீங்களே??
--வித்யா

அ.மு.செய்யது said...

இத‌ற்கு அனுஜ‌ன்யா ஒரு எதிர்க‌வுஜ‌ பிரிபேர் ப‌ண்ணுவ‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ந்திருக்கிற‌து.

வால் !! இதெல்லாம் ஸ்வைன்ஃபுளுவுக்கான‌ அறிகுறிக‌ள்.பார்த்து சூதான‌மாக‌ இருக்க‌வும்.

Anbu said...

கவிதை நல்லா இருக்கு அண்ணா

Unknown said...

நல்லாதானே போயிட்டிருந்தது...
அப்புறம் அ.மு. செ.. சொன்னதை வழி மொழிகிறேன்

ஊர்சுற்றி said...

எதிர்க் கவுஜ எழுதறது போக, நீங்களே கவிதையெல்லாம், அதுவும் குழப்புறமாதிரி...

வால். கலக்குங்க.

வேந்தன் said...

அருமை:)

ப்ரியமுடன் வசந்த் said...

//வட்டமாக முடியப்போன
கோடொன்று
வளைந்து வளைந்து
ஆரம்பத்தின்
முடிவைத் தேடியது
என் பாதத்திற்கடியில்
ஒளிந்திருந்த முடிவு
ஆரம்பித்தது//

தல இது திருமண வாழ்க்கைய குறிக்கிறதா இல்லை இளமைவாழ்க்கையை குறிக்கிறதா?

அப்பறம் வெக்கத்தவிட்டு கேக்குறேன் இன்னும் நீங்க என்னை ஏன் ஃபாலோ பண்ணல

நேசமித்ரன் said...

முதல் பத்தி தேர்ந்த சொற்களால் நெய்யப் பெற்றிருக்கிறது

:)

Menaga Sathia said...

கலக்குறீங்க வால்!!

அகல்விளக்கு said...

நிறய்ய சரக்குகளை கலந்து செம மிக்ஸிங்கா அடிச்சிருப்பாங்களோ.....

:-))

டக்ளஸ் அண்ணா

நீங்க சொன்னது கூட நடந்திருக்கலாம்!!!
கலக்காம அடிச்சதுனாலதான் கவிதையோ??????

என்னவோ கலக்கிட்டீங்க போங்க.....

Prakash said...

வின்சென்ட் வான் காகின் ஓவியங்கள் அருமை :P

அப்துல்மாலிக் said...

வால் கவிதை நல்லா வருதே

ஏன் ஒரு காதல் கவிதை முயற்சி பண்ணக்கூடாது

உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்

SUMAZLA/சுமஜ்லா said...

என்னோட சின்ன அறிவுக்கு ரெண்டாவது கவிதை மட்டும் தான் புரிந்தது.

NILAMUKILAN said...

அழகான கவிதை ஆழமான வரிகள். வாழ்த்துக்கள் வால்

மாதவராஜ் said...

முதல் கவிதையின் அர்த்தங்கள் முடியாமல் நீள்கின்றன. வாழ்த்துக்கள்.

Unknown said...

ஐயோ ராமா..!!

- இரவீ - said...

//
வட்டமாக முடியப்போன
கோடொன்று
வளைந்து வளைந்து
ஆரம்பத்தின்
முடிவைத் தேடியது//

அருமை அருமை... செம டச்சிங் ...

ஆ.ஞானசேகரன் said...

//செத்துப்போன தருணங்களில்
உயிர்தெழ ஆசையில்லை
நினைவலையில் ஒளிந்திருந்த
காற்றலைகள் கடனாக
உயிர் தந்து பின்பு
கடனாளி என்றது//

நல்லாயிருக்கு

S.A. நவாஸுதீன் said...

செத்துப்போன தருணங்களில்
உயிர்தெழ ஆசையில்லை
நினைவலையில் ஒளிந்திருந்த
காற்றலைகள் கடனாக
உயிர் தந்து பின்பு
கடனாளி என்றது

இது ரொம்ப நல்லா இருக்கு தல

VISA said...

first poem is awesome

Prabhu said...

செத்துப்போன தருணங்களில்
உயிர்தெழ ஆசையில்லை
நினைவலையில் ஒளிந்திருந்த
காற்றலைகள் கடனாக
உயிர் தந்து பின்பு
கடனாளி என்றது////

தலைவா, இது உங்க சரக்கே இல்லயே தலைவா. அதாவது உங்க வட்டாரமே இல்ல. உங்க வட்டாரமே வேற. குவாட்டர், மானிட்டர், நெப்போலியன், அரிஸ்டோக்ரேட்னு உன் சரக்க அவுத்து உடு தலிவா!

Nathanjagk said...

வட்டமாக முடியப்போன
செத்துப்போன தருணங்களில்
கோடொன்று வளைந்து வளைந்து
உயிர்தெழ ஆசையில்லை
ஆரம்பத்தின்
நினைவலையில் ஒளிந்திருந்த
முடிவைத் தேடியது......
....
இப்படி ஒரு கொத்து பரோட்டாவுக்கு கூட சான்ஸ் இருக்கு தல!!!

கிருஷ்ண மூர்த்தி S said...

/ ஜெகநாதன் said...

வட்டமாக முடியப்போன
செத்துப்போன தருணங்களில்
கோடொன்று வளைந்து வளைந்து
உயிர்தெழ ஆசையில்லை
ஆரம்பத்தின்
நினைவலையில் ஒளிந்திருந்த
முடிவைத் தேடியது......
....
இப்படி ஒரு கொத்து பரோட்டாவுக்கு கூட சான்ஸ் இருக்கு தல!!!//

அட, ஆமா இல்ல?!

கிருஷ்ண மூர்த்தி S said...

/அட, ஆமா இல்ல?!/

இது ஜெகநாதன் சொன்ன மாதிரிக் கொத்துப் பரோட்டாவா ஆகுறதைச் சொல்றதுக்கு இல்ல:-)

நாட்டாமை said...

என்ன கண்ணு, திருவிழால பீர் வாங்கி தரலைன்னா அதுக்காக இப்படியா கொவபடுறது. இந்த மாதிரி கவிதை மாதிரி எதையாவது மூத்திரம் போன எப்படி கண்ணு. பேசாம உனக்கு வர்ற மொக்கையே மட்டும் போட்டுக்கிட்டு இரு கண்ணு. அதன் உனக்கும், நம்ம சதி சனம்களுக்கு நல்லது கண்ணு.

க.பாலாசி said...

//நினைவலையில் ஒளிந்திருந்த
காற்றலைகள் கடனாக
உயிர் தந்து பின்பு
கடனாளி என்றது//

மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை. அருமையான கவிதை அன்பரே.

Anonymous said...

இரண்டாவது கவிதையின் வார்த்தை நயம் அழகு!

லொள்ளு சபா said...

தல கலக்கிட்டீங்க போங்க

வால்பையன் said...

நன்றி அகல்விளக்கு
நன்றி விக்னேஷ்வரன்
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி சென்ஷி
நன்றி யோ
நன்றி தண்டோரா
நன்றி கதிர்-ஈரோடு
நன்றி அப்பாவி முரு
நன்றி எவனோ ஒருவன்
நன்றி ஹேமா
நன்றி டக்ளஸ்
நன்றி சந்ரு
நன்றி வழிப்போக்கன்
நன்றி அசோக்(புரியல)
நன்றி தேவன்மாயம்
நன்றி இறவு பறவை
நன்றி ஸ்ரீ
நன்றி மைத்தீஷ்
நன்றி அ.மு.செய்யது
நன்றி விதூஷ்
நன்றி அன்பு
நன்றி Kiruthikan Kumarasamy
நன்றி ஊர்சுற்றி
நன்றி வேந்தன்
நன்றி பிரியமுடன் வசந்த்
நன்றி நேசமித்ரன்
நன்றி Mrs.Menagasathia
நன்றி அகல்விளக்கு
நன்றி பரகாஷ்
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி SUMAZLA/சுமஜ்லா
நன்றி நிலாமுகிலன்
நன்றி மாதவராஜ்
நன்றி பட்டிகாட்டான்
நன்றி இரவீ
நன்றி ஆ.ஞானசேகரன்
நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி விசா
நன்றி பப்பு
நன்றி ஜெகநாதன்
நன்றி கிருஷ்ணமூர்த்தி
நன்றி நாட்டாமை
நன்றி பாலாஜி
நன்றி ஷீ-நிசி
நன்றி லொள்ளு-சபா

!

Blog Widget by LinkWithin