கதை சொல்லும் கதை!

என் பெயர் வினோத்! அது உங்களுக்குத் தெரியும்னு எனக்கும் தெரியும், பெரிய எழுத்தாளன்னு இல்லாட்டியும் எதோ எழுதுவேன்!. வெறும் டைரியில தான், ஆனா இப்போ ஒரு சிக்கல் முளைச்சு இருக்கு, அந்த சிக்கலை எப்படி தீக்குறதுன்னு தெரியல, இது என் மானப்பிரச்சனையும் கூட. வேண்டாம்னு தான் முதல்ல நினைச்சேன் ஆனா இப்போ இல்லைனா எப்பவுமே முடியாம போககூடிய சூழ்நிலை உருவாகலாம், அதனால் நான் இந்த போட்டியில கலந்துகிறதா முடிவு பண்ணிட்டேன், அதுக்காக ஒரு கதை எழுதி வச்சிருக்கிறேன் சொல்லட்டுமா!

வேண்டாம் உங்களுக்கு தான் படிக்க தெரியுமே நீங்களே படிச்சிகோங்க!

சுரேஷுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை, எதோ விளையாட்டாப் பேசபோய் இப்போ ஒரு மாச சம்பளத்துல வந்து நிக்குது பந்தயம், தோத்தா ஒருமாச சம்பளம் போறது மட்டுமில்லாம கூடவே மானமும் போகும், எப்படியாவது ஜெயிச்சாகனும், பெருசா விதிமுறைகள் கூட இல்ல, எந்த பத்திரிக்கையில வந்தாலும் பரவாயில்லைன்னு சொல்லிட்டான், ஆனா வழக்கமான பாணி கதை எழுதி அது திரும்பி வந்துட்டா மேலும் அவமானம், சுரேஷுக்கு தெரியும் இதுக்காக மூளையை கசக்குவதை விட எதாவது ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பித்தால் கண்டிப்பாக ஒரு வட்டமோ, சதுரமோ கிடைக்கும்.

நீண்ட பெருமூச்சொன்றை விடுத்து பேப்பரில்மளமளவென்று எழுதத்தொடங்கினான்!


சாம்புமாமாவுக்கு ஹைவேசில் வேலை, முப்பது வருட தாம்பத்தியத்தில் ஒரு மாதம் கூட முழுதாக வீடு தங்கியதில்லை, எப்போதும் வேலை வேலை வேலை தான். வீட்டை பொறுத்தவரை அவர் அறிந்தது செண்பகம்மாமி நன்னா வத்தகொழம்பு வைப்பா அம்புட்டு தான்!. விசயத்தை கேள்விபட்ட போது அவருக்கே ஆச்சர்யமா தான் இருந்தது, பின்னே இருக்காதா வீட்டிலே அடைஞ்ச கிடந்த செண்பகம்மாமி ஒரு சிறுகதை எழுத்தாளர்னு தெரியும் போது சாம்புமாவுக்கு ஆச்சர்யமாவும், அதிர்ச்சியாவும். மாமாவுக்கு தெரியாம இத்தனை நாள் மறைச்சதுக்கு ஒரு காரணமும் சொல்லமுடியல மாமியால, வாதம் முத்தி கடைசியில ஒரு வழியாக போட்டியில வந்து நின்னுச்சு, மாமிவோட நினைப்பு கதை எழுதுறதுக்கெல்லாம் தனியா ஒரு திறமை வேணும்னு, மாமா சொல்லிட்டார், “போடி அசடே புதுமைபித்தன் காலத்துலருந்து ஒரு கதை விடாம படிச்சிருக்கேன், இது மாதிரி ஒரு கதைய படிச்சதேயில்லைன்னு சொல்ற மாதிரி ஒரு கதை எழுதுறேன்”னு பேனாவை உதறி நோட்டில் எழுத ஆரம்பித்தார்.

விசுக்கு சந்தோசம் தாள முடியவில்லை, இதுவரை சில சிற்றிதழ்களில் அவனது சிறுகதைகள் வந்துருக்கு, ஒரே ஒரு முறை ஜனரஞ்சக பத்திரிக்கையில் வித்தியாசமான கதைக்காகன்னு பரிசு வாங்கியிருக்கான், ஆனா இது இன்ப அதிர்ச்சி தான், இந்த வருட தீபாவளி மலருக்கு சிறுகதை எழுதி தரணும், ஒருவேளை பிரசுரம் ஆகிட்டா சுளையா பத்தாயிரம் கிடைக்கும், விசுவுக்குன்னு ஒரு தனி பாணி இருக்கு, மற்ற கதைகளை போல காதல்,கத்திரிக்காய் கதையெல்லாம் எழுத மாட்டான், அவனுக்கு தெரியும் அதெல்லாம் ”சரோஜாதேவி” செக்ஸ் கதை மாதிரி தான், முதல் ரெண்டு பத்திய தாண்டிட்டா எல்லாமே ஒண்ணு தான், ஒரு தம்ம உறிஞ்சி இழுத்துட்டு கணிணி முன் அமர்ந்து தட்டச்ச ஆரம்பித்தான்.


என் பெயர் வினோத்! அது உங்களுக்கு தெரியும்னு....

-திரும்பவும் முதல் பாராவுலருந்து படிப்பதும், படிக்காமல் இருப்பதும் உங்கள் பிரியம்


************************************
டிஸ்கி:அண்ணன் பைத்தியகாரன் நடத்தும் சிறுகதை போட்டிக்காக!

68 வாங்கிகட்டி கொண்டது:

தினேஷ் said...

வினோத்,சுரேஷ்,சாம்புமாமா,விசு

எல்லாமே நீங்க தானா ? சரி சரி உரையாடல் போட்டிக்கு எழுத போறீங்களா பாஸூ

சரவணகுமரன் said...

லூப்ல மாட்டுன கதை... எப்படி இப்படி எல்லாம்?

ny said...

கொண்டை வளைவுங்க கதையில்..
திரும்பித் திரும்பியே முட்டிக்கிச்சு!!

உண்மைத்தமிழன் said...

முருகா நீயுமா..?

கொல்றீங்களேப்பா அத்தனை பேரும்..!

Athisha said...

இது வித்தியாசம் பிளஸ் ஆச்சர்யம் ... அசத்தல் ரகம்.

போட்டிக்கேற்ற அதிரடி இஸ்டோரி.. கலக்குங்கோ வால்..

வெற்றி பெற வாழ்த்துக்கள்

Athisha said...

என் பெயரில் கதையை ஆரம்பித்ததற்காக ஸ்பெசல் வாழ்த்து.. கதை ஜெயிச்சா நானே ஜெயிச்சா மாதிரி இருக்கும்ல

Suresh said...

வந்துட்டேன் நண்பா படிச்சிட்டு வரேன்

அன்புடன் அருணா said...

கடவுளே!!!!

Anonymous said...
This comment has been removed by the author.
Raju said...

Naina...
ithula etho ulkuththu irukka maathiri theriyuthu..
Wishes to ein Vallu...!

Bleachingpowder said...

ஃபோர் இன் ஒன்னா? கலக்குங்க தல, ஒவ்வொரு கதையை படிக்கும் போது மனசில யாரை நினைச்சு எழுதியிருக்கீங்கன்னு நல்லாவே தெரியுது :))

கண்ணா.. said...

அண்ணன் பைத்தியகாரன் நடத்தும் சிறுகதை போட்டிக்காக கதை எழுதி எங்களை பைத்தியகாரன் ஆக்கிட்டீங்களே......

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆகா...சரியான போட்டி...வாழ்த்துக்கள்

ers said...

கதை நல்லாவே இருக்கு தல...

நீங்க...
எழுத...
ஆரம்பிச்சிட்டீங்க...
நன்றி.

அ.மு.செய்யது said...

பைத்தியக்காரன் சிறுகதை போட்டிக்கு அனுப்புங்க ..வாழ்த்துக்கள்.

ஒரு ரேஞ்சுக்கு எழுத ஆரம்பிச்சுட்டீங்க..ஓ.கே..அப்ப ஆ.வியில வாலை
வெகுவிரைவில் சந்திக்கலாமில்லையா ??

( நல்லதொரு வாசிப்பானுபவம் வால் )

RAMYA said...

கதை நல்ல இருக்கு. வெற்றிபெற வாழ்த்துக்கள்!!

Suresh said...

கதை எழுத போவதே ஒரு கதையாய்...

"என் பெயர் வினோத்" கதா பாத்திரத்தின் பெயரா

"ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பித்தால் கண்டிப்பாக ஒரு வட்டமோ, சதுரமோ கிடைக்கும்."

நீங்க எந்த புள்ளியில் ஆரம்பித்திங்க கண்டு பிடிச்சா நூறு ரூபாய் தரலாம்

எது ஆரம்பம் , அது கதையின் ஆரம்பம்

Suresh said...

வெற்றிபெற வாழ்த்துக்கள்!!

நசரேயன் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

thamizhparavai said...

வாழ்த்துக்கள் வால்.. எப்படித்தான் இப்படில்லாம் யோசிக்கிறீங்களோ...?!

இராகவன் நைஜிரியா said...

வெற்றிப் பெற வாழ்த்துகள்.

எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

:)
வாழ்த்துக்கள் வால்.. எப்படித்தான் இப்படில்லாம் யோசிக்கிறீங்களோ..

வெற்றி பெற வாழ்த்துக்கள்:)))))))))

kishore said...

வாழ்த்துக்கள் ..

புதியவன் said...

வெற்றிபெற வாழ்த்துக்கள்...

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,


நன்றி
தமிழர்ஸ்
Tamilers Blog

Anbu said...

கதை நல்லா இருக்கு. வெற்றிபெற வாழ்த்துக்கள்!!

Anonymous said...

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை எப்படி இணைப்பது என்ற விவரங்களுக்கு

இந்த சுட்டியை சொடுக்குங்கள்

தமிழர்ஸ் பிளாக்

முரளிகண்ணன் said...

நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்

Kumky said...

போட்டியின் விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்கவும்.(இந்த கடைப்பிடித்தல் என்ற வார்த்தையே உங்களுக்கு பிடிக்காதே..)

Bhuvanesh said...

கலக்கல்.. வெற்றி பெற வாழ்த்துக்கள்

பாலகுமார் said...

வித்தியாசமான முயற்சி, வாழ்த்துக்கள் !

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

முடியல....

Joe said...

வோட்டு போட்டாச்சு.

முதல் பக்கத்தில இருந்தா தானே,
நாம மண்டை காஞ்ச மாதிரி இன்னும் பல பேரு ....

ஏதோ நம்மால முடிஞ்சது.

நட்புடன் ஜமால் said...

மிக மிக அருமை ‘தல’

புதுமையான விதம்.

(டெம்ப்ளேட் கமெண்ட் அல்ல)

மிகவும் இரசித்தேன்.

வெற்றி பெற வாழ்த்துகள்.

பீர் | Peer said...

வால் எது தலை எது என்று விளங்கவில்லை.
வாழ்த்துக்கள்.

Vishnu - விஷ்ணு said...

கதையில டச்சிங் இல்லையேணா. வெற்றி பெற வாழ்த்துக்கள். ஜெயிச்ச உடனே டிரிட் கொடுத்துடுங்க எனக்கு.

Anonymous said...

:) அருமை! வாழ்த்துக்கள் வாலு...!

கார்த்திகைப் பாண்டியன் said...

வித்தியாசமா இருக்கு... வெற்றி பெற வாழ்த்துக்கள் தல..

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்னாயிட்டு உண்டு .... நடத்துங்கோ அம்பி நடத்துங்கோ

cheena (சீனா) said...

ஏப்பா வாலு - வெற்றி உனதே - பரிசும் உனக்கே

நல்லாவெ இருக்கு

Maximum India said...

அட கரெக்டா விசு பேரில் கதையை முடித்திருக்கிறீர்களே! ரொம்ப பொருத்தம்தான்.

:-)

கடைக்குட்டி said...

வாலோட கத சூப்பரா இருக்கு பின்னூட்டம் சும்மா தூளா போட்டுடனும்னு கடைக்குட்டி நெனக்க...


“சூப்பருங்க உங்க கத ...” என்று டைப்பும் போது அவன் எழுதிய

“ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்”
ஞாயாபகம் வந்தது.

அடப்பாவிகளா நானும் சக போட்டியாளராச்சேன்னு நெனச்சான்.. இருந்தாலும் தன் கதைக்கு ஒரு தொடுப்பு குடுத்துட்டு பின்னூட்டம் போட்டான்...

*******************************

உங்கள மாதிரி டைப்பனும் நெனச்சு
டைப்புனது .. ஒரு டைப்பா போயிடுச்சு..

வினோத் கெளதம் said...

தல டக்கர் கதை..

Vidhoosh said...

:)) வெற்றி பெற வாழ்த்துக்கள்.

hiuhiuw said...

சத்திய சோதனை

வாழவந்தான் said...

அய்யய்யோ தலை சுத்துதே..
நான் எங்க இருக்கேன்? ;-o

அகநாழிகை said...

வால்,
கதை விறுவிறுப்பான நடையில் இருந்தது சுவாரசியம். இன்னமும் கூட எழுதியிருக்கலாம் என்பது என் கருத்து.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Suresh Kumar said...

கதை அருமையாக இருக்கிறது எப்படித்தான் யோசிக்கிறீங்களோ சாமி

அப்துல்மாலிக் said...

வாலின் குறும்புகள்

கதையே கதை சொல்லுது

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

):

"உழவன்" "Uzhavan" said...

என்ன பின்னூட்டம் போடுறதுனே தெரியல தலைவா.. :-)

Poornima Saravana kumar said...

கதை நல்லா இருக்கு வால்:)

Poornima Saravana kumar said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்:)

சென்ஷி said...

கதைக்குள் கதைக்குள் கதைக்குள் கதைக்குள் கதையாவே வந்துட்டு இருக்குது..

நல்ல முயற்சி வால்..

வெற்றி பெற வாழ்த்துக்கள்! :)

வால்பையன் said...

//சூரியன் said...
வினோத்,சுரேஷ்,சாம்புமாமா,விசு
எல்லாமே நீங்க தானா ? சரி சரி உரையாடல் போட்டிக்கு எழுத போறீங்களா பாஸூ
//

நான் கதை சொல்லி மட்டுமே!
உரையாடலுக்கு தான் நண்பா!

*************************

//சரவணகுமரன் said...
லூப்ல மாட்டுன கதை... எப்படி இப்படி எல்லாம்?//

அப்படியா மாட்டிகிச்சா!
எடுத்துவிடுங்களேன்!

*************************

//kartin said...
கொண்டை வளைவுங்க கதையில்..
திரும்பித் திரும்பியே முட்டிக்கிச்சு!!//

ஆமாங்க எனக்கும் எப்படி முடிக்கிறதுன்னு தெரியலையே!

வால்பையன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
முருகா நீயுமா..?
கொல்றீங்களேப்பா அத்தனை பேரும்..!
//

ஏங்க படிக்க முடியலையா!

**************************

//அதிஷா said...
இது வித்தியாசம் பிளஸ் ஆச்சர்யம் ... அசத்தல் ரகம்.
போட்டிக்கேற்ற அதிரடி இஸ்டோரி.. கலக்குங்கோ வால்..//

இப்படி உசுப்பேத்தி உசுபேத்தியே ரண களப்படுத்திருராங்களே!

**************************

Suresh said...
வந்துட்டேன் நண்பா படிச்சிட்டு வரேன்//

வாங்க வாங்க

வால்பையன் said...

அன்புடன் அருணா said...
கடவுளே!!!!//

அவரு எதுக்குங்க!!

************************

//டக்ளஸ்....... said...
Naina...
ithula etho ulkuththu irukka maathiri theriyuthu..
Wishes to ein Vallu...!//

உள்குத்தா, வெளிகுத்தா தெரியாது!
கதைக்கு கரு வேறென்றாக இருக்கலாம்! ஆனால் உள்ளிருக்கும் கருத்துகள் என்னுடயது தான்!

**********************

Bleachingpowder said...
ஃபோர் இன் ஒன்னா? கலக்குங்க தல, ஒவ்வொரு கதையை படிக்கும் போது மனசில யாரை நினைச்சு எழுதியிருக்கீங்கன்னு நல்லாவே தெரியுது :))//

அது உங்க கண்ணுல உள்ள கோளாறு தல! (பத்தவைக்காம விடமாட்டிங்களே)

வால்பையன் said...

//Kanna said...
அண்ணன் பைத்தியகாரன் நடத்தும் சிறுகதை போட்டிக்காக கதை எழுதி எங்களை பைத்தியகாரன் ஆக்கிட்டீங்களே......//


ஒருவரை பைத்தியகாரன் ஆக்கவேண்டுமென்றால் நாமும் பைத்தியகாரனாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்!
************************

T.V.Radhakrishnan said...
ஆகா...சரியான போட்டி...வாழ்த்துக்கள்//

நன்றி சார்!

************************

நெல்லைத்தமிழ் said...
கதை நல்லாவே இருக்கு தல...//

ரொம்ப நன்றி தல!

வால்பையன் said...

அ.மு.செய்யது said...
பைத்தியக்காரன் சிறுகதை போட்டிக்கு அனுப்புங்க ..வாழ்த்துக்கள்.//

நன்றி தோழரே! அனுப்பிவிட்டேன்!

*********************

//RAMYA said...
கதை நல்ல இருக்கு. வெற்றிபெற வாழ்த்துக்கள்!!//

நன்றி தோழி!

**********************

நன்றி சுரேஷ்!
எளிமைபடுத்த நினைத்தேன்! பக்கங்கள் அதிகமாகிவிடும்!

************************

நசரேயன் said...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//

ஏன் ஏன் ஏன்!

வால்பையன் said...

//தமிழ்ப்பறவை said...
வாழ்த்துக்கள் வால்.. எப்படித்தான் இப்படில்லாம் யோசிக்கிறீங்களோ...?!//

எல்லாம் உங்க ஆசிர்வாதமும், ஊக்கமும் தான்!

***********************

//இராகவன் நைஜிரியா said...
வெற்றிப் பெற வாழ்த்துகள்.
எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.//

நீங்களே சொல்லிடிங்கல்ல! பரிசு எனக்கு தான்!

*****************************

//வைகரைதென்றல் (vaigaraithenral ) said...
:)
வாழ்த்துக்கள் வால்.. எப்படித்தான் இப்படில்லாம் யோசிக்கிறீங்களோ..
//

தமிழ்பறவைக்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும்!

வால்பையன் said...

KISHORE said...
வாழ்த்துக்கள் .//

நன்றி தோழரே!

************************

நன்றி புதியவன்

நன்றி தமிழர்ஸ்

நன்றி அன்பு

நன்றி முரளிக்கண்ணன்

நன்றி கும்க்கி!
ஆமாங்க அது என்னவோ சின்னவயசிலிருந்து அப்படிதான்!

நன்றி புவனேஷ்

நன்றி பாலகுமார்

நன்றி ஸ்ரீதர்

நன்றி ஜோ!

நன்றி நட்புடன் ஜமால்

நன்றி சில்-பீர்!

வால்பையன் said...

//விஷ்ணு. said...
கதையில டச்சிங் இல்லையேணா. வெற்றி பெற வாழ்த்துக்கள். ஜெயிச்ச உடனே டிரிட் கொடுத்துடுங்க எனக்கு.
//

யார் யாரை டச் பண்ணனும்னு நினைக்கிறிங்க!

************************

manippakkam said...
:) அருமை! வாழ்த்துக்கள் வாலு...!//

நன்றி தல!

*************************

நன்றி கார்த்திகைப்பாண்டியன்

நன்றி பித்தன்

நன்றி சீனா சார்!
ஈரோடு வாங்க சாமாய்ச்சுருவோம்!

நன்றி மேக்ஸி இந்தியா!
இன்னும் இழுக்கலாம்! படிக்கிறவங்களுக்கு பொறுமை பத்தாது!

நன்றி கடைகுட்டி!
உங்க கதைக்கும் வாழ்த்துக்கள்!

வால்பையன் said...

நன்றி வினோத் கெளதம்

நன்றி விதூஷ்

//rajan RADHAMANALAN said...
சத்திய சோதனை//

காந்தி எழுதுன புக்கு தானே! நான் இன்னும் படிச்சதில்லை!

*******************

வாழவந்தான் said...
அய்யய்யோ தலை சுத்துதே..
நான் எங்க இருக்கேன்? ;-o//

தலை சுத்துதா! முதுகு தெரியுதா பார்த்து சொல்லுங்க!

************************

நன்றி அகநாழிகை!
எழுதலாம் என்று தான் நினைத்தேன்!
கரு தெரிந்துவிட்டது, இனி எதை எழுதினாலும் அது மொக்கையாக தான் முடியும்!

வால்பையன் said...

நன்றி சுரேஷ்குமார்

அபுஅஃப்ஸர் said...
வாலின் குறும்புகள்
கதையே கதை சொல்லுது//

அதே தான் தோழரே!

********************

நன்றி நவநீதன்

நன்றி உழவன்!
ஏன் அந்த சந்தேகம்!

நன்றி பூர்ணிமாசரன்!

நன்றி சென்ஷி!

**************************

நல்லாயிருக்குன்னு சொன்ன எல்லோருக்கும்!
ஒருவேளை எனக்கு பரிசு கிடைக்கலைனா நீங்க தலைக்கு ஆயிரம் ரூபா அனுப்பிருங்க ஒகேவா!

Unknown said...

முடியல..!!??

வெற்றி பெற வாழ்த்துகள்..

செல்வா said...

ம்ம்.. இதே மாதிரி ஒரு கதையை எழுத்தாளர் சுஜாதா "கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு" புத்தகத்தில் எழுதி இருந்தார். அந்த கதை பேரு சரியா ஞாபகம் இல்லை. அனால் "டிட்டோ" அப்படின்னு ஆரம்பிக்கும். முடியும் போதும் அப்படியே முடியும்.

ஊர்சுற்றி said...

வால், கலக்குறீங்க.

ஏதோ புரோக்ராம் 'ஃபார்' லூப்ல போட்டு எழுதின மாதிரி இருந்தது - கதையைப் படிக்கும்போது. இன்னும் படிச்சிகிட்டேதான் இருக்கேன். ))))

வால்பையன் said...

பட்டிக்காட்டான்.. said...
முடியல..!!??//

நன்றி தல!

***************

செல்வா said...
ம்ம்.. இதே மாதிரி ஒரு கதையை எழுத்தாளர் சுஜாதா "கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு" புத்தகத்தில் எழுதி இருந்தார். அந்த கதை பேரு சரியா ஞாபகம் இல்லை. அனால் "டிட்டோ" அப்படின்னு ஆரம்பிக்கும். முடியும் போதும் அப்படியே முடியும்.//

நன்றி செல்வா, இதற்கு முன்னர் கூட ஒருவர் கூறினார், ஆனால் பாருங்கள் இந்த ஸ்டைலில் எனக்கே இது இரண்டாவது கதை!

***********************

ஊர்சுற்றி said...
வால், கலக்குறீங்க.
ஏதோ புரோக்ராம் 'ஃபார்' லூப்ல போட்டு எழுதின மாதிரி இருந்தது - கதையைப் படிக்கும்போது. இன்னும் படிச்சிகிட்டேதான் இருக்கேன். ))))//

படிங்க படிங்க படிச்சிகிட்டே இருங்க!

!

Blog Widget by LinkWithin